Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
18-09-2022 காலை
முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 15.04.1992
<
Listen to the Murli audio file
பிராமணர்களின் இரண்டு அடையாளங்கள் - நம்பிக்கை மற்றும் வெற்றி
இன்று பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள பிராமண குழந்தைகளுடைய விசேஷமான இரண்டு அடையாளங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். பிராமணன் என்றாலே நிச்சயபுத்தி மற்றும் நிச்சயபுத்தி கொண்டிருப்பது என்றாலே வெற்றியாளர் ஆகுவது. எனவே, ஒவ்வொரு பிராமணரும் எந்தளவு நிச்சயபுத்தி உடையவராக ஆகியிருக்கிறீர்கள் மற்றும் எந்தளவு வெற்றியாளர் ஆகியிருக்கிறீர்கள்! ஏனென்றால், பிராமண வாழ்க்கையின் அஸ்தி வாரமே நம்பிக்கை, மேலும், நம்பிக்கையின் சான்று வெற்றி. எனவே, நம்பிக்கை மற்றும் வெற்றி ஆகிய இரண்டினுடைய சதவிகிதம் ஒரே மாதிரியாக உள்ளதா அல்லது வித்தியாசமாக உள்ளதா? ரிசல்ட் என்ன பார்த்திருப் பார்கள்? நம்பிக்கையின் சதவிகிதத்தை அனைவரும் அதிகமாக அனுபவம் செய்கின்றார்கள் மற்றும் வெற்றியின் சதவிகிதம் நம்பிக்கையை விட குறைவாக அனுபவம் செய்கின்றார்கள். எப்பொழுதாவது யாரிடமாவது நம்பிக்கை எவ்வளவு உள்ளது என்று கேட்டால் 100 சதவிகிதம் உள்ளது என்று அனைவருமே கூறுவார்கள். மேலும், நம்பிக்கையின் அடையாளமாக வெற்றி எவ்வளவு கிடைத்துள்ளது? இதில் 100 சதவிகிதம் என்று சொல்ல முடியுமா? உங்களுடைய சுலோகனே நிச்சயபுத்தி விஜயந்தி என்பதாகும். பிறகு, நம்பிக்கை மற்றும் வெற்றியில் வித்தியாசம் ஏன்? நம்பிக்கை மற்றும் வெற்றி ஆகிய இரண்டு அடையாளங்களும் சமமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், வித்தியாசம் ஏன் உள்ளது? இதற்கான காரணம் என்ன? எந்தவொரு அஸ்திவாரத்தையும் உறுதியாகப் போடும்பொழுது அந்த இடத்தை நாலாபுறங்களிலும் கவனம் கொடுத்து உறுதியாக்கப்படுகிறது. ஒருவேளை, நான்கு பக்கங்களில் ஒரு மூலை கூட பலவீனமாக இருந்ததென்றால் உறுதியாக இருக்குமா அல்லது ஆடிக்கொண்டே இருக்குமா? அதுபோன்றே நம்பிக்கையின் அஸ்திவாரம் நாலாபக்கங் களிலும் அதாவது விசேஷமாக நான்கு விசயங்களில் சம்பூரண நம்பிக்கை வேண்டும். அந்த நான்கு விசயங்கள் முன்பே சொல்லப்பட்டிருக்கின்றன - முதலாவது, தந்தை மீது முழுமை யான நம்பிக்கை, தந்தை யாராக இருக்கின்றார், எப்படி இருக்கின்றார், தந்தையால் என்ன ஸ்ரீமத் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த விதிப்படியே சரியான முறையில் அறிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது மற்றும் நடப்பது. இரண்டாவது விசயம் - தன்னுடைய சிரேஷ்டமான சுவமானம் நிறைந்த சிரேஷ்டமான பாக்கியவான் ஆத்ம சொரூபத்தை அறிந்துகொள்வது, ஏற்றுக் கொள்வது மற்றும் நடப்பது. மூன்றாவது விசயம் - தன்னுடைய சிரேஷ்டமான பிராமண பரிவாரத்தை யதார்த்தமான விதிப்படி யார் எவ்வாறு இருக்கிறார்களோ, அவ்வாறே அறிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது மற்றும் நடப்பது. நான்காவது விசயம் - முழுகல்பத்தில் இந்த சிரேஷ்டமான புருஷோத்தம யுகம் அல்லது சமயத்தை அதே மகத்துவத்தோடு அறிந்து கொள்வது, ஏற்றுக்கொள்வது மற்றும் நடப்பது. இந்த நான்கு விசயங்களில் யார் உறுதியான நிச்சயபுத்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ, மேலும் முழுமையான சதவிகிதம் உள்ளதோ, அவர்களையே சம்பூரண யதார்த்தமான நிச்சய புத்தி உடையவர்கள் என்று கூறலாம்.
இந்த நான்குமே நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தின் தூண்கள் ஆகும். ஒரு தந்தையிடம் மட்டும் நம்பிக்கை உள்ளது, மற்ற மூன்று விசயங்களில் ஏதாவது ஒரு தூண் பலவீனமாக உள்ளது, சதா உறுதியானதாக இல்லை, சில நேரம் ஆடுகிறது, சில நேரம் உறுதியாக உள்ளது எனில், அந்தத் தடுமாற்றம் தோல்வியைக் கொடுக்கிறது, வெற்றியாளராக ஆக்காது. எந்தவொரு தடுமாற்றமும் பலவீனமானவராக ஆக்கிவிடுகிறது மற்றும் பலவீனமானவர்கள் சதா வெற்றியாளர் ஆக முடியாது. ஆகையினால், நம்பிக்கை மற்றும் வெற்றியில் வித்தியாசம் ஏற்படுகிறது. பாப்தாதா விற்கு முன்னால் நிறைய குழந்தைகள் கள்ளம் கபடமற்றவராக - எனக்கு நம்பிக்கையோ முழுமையாக உள்ளது, பாபா நான் உங்களுடையவர் மற்றும் நீங்கள் என்னுடையவர், இது உறுதியாக உள்ளது, 100 சதவிகிதம் என்ன 500 சதவிகிதம் உள்ளது . . . ஆனால், தடுமாற்றமும் உள்ளது என்று உரையாடல் செய் கின்றார்கள். பிறகு, பாபாவை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக நீங்கள் என்னுடையவர் அல்லவா என்று கூறி உறுதிபடுத்திக் கொள்கின்றார்கள். நான் யாராக இருந்தாலும், எப்படி இருந்தாலும் நான் உங்களுடையவர் என்று மிகவும் அப்பாவியாக விசயங்களைச் சொல்கின்றார்கள். தந்தையும், நீங்கள் யாராக இருந்தாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும் என்னுடையவர் என்று கூறுகின்றார். ஆனால், தந்தை யாராக இருக்கின்றாரோ, எப்படிப்பட்டவராக இருக்கின்றாரோ அப்படியே உங்களுடையவராக இருக்கின்றாரா? கள்ளம் இல்லாதவர் ஆகுவது நல்லது, உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர் ஆகுங்கள், விசயங்களில் மற்றும் கர்மத்தில் கள்ளம் இல்லாதவராக (அப்பாவியாக) ஆகாதீர்கள். உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் கள்ளம் கபடமற்ற தந்தையின் அன்பிற்குரியவர்கள் ஆகின்றார்கள். விசயங் களில் அப்பாவியாக இருப்பவர்கள் தன்னையும் ஏமாற்றிக் கொள்கின்றார்கள் மற்றும் பிறரை யும் கூட ஏமாற்றிவிடுகின்றார்கள். மேலும், கர்மத்தில் அப்பாவியாக இருப்பவர்கள் தனக்கும் நஷ்டத்தை விளைவித்துக் கொள்கின்றார்கள் மற்றும் சேவையிலும் நஷ்டத்தை ஏற்படுத்து கின்றார்கள். ஆகையினால், உள்ளத்தால் கள்ளம் இல்லாதவர்கள் ஆகுங்கள், முற்றிலும் புனித மானவராக (செயின்ட்) அதாவது அந்தளவு கள்ளம் கபடமற்றவர் ஆகுங்கள். புனிதமானவர் என்றால் மகான் ஆத்மா. ஆனால், விசயங் களில் மூன்று காலமும் அறிந்தவராகி (திரிகால தரிசி) விசயத்தை சொல்லுங்கள் மற்றும் பேசுங் கள். கர்மத்தில், ஒவ்வொரு கர்மத்தின் விளைவை ஞானம் நிறைந்தவராகி அறிந்துகொள்ளுங்கள், அதன் பிறகு செய்யுங்கள். செய்ய விரும்பவில்லை ஆனால் செய்துவிட்டேன், பேச விரும்ப வில்லை ஆனால் பேசிவிட்டேன் என்று கூறக்கூடாது. இதிலிருந்து கர்மத்தின் விளைவை அறியாமல் புத்தியற்றவராகி கர்மம் செய்துவிடுகிறீர்கள் என்பது நிரூபணம் ஆகிறது. நாங்கள் கள்ளமற்றவர்கள் அதனால் அவ்வாறு நடந்துவிடுகிறது என்று நினைக்காதீர்கள். இப்படி தன்னைத்தான் விடுவித்துக் கொள்ளக்கூடாது.உள்ளத்தால் கள்ளமற்றவர்கள் அனைவருக்கும் அன்பானவர்களாக இருப்பார் கள். எதில் கள்ளமற்றவராக ஆகவேண்டும் என்பது புரிந்ததா? எனவே, நம்பிக்கை மற்றும் வெற்றியை சமமாக்குவதற்கான விதி என்ன? நான்கு பக்கங்களில் மற்றும் நான்கு விசயங் களில் சமமான சதவிகிதம் உடைய நம்பிக்கை உடையவர்களாக ஆகவேண்டும். பாபா உங்கள் மீது நம்பிக்கை உள்ளது ஆனால், என்மீது அந்தளவு நம்பிக்கை இல்லை. சில நேரம் உள்ளது, சில நேரம் தன்னிடத்தில் நம்பிக்கை குறைந்துவிடுகிறது என்று சில குழந்தைகள் கூறு கின்றனர். பிறகு, அவர்களுடைய பாû‘ எப்படி இருக்கிறது? ஒரே ஒரு பாடல் பாடுகின்றார்கள் - தெரியவில்லை, தெரியவில்லை, தெரியவில்லை . . . இவ்வாறு ஏன் நடக்கிறது தெரியவில்லை, என்னுடைய பாக்கியம் என்ன என்பது தெரியவில்லை, தந்தையின் உதவி கிடைக்குமா அல்லது கிடைக்காதா, தெரியவில்லை, வெற்றி கிடைக்குமா, கிடைக்காதா, தெரியவில்லை. நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற இந்த நம்பிக்கையில் எப்பொழுது குறைவு ஏற்படுகிறதோ, அப்பொழுது தெரியவில்லை, தெரியவில்லை என்ற பாடல் பாடுகின்றீர்கள். மூன்றாவதாக பிறகு என்ன சொல்கின்றீர்கள்? பாபா நாங்களோ உங்களைப் பார்த்து வியாபாரம் செய்துவிட் டோம், நீங்கள் என்னுடையவர், நான் உங்களுடையவர், இந்த பிராமண பரிவாரத்தோடு வியாபாரம் செய்ய வில்லை, பிராமண பரிவாரம் பிரச்சனையானது, நீங்கள் சரியானவர். பிராமணர்களின் குழுவில் இருப்பது கடினம், உங்களோடு இருப்பது சுலபம் என்று கூறுகின்றார் கள். அதற்கு பாப்தாதா என்ன கூறுவார்கள்? பாப்தாதா புன்முறுவல் செய்கின்றார்கள். அத்தகைய குழந்தைகளிடம் பாப்தாதா ஒரு கேள்வி கேட்கின்றார்கள். ஏனெனில், அத்தகைய ஆத்மாக்கள் மகிழ்ச்சியான உள்ளத்துடன் இருக்கமாட்டார்கள், அதிக கேள்வி கேட்பார்கள், இது ஏன் அப்படி நடக்கிறது, இப்படியும் நடக்குமா என்ன - இத்தகையவர்கள் மகிழ்ச்சியான உள்ளமுடைய ஆத்மா கிடையாது, கேள்விகள் நிறைந்த உள்ளமுடைய ஆத்மா. பாப்தாதா கூட அத்தகையவர்களிடம் - ஆத்மாக்களாகிய நீங்கள் முக்திதாமத்தில் இருக்கக்கூடியவர்களா அல்லது ஜீவன்முக்தியில் வரக்கூடியவர்களா? என்ற கேள்வி கேட்கின்றார்கள். முக்தியில் இருக்க வேண்டும் பிறகு, ஜீவன் முக்திக்கு வரவேண்டும் அல்லவா. எனில், ஜீவன்முக்தியில் பிரம்மா பாபா மட்டும் இருப்பாரா அல்லது இராஜ்யமும் இருக்குமா? பிரம்மா மற்றும் சரஸ்வதி மட்டும் இராஜா, இராணியாக இருப்பார்களா? ஜீவன் முக்தியின் ஆஸ்தியைப் பெற வேண்டும் அல்லவா. ஆதி சனாதன தர்மம் மற்றும் பிற தர்மங்களுக்கு மத்தியில் அனைத்தையும் விட பெரிய வித்தியாசம் உள்ளது என்று நீங்கள் சவால்விடுகிறீர்கள். அவர்கள் தர்மத்தை மட்டும் ஸ்தாபனை செய்கின்றார்கள், நீங்கள் தர்மம் மற்றும் இராஜ்யம் இரண்டையும் ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றீர்கள். இது உறுதியானது அல்லவா. தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் இராஜ்யத்தின் ஸ்தாபனையும் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா, எனில், இராஜ்யத்தில் என்ன இருக்கும்? ஒரு இராஜா, ஒரு இராணி மட்டும் இருப்பார்களா என்ன? ஒரு இராஜா, இராணி மற்றும் நீங்கள் ஒரு மகன் அல்லது மகள், அவ்வளவு தான், இப்படி இராஜ்யம் இருக்குமா? எனவே, நான் இராஜ்யத்தில் வரவேண்டும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். இராஜ்யத்தில் வருவது என்றால் பிராமண பரிவாரத்தில் திருப்தியாக இருப்பது மற்றும் திருப்தி படுத்துவது, சிரேஷ்டமான சம்பந்தத்தில் வருவது என்பதாகும். நீங்கள் மாலையில் வர விரும்பு கிறீர்களா? என்று இப்பொழுது பாப்தாதா அனைவரிடமும் கேட்கின்றார்கள். இல்லை யெனில், மாலையிலிருந்து வெளியில் இருந்தாலும் சரிதான், பரவாயில்லை என்று சொல்வீர்களா? மாலையில் வரவேண்டுமா? 108லும் வரலாம், 16000லும் வரலாம், ஆனால், வரவேண்டுமா அல்லது வேண்டாமா? (ஆமாம் வரவேண்டும்) பிறகு, இப்பொழுது பிராமண பரிவாரத்தைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? எப்பொழுதாவது ஏதாவது விசயம் வரும்பொழுது எனக்கு பாபா இருக்கின்றார், சகோதரிகள் என்ன செய்துவிடுவார்கள், சகோதரர்கள் என்ன செய்துவிடுவார்கள்? என்று ஏன் சொல்கிறீர்கள். நான் சகோதரர்கள், சகோதரிகளிடம் வாக்குக் கொடுக்கவில்லையே என்று சொல்கிறீர்கள். ஆனால், இந்த பிராமண வாழ்க்கை சுத்தமான சம்பந்தத்திற்கான வாழ்க்கை, மாலையில் வருவதற்கான வாழ்க்கை. மாலை என்றாலே குழு என்று அர்த்தம். பிராமண பரிவாரத்தின் மீதுள்ள நம்பிக்கையில் ஒருவேளை ஏதாவது சந்தேகம் வந்துவிடு கிறது, வீணான எண்ணம் வந்துவிடுகிறது என்றால் அது நம்பிக்கையை அசைத்து விடுகிறது. கலகத்தில் கொண்டு வந்துவிடுகிறது. பாபா நல்லவர், ஞானம் நன்றாக உள்ளது, ஆனால், இந்த தாதிகள் நன்றாக இல்லை, டீச்சர்கள் நன்றாக இல்லை, பரிவாரம் நன்றாக இல்லை, . . . இது நிச்சயபுத்தி உடையவர்களின் வார்த்தைகளா? அந்த சமயம் நிச்சயபுத்தி உடையவர்கள் என்று சொல்வதா அல்லது சங்கல்பங்கள் நிறைந்த புத்தி உடையவர்கள் என்று சொல்வதா? வீணான சங்கல்பங்கள் மகிழ்ச்சி நிறைந்த புத்தி உடையவராக இருக்க விடாது. நம்பிக்கையின் விசேஷத்தன்மை என்ன என்பது புரிந்ததா?
நான்காவது உரையாடல் என்ன செய்கின்றார்கள்? அவர்கள் பிறகு சொல்கின்றார்கள் - சமயம் சிரேஷ்டமானது, புருஷோத்தம யுகம், ஆத்மா பரமாத்மாவை சந்திக்கும் யுகம் இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள், பிறகு என்ன சொல்கிறார்கள்? இப்பொழுது கொஞ்ச சமயம் மீதம் உள்ளது, இவ்வளவு சீக்கிரத்தில் விநாசம் ஆகாது, விநாசம் ஆகப்போகிறது அடுத்த தீபாவளி வராது என்று ஸ்தாபனை காலத்திலிருந்து சொல்லி வருகின்றார்கள். விநாசத்தின் விசயங்களோ ஸ்தாபனை காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது. விநாசம் வரப் போகிறது என்று சொல்லி சொல்லி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. விநாசம் எப்பொழுது ஏற்படும் என்று இப்பொழுதும் கூட தெரியாது. கொஞ்சம் கவனக்குறைவு, அலட்சியம், மந்தமான முயற்சி என்ற டன்லப் தலையணையில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். சமயம் வரும்போது சரியாகிவிடும். தந்தையிடமே - நீங்கள் பாருங்கள், நாங்கள் சரியான நேரத்தில் அதிக நம்பரில் முன்னால் சென்றுவிடுவோம் என்று பக்கா செய்விக்கின்றார்கள். ஆனால், அத்தகைய குழந்தை களுக்கு பாப்தாதா - நேரம் வரும்போது விழிந்தெழுந்தீர்கள் மற்றும் நேரத்தின் அனுசாரம் மாற்றம் செய்தீர்கள் என்றால் அது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது என்று சதா எச்சரிக்கை கொடுக்கின்றார்கள். ஆனால், சமயத்திற்கு முன்னதாகவே மாற்றம் செய்துவிட்டீர்கள் என்றால் உங்களுடைய முயற்சியில் இந்த முயற்சிக்கான மதிப் பெண்கள் சேமிப்பாகும் மற்றும் ஒருவேளை நேரம் வரும்போது செய்தால் சமயத்திற்கு மதிப் பெண் கிடைக்கும், உங்களுக்கு கிடைக்காது. ஆகையால், ஒட்டுமொத்த ரிசல்டில் சோம்பேறித் தனம் மற்றும் அலட்சியத்தின் காரணத்தினால் ஏமாற்றத்தை அடைந்துவிடுவீர்கள். இது கூட கும்பகர்ண உறக்கத்தின் அம்ச மாகும். பெரிய கும்பகர்ணன் அல்ல, சிறியது. பிறகு அவர்களுக்கு என்ன ஆனது? தன்னைத் தான் காப்பாற்ற முடிந்ததா? காப்பாற்ற முடியவில்லை அல்லவா! ஆதலால், கடைசி சமயத்தில் முழுமையாகத் தேர்ச்சி பெறுவதற்குத் தன்னை தகுதியாக ஆக்க முடியாது. புரிந்ததா? சில நேரம் எப்படி உரையாடல் செய்கின்றீர்கள், சில நேரம் மிகுந்த தைரியத்துடன் உரையாடல் செய்கின்றீர்கள், சில நேரம் சாதுர்யமாக (தளுக்கு மினுக் குடன்) உரையாடல் செய்கின்றீர்கள், சில நேரம் மனத்தாங்கலுடன் உரையாடல் செய்கின்றீர்கள்.
இன்று இந்த வருட சீசனுடைய இறுதியான சந்திப்பாகும். முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது நிறைவடைந்து கொண்டு இருக்கின்றது., ஆகையினால், ரிசல்ட்டை சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். எனவே, இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? சோதனை செய்யுங் கள் - நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தின் நாற்புறங்களும் உறுதியாக உள்ளனவா அல்லது நான்கில் ஏதாவது ஒரு விசயத்தில் உறுதியாக இருப்பதற்கு பதிலாக விசயங்களின் காரணத் தினால் நிர்பந்திக்கப்பட்டு இருக்கின்றீர்களா? இதை சோதனை செய்யுங்கள். இப்பொழுது தபஸ்யா செய்ய வேண்டும் அல்லவா. அன்பிற்கான நிரூபணம் கொடுக்க வேண்டும் என்று முன்னமே சொல்லப்பட்டது. மேலும், அன்பின் நிரூபணமே சமமாக ஆகுவதாகும். மேலும், இரண்டாவது விசயம் என்ன செய்ய வேண்டும்? இந்த வருடத்திற்கான வீட்டுப்பாடம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு வேலையை கேட்டுவிட்டீர்கள். இரண்டாவது விசயம் - தன்னுடைய நான்கு பக்கங்களின் அஸ்திவாரத்தை உறுதியாக்குங்கள். ஒரு விசயத் தில் கூட பலவீனம் இருக்கக் கூடாது, அப்பொழுதே மாலையின் மணியாகி பூஜைக்குரிய ஆத்மா அல்லது இராஜ்ய அதிகாரி ஆத்மா ஆகுவீர்கள், ஏனெனில், பிராமணன் தான் தேவதை ஆகவேண்டும். பிராமணன் அல்லாமல் வேறு எவரும் தேவதை ஆகமுடியாது. பிராமணர் களுடன் இணக்கமாக இருப்பது என்றால் தெய்வீக இராஜ்ய அதிகாரி ஆகுவதாகும். எனவே, பரிவாரத்துடன் உறவைப் பராமரிக்க வேண்டும். தடுமாற்றத்தை முடிவடையச் செய்ய வேண்டும். அப்பொழுதே, நம்பிக்கை மற்றும் வெற்றி ஆகிய இரண்டினுடைய சமநிலை ஏற்படும். இதன் வித்தியாசத்தை அழிப்பதற்கான மகாமந்திரம் உள்ளது. நான்கு பக்கங்களும் உறுதியாக ஆக வேண்டும். நான்கு நம்பிக்கைகளின் அஸ்திவாரத்தை சமமானதாக ஆக்க வேண்டும். புரிந்ததா? வீட்டுப்பாடம் தெளிவாக உள்ளது அல்லவா? நீங்கள் நல்ல மாணவர்கள் தானே, அல்லது என்னுடைய சென்டருக்குச் சென்றேன், லௌகீக இல்லற வீட்டிற்குச் சென்றேன், வீட்டிலேயே வீட்டுப்பாடத்தை வைத்து விட்டு வந்துவிட்டேன் என்று சொல்வீர் களா? இப்படி சொல்லமாட்டீர்கள் அல்லவா. புத்திசாலி மாணவருடைய அடையாளம் எப்படி இருக்கும்? வீட்டுப்பாடத்திலும் முதலாவது எண், நடைமுறை பாடத்திலும் முதலாவது எண்ணில் இருப்பார்கள், ஏனெனில், மதிப்பெண்கள் கிடைத்துவிடுகின்றது. நல்லது. வேறு என்ன ரிசல்ட்டைப் பார்த்தார்கள்? நிகழ்கால சமயத்தில் குழந்தைகளுடைய இரண்டு வித சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள், தன்னுடைய சாமர்த்தியத்தை அறிந்து இருப்பீர்கள் அல்லவா. முதலாவது சாமர்த்தியம் என்ன பார்த்தார்கள்? தன்னை பார்ப்பது மற்றும் பிறரைப் பார்ப்பது. சுயதரிசன சக்கரவர்த்தி ஆகுவது அல்லது பரதரிசன சக்கரவர்த்தி ஆகுவது. இரண்டு விசயங் கள் உள்ளன அல்லவா? பெரும்பான்மையாக எதில் சாமர்த்தியம் உள்ளது? சில குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை மிகவும் கூர்மையாகிக் கொண்டு இருக்கிறது மற்றும் சில குழந்தைகளுக்கு தூரப்பார்வை கூர்மையாகிக் கொண்டு இருக்கிறது என்பதை பாப்தாதா முன்னதாகவே கூறி இருக்கின்றார்கள். ஆனால், பெரும்பான்மையினரிடம் தூரப்பார்வை கூர்மையாக உள்ளது, கிட்டப்பார்வை கொஞ்சம் மந்தமாக உள்ளது. பார்க்க விரும்புகிறார்கள், ஆனால், தெளிவாகப் பார்க்க முடியவில்லை மற்றும் பிறகு, என்ன சாமர்த்தியம் காட்டுகின்றார்கள்? ஏதாவது ஒரு விசயம் வரும்போது தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பிறருடைய விசயத்தைப் பெரிதாக்கித் தெளிவாகச் சொல்வார்கள். தன்னுடைய பெரிய விசயத்தை சிறியதாக்குவார்கள் மற்றும் பிறருடைய சிறிய விசயத்தைப் பெரிதுபடுத்துவார்கள், இந்த சாமர்த்தியத்தை பெரும் பான்மையினரிடம் பார்த்தார்கள். இன்னொரு சாதுர்யம் என்ன பார்த்தார்கள்? தற்சமயம் ஒரு விசேஷமான பாஷையை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் - என்னால் அசத்தியத்தைப் பார்க்க முடியவில்லை, அசத்தியத்தைக் கேட்க முடியவில்லை, ஆகையினால், அசத்தியத்தைப் பார்க்கும்போது, பொய்யைக் கேட்கும் போது உள்ளுக்குள் ஆவேசம் வந்துவிடுகின்றது என்று சொல்கின்றார்கள். இந்த வார்த்தைகள் சரியானதா? ஒரு வேளை, அவர்கள் அசத்தியமாக இருக்கின்றார்கள் மற்றும் உங்களுக்கு அசத்தியத்தைப் பார்த்து ஆவேசம் வருகின்றது என்றால் அந்த ஆவேசமானது சத்தியமானதா அல்லது அசத்திய மானதா? ஆவேசமும் அசத்தியமானது தானே? நான் இதை செய்து காட்டுவேன், இப்படி சவால்விடுவது சரியா? சத்தியத்தின் அடையாளம் என்ன என்பதை சதா நினைவில் வைத்திடுங் கள். சிலர் சுயம் சத்தியமாக இருக்கின்றார்கள் மேலும், அசத்தியத்தை அழிக்க விரும்புகின்றார்கள், இந்த இலட்சியமோ, மிகவும் நன்றாக உள்ளது, ஆனால், அசத்தியத்தை அழிப்பதற்காக தன்னிடத்திலும் கூட சத்தியத்தின் சக்தி வேண்டும். ஆவேசத்தில் வருவது அல்லது உணர்ச்சி வசப்படுவது - இது சத்தியத்தின் அடையாளமா? சத்தியம் என்பதில் ஆவேசம் வருமா? ஒருவேளை, பொய்யைப் பார்த்து எனக்கு கோபம் வருகிறது என்றால் அது சரியா? யாராவது நெருப்பு மூட்டுகின்றார்கள் என்றால் அதன் வெப்பம் தாக்குமா அல்லது வெப்பம் தாக்காதவராக ஆக முடியுமா? இது அசத்தியம் என்ற நெருப்பு மற்றும் நெருப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஞானம் ஒருவேளை நமக்கு உள்ளது என்றால் நெருப்பின் தாக்கத்தில் இருந்து முதலில் தன்னை பாதுகாத்துக் கொள்வீர்கள் அல்லவா அல்லது நெருப்பில் கொஞ்சம் எரிந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பீர்களா? சத்தியத்தின் அடையாளம் பண்பாடு (அடக்கம்) என்பதை சதா நினைவில் வைத்திடுங்கள். ஒருவேளை, நீங்கள் சத்தியமாக இருக்கின்றீர்கள், சத்தியத்தின் சக்தி உங்களிடம் உள்ளது என்றால் பண்பாட்டை ஒருபொழுதும் விடமாட்டீர்கள். சத்தியத்தை நிரூபித்திடுங்கள், ஆனால், பண்பாட்டுடன் அதாவது அடக்கமான முறையில் நிரூபித்திடுங்கள். ஒருவேளை, பண்பாட்டை விட்டுவிட்டு பண்பாடற்றவராகி சத்தியத்தை நிரூபிக்க விரும்பு கின்றீர்கள் என்றால் அந்த சத்தியம் நிரூபணம் ஆகாது. நீங்கள் சத்தியத்தை நிரூபிக்க விரும்பு கிறீர்கள், ஆனால், பண்பாட்டை விட்டுவிட்டு ஒருவேளை சத்தியத்தை நிரூபித்தீர்கள் என்றால் அது பிடிவாதமாக ஆகிவிடும், நிரூபணம் அல்ல. பண்பாடற்ற நிலையின் அடையாளம் பிடிவாதம் ஆகும் மற்றும் பண்பாட்டின் அடையாளம் பணிவு ஆகும். சத்தியத்தை நிரூபிக்கக் கூடியவர்கள் எப்பொழுதும் சுயம் தான் பணிவானவராகி பண்போடு நடந்து கொள்வார்கள். இரண்டாவது சாமர்த்தியம் என்ன என்பது புரிந்ததா! இத்தகைய சாமர்த்தியசாலி ஆகக்கூடாது. இத்தகைய சாமர்த்தியத்தை விட்டுவிட்டு பணிவானவர் ஆகுங்கள் - இது கூட வீட்டுப்பாடம் ஆகும். முற்றிலும் பணிவானவர் ஆகுங்கள். நான் சரி, இவர்கள் தவறு - இது பணிவு கிடையாது. சத்தியத்தை ஒருவேளை நிரூபிக்கின்றார்கள் என்றால் அதில் ஏதோ அடங்கி யுள்ளது என்று உலகத்தினரும் சொல்கின்றார்கள். நான் முற்றிலும் சத்தியத்தைப் பேசு கின்றேன், 100 சதவிகிதம் சத்தியத்தைச் சொல்கின்றேன் என்பது சில குழந்தைகளின் பாஷை ஆகிவிட்டது. ஆனால், சத்தியத்தை நிரூபிப்பதற்கான அவசியமே கிடையாது. சத்தியம் என்பது அப்பேற்பட்ட சூரியன், அது மறைந்திருக்க முடியாது. எத்தனை சுவர்களை வேண்டுமானாலும் அதற்கு முன்னால் கொண்டு வரட்டும், ஆனால், சத்தியத்தின் பிரகாசமானது ஒருபொழுதும் மறைந்திருக்க முடியாது. உண்மையான மனிதன் ஒருபோதும் தன்னை நான் சத்தியமானவர் என்று சொல்லமாட்டார். நீங்கள் சத்தியமானவர் என்று பிறர் சொல்வார்கள். நல்லது.
இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்? சுயத்தை மாற்ற வேண்டும். பிறருடைய மாற்றத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம், இப்பேற்பட்டவர்களை சுபசிந்தனையாளர் என்று சொல்லப்படுவ தில்லை. பிறகு, நான் கவலைப்படவில்லை, ஆனாலும் சுபசிந்தனை யாளர் அல்லவா என்று சொல்கின்றார்கள். ஆனால், சுயத்தை மறந்துவிட்டு பிறருக்காக சுப சிந்தனையாளர் ஆகுவது - இப்படிப்பட்டவர்களை சுபசிந்தனையாளர் என்று சொல்லப்படு வதில்லை. அனைவருடன் சேர்த்து முதலில் சுயம் இருக்க வேண்டும். சுயம் இல்லாமல் மற்ற அனைவருக்காகவும் சுப சிந்தனையாளரானால் அம்பு தைக்காது, வெற்றி கிடைக்காது. முதலில் சுயம் மற்றும் சுயத்தின் கூடவே சர்வம் (அனைவரும்), இதுவே பாப்தாதாவிற்கு குழந்தைகள் மீதுள்ள உள்ளத்தின் அன்பாகும். அன்பின் அடையாளம் - அன்பு செலுத்துபவர் களிடம் எந்தக் குறையையும் பார்க்க முடியாது, எந்தக் குறையையும் கேட்க முடியாது, அவர் களையும் சம்பன்னமாக ஆக்குவார்கள். இதுவே உள்ளத்தின் உண்மையான அன்பு ஆகும். பாப்தாதா உள்ளத்தைக் கொள்ளை கொள்பவர். ஆகையினால், உள்ளத்தின் அன்பு உள்ளது, ஒவ்வொரு குழந்தையையும் சமமாக மற்றும் சிரேஷ்டமாகப் பார்ப்பதற்கு விரும்புகின்றார்கள். ஒவ்வொரு குழந்தையையும் வெற்றி மூர்த்தியாகப் பார்ப்பதற்கு விரும்புகின்றார்கள். உழைப்பின் மூர்த்தியாக அல்ல, வெற்றி மூர்த்தி. நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள சதா நிச்சயபுத்தியுடைய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா நம்பிக்கை மற்றும் வெற்றியை சமமாகக் கொண்டு வரக்கூடிய தீவிர புருˆôர்த்தி ஆத்மாக் களுக்கு, சதா சுவமானத்தில் இருந்து சுயமாற்றம் மற்றும் அனைவருடைய மாற்றத்தில் யதார்த்த மான நன்மை பாவனை வைக்கக்கூடிய ஆத்மாக்களுக்கு, சதா தந்தைக்கு சமமாக அன்பிற்கான நிரூபணம் கொடுக்கக்கூடிய ஆத்மாக்களுக்கு, சதா யதார்த்தமான உரையாடல் செய்து வீணான விசயங்களை முடிவடையச் செய்யக்கூடிய ஆத்மாக்களுக்கு, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
வரதானம்:
எதிர்மறையானதை நேர்மறையானதாக
மாற்றக்கூடிய சுயத்தை மாற்றுபவர் மற்றும் உலகை மாற்றுபவர் ஆகுக
.
எந்தவொரு எண்ணமோ மற்றும் சமஸ்காரமோ நொடியில் எதிர்மறையான நிலையில் இருந்து நேர்மறையானதாக மாறிவிட வேண்டும் - இதற்காக முழு நாளில் டிராஃபிக்கை பிரேக் (நிறுத்து வதற்கான) செய்வதற்கான பயிற்சி தேவை. ஏனெனில், வீணான மற்றும் எதிர் மறையான எண்ணங்களின் வேகம் அதிவிரைவாக இருக்கும். வேகமான நேரத்தில் சக்திசாலி யான பிரேக் போட்டு மாற்றக்கூடிய பயிற்சி செய்யுங்கள். அப்பொழுதே தன்னுடைய வீணானதை மாற்றி சுயத்தை மாற்றுபவர் மற்றும் உலகை மாற்றுபவர் ஆகமுடியும். மேலும், தன்னுடைய ஃபரிஷ்தா சொரூபத்தின்
மூலம் அனேக ஆத்மாக்களுக்கு சுகம், சாந்தியின் வரதானத்தைக் கொடுக்க முடியும்.
சுலோகன்:
நாடகத்தினுடைய ஞானத்தை நினைவில் வைக்கக்கூடியவர்கள் தான் எதுவும் புதிதல்ல என்ற விதி மூலம் வெற்றியாளர்
ஆகமுடியும்.
குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆகும். இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகள் அனைவரும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை விசே‘ யோகப் பயிற்சி செய்யும் நேரத்தில் தன்னுடைய லைட் (ஒளி) மற்றும் மைட் (சக்தி) சொரூபத்தில் நிலைத் திருங்கள், புருவ மத்தியில் பாப்தாதாவை வரவழைத்து, இணைந்த சொரூபத்தின் அனுபவம் செய்யுங் கள் மற்றும் நாலாபுறங்களிலும் லைட் மற்றும் மைட்டின் கிரணங்களைப் பரப்புவதற்கான சேவை செய்யுங்கள்.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments