Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 23.12.22

 

23-12-2022  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! நினைவில் அமரும் போது கண்களைத் திறந்து கொண்டு அமருங்கள். ஏனென்றால் நீங்கள் உண்ணும் போதும் அருந்தும் போதும், நடமாடும் போதும் கூட பாபாவின் நினைவில் இருக்க வேண்டும்.

கேள்வி:

பகவானைத் தேடுவதற்காக மனிதர்கள் வாசல் தோறும் அலைந்து ஏன் அடி வாங்கு கின்றனர்?

பதில்:

ஏனென்றால் மனிதர்கள் பகவானை சர்வவியாபி எனச் சொல்லி அதிகம் கஷ்டப் படுத்தி விட்டனர். சர்வவியாபி என்றால் எங்கிருந்து கிடைப்பார்? பிறகு பரமாத்மாவோ பெயர்-வடிவத்துக் கெல்லாம் அப்பாற்பட்டவர் எனச் சொல்லி விடுகின்றனர். அப்போது எப்படிக் கிடைப்பார், யாரைத் தேடுவார்கள்? அதனால் வாசல் தோறும் அலைந்து அடி வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். குழந்தைகள் நீங்கள் அலைவது இப்போது நின்று விட்டது. நீங்கள் நிச்சயத்தோடு சொல்கிறீர்கள், பாபா பரந்தாமத்திலிருந்து வந்துள்ளார். குழந்தை களாகிய நம்மோடு இவருடைய கர்மேந்திரியங் கள் மூலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். மற்றப்படி பெயர் வடிவத்திற்கு அப்பாற்பட்ட பொருள் என்று எதுவும் கியைடாது.

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாபாவின் நினைவில் அமர்ந்திருக் கிறீர்கள். இதை யார், யாருக்குச் சொன்னார்? அனைத்து ஆத்மாக்களின் தந்தை, தம்முடைய குழந்தைகளாகிய ஆத்மாக்களோடு பேசினார். ஆத்மாக்கள் காதுகள் மூலமாகக் கேட்டனர், பாபா என்ன சொன்னார் என்பதை. பாபா கேட்கிறார், தங்களின் தந்தையை நினைவு செய் கிறீர்களா? தந்தையை நினைவு செய்வதற்காகக் கண்களை மூடிக் கொள்ள வேண்டுமா என்ன? குழந்தைகள் இப்போது தந்தையை நினைவு செய்கின்றனர் என்றால் கண்களோ திறந்தபடி தான் இருக்கின்றன. அமரும் போதும் எழும் போதும், நடமாடும் போதும் குழந்தை களுக்குத் தந்தையின் நினைவு இருக்கிறது. கண்களை மூடிக் கொள்வதற்கான அவசியம் இல்லை. ஆத்மாவுக்குத் தெரியும், என்னுடைய தந்தை இந்த உடல் உறுப்புகள் மூலமாக என்னோடு பேசிக் கொண்டிக்கிறார். பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளார், இந்தப் தூய்மை இல்லாத, பழைய உலகத்தைப் புது உலகமாக மாற்றுவதற்காக. இது புத்தியில் உள்ளது, கண்களோ திறந்துள்ளன. பாபா பேசுகிறார், நீங்கள் கேட்கவும் செய்கிறீர்கள் மற்றும் நினைவிலும் இருக்கிறீர்கள். யார் சொல்கிறார்? பரமபிதா பரமாத்மா. அவருடைய பெயர் என்ன? எப்படி உங்களுக்கு சரீரத்தின் பெயர் உள்ளது, அது மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு சரீரத்தை எடுத்தீர்கள், அதை விட்டீர்கள். பிறகு வேறொன்றை எடுத்துக் கொண்டால் பெயரும் வேறாக ஆகி விடும். ஆத்மாவின் பெயர் மாறுவதில்லை. பாபா சொல்கிறார், நானும் ஆத்மா தான். நீங்களும் ஆத்மா. நான் பரந்தாமத்தில் வசிக்கும் பரம ஆத்மா. அதனால் சுப்ரீம் ஆத்மா எனச் சொல்கின்றனர். சுப்ரீம் என்று உயர்ந்தவரிலும் உயர்ந்தவருக்குச் சொல்கின்றனர். உயர்ந்த ஆத்மாக்கள் உள்ளனர் என்றால் கீழான ஆத்மாக்களும் உள்ளனர். சிலர் புண்ணிய ஆத்மாவாக, சிலர் பாவாத்மாவாக உள்ளனர். பாபா சொல்கிறார் - ஆத்மாவாகிய என்னுடைய பெயர் எப்போதுமே சிவன் என்பது தான். பெயரோ அவசியம் வேண்டும் இல்லையா? அறியாத காரணத்தால் பெயர்-வடிவத்திற்கு அப்பாற் பட்டவர் எனச் சொல்லி விடுகின்றனர். ஆனால் பெயர் வடிவத்திற்கு அப்பாற்பட்ட பொருள் என்று எதுவும் இருக்க முடியாது. எப்படி ஆகாயம் உள்ளது, அது எந்த ஒரு பொருளாகவும் இல்லை இல்லையா? போலார், போலாராகவே (துருவம்) உள்ளது. இதற்கும் கூட ஆகாயம் என்று பெயர் உள்ளது இல்லையா? மிக சூட்சுமமான தத்துவம். நல்லது, அதற்கும் மேலே தேவதைகள் உள்ளனர். அதுவும் போலார் தான். ஆகாயத்தின் மீது அமர்ந்துள்ளனர். பிறகு அதற்கும் மேலே ஆகாயம். அதிலும் ஆத்மாக்கள் அமர்வதற்கான இடம் உள்ளது. அதுவும் ஆகாயம். அதை பிரம்ம தத்துவம் எனச் சொல்கின்றனர். ஸ்தூல, சூட்சும, மூல தத்துவங்கள் என மூன்று தத்துவங்கள் உள்ளன. ஆத்மாக்களோ நிச்சயமாக போலாரில் இருப்பார்கள் இல்லையா? ஆக, மூன்று ஆகாயங்கள் ஆகின்றன. இந்த ஆகாயத்தில் விளையாட்டு நடைபெறுகிறது என்றால் நிச்சயமாக ஒளி வேண்டும். மூல வதனத்தில் விளையாட்டு நடை பெறாது. அதை பிரம்ம தத்துவம் எனச் சொல்கின்றனர். அங்கே ஆத்மாக்கள் வாசம் செய்கின்றனர். அது உயர்ந்ததிலும் உயர்ந்த மூன்று உலகங்கள், அதாவது உலகத்தின் மூன்று மாடிகள். கடலுக்குக் கீழேயும் ஏதோ உலகம் உள்ளது என்பதில்லை. தண்ணீருக்குக் கீழே மறுபடியும் தரை தான் உள்ளது. அதன் மீது தண்ணீர் நின்று கொண்டுள்ளது. ஆக, இது மூன்று உலகம். சைலன்ஸ் (அமைதி), மூவி (சப்தமற்ற அசைவு), மற்றும் டாக்கி (சப்தத்தின் உலகம்). இதை சிவபாபா அமர்ந்து புரிய வைக்கிறார். கண்களை மூடிக் கொண்டு சிவபாபாவை நினைவு செய்ய வேண்டுமா என்ன? இல்லை. மற்றவர்கள் கண்களை ஏன் மூடிக் கொள்கின்றனர்? ஏனென்றால் கண்கள் ஏமாற்று கின்றன.

மனிதர்கள் தாமே சொல்கின்றனர், பரமாத்மா பெயர் வடிவத்திற்கு அப்பாற் பட்டவர் என்று. பிறகு கல்-மண் அனைத்திலும் இருக்கிறார், 24 அவதாரங்கள், கச்ச மச்ச அவதாரம் எனச் சொல்கின்றனர். உண்மையில் இவை அனைத்தும் பொய் தான். ஈஸ்வரனை சர்வவியாபி எனச் சொல்லி எவ்வளவு குழப்பி இருக்கின்றனர்! பக்தி மார்க்கமே அலைந்து அடி வாங்குகிற மார்க்கம். என்னையும் கூட அலைய விடுகின்றனர். இப்போது பக்தியில் இருந்து, அலைந்து அடி வாங்குவதில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பக்தர்கள் பகவானை நினைத்து வேண்டுகின்றனர். இங்கே வந்து சந்திக்கும் போது சொல்கின்றனர், பாபா, நாங்கள் உங்களை அதிகமாகத் தேடினோம். அதிக மாக அடி வாங்கினோம், ஆனால் நீங்கள் கிடைக்கவில்லை. அட, எப்போதிருந்து அடி வாங்கினீர் கள்? பாபா, இது தெரியாது. இப்போது பாபா புரிய வைக்கிறார், ஞானத்தினால் தான் சத்கதி கிடைக்கும். மனிதர்கள் கும்பமேளாவில் கஷ்டப் படுவதற்காகச் செல்கின்றனர். எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ, அங்கெல்லாம் போய் ஸ்நானம் செய்வார்கள். கும்பம் என்றால் சங்கமம் -- சந்திப்பு. உண்மையில் ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு. ஆனால் பக்தியில் பிறகு அவர்கள் தண்ணீரின் திருவிழாவாக ஆக்கியுள்ளனர். அநேகர் இவ்விஷயங்களை ஏற்றுக் கொள் கின்றனர். அநேகர் ஏற்றுக் கொள்ளாமலும் உள்ளனர். ஞானத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. மனிதன் பிறக்கிறான், பிறகு இறக்கிறான், அவ்வளவு தான். இது இயற்கை தான். அநேக வழி முறைகள் உள்ளன. ஒரே வீட்டில் மனைவியின் வழி ஒன்றாகவும் கணவனின் வழி வேறொன்றா கவும் இருக்கும். ஒருவர் தூய்மையை ஏற்றுக் கொள்வார். மற்றவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். இப்போது உங்களுக்கு ஸ்ரீமத் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஸ்ரீமத் பகவான் வாக்கு என்று பாடப் பட்டும் உள்ளது. அவருடைய வழியை கடைபிடிப்பதால் தான் மனிதரில் இருந்து தேவதை ஆகி விடுகின்றனர். தேவதா தர்மம் இப்போது இல்லை. அடையாளங்களாகச் சித்திரங்கள் உள்ளன. அதன் மூலம் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது, அவர்கள் அரசாட்சி செய்துவிட்டுச் சென்றுள்ளனர் என்பது உறுதியாகிறது. பழையதிலும் பழைய பொருள் தேவி-தேவதை களுடையது. லார்டு கிருஷ்ணா எனச் சொல்கின்றனர் அல்லது காட் ஸ்ரீநாராயணர் எனச் சொல் கின்றனர். நீங்கள் அறிவீர்கள், லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அது வைகுண்டம் எனச் சொல்லப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டத்தின் அதிபதி யாக இருந்தார். சத்யுகத்தின் இளவரசராக இருந்தார். பிறகு அதே கிருஷ்ணர் துவாபரயுகத்திற்கு எப்படிச் சென்றார்? அதே பெயர் வடிவத்திலோ வர முடியாது. சைதன்யமாக இருந்த அவரது ஜட சித்திரம் இங்கே உள்ளது. ஆனால் அந்த ஆத்மா எங்கே சென்றது? இதை யாரும் அறிந்திருக்கவில்லை. பாபா சொல்கிறார் - ஆத்மா 84 பிறவிகள் எடுத்து இப்போது இங்கே பார்ட் நடித்துக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு பெயர், வடிவம், தேசம், காலத்தின் பாகத்தை நடித்துக் கொண்டே வந்துள்ளார். ஆத்மா தான் சொல்கிறது, நான் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கிறேன். பெயர்-வடிவம், தேசம், காலம், உற்றார் உறவினர் அனைவரும் வெவ்வேறு. அடுத்த பிறவியில் மாறி விடும்.

நீங்கள் அறிவீர்கள், இப்போது நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். பிறகு நாமே தான் தேவதை ஆவோம். சூரியவம்சியில் 8 பிறவிகள் எடுப்போம். ஒரு சரீரம் விட்டு வேறொன்றை எடுப்போம். அது கர்ப்பச் சிறை அல்ல. கர்ப்ப மாளிகையாக இருக்கும். இங்கே கர்ப்பச் சிறையில் அதிக தண்டனைகளை அனுபவிக்கின்றனர். துக்கம் ஏற்படுகிறது, அப்போது என்னை வெளியில் கொண்டு வாருங்கள், மீண்டும் பாவம் செய்ய மாட்டேன் எனச் சொல் கின்றனர். அங்கே கர்ப்ப மாளிகையில் ஓய்வாக இருப்பார்கள். ஆக, பாபா சொல்கிறார், அனைத்து வேத-சாஸ்திரங்கள் முதலியவற்றின் சாரத்தை நான் உங்களுக்குப் புரிய வைக் கிறேன். நல்லது, பாபா கும்பமேளா பற்றிப் புரிய வைக்கிறார், அநேகர் ஸ்நானம் செய்வதற்காகச் செல்வார்கள். அதிகமான மக்கள் கூட்டம் ஆகி விடும். அலகாபாத்தில் திரிவேணி மேளா நடைபெறும். இப்போது அது ஒன்றும் சங்கமம் கிடையாது. கடல் மற்றும் நதிகளுக் கிடையிலான சங்கமம் நடைபெற வேண்டும். இதுவோ நதிகளின் சங்கமம். இரண்டு நதிகள் ஒன்று சேர்கின்றன. அவர்கள் பிறகு சொல்லி விடுகின்றனர், மூன்றாவது நதி குப்தமாக உள்ளது என்று. இப்போது குப்த நதி என்று எதுவும் கிடையாது. இருப்பதே இரண்டு நதிகள். பார்ப்பதற்கும் இரண்டு நதிகள் தான் தென்படுகின்றன. வேறு எதுவும் கிடையாத. கங்கை மற்றும் யமுனை உள்ளது. மூன்று கிடையாது. இதுவும் பொய்யாகிறது இல்லையா? சங்கமமும் கிடையாது. கல்கத்தாவில் கடலும் பிரம்மபுத்திராவும் சங்கமிக்கின்றன. படகில் அமர்ந்து அக்கரை செல்கின்றனர். அங்கே மேளா நடைபெறுகின்றது. எவ்வளவு முயற்சி செய்கின்றனர்! அமர்நாத்தில் தீர்த்த யாத்திரை செய்வதற்காகச் செல்கின்றனர். அங்கேயும் சிவலிங்கத்தின் மூர்த்தி உள்ளது. அதை வீட்டில் கூட வைக்க முடியும். பிறகு அங்கே செல்வதற் கான தேவை இல்லை. இதுவும் டிராமாவில் கஷ்டப் படுவதற்காக விதிக்கப் பட்ட தாகும். திரிவேணிக்குச் செல்கின்றனர். அது தூய்மை படுத்தக் கூடியது எனப் புரிந்து கொள் கின்றனர். சிலருக்கு நதிகள் எங்கிருந்து வருகின்றன என்று கூடத் தெரியாது. மலைகளில் இருந்து வருகின்றன. ஆனால் தண்ணீரோ கடலில் இருந்து வருகிறது. மேகங்கள் மழை பொழிந்தால் உயர்ந்த மலைகளாக இருக்கும் காரணத்தால் பனி இறுகிப் போகிறது. பிறகு வெயிலடிக்கும் போது பனி உருகுகிறது என்றால் தண்ணீர் ஒன்று சேர்ந்து நதிகளில் வரு கின்றது. இப்போது சிந்தனை செய்யுங்கள், பதீத-பாவனர் பரமபிதா பரமாத்மா ஞானக்கடலா? அல்லது ஞான நதிகளா? அல்லது தண்ணீரின் கடல் மற்றும் நதிகளா? அதிக இருளில் அடி வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். இப்போது இது தூய்மை படுத்தும் தண்ணீர் அல்ல, இதுவோ மழையின் தண்ணீர் என்று அவர்களுக்கு எப்படிச் சொல்வது? மேகங்களில் இருந்து மழையினால் தண்ணீர் வருகிறது. மேகம் பிறகு கடலில் இருந்து தண்ணீரை இழுத்துக் கொள்கிறது. தண்ணீரோ தூய்மை படுத்தக் கூடியதாக ஆக முடியாது. பாடவும் செய்கின்றனர், பதீத-பாவனா சீதாராம், ஹே பதீத-பாவனா வாருங்கள். ஆத்மாக்கள் சொல்கின்றனர், ஹே தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா இரக்கம் வையுங்கள்.

பாபா புரிய வைக்கிறார் - இந்த பக்தியின் கஷ்டங்களை அனுபவிப்பதால் யாரும் தூய்மை யாவதில்லை. இந்த நதிகளோ அநாதியாக உள்ளவை. தண்ணீர் என்பது குடிப்பதற் காகவும் பயிர் செய்வதற்காகவும் உள்ளது. அது எப்படி தூய்மைபடுத்தும்? இப்போது இது உங்களுடைய கடைசிப் பிறவி. நான் வருகிறேன், உங்களை தூய்மையாக்குவதற்காக. சத்யுகம் தூய்மையான உலகமாக இருந்தது. இது தூய்மை இல்லாத உலகம். யார் தூய்மையாக இருந்தனரோ, அவர்களே 84 பிறவிகள் எடுத்து தூய்மை இல்லாதவர்களாகி விட்டுள்ளனர். அதனால் மீண்டும் தூய்மை யாக்குவதற்காகத் தந்தையை அழைக்கின்றனர். அரைக்கல்பமாக இறங்கும் கலையாகவே இருந்து வந்துள்ளது. பாரதம் சத்யுகத்தில் மிகுந்த சுகம் நிறைந்ததாக இருந்தது. தூய்மையாக இருந்தது. இப்போது துக்கம் நிறைந்துள்ளது. ஏனென்றால் தூய்மை யற்று உள்ளது. அதனால் காட் ஃபாதர் என அழைக்கின்றனர். பிறகு அவருக்குப் பெயர்- வடிவம் கிடையாது எனச் சொல்லி விடுகின்றனர். அப்போது யாரை அழைக்கின்றனர்? இதையும் புரிந்து கொள்வதில்லை, எப்படிச் சொல்கின்றனர், ஆத்மா நட்சத்திரம் போல் உள்ளது என்று. ஒரு விசித்திர நட்சத்திரம் ஜொலிக்கிறது. ஆத்மா முற்றிலும் சிறிய பிந்தி போல் உள்ளது. திலகம் கூட இங்கே வைக்கின்றனர். மேலும் சொல் கின்றனர், புருவ மத்தியில் விசித்திர நட்சத்திரம் ஜொலிக்கிறது ஆக, இவ்வளவு மிகச்சிறிய ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் அவிநாசி பாகம் அடங்கியுள்ளது. அது ஒரு போதும் அழிவதில்லை. இந்த நாடகம் முழுவதும் அழியாததாகும். சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது. சிருஷ்டி ஓரிடத்தில் நிலை கொண்டி ருக்கிறது என்பதெல்லாம் கிடையாது. முதலில் இருந்த ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் இப்போது இல்லை. நிச்சயமாக எப்போது அது இல்லையோ, அப்போது தான் நான் வருவேன். நான் வந்து மீண்டும் தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறேன். ஆக. சக்கரம் சுழல்கிறது. சரித்திர-பூகோளம் பிறகு ரிப்பீட் ஆகிறது. சத்யுகத்தில் சூரியவம்சி இராஜ்யம் இருந்தது. திரேதாவில் சந்திரவம்சி , இப்போது பிறகு உங்களுக்கு 84 பிறவிகள் பற்றித் தெரிந்து விட்டது இல்லையா? எப்படி நாம் உயரும் கலையில் வருகிறோம்? பாபா அனைத்துக் குழந்தை களுக்கும் தூய்மை இல்லாததிலிருந்து தூய்மையாவதற்கான வழி சொல்கிறார். கண்களை மூடிக் கொண்டு என்னை நினைவு செய்யுங்கள் என்று சொல்வதில்லை. உண்ணும் போதும் அருந்தும் போதும் என்னை நினைவு செய்ய வேண்டும். கண்களை மூடிக் கொண்டு சாப்பிடுவீர்களா என்ன? உள்ளே போய்விடும்.

குழந்தைகளாகிய உங்கள் ஆத்மா அறிந்துள்ளது, பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணரோ மனிதராக இருந்தார். அவரை பகவான் என்று எப்படிச் சொல்வார்கள்? பாபா சொல்கிறார் - இப்போது என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் தூய்மையானவர்களாகி விடுவீர்கள். எவ்வளவு சமயம் (ஸ்தூல) யாத்திரையில் உள்ளனரோ, மனிதர்கள் தூய்மையாக உள்ளனர். திரும்பி வந்து விட்டால் வீட்டில் பிறகு தூய்மை யற்றவர்களாகி விடுகின்றனர். உங்களுடையது ஆன்மிக யாத்திரை. அதை பாபா செய்ய வைக்கிறார். பாபா சொல்கிறார் - நீங்கள் அமரலோகம் செல்ல வேண்டுமானால் என்னை நினைவு செய்யுங்கள். ஆத்மா தூய்மையானால் தான் நீங்கள் பறக்க முடியும். அந்த் மதி ஸோ கதி ஆகி விடும். பாபாவின் ஸ்ரீமத்தினால் தான் சத்கதி கிடைக்கிறது. ஸ்ரீமத் சொல்கிறது - ஹே ஆத்மாக்களே, என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் ஆத்மாவின் கறை நீங்கி விடும். நீங்கள் முக்திதாமம் சென்று விடுவீர்கள். பிறகு ஜீவன்முக்தியில் வருவீர்கள். இந்தச் சக்கரத்தைப் புரிந்து கொள்வதால் நீங்கள் சக்கரவர்த்தி ஆவீர்கள். சத்யுக-திரேதாவில் நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். பிறகு பாபாவோ கேட்பார் இல்லையா - உங்களைப் தூய்மை யற்றவர்களாக யார் ஆக்கினார்? இதையும் இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக் கிறீர்கள், எப்போதி-ருந்து இராவண இராஜ்யம் ஆரம்ப மாகியதோ, அப்போது தூய்மை இழந்து விட்டோம். அரைக் கல்பத்திற்குப் பிறகு பழைய உலகமாக ஆகி விடுகிறது. பிறகு உங்களுக்கு சுகமோ புது உலகத்தில் கிடைக்க வேண்டும். அதை நான் தான் வந்து கொடுக் கிறேன். நான் உங்களைப் தூய்மை யாக்குகிறேன். இராவணன் உங்களை தூய்மை இல்லாதவர் களாக்குகிறான். நான் ஆஸ்தி தருகிறேன். இராவணன் சாபமிடுகிறான். இது விளையாட்டு. இராவணன் உங்களுடைய பெரிய விரோதி. அவனுடைய உருவத்தைத் தயார் செய்து எரிக் கின்றனர். எப்போதாவது சிவனுடைய உருவத்தைச் செய்து எரிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. சிவனோ நிராகார். இராமர் சுகம் தருபவர், அவரை எப்படி எரிப்பார்கள்? துக்கம் தருபவன் இராவணன். இதை அநாதியாக எரித்தே வந்துள்ளோம் எனச் சொல்கின்றனர். அப்படியானால் ஆரம்பத்திலிருந்தே இராவண இராஜ்யம் இருந்ததா என்ன? இராமராஜ்யம் இருந்ததே இல்லையா? இவையனைத்தையும் புரிய வைக்க வேண்டும். இராவண இராஜ்யம் எப்போதிருந்து ஆரம்பமாயிற்று - இது யாருக்கும் தெரியாது. அரைக்கல்பத்திலிருந்து ஆரம்ப மாகிறது. திரௌபதிகள் நீங்கள் அனைவரும் அழைக்கிறீர்கள் -- பாபா எங்களைக் காப்பாற்றுங்கள். அட, நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் தூய்மையை இழக்கவே மாட்டோம். தைரியம் வேண்டும். முழுப் பற்றற்றவர்களாக ஆக வேண்டும். நீங்கள் முழுமையாகப் பற்றற்றவர் ஆகும் போது தான் நான் அடைக்கலம் தருவேன். எனக்கோ ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. கணவர், குழந்தை-குட்டிகள் நினைவு இருந்து கொண்டே இருக்குமானால் ஆஸ்தி பெற முடியாது. இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே பாபாவை நினைவு செய்யுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஸ்ரீமத் படி அனைவருக்கும் தூய்மையாவதற்கான வழி சொல்ல வேண்டும். பதீத-பாவனர் பாபாவின் அறிமுகம் கொடுப்பதற்கான யுக்தியை உருவாக்க வேண்டும்.

2. பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெறுவதற்காக அல்லது பாபாவின் அடைக்கலத்தில் வருவதற்கு முழுமையாகப் பற்றற்றவர் (நஷ்டோமோஹா) ஆக வேண்டும். கண்களைத் திறந்தவாறு பாபாவை நினைவு செய்வதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும்.

வரதானம்:

சர்வசக்திகளையும் சரியான நேரத்தில் கட்டளைப்படி காரியத்தில் பயன்படுத்தக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.


மாஸ்டர் என்றால் எந்த சக்தியை எப்பொழுது ஆவாஹனம் செய்கிறீர்களோ, அந்த சக்தி நடைமுறை சொரூபத்தில் அனுபவம் ஆக வேண்டும். எந்த நேரத்தில் எந்த சக்தி அவசியமோ, அந்த நேரத்தில் அந்த சக்தி உதவி செய்ய வேண்டும். சக்திக்கு கட்டளை யிட்டீர்கள், ஆஜராகி விட்டது. பொறுமை சக்திக்கு கட்டளையிட்டீர்கள், ஆனால் எதிர் கொள்ளும் சக்தி வந்ததது என்று இருக்கக் கூடாது. அவர்களை மாஸ்டர் சர்வசக்திவான் என்று கூற முடியாது. சரீர சக்திகள் கட்டளைப்படி இருப்பது போன்று சூட்சும சக்திகளும் கட்டளைப்படி காரியம் செய்ய வேண்டும். ஒரு விநாடியும் வித்தியாசம் ஏற்படக் கூடாது.

சுலோகன்:

மகிழ்ச்சிக்கு ஆதாரம் திருப்தியின் சக்தியாகும்.

 Download PDF

 

Post a Comment

0 Comments