13-09-2022 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தங்களுக்குள் சகோதரன், சகோதரன் ஆவீர்கள். நீங்கள் ஆன்மிக அன்போடு இருக்க வேண்டும். சுகம் நிறைந்தவர் ஆகி அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். குணத்தை கிரஹிப்பவர் ஆக வேண்டும்.
கேள்வி:
தங்களுக்குள் ஆன்மிக அன்பு இல்லாததற்கான காரணம் என்ன? ஆன்மிக அன்பு எவ்வாறு ஏற்படும்?
பதில்:
தேக அபிமானத்தின்
காரணத்தினால் எப்பொழுது ஒருவர் மற்றவருடைய குறையைப் பார்க்கிறார்களோ, அப்பொழுதே ஆன்மிக அன்பு இருப்பதில்லை. எப்பொழுது ஆத்ம அபிமானி ஆகிறார்களோ, தன்னுடைய குறைகளை நீக்குவதற்கான
கவலை இருக்கிறதோ, சதோபிரதானம் ஆகுவதற்கான இலட்சியம் இருக்கிறதோ, இனிமையானவராக, சுகம் கொடுக்கக் கூடியவராக ஆகிறார்களோ, அப்பொழுதே தங்களுக்குள் மிகுந்த அன்பு ஏற்படுகிறது. தந்தையினுடைய
ஸ்ரீமத் என்னவென்றால்,
குழந்தைகளே! யாருடைய அவகுணத்தையும் பார்க்காதீர்கள். குணவான் ஆவது மற்றும் ஆக்குவதற்கான
இலட்சியம் வையுங்கள். அனைவரையும் விட அதிக குணங்கள் ஒரு தந்தையிடம் உள்ளன. தந்தை யிடமிருந்து
குணத்தை கிரஹித்துக்
கொண்டே இருங்கள், மற்ற அனைத்து விசயங்களையும்
விட்டுவிடுங்கள். அப்பொழுதே அன்போடு இருக்க முடியும் என்பதாகும்.
ஓம்சாந்தி. எல்லையற்ற தந்தை நம்மை சதோபிரதானம் ஆக்கிக் கொண்டு இருக்கின்றார் மற்றும் அதற்கு ஆதாரமான யுக்தியை (வழியை) கூறிக்கொண்டு இருக்கின்றார் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை அமர்ந்து குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குகின்றார் - நீங்கள் சகோதரன், சகோதரன் ஆவீர்கள், தங்களுக்குள் மிகுந்த ஆன்மிக அன்பு இருக்க வேண்டும். உங்களுக்கு இருந்தது, இப்பொழுது இல்லை. மூல வதனத் திலோ அன்பிற்கான விசயமே கிடையாது. எனவே, எல்லையற்ற தந்தை அமர்ந்து அறிவுரை வழங்குகின்றார். குழந்தைகளே! தற்சமயம், தற்சமயம் என்று கூறிக்கூறி சமயம் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. நாள், மாதம், வருடம் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. நீங்கள் இந்த இலட்சுமி, நாராயணராக இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். உங்களை அவ்வாறு உருவாக்கியது யார்? தந்தை. பிறகு, நீங்கள் எவ்வாறு கீழே இறங்குகிறீர்கள்? மேலிருந்து கீழே இறங்கி, இறங்கி சமயம் கடந்து சென்று கொண்டே இருக்கின்றது. நாள் கடந்தது, மாதம் கடந்தது, வருடம் கடந்தது, சமயம் கடந்து விட்டது. நாம் முதலில் சதோபிர தானமாக இருந்தோம், தங்களுக்குள் மிகுந்த அன்பு இருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். தந்தை சகோதரர்களுக்கு அறிவுரை கொடுத்திருக்கின்றார். நீங்கள் சகோதரன், சகோதரன், தங்களுக்குள் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். நான் உங்கள் அனைவருடைய தந்தை ஆவேன். சதோபிர தானம் ஆகுவதே உங்களுடைய இலட்சியம் ஆகும். எவ்வளவுக் கெவ்வளவு நாம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகிக்கொண்டே செல்வோமோ, அவ்வளவுக்கவ்வளவு குஷியில் அதிக மாக திளைத்திருப்போம் என்று நீங்கள் புரிந்திருக் கிறீர்கள். நாம் சதோபிரதானமாக இருந் தோம். சகோதரன், சகோதரனாகிய நாம் நமக்குள் மிகுந்த அன்போடு இருந்தோம். தேவதை களாகிய நாம் நமக்குள் மிகுந்த அன்போடு நடந்து கொண்டோம் என்பது இப்பொழுது தந்தை மூலம் தெரிந்துவிட்டது. சொர்க்கத்தின் தேவதை களுக்கு மிகுந்த மகிமை உள்ளது. நாம் அங்கே வசித்தோம். பிறகு, கீழே இறங்கி வந்திருக் கிறோம். முதல் தேதியிலிருந்து இன்று வரை 5 ஆயிரம் ஆண்டுகளில் மீதம் சில வருடங்களே உள்ளன. ஆரம்பத்திலிருந்து நீங்கள் எவ்வாறு நடிப்பு நடித்து வந்திருக்கிறீர்கள்! தேக அபிமானத்தின் காரணத்தினால் ஒருவருக்கு ஒருவரிடத்தில் அந்த அன்பு இல்லை. ஒருவர் மற்றவருடைய குறைகளை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தோம் என்பது இப்பொழுது உங்களது புத்தியில் உள்ளது. நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள். அப்பொழுது இன்னார் இப்படிப்பட்டவர், இவருக்குள் இது உள்ளது என்று யாருடைய குறைகளையும் கூறவில்லை. தங்களுக்குள் மிகுந்த அன்பு இருந்தது. இப்பொழுது அதே நிலையை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். இங்கேயோ ஒருவரை ஒருவர் அந்த பார்வையிலேயே பார்க்கின்றனர், சண்டை போட்டுக் கொள்கின்றனர். இப்பொழுது அவை அனைத்தும் எவ்வாறு முடிவடையும்? இதை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். குழந்தைகளே! நீங்கள் சதோபிரதான பூஜைக் குரிய தேவி, தேவதைகளாக இருந்தீர்கள், மெதுவாக கீழே இறங்கி, இறங்கி நீங்கள் தமோபிரதானம் ஆகி விட்டுள்ளீர்கள். நீங்கள் எத்தகைய இனிமையானவர்களாக இருந்தீர் களோ, இப்பொழுது அத்தகைய இனிமையானவர்களாக ஆகுங்கள். நீங்கள் சுகம் கொடுப் பவர்களாக இருந்தீர்கள், பிறகு, துக்கம் கொடுப்பவர்களாக ஆகிவிட்டீர்கள். இராவண இராஜ்யத்தில் ஒருவருக்கொருவர் துக்கம் கொடுப்பதில், காம வாளை வீசுவதில் ஈடுபட்டி ருந்தீர்கள். சதோபிரதானமாக இருந்த பொழுது காம வாளை வீசவில்லை. இந்த 5 விகாரங்கள் உங்களுடைய எவ்வளவு பெரிய எதிரிகள் ஆவர். இதுவே விகாரி உலகம் ஆகும். ஏனெனில், இராவண இராஜ்யம் நடைபெறு கிறது அல்லவா ! இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் என்று எதை சொல்லப் படுகிறது என்பதைக் கூட நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தற்போது சத்யுகம் முடிவடைந்து விட்டது, திரேதாயுகம் முடிவடைந்து விட்டது, துவாபரயுகம் முடிவடைந்து விட்டது மற்றும் கலியுகமும் கூட முடிவடைந்து விடும். இப்பொழுது நீங்கள் கீழே இறங்கி சதோபிரதானத் திலிருந்து தமோபிரதானம் ஆகிவிட்டீர்கள். உங்களுடைய அந்த ஆன்மிகக் குஷி மறைந்து விட்டது. இப்பொழுது நீங்கள் சதோபிரதானம் ஆக வேண்டும். நான் வந்திருக் கின்றேன், அவசியம் உங்களை சதோபிரதானம் ஆக்குவேன்.
இதைக் கூட தந்தை புரியவைக்கின்றார் - குழந்தைகளே! எப்பொழுது 5 ஆயிரம் வருடங் களுக்குப் பிறகு சங்கமயுகம் வருகிறதோ, அப்பொழுதே நான் வருகின்றேன். மீண்டும் சதோபிரதானம் ஆகுங்கள் என்று உங்களுக்குப் புரியவைக்கின்றேன். தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள். எந்தளவு நினைவு செய்வீர்களோ, அந்தளவு குறைகள் நீங்கிக் கொண்டே இருக்கும். நீங்கள் எப்பொழுது சதோபிரதான தேவி, தேவதைகளாக இருந்தீர் களோ, அப்பொழுது உங்களிடம் எந்தக் குறைகளும் இல்லை, இப்பொழுது இந்தக் குறைகள் எவ்வாறு நீங்கும்? ஆத்மாவிற்குத் தான் அசாந்தி ஏற்படுகிறது. நாம் ஏன் அசாந்தியாக ஆனோம் என்பதை இப்பொழுது உள்ளுக்குள்ளே சோதனை செய்ய வேண்டும். எப்பொழுது நாம் சகோதரன், சகோதரனாக இருந்தோமோ, அப்பொழுது தங்களுக்குள் மிகுந்த அன்பு இருந்தது. இப்பொழுது அதே தந்தை வந்திருக்கின்றார். தன்னை ஆத்மா சகோதரன், சகோதரன் என்று புரிந்து கொள்ளுங்கள், ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு செலுத்துங்கள், தேக அபிமானத்தில் வருவதன் காரணத் தினால் தான் ஒருவருக்கொருவர் குறைகளைப் பார்க்கிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் உயர்ந்த பதவியை அடைவதற்கான முயற்சி செய்யுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். புது உலகத்தில் தந்தை நமக்கு ஆஸ்தி கொடுத்திருந்தார், 21 பிறவி களுக்கு அனைத்தையும் நிறைத்துக் கொடுத்திருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது தந்தை மீண்டும் வந்திருக்கின்றார் எனில் ஏன் நாம் அவருடைய வழிப்படி நடந்து மீண்டும் முழுமையான ஆஸ்தியைப் பெறக் கூடாது?
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு உறுதியானவர்களாக இருந்தீர்கள்! எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் இருந்தது. யாரையும் நிந்தனை போன்றவை செய்ததில்லை. இப்பொழுது ஏதாவது ஓன்று இருக்கிறது. அவை அனைத்தை யும் மறந்துவிட வேண்டும். நாம் அனைவரும் சகோதர, சகோதரர்கள் ஆவோம். ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். நாம் சீக்கிரத்திலும் சீக்கிரமாக சதோபிரதானம் ஆக வேண்டும் என்ற இந்தக் கவலை மட்டும் இருக்கிறது. இன்னார் இவ்வாறு இருக்கிறார், இவர் இதைச் சொன்னார், இந்த அனைத்து விசயங்களையும் மறந்துவிடுங்கள். இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். தந்தை கூறுகின்றார் - தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். சதோபிரதானம் ஆவதற்காக முயற்சி செய்யுங்கள். பிறருடைய அவகுணங் களைப் பார்க்காதீர்கள். தேக அபிமானத்தில் வருவதால் தான் அவகுணம் பார்க்கப்படுகிறது. தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள். சகோதரர் சகோதரரைப் பார்த்தீர்கள் என்றால் குணத்தைத் தான் பார்ப்பீர்கள். அவகுணங்களைப் பார்க்கக் கூடாது. அனைவரையும் குணவான் ஆக்குவதற்கான முயற்சி செய்தீர்கள் என்றால் ஒருபொழுதும் துக்கம் ஏற்படாது. யாராவது ஏதாவது தலைகீழான (உல்டா சுல்டா) செயல் செய்தால் அவர்கள் ரஜோ, தமோபிரதானமாக இருக்கும் காரணத் தினால் அவர்களுடைய நடத்தை கூட அவசியம் அவ்வாறே இருக்கும் என்று புரியவைக்கப் படுகிறது. நான் எந்தளவிற்கு சதோபிரதானம் ஆகியிருக்கிறேன்? என்று தன்னைப் பார்க்க வேண்டும். அனைவரையும்விட அதிகமான குணங்கள் இருப்பது தந்தையிடம் தான். எனவே, தந்தையிடமிருந்து மட்டும் குணங்களை கிரஹியுங்கள், மற்ற அனைத்து விசயங்களையும் விட்டுவிடுங்கள். அவகுணத்தை விடுத்து, குணத்தை தாரணை செய்யுங்கள். தந்தை எவ்வளவு குணவான் ஆக்குகின்றார்! குழந்தைகளாகிய நீங்களும் கூட எனக்கு சமமாக வேண்டும் என்று கூறு கின்றார். தந்தையோ சதா சுகம் கொடுக்கக் கூடியவராக இருக்கின்றார் அல்லவா ! எனவே, சதா சுகம் கொடுப்பதற்கான மற்றும் சதோபிரதானம் ஆகுவதற்கான கவலை கொண்டி ருங்கள், வேறு எந்த விசயத்தையும் கேட்காதீர்கள். யாரையும் நிந்தனை போன்றவை செய்யா தீர்கள். அனைவரிடத்திலும் ஏதாவது சில குறைகள் அவசியம் உள்ளன. சுயம் (தான்) புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒருவரிடம் குறைகள் உள்ளன. இவருக்குள் இன்ன இன்ன குறைகள் உள்ளன என்று பிறர் புரிந்திருக்கின்றனர். தன்னைத் தான் மிகவும் நன்றாக இருப்பதாக புரிந்துகொள்கின்றனர், ஆனால், எப்பொழுதாவது தலைகீழான வார்த்தை வெளிப் பட்டுவிடுகிறது. சதோபிரதான நிலையில் இந்த விசயங்கள் இருப்ப தில்லை. இங்கே குறைகள் உள்ளன, ஆனால், புரிந்துகொள்ளாத காரணத்தினால் தன்னை எல்லாம் அறிந்தவர் என்று நினைத்துக் கொள்கின்றனர். தந்தை கூறுகின்றார் - எல்லாம் அறிந்தவரோ நான் ஒருவர் மட்டும் தான். உங்கள் அனைவரையும் இனிமையானவர் ஆக்குவதற்காக வந்திருக்கின்றேன். ஆகையால், என்னவெல்லாம் அவகுணங்கள் போன்றவை இருக்கின்றனவோ அவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். நான் இனிமையிலும் இனிமையான ஆன்மிகத் தந்தையிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறேன்? நான் எந்தளவு புரிந்திருக்கிறேன் மற்றும் பிறருக்குப் புரிய வைக்கிறேன்? என்று தன்னுடைய நாடியைப் பாருங்கள். தேக அபிமானத்தில் வந்துவிட்டீர்கள் என்றால் எந்த இலாபமும் இருக்காது. நீங்கள் அனேக முறை தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகியிருக் கிறீர்கள். இப்பொழுது மீண்டும் ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஸ்ரீமத்படி நடந்து என்னை நினைவு செய்யுங்கள். தலைமீது பாவங்களின் சுமை அதிகமாக உள்ளது. அதை இறக்கி வைப்பதற்கான சிந்தனை இருக்க வேண்டும். தேவதை களுக்கு முன்னால் சென்று, நாங்கள் பாவிகள் என்று கூறுகின்றனர். ஏனெனில், தேவதைகளிடம் தூய்மையின் கவர்ச்சி உள்ளது. ஆகையால், அவர்களுடைய மகிமை பாடுகிறார்கள். நீங்கள் அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்கள், 16 கலைகளிலும் சம்பூரணம் ஆனவர்கள், பிறகு, வீட்டிற்கு வந்தவுடன் மறந்துவிடுகின்றனர். தேவதைகளுக்கு முன்னால் செல்லும் போது தன்மீது வெறுப்பு வருகிறது. பிறகு, வீட்டிற்கு வந்தவுடன் எந்த வெறுப்பும் இருப்பதில்லை. அவ்வாறு அவர்களை ஆக்கக்கூடியவர் யார்? என்பதை சிறிது கூட சிந்திப்பதில்லை.
குழந்தைகளே! இந்தப் படிப்பு படியுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். தேவதை ஆக வேண்டும் என்றால் இந்தப் படிப்பைப் படிக்க வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். முதன் முதலில் தந்தை கூறுகின்றார் - தன்னை சதோபிரதானம் ஆக்க வேண்டும், ஆகையால், என் ஒருவரை நினைவு செய்யுங்கள். தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். சகோதரன், சகோதரன் எனப் புரிந்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தியைப் பெற வேண்டும். இது கூட புத்தியில் உள்ளது. உலகத்தினர் அவருடைய புகழ் பாடுகின்றனர், பிறகு, மறுபுறம் அவரை நிந்தனையும் செய்கின்றனர். ஏனெனில், அவரைப் பற்றி அறியவே இல்லை. நாயில், பூனையில் இருக்கின்றார், அனைத்தும் பரமாத்மாவின் ரூபம் ஆகும் என்று கூறுகின்றனர். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தந்தையை நினைவு செய்வதற் கான முயற்சி செய்ய வேண்டும். முன்பும் நினைவு செய்தீர்கள். ஆனால், அது கலப்படமான நினைவாக இருந்தது, அனேகரை நினைவு செய்தீர்கள். கலப்படமற்ற நினைவில் இருங்கள், என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில் யாரை நீங்கள் நினைவு செய்து வந்தீர்களோ, அவர்கள் அனைவரும் இப்பொழுது தமோபிர தானம் ஆகிவிட்டனர். ஆத்மா தமோபிரதானமாக உள்ளது. சுயம் தமோபிர தானமானவர்கள், தமோபிரதானமானவர்களை நினைவு செய்கின்றனர். இப்பொழுது மீண்டும் சதோபிரதானம் ஆக வேண்டும். நினைவு செய்வதற்கு அங்கே (சொர்க்கம்) பக்தியே கிடையாது. குழந்தை களே! நாம் சதோபிர தானமாக எவ்வாறு ஆகுவது? என்ற இந்தக் கவலை மட்டும் கொண்டிருங்கள் என்று தந்தை புரியவைக்கின்றார்.
ஞானமோ மிகவும் எளிதானது ஆகும். இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, இவரிட மிருந்து இந்த ஆஸ்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் பேட்ஜை வைத்துக் கூட புரியவைக்க முடியும். தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார் எனில் அவசியம் இங்கே தான் (இவ்வுலகில்) இருக்கும் அல்லவா! சிவஜெயந்தி என்றால் சொர்க்கத்தின் ஜெயந்தி என்பதாகும். தேவதைகள் எவ்வாறு உருவானார்கள்? இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் இந்த படிப்பின் மூலம் தான் உருவானார்கள். படிப்பு மற்றும் நினைவே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது. நினைவு யாத்திரையில் இருப்பதன் மூலம் மற்ற விசயங்கள் மறந்துவிடு கின்றன. தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார் - குழந்தைகளே! தேக அபிமானத்தை விட்டுவிடுங்கள். யாருடைய குறைகளையும் பார்க்கக் கூடாது. இன்னார் இவ்வாறு இருக்கின்றார், இதை செய்கின்றார், இந்த விசயங்களால் எந்த இலாபமும் இல்லை, நேரம் வீணாகிறது. தமோபிர தானத்திலிருந்து சதோபிரதானம் ஆகுவதில் அதிக முயற்சி உள்ளது. தடைகளும் ஏற்படு கின்றன. எந்தளவிற்கு நினைவில் புயல் வருகின்றதோ, அந்தளவிற்கு படிப்பில் வருவதில்லை. நான் எந்தளவிற்கு தந்தையின் நினைவில் இருக் கின்றேன்? எந்தளவிற்கு என் அன்பு உள்ளது? என்று தன்னைப் பார்க்க வேண்டும். பாபாவிடம் மட்டுமே இணைந்திருக்கும் அளவிற்கு அன்பு இருக்க வேண்டும். ஆஹா! பாபா நீங்கள் எங்களை எவ்வளவு புத்திசாலியாக ஆக்குகின்றீர்கள்! நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவீர்கள், பிறகு, மனித சிருஷ்டியில் கூட நீங்கள் எங்களை எவ்வளவு உயர்ந்தவர்கள் ஆக்குகின்றீர்கள்! இவ்வாறு உள்ளுக்குள்ளே தந்தையின் மகிமை பாட வேண்டும். பாபா! நீங்கள் அதிசயம் செய்கின்றீர்கள். மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும். குஷியைப் போன்ற உணவு கிடையாது என்று கூறுகின்றனர் அல்லவா. தந்தை கிடைத் திருப்பது கூட மகிழ்ச்சிக்கான விசயம் ஆகும். இந்த படிப்பின் மூலம் நாம் இவ்வாறு (இலட்சுமி, நாராயணர்) ஆவோம். மிகுந்த குஷி இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை, மேலான தந்தை நமக்குக் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். பாபா எவ்வளவு கருணை உள்ளம் உடையவராக இருக்கின்றார்! இதற்கு முன்பும் கூட பகவானுடைய மகாவாக்கியம் என்ற வார்த்தையைக் கேட்டு இருக்கிறோம், ஆனால், அது பொய்யாக இருக்கும் காரணத் தினால் உள்ளத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கல்லில், முள்ளில் பகவான் இருக் கின்றார் எனில், பிறகு, அவர் எவ்வாறு பேசுவார்? உங்களுடைய புத்தியில் அதிகமான புதுப்புது விசயங்கள் உள்ளன, அவை வேறு எவருடைய புத்தியிலும் இல்லை. போகப் போக உங்களுடைய தெய்வீக மரம் வளர்ந்து கொண்டே செல்லும். தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகும், நீங்கள் விஷ்வத்தின் (உலகத்தின்) எஜமானர் ஆகிவிடுவீர்கள் என்ற செய்தியை அனைவருக்கும் கூறுங்கள் என்று தந்தை கூறுகின்றார். வேறு எந்த தர்ம ஸ்தாபகரும் இவ்வாறு கூற முடியாது. ஆகையினால், அவர்களை தூதுவர், செய்தியாளர் (மெஸன்ஜர்) என்றும் கூற முடியாது. என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள், சதோபிரதானம் ஆகிவிடுவீர்கள் மற்றும் சதோபிரதான உலகத்திற்கு வந்துவிடுவீர்கள் என்ற செய்தியை ஒரு தந்தை மட்டும் தான் கொடுக்கின்றார். இதுவே தந்தையின் செய்தியாகும். அனைத்து இடங்களிலும் இந்த செய்தியை எழுதிப் போடுங்கள். இதுவே அனைத்திற்கும் ஆதாரம் ஆகும். ஐரோப்பியர்களுக்காக இந்தச் சக்கரம் மற்றும் மரத்தில் முழு ஞானம் உள்ளது. உலகத்தின் வரலாறு, பூகோளம் எவ்வாறு திரும்ப நடைபெறுகிறது என்பதை அவர்களுக்குக் கூறினால், அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். அமரபுரிக்கு அழைத்துச் செல்வதற்காக அமர நாதன் பாபா இந்த உண்மையான அமர கதையைக் கூறிக்கொண்டு இருக்கின்றார். அது அமரலோகம் ஆகும். கீழே இது மரணலோகம் ஆகும். ஏணிப்படி சித்திரம் உள்ளது அல்லவா! இப்பொழுது நாம் மேலே செல்கிறோம், பிறகு, வரிசைக்கிரமமாக வருவோம். சிவபாபா சொல்கின்றார் என்றே எப்பொழுதும் புரிந்து கொள்ளுங்கள். அவரை மட்டும் நினைவு செய்துகொண்டே இருந்தீர்கள் என்றால் கூட குஷி இருக்கும். சிவபாபா இவருக் குள் பிரவேசம் செய்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இவர்கள் அற்புதமான ஜோடி ஆவார்கள். பாபா இவரிடம், நீங்கள் என்னுடைய மனைவி (வர்ன் ஹழ்ங் ஙஹ் ஜ்ண்ச்ங்). உங்கள் மூலம் நான் தத்தெடுக்கின்றேன் என்று கூறுகின்றார். பிறகு, தாய்மார்களை பராமரிப் பதற்காக தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளிலிருந்து ஒருவரை நியமிக்கின்றார். இந்த பிரம்மபுத்திரா அனைத்தையும் விட பெரிய நதி ஆகும். தாயும் நீயே, தந்தையும் நீயே என்று இவரைக் கூறுகின்றனர். பாபா தானே கூறுகின்றார் - நான் நடந்தாலும், சுற்றினாலும் மிகுந்த குஷியோடு தந்தையை நினைவு செய்கின்றேன். நினைவில் எவ்வளவு தூரம் நடந்தாலும் ஒருபொழுதும் களைப்படையமாட்டீர்கள். எந்தளவிற்கு நினைவு செய்வீர்களோ, அந்தளவிற்கு பிரகாசம் வந்து கொண்டே இருக்கும். தீர்த்த யாத்திரையில், எவ்வளவு குஷியாக ஓடி, ஓடி மேலே செல்கின்றனர்! அது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் ஏமாற்றங்கள் ஆகும். இது கூட விளையாட்டு ஆகும் - பக்தி என்பது இரவு ஆகும். இப்பொழுது உங்களுக்காக பகல் வருகின்றது. நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்காக முக்கியமான சாரம்:
1.
ஒரு தந்தையிடம் மட்டும் எப்பொழுதும் இணைந்திருக்கும் (நினைவில்) அளவிற்கு தந்தையிடம் அன்பு செலுத்த வேண்டும். இரவு, பகல் தந்தையினுடைய மகிமையைத் தான் பாட வேண்டும். மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும்.
2.
ஒரு தந்தையினுடைய கலப்படமற்ற நினைவில் இருந்து சதோபிரதானம் ஆக வேண்டும் ஒருபொழுதும் எல்லாம் அறிந்தவர் என்ற கர்வம் உடையவர் ஆகக் கூடாது. சமமாக இனிமையானவர் ஆக வேண்டும்.
வரதானம்:
தூய்மையின் அஸ்திவாரத்தை
பலப்படுத்தி, அதி இந்திரிய சுகத்தின் அனுபவம் செய்யக் கூடிய (சம்பூர்ணம் மற்றும் சம்பன்னம்) முழுமையானவர்
மற்றும் நிறைந்தவர் ஆவீர்களாக.
பிராமண வாழ்க்கையின்
அஸ்திவாரம் தூய்மை ஆகும். இந்த அஸ்திவாரம் உறுதியாக இருந்தது என்றால் முழுமையான சுகம், சாந்தியின் உணர்வு ஏற்படும். அதிந்திரிய சுகம் அல்லது (ஸ்வீட் சைலன்ஸ்) இனிமையான அமைதியின் அனுபவம் குறைவாக உள்ளது என்றால் அவசியம் தூய்மையின் அஸ்திவாரம் பலவீனமாக உள்ளது. இந்த விரதத்தை தாரணை செய்வது என்பது சாதாரண விˆயம் கிடையாது. பாப்தாதா தூய்மையின் விரதத்தை கடைப்பிடிக்கும் ஆத்மாக்களுக்கு உளப்பூர்வமாக
ஆசிகள் உள்பட வாழ்த்துக்கள் கொடுக்கிறார். இந்த விரதத்தின் (சம்பூர்ண மற்றும் சம்பன்ன பவ) முழுமையானவர்
மற்றும் நிறைந்தவர் ஆவீர்களாக என்ற வரதானத்தை அடைவதற்காக வீணாக யோசிப்பது, பார்ப்பது, பேசுவது மற்றும் செய்வது இவற்றிற்கு (ஃபுல்ஸ்டாப்)
முற்றுப் புள்ளி வைத்து பரிவர்த்தனை செய்யுங்கள்.
சுலோகன்:
எப்பொழுதும் ஒருவரின் ஆழத்தில் (ஏக் கே அந்த்) மூழ்கி இருத்தல் - இது தான் ஏகாந்தவாசி ஆவது ஆகும்.


0 Comments