Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 28.04.23

 

28-04-2023  காலை முரளி ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே, இந்தக் கலியுக உலகத்தின் சுகம் காக்கையின் எச்சிலுக்குச் சமமானது. இந்த உலகம் இப்போது முடிந்து போய் விட்டது. ஆகையினால் இதன் மீது பற்று வைக்கக் கூடாது. இதிலிருந்து ஈடுபாட்டை விலக்கி விட வேண்டும்.

கேள்வி:

எந்தக் குழந்தைகளின் மனம் இந்த பழைய உலகத்தின் பக்கம் ஈடுபட முடியாது?

பதில்:

யார் கட்டளைக்குக் கீழ்படிந்து, நன்றியுள்ள, நிச்சய புத்தியுடைய குழந்தைகளோ, அவர் களின் மனம் இந்தப் பழைய உலகத்தின் பக்கம் ஈடுபட முடியாது. ஏனெனில் இந்த உலகம் அழிந்து போய் விட்டதாகவே அவர்களின் புத்தியில் இருக்கும். இது மந்திர விளையாட்டு, மாயையின் ஆடம்பரம் ஆகும். இது இப்போது அழிந்தே ஆக வேண்டும். அணைகள் உடையும், நில நடுக்கம் ஏற்படும், கடல் நிலப்பரப்பை விழுங்கி விடும்....... இவை யனைத்தும் ஏற்படும். எதுவும் புதிதல்ல. இனிமையான வீடு, இனிமையான இராஜ்யம் நினைவில் இருந்தால், இந்த உலகத்தின் மீது மனம் ஈடுபட முடியாது.

பாடல்:  யாருக்கு கடவுள் துணைவனோ............ஓம் சாந்தி.

இது நம்பிக்கையைப் பற்றிய பாடல். எப்போது பாபாவினுடையவராக ஆகின்றோமோ அல்லது பாபா வருகின்றாரோ, அப்போது அவர் வந்து நம் துணைவனாக ஆகின்றார். பாபா எப்போது வருகின்றாரோ, அப்போது தான் வினாசத்தின் புயல் ஏற்படுகிறது என்று குழந்தை களுக்குத் தெரியும். பழைய உலகத்தை அழித்து புதிய உலகத்தை ஸ்தாபனை செய்ய பாபா வருகின்றார். நிலநடுக்கம் ஏற்படும், கடல் கீழிருந்து உலகத்தைத் தின்றுவிடும், மழை மேலிருந்து உலகத்தைத் தின்றுவிடும். இவையனைத்தும் ஏற்படத் தான் வேண்டும். அவர்கள் பாடலை அப்படித்தான் எழுதியுள்ளார்கள். முற்றிலுமாக பழைய உலகத்தின் அழிவு ஏற்படும் என்று பிராமண குல பூஷண குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பாபா வந்திருப்பதே புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காகத் தான். பிராமணர்களை முழு உலகத்தின் எஜமானர் களாக ஆக்குகின்றார். பழைய உலகத்தை அழித்துப் பிறகு முழு உலகத்தின் இராஜ்யத்தையும் குழந்தைகளுக்கு ஆஸ்தியாகக் கொடுக்கிறார். பாபாவிடமிருந்து புதிய உலகத்தின் எஜமானன் என்ற ஆஸ்தி கிடைக்கிறது என்பது குழந்தைகளுக்குத் தெரியும். இந்தப் பழைய உலகம் எந்த காரியத்திற்கும் உதவாது. இப்போது சொர்க்கம் உருவாகிக் கொண்டே இருக்கிறது என்று மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இவை யனைத்தும் மாயையின் ஆடம்பரம் ஆகும். அனைத்துப் பொருட்களும் முலாம் பூசப்பட்டது. முழு இராஜ்யமும் முலாம் பூசப்பட்டது, கானல் நீருக்குச் சமமானது. இதில் மனிதர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். முன்பு இஸ்லாமியர் களின் இராஜ்யம் இருந்த போது, இந்த விமானம், மோட்டார்கள் போன்றவை கிடையாது. ஆனால் இவையனைத்தும் மாயையின் ஆடம்பரமாக இருக்கிறது. எத்தனை விமானங்கள் உருவாக்குகின்றார்கள்! இவையனைத்தும் அழிந்து போகும் என்று குழந்தைகளுக்குத் தெரியும். நிலநடுக்கம் ஏற்படும், இந்த அணைகள் அனைத்தையும் தண்ணீரோடு தண்ணீராக்கி விடும். இதன் மூலம் சுகம் கிடைக்கும் என்று மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள், ஆனால் இவை அனைத்தின் மூலம் துக்கம் தான் கிடைக்கும். இந்த விமானம் கூட துக்கம் தரக்கூடியதாகி விடும், குண்டுகளைப் போடும். குழந்தைகள் இவை அனைத்தையும் மறந்து விட்ட காரணத் தினால், பழைய உலகத்தின் மீது மனம் ஈடுபடுகிறது. யார் பாபாவுடைய கட்டளைக்குக் கீழ்படிந்த, நன்றியுள்ள, முழுமையான உதவியாளர் குழந்தைகளாக ஆகின்றார்களோ, உறுதி யான நிச்சய புத்தியுடையவர்களோ, அவர்கள் எது நடந்தாலும், இது ஒன்றும் புதிய விசய மில்லை என்று புரிந்துக் கொள்கிறார்கள். பல தடவை இந்த பழைய உலகத்தின் வினாசம் ஏற்பட்டுள்ளது, இப்போதும் கண்டிப்பாக ஏற்பட வேண்டும். நிறைய புதிய புதிய பொருட்கள் உருவாகின்றன, சொர்க்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் புரிந்து கொள் கிறார்கள். மேலும் இது மந்திர விளையாட்டு என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் தெரியும். எப்படி பழைய தங்கத்தை நிறம் பூசி ஜொலிப்புடையதாக ஆக்குகின்றார்களோ, அப்படியே இந்த பழைய உலகத்திற்கு நிறம் ரூபம் கொடுத்து ஜொலிப்புடையதாக ஆக்குவதற் காக நாலாபுறமும் திட்டம் தீட்டிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு வினாசம் ஏற்படப்போகிறது என்பதே தெரியாது. இந்தப் பழைய உலகம் அழியப் போகிறது என்று பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் தெரியும்.

இந்தப் பழைய உலகம் அழிந்து விடும், பிறகு புதிய உலகத்தை பகவான் வந்து ஸ்தாபனை செய்வார் என்று மனிதர்கள் சொல்லி விடுகின்றனர். முதலில் பிரம்மாவைப் படைப்பார், பிறகு அவர் மூலம் மனித சிருஷ்டி உருவாகும். ஆனால் எப்போது உருவாகும் என்று தெரிவதில்லை. இதைக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் பாபா வந்து புரிய வைக்கிறார். ஸ்ரீமத் பகவானுடையது. இப்போது ஸ்ரீமத் என்று சொல்லப்படும் போது, அது உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் வழி என்று புரிந்துக் கொள்ள வேண்டும். பிரம்மாவினுடைய அல்லது விஷ்ணு வுடைய ஸ்ரீமத் என்று சொல்வதில்லை. பகவான் வந்து பிரம்மாவின் உடல் மூலமாக ஸ்ரீமத் எப்படிக் கொடுக்கிறார்? இது மனிதர்களுக்குத் தெரியாது. அவர்கள் பிரம்மா எப்படிக் கீழே வருகின்றார் என்று புரிந்து கொள்வதில்லை. அவரோ சூட்சுமவதன வாசியாக இருக்கின்றார். இந்த அனைத்து விசயங்களும் தெரியாத காரணத்தினால் கிருஷ்ணனின் பெயரைப் போட்டு விட்டார்கள். கிருஷ்ணனுக்கு ஏதேனும் சாதாரண ரூபம் இருக்கும், அதில் பரமாத்மா பிரவேசம் செய்கிறார் என்று கூட நடக்க முடியாது. இந்த விசயங்கள் யாருக்கும் தெரிவதில்லை. பாபா சொல்கிறார், நமக்குக் கூட நிறைய குருக்கள் இருந்தனர், ஆனால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஸ்ரீமத் யாருடையது என்பதை மறந்து விட்டனர். சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர் நிராகார் (சிவ பரமாத்மா), ஸ்ரீமத் என்பது அவருடையது தான். சிவாய நமஹ என்று சொல்கிறார்கள் அல்லவா! அவருடைய மகிமை அளவு கடந்தது. இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். இந்த விசயங்களை யாருடைய புத்தியிலும் அமர வைக்க எவ்வளவு உழைக்க வேண்டி யுள்ளது!

இப்போது பக்தர்களுக்கு பகவானுடைய வழி வேண்டும். இது நாடகத்தில் பதிவாகி உள்ளது. கீதையின் பகவான் வந்து பக்தர்களுக்கு வழி கொடுத்துள்ளார். இல்லையானால் பக்தர்களுக்கு எப்படி நன்மை ஏற்பட முடியும்? பிறகு பக்தர்கள் 'பகவான் சர்வ வியாபியாக இருக்கிறார்' என்று சொல்லி விடுகின்றனர். பக்தர்களே பகவான் என்றால் அவர்களுடைய நிலைமை என்னவாகும் என்று சொல்லுங்கள். பகவான் ஒருவர் தான், அவர் வருவதே பக்தர்களைக் காப்பதற்காகத் தான் என்று இப்போது பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். இந்த நேரம் மனிதர்கள் அனைவரும் இராவணனின் சோக வனத்தில் இருக்கின்றனர். எந்த மனிதரோ, சாது சன்னியாசி போன்றவர் களோ காப்பாற்ற முடியாது. பக்தர்களை பகவான் தான் காக்க வேண்டும்.

நாம் அழுக்கான உலகமான நரகத்தில் வசித்துக் கொண்டிருக்கிறோம் என்று மனிதர் களுக்குத் தெரியாது. தூய்மையான உலகம் என்று சொர்க்கத்திற்கு சொல்லப்படுகிறது. கோடியில் சிலர் தான் இந்த விசயங்களைப் புரிந்து கொள்வார்கள். கல்பத்திற்கு முந்தைய காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் தான் வருவார்கள். கல்ப கல்பத்திற்கு நீங்கள் தேடிக் கண்டெடுக்கப்படுகிறீர்கள், அதில் சிலர் முழுமையாக உருவாகின்றனர், சிலரை மாயை காயாக (கச்சா) இருக்கும்போதே தின்றுவிடுகிறது. பாபாவை நினைவு செய்யாத காரணத்தினால் உடனடியாக விகாரங்கள் வந்து விடுகிறது. முதலாவதாக தேக அகங்காரம் வருகிறது, பிறகு மற்ற விகாரங்களும், வந்து விடுகின்றன. எனவே ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று பாபா சொல்கிறார். ஏனெனில் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும்.இங்கே துக்கமே துக்கமாக இருக்கிறது. கலியுக உலகத்தின் சுகம் காக்கையின் எச்சிலுக்குச் சமமானது. இதை சன்னியாசிகள் கூட சொல்கிறார்கள், நீங்களும் புரிந்துக் கொள்கிறீர்கள். நரகம் மற்றும் சொர்க்கத்தை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நரகத்தில் எந்த சுகமும் கிடையாது. நரகத்தில் எதன் மீதும் பற்று வைப்பது என்பது தன்னுடைய பதவியை குறையச் செய்வதாகும். எந்தப் பொருள் மீதும் பற்று வைக்கக்கூடாது. இந்தப் பழைய உலகம் முடியப் போகிறது என்று புரிய வைக்க வேண்டும். இந்த உலகம் எந்தக் காரியத்திற்கும் உதவாதது. முதன் முதலில் தேக அபிமானம் வருவதால், அதன் மீது மனம் ஈடுபடுகிறது. ஆத்ம அபிமானி என்றால் இந்தப் பழைய உலகத்திலிருந்து விடுபட்டு (உபராம்) இருப்பார்கள். அது எல்லைக் கப்பாற்பட்ட வைராக்கியம் மற்றும் இது எல்லைக்குட்பட்ட வைராக்கியம். நாம் இந்தப் பழைய உலகத்தை மறக்கின்றோம். இது முற்றிலுமாக துக்கம் தரக் கூடியது. இதில் கொஞ்சம் வேலை மீதம் உள்ளது. மற்றபடி முடிந்தேவிட்டது. வெறும் 2 மணி நேரத்திற்கான விருந்தாளிகளாக நாம் இருக்கிறோம். நாங்கள் பழைய உலகத்தில் 2 மணி நேரத்திற்கான விருந்தாளிகள் என்று பிராமணர்கள் தான் சொல்கிறார்கள். நாம் நம்முடைய இனிமையான வீடு, இனிமையான இராஜதானிக்கு வந்து சுகத்தை அனுபவிப்போம். இப்போது நாம் செல்ல வேண்டும். இந்தப் பழைய உலகம் சுடுகாடாகப் போகிறது. எனவே தேகத்தின் கூடவே அனைத்தையும் மறக்க வேண்டும். இந்த உடல் பழைய செருப்பாக இருக்கிறது, இதை இப்போது விட வேண்டும், யோகத்தில் இருக்க வேண்டும். யோகத்தில் இருப்பதால் ஆயுள் அதிகரிக்கும், நாம் பாபா விடமிருந்து ஆஸ்தி எடுப்போம். தேக அபிமானத்தில் வருபவர்களின் ஆயுள் அதிகரிக்க முடியாது. அவர்களுக்கு தேகத்தின் மீது அன்பு ஏற்பட்டுவிடுகிறது. யாருடைய உடலாவது நன்றாக இருந்தால், உடல் மீது அன்பு ஏற்படுகிறது. எப்படி பாத்திரம் தேய்ப்பது போல் தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். எந்தளவு நீங்கள் யோகத்தில் இருப்பீர்களோ, அந்தளவு ஆத்மா தூய்மை ஆகிக் கொண்டே செல்லும். பிறகு புதிய பாத்திரம் (உடல்) பெறுவதற்கான தகுதி அடைகிறார்கள். நாம் உடலுக்கு எவ்வளவு தான் சோப்பு, வேசலின், பவுடர் தடவினாலும், இது பழைய உடல் அல்லவா! பழைய வீட்டுக்கு எவ்வளவு பழுது பார்த்தாலும், அது இடிபாடடைந்த கட்டிடம் தான். அது போலத் தான் இந்த உடலும் இருக்கிறது. தனக்குள் இந்த மாதிரியாக பேசிக் கொண்டால், பாபா மற்றும் ஆஸ்தி மீது மனம் ஈடுபடும். மேலும் எந்த பொருள் மீதும் மனதை ஈடுபடுத்தக் கூடாது. நான் ஆத்மா, பாபா கூட செல்லக் கூடியவனாக இருக்கிறேன். பாபாவை நினைவு செய்வதால் நன்மை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆயுள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நான் யோக பலத்தால் தூய்மை ஆகிக் கொண்டே இருக்கிறேன் என்னுடைய இந்த உடல் ஒரு காரியத்திற்கும் உதவாது என்று ஆத்மா புரிந்து கொள்கிறது. சன்னியாசிகள் தூய்மையாக இருந்தாலும், உடல் தூய்மையற்றது தானே! இங்கே யாருடைய உடலும் சுத்தமாக இருக்க முடியாது. அங்கே சரீரம் விஷத்தால் உருவாக்கப் படுவதில்லை. இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். சொர்க்கத் திலும் விகாரங்களினால் குழந்தை உருவாகுமானால், பிறகு அதை நிர்விகாரி என்று ஏன் சொல்கிறார்கள்? அங்கே ஆத்மா மற்றும் உடல் இரண்டும் தூய்மையாய் இருக்கிறது.

இந்த நேரம் 5 தத்துவங்களும் இரும்பு யுகத்திற்கானது என்று உங்களுக்குத் தெரியும். எனவே சரீரம் கூட அப்படித் தான் கிடைக்கிறது. நோய் போன்றவை ஏற்படுகிறது. அங்கே சரீரம் ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். அங்கே உங்களுடைய சரீரம் கூட புதியதாகிறது. சதோபிரதானமான இயற்கை உருவாகிறது. அங்கே இந்த மருந்துகள் எதுவும் கிடையாது. சரீரம் ஜொலித்துக் கொண்டே இருக்கும். உடல் தங்கத்தைப் போன்றதாகி விடுகிறது. இப்போது இரும்புக்கு சமமாக இருக்கிறது. உடல் எப்படி மாறுகிறது! இது கூட அதிசயமல்லவா! எந்த பாலீசும் (அழகுப் பூச்சு) போடப்படுவதில்லை. உடல் தங்கத்தைப் போன்றதாகி விடுகிறது. அது தங்க யுகம் என்று சொல்லப்படுகிறது. தங்க உடல் என்று எதுவும் இருப்பதில்லை. இலக்ஷ்மி நாராயணனை பாரஸ்நாத், பாரஸ்நாதினி என்று சொல்கிறார்கள். அவர்களுடைய உடல் எவ்வளவு சதோபிர தானமானது! அவர்களுக்கு எத்தனை மகிமை உள்ளது! இப்போது இந்த 5 தத்துவங்கள் கூட தமோபிரதானமாக உள்ளன. விஷத்தால் உடல் உருவாகிறது. அங்கு இது யோக பலத்திற் கான விசயமாகும். சொர்க்கத்தில் கண்டிப்பாக விகாரமற்ற குழந்தைகள் இருப்பார்கள். காமம் என்ற மகா எதிரி அங்கே இருப்பதில்லை. இந்த காமம் உங்களுக்கு ஆரம்பம்-மத்திமம்- இறுதி முக்காலமும் துக்கம் தரக் கூடியதாக இருக்கிறது என்று பாபா சொல்கிறார். அது சம்பூர்ண நிர்விகாரி உலகம் என்று சொல்லப்படுகிறது மற்றும் இது சம்பூர்ண விகாரி உலகம் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் 5 பூதங்கள் உள்ளன. எப்போது சர்வ சக்தி வானாகிய பாபாவுடன் யோகம் செய்கின்றீர்களோ, அப்போது தான் 5 பூதங்கள் மீது வெற்றி அடைய முடியும். இந்த யோக பலத்தினால் நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகின்றீர்கள். நீங்கள் மாறு வேடத்தில் உள்ள சிவசக்தி சேனைகள். இந்த சேனை சிவபாவிடம் யோகம் செய்து சக்தி எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சர்வசக்திவான் பாபா தான் சொர்க்கத் தின் இராஜதானியை ஸ்தாபனை செய்பவர், இறை தந்தை ஆவார். அவர் வருவதே உங்களை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குவதற்காகத் தான். இப்போது நீங்கள் சொர்க்கத்திற்குத் தகுதி யானவர்கள் அல்ல. நான் கல்ப கல்பத்திற்கு வந்து குழந்தைகளாகிய உங்களை சொர்க்கத் தின் இராஜதானியில் இராஜ்யம் செய்ய தகுதி உடையவராக ஆக்குகின்றேன். இப்போது நீங்கள் நரகத்தின் எஜமானர்களாக இருக்கிறீர்கள்.இன்னார் இறந்தார், சொர்க்கவாசி ஆனார் என்று மனிதர்கள் சொல்லக் கூட செய்கிறார்கள். நாம் நரகத்தில் இருக்கிறோம் என்று முற்றிலுமாக புரிந்து கொள்வதில்லை. உண்மையில் சொர்க்கத்தைப் பற்றி யாருக்கும் தெரிவதே இல்லை. யாரிடம் பணம், செல்வம் நிறைய இருக்குமோ, அவர்களுக்கு இங்கேயே சொர்க்கம் என்று சொல்கிறார்கள். அட இத்தனை நோய்நொடிகள் ஏற்படுகின்றன! இதை சொர்க்கம் என்று எப்படிச் சொல்ல முடியும்? சொர்க்கம் என்று சத்யுகத்திற்கு சொல்லப்படுகிறது. கலியுகத்தில் சொர்க்கம் கிடையாது. இது விகார உலகம் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். ஒவ்வொரு பெண்ணும் திரௌபதி, பார்வதி ஆவார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் அமர்நாத் அமரகதை சொல்கிறார். ஒவ்வொரு திரௌபதியும் மானபங்கப் படுத்துவதிலிருந்து காப்பாற்றப் படுவார்கள். இந்த விசயங்களை எல்லைக்கப்பாற்பட்ட பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். அது விகாரமற்ற உலகம், சம்பூர்ண நிர்விகாரி உலகம், முற்றிலுமாக விகாரமே கிடையாது. ஆத்மா வந்து பிரவேசிக்கும் போது கர்ப்பத்தில் முற்றிலும் தூய்மையாக இருக்கிறது. ஆத்மா கூட தூய்மையாக வருவதால், அதற்கு கர்ப்பத்தில் எந்த தண்டனையும் அனுபவிக்க வேண்டிய தில்லை. இங்கே அனைவருக்கும் தண்டனை கிடைக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த உலகத்தில் தன்னை விருந்தாளியாக புரிந்து கொள்ள வேண்டும். ஆத்ம அபிமானி ஆகி பழைய உலகம் மற்றும் பழைய தேகத்திலிருந்து விடுபட்டு (உபராம்) இருக்க வேண்டும்.

2. யோகத்தின் மூலம் ஆத்மா மற்றும் சரீரம் என்ற பாத்திரத்தை தூய்மையாக்க வேண்டும். இந்த சரீரம் ஒரு காரியத்திற்கும் உதவாது. எனவே இதன் மீது பற்று வைக்கக் கூடாது.

வரதானம்:

அமைதியின் அவதாரம் ஆகி உலகின் அமைதியின் கிரணங்களை பரப்பக் கூடிய அமைதி தேவதை ஆகுக.

எவ்வாறு சிறிய மின்மினிப் பூச்சி தூரத்திலேயே தனது ஒளியை அனுபவம் செய்விக் கிறதோ, அவ்வாறு அமைதியின் அனுபவம் இந்த விசேஷ ஆத்மாக்களின் மூலம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று உலக ஆத்மாக்கள் அல்லது சம்பந்தம்-தொடர்பில் வரக் கூடிய ஆத்மாக்கள் உணர வேண்டும். அமைதியின் அவதாரம் அமைதி கொடுப்பதற்கு வந்திருக் கின்றார் என்று புத்தியில் அனுபவம் செய்ய வேண்டும். நாலாபுறமும் உள்ள அசாந்தி ஆத்மாக்கள் அமைதிக் கிரணங்களின் ஆதாரத்தில் அமைதி குண்டத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு வர வேண்டும். இந்த அமைதி சக்தியை இப்பொழுது பிரயோகப்படுத்துங்கள்.

சுலோகன்:

யார் தன் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துகின்றார்களோ அவர்கள் உள்நோக்கு முகமுடையவர்களாகி பிறகு வெளிநோக்கில் வருவார்கள்.

 Download PDF

 

Post a Comment

0 Comments