30-04-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! உங்களை ஞானம் மற்றும் யோகத்தினால் அலங்கரிப்பதற்காக
தந்தை வந்திருக்கின்றார்,
அந்த
அலங்காரத்தை நிலையாக வைத்திருப்பதற்கு ஒருபோதும் மாயையிடம் தோல்வியடைந்து விடக்
கூடாது.
கேள்வி:
எந்த ஒரு சிறிய விசயம் நிச்சயபுத்தியுடைய குழந்தைகளின் நிச்சயத்தை
த்துண்டித்து சந்தேக புத்தியுடையவர்களாக ஆக்கிவிடும்?
பதில்:
நிச்சயபுத்தியுடைய குழந்தைகள் ஒருவேளை நாளடைவில் ஏதாவது ஒரு சிறிய தவறான
காரியத்தின் மயக்கத்தில் மாட்டிக் கொண்டால் அப்போது நிச்சயத் தன்மை துண்டிக்
கப்பட்டு விடுகிறது. ஸ்ரீமத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டால் மாயை சந்தேக
புத்தியுடையவர் களாக ஆக்கிவிடும். யார் சந்தேக புத்தியுடையவர்களோ அவர்கள் சேவை
செய்ய முடியாது மேலும் அவர்களால் விகாரங்களை வெல்வதற்கான முயற்சி செய்ய முடியாது.
இப்படிப்பட்ட பலவீனமான குழந்தைகளுக்கும் கருணையுள்ளம் உடைய தந்தை ஆலோசனை
கூறுகின்றார் - குழந்தைகளே! ஒருவேளை உங்களை விகாரம் தொந்தரவு செய்கிறது, சேவை செய்வது இல்லை யெனில்
தந்தையை நினைவு செய்யுங்கள்.
பாடல்: நீங்கள் தான் தாய்,
தந்தை....
ஓம்சாந்தி. இது யாருடைய மகிமை? தாய், தந்தையின் மகிமை. நீங்கள் அந்த தாய், தந்தையின் குழந்தைகளாக
இருக்கிறீர்கள். அவர் எல்லையற்ற படைப்பவர் என்று கூறப்படுகின்றார். எவ்வளவு
பிரம்மா குமார்,
குமாரிகள்
இருக்கின்றனர்! ஜெகதம்பா மற்றும் ஜெகத்பிதா, பிரம்மா வின் சிலையும் இருக்கிறது. விதவிதமான
சித்திரங்களை உருவாக்கி விட்டனர், அவ்வளவு தான். உலக ஆரம்பத்தில் அதாவது சத்யுகத்தில் அளவற்ற சுகம் இருந்தது
என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது மீண்டும் எல்லையற்ற தந்தையிடமிருந்து அளவற்ற
சுகத்திற்கான ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறோம். இந்த மகிமை லௌகீக தாய், தந்தைக்கு கூற முடியாது. இது
எல்லையற்ற தாய்,
தந்தையின்
விசயமாகும். பரம்பிதா பரமாத்மாவைத் தான் தாய், தந்தை என்று கூறப் படுகிறது. ஆனால் அவர்
நிராகாராக இருக்கின்றார். புது படைப்பு, புது தர்மத்திற்கான புது ஞானம் என்பதை பல
முறை புரிய வைத்திருக்கின்றார். தேவி தேவதா தர்மம் இப்போது கிடையாது. நமது தர்மம்
தேவி தேவதா தர்மம் என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் முழுமையாக
விகாரமற்றவர்களாக இருந்தனர். இப்போது அனைவரும் விகாரிகளாக இருக்கின்றனர், மேலும் தர்மம் அவசியம் மறைந்து
போக வேண்டும். அப்போது தான் அந்த தர்மத்தை மீண்டும் ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வர
வேண்டியிருக்கும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு
செய்ய வேண்டும். ஆஸ்திக்காக தாயின் வயிற்றி-ருந்து பிறப்பெடுத்தப் பிறகு தந்தையை
நினைவு செய்வர். பிறப்பு எடுத்து விட்டீர்கள், ஆனால் யார் மூலம்? தாயின் மூலம் பிறப்பு
எடுக்கிறீர்கள். இங்கும் அவ்வாறு தாயின் மூலம் நீங்கள் குழந்தை களாக
ஆகியிருக்கிறீர்கள். ஆஸ்தியடைவதற்காக தாயின் (பிரம்மா) மூலம் சிவபாபாவை நினைவு
செய்கிறீர்கள். ஆனால் சிலருக்கு நம்பிக்கை இருக்கிறது, சிலருக்கு கிடையாது. அனைவருக்கும்
நம்பிக்கை இருக்கிறது என்பது கிடையாது, மாயை குரல்வலையை நெரித்துக் கொண்டே
இருக்கிறது. (திசை திரும்பிவிடுகிறது) எங்கேயாவது மாட்டிக் கொள்கின்றனர்.
ஸ்ரீமத்படி நடக்காதவர்கள் தனது தவறுகள் மூலம் மயக்கத்தில் மாட்டிக் கொள்கின்றனர்.
நம்பிக்கை இருந்தால் மற்ற அனைத்து விசயங்களையும் விட்டு விடுவர். வழிமுறை கேட்க
வேண்டும் மற்றும் கூற வேண்டும். என்னால் சேவை செய்ய முடியாது என்று சிலர்
கூறுகின்றனர். பிரஜைகளை உருவாக்க வில்லையெனில் இராஜாவாக ஆக முடியாது. வேறு எதுவும்
செய்ய முடியவில்லையா,
நல்லது, சிவபாபாவை மட்டும் நினைவு
செய்யுங்கள். சொர்க்கத்திற்கு வந்து விடுவீர்கள். விகாரங்களை வெல்வதற்கான முயற்சி
செய்ய முடியவில்லையென்றாலும் தந்தையை நினைவு செய்யுங்கள் அப்போது சொர்க்கத்திற்கு
வந்து விடுவீர்கள். ஆனால் பதவி குறைந்ததாக கிடைக்கும்.
பக்தியின் பாகம் இப்போது முடிவடைய வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார்.
பக்தியின் பலன் கொடுப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார். நீங்கள் தான்
வரிசைக்கிரமமாக முழுமையாக பக்தியை செய்கிறீர்கள். முதன் முதலில் சிவபாபாவை
பூஜிக்கிறீர்கள்,
பிறகு
பிரம்மா,
விஷ்ணு, சங்கர். இப்போது பாருங்கள்
தெருவிற்கு தெரு எவ்வளவு கோயில்கள் கட்டியுள்ளனர்! எவ்வளவு சத்சங்கங்கள்
நடைபெறுகிறது! எங்கு இது போன்ற விசயங்கள் அதிகம் இருக்கிறதோ, பிறகு அங்கு இவைகள் எதுவும்
இருக்காது. ஒரு கோயில் கூட இருக்காது. இப்போது பக்தியின் சடங்குகள் எவ்வளவு இருக்கிறது!
துவாபரம்,
கலியுகம்
பக்தி மார்க்கத்தின் யுகமாகும், தமோ பிரதானம் ஆவதற்கான யுகமாகும். இப்போது தந்தை இது போன்ற அனைத்து
சிக்கல்களிலிருந்து விடுவித்து விடுகின்றார். தீயவைகளை கேட்காதீர்கள், தீயவைகளை பார்க்காதீர்கள்......
என்று கூறுகின்றார். தேக சகிதமாக அனைத்தி-ருந்தும் பற்றுதலை நீக்கி விடுங்கள்.
இப்போது நீங்கள் புது வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஸ்தாபனை ஆகிவிடுகின்ற போது
தான் செல்வீர்கள் அல்லவா! இது பழைய உலகம், துக்கதாமம். இது கடைசிப் பிறவியாகும்.
இப்போது நீங்கள் ஈஸ்வரனின் மடியில் அமர்ந்திருக்கிறீர்கள். தாய், தந்தையின் மடியில்
இருக்கிறீர்கள். தந்தை பிரம்மாவின் வாயின் மூலம் உங்களுக்கு பிறப்பு
கொடுக்கின்றார் எனில் இவர் தாயாகி விடுகிறார். இருப்பினும் உங்களது புத்தி
சிவபாபாவின் பக்கம் சென்று விடுகிறது. நீங்கள் தாய், தந்தையாக இருக்கிறீர்கள், நாம் குழந்தைகளாக இருக்கிறோம்......
சிவபாபாவின் மீது அன்பு ஏற்பட்டு விடுகிறது. நீங்கள் நாயகிகளாகவும் இருக்
கிறீர்கள். உங்களை அலங்கரித்து தகுதியானவர்களாக ஆக்குவதற்காக சிவபாபா வந்திருக்
கின்றார். ஞானம் மற்றும் யோகாவின் மூலம் குழந்தைகளாகிய உங்களை அலங்கரிக்கின்றார்.
நீங்கள் மட்டுமின்றி இந்த ஓசையை (முரளி) அனைத்து சென்டர்களிலும் கேட்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் கேட்டுக் கொண்டிருப்பர். அனைவருக்கும் அலங்காரம் நடைபெற்றுக்
கொண்டிருக்கும். எத்தனையோ பேர் அலங்காரம் செய்து செய்து பிறகு அசுத்தமாகி விடு
கின்றனர். பாபா கழுதையின் உதாரணம் கொடுக்கின்றார் அல்லவா! குழந்தைகளாகிய நீங்கள்
அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக, 16 கலைகளிலும் முழுமையானவர்களாக..... ஆக
வேண்டும். அடிக்கடி மாயையிடம் தோல்வியடையக் கூடாது. பாபா, இன்று மாயை அடித்து விட்டது
என்று கூறுகிறீர்கள். நீங்கள் குலத்தை களங்கப்படுத்தக் கூடியவர்கள் என்று பாபா
கூறுகின்றார். பாபாவிற்கும் நிந்தனை செய்விக்கிறீர்கள், குழந்தைகளுக்கும் நிந்தனை
செய்விக் கிறீர்கள். நீங்கள் மேலும் கீழே விழுந்து விடுவீர்கள். இந்த காமம் என்ற
மகா எதிரியின் மீது முழுமையாக வெற்றியடைய வேண்டும். தந்தையிடம் உறுதி எடுத்துக்
கொள்ள வேண்டும். தந்தை சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர், ஆக அவசியம் சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக ஆவீர்கள். யார் இந்த எளிய இராஜயோகம் கற்கின்றார்களோ அவர்கள்
சொர்க்கத்திற்கு வருவார்கள். அனைவரும் சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள் என்பது
கிடையாது. புது உலகை இறை தந்தை படைக்கின்றார் என்பதை புரிந்து கொண்டிருக் கலாம், மற்றபடி புது உலகில் யார்
இராஜ்யம் செய்வார்கள் என்பதை யாராவது புரிய வைக்க வேண்டும். பாரதம் பழமையானது
என்பதை அறிந்திருக்கின்றனர், ஆனால் யதார்த்த முறையில் பாரதவாசிகளே தெரிந்து கொள்ளவில்லையெனில்
மற்றவர்களுக்கு என்ன கூற முடியும்? பாரதம் போன்று தூய கண்டம் வேறு எதுவும்
கிடையாது,
பாரதம்
போன்று செல்வந்த கண்டம் வேறு எதுவும் கிடையாது என்று நீங்கள் கூற முடியும்.
இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளிடம் அதிக செல்வம் இருக்கலாம், ஆனால் பாரதத்தை ஒப்பிடும் போது
அது சோழி போன்றதாகும். பாரதம் தான் அனைத்து தர்மத்தினருக்கும் தீர்த்த
ஸ்தானமாகும். அனைத்து ஆத்மாக்களின் தந்தை நரகத்தை சொர்க்கம் ஆக்குவதற்காக
பாரதத்தில் வருகின்றார். அனைவரையும் விடுவிக் கின்றார். மகிமை என்றால் அவருக்கு
மட்டும் தான். மலரும் அவர் மீது தான் தூவ வேண்டும். ஆனால் கீதையில் பெயரை மறைத்து
விட்டனர். ஆகையால் மதிப்பை குறைத்து விட்டனர். கிறிஸ்தவர்களும் தவறான, தலை கீழான விசயங்களை கேட்டதால்
அவர்களும் நிந்தனைக் கான விசயங்களை கூறி தங்களது தர்மத்தில் பலரை மாற்றம் செய்து
விட்டனர். எத்தனை பேர் கிறிஸ்தவர்களாக மாறியிருப்பர்! இது கல்ப கல்பமாக நடைபெற்றுக்
கொண்டே இருக்கும். எப்போது இவ்வாறு தர்ம நிந்தனை ஏற்படுமோ அப்போது நான் மீண்டும்
வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறேன். எல்லையற்ற தந்தையிடமிருந்து அளவற்ற சுகம்
கிடைக்கிறது,
சொர்க்க
ஸ்தாபனை ஏற்படுகிறது. அவர் சிவபாபா, நீங்கள் சிவசக்தி பாரத மாதாக்கள், மேலும் நீங்கள் குப்தமாக
இருக்கிறீர்கள். சிவசக்தி சேனைகளாகிய உங்களை மனிதர்கள் எப்படி புரிந்து கொள்ள
முடியும்! நாம் சிவசக்தி சேனைகள் என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இந்த புது
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இது பழைய தூய்மை இல்லாத உலகமாகும், அது தூய்மையான, புது உலகமாகும். இந்த தூய்மை
இல்லாத உலகில் தூய்மையானவர்கள் யாரும் இருக்கவே முடியாது. சாஸ்திரங்களில் என்ன
என்ன விசயங்களை எழுதி வைத்து விட்டனர்! கூறக் கூடியவர்களும் மிக புத்திசாலிகளாக
இருக்கின்றனர். சாஸ்திரங்களையும் கேட்டு வந்தீர்கள், 7 நாட்கள் பாடமும் வைத்து வந்தீர்கள். ருத்ர
யக்ஞம் போன்றவையும் படைத்து வந்தீர்கள். இருப்பினும் உலகம் தமோ பிரதானமாக ஆகியே
தீர வேண்டும். என்ன செய்தாலும் சரி, திரும்பி ஒருவர் கூட செல்ல முடியாது.
மனிதர்களிடத்தில் ஞானம் இல்லாததால் சாஸ்திரங்களின் காதுக்கு இனிமையான விசயங்கள் மிகவும்
பிடித்திருக்கிறது. உங்களுக்கு இப்போது அது நன்றாக தோன்றுவது கிடையாது. அதனால்
தான் தீயவைகளை கேட்காதீர்கள்...... என்று தந்தை கூறுகின்றார். என்னை மட்டுமே
நினைவு செய்யுங்கள்,
ஸ்ரீமத்
படி நடந்தால் சிரேஷ்டமாக ஆகிவிடுவீர்கள். அசுர வழிப்படி நடப்பதால் அசுரர்களாகத்
தான் ஆவீர்கள். அது இராவணனின் வழியாகும். மனிதர்கள் இராவணனின் வழியில் இருப்பதால்
தான் இராவணணை எரித்துக் கொண்டிருக்கின்றனர். தந்தை ஒவ்வொரு விசயத்தையும் நல்ல
முறையில் அமர்ந்து புரிய வைக்கின்றார். விதை மற்றும் மரத்தில் ஞானம் இருக்கிறது, இது கல்ப விருட்சம் என்று
கூறப்படுகிறது. இதன் ஆயுள் 5 ஆயிரம் ஆண்டுகளாகும். ஒருவேளை சத்யுகம் இலட்சம் ஆண்டுகள் எனில் பிறகு
இந்துக்கள் அதிகமாக இருக்க வேண்டும்.
விநாசம் ஆகியே தீர வேண்டும், இயற்கையின் சீற்றங்களும் ஏற்படும் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
நன்றாகவே அறிவீர்கள். இதையே அவர்கள் இறைவனின் சீற்றங்கள் என்று கூறி விடுகின்றனர்.
ஆனால் ஒருபோதும் இறைவன் அழிவைக் கொண்டு வருவது (உருவாக்குவது) கிடையாது. இது
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. விநாசம் ஏற்படவில்லை யெனில் பிறகு புது உலகம்
எப்படி உருவாக்க முடியும்?
மகாபாரத
யுத்தத்தின் மூலம் தான் கதவு திறக்கப்படும். குழந்தைகள் சாட்சாத்காரம்
செய்திருக்கிறீர்கள்,
இலட்சியம்
மிகவும் உயர்ந்தது. ஆக சிலர் தைரியம் வைப்பது கிடையாது. இந்த மரண உலகில் இது
உங்களது கடைசிப் பிறப்பு என்று பாபா நேற்றும் புரிய வைத்துக் கொண்டிருந்தார்.
இப்போது நான் அமரலோகத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக வந்திருக்கிறேன்.இந்த
கடைசிப் பிறவியில் தந்தை கூறுவதைக் கேளுங்கள். தூய்மைக்கான உறுதி எடுத்துக்
கொள்ளுங்கள். லௌகீக தந்தை கூறுவதை குழந்தை கேட்கவில்லையெனில் நீ கெட்ட குழந்தை
என்று தந்தையும் கூறுவார் அல்லவா! பாபா சர்வசக்தி வாய்ந்தவர், அவரது கட்டளைப்படி நடக்கும் போது
உதவியும் கிடைக்கும்,
யோசிக்கிறேன்
என்று குழந்தைகள் கூறுகின்றனர். அரே, நாளை சரீரத்தை விட்டு விட்டீர்கள் எனில்
ஆஸ்தி கிடைக்காமல் போய்விடும். 5 விகாரங்களின் வியாதி மிகவும் கடுமையானது. மாயை அனைவரையும் நோயாளிகளாக ஆக்கி
விட்டது. எனது ஸ்ரீமத் படி இப்போது நடங்கள் என்று தந்தை கூறுகின்றார். மாயை அதிக
கெட்ட எண்ணங்களை கொண்டு வரும், அதிக புயல்கள் வரும். திவால் ஆக்கி விடும். பிறகு என்ன கூறுவார்கள்? பாபாவின் குழந்தையாக ஆன பின்பு
ஏன் இந்த நிலை?
ஆனால்
தந்தை கூறுகின்றார் - நீங்கள் சிவபாபாவிடம் அனைத்தையும் கொடுத்து விட்டீர்கள், நீங்கள் டிரஸ்டி யாக
ஆகிவிட்டீர்கள். அவர் உங்களுக்கு முழு கணக்கையும் திரும்பக் கொடுத்து விடுவார்.
நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.
இப்போது பாரதத்தின் படகு மூழ்கியிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை
மீட்பதற் காக வந்திருக் கின்றார். தந்தையின்றி யார் சொர்க்கத்தை உருவாக்க முடியும்? துவாரகை கீழே சென்று விட்டது
என்று கூறுகின்றனர். இப்போது மேலே எப்படி வரும்? ஆமை, மீன் கொண்டு வருமா என்ன? இது நாடகச் சக்கர மாகும், இதை புரிந்து கொள்ள வேண்டும்.
சத்யுகம்,
திரேதா
யுகம் மேலே இருக்கும் போது துவாபர், கலியுகம் கீழே சென்று விடும். சிருஷ்டிச்
சக்கரத்தின் சித்திரம் மிகப் பெரிதாக உருவாக்க வேண்டும். அதாவது கண்ணாடி முழு
சைஸில் உருவாக்கு கின்றனர் அல்லவா! தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! கண்ணாடியில்
தன் முகத்தை பார்த்துக் கொண்டே இருங்கள். ஒருபோதும் குரங்காக ஆகிவிடுவது கிடையாது
தானே! யாரிடத்தில் விகாரம் இருக்கிறதோ அவர்கள் குரங்கை விட மிக மோசமானவர்களாக
ஆகிவிடு கின்றனர். தேவதைகள் பூஜைக்குரியவர்கள். உண்மையில் சந்நியாசிகளுக்கு
ஒருபோதும் கோயில் கட்டப்படுவது கிடையாது. கோயில் தேவதைகளுக்கு மட்டுமே இருக்கும், ஏனெனில் அவர்களது ஆத்மா மற்றும்
சரீரம் இரண்டும் தூய்மையாக இருக்கிறது. இங்கு தூய்மையான சரீரம் அடைய முடியாது.
மனிதர்கள் எவ்வளவு யக்ஞத்தை (யாகம்) படைக்கின்றனர்! கதைகளைக் கூறிக் கொண்டே
இருக்கின்றனர். தந்தை ஒரே ஒரு எல்லையற்ற யக்ஞத்தை படைக்கின்றார். அதை ருத்ர ஞான
யக்ஞம் என்று கூறுகிறோம். இந்த யக்ஞத்தின் மூலம் தான் விநாச நெருப்பு ஏற்பட்டது, மற்ற அனைத்து யக்ஞங்களும்
அழிந்து போய் விடும். ருத்ர ஞான யக்ஞம் மிகவும் பிரபலமானது. சிவ ஞான யக்ஞம்
பிரபலம் கிடையாது. ருத்ரன் மற்றும் சாலிகிராமங்களுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
எவ்வளவு சாலிகிராமங்களை உருவாக்கு கின்றனர்! ஒரே ஒரு சிவலிங்கத்தை உருவாக்கு
கின்றனர். அதிக பிரஜைகள் உருவாகி விடுவார்கள், குறைவானவர்கள் இருக்கமாட்டார்கள். சிவபாபா
மற்றும் குழந்தைகளாகிய உங்களுக்கு பூஜை நடைபெறுகிறது. ஏனெனில் நீங்கள் முழு
உலகையும் விடுவிக்கிறீர்கள். நீங்கள் சிவசக்தி சேனைகள் - மீட்டெடுக்கும் வீரர்கள்.
தன்னை சர்வோதய லீடர் என்று கூறிக் கொள்பவர்கள் பலர் இருக்கின்றனர். இப்போது முழு
உலகின் மீதும் யாரும் கருணை காண்பிக்க முடியாது. அனைவரின் மீதும் கருணை காட்டக்
கூடிய கருணை உள்ளம் உடையவர் என்று சிவபாபா தான் கூறப்படுகின்றார். மனிதர்கள் பெரிய
பெரிய பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். அனைவர் மீதும் தயை அல்லது கருணை செய்வது
என்றால் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வது ஆகும். இந்த காரியம் ஒரே ஒரு
பரமாத்மாவினுடையது ஆகும். அனைவருக்கும் கதி, சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு சிவபாபா
தான். மனிதர்கள் யாருக்கும் சத்கதி கொடுக்க முடியாது. ஒருவருக்குக் கூட செய்ய
முடியாது,
முடியாத
காரியமாகும். நீங்கள் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்வது கிடையாது என்று உங்களைக் கூறு
கின்றனர். அது கண் கூடாக இருக்கிறது, கண்களால் பார்க்கின்றோம், ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டோம்!
ஆனால் இப்போது நாங்கள் ஸ்ரீமத் படி நடக்கிறோம், இதன் மூலம் சிரேஷ்டமாக ஆவோம். ஸ்ரீமத் என்பது
பகவானினுடையது,
கிருஷ்ணரின்
வழிப்படி நடப்பது கிடையாது. கிருஷ்னரின் ஆத்மாவும் முந்தைய பிறவியில் ஸ்ரீமத்
மூலமாகத் தான் இவ்வாறு சிரேஷ்ட தேவதையாக ஆகியிருக்கின்றார், அவ்வாறே மீண்டும் ஆகுக. அவரது
இராஜ்யமும் இருக்கும் அல்லவா! கிருஷ்ணர் தனியாக என்ன செய்வார்! முள்ளிலிருந்து
மலராக ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க முடியாது. தந்தை வருகின்றார் எனில்
அவசியம் சொர்க்கத்தை படைப்பார் அல்லவா! இல்லையெனில் அவதாரம் எப்படி, என்ன அவசியம் இருந்தது! அவசியம்
பாரதத்தை சொர்க்கமாக ஆக்கியிருக்கின்றார், மேலும் இப்போது மீண்டும் ஆக்கிக் கொண்டிருக்
கின்றார். அங்கு கோயில் போன்றவைகள் இருக்காது. பாபா பாரதத்தில் வந்திருக்கின்றார், பாரதத்தை சொர்க்கமாக
ஆக்குவதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள். மாயையின் புயல்கள் அனைவருக்கும் வரும்
என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். பாபாவிடம் வந்து கேளுங்கள். ஞானம் மற்றும்
யோகாவின் அனுபவத்தையும் கேளுங்கள். சங்கல்பங்கள் விகல்பங்கள் எப்படி ஆகிறது? என்ற அனுபவத்தையும் கேளுங்கள்.
பாபா அனைவரையும் விட முன்னால் இருக்கின்றார், ஆக இப்படிப்பட்ட புயல்களை அவசியம்
கடந்திருக்க வேண்டும். நாம் பாபாவை நினைவு செய்கிறோம். இருப்பினும் மாயை குறைந்தது
கிடையாது. எந்த அளவிற்கு சக்திசாலி ஆகிறோமோ அந்த அளவு மாயையும் முழு வேகத்துடன்
எதிர்கொள்ளும்,
பயப்படக்
கூடாது. தொந்தரவு செய்யக் கூடாது என்று பாபா மாயையிடம் கூறுங்கள் என்று
எழுதுகின்றனர். ஆனால் மாயையின் புயல்கள் அவசியம் வரும், பயப்படாதீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தையிடம் முழு கணக்கையும் கொடுத்து விட்டு டிரஸ்டியாகி, அனைத்து கவலைகளிலிருந்தும்
விடுபட்டு விட வேண்டும். தந்தையின் கட்டளைப்படி முழுமையாக நடந்து உதவி செய்வதற்கு
தகுதியானவர்களாக ஆக வேண்டும்.
2) மூழ்கிப் போன மனிதர்களின் படகுகளை (மீட்டெடுக்கும் வீரர்களாகி) கரை சேர்க்க
வேண்டும். தந்தைக்கு உதவியாளர்களாகி பூஜைக்கு தகுதியானவர்களாக ஆக வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு
பொக்கிஷத்தையும் வெற்றிகரமானதாக்கி வெற்றியின் குஷியை அனுபவம் செய்யக்கூடிய வெற்றி
மூர்த்தி ஆகுக.
ஒவ்வொரு
நொடியை,
ஒவ்வொரு
சுவாசத்தை,
ஒவ்வொரு
பொக்கிஷத்தை வெற்றிகர மாக ஆக்குவதே வெற்றி மூர்த்தி ஆவதற்கான விசேஷ சாதனம் ஆகும்.
ஒருவேளை எண்ணம்,
வார்த்தை, கர்மம், சம்பந்தம், தொடர்பில் அனைத்து விதமான
வெற்றியின் அனுபவம் செய்ய விரும்புகின்றீர்கள் என்றால் வெற்றி உடையதாக ஆக்கிக்
கொண்டே செல்லுங்கள்,
வீணாக்கா
தீர்கள். தனக்காக வெற்றிகரமானதாக ஆக்குங்கள் அல்லது பிற ஆத்மாக்களுக்காக வெற்றிகர
மானதாக ஆக்குங்கள். அப்பொழுது தானாகவே வெற்றியினுடைய குஷியை அனுபவம் செய்து கொண்டே
இருப்பீர்கள். ஏனெனில்,
வெற்றி
உடையதாக்குவது என்றால்,
நிகழ்காலத்தில்
வெற்றியை அடைவது மற்றும் எதிர்காலத்திற்காக சேமிப்பு செய்வது என்பதாகும்.
சுலோகன்:
எப்பொழுது எண்ணத்தில் கூட எந்தவொரு கவர்ச்சியும் கவர்ச்சிக்கவில்லையோ, அப்பொழுதே சம்பூரண நிலையின்
அருகாமையில் இருக்கின்றீர்கள் என்று கூற முடியும்.


0 Comments