Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
03-09-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! சரீரத்தின் மீது எந்த
நம்பிக்கையும் இல்லை,
ஆகையால், எந்த சுப நல்ல காரியம்
செய்யவேண்டும் என்றாலும் அதை இன்றே செய்துவிடுங்கள், நாளை செய்யலாம் என்று விட்டுவிடாதீர்கள்.
கேள்வி:
தன்னுடைய
சேமிப்புக் கணக்கை அதிகப்படுத்துவது அதாவது செல்வந்தர் ஆவதற்கான யுக்தி (வழி) என்ன?
பதில்:
சிவபாபாவை தன்னுடைய வாரிசாக (குழந்தையாக) ஆக்கிவிட்டீர்கள்
என்றால் அவர் உங்களை 21
பிறவிகளுக்கு
செல்வந்தர் ஆக்கிவிடுவார். இவர் ஒருவர் மட்டும் தான் அனைவருடைய குழந்தை ஆகி
அனைவருடைய சேமிப்புக் கணக்கை அதிகரிக்கின்றார். ஆனால், சிலர் பயப்படுகின்றனர், அனைத்தையும் கொடுக்க
வேண்டியதாக இருக்குமோ என்று நினைக்கின்றனர். பயம் கொள்வதற்கான விசயம் எதுவும்
இல்லை என்று பாபா கூறுகின்றார். நீங்கள் தன்னுடைய குழந்தைகள் முதலியோரை
பராமரியுங்கள். அவர்களை பாலனை செய்யுங்கள். ஆனால், இந்தக் குழந்தையை நினைவு செய்யுங்கள்.
அப்பொழுது உங்களை வளம் நிறைந்தவராக ஆக்கிவிடுவார். ஒருவேளை, இந்தக் குழந்தையிடம் பலி
ஆனீர்கள் என்றால் இவர் மிகுந்த சேவை செய்வார்.
ஓம்சாந்தி.
இந்த சமயம் அனைத்து சேவைக் கேந்திரங்களிலும் (நிலையங்கள்) குழந்தை கள் யாரெல்லாம்
அமர்ந்திருக்கிறார்களோ அவர்கள் நாம் சிவபாபாவின் மகா வாக்கியத்தைக் கேட்கின்றோம்
என்பதை அவசியம் புரிந்திருப்பார்கள். இத்தகைய இயக்கம் வேறு எதுவும் கிடையாது.
ஏனெனில்,
அனேக
அமைப்புகளின் கிளைகள் உள்ளன அல்லவா! எங்கே அவர்களுடைய தலைமையகம் இருக்குமோ, அங்கே அவர்கள் டேப் போன்றவற்றில்
பதிவு செய்வார்கள்,
அவர்களுடைய
குரு இருப்பார்,
அவரை
மட்டும் நினைவு செய்வார்கள். நிராகார பரமபிதா பரமாத்மாவை உங்களைத் தவிர யாரும்
நினைவு செய்யமாட்டார்கள். இந்த சங்கமயுக சமயத்தில் மட்டும் தான் பரலௌகீக தந்தை
வருகின்றார்,
குழந்தைகளுக்கு
அமர்ந்து அறிவுரை கொடுக்கின்றார் மற்றும் குழந்தைகள் நிச்சயபுத்தி உடையவர்களாகி
அதே ஈடுபாட்டில் இருக்கின்றனர். பரமபிதா பரமாத்மா இந்த சமயத்தில் தான் முரளி கூறு
கின்றார். சாஸ்திரங்களில் கூட கிருஷ்ணர் மதுவனத்தில் முரளி இசைத்ததாக உள்ளது.
மதுவனம் என்பது முக்கியமாக ஒன்று தான், மற்ற அனைத்து இடங்களுக்கும் முரளி செல்
கின்றது. மனிதர்களுடைய புத்தியிலோ கிருஷ்ணர் முரளி இசைக்கின்றார் என்பது உள்ளது.
சிவபாபா முரளி சொல்கின்றார் என்பது எவருடைய புத்தியிலும் ஒருபொழுதும் வர முடியாது.
இது எவருக்கும் தெரியாது. எங்கெங்கெல்லாம் உங்களுடைய கேந்திரங்கள் திறக்கப்படு
கின்றனவோ,
அங்கே
உள்ள அனைவரும் பிரம்மா மூலம் சிவபாபாவின் முரளி இசைக்கப் படுகின்றது என்று
புரிந்திருக்கின்றனர். அதை பிறகு அனைத்து ஞான கங்கைகளும் கேட்டு பிறருக்கு
சொல்கின்றனர். புத்தியிலோ சிவபாபாவின் நினைவு உள்ளது அல்லவா! சிவபாபாவை பகவான்
என்று கூறப்படு கின்றது. சிவபாபா முரளி சொல்கின்றார், இது எந்த சாஸ்திரங்களிலும்
இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் எங்கே இருந்தாலும் கூட, அச்சடிக்கப் பட்டு வரக்கூடிய
இந்த முரளி சிவபாபாவினுடையது என்பதை புரிந்திருக்கிறீர் கள். சிவபாபா இல்லாமல்
எவரும் கற்பிக்க முடியாது. என்னை நினைவு செய்யுங்கள், நான் ஆஸ்தி கொடுப் பேன் என்று
தந்தை மட்டும் தான் கூறுகின்றார். என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள் வேறு
எவருடைய பெயர்,
உருவத்தையும்
நினைவு செய்யா தீர்கள் என்று பாபா குழந்தை களுக்குப் புரியைவைத்துக் கொண்டே
இருக்கின்றார். சாகார மனிதர்களின் நிழற்படம் (போட்டோ) போன்றவற்றை ஜென்ம, ஜென்மங்களாக சேகரித்து
வந்திருக்கிறீர்கள்,
வழிபட்டு
வந்திருக்கிறீர்கள். தேவதைகளின் சித்திரங்களை வைத்துக் கொள்வது போன்ற அனைத்தும்
உங்களிடமிருந்து விடுபட்டுவிட்டது. பக்திமார்க்கத்தில் ஆத்மாக்கள் தந்தையை நினைவு
செய்கின்றனர். எப்பொழுது தேக அபிமானம் உடையவர்களாக ஆகிறார்களோ, அப்பொழுதே சரீரத்தை நினைவு
செய்கின்றனர். தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள் என்று
தந்தை அடிக்கடி கூறுகின்றார். ஆத்மா தான் பதீதமாக, துக்கம் நிறைந்ததாக ஆகிவிட்டது. நான்
மகாராஜாவாக இருந்தேன்,
இப்பொழுது
ஏழையாகிவிட்டேன் என்று ஆத்மா கூறுகின்றது. நாம் பாபாவின் குழந்தைகள் ஆவோம்.
தந்தையிடமிருந்து நாம் ஆஸ்தியை அடைந்திருந் தோம் என்பது இப்பொழுது உங்களுக்கு
நினைவு வந்துவிட்டது. அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள் என்று
இப்பொழுது தந்தை கூறுகின்றார். இதைப் போன்ற சுபகாரியம் வேறு எதுவும் கிடையாது.
இந்த சுபகாரியத்தை தாமதப்படுத்தக் கூடாது. சரீரத்தின் மீது எந்த நம்பிக்கையும்
இல்லை,
இளமைப் பருவமாக
இருந்தாலும் சரி,
வயோதிக
நிலையாக இருந்தாலும் சரி. ஆகையினால், என்ன செய்ய வேண்டுமோ அதை இன்றே செய்ய
வேண்டும். நாளை,
நாளை
என்று யோசித்துக்கொண்டே இருந்தால் காலன் சாப்பிட்டுவிடுவான். தந்தை எவ்வளவு பெரிய
மருத்துவமனை மற்றும் பல்கலைக் கழகம் திறந்திருக்கின்றார். இதன் மூலம் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி கிடைக்கிறது.
ஆரோக்கியம்,
செல்வம்
இருக்கிறது என்றால் மகிழ்ச்சி அவசியம் இருக்கும். நோயற்ற சரீரம் உள்ளது, செல்வம் உள்ளது எனில் மனிதர்கள்
சுகமாக இருப்பார்கள். எனவே,
யார் சுப
காரியம் செய்ய விரும்புகிறீர்களோ செய்துவிடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். 3 அடி
நிலம் மட்டும் வாங்கி இந்த மருத்துவமனை திறந்திடுங்கள். அனைவருக்கும் தந்தையின்
அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை சொர்க்கத்தின் படைப்பாளர் என்றால் அவசியம்
தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும். பாரதவாசிகளுக்கு ஆஸ்தி
கிடைத்திருந்தது அல்லவா! இந்த விசயங்களை பாரதவாசிகள் எளிதாகப் புரிந்துகொள்ள
முடியும். பகவானைத் தேடுவதற்காக கோவில்கள் உள்ளன. ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர் கள்
தேவதைகளை ஏற்றுக்கொள்வதே இல்லை. ஆகவே, இந்தச் சித்திரங்கள் போன்ற என்ன வெல்லாம்
உருவாக்கியிருக்கிறார்களோ அவை அனைத்தும் கற்பனையே என்று நினைக் கின்றனர். தடைகளோ
அதிகமாக வந்துகொண்டே இருக்கும். புரியவைப்பது மிகவும் எளிதாகும். தந்தையின் கட்டளை
என்ன வென்றால் விரைவாக என்னுடன் நிச்சயம் செய்துகொள்ளுங்கள், நிச்சயம் செய்துகொள்வதன் மூலம்
தான் ஆஸ்தியின் உரிமையாளர் ஆக முடியும் என்பதாகும்.
தந்தை
ஆன்மிக மருத்துவர் (சர்ஜன்) ஆவார். நீங்கள் அவருடைய குழந்தைகள் என்று கூறிக்
கொள்கிறீர்கள் எனில்,
நீங்களும்
கூட மருத்துவர்கள் ஆவீர்கள். அவசியம் ஆத்மாக்களுக்கு ஞானம் என்ற ஊசி போட வேண்டும்.
மன்மனாபவ. இது பெரியதிலும் பெரிய ஊசி ஆகும். பாபாவினுடைய நினைவின் மூலம் தான்
அனைத்து துக்கங்களும் விலகிப் போகின்றன. நினைவின் மூலம் புண்ணிய ஆத்மா ஆகிவிடு
கிறீர்கள். நினைவு மட்டும் தான் ஒரே மருந்து ஆகும். குழந்தை பிறக்கிறது, தந்தையின் மடிக்கு செல்கிறது
மற்றும் ஆஸ்திக்கு எஜமானர் ஆகிவிடுகிறது. நாம் நினைவின் மூலம் எல்லையற்ற தந்தை
யிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பது இப்பொழுது உங்களுக்குத்
தெரியும். நினைவில் தான் அனேக விதமான தடைகள் வருகின்றன, ஆகவே நினைவை உறுதியாக்கிக்
கொண்டே செல்லுங்கள். 3 அடி நிலம் மட்டும் வாங்கி இந்த மருத்துவமனை திறந்திடுங்கள்.
இது 3 அடி அல்லவா! இல்லையெனில், இத்தகைய உயர்ந்த கல்லூரிக்காக அனேக மனிதர்கள் வந்து படிக்கும்படியாக 50, 60 ஏக்கர் நிலம் வேண்டும். ஞானம்
என்ற ஊசி போட்டுக்கொண்டே செல்ல வேண்டும். 3 அடி நிலம் கூட கிடைக்காமல் இருந்தது, பின்னர் உலகின் எஜமானர்
ஆகிவிட்டனர் என்ற மகிமை கூட உள்ளது. 3 அடி நிலம் என்பது ஒன்றும் பெரிய விசயம்
அல்ல. பிறகு,
போகப்போக
வளர்ச்சி அடைந்து கொண்டே செல்லும். அஸ்திவாரம் போடப் பட்டது, எத்தனை கேந்திரங்கள்
திறக்கப்பட்டு விட்டன. எத்தனை பேர் சோழியிலிருந்து வைரம் போல் ஆகின்றனர்.
செய்யக்கூடியவர் களுக்குத் தான் மிகுந்த இலாபம் உள்ளது. அனேகருக்கு நன்மை
செய்வதற்காகத் தான் மருத்துவமனை மற்றும் கல்லூரி திறக்கப்படுகின்றது. இது கூட
அத்தகையதே,
வெளியில்
பெயர்ப் பலகை வைத்திடுங்கள். 21 பிறவிகளுக்காக ஆரோக்கியம் மற்றும் செல்வத்தைப்
பெறுவதற்கான மருத்துவமனை (கிளினிக் ஃபார் ஹெல்த், வெல்த்). 100 சதவிகிதம் தூய்மை, சுகம் மற்றும் சாந்திக்கான
வைத்தியசாலை என்று ஹிந்தி யில் கூறலாம். ஆனால், குழந்தை களுக்குள் சேவை செய்வதற்கான ஆர்வம்
இல்லை. குடும்பம் போன்ற வலையை சிலந்தி வலை என்று கூறப்படுகிறது, வலையில் தானே மாட்டிக்
கொள்கின்றனர். தந்தை வந்து இராவணன் என்ற சிலந்தி வலையிலிருந்து விடுவிக்கின்றார்.
சத்யுகத்தில் இவ்வாறு கூறமாட்டார்கள். இங்கே கூட தானே தன்னுடைய வலையில்
மாட்டிக்கொண்டு இறந்து விடுகின்றனர். இது இராவண இராஜ்யம் ஆகும். எவ்வளவு பெரிய
பெரிய இராவணனுடைய வலை முழு சிருஷ்டியிலும் உள்ளது. அனைவரும் சோக வனத்தில்
இருக்கின்றனர். இந்த இராவணனின் வலையில் அனைத்து சாது, சந்நியாசிகள் போன்றோரும்
மாட்டியிருக்கின்றனர். இவை அனைத்தையும் மறந்து தன்னை ஆத்மா என உறுதி செய்யுங்கள்
மற்றும் அனைவருக்கும் இதே வழியை சொல்லிக் கொண்டே இருங்கள் என்று இப்பொழுது தந்தை
கூறுகின்றார். இந்த சிருஷ்டிச் சக்கரத்தின் இரகசியத்தை வேறு எவரும் கூற முடியாது.
இவை அனைத்தையும் விடுத்து என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். நினைவின் மூலம் தான் உங்களுடைய அனைத்து பாவங்களும் அழிந்துபோகும்.
சுபகாரியத்தில் தாமதிக்கக் கூடாது. தாமதம் செய்து, செய்து இறந்தேவிடு கின்றனர் என்ற
எடுத்துக்காட்டும் கொடுக்கின்றார். பிறகு, போக் வைக்கும்பொழுது அந்த ஆத்மா வருகிறது, மிகவும் அழுகிறது. பாருங்கள்
நீங்கள் தாமதப்படுத்தி விட்டீர்கள் என்று அவர்களிடம் கூறப்படுகின்றது. நாளை நாளை
என்று சொல்லி சொல்லி காலன் சாப்பிட்டு விட்டான். இப்பொழுது ஞானத்தை எடுத்துக்
கொள்ள முடியாது. இவ்வாறு புகார் கூறப் படுகிறது. நல்லது, நாளை இதைச் செய்யலாம் என்று அனேக
குழந்தைகள் எண்ணு கின்றனர்,
பிறகு, இறந்து விடுகின்றனர். ஆகையால், பற்றை விட்டுவிடுங்கள் என்று
புரிய வைக்கப்படுகின்றது. உங்களுடைய லௌகீக உறவினர்கள் உங்களுக்கு எந்த நன்மையும்
செய்யக்கூடியவர்கள் அல்ல. இந்த சிவபாபா இப்பொழுது உங்களுடைய குழந்தை ஆகின்றார்.
நீங்கள் என்னை வாரிசு ஆக்குங்கள், அப்பொழுது நான் உங்களுக்கு மிகுந்த சேவை செய்வேன் என்று கூறுகின்றார். ஆகவே, உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்று பாபா கேட்கவும்
செய்கின்றார். சிவனாகிய என்னை தன்னுடைய குழந்தை ஆக்கினீர்கள் என்றால் 21
பிறவிகளுக்கு செல்வந்தர் ஆகிவிடுவீர்கள். கன்னிகை தன்னுடைய வீட்டிற்குச்
சென்றுவிடுகின்றார். குழந்தைக்காக எவ்வளவு பாடுபடுகின்றனர்!. குழந்தை இல்லை என்றால்
இரண்டாவது,
மூன்றாவது
திருமணம் கூட செய்கின்றனர். அந்த லௌகீக குழந்தைகள் உங்களுடைய எந்த சேவையையும்
செய்யமாட்டார்கள் என்று தந்தை கூறுகின்றார். அனைவருடைய சேமிப்புக் கணக்கையும்
அதிகப்படுத்துவதற்காக இவர் ஒருவரே அனைவருடைய குழந்தை ஆகின்றார். ஆனால், அனைத்தையும் கொடுக்க வேண்டியது
இருக்குமோ,
என்னவாகும்? என்று சிலர் பயப்படு கின்றனர்.
தன்னுடைய குழந்தைகள் போன்றோரையும் பாலனையும் செய்ய வேண்டும் என்று தந்தை
கூறுகின்றார். ஆனால்,
நினைவோ
இந்தக் குழந்தையை செய்யுங்கள். இவர் உங்களை வளம் நிறைந்தவர் ஆக்கிவிடுவார்.
காசியில் உள்ள கோவிலுக்குச் சென்று பலி ஆகின்றனர். சிவனிடம் பலி ஆவதனால் ஜீவன்
முக்தி கிடைக்கும் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது சங்கமயுகத்தின் விசயம்
ஆகும். எங்கே உள்ள விசயத்தை எங்கே கொண்டு சென்று விட்டனர்! ஒருவேளை, நீங்கள் இந்தக் குழந்தையிடம் பலி
ஆனீர்கள் என்றால் இவர் உங்களுக்கு மிகுந்த சேவை செய்வார், சொர்க்கத்தில் மாளிகை
கொடுப்பார். அந்தக் குழந்தை எதுவும் செய்யாது, வேண்டுமென்றால் பிராமணன் போன்றோருக்கு
உணவளிப்பார். மனிதர்கள் தானம், புண்ணியம் போன்ற என்னவெல்லாம் செய்கின்றார்களோ, அதை தனக்காகவே செய்கிறார்கள். எனவே, இந்த மருத்துவமனை திறப்பது
எவ்வளவு புண்ணியம் ஆகும்! செல்வந்தர்களோ 10, 15 மருத்துவ மனைகள் திறக்க முடியும். இந்த
பணம் போன்ற அனைத்தும் அழிந்து போய்விடும். நீங்கள் வாடகைக்கு வீடை எடுத்து 50
ஆயிரத்தில் 50 மருத்துவமனைகள் திறந்திடுங்கள். பிறகு, அவர்கள் தானாகவே தன்னுடைய காலில்
நின்றுவிடுவார்கள். சேவைக் கான எவ்வளவு எளிய யுக்திகளை தந்தை கூறுகின்றார்! கங்கை
கரைக்குச் சென்று சேவை செய்யுங்கள். தன்னுடைய முதுகில் இந்த பாபாவின் அறிமுகத்தை
மாட்டிக்கொள்ளுங்கள். தானாகவே படித்துக்கொண்டே இருப்பார்கள். தேக அபிமானத்தை
விடவேண்டும். யாராவது செல்வந்தர் இவ்வாறு செய்தால் ஆஹா! இவருக்கு தேக அபிமானம்
முற்றிலுமாக இல்லை என்று அனைவரும் கூறுவார்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க
வேண்டும். தந்தை சொர்க்கத்தின் படைப்பாளர் எனில் பிறகு, நாம் நரகத்தில் ஏன் இருக்க
வேண்டும்! இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார். தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும்
விடுத்து என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். பாரதம் சொர்க்கத்தில்
இருந்து நரகமாக எவ்வாறு ஆயிற்று? இலட்சுமி,
நாராயணர்
84 பிறவிகளை எவ்வாறு எடுத்தனர், நாங்கள் கதை சொல்கின்றோம். அதிகமானோர் ஒன்று கூட வேண்டும். பதீத பாவனி என்று
கங்கையைக் கூட கூறுகின்றனர், யமுனையையும் கூறுகின்றனர். நல்லது கங்கை பதீத பாவனியாக இருக்கிறது என்றால்
ஒன்றை மட்டும் பிடித்துக் கொள்ளுங்களேன் !
இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தை அறிந்துகொள்ள வேண்டும் பிறகு, புரிய வைக்க வேண்டும். ஒருவேளை, பிறருக்கு ஒளியைக் கொடுக்கவில்லை
என்றால் இவர்கள் புத்தியில் ஒளி உள்ளது என்று யார் சொல்வார்கள்? மருத்துவர் ஊசி போடமுடிய வில்லை
எனில் அவரை மருத்துவர் என்று யார் சொல்வார்கள்? குழந்தைகளாகிய உங்களுக்கு முழுமை யான ஒளி
கிடைத்திருக்கிறது. 84 பிறவிகளின் இரகசியம் புத்தியில் உள்ளது. நீங்கள் இந்த
நாடகத்தை மற்றும் நடிகர்களின் பாகத்தை அறிந்திருக்கிறீர்கள். உயர்ந்ததிலும்
உயர்ந்த பாகம் தந்தையினுடையது ஆகும். குழந்தைகளுடன் இணைந்து பாகம் ஏற்று
நடிக்கின்றார். நீங்கள் பாரதத்தை சொர்க்கம் ஆக்குகிறீர்கள். ஆனால், இரகசியமாக, மறைமுக மாக, அஹிம்சையைக் கடைப்பிடிக்கக்
கூடிய சிவசக்தி சேனை ஆவீர்கள். அவர்களுடைய அனைத்து விசயங்களும் உலகாய விசயங்கள்
ஆகும். கும்ப மேளாவிற்கு எத்தனை பேர் செல்கின்றனர்! இங்கே உலகாய விசயம் எதுவும்
கிடையாது. நீங்கள் எழுந்தாலும், அமர்ந்தாலும்,
நடந்தாலும்
யாத்திரையில் இருக்கிறீர்கள். நினைவின் மூலம் நீங்கள் பாவனம் ஆகிறீர்கள். நீங்கள்
கர்மம் செய்யும் சமயத்தில் கூட சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று பாபா
கூறுகின்றார். அவர்கள் அனைத்திலும் பரமாத்மா இருப்பதாகக் கூறிவிட்டனர். வேறுபாடு
உள்ளது அல்லவா ! எங்கே வேண்டுமானாலும் கூட அமர்ந்து கொண்டு என்னை நினைவு
செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பிறகு, சேவையும் செய்ய வேண்டும். கோவில்களுக்கு அதிக
பக்தர்கள் செல் கின்றனர். இந்தச் சித்திரத்தை முதுகில் மாட்டிக்கொள்ளுங்கள், தந்தையின் அறிமுகத்தைக்
கொடுத்துக்கொண்டே இருங்கள். அதிகமான யுக்திகளைக் கூறுகின்றார். மயானத்திற்குச்
சென்று புரியவையுங்கள். நிராகாரமான தந்தையின் மகிமை மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின்
மகிமை. இப்பொழுது சொல்லுங்கள் - கீதையின் பகவான் யார்? தன்னுடன் சித்திரமும் இருக்க
வேண்டும். நீங்கள் அதிகமான சேவை செய்ய முடியும். பெண்கள் செய்தாலும் சரி அல்லது
யாராவது குமாரி செய்தாலும் சரி ஓஹோ! சௌபாக்கியம். கன்னிகை அனைவரையும் விட
உயர்ந்தவர். கன்னியாவின் கன்ணையாவான தந்தை நிராகாரமானவர். கன்ணையா கிருஷ்ணர்
கிடையாது,
தந்தை
தான் கண்ணையா ஆவார். குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிப்பேன்? என்று தந்தைக்கு சிந்தனை வருகின்றது.
கல்பத்திற்கு முன்பு கூட நாடகத்தின் அனுசாரமாக இவ்வாறே புரியவைத்திருந்தேன் பிறகு, இன்று புரியவைக்கின்றேன். எனவே, நீங்களும் கூட பார்வை
இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆக வேண்டும். எந்தக் குழந்தைகளுக்கு அறிமுகம் கிடைக்கிறதோ, அவர்கள் பிறகு பிறரை அழைத்து
வருகின்றனர். அதற்கான புண்ணியமும் கிடைக்கிறது. தன்னிடம் கணக்கு
வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு செய்வீர்களோ, அதற் கேற்ற பலனும் கிடைக்கும் அல்லவா!
யாரையாவது அழைத்து வருகின்றனர் என்றால் அவர் களுக்கும் மிகுந்த நன்மை
ஏற்படுகின்றது. இந்தத் தொழிலில் குழந்தை களுக்கு அதிக கவனம் இருக்க வேண்டும். சேவை
செய்யவில்லை எனில் என்ன கிடைக்கும்? சேவை, சேவை மற்றும் சேவை. நாங்கள் இறைவனுடைய
சேவையில் இருக்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். வீட்டினுடைய சேவையும்
செய்யுங்கள்.
குழந்தைகளை
ஒருபொழுதும் விகாரத்தில் செல்லவிட வேண்டாம் என்று தந்தை அறிவுரை வழங்குகின்றார்.
ஒருவேளை,
அவர்கள்
உங்களுடைய கட்டளையை ஏற்கவில்லை எனில் அவர்கள் கீழ்படியாதவர்கள் ஆகிவிட்டனர்.
ஒருவேளை,
அவர்களுக்கு
செல்வம் கொடுத்தீர்கள்,
அவர்கள்
அதன் மூலம் பாவம் செய்துவிட்டார்கள் என்றால், அதற்கான தண்டனை உங்கள் தலை மீது வந்துவிடும்.
பாபா அறிவுரை வழங்குகின்றார் அல்லவா ! ஆனால், அனேகர் செய்து விட்டு பின்னர் சொல்கின்றனர்.
குழந்தைகளுக்கு சேவைக்காக அனேகவிதமான யுக்திகளைக் கூறுகின்றார். குழந்தைகளாகிய
நீங்கள் இந்தத் தொழிலையே செய்ய வேண்டும். இரயிலில் கூட இந்த சேவையை செய்துகொண்டே
இருந்தீர்கள் என்றால் தந்தை கூட குஷி அடைவார் மற்றும் எதிர்கால 21 பிறவிகளுக்காக
சதா சுகத்திற் கான ஆஸ்தி கிடைத்துவிடும். நல்லது.
இனிமையிலும், இனிமையான வெகு காலத்திற்குப்
பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட, செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவினுடைய அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்காக
முக்கியமான சாரம்:
1. மாயை
மிகப் பெரிய வலையை விரித்திருக்கிறது, இப்பொழுது தந்தையின் நினைவின் மூலம் அந்த
வலையிலிருந்து விடுபட வேண்டும். சுபகாரியத்தில் ஈடுபட வேண்டும். எந்த தேகதாரியின்
வலையிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது. அனைத்திலிருந்தும் பற்றை நீக்கிவிட வேண்டும்.
2.
ஞானத்தின் ஒளி என்ன கிடைத்திருக்கிறதோ அதை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். தேக
அபிமானத்தை விடுத்து விதவிதமான யுக்திகளோடு சேவை செய்ய வேண்டும். பார்வை
இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆக வேண்டும்.
வரதானம்:
அனேக விதமான உணர்வுகளை அழித்துவிட்டு ஆன்மிக உணர்வை தாரணை செய்யக்
கூடிய அனைவருடைய சினேகி ஆகுக.
தேக
உணர்வில் இருப்பதனால் அனேக விதமான உணர்வுகள் உற்பத்தி ஆகின்றன. சில நேரம் சிலர்
நல்லவர்களாகத் தோன்றுவார்கள், சில நேரம் சிலர் கெட்டவர்களாகத் தோன்று
வார்கள். ஆத்மாவாகப் பார்ப்பதனால் ஆன்மிக அன்பு உருவாகும். ஆன்மிக உணர்வு, ஆன்மிகப் பார்வை, ஆன்மிக விருத்தியில்
(உள்ளுணர்வு) இருப்பதனால் ஒவ்வொரு வருடைய சம்பந்தத் தில் வரும்போதிலும் மிகவும்
பற்றற்றவராக மற்றும் அன்பானவராக இருக்க முடியும். எனவே, நான் ஆத்மா என்ற இந்தப்
பயிற்சியை போகும்போதும் வரும்போதும் செய்யுங்கள். இதன் மூலம் அனேக விதமான
உணர்வுகள்,
சுபாவங்கள்
முடிவடைந்துவிடும் மற்றும் அனை வருடைய சினேகியாக தானாகவே ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
யாரிடம் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகள் உள்ளனவோ, அவர்களுக்கு வெற்றி
சகஜமாகக் கிடைக்கிறது.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments