Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 03.09.22

 Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

03-09-2022  காலைமுரளி  ஓம்சாந்தி   பாப்தாதா  மதுபன்

 

Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, உங்களுடைய சரீரத்துக்கு எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. ஆதலால், நீங்கள் செய்ய விரும்பும் எந்தவொரு மங்களகரமான பணியையும் இன்றே செய்யுங்கள். அதனை நாளை வரை விட்டு வைக்க வேண்டாம்.

கேள்வி:

உங்களுடைய அனைத்தையும் வெற்றிகரமானதாக, அதாவது, செழிப்பானதான ஆக்குவதற்கான வழி என்ன?

பதில்:

சிவபாபாவை உங்களுடைய வாரிசு ஆக்குங்கள். அவர் உங்களை 21 பிறவிகளுக்குச் செழிப்பானவர்கள் ஆக்குவார். அவர் ஒருவர் மாத்திரமே அனைவருக்கும் குழந்தையாகி, அனைவருக்கும் அனைத்தையும் வெற்றிகரமானதாக்குபவர் ஆவார். எவ்வாறாயினும், சிலர் அச்சம் அடைகிறார்கள்: தாங்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் கொடுத்து விட நேரிடுமோ என அவர்கள் நினைக்கிறார்கள். பாபா கூறுகிறார்: அச்சம் அடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தொடர்ந்தும் உங்களுடைய குழந்தைகள் போன்றோரைப் பேணிப் பராமரியுங்கள். ஆனால் இந்த ஒரு குழந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள் அவர் உங்களைச் செழிப்பானவர்கள் ஆக்குவார். உங்களை இக்குழந்தைக்கு நீங்கள் அர்ப்பணித்தால், அவர் உங்களுக்கு அதிகளவில் சேவை செய்வார்.

ஓம் சாந்தி. இந்நேரத்தில், நிலையங்களில் அமர்ந்திருக்கின்ற குழந்தைகள் அனைவரும் தாங்கள் சிவபாபாவினுடைய மேன்மையான வாசகங்களைச் செவிமடுத்துக் கொண்டிருப்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்கிறார்கள். இதனைப் போன்று வேறு எந்தவொரு ஸ்தாபனமும் இல்லை. அந்த இடங்களும் பல கிளைகளைக் கொண்டிருக்கின்றன, அத்துடன் அவர்களும் தங்களுடைய தலைமைக் காரியாலயத்தில் அவர்களுடைய குரு வாழுகின்ற இடத்தில் ஒலிப்பதிவு நாடாக்கள் போன்றவற்றைப் பதிவு செய்து, அவரை நினைவு செய்கிறார்கள். உங்களைத் தவிர வேறுஎவருமே அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவு செய்ய மாட்டார்கள். பரலோகத் தந்தை இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகிறார். அவர் இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்குத் தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்க, குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய புத்தியில் நம்பிக்கையை விருத்தி செய்து, இப்போதையைக் கொண்டிருக்கிறீர்கள். இந்நேரத்திலேயே பரமாத்மாவாகிய பரமதந்தை முரளியைப் பேசுகிறார். கிருஷ்ணர் மதுவனத்தில் புல்லாங்குழல் (முரளி) வாசித்ததாகச் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுவனமே பிரதான இடமாகும். இங்கிருந்து முரளிகள் சகல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கிருஷ்ணரே புல்லாங்குழல் இசைக்கிறார் என மக்களின் புத்தியில் உள்ளது. சிவபாபாவே முரளியை பேசுகின்றார் என்பது எவருடைய புத்தியிலும் ஒருபொழுதும் பதியப் போவதில்லை. அதனை எவருமே அறியார். எங்கெல்லாம் உங்களுடைய நிலையங்கள் திறக்கப்படுகின்றனவோ, அங்குள்ள அனைவரும் சிவபாபாவே பிரம்மாவினூடாக முரளியை பேசுகிறார் எனவும், பின்னர் அது ஞான கங்கைகளினால் செவிமடுக்கப்பட்டு, மற்றவர்களுக்குக் கூறப்படுகிறது எனப் புரிந்து கொள்கிறார்கள். “கடவுள் என்று அழைக்கப்படும் சிவபாபா” என அவர்கள் சிவபாபாவைத் தங்களுடைய புத்தியினால் நினைவு செய்கிறார்கள்: சிவபாபாவே முரளியைப் பேசுகிறார் என எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்;படவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை, வருகின்ற முரளியானது சிவபாபாவினுடைய முரளியே என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். சிவபாபாவைத் தவிர வேறு எவராலும் கற்பிக்க முடியாது. தந்தையே கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நான் உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பேன். பாபா தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். வேறு எவருடைய பெயரையோ, ரூபத்தையோ நினைவு செய்ய வேண்டாம். நீங்கள் பிறவிபிறவியாக, சரீரதாரிகளின் புகைப்படங்களைச் சேகரித்து வந்துள்ளீர்கள். நீங்கள் விசேடமான பிரார்த்தனைகள் (உபாசனா) போன்றவற்றையும் கூறி வந்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் போன்றோரின் படங்களை வைத்திருப்பதை நிறுத்தி விட்டீர்கள். பக்தி மார்க்கத்தில் உள்ள ஆத்மாக்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள். அவர்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்பொழுதே, சரீரத்தை நினைவு செய்கிறார்கள். தந்தை மீண்டும் மீண்டும் கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாவே தூய்மையற்றவராகவும், சந்தோஷமற்றவராகவும் ஆகியுள்ளார். ஆத்மா கூறுகிறார்: நான் ஒரு சக்கரவர்த்தியாக இருந்தேன், நான் இப்பொழுது ஓர் ஆண்டி ஆகிவிட்டேன். நீங்கள் பாபாவின் குழந்தைகள் என்பதை இப்பொழுது நினைவு செய்துள்ளீர்கள். நாங்கள் எங்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற்றோம். தந்தை இப்பொழுது கூறுகிறார்: அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். இதைப் போன்ற மங்களகரமான பணி வேறு எதுவுமில்லை. நீங்கள் இந்த மங்களகரமான பணியைச் செய்வதற்குக் தாமதிக்கக் கூடாது. இளையவர்களாக இருக்கட்டும் அல்லது முதியவர்களாக இருக்கட்டும், இந்தச் சரீரத்துக்கு உத்தரவாதம் இல்லை. ஆதலால் நீ;ங்கள் எதைச் செய்ய விரும்பினாலும் அதை இன்றே செய்யுங்கள். “இன்று, நாளை” என நீங்கள் கூறும்பொழுது, மரணம் உங்களை உண்டு விடும். தந்தை அத்தகையதொரு பெரிய வைத்தியசாலை இணைந்த பல்கலைக்கழகத்தைத் திறந்துள்ளார். நீங்கள் அதன் மூலம் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், சந்தோஷத்தையும் பெறுகிறீர்கள். உங்களிடம் ஆரோக்கியமும், செல்வமும் இருந்தால், நீங்கள் எப்படியாயினும் சந்தோஷமாகவே இருப்பீர்கள். ஒரு நபர் நோயற்ற சரீரத்தையும், செல்வத்தையும் கொண்டிருக்கும்பொழுது, சந்தோஷமாக இருக்கிறார். ஆதலால் தந்தை கூறுகிறார்: மங்களகரமான பணியைச் செய்ய விரும்பும் எவரும் அதனை இப்பொழுதே செய்திடுங்கள். மூன்றடி நிலத்தைப் பெற்று, இந்த வைத்தியசாலையைத் திறவுங்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை சுவர்க்கத்தைப் படைப்பவராக இருப்பதனால், நிச்சயமாக நீங்கள் சுவர்க்க ஆஸ்தியை அவரிடமிருந்து பெற வேண்டும். பாரத மக்கள் ஆஸ்தியைப் பெற்றனர். பாரத மக்களால் இவ்விடயங்களை மிக இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அவர்கள் கடவுளைத் தேடுவதற்காக, ஆலயங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தேவர்களில் நம்பிக்கை இல்லை. இதனாலேயே உருவாக்கப்பட்ட இ;ப்படங்கள் அனைத்தும் பயனற்றவை என அவர்கள் நம்புகிறார்கள். தொடர்ந்தும் பல தடைகள் ஏற்படும். இதனை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். தந்தையினுடைய கட்டளைகளாவன: மிக விரைவாக நீங்கள் என்னுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் என்னுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்வதனால் மாத்திரமே உங்களால் ஆஸ்திக்கான உரிமையைக் கோர முடியும். தந்தை ஆன்மீகச் சத்திரசிகிச்சை நிபுணர் ஆவார். நீங்கள் அவருடைய குழந்தைகள் என அழைக்கப்படுகிறீர்கள், எனவே நீங்கள் அனைவரும் கூட சத்திரசிகிச்சை நிபுணர்கள் ஆவீர்கள். நீங்கள் நிச்சயமாக ஆத்மாக்களுக்கு ஞான ஊசியை ஏற்ற வேண்டும். மன்மனபவ! இதுவே அனைத்திலும் மிகப்பெரிய ஊசியாகும். பாபாவை நினைவு செய்வதன் மூலம் துன்பம் அனைத்தும் அகன்று விடுகிறது. நீங்கள் யோகத்தின் மூலம் புண்ணியாத்மாக்களாக ஆகுகிறீர்கள். யோகமே ஒரேயொரு மருந்து ஆகும். ஒரு மகன் பிறந்து அவருடைய தந்தையினுடைய மடிக்குச் செல்லும்பொழுது, அவர் ஆஸ்திக்கு அதிபதி ஆகுகிறார். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து நினைவின் மூலம் கோருகிறீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். நினைவிலேயே பலவகையான தடைகள் ஏற்படுகின்றன. இதனாலேயே நீங்கள் நினைவு செய்வதைத் தொடர்ந்தும் உறுதியாக்க வேண்டும். மூன்று அடி நிலத்துடன் இந்த வைத்தியசாலையைத் திறவுங்கள். இது மூன்றடி நிலம், அல்லவா? இல்லையெனில், இத்தயை முக்கியமான கல்லூரிக்கு மக்கள் வந்து, கற்;று, ஞான ஊசியை ஏற்றுவதற்கு. உங்களுக்கு 50 இலிருந்து 60 ஏக்கர் நிலம் தேவைப்படும். அவர்களிடம் மூன்றடி நிலம் கூட இல்லாதிருந்தும் அவர்கள் உலக அதிபதிகள் ஆகினார்கள் என நினைகூரப்படுகிறது, நீங்கள் உலக அதிபதிகளாக ஆகுகிறீர்கள், அல்லவா? மூன்றடி நிலத்தைக் கொண்டிருத்தல் என்பது பெரிய விடயமல்ல. பின்னர் அது படிப்படியாக தொடர்ந்தும் வளர்கிறது. அத்திவாரம் இடப்பட்ட பின்னர் பல நிலையங்கள் திறக்கப்பட்டன. பலர் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுகிறார்கள். இதைச் செய்பவர்கள் அதிக நன்மைகளை அனுபவம் செய்கிறார்கள்;. ஏனைய பலருக்கும் நன்மை அளிப்பதற்காகவே வைத்தியசாலைகளும் கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன. இங்கும் அவ்வாறே ஆகும். “21 பிறவிகளுக்கு ஆரோக்கியத்திற்கும் செல்வத்திற்குமான சிகிச்சை நிலையம்”; என்ற பெயர்ப்பலகையை வெளியே இடுங்;கள். இந்தி மொழியில், இவ்வாறு கூறப்படுகிறது: 100 வீதம் தூய்மை, அமைதி சந்தோஷத்திற்கான சிகிச்சை நிலையம். எவ்வாறாயினும் சேவை செய்வதில் சில குழந்தைகளுக்கு எந்தவோர் ஆர்வமும் இல்லை. குடும்பத்தினதும் உறவினர்களினதும் வலையானது சிலந்திவலையைப் போன்றது என்று கூறப்படுகிறது. அவர்கள் தாங்களாகவே இந்த வலையில் சிக்கிக் கொள்கிறாhர்கள். தந்தை வந்து உங்களை இராவணனின் சிலந்தி வலையிலிருந்து அகற்றுகிறார்;;. சத்தியயுகத்தைப் பற்றி இவ்வாறு கூறப்படமாட்டாது. இங்;கும் கூட மக்கள் தாமாகவே சொந்த வலையை உருவாக்கி அதனுள் மரணிக்கிறார்கள். இது இராவணனின் இராச்சியமாகும். உலகெங்கும் வியாபித்திருக்கும் இராவணனுடைய வலை மிகப் பெரியது. அனைவரும் துன்பக் குடிலில் அமர்ந்திருக்கிறார்கள். அனைத்து சந்நியாசிகளும், புனிதர்களும் இராவணனுடைய வலைக்குள் அகப்பட்டு இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது அவர்கள் அனைவரையும் மறந்து விடுங்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்று நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அனைவருக்கும் இப்பாதையைக் காட்டுங்கள். உங்களுக்கு உலகச்சக்கரத்தின் இந்த இரகசியத்தைப்பற்றி வேறு எவராலும் கூறமுடியாது. தந்தை கூறுகிறார்: அவை அனைத்தையும் துறந்து என்னை மாத்திரம் சதா நினைவு செய்யுங்கள். நினைவைக் கொண்டிருப்பதனூடாக மாத்திரமே உங்களுடைய அனைத்து பாவங்களும் அழிக்கப்படும். நீங்கள் ஒரு மங்களகரமான பணியைச் செய்வதைத் தாமதிக்கக் கூடாது. ஒரு பணியைத் தாமதிப்பதன் மூலம் அவர் எவ்வாறு அதை நிறைவேற்ற முன்பு மரணிக்கிறார் என்பதற்கு அவர்களும் உதாரணங்களைக் காட்டுகிறார்கள். அந்த ஆத்மாவை அழைத்து, போக் படைக்கும் போது அவர் அதிகளவு அழுகிறார். பின்னர் கூறப்படுகிறது: பாருங்கள், நீங்கள் அனைத்தையும் தாமதித்தீர்கள். “இன்று, நாளை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது மரணம் உங்களை உண்டு விட்டது. உங்களால் ஞானத்தை எடுக்க முடிவதில்லை. அப்பொழுது இத்தகைய முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன. பல குழந்தைகள் நினைக்கிறார்கள்: நல்லது, நான் இதை நாளை செய்வேன்;. எனினும,; அவர்கள் மரணித்து விடுகிறார்கள். இதனாலேயே நீங்கள் பற்றைத் துறக்க வேண்டும் என்று விளங்கப்படுத்தப்படுகிறது. லௌகீக உறவினர்கள் உங்களுக்கு நன்மை செய்யப்போவதில்லை. சிவபாபா இப்பொழுது உங்களுடைய குழந்தையாகிவிட்டார். அவர் கூறுகிறார்: என்னை உங்களுடைய வாரிசாக்குங்கள். நான் உங்களுக்குப் பெருமளவில் சேவை செய்வேன்;. இதனாலேயே பாபா வினவுகிறார்;: உங்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர்? சிவபாபாவாகிய என்னை உங்களுடைய குழந்தை ஆக்கினீர்களேயானால் நீங்கள் 21 பிறவிகளுக்குச் மிகவும் செழிப்பாக வாழ்வீர்கள். ஒரு குமாரி தன்னுடைய வீட்டிற்குச் செல்கிறாள். அவர்கள் ஒரு மகனுக்காக ஆவலுடன் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு மகன் கிடைக்காவிட்டால் அவர் சிலசமயங்களில் இரண்டு, மூன்று தடவைகள் திருமணம் செய்கிறார்;. தந்தை கூறுகிறார்: உங்களுடைய லௌகீகக் குழந்தை ஒரு போதுமே உங்களுக்குச் சேவை செய்ய மாட்டார். அந்த ஒருவரே உங்கள் உண்மையான குழந்தை ஆகின்றார். அவர் அனைவருக்கும் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கிறார். எனினும் சிலர் தம்மிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட நேரிடலாம.; என்ன நிகழுமோ, என்று அச்சம் கொள்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்களுடைய குழந்தைகள் முதலானோரை பேணிப் பராமரிக்க வேண்டும். ஆனால் நீங்கள் இக்குழந்தையை நினைவு செய்ய வேண்டும். இவர் உங்களைச் செழிப்பாக்குவார். மக்கள் காசியில் உள்ள ஆலயத்துக்குச் சென்று தங்களைப் பலியிடுகிறார்கள். அவர்கள் தங்களைச் சிவனுக்குப் பலியிட்டால்; தங்களுக்கு ஜீவன்முக்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். உண்;மையில் அது இங்கேயே பொருத்தமானது. ஒரு காலத்திற்குரியதை வேறு ஒரு காலத்திற்கு உரியதென காட்டியுள்ளார்கள். நீங்கள் உங்களை அந்தக் குழந்தைக்கு அர்ப்பணித்தால் அவர் உங்களுக்குப் பெருமளவில் சேவை செய்வார். அவர் உங்களுக்குச் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கொடுப்பார். அந்த மகன்கள் உங்களுக்கு எதனையும் செய்யமாட்டார்கள்;: அதிகபட்சம் அவர்கள் பிராமண புரோகிதருக்கு உணவு அளிப்பார். மக்கள் என்னென்ன தானம் செய்தாலும் என்னென்ன புண்ணியம் செய்தாலும் அவர்கள் அதைத் தமக்காகவே செய்கின்றனர். ஆகவே இந்த வைத்தியசாலை போன்றவற்றைத் திறந்து வைப்பது பெரும் புண்ணியமே! செல்வந்தர்கள் பத்து, பதினைந்து வைத்தியசாலைகளைத் திறக்கலாம். அவர்களுடைய அனைத்து செல்வங்களும் அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் கட்டடத்தை வாடகைக்குப் பெற்று, 50000 ரூபாவுடனேயே 50 வைத்தியசாலைகளைத் திறக்க முடியும். அப்பொழுது அதை அவர்களால் தாங்களாகவே பராமரிக்கக் கூடியதாக இருக்கும். நீங்கள் இலகுவான சேவை செய்வதற்கான அத்தகைய வழிமுறைகளைத் தந்தை உங்களுக்குக் காட்டுகிறார். கங்கை நதிக் கரைக்குச் சென்று, அங்குள்ள அனைவருக்கும் சேவை செய்யுங்கள். பாபாவின் அறிமுகத்தை (ஒரு காகிதத் தாளில்) உங்களுடைய முதுகில் ஒட்டுங்கள். மக்கள் தாங்களாகவே வாசிப்பார்கள். சரீர உணர்வைத் துறந்துவிடுங்கள். ஒரு செல்வந்தர் இவ்வாறு செய்தால், “அற்புதம்! அவருக்கு சற்றேனும் சரீர உணர்வு எதுவும் இல்லை!” என மக்கள் கூறுவார்கள். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தை சுவர்க்கத்தைப் படைப்பவர். எனவே நாங்கள் ஏன் நரகத்தில் இன்னும் இருக்கிறோம்? தந்தை இப்பொழுது வந்து விட்டார். அவர் கூறுகிறார்: சரீர உறவுகளைத் துறந்து என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். பாரதம் எப்படி சுவர்க்கத்திலிருந்து நரகமாக மாறியது? இலக்ஷ்மி நாராயணனும் எவ்வாறு 84 பிறவிகளை எடுத்தார்கள்? வாருங்கள், நாங்கள் இந்தக் கதையைச் சொல்கிறோம். அப்பொழுது அதிக மக்கள் ஒன்று கூடுவார்கள். மக்கள் கங்கை நதியையும் ஜமுனை நதியையும் தூய்மையாக்குபவராகக் கருதுகிறார்கள். கங்கை தூய்மையாக்குபவராக இருந்தால், எதையாவது ஒன்றை மாத்திரம் தெரிவு செய்யுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது நாடகம் புரிந்துள்ளது. ஆகவே நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் ஏனையோரை ஞானோதயம் செய்யாவிட்டால், உங்களுடைய புத்தி ஞானோதயம் அடைந்துள்ளது என யார்தான் கூறுவார்கள்? ஒரு சத்திரசிகிச்சை நிபுணரால் ஓர் ஊசியை ஏற்ற முடியாவிட்டால், யார் அவரைச் சத்திரசிகிச்சை நிபுணர் என அழைப்பார்கள்? குழந்தைகளாகிய நீங்கள் முற்றாக ஞானோதயம் அடையச் செய்யப்பட்டுள்ளீர்கள். உங்கள் புத்தியில் 84 பிறவிகளின் இரகசியங்கள் உள்ளன. நீங்கள் இந்த நாடகத்தையும், நடிகர்களின் செயற்பாடுகளையும் அறிவீர்கள். தந்தையினுடைய செயற்பாடு அனைத்திலும் அதிமேலானது. அவர் தன்னுடைய பாகத்தைக் குழந்தைகளுடன் நடிக்கிறார். நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுகிறீர்களாயினும், மறைமுகமானவர்களாகவே இருக்கிறீர்கள். இது மறைமுகமான அகிம்சா சிவசக்தி சேனை. அவர்களுடைய அனைத்துமே பௌதீகமானவை. ஏராளமான மக்கள் கும்பமேளாக்களுக்குச் செல்கிறார்கள். இங்கே நீங்கள் பௌதீகமான எதனையும் கொண்டிருப்பதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கும்பொழுதும் நின்று கொண்டிருக்கும்பொழுதும் உலாவித் திரியும் பொழுதும் உங்களுடைய யாத்திரையில் உள்ளீர்கள். நீங்கள் நினைவு செய்வதன் மூலம் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். பாபா கூறுகிறார்: செயல்களைச் செய்யும் வேளையி;ல் தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். கடவுள் அனைவரிலும் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். எனவே வித்தியாசம் உள்ளது. தந்தை கூறுகிறார்: நீங்கள் எங்கு அமர்ந்திருந்தாலும் என்னை நினைவு செய்யுங்கள். அத்துடன் நீங்கள் சேவையையும் செய்ய வேண்டும். ஆலயங்களுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். இந்தப் படத்தை உங்கள் முதுகில் இட்டுத் தொடர்ந்தும் தந்தையினுடைய அறிமுகத்தைக் கொடுங்கள். அவர் உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகிறார். ஒரு சுடுகாட்டுக்குச் சென்று விளங்கப்படுத்துங்கள். அசரீரியான தந்தையினுடைய புகழையும், ஸ்ரீ கிருஷ்ணருடைய புகழையும் விளங்கப்படுத்தி, வினவுங்கள்: கீதையின் கடவுள் யார் என இப்பொழுது எனக்குக் கூறுங்கள். நீங்கள் உங்களுடன் படங்களையும்; வைத்திருக்க வேண்டும். உங்களால் அதிகளவு சேவை செய்ய முடியும். இதை ஒரு பெண் செய்தால் அல்லது ஒரு குமாரி இதைச் செய்தால், அது அவளுடைய பெரும் பாக்கியமாகும். குமாரிகளே அனைவரிலும் சிறந்தவர்கள். அசரீரியானவரே கன்னையா (குமாரிகளின் தந்தை) ஆவார். கிருஷ்ணர் அன்றி, தந்தையே கன்னையாவாக இருந்தார். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வாறு கற்பிப்பது என்பதில் தந்தை அக்கறை கொண்டுள்ளார். நாடகத்துக்கேற்ப, சென்ற கல்பத்திலும் நான் இவ்வாறே விளங்கப்படுத்தினேன். அத்துடன் நான் இன்றும் மீண்டும் ஒருமுறை விளங்கப்படுத்துகிறேன். ஆதலால், நீங்களும் குருடர்களுக்குக் கைத்தடிகள் ஆகவேண்டும். அறிமுகத்தைப் பெறும் குழந்தைகளும் ஏனையோரை அழைத்து வருகிறார்கள். அதுவும் புண்ணியத்தைச் சேகரிப்பதாகும். உங்களுடன் ஒரு கணக்கை வைத்திருங்கள். நீங்கள் என்ன செய்தாலும், அதனுடைய பலாபலனைப் பெறுவீர்கள். நீங்கள் மற்றவர்களை அழைத்து வந்தால், அவர்களாலும் அதிக நன்மையை அனுபவம் செய்ய முடியும். நீங்கள் இவ்வியாபாரத்தில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சேவை செய்யாவிட்டால், எதைப் பெறுவீர்கள்? சேவை, சேவை, சேவை! நீங்கள் இறை சேவையில் செய்பவர்கள் எனவும் கூறுகிறீர்கள். உங்களால் வீ;ட்டிலுள்ள அனைவருக்கும் கூட சேவை செய்ய முடியும். தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார்: ஒருபொழுதும் உங்கள் குழந்தைகளை விகாரத்தில் ஈடுபட அனுமதிக்காதீர்கள். அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படியாது விட்டால், அவர்கள் கீழ்ப்படிவற்றவர்கள். நீங்கள் அவருக்குப் பணத்தைக் கொடுக்க, அவர் அதனைப் பாவம் செய்வதற்குப் பயன்படுத்துவாராயின், அது உங்கள் கணக்கிலேயே சேர்கிறது. பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார். எவ்வாறாயினும், எதையாவது செய்து விட்டுப் பின்னர் அதனைத் தந்தைக்குக் கூறும் பலரும் இருக்கிறார்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்கான பல்வேறு வழிகளைக் காட்டுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த வியாபாரத்தை மாத்திரமே செய்ய வேண்டும். புகையிரதங்களிலும் கூடத் தொடர்ந்தும் இச்சேவையைச் செய்யுங்கள். அப்பொழுது தந்தை பூரிப்படைவதுடன், நீங்களும் உங்கள் ஆஸ்தியான சதா சந்தோஷத்தையும், உங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்குப் பெறுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. மாயை ஒரு மிகப்பெரிய வலையைப் பின்னியுள்ளாள், ஆதலால், தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களை அந்த வலையிருந்து அகற்றிடுங்கள். ஒரு மங்களகரமான பணியைச் செய்வதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். எந்தவொரு சரீரதாரியின் வலையிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள் அனைவரிலிருந்தும் உங்கள் பற்றை அகற்றுங்கள்.
  2. நீங்கள் பெற்ற ஞானோதயத்தை மற்றவர்களுக்குக் கொடுங்கள். சரீர உணர்வைத் துறந்து, பல்வேறு வழிகளில் சேவை செய்யுங்கள். குருடருக்கு ஒரு கைத்தடி ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:

அனைவர் மீதும் அன்புடையவராக இருந்து, அனைவர் மீதும் ஆத்ம உணர்வின் உணர்வுகளைக் கொண்டிருந்து, ஏனைய அனைத்து உணர்வுகளையும் முடிப்பீர்களாக.


நீங்கள் சரீர உணர்வுடன் இருக்கும் போது, பல வகையான உணர்வுகள் எழ முடியும். சிலவேளைகளில், சிலர் நல்லவர்களாகவும் சிலவேளைகளில் ஒருவர் அந்தளவிற்கு நல்லவர் அல்ல என்பதையும் காண்பீர்கள். ஏனையவரை அவர்களின் ஆத்ம உணர்வு வடிவில் காணும் போது, நீங்கள் அவர்களின் மீது ஆன்மிக அன்பைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வின் உணர்வையும், ஆத்ம உணர்வான பார்வையையும், ஆத்ம உணர்வான மனோபாவத்தையும் கொண்டிருக்கும் போது, அனைவருடனும் உறவுமுறை என்ற வடிவத்துக்குள் வரும் போதும், நீங்கள் பற்றற்றவராகவும் அன்பாகவும் இருப்பீர்கள். எனவே, நடக்கும் போதும், நடமாடும் போதும் பயிற்சி செய்யுங்கள்: ‘நான் ஓர் ஆத்மா’ இவ்வாறு செய்யும் போது, ஏனைய பல வகையான உணர்வுகளும் சுபாவங்களும் முடிவடைவதால், நீங்கள் இயல்பாகவே அனைவராலும் நேசிக்கப்படுகிறீர்கள்.

சுலோகம்:

ஆர்வமும் உற்சாகமும் என்ற இறக்கைகளை கொண்டிருப்பவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுகிறார்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

 

Post a Comment

0 Comments