Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
20-09-2022 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
<
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையைப் போல், தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். இந்நேரம் மிகவும் பெறுமதி வாய்ந்தது. எனவே, பயனற்ற விடயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
கேள்வி:
எந்த ஒரு விடயத்தில் தந்தை குழந்தைகள் மீது பெருமளவு கருணை கொள்கிறார்?
பதில்:
சில குழந்தைகள் தங்களுக்கிடையில் வம்பளந்து, தங்களின் நேரத்தைப் பெருமளவு வீணாக்குகிறார்கள். அவர்கள் எங்காவது பக்கக் காட்சியைப் பார்க்கச் செல்லும்பொழுது, தந்தையை நினைவுசெய்வதற்குப் பதில், வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய குழந்தைகள் மீது தந்தை பெருமளவு கருணை கொள்கின்றார்.
பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே, இப்பொழுது உங்கள் வாழ்வுகளைச் சீர்திருத்துங்கள். அநாவசியமாக நேரத்தை வீணாக்காதீர்கள். தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதற்கு, ஒரு நேர்மையான இதயத்துடன் தந்தையை மிகச்சரியாக
நினைவு செய்யுங்கள்.
இக்கட்டான சூழ்நிலைகளில்
மட்டும் தந்தையை நினைவுசெய்யாதீர்கள்.
ஓம் சாந்தி. கடவுள் பேசுகிறார். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் மிகவும் பழைய மாணவர்கள். எவருமே அனைத்து நேரங்களிலும் ஒரே ஆசிரியரிடம் கற்பதில்லை. அவர்கள் 12 மாதங்கள் கற்பார்கள், பின்னர் அவர்களின் ஆசிரியர் மாறி விடுவார். இங்கே, இந்தப் பிரதான ஆசிரியர் மாறுவதில்லை, ஆனால் உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதற்குப் பல புத்திரிகள் உள்ளனர். அனைத்துமே ஒருவரால் பூர்த்தி செய்யப்பட முடியாது. பலரும் தூய்மையாகுவதற்காகக் கூவியழைக்கின்றனர். அவர்கள் அனைவரும் அந்த ஒரேயொருவரையே கூவியழைக்கின்றனர். ஒரேயொரு ஆசிரியரே அனைவரையும் தூய்மையாக்குகிறார். அவர்கள் தூய்மையாக்குபவரைக் கூவியழைப்பது ஓர் அற்புதமாகும், ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. திரௌபதியை அவர்கள் துகிலுரியும் வேளையில், பாதுகாப்பிற்காக அவளும் கூவியழைத்தாள். நீங்கள் அரைக் கல்பமாகக் கூவியழைத்தீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் அனைவரும் கூவியழைத்தீர்கள், அல்லவா? திரௌபதியின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. முழு உலகும் தூய்மையற்றுள்ளது. இரவுக்கும், பகலுக்குமிடையிலான வேறுபாடு தூய்மையற்றவர்களுக்கும், தூய்மையானவர்களுக்கும் இடையில் உள்ளது. தூய்மையற்றவர்கள் கல்லுப் புத்தியைக் கொண்டுள்ளனர். தந்தை வந்து, உங்களை விகாரங்கள் அனைத்திலும் விருப்பமின்மை கொண்டிருக்குமாறு தூண்டுகிறார். இந்நேரத்தில் தான் கொண்டிருக்கின்ற சரீரம் தூய்மையற்றது என்பதை ஆத்மா புரிந்துகொள்கின்றார். இச்சரீரம் தூய்மையற்று, சீரழிந்துள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தூய, முதற்தரமான சரீரங்களைக் கொண்டிருந்தவர்கள் முழு உலக இராச்சியத்தை ஆட்சிசெய்தார்கள். அவர்கள் தெய்வீகப் புத்தியுடையவர்கள் என அழைக்கப்படுகின்றனர். பாரதத்தில் மாத்திரமே கல்லுப் புத்தியுடையவர்களும், தெய்வீகப் புத்தியுடையவர்களும் நினைவுகூரப்படுகின்றனர். எனவே, இத்தூய்மையற்ற பாரதத்தைத் தூய்மையாக்குவது எவ்வாறு என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், வரிசைக்கிரமமாக உள்ள சேவாதாரிக் குழந்தைகள் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு முயற்சி செய்வார்கள். இதுவே தந்தையின் முதலாவது கடமையாகும். தந்தை உங்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆக்குவதற்காக வருகின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் போன்று, அக்கறை கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் உங்களை என்னை விடவும் அதி மேன்மையானவர்கள் ஆக்குகிறேன். நீங்கள் இதைப் பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் என்னை விடவும் அதிகச் சேவை செய்கிறீர்கள். பாபா கண்காட்சிகளில் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் அமர்ந்திருந்து விளங்கப்படுத்துவதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களைப் புகழ்கிறார், எனினும், அந்தளவிற்கு அந்தச் சந்தோஷமும், அந்த யோகமும் உங்களில் தென்படவில்லை. இதனாலேயே எல்லையற்ற தந்தை இவர் மூலமாகக் கற்பிப்பதால், இவரே அனைவரிலும் அதி நெருக்கமானவராக இருக்கின்றார். ஒரு தந்தையும், பாட்டனாரும் மிக நெருக்கமாக, ஒன்றாக இருப்பதை எப்பொழுதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆத்மாவே பிரதானமானவர். ஆத்மா சரீரத்தை விட்டு நீங்கினால், சரீரத்தினால் எவ்விதப் பயனுமில்லை. மனிதர்களின் சரீரங்களுக்கு எவ்விதப் பெறுமதியும் இல்லை. அவற்றினால் எந்தப் பயனுமில்லை; அவை சாம்பலாகி விடுகின்றன. விலங்குகளின் எலும்புகளும், தோலும் கூட பயனுள்ளவை. மனிதர்களுடைய எதுவுமே பயனற்றவை. அவர்கள் எலும்புகளை நீரினுள் வீசி, எவ்வித அடையாளமும் எஞ்சியிராதவாறு அனைத்தையும் முற்றாக அழித்து விடுகின்றனர். குறைந்தபட்சம் விலங்குகளின் சுவடுகளாவது காடுகளில் எஞ்சியுள்ளது. மனிதர்களுக்குச் சத்திய யுகத்திலிருந்து திரேதா யுகத்தின் இறுதிவரை பெறுமதி உள்ளது. அவர்கள் தேவர்களாக இருக்கும்பொழுது, பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். பின்னர், அவர்களுக்கு ஒரு சில சதப் பெறுமதியேனும் இருப்பதில்லை. இதனாலேயே அவர்கள் கல்லுப் புத்தியுடையவர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் மற்றவர்களுக்குத் தலை வணங்குவதுடன், பணம் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படுகின்றனர். அங்கே, அவர்கள் முற்றிலும் கவலையற்றவர்களாக உள்ளனர். தந்தை கூறுகிறார்: உங்களின் இந்தச் சரீரங்கள் மிகவும் பெறுமதியானவை. இந்நேரமும் மிகவும் பெறுமதியானது; அதை வீணாக்காதீர்கள்! பயனற்ற விடயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் நினைவுச் சக்தியால் உங்களைச் சதோபிரதான் ஆக்கவேண்டும். தூய்மையாகுவதற்கு வேறெந்த வழியும் கிடையாது. “கடவுள் பேசுகிறார்” என்பது ஸ்ரீமத் பகவத்கீதை என அழைக்கப்படுகின்ற, சமயநூலில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: ஏழையாக உள்ள குழந்தைகளே வாருங்கள், நான் உங்களைக் கிரீடமணிந்தவர்கள் ஆக்குவேன். பலர் செல்வந்தர்களாகவோ, கோடீஸ்வரர்களாகவோ இருந்தாலும், அவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், நீங்கள் உண்மையில் ஏழைகளே என்பதையும் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமாகச் செல்வந்தர்களாக உள்ளீர்கள். நீங்கள் உண்மையில் நிரந்தரமான செல்வந்தர்கள் எனக் கூறுகின்றீர்கள். இந்தச் செல்வமே உங்களுடன் வரும். அம்மக்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என அழைக்கப்பட்டாலும், உங்கள் முன்னிலையில் அவர்கள் ஏழைகளே. சற்குருவான பாபா உங்களுக்கு ‘அநாதியான கோடீஸ்வரர்கள்’ என்ற பெயரை வழங்கியுள்ளார். நீங்களே சுவர்க்கத்தின் கோடீஸ்வரர்கள், அவர்களோ நரகத்தின் கோடீஸ்வரர்கள். நீங்கள் சுவர்க்கத்தையும், நரகத்தையும் பற்றிப் புரிந்துகொள்கிறீர்கள். கல்லுப் புத்தியுடையவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, அவர்கள் உங்களிடம் வருவார்கள். விநாசம் இடம்பெறுவதை அவர்கள் பார்க்கும்பொழுது, பழைய உலகம் அழிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்வார்கள். இந்தப் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் உண்மையையே கூறினார்கள் என்பதை அப்பொழுது அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஓ.கே, இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களால் எதையும் செய்ய முடியாதிருக்கும். பணம் போன்ற அனைத்தும் எரிந்து அழிந்துவிடும். குண்டுகள் போடப்படும்பொழுது, கட்டடங்கள், சொத்துக்கள் போன்ற யாவும் அழிக்கப்படும்; சரீரங்களும் அழிக்கப்படும். மிகவும் பயங்கரமான காட்சிகள் இடம்பெறுவதை நீங்கள் பார்ப்பீர்கள். அந்நேரத்தில், அவர்களால் ஞானத்தைப் பெறுவதற்கு வர இயலாதிருக்கும். இந்நேரத்தில் இங்கிருந்தவாறு, கடவுள் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் கடவுளிடம் கற்பதற்கு வந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள்! அனைவரிடமும் இந்த நம்பிக்கை இல்லை. அவர்களிடம் நம்பிக்கை இருந்திருந்தால், ஏன் கடவுளிடம் கற்காமல் இருக்கிறார்கள்? அவர்கள் இரவு முழுவதும் மின் விளக்கை எரிய விட்டு, தங்களைப் பற்றி அக்கறைப்படாமல், உணவை உண்ணாமல் இருப்பார்கள், ஆனால் மிகவும் தீவிரமாகக் கற்க ஆரம்பிப்பார்கள். இது அற்புதமானது; இது 21 பிறவிகளுக்கான ஒரு வருமானம்! அவர்கள் மிக நன்றாகக் கற்க ஆரம்பிப்பார்கள். இக்கல்வி என்பது என்ன? தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். பாபா பெருமளவு கருணை கொள்கின்றார். குழந்தைகள் சுற்றுலா செல்லும்பொழுது, ஒரு குழந்தையேனும் தந்தையின் நினைவில் இருப்பதில்லை என்பதை பாபா அறிவார்; அவர்கள் பெருமளவு வம்பளக்;கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். மிகவும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. பாரதம் மிகவும் பெரியது, செய்வதற்கு அதிகச் சேவை உள்ளது. முதலில், உங்கள் வாழ்வுகளைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள். பாபா பல தடவைகள் உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, வம்பளக்;காதீர்கள்! அவ்விடயங்களைத் துறந்து, உங்கள் வாழ்வுகளைச் சீர்திருத்துங்கள்! அனைவரும் தங்களுக்கிடையில் சண்டையிட்டு, மரணிப்பார்கள். நாடகத்தின் நியதி அவ்வாறுள்ளது. தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதற்குக் காலம் எடுக்கின்றது. எவ்வளவு நேரம் நீங்கள் நினைவில் இருக்கின்றீர்கள் என உங்கள் இதயத்தைக் கேளுங்கள். அரிதாகவே எவரேனும் நேர்மையான இதயத்துடனும், பேரன்புடனும் ஐந்து நிமிடங்களுக்கேனும் தந்தையை மிகச்சரியாக நினைவுசெய்கின்றார்கள். நீங்கள் பேரன்புடன் அவரை நினைவுசெய்ய வேண்டும். அன்பு இல்லாவிட்டால் எவராவது இன்னொருவரை நினைவுசெய்வார்களா? தாங்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ளபொழுது மட்டும் பாபாவை நினைவுசெய்கின்ற பலர் உள்ளனர். பாபாவை அன்புடன் நினைவுசெய்வது எவ்வாறு என அவர்களுக்குத் தெரியாது. ஒரு நேர்மையான இதயத்தையிட்டுப் பிரபு பூரிப்படைகின்றார். பாருங்கள்! பாபா ஓர் ஓசையை மாத்திரமே எழுப்புகிறார்: மன்மனாபவ! அதாவது, என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் யாவும் அழிக்கப்படும். நான் உங்கள் நண்பன், ஏனைய அனைவரும் உங்கள் எதிரிகள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவும் உள்ளீர்கள். பலரும் தங்களுக்கிடையில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதால், எவ்வாறு அவர்களால் நண்பர்களாக இருக்க முடியும்? தந்தை கூறுகிறார்: நீங்கள் ஆத்மாக்களைச் சகோதரர்களாகக் கருதுவீர்களாயின், விரோதங்கள் யாவும் முடிவடைந்து விடும். உங்களுக்கு மூக்கோ, செவிகளோ, வாயோ இல்லாவிட்டால், யார் மீது விரோதம் கொண்டிருப்பீர்கள்? சரீரங்களையும் பார்க்காதீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா, மற்றவரும் ஆத்மாவே, எனவே பகைமை யாவும் முடிவடைகின்றது. இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. முயற்சி செய்யாமல் எதையாவது நீங்கள் பெறுவீர்களா? மக்கள் அக்கல்விகளுக்காக அதிகப் பிரயத்தனம் செய்கின்றனர். இது மிக இலகுவானது! தந்தை கூறுகிறார்: சதா என்னை நினைவுசெய்து, சந்தோஷத்தைப் பெறுங்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் துன்பத்தையே பெற்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் கடவுளை நினைவுசெய்தபொழுதிலும், நீங்கள் நினைவுசெய்தவரின் பணியை நீங்கள் அறிந்திருக்கவில்லை. மக்கள் பலரை நினைவுசெய்கின்றனர்: அனுமனை நினைவுசெய்யுங்கள்! கணேசரை நினைவுசெய்யுங்கள்! ஒன்று கடவுளை நினைவுசெய்து சந்தோஷத்தை அனுபவிப்பதும், மற்றையது கடவுளை நினைவுசெய்து துன்பத்தை அனுபவிப்பதும் ஆகும், ஏனெனில் பக்தி இரவாகும். சிவபாபாவிற்கு இரவு இருக்க முடியாது. மக்கள் இரவில் தடுமாறுகின்றனர். இந்தப் பிரம்மாவே முதலில் அதிகமாகத் தடுமாறுகின்றார். பிராமணர்களாகிய நீங்கள் இவரது சகபாடிகள். பிராமணர்களின் முழுக் குலமும் உள்ளது. பிராமணர்கள் ஆகுபவர்கள் அனைவரும் வந்து, கடவுளை நினைவுசெய்வதனால், சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் அனைவருக்கும் கூறுகிறீர்கள்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்கிறீர்கள், மனிதர்களோ பலரை நினைவுசெய்து, பாவாத்மாக்கள் ஆகுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்குகின்றனர். நீங்கள் இப்பொழுது ஒரேயொரு தந்தையை அர்த்தத்துடன் நினைவுசெய்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு உங்களின் ஆஸ்தியைக் கொடுப்பதற்காகவும், உங்களைத் தூய்மையாக்குவதற்காகவும் வந்துள்ளேன். இது அர்த்தம் நிறைந்தது, அல்லவா? சிவபாபாவே தூய்மையாக்குபவர் என்பதையேனும் எவரும் அறியார். எவ்வாறு அவர் அனைவரையும் தூய்மையாக்குகிறார் என எவராவது வந்து எங்களுக்குக் கூறவேண்டும். இங்கே உங்களுடன் அமர்ந்திருப்பவர்கள் கூட இதை முழுமையாக அறியாதுள்ளனர். உங்களை மறக்கச் செய்கின்ற மாயையும் சற்றும் சளைத்தவள் அல்ல. நீங்களே கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களை நினைவுசெய்கிறேன், ஆனால் மாயை என்னை மறக்கச் செய்கிறாள். எவ்வாறாயினும், பாபா கூறுகிறார்: நீங்கள் பாபாவை நினைவுசெய்யாது விட்டால், எவ்வாறு உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள்? தந்தையைத் தவிர, வேறு எவராவது உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பார்களா? நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவுசெய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக இயல்பாகவே உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். அவர் உங்களுக்கு நேரடியாகவே விளங்கப்படுத்துகிறார்: ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது, சூரிய வம்சத்தவர்கள் கூட இங்கேயே உருவாக்கப்படுகின்றனர். ஓசையானது பலரின் செவிகளையும் சென்றடைய வேண்டும். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, ஆலயங்களுக்கும், ஒவ்வொரு தெருவிற்கும் சென்று, சேவை செய்யுங்கள். பாபாவின் பக்தர்களே தேவர்களின் பக்தர்களும் ஆவர். வெறுமனே ஆலயங்களிலும், ஆன்மீக ஒன்றுகூடல்களிலும் அமர்ந்திருக்கும் வேளையில் அவர்களின் புத்தி வியாபாரத்திலும், நண்பர்கள், உறவினர்களிடமும் ஓடிச் செல்வதால், அவர்கள் எதையும் கிரகிப்பதில்லை. இங்கும் அவ்வாறே உள்ளது; எதையும் கிரகிக்காமல், தொடர்ந்தும் தூங்கி விழுபவர்களும் உள்ளனர். அவர்கள் தந்தையைப் பார்ப்பது கூட இல்லை. ஓ, நீங்கள் இங்கே அத்தகைய தந்தையை மிக நன்றாகப் பார்க்க வேண்டும்! ஆசிரியர் உங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றார். தந்தை கூறுகிறார்: நான் இந்தப் பௌதீக அங்கங்கள் மூலமாக உங்களுக்குக் கற்பிக்கின்றேன். ஆத்மாக்களே கற்கின்றனர். தந்தை ஆத்மாக்களுடனேயே பேசுகிறார். கண்கள், செவிகள், அல்லது மூக்கா கற்கின்றது? ஆத்மாக்களே கற்கின்றனர். உலகிலுள்ள எவருக்கும் இது தெரியாது, ஏனெனில் அவர்கள் சரீர உணர்வில் உள்ளனர். ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்கள் அனைத்தும் உள்ளன. தந்தை கூறுகிறார்: ஆத்மாவைப் பாருங்கள். இது அதிக முயற்சி செய்வதற்கான விடயமாகும். முயற்சி செய்யாமல் எவ்வாறு நீங்கள் உலக அதிபதியாக முடியும்? நீங்கள் முயற்சி செய்யும்பொழுது மாத்திரமே, உலகின் அதிபதியாக முடியும். அற்புதத்தைப் பாருங்கள்! இது ஓர் எல்லையற்ற கல்வி, உங்களுக்குக் கற்பிப்பவர் எல்லையற்ற தந்தையாவார். அரசர்களிலிருந்து ஆண்டிகள் வரை அனைவரும் இக்கல்வி மூலமாக இங்கேயே உருவாக்கப்படுகின்றனர். நீங்கள் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்கும் அளவிற்கேற்ப, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக்கவே தந்தை வருகிறார். நீங்கள் தந்தையைப் பார்க்கவும் இல்லையாயின், அதிலிருந்து எதைப் புரிந்துகொள்ளலாம்? நீங்கள் ஒரு சில சதப் பெறுமதியான அந்தஸ்தையே கோரி, பணிப்பெண்களாகவோ, வேலையாட்களாகவோ ஆகுவீர்கள் என்பதையே ஆகும். அரசர்களுக்குப் பணிப்பெண்களும், வேலையாட்களும் இருப்பது போன்றே, பிரஜைகளுக்கும் பணிப்பெண்களும், வேலையாட்களும் இருப்பார்கள். இரு வகையினரும் பணிப்பெண்களும், வேலையாட்களும் என்றே அழைக்கப்படுகின்றனர். அவர்கள் இறுதியில் ஒரு சிறிய உயர்த்தியைப் பெறக்கூடும். அவர்கள் தண்டனையை அனுபவித்து, இறுதியில் சிறிய வெகுமதியைப் பெறுகின்றனர். எனவே, உங்கள் முயற்சிகள் மிக நன்றாக இருக்க வேண்டும். பேரன்புடன் தந்தை கூறுவதைச் செவிமடுங்கள். பின்னர் அதை மீண்டும் உங்களுக்குள் கூறுங்கள். பாடசாலையில் மாணவர்கள் கற்ற பின்னர், வீட்டிற்குச் சென்று, வீட்டுவேலை செய்கின்றனர். நீங்கள் வெறுமனே தொடர்ந்தும் சுற்றித் திரிய வேண்டும் என்றில்லை. நீங்கள் கற்பதற்கான அக்கறையைக் கொண்டிருக்க வேண்டும். இங்கே, எதையுமே புரிந்துகொள்ளாத சிலரும் உள்ளனர். அவர்கள் அதே பழைய கல்லுப்புத்தியைக் கொண்டிருப்பதைப் போலுள்ளது. பாபாவிற்குச் சொந்தமாகிய பின்னரும் எவராவது கடுந் தவறு செய்தால், நூறு மடங்கு தண்டனை சேர்க்கப்படுகிறது. எனவே, தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இலக்கு மிக உயர்வானது. உங்கள் அந்தஸ்து ஒவ்வொரு கல்பத்திலும் அவ்வாறாகும். நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுவதற்கே இங்கே வந்துள்ளீர்கள். பணிப்பெண்களாகவோ, வேலையாட்களாகவோ ஆகுவதற்காக நீங்கள் இங்கு வரவில்லை. இறுதியில், ஒவ்வொருவரும் தாங்கள் என்னவாகப் போகிறார்கள் என்ற மிகச்சரியான காட்சிகளைக் காண்பார்கள். புத்தியும் கூறுகிறது: எவருக்கும் நன்மை பயக்காதவர்கள் என்ன அந்தஸ்தைக் கோருவார்கள்? சிலர் இரவுபகலாகப் பெருமளவு சேவை செய்கின்றனர். கண்காட்சிகளிலும், விழாக்களிலும் பெருமளவு சேவை இடம்பெறுகிறது. பாபா கூறுகிறார்: மக்களின் இதயங்களில், பார்க்க வேண்டும் என்ற ஆசையேற்பட்டு, இங்கே சுவர்க்கம் இருக்கிறது என்று உணரும் வகையில் அத்தகைய நல்ல விடயங்களை அருங்காட்சியகங்களில் உருவாக்குங்கள். நிலையங்களைச் சுவர்க்கம் என்றழைக்க முடியாது. நாளுக்கு நாள், புதிய விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. படங்களும் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் தொடர்ந்தும் ஞானக் கடலைக் கடைகின்றீர்கள். படங்கள் போன்றவை மக்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்துவதற்கே உருவாக்கப்படுகின்றன. பாபா இப்பொழுது மனிதர்களைத் தெய்வீகக் குணங்கள் கொண்டவர்கள் ஆக்குகிறார். எனவே, ஆத்மாக்கள் புதியவர்களாகி, புதிய சரீரங்களையும் பெறுகிறார்கள். புதியது என்றால், புதியது தான்! நீங்கள் புதிய ஆடைகளுக்கு மாறியதும், பழைய ஆடைகளை அணிவீர்களா? கடவுள் வந்து, நிச்சயமாக அற்புதங்களைச் செய்வார், இல்லையா? கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- தந்தை உங்களுக்குக் கூறுபவற்றைப் பேரன்புடனும், ஆத்ம உணர்வு ஸ்திதியுடனும் செவிமடுங்கள். தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருந்து, தொடர்ந்தும் அவரையே பாரு;கள். தூங்கி விழாதீர்கள்! கற்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருங்கள். உங்களின் உணவைத் துறக்க நேர்ந்தாலும், நிச்சயமாகக் கற்றிடுங்கள்.
- ஒரேயொரு தந்தையையே உங்கள் உண்மையான நண்பராக ஆக்குங்கள். உங்கள் மத்தியில் பகைமையை முடித்து விடுவதற்கு, ‘ஆத்மாக்களான நாங்கள் சகோதரர்கள்’ என்பதைப் பயிற்சி செய்யுங்கள். சரீரத்தைப் பார்த்தும் பார்க்காதிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய ஒளி ரூபத்தை அறிந்திருப்பதால்
தீவிர முயற்சி செய்பவராகி, வீணானவற்றின் சுமை எதனிலிருந்தும் இலேசாக இருப்பீர்களாக.
தங்கள் ஆதியான ஒளி ரூபத்தை அறிந்திருப்பவர்களே வீணானதைச் சக்திவாய்ந்ததாக
மாற்றுவதற்கான சக்தியைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இலகுவாக நேரத்தை வீணாக்குவதையும்,
வீணான சகவாசத்தையும்,
வீணான சூழ்நிலையையும்
மாற்றி, இலேசானவர்களாகவும், ஒளியாகவும் இருக்கின்றார்கள்.
அத்துடன், பிராமணக் குடும்பத்துடன் உறவுமுறையில் இருக்கும்பொழுதும், சேவை செய்வதிலும்
அவர்கள் இலேசாக இருக்கின்றார்கள். அவர்கள் பழைய சமஸ்காரங்களுடனோ அல்லது பழைய உலகுடனோ எந்த உறவுமுறையையும்
கொண்டிருப்பதில்லை. அவர்கள் சரீரதாரி எவராலும் அல்லது உடைமைகள் எதனாலும் கவரப்படுவதில்லை.
அத்தகைய தீவிர முயற்சி செய்கின்ற குழந்தைகளே, இலகுவாகத் தங்களுடைய தேவதை ஸ்திதியை அடைகின்றார்கள்.
சுலோகம்:
ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுவதற்கு, கடவுளிடம் உங்கள் சரீரம், மனம், செல்வத்தை அர்ப்பணியுங்கள்.
---ஓம் சாந்தி---
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments