Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
20-09-2022 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
<
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
தந்தைக்கு சமமாக
பதீதமானவர்களை பாவனம்
ஆக்குவதற்கான முயற்சி
செய்யுங்கள். இந்த
நேரம் மிகவும்
மதிப்பு வாய்ந்தது
ஆகும். ஆகையால்,
வீணான விசயங்களில்
தன்னுடைய நேரத்தை
விரயம் ஆக்காதீர்கள்.
கேள்வி:
குழந்தைகளுடைய எந்த ஒரு விசயத்தில் தந்தை மிகுந்த இரக்கம் கொள்கின்றார்?
பதில்:
சில குழந்தைகள் தங்களுக்குள் வேண்டாத, வீணான விசயங்களைப் பேசி தன்னுடைய நேரத்தை அதிகமாக இழக்கின்றனர்.
இங்கே, அங்கே சுற்றிவரச் செல்கின்றனர், அப்பொழுது தந்தையை நினைவு செய்வதற்கு பதிலாக வீணான சிந்தனை செய்கின்றனர். தந்தைக்கு அந்தக் குழந்தைகள் மீது மிகுந்த இரக்கம் ஏற்படுகின்றது. இனிமையான குழந்தை களே! இப்பொழுது தன்னுடைய வாழ்க்கையை சீர்திருத்துங்கள். வீணாக நேரத்தை இழக்கா தீர்கள். தமோபிரதானத்
திலிருந்து சதோபிரதானம்
ஆவதற்காக உண்மையான உள்ளத்துடன் தந்தையை யுக்தியுக்தாக
நினைவு செய்யுங்கள்,
வலுக்கட்டாயமாக நினைவு செய்யாதீர்கள் என்று பாபா கூறுகின்றார்.
பகவானுடைய மகாவாக்கியம்: பகவான் நமக்கு கற்பித்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை குழந்தைகள் கூட புரிந்து கொண்டு இருப்பீர்கள். நாம் மிகவும் பழைய மாணவர்கள் ஆவோம். ஒரே ஒரு ஆசிரியரிடம் மட்டுமே எவரும் படிப்பதில்லை. 12 மாதங்கள் படிப்பார்கள், பிறகு, ஆசிரியரை மாற்றிவிடுவார்கள். இங்கே இந்த முக்கியமான ஆசிரியர் மாறுவதில்லை. மற்றபடி, இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக குழந்தைகள் (சகோதரிகள்) அதிகமானோர் உள்ளனர். ஒருவரால் மட்டும் காரியம் நடைபெற முடியாது. பாவனம் (தூய்மை) ஆவதற்காக எத்தனை பேர் அழைக்கின்றனர்!. ஒருவரை மட்டும் தான் அழைக்கின்றனர். பாவனம் ஆக்கக் கூடியவர் ஒரே ஒரு ஆசிரியரே. பதீத பாவனரை அழைக்கின்றனர், எதையும் புரிந்து கொள்ள வேயில்லை என்பது அதிசயமாக உள்ளது. என்னை இவர்கள் மானபங்கம் செய்கின்றனர், பாதுகாப்பு கொடுங்கள் என்று திரௌபதி கூட அழைத்தார்கள் அல்லவா! அரைக்கல்பமாக நீங்கள் அழைத்து வந்தீர்கள். சொல்லுங்கள், நீங்கள் அனைவருமே அழைத்தீர்கள் அல்லவா! திரௌபதியின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. முழு உலகமுமே பதீதமாக (தூய்மை யற்றதாக) உள்ளது. பதீதநிலை மற்றும் பாவனநிலைக்கு இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. பதீதமானவர்கள் கல் புத்தியுடையவர்கள் ஆவார்கள். தந்தை வந்து விகாரங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துகின்றார். ஆத்மாவாகிய எனது இந்த சரீரம் பதீதமாக உள்ளது என்று ஆத்மா புரிந்திருக்கிறது. இந்த சரீரம் பதீதமாக உள்ளது, துரு ஏறியிருக்கிறது என்பதை நீங்கள் கூட புரிந்திருக்கிறீர்கள். யாருக்கு பாவனமான முதல் தரமான சரீரம் உள்ளதோ, அவர்கள் முழு விஷ்வத்தின் மீதும் இராஜ்யம் செய்தனர். அவர்களை தங்கபுத்தி உடையவர்கள் என்று கூறுவோம். கல்புத்தி, தங்கபுத்தி என்பது கூட பாரதத்தில் தான் பேச்சு வழக்கில் உள்ளது. இந்த பதீதமான பாரதத்தை எவ்வாறு பாவனம் ஆக்குவது என்று குழந்தைகளுக்குச் சிந்தனை வரவேண்டும். ஆனால், வரிசைக்கிரமமாக, சேவாதாரிகளுக்கு இந்த சிந்தனை வந்திருக்கும் மற்றும் பதீதமானவர்களை பாவனமாக்குவதற்கான முயற்சி செய்திருப்பார்கள். தந்தையினுடைய முதல் கடமையே இதுவாகும். தந்தை வருவதே தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆக்குவதற்காகத் தான். எனவே, எந்தளவிற்கு தந்தைக்குச் சிந்தனை இருக்கிறதோ, அந்தளவிற்கு குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். நான் உங்களை என்னை விடவும் உயர்ந்தவர்களாக ஆக்குகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். உங்களுக்கு சிந்தனை கூட அதிகமாக வர வேண்டும். என்னை விட அதிக சேவை குழந்தைகளாகிய நீங்கள் செய் கிறீர்கள் அல்லவா. பாபா, 3-4 மணி நேரம் படவிளக்கக் கண்காட்சி போன்றவற்றில் அமர்ந்து புரியவைப் பதில்லை. தந்தை குழந்தைகளுடைய மகிமை பாடுகிறார். ஆனால், அந்தக் குஷி, அந்த நினைவு குறைவாகத் தென்படுகிறது. ஆகவே, எல்லையற்ற தந்தை, யார் இவர் மூலம் கற்பிக்கின்றாரோ, இவர் அனைவரையும் விட அருகாமையில் உள்ளார். அவ்வளவு நெருக்கத்தில் இருக்கின்றார். தந்தை, தாதாவை எப்பொழுதாவது வெவ்வேறாகப் பார்த்திருக் கிறீர்களா? முக்கிய மானது ஆத்மாதான். ஆத்மா பிரிந்து விட்டால் சரீரம் எதற்கும் பயன்படாது. மனிதருடைய சரீரத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. எதற்கும் பயன்படுவதில்லை, சாம்பலாகி விடுகிறது. விலங்குகள் போன்றவற்றின் எலும்புகள் கூட பயன்படுகின்றன. தோலும் பயன் படுகிறது. மனிதர் களுடையது எதுவும் பயன்படாது. எலும்புகளைத் தண்ணீரில் போட்டு அழித்து விடுகின்றனர். அடையாளம் கூட இருப்பதில்லை. அவற்றினுடைய (விலங்குகள்) அடையாளமோ காடுகளில் இருக்கிறது. மனிதர்களுக்கு, சத்யுகத்திலிருந்து திரேதாயுகத்தின் இறுதி வரை மதிப்பு இருக் கின்றது. தேவதைகளாக இருப்பதால் பூஜைக்கு தகுதியானவர்களாக உள்ளனர். பின்னாளில் ஒரு பைசாவிற்கான மதிப்பு கூட கிடையாது. ஆகையால், கல் புத்தி யுடையவர்கள் என்று கூறப்படுகிறது. சுமையைத் தூக்கிக் கொண்டே இருக்கின்றனர், பைசா முதலியவற்றின் கவலை உள்ளது. அங்கேயோ முற்றிலும் கவலையற்றவர்களாக இருக்கின்றனர். எனவே, உங்களுடைய இந்த சரீரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது என்று தந்தை கூறுகின்றார். இந்த நேரம் கூட மதிப்பு வாய்ந்தது ஆகும். இதை வீணாக இழக்காதீர்கள். வீண் விசயங்களில் நேரத்தை விரயம் செய்யாதீர்கள். தனது ஆத்மாவை நினைவு சக்தி மூலம் சதோபிரதானம் ஆக்கவேண்டும். பாவனம் ஆகுவதற்கு இதைத் தவிர வேறு எந்த உபாயமும் கிடையாது. ஒரே ஒரு சாஸ்திரத் தில் தான் பகவானுடைய மகாவாக்கியம் என்று உள்ளது. அதையே ஸ்ரீமத் பகவத் கீதை என்று கூறுகின்றனர். வாருங்கள் - ஏழைக் குழந்தைகளே! உங்களை தலையின் கிரீடம் ஆக்குவேன் என்று தந்தை கூறுகின்றார். நாம் ஏழைகளாக இருக்கிறோம் என்பதை நீங்கள் கூட புரிந்திருக் கிறீர்கள். மிகுந்த செல்வந்தர்களாக இருக்கின்றனர், கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர், அவர் களுடைய புகைப்படம், பெயர் போன்றவற்றை வெளி யிடுகின்றனர் அல்லவா!. குழந்தைகளாகிய உங்களில் கூட வரிசைக்கிரமமாக செல்வந்தர்கள் உள்ளனர். நாங்கள் நிலையான, உண்மையான செல்வந்தர்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். இந்த செல்வம் தான் உடன் வருகின்றது. உங்களுக்கு முன் அவர்கள் அனைவரும் ஏழ்மை யானவர்களே. கோடீஸ்வரன் என்ற பெயர் இருக்கலாம். சத்குரு பாபா கூட உங்களுடைய பெயரை கோடீஸ்வரன் (பத்மா பதம்பதி) என்று அழிவற்றதாக வைத்திருக்கின்றார். நீங்கள் சொர்க்கத்தின் கோடீஸ்வரர்கள் ஆவீர்கள். அவர்கள் நரகத்தின் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். நரகம் மற்றும் சொர்க்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அந்த கல் புத்தி உடையவர்கள் முற்றிலுமாக புரிந்துகொள்ள வில்லை. பின்னாளில் உங்களிடம் வருவார்கள். வினாசத்தைப் பார்க்கும்பொழுது இந்த பழைய உலகத்தின் வினாசம் ஏற்பட்டுவிடும் என்று புரிந்துகொள்வார்கள். பிறகு, இந்த பிரம்மா குமார், குமாரிகள் உண்மையை உரைத்தார்கள் என்று கூறுவார்கள். நல்லது, இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? எதுவும் செய்ய முடியாது. பைசா முதலிய அனைத்தும் முற்றிலுமாக எரிந்து அழிந்துவிடும். அணுகுண்டுகள் விழுகின்றன என்றால் கட்டிடம், சொத்து போன்ற அனைத்தும் அழிந்துவிடும். சரீரமும் அழிந்து விடுகிறது. மிகவும் அச்சமூட்டும் காட்சி வரப்போகிறது, அதை நீங்கள் பார்ப்பீர்கள். அந்த நேரத்தில் ஞானத்திற்கு வர முடியாது. இப்பொழுது இதை பகவான் அமர்ந்து புரிய வைக்கின்றார்.
பகவானிடம் கற்றுக்கொள்வதற்காக நாம் வந்திருக்கின்றோம் என்பதை குழந்தைகள் அறிந்திருக் கிறீர்கள். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! இது கூட அனைவருக்கும் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை ஏற்பட்டதென்றால், பகவானிடம் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? இரவு, பகலாக விளக்கு ஏற்றிவைத்து உயிரைக் கொடுத்து, உணவு உண்ணாமல் கூட படிப்பில் ஈடுபட வேண்டும். ஆஹா! இது 21 பிறவிகளுக்கான வருமானம் ஆகும். மிகவும் நல்ல முறையில் படிப்பில் ஈடுபட வேண்டும். இந்தப் படிப்பு கூட என்ன? முக்கிய மானதே தந்தையை நினைவு செய்வதாகும். பாபாவிற்கு மிகுந்த இரக்கம் வருகின்றது. குழந்தை கள் இங்கே, அங்கே சுற்றிவர செல்கின்றனர், ஒருவர் கூட தந்தையின் நினைவில் இருப்ப தில்லை. வேண்டாத, வீணான விசயங்களைப் பேசு கின்றனர் என்பதை பாபா அறிந்திருக் கின்றார். குழந்தைகளுக்கு மிகுந்த கவலை இருக்க வேண்டும். மிகவும் குறைவான சமயமே உள்ளது. பாரதம் எவ்வளவு பெரியது!. அதிக சேவை உள்ளது. முதலில் தன்னுடைய வாழ்க்கையை சீர்திருத்த வேண்டும். குழந்தைகளே! வேண்டாத, வீணான விசயங்களைப் பேசாதீர்கள், இந்த விசயங்களை விட்டுவிடுங்கள், தன்னுடைய வாழ்க்கையை மாற்றுங்கள் என்று பாபா அனேக முறை கூறுகின்றார். அனைவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இறந்து போக வேண்டும். நாடகத்தின் விதி அவ்வாறு உள்ளது. தமோபிரதானத் திலிருந்து சதோபிரதானம் ஆவதற்கு சமயம் ஆகிறது அல்லவா. நான் எவ்வளவு சமயம் நினைவு செய்கின்றேன்? என்று தன்னுடைய உள்ளத்திடம் கேட்க வேண்டும். உண்மையான உள்ளத்துடன், மிகுந்த அன்புடன் யுக்தியுக்தாக ஒருவர் 5 நிமிடங்கள் கூட கடினமாகவே நினைவு செய்கின்றனர். நினைவு என்பது மிகுந்த அன்புடன் செய்யப்படுகிறது. அன்பில்லாமல் எப்பொழுதாவது யாரையாவது நினைவு செய்கிறார்களா என்ன? அதிகமானோர் வேறு வழியில்லாத நிலைமையில் நினைவு செய்கின்றனர். அன்புடன் நினைவு செய்யத் தெரியவில்லை. சத்தியமான உள்ளத்தால் இறைவன் மகிழ்ச்சி அடை கின்றார். பாருங்கள் - பாபா ஒரே ஒரு வார்த்தை தான் கூறுகின்றார் - மன்மனாபவ என்றால் நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்களுடைய அனைத்து பாவங்களும் அழிந்துவிடும். நான் தான் உங்களுடைய நண்பன் ஆவேன். மற்ற அனைவரும் எதிரிகள் ஆவார்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் கூட எதிரியாக இருக்கிறீர்கள். அனேகர் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கின்றனர் எனில் அவர்கள் எவ்வாறு நண்பர்கள் ஆவார்கள்? ஒருவேளை ஆத்மா சகோதரன், சகோதரன் என்று புரிந்து கொண்டீர்கள் என்றால் பகைமை அனைத்தும் முடிந்து விடும் என்று தந்தை கூறுகின்றார். மூக்கு இல்லை, காது இல்லை, வாய் இல்லை என்றால் பகைமை யாரிடம் வைப்பார்கள்? சரீரத்தை பார்க்கவே செய்யாதீர்கள். நீங்களும் ஆத்மா, அவர்களும் ஆத்மா எனில் பகைமை நீங்கிவிடுகிறது. அதிக முயற்சி செய்ய வேண்டியதாக இருக்கின்றது. அதிக முயற்சி இல்லாமல் ஏதாவது கிடைக்குமா என்ன? அந்தப் படிப்பில் கூட எவ்வளவு அதிக முயற்சி செய்கின்றனர்! எளிதாகவும் உள்ளது. நினைத்து, நினைத்து சுகத்தை அடையுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பக்திமார்க்கத்தில் நினைத்து, நினைத்து துக்கத்தை தான் அடைந்தோம் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள்.. யாரை நினைவு செய்கின்றார்களோ, அவருடைய தொழிலை அறியவில்லை. எத்தனை பேரை நினைவு செய்கின்றனர்! ஹனுமானை நினையுங்கள், கணேசரை நினையுங்கள் ஒன்று நினைத்து, நினைத்து சுகத்தை அடையுங்கள் என்ப தாகும், மற்றொன்று நினைத்து, நினைத்து துக்கத்தை அடையுங்கள் என்பதாகும். ஏனெனில், பக்தி என்பது இரவு அல்லவா.! சிவபாபாவின் இரவு என்பது இருக்க முடியுமா என்ன? இரவில் இருளில் முட்டி மோதல் ஏற்படுகிறது. முதல் எண்ணில் இவர் (பிரம்மா) இருளில் முட்டி மோதுகின்றார். அவருடன் பிராமணர்களாகிய நீங்களும் உடன் இருக்கிறீர்கள். பிராமணர் களுடைய குலம் முழுவதும் உள்ளது, யாரெல்லாம் பிராமணர்கள் ஆகிறார்களோ, அவர்கள் வந்து நினைவின் மூலம் சுகத்தை அடைகிறார்கள். சிவபாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் பாவம் அழிந்துவிடும் என்று நீங்கள் அனைவருக்கும் கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு தந்தையை நினைவு செய்கிறீர்கள். மனிதர்களோ அனேகரை நினைவு செய்து, செய்து பாவ ஆத்மா ஆகிவிடுகின்றனர். ஏணியில் இறங்கிக் கொண்டே செல்கின்றனர். இப்பொழுது நீங்கள் ஒரு தந்தையை அர்த்தத்துடன் நினைவு செய்யுங்கள்.
நான் வந்திருப்பதே ஆஸ்தி கொடுப்பதற்காக, பாவனம் ஆக்குவதற்காக என்று தந்தை கூறு கின்றார். அர்த்தம் உள்ளது அல்லவா சிவபாபா பதீதபாவனர் ஆவார் என்பது யாருக்கும் தெரியவே தெரியாது. எவ்வாறு வந்து பாவனம் ஆக்குகின்றார் என்பதை யாராவது வந்து கூறினால் நன்றாக இருக்கும். உங்களுடன் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது கூட என்னை முழுமையாக அறியவே இல்லை. மறக்க வைக்கக்கூடிய மாயை ஒன்றும் குறைந்தது அல்ல. பாபா நாங்கள் நினைவு செய்கிறோம், மாயை மறக்க வைக்கிறது என்று நீங்கள் சுயம் கூறுகிறீர்கள். பாபா கூறுகின்றார் - அட, நீங்கள் பாபாவை நினைவு செய்யவில்லை என்றால் ஆஸ்தி எவ்வாறு கிடைக்கும்? தந்தையைத் தவிர யாராவது ஆஸ்தி கொடுப்பார்களா! எந்தளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்களோ, அந்தளவிற்கு ஆஸ்தி தானாகவே கிடைக்கும். நேரடியாகப் புரியவைக்கின்றார் - இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது, இதில் சூரிய வம்சத்தினரும் உருவாகின்றனர். எத்தனை மனிதர்களுடைய காதுகள் வரை சப்தத்தைக் (செய்தியை) கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது! குழந்தைகளே! கோவில்களுக்குச் செல்லுங்கள், வீதி வீதியாகச் சென்று சேவை செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா வினுடைய பக்தர்களே தேவதைகளின் பக்தர்கள். கோவில்கள் மற்றும் சத்சங்கங்களில் அமர்ந்திருக் கின்றனர், புத்தி இங்கே, அங்கே, தொழில், உற்றார், உறவினர்கள் பக்கம் ஓடுகிறது, எதுவும் தாரணை ஆவதில்லை. இங்கேயும் கூட எதையும் கேட்காமல் தூங்கிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கின்றார்கள். தந்தையைப் பார்ப்பதே இல்லை. அட! இத்தகைய தந்தையை எவ்வளவு நல்ல முறையில் பார்க்க வேண்டும்! எதிரில் ஆசிரியர் அமர்ந்திருக்கின்றார். நான் இந்த கர்மேந்திரியங்கள் மூலம் கற்பிக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மா படிக்கிறது. தந்தை ஆத்மாக்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கின்றார். கண், காது, மூக்கு போன்றவை படிக்கின்றனவா என்ன? படிக்கக் கூடியது ஆத்மா. உலகத்தில் இது எவருக்கும் தெரியாது. ஏனெனில், தேக அபிமானம் உள்ளது அல்லவா. ஆத்மாவில் தான் அனைத்து சமஸ்காரங்களும் உள்ளன. ஆத்மாவைப் பாருங்கள் என்று தந்தை கூறுகின்றார். இது எவ்வளவு உழைப்பிற்கான விசயம் ஆகும்? உழைப்பில்லாமல் விஷ்வத்தின் எஜமானர் ஆகமாட்டீர்கள். உழைத்தீர்கள் என்றால் விஷ்வத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள். அற்புதத்தைப் பாருங்கள் - இது எல்லையற்ற படிப்பு ஆகும். கற்பிக்கக்கூடியவர் எல்லையற்ற தந்தை ஆவார். இந்தப் படிப்பின் மூலம் இராஜாவிலிருந்து ஏழை வரை இங்கே தான் உருவாகின்றனர். எந்தளவிற்கு ஒருவர் கற்கின்றார் மற்றும் கற்பிக்கின்றாரோ, அந்தளவிற்கு உயர்ந்த பதவியை அடைகின்றார். தந்தை வருவதே கற்பிப்பதற்காக, பதீதத்திலிருந்து பாவனம் ஆக்குவதற்காக.. தந்தையைப் பார்ப்பதே இல்லை என்றால் என்ன புரிந்து கொள்ள வேண்டும்! கீழான பதவி, வேலைக்காரர் ஆகுவார்கள். இராஜாக்களிடம் பணியாட்கள் இருப்பது போல் பிரஜைகளிடமும் இருப்பார்கள். இருவருக்குமே பணியாட்கள் உள்ளனர் என்று கூறலாம். கடைசியில் கொஞ்சம் லிஃப்ட் (ஏற்றம்) கிடைக்கிறது.. தண்டனை அடைந்து பிறகு சிறிய பதவி கிடைக்கும். எனவே, முயற்சி மிகவும் நன்றாக செய்ய வேண்டும். தந்தை கூறுவதை மிகுந்த அன்போடு கேட்க வேண்டும், பிறகு, திரும்பச் சொல்ல வேண்டும். பள்ளியில் படிக்கின்றனர், பிறகு வீட்டிற்குச் சென்று பள்ளியில் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்கின்றனர். சுற்றித் திரிந்து கொண்டு மட்டும் இருக்கிறார்கள் என்பது கிடையாது. படிப்பின் கவலை உள்ளது. இங்கேயோ சிலர் எதையுமே புரிந்து கொள்வதில்லை. முற்றிலும் பழைய கல் புத்தி உடையவர்களாக இருக் கின்றனர். பாபாவினுடையவர் ஆன பிறகு, ஒருவேளை கடுமையான தவறுகள் செய்கிறார்கள் என்றால் 100 மடங்கு தண்டனை கிடைக்கும். எனவே, இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நேரத்தை வீணாக்காதீர்கள் என்று தந்தை புரியவைக்கின்றார். இலட்சியம் மிக உயர்ந்தது ஆகும். கல்ப கல்பமும் உங்களுடைய பதவி அத்தகையதாக ஆகிவிடும்.
இங்கே நீங்கள் நரனிலிருந்து நாராயணர் ஆவதற்காக வந்திருக்கிறீர்கள். பணியாள் ஆகுவதற்காக வரவில்லை. இறுதியில் அனைவருக்கும் நாம் இது (இந்தப் பதவி) ஆகப்போ கிறோம் என்ற துல்லியமான காட்சி கிடைக்கும். யார் எவருக்கும் நன்மை செய்யவில்லையோ, அவர்கள் என்ன பதவி அடைவார்கள் என்று புத்தி கூட கூறுகின்றது. சிலரோ இரவு, பகலாக மிகுந்த சேவை செய்து கொண்டே இருக்கின்றனர். கண்காட்சி, திருவிழாக்களில் மிகுந்த சேவை உள்ளது. பாபா கூறுகின்றார் - மனிதர்களுக்கு, சென்று பார்க்க வேண்டும் என்று உள்ளத்தில் தோன்றும் அளவிற்கு நல்ல நல்ல பொருட்களை அருங்காட்சியகத்தில் (மியூசியம்) உருவாக்குங்கள். இங்கே சொர்க்கம் இருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள். சேவைக் கேந்திரங்களை சொர்க்கம் என்று கூற முடியாது. நாளுக்கு நாள் புது விசயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. சித்திரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஞானக்கடல் கடையப்படுகிறது அல்லவா! புரியவைப்பதற்காகவே சித்திரங்கள் போன்றவை உள்ளன. பாபா இப்பொழுது மனிதர்களை தெய்வீக குணங்கள் உடையவர்கள் ஆக்குகின்றார். எனவே, ஆத்மாவும் புதியது, சரீரமும் புதியதாகக் கிடைக்கின்றது. புதியது என்றால் புதியது, புதிய உடையை மாற்றி பிறகு, பழையதை அணியமாட்டார்கள். பகவான் வருவார் என்றால் அவசியம் அதிசயம் செய்து காண்பிப்பார் அல்லவா! பகவான் சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் ஆவார். நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்காக முக்கியமான சாரம்:
1.
பாபா என்ன கூறுகின்றாரோ, அதை மிகுந்த அன்புடன் ஆத்ம அபிமானி ஆகிக் கேட்க வேண்டும். எதிரில் அமர்ந்து தந்தையைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கக் கூடாது, படிப்பில் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும். உணவைத் தியாகம் செய்து கூட, படிப்பை அவசியம் படிக்க வேண்டும்.
2.
ஒரு தந்தையை உண்மையான நண்பன் ஆக்க வேண்டும். தங்களுக்குள் பகைமையை முடிப்பதற்காக நான் ஆத்மா சகோதரன், சகோதரன் என்ற இந்த பயிற்சி செய்ய வேண்டும். சரீரத்தை பார்த்தாலும் பார்க்கக் கூடாது.
வரதானம்:
லைட் (லேசான
மற்றும் ஒளியான)
சொரூபத்தின் நினைவு
மூலமாக வீணானவற்றின்
சுமையிலிருந்து லேசாக
இருக்கக் கூடிய
தீவிர முயற்சியாளர்
ஆவீர்களாக.
யார் தங்கள் உண்மையான (லைட்) ஒளி சொரூபத்தின் நினைவில் இருக்கிறார்களோ,
அவர்களிடம் வீணானதை (வ்யர்த்) சக்தியாக (ஸமர்த்) மாற்றுவதற்கான சக்தி இருக்கும். அவர்கள் வீணான நேரம், வீணான சேர்க்கை, வீணான சூழ்நிலை இவற்றை எளிதாக பரிவர்த்தனை செய்து டபிள்லைட் - லேசாகவும் ஒளியாகவும் இருப்பார்கள். கூடவே பிராமண பரிவாரத்தின் சம்பந்தத்தில், சேவையின் சம்பந்தத்தில் கூட லேசாக இருப்பார்கள். அவர்களது உறவு (ரிஷ்தா) எந்தவொரு பழைய சம்ஸ்காரம் அல்லது சம்சாரம் (உலகம்) இவற்றுடன் இருக்காது. எந்தவொரு தேகதாரி மனிதர் அல்லது பொருட்களின் பக்கம் அவர்களுக்கு கவர்ச்சி ஏற்பட முடியாது. அப்பேர்ப்பட்ட தீவிர முயற்சியாளர்களான குழந்தைகள் சுலபமாகவே ஃபரிஷ்தா தன்மையின் நிலையை அடைந்து விடக்கூடியவர்களாக இருப்பார்கள்.
சுலோகன்:
கவலையில்லாத சக்கரவர்த்தி
ஆக வேண்டும் என்றால் உடல், மனம் மற்றும் பொருளை பிரபுவிற்கு
சமர்ப்பணம் செய்து விடுங்கள்.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments