Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 21.07.22

 Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

21-07-2022  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன் 

Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, எப்போதும் சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். அதனால் சுவர்க்க இராச்சியத்தின் போதை ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது.

கேள்வி:

தந்தை எந்த அற்புதமான மரக்கன்றினை நாட்டுகிறார்?

பதில்:

தந்தை மாத்திரமே தூய்மையற்ற மனிதர்களைத் தூய்மையான தேவர்களாக மாற்றுகின்ற அற்புதமான மரக்கன்றை நாட்டுகிறார். மறைந்துபோன ஒரு தர்மம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகிறது என்பது ஓர் அற்புதமே ஆகும்.

கேள்வி:

தந்தையின் தெய்வீகச் செயற்பாடுகள் என்ன?

பதில்:

குழந்தைகளைச் சிப்பியிலிருந்து வைரங்களாகத் திறமையுடன் மாற்றுவதே தந்தையின் தெய்வீகச் செயற்பாடுகள் ஆகும். கிருஷ்ணருடைய தெய்வீகச் செயற்பாடுகள் எதுவும் இல்லை. அவர் ஒரு சிறுகுழந்தையாவார்.

பாடல்:  ஓ இரவுப் பயணியே, களைப்படையாதே! விடிவிற்கான இலக்கு வெகுதொலைவில் இல்லை.

ஓம் சாந்தி. இந்தப் பாடல் இங்கு இயற்றப்படவில்லை என்பது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்தப் பாடலை நீங்கள் செவிமடுக்கும் போது, பாபா உண்மையில் எங்களுடைய கரங்களைப் பற்றியவாறு தன்னுடன் எங்களை அழைத்துச் செல்கிறார் என்பது உங்களுக்கு விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, சிறுகுழந்தைகள் யாராவது ஒருவரின் கரங்களைப் பற்றிக் கொள்ளாது விட்டால் தாங்கள் விழுந்து விடுவார்கள் என நினைக்கிறார்கள். இப்பொழுது காரிருள்; இருப்;பது உங்களுக்குத் தெரியும்;. நீங்கள் தொடர்ந்து எங்கும் தடுமாறி திரிகிறீர்கள். சத்திய உலகமான சுவர்க்கத்தை பாபாவே ஸ்தாபிக்கிறார் என்று உங்கள் புத்தியும் கூறுகிறது. அதிமேலானவர் உண்மையான பாபாவே ஆவார், ஏனையோர் தங்கள் புத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அவர் உதவுவதால், நீங்கள் அவரைப் புகழ வேண்டும். தந்தை ஒருவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர்;, அதாவது அவரே தந்தையாகிய சுவர்க்கக் கடவுள். குழந்தைகளாகிய உங்களுக்கு அவரே கற்பிக்கிறார். தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என்றால் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் என்பதே அதன் அர்த்தம் ஆகும். அவர் உண்மையிலேயே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். சுவர்க்க அதிபதி கிருஷ்ணரே ஆவார். அந்த ஒருவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். இவர் சுவர்க்கத்தின் இளவரசர். பாபா ஒருவரே படைப்பவர் ஆவார். நீங்கள் சுவர்க்க இளவரசர்கள் ஆகப் போகிறீர்கள். அவர்களில் ஒருவர் மாத்திரம் இருக்க முடியாது. எட்டுப் பேரைக் கொண்ட வம்சம் ஒன்று உள்ளது. நீங்கள்; பாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்ற நம்பிக்கையும் உங்களுக்கு உள்ளது. பாபாவே சுவர்க்கத்தைப் படைப்பவர். நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் பாபாவிடமிருந்து எங்களுடைய ஆஸ்தியைக் கோருகிறோம். நாங்கள் முழு 84 பிறவிகளையும் எடுக்கிறோம். அரைக்கல்பத்திற்கு சந்தோஷமும் அரைக்கல்பத்திற்கு துன்பமும்; உள்ளது. அரைக்கல்பத்திற்கு இராமர் ஆட்சியும் அரைக்கல்பத்திற்கு இராவணன் ஆட்சியும் உள்ளது. நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்ரீமத்தைப் பின்பற்றிச் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறோம். இது மறக்கக் கூடிய ஒன்றல்ல. உள்ளார்த்தமாக பெரும் சந்தோஷம் இருக்க வேண்டும். ஆத்மா தனக்குள்ளே சந்தோஷத்தை உணர்கிறார். ஓர் ஆத்மாவின் சந்தோஷம் அல்லது துன்பமானது அவருடைய முகத்தில் தென்படுகிறது. தேவர்களின் முகங்கள் மிகுந்த மலர்ச்சியுடையவையாக உள்ளன. அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும். இதனை விளங்கப்படுத்துவதற்கு பாபா ஒர் அறிவிப்புப் பலகையைச் செய்வித்துள்ளார். தந்தையாகிய சுவர்க்கக் கடவுளின் புகழானது சுவர்க்க இளவரசரின் புகழிலிருந்து வேறுபட்டது. அந்த ஒருவரே படைப்பவர். இவரோ படைப்பு ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே பாபா விவேகத்துடன் எழுதுகிறார்;. அதன் மூலம் மக்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படும்; அந்த ஒருவரே தூய்மையாக்குபவரும் ஆவார். அவர் எல்லையற்ற படைப்பாளி. அவர் நிச்சயமாகச் சுவர்க்கத்தை உருவாக்குவார். மக்கள் சத்திய, திரேதா யுகங்களைச் சுவர்க்கம் என அழைக்கிறார்கள். சுவர்க்கமும் நரகமும் அரை அரைக் கல்பத்திற்கு நீடிக்கின்றன. உலகம் உண்மையிலேயே அரைவாசி அரைவாசி ஆகும், அதாவது புதியதும் பழையதும் ஆகும். பௌதீக விருட்சத்தின் கால எல்லை நிர்ணையிக்கப்படவில்லை. ஆனால் இந்த விருட்சத்தின் காலம் திட்டவட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மனித விருட்சத்தின் காலம்; முற்றிலும் மிகச்சரியானது. வேறு எதற்கும் இவ்வாறு இல்லை. ஒரு நொடிப்பொழுது வித்தியாசமேனும் இருக்க முடியாது. இது பல்ரூப விருட்சம் ஆகும். இது துல்லியமான, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு நாடகம். இந்நாடகம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜெகநாத்புரியில் நான்கு பாகங்களாகப் பிரிக்கின்ற ஒரு பானையில்; சோறு சமைப்பார்கள். இந்த உலகமும் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில்; ஒரு நொடி வித்தியாசமேனும் குறைவாகவோ அதிகமாகவோ இருக்க முடியாது. 5000 வருடங்களுக்கு முன்னரும் தந்தை இதை விளங்கப்படுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுதும் அதேவிதமாகவே அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் 5000 வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் ஒருமுறை உங்களைச் சுவர்க்க இராச்சியத்திற்குத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகிறார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. பாபா உங்களைத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகிறார், ஆனால், இராவணன் உங்களைத் தகுதியற்றவர் ஆக்குகிறான். இதனாலேயே பாரதம் சிப்பியைப் போல் ஆகிவிட்டது. பாரதம்; வைரம் போல் ஆகுமளவிற்கு பாபா எங்களைத் தகுதிவாய்ந்தவர்கள்; ஆக்குகிறார். ஆனாலும் அந்தஸ்து வரிசைக்கிரமமானதே ஆகும். ஒவ்வொருவருக்கும் அவரவருடைய கர்மபந்தனமத்தின் கர்ம கணக்குகள் உள்ளன. சிலர் வினவுகிறார்கள்: பாபா, நான் வாரிசாகவா அல்லது பிரஜையாகவா ஆகுவேன்? பாபா கூறுகிறார்: உங்களுடைய கர்ம பந்தனங்களைப் பாருங்கள்! செயல், பாவச்செயல், நடுநிலைச்செயல் எனும் கர்மதத்துவத்தைப் பற்றித் தந்தை ஒருவரே விளங்கப்படுத்துகிறார். பாபா எப்போதும் கூறுகிறார்: நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கேளுங்கள். உங்களுக்கு எந்த வகையான கர்மகணக்குகள் உள்ளனவென்றும், உங்களால் என்ன அந்தஸ்தைக் கோரமுடியும் என்றும் பாபா உங்களுக்கு கூறுவார். முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தை ஒருவரே இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். ஏனையோர் தத்தமது சமயங்களை ஸ்தாபிக்கிறார்கள். சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. அது அவர்களுடைய வெகுமதியாகும். அதுவும் வரிசைக்கிரமமானதே. அவர்கள் தங்களுடைய வெகுமதியை எவ்வாறு உருவாக்கினார்கள்? நீங்கள் அதை இப்போது பார்க்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு சக்கரத்தின் சங்கமத்திலும் வருகிறேன். இத்தகைய சக்கரத்தில் பல சங்கமங்கள் இருந்துள்ளன. தொடர்ந்தும் இன்னும் அதிகமாக (சங்கமங்கள்) வரும். அவற்றிக்கு முடிவேயில்லை. தூய்மையற்ற இராச்சியம் அழிக்கப்பட்டுத் தூய்மையான இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ள சங்கமயுகத்திலேயே, தூய்மையாக்குபவரான தந்தை வருவார் எனப் புத்தியும் கூறுகிறது. இந்தச் சங்கமயுகத்தின் புகழ் மாத்திரமே உள்ளது. தங்க, வெள்ளி யுகங்களின் சங்கமத்தில் எதுவும் நிகழ்வதில்லை. அது இராச்சிய மாற்றமே ஆகும். இலக்ஷ்மியினதும் நாராயணனினதும் இராச்சியமானது மாற்றமடைந்து, இராமரினதும் சீதையினதும் இராச்சியம் ஆகுகின்றது. எவ்வாறாயினும் இங்கே பெருமளவு குழப்பம் நிலவுகிறது. தந்தை கூறுகிறார்: இத்தூய்மையற்ற உலகம் முழுவதுமே அழிக்கப்படவுள்ளது. அனைவரும் வீடு திரும்ப வேண்டும். பாபா கூறுகிறார்: நான் அனைவருக்கும் வழிகாட்டி ஆகுகின்றேன். நான் அனைவரையும் துன்பத்திலிருந்து விடுதலை செய்து, சந்தோஷ அல்லது அமைதி தாமத்துக்கு எக் காலத்திற்குமாக அழைத்துச் செல்கிறேன். நீங்கள் சந்தோஷ தாமத்திற்கும் ஏனைய அனைவரும் சாந்திதாமத்திற்கும் செல்வார்கள் என அறிவீர்கள். மன அமைதி எவ்வாறு இருக்கமுடியும்?” என மக்கள் இக்காலத்தில்; வினவுகிறார்கள். நாங்கள் எவ்வாறு சந்தோஷமாக இருப்பது?” என அவர்கள் ஒருபொழுதும் கூறுவதில்லை. அவர்கள் அமைதியை மாத்திரமே வேண்டுகிறார்கள். அனைவரும் அமைதியினுள் சென்று, பின்னர் தங்களுடைய சொந்தச் சமயத்தினுள் வருவார்கள். சமயங்கள் விரிவடைய வேண்டும். அரைக்கல்பத்திற்குச் சூரிய, சந்திர இராச்சியங்கள் உள்ளன. பின்னர் ஏனைய சமயங்கள் வருகின்றன. ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்;ந்த எவருமே இப்பொழுது இல்லை. அந்தத் தர்மம் மறைந்துவிடுகிறது. பின்னர் அதன் ஸ்தாபனை இடம்பெறுகிறது. மரக்கன்று நடப்படுகிறது. தந்தையே இந்தக் கன்றை நடுகிறார். அம்மக்கள் மரக்கன்றுகளை நடுகிறார்கள். இந்தக் கன்று மிகவும் அற்புதமானதாகும். அவர் தான் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர் என அவர் (சிவபாபா) கூறுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நிலைமை இப்பொழுது உள்ளது போல் ஆகும்பொழுதே நான் வருகிறேன். நான் அனைத்துச் சமயநூல்களின் இரகசியங்களையும் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது விளங்கப்படுத்துகிறேன். இப்பொழுது யார் சரி என உங்களால் தீர்மானிக்க முடியும். இராவணனே பிழையான வழிகாட்டல்களைக் கொடுப்பவன். இதனாலேயே அவன் அதர்;மவான் என அழைக்கப்படுகிறான். தந்தையோ தர்மவான். உண்மையான பாபா உங்களுக்கு உண்மையையே கூறுவார். அவர் உங்களுக்குச் சத்திய உலகிற்கான உண்மையான ஞானத்தைக் கொடுக்கிறார். வேதங்கள், சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. ஏராளமான மக்கள் அவற்றைக் கற்கிறார்கள். நூறாயிரக்கணக்கான கீதை பாடசாலைகளும் வேத பாடசாலைகளும் இருக்க வேண்டும். மக்கள் அவற்றைப் பிறவிபிறவியாகக் கற்று வருகிறார்கள். இறுதியில் ஏதாவது இலட்சியமும் இலக்கும் இருக்க வேண்டும். ஒரு பாடசாலைக்கு இலட்சியமும் இலக்கும் தேவை. நீங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்காகக் கற்கிறீர்கள். நீங்கள் இலட்சியமும் இலக்கும் உடையவர்கள். அவர்கள் எதனைக் கற்றாலும், எந்தச் சமயநூல்களைக் கூறினாலும் அதிலிருந்தே அவர்களுக்கான ஜீவனோபாயம் பெறப்படுகின்றது. எவ்வாறாயினும், அவர்கள் முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ அல்லது அவர்கள் கடவுளையோ அடைகின்றார்கள் என்பதல்ல. இல்லை. கடவுளைச் சந்திப்பதற்காகவே மக்கள் பக்தி செய்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்களுக்குக் காட்சிகள் கிடைக்கும்பொழுது, தாங்கள் கடவுளை அடைந்து விட்டதாக நம்பி, அவர்கள் அதனால் சந்தோஷமடைகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் கடவுளை அறியவில்லை. கணேஷ், அனுமன் போன்றவர்களில் கடவுள் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய புத்தியில் சர்வவியாபி என்னும் எண்ணக் கருத்தைக் கொண்டுள்ளார்கள். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: மக்கள் என்ன பக்தி செய்து, யாரை வழிபட்டாலும் நான் அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு காட்சியை அருள்கிறேன். தாங்கள் கடவுளைக் கண்டு விட்டதாக அவர்கள் எண்ணி, அதனால் சந்தோஷம் அடைகிறார்கள். பக்தர்களின் மாலையானது ஞான மாலையிலிருந்து வேறுபட்டது. இது உருத்திர மாலை என அழைக்கப்படுகிறது, அதுவோ பக்தர்களின் மாலையாகும். அதிக ஞானத்தைப் பெற்றவர்களின் மாலை உள்ளது. ஆனால் அதுவோ அதிக பக்தி செய்தவர்களின் மாலையாகும். அவர்கள் அந்தப் பக்தி சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்கிறார்கள். அதனால், அவர்கள் பக்தியின் களத்துக்குச் செல்கிறார்கள். அச்சம்ஸ்காரங்கள் ஒருபிறவிக்கே அவர்களுடன் இருக்கின்றன. அவர்கள் அதே சம்ஸ்காரங்களை அடுத்த பிறவியிலும் கொண்டிருப்பார்கள் என்றல்ல, இல்லை. உங்களுடைய இந்தச் சம்ஸ்காரங்கள் அழிவற்றவை ஆகுகின்றன. இந்நேரத்தில் நீங்கள் என்ன சம்ஸ்காரங்களை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்களோ, அதற்கேற்பவே அரசர்கள் அல்லது அரசிகள் ஆகுவீர்கள். பின்னர் படிப்படியாகக் கலைகள் குறைவடைகின்றன. நீங்கள் இப்பொழுது மத்தியில் உள்ளீர்கள். உங்கள் புத்தியானது அங்கே சிக்கிக் கொண்டுள்ளது. நாங்கள் இங்கே அமர்ந்திருந்தாலும் எங்கள் புத்தியின் யோகமானது அங்கே இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது திரும்பிச் செல்கிறீர்கள் என்ற ஞானத்தை ஆத்மாக்களாகிய நீங்கள் கொண்டுள்ளீர்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அப்பால் செல்கிறோம். நாங்கள் எங்களுடைய சரீரங்களை இங்கே நீக்கிச் செல்வோம். இங்கே பழைய சரீரமும் மறுபுறத்தில் ஓர் அழகிய சரீரமும் உள்ளது. ஆத்மா அமரத்துவமானவர். ஆத்மா தங்க, வெள்ளி ஸ்திதிகளுக்கூடாகச் செல்ல வேண்டும். ஸ்திதிகள் இருக்கின்றன. பாபாவே அதிமேலானவர். அவர் ஸ்திதிகளுக்கூடாகச் செல்வதில்லை. ஆத்மாக்களே ஸ்திதிகளுக்கூடாகச் செல்கிறார்கள். சத்தியயுகத்தவர்கள் பின்னர் திரேதா யுகத்துக்குச் செல்ல வேண்டும். நீங்கள் இப்பொழுது கலியுகத்திலிருந்து சத்தியயுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். அவர் தொடர்ந்தும் தன்னை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என அவர் அழைக்கப்படுகிறார். அவருடைய பிறப்பு தனித்துவமானதும், தெய்வீகமானதுமாகும். அவர் எவ்வாறு இவரினுள் பிரவேசிக்கிறார் என அவரே விளங்கப்படுத்துகிறார். இதனைப் பிறவி எடுப்பதாகக் கூற முடியாது. காலம் வரும்பொழுது, படைப்பைப் படைக்கச் செல்ல வேண்டும் என்னும் எண்ணம் கடவுளுக்கு ஏற்படுகிறது. நாடகத்தில் அவர் இந்தப் பாகத்தைக் கொண்டுள்ளார். பரமாத்மாவாகிய பரமதந்தையும் நாடகத்தில் தங்கியுள்ளார். பக்தியின் பலனைக் கொடுப்பதே என்னுடைய பாகமாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை சந்தோஷத்தை கொடுப்பவர் என அழைக்கப்படுகிறார். எவரேனும் ஒருவர் ஒரு நற்பணியைச் செய்யும் பொழுது, அதற்கான பிரதிபலனை ஒரு தற்காலிக காலத்துக்குப் பெறுகிறார். நீங்களே அனைத்திலும் மிகச்சிறந்த பணியை மேற்கொள்கிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் தந்தையை அறிமுகப்படுத்துகிறீர்கள். பாருங்கள், ராக்கி பண்டிகை இப்பொழுது வருகிறது. எனவே அது விளங்கப்படுத்தப்பட வேண்டும். ராக்கியானது தூய்மையற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதற்கான ஒரு சத்தியத்தைச் செய்வதற்காகவே உள்ளது. இரக்ஷ பந்தனானது தூய்மையற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதற்கானதாகும். நீங்கள் முதலில் தூய்மையாக்குபவராகிய தந்தையை அறிமுகம் செய்ய வேண்டும். அவர் வரும்வரையில் மக்களால் தூய்மையாக முடியாது. தந்தை மாத்திரமே வந்து தூய்மைக்கான சத்தியத்தைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகிறார். இது ஏதோவொரு தருணத்தில் நிச்சயமாக நிகழ்ந்திருக்க வேண்டும். இதனாலேயே இந்த நடைமுறை தொடர்ந்துள்ளது. இப்பொழுது எவ்வாறு பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் ஒரு ராக்கியைக் கட்டி, நடைமுறையில் தூய்மையாக இருக்கிறார்கள் எனப் பாருங்கள். நூல், காப்பு முதலிய அனைத்தும் தூய்மையின் அடையாளங்கள் ஆகும். தூய்மையாக்குபவராகிய தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரியாகும். நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள் என இப்பொழுது சத்தியம் செய்யுங்கள். நீங்கள் காப்புக்கள் முதலியவற்றை அணிய வேண்டும் என்பதல்ல. தந்தை கூறுகிறார்: சத்தியம் செய்து, ஐந்து விகாரங்களையும் எனக்குத் தானம் செய்யுங்கள். இந்த ரக்ஷா பந்தன் 5000 வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்றது. தூய்மையாக்குபவராகிய தந்தை வந்து ராக்கியைக் கட்டி, தூய்மையாகுமாறு உங்களிடம் கூறினார். ஏனெனில், தூய்மையான உலகம் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இது இப்பொழுது நரகமாகும். நான் மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். இப்பொழுது ஸ்ரீமத்துக்கேற்ப, எனக்கு ஒரு சத்தியம் செய்து, தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகவேண்டாம். நான் ஒருபொழுதும் தூய்மையற்றவர் ஆகமாட்டேன்என உங்களைக் கொண்டு ஒரு சத்தியம் செய்விப்பதற்காகப் பிராமணர்களாகிய நாங்கள் வந்துள்ளோம் எனவும் உங்களால் கூற முடியும். எவ்வாறாயினும், இதனை எழுதிய பலர் இப்பொழுது விட்டுச் சென்று விட்டார்கள். தூய்மையாக்குபவராகிய தந்தை சங்கமயுகத்திலேயே வருகிறார். அவர் வந்து பிரம்மாவினூடாக, குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார்: தூய்மை ஆகுங்கள்! இங்குள்ள அனைவரும் ஒரு சத்தியத்தைச் செய்துள்ளார்கள். நீங்களே இதனைத் தீர்மானிக்கும்பொழுது மாத்திரமே உங்களால் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற முடியும். தூய பிராமணர்கள் ஆகுங்கள், பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். பிராமணர்களாகிய நாங்கள் ஒரு சத்தியத்தைச் செய்துள்ளோம். எப்பொழுது ரக்ஷா பந்தன் என்னும் சம்பிரதாயம் ஆரம்பித்தது என்னும் ஒரு தொகுப்பை நீங்கள்; காட்ட வேண்டும். நாங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் தூய்மைக்காக ஓரு சத்தியத்தைச் செய்து, பின்னர் 21 பிறவிகளுக்குத் தூய்மையாக இருப்போம். தந்தை இப்பொழுது கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் அத்தகைய கருத்துக்களை வேறுபிரித்து, முன்னதாக ஒரு சொற்பொழிவைத் தயார் செய்ய வேண்டும். எப்பொழுது இச்சம்பிரதாயம் ஆரம்பித்தது? அது 5000 வருடங்களுக்குரிய ஒரு விடயமாகும். கிருஷ்ணரின் பிறந்த நாளும் 5000 வருடங்களுக்குரிய ஒரு விடயமாகும். கிருஷ்ணரின் தெய்வீகச் செயல்கள் எதுவும் கிடையாது அவர் ஒரு சிறு குழந்தை ஆவார். தெய்வீகச் செயற்பாடுகளானது குழந்தைகளாகிய உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாகத் திறமையுடன் மாற்றுகின்ற, ஒரேயொரு தந்தையினுடையதே ஆகும். மகத்துவமானது அந்த ஒரேயொருவருக்கானதே, வேறு எவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதும் பயனற்றதாகும். ஒரேயொரு பரமாத்மாவாகிய பரமதந்தையின் பிறந்தநாளே கொண்டாடப்பட வேண்டும். அவ்வளவுதான். மக்கள் எதனையுமே அறியார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1.     வாரிசுகள் ஆகுவதற்கு உங்கள் கர்மக்கணக்குகள், கர்ம பந்தனங்கள் அனைத்தையும் தீருங்கள். நீங்கள் தந்தையிடமிருந்து பெறுகின்ற ஆலோசனையை மாத்திரம் பின்பற்றுங்கள்.

2.     அனைவருக்கும் தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுத்து, தொடர்ந்தும் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற மேன்மையான பணியைச் செய்யுங்கள். தூய்மைக்கான ஒரு ராக்கியைக் கட்டி, தூய உலகின் அதிபதிகள் ஆகுதல் என்னும் ஆஸ்தியைப் பெறுங்கள்.

ஆசீர்வாதம்:

பாஸ்” (நெருக்கமாக இருப்பது) என்ற வார்த்தையின் விழிப்புணர்வினைக் கொண்டு எந்த ஒரு பரீட்சையிலும் முழுமையாக சித்தி (பாஸ்) அடைந்து, திறமை சித்தி (பாஸ்) அடைவீர்களாக.
எந்தப் பரீட்சையிலும் முழுமையாக சித்தி (பாஸ்) அடைவதற்கு, பரீட்சைத்தாளின் வினாக்களின் விரிவாக்கத்திற்குச் லெலாதீர்கள். இந்தக் கேள்வி ஏன் கேட்கப்பட்டது? அது எப்படி வந்தது? இதனை செய்தது யார்?” எனச் சிந்திக்காதீர்கள். அதனை செய்வதற்குப் பதிலாக, சித்தி (பாஸ்) அடைவதைப் பற்றி சிந்தியுங்கள், தாளை ஒரு தாiளாகக் கருதி, சித்தி அடையுங்கள். பாஸ்என்ற வார்த்தையின் விழிப்புணர்வில் மாத்திரம் இருங்கள்: நீங்கள் சித்தி அடைய வேண்டும், நீங்கள் சித்தி (தாண்டிச் செல்ல வேண்டும்) அடைய வேண்டும், நீங்கள் தந்தைக்கு நெருக்கமாக (பாஸ்) இருந்தால், நீங்கள் திறமை சித்தி (பாஸ்) அடைவீர்கள்.

சுலோகம்:

கடவுளின் மீதுள்ள அன்பில் அர்ப்பணிப்பவர்கள் வெற்றியின் சொரூபங்கள் ஆவார்கள்.

 

---ஓம் சாந்தி---

  Download PDF

 Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

Post a Comment

0 Comments