Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
21-07-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! சதா குஷியில் இருப்பீர்களானால் சொர்க்கத்தின்
இராஜபதவியின் போதையை ஒரு போதும் மறக்க முடியாது.
கேள்வி:
பாபா எந்த ஓர் அற்புதமான (கன்றை) நாற்று நடுகிறார்?
பதில்:
பதீதமான மனிதர்களைப் பாவன தேவதை ஆக்குவது - இந்த அற்புதமான (கன்றை) நாற்றை
பாபா தான் நடுகிறார். எந்த தர்மம் மறைந்து விட்டதோ, அதனை ஸ்தாபனை செய்வது ஓர் அற்புதமாகும்.
கேள்வி:
பாபாவின் சரித்திரம் என்ன?
பதில்:
திறமையுடன் குழந்தைகளை சோழியில் இருந்து வைரம் போல் ஆக்குவது தான் பாபாவின்
சரித்திரம். (தெய்வீக வரலாறு) மற்றபடி கிருஷ்ணருக்கோ எந்த ஒரு சரித்திரமும்
கிடையாது. அவரோ சிறு குழந்தை ஆவார்.
பாடல்: இரவு நேரப் பயணிகளே....
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகள் அறிவார்கள், இந்தப் பாடல் இங்குள்ளவர் யாரும்
இயற்றியதல்ல. பாடலைக் கேட்கும் போது புரிந்து கொள்கிறீர்கள், நிச்சயமாக பாபா நமது கையைப்
பிடித்து அழைத்துச் செல்கிறார். எப்படி சிறு குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர், கையைப் பிடிக்காததால் கீழே விழுந்து
விடக் கூடாது. இப்போது அதே போல் நீங்கள் அறிவீர்கள், பயங்கர இருள் சூழ்ந்துள்ளது. அடி மேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கின்றீர்கள்.
புத்தியும் சொல்கிறது, ஒரு பாபா தான் சொர்க்கத்தின், உண்மை யான கண்டத்தின் ஸ்தாபனை
செய்பவர். உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான அவர் உண்மை யான பாபா. அவருக்கு மகிமை செய்ய
வேண்டும், மற்றவர்களுக்கு நிச்சய புத்தி
ஏற்படுத்து வதற்காக. பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் அல்லது ஹெவன்லி காட்
ஃபாதர். அவர் தான் குழந்தைகளாகிய உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார்.
ஹெவன்லி காட் ஃபாதர் என்றால் ஹெவன் (சொர்க்கம்) ஸ்தாபனை செய்பவர். நிச்சயமாக
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார் பிறகு சொர்க்கத்தின் எஜமானராக ஸ்ரீகிருஷ்ணர்
ஆகிறார். அவரோ (சிவபாபா) சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர், இவரோ (ஸ்ரீகிருஷ்ணர்) சொர்க்கத்தின்
இளவரசர். படைப்பவரோ ஒரு பாபா தான். சொர்க்கத்தின் இளவரசர் ஆக வேண்டும். ஆனால்
ஒருவர் மட்டுமே இருக்க மாட்டார். 8 இராஜ பரம்பரை என்று எண்ணப் படுகிறது. இதுவும் நிச்சயம், பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெற்றுக்
கொண்டிருக்கிறோம். பாபா சொர்க்கத்தைப் படைப்பவர். நாம் அந்த பாபா விடம் இருந்து
கல்ப-கல்பமாக ஆஸ்தி பெறுகிறோம். 84 பிறவிகளை எடுத்து முடிக் கிறோம். அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம். அரைக்கல்பம்
இராமராஜ்யம், அரைக்கல்பம் இராவண ராஜ்யம். இப்போது
நாம் மீண்டும் ஸ்ரீமத்படி நடந்து சொர்க்கத்தின் எஜமானராகிக் கொண்டிருக்கிறோம். இது
மறப்பதற்கான விˆயம் அல்ல. உள்ளுக்குள் மிகுந்த குஷி
இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு உள்ளுக்குள் குஷி இருக்க வேண்டும். ஆத்மாவின்
துக்கம் அல்லது சுகம் முகத்தில் தெரிய வரும். தேவதைகளின் முகம் எவ்வளவு
புன்சிரிப்புடன் உள்ளது. அவர்கள் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தோம் என்பதை
அறிந்துள்ளனர். புரிய வைப்பதற் காக பாபா போர்டு முதலியவற்றை உருவாக்குமாறு செய்து
கொண்டுள்ளார். ஹெவன்லி காட் ஃபாதரின் மகிமையே தனிப்பட்டதாகும். சொர்க்கத்தின்
இளவரசரின் மகிமை தனி. அவர் படைப்பவர். இவர் படைப்பு. குழந்தைகளாகிய உங்களுக்குப்
புரிய வைப்பதற்காக பாபா யுக்தியுடன் எழுதிக் கொண்டே இருக்கிறார். அதனால்
மனிதர்களுக்கு நல்லபடியாகப் புரிய வரும். யாரைப் பரமபிதா பரமாத்மா எனச்
சொல்கின்றனரோ, அவர் தான் பதீத-பாவனர். அவர்
எல்லையற்ற படைப்பவர். நிச்சயமாக சொர்க்கத்தைத் தான் படைப்பார். சத்யுக-திரேதாவை
மனிதர்கள் சொர்க்கம் எனச் சொல்கின்றனர். சொர்க்கம் மற்றும் நரகம் பாதி-பாதி
ஆகிறது. சிருஷ்டியும் பழையது மற்றும் புதியது பாதிப் பாதி உள்ளது. அந்த ஜட
மரத்தின் ஆயுள் இவ்வளவு என வரையறுக்கப்படுவதில்லை. இந்த மரத்தின் ஆயுள் முற்றிலும்
வரையறுக்கப் பட்டதாகும். இந்த மனித சிருஷ்டியின் ஆயுள் முற்றிலும் மிகச்சரியாக
இருக்கும். இது போல் வேறு எதற்கும் இருக்காது. ஒரு விநாடி கூட வேறு பாடு
இருக்காது. பல விதமான மதங்கள் உள்ளடக்கிய மரம். மிகச்சரியாக உருவாக்கபட்ட டிராமா.
இந்த விளையாட்டு 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஜெகந்நாத் புரியில் அரிசியின் அண்டாவை வைத்து படைக்கின்றனர். அதில் 4 பாகங்களாக பிரிந்து விடுகின்றன.
இந்த சிருஷ்டியும் 4 பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
இதில் ஒரு விநாடி கூட குறை வாகவோ கூடுதலாகவோ இருக்க முடியாது. நீங்கள் அறிவீர்கள், பாபா 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூடப் புரிய
வைத்திருந்தார். இப்போதும் அது போலவே புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயம்
உள்ளது,
5000 ஆண்டுகளுக்குப்
பிறகு மீண்டும் ஹெவன்லி காட் ஃபாதர் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் நமக்கு
சொர்க்கத் தின் இராஜ்யம் கிடைக்கச் செய்வதற்காகத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக்
கொண்டிருக்கிறார். பாபா தகுதி உள்ளவர்களாக ஆக்குகிறார். இராவணன் தகுதியற்றவர்களாக
ஆக்குகிறான், இதனால் பாரதம் சோழி போல் ஆகி
விடுகிறது. பாபா மீண்டும் அந்த மாதிரி நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஆக்குகிறார், இதனால் பாரதம் வைரம் போல் ஆகி
விடுகிறது. நம்பர்வார் பதவியோ இருக்கவே செய்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்ம
பந்தனங்களின் கணக்கு உள்ளது. சிலர் கேட்கின்றனர், பாபா, நான் வாரிசாக ஆவேனா, பிரஜை ஆவேனா? பாபா சொல் கிறார், தங்களின் கர்ம பந்தனங்களைப்
பாருங்கள். கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் கதியையோ பாபா தான் புரிய வைக்கிறார். பாபா
எப்போதுமே சொல்கிறார், தங்களுக்காகத் தனித்தனியாக அறிவுரை
கேளுங்கள். பாபா சொல்வார், உங்களுடைய கணக்கு-வழக்குகள் எந்த
மாதிரி உள்ளன, நீங்கள் என்ன பதவி பெற முடியும்? என்று முழு இராஜதானியும் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. ஒரு தந்தை தான் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். மற்ற
அனைவரும் அவரவர் தர்மங்களை ஸ்தாபனை செய்கின்றனர். சத்யுகத்தில் லட்சுமி-
நாராயணரின் இராஜ்யம் இருந்தது இல்லையா? அது அவர்களுடைய பாக்கியம், அதுவும் நம்பர்வார். அவர்கள் அந்த பாக்கியத்தை எப்படி அடைந்தனர்? இப்போது நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? பாபா சொல்கிறார், நான் கல்ப-கல்பமாக, கல்பத்தின் சங்கமயுகத்தில்
வருகிறேன். இது போல் அநேக கல்பங்களின் சங்கமயுகங்கள் கடந்துள்ளது இவ்வாறு கடந்துக்
கொண்டே போகும். அதற்கு முடிவு எதுவும் கிடையாது. புத்தியும் சொல்கிறது, பதீத-பாவனர் தந்தை இந்த
சங்கமயுகத்தில் தான் வருவார். அப்போது தூய்மை இழந்து விட்ட இராஜ்யத்தின் விநாசம்
செய்வித்து தூய்மையான இராஜ்யத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டிய நேரம். இந்த சங்கம
யுகத்திற்குத் தான் மகிமை. சத்யுக-திரேதாவின் சங்கமத்தில் எதுவும் நடைபெறுவதில்லை.
அங்கே இராஜ்யத்தின் மாற்றம் மட்டுமே நடக்கிறது. லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் மாறி
இராமர்-சீதாவின் இராஜ்யம் வருகின்றது. இங்கோ எவ்வளவு குழப்பங்கள், சச்சரவுகள், ஏற்படுகின்றன! பாபா சொல்கிறார், இப்போது இந்த தூய்மை இல்லாத உலகம்
முழுவதும் அழிந்து விடப்போகிறது. அனைவரும் சென்றாக வேண்டும். பாபா சொல்கிறார், நான் அனைவருக்கும் வழிகாட்டி
ஆகிறேன். துக்கத்தில் இருந்து விடுவித்து சதா காலத்திற்கும் சாந்தி தாமம், சுகதாமம் அழைத்துச் செல்கிறேன்.
நீங்கள் அறிவீர்கள், நாம் சுகதாமம் செல்வோம். மற்ற
அனைவரும் சாந்திதாமம் செல்வார்கள். இச்சமயம் மனிதர்கள் கேட்கவும் செய்கின்றனர், மனதிற்கு சாந்தி எப்படிக் கிடைக்கும்? சுகம் எப்படிக் கிடைக்கும் என்று
கேட்பதில்லை. சாந்திக்காகத் தான் பேசுகின்றனர். அனைவரும் சாந்தியில் செல்பவர்கள்
தான். பிறகு அவரவர் தர்மத்தில் வருவார்கள். தர்மத்தின் வளர்ச்சியோ ஏற்படவே
செய்யும். அரைக்கல்பம் சூரியவம்சி, சந்திரவம்சி இராஜதானி. பிறகு மற்ற தர்மங்கள் வருகின்றன. இப்போது ஆதி சநாதன
தேவி-தேவதா தர்மத்தினர் யாருமே கிடையாது. தர்மமே மறைந்து விடுகின்றது. மீண்டும்
ஸ்தாபனை ஆகின்றது. கன்று (நாற்று) நடப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. பாபா தான்
இந்தக் கன்றை நடுகிறார். அவர்கள் பிறகு மரங்கள் முதலியவற்றின் கன்றுகளை
நடுகின்றனர். இந்தக் கன்று எப்படி அற்புதமாக உள்ளது! இவரும் கூடத் தம்மை
தேவி-தேவதா தர்மத்தினர் எனச் சொல்ல மாட்டார். பாபா புரிய வைக்கிறார், எப்போது இத்தகைய நிலை வருகிறதோ, அப்போது நான் வருகிறேன். இப்போது
குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து சாஸ்திரங்களின் இரகசியத்தைப் புரிய வைக்கிறேன்.
இப்போது நீங்கள் தீர்மானியுங்கள் - யார் சரி என்று. இராவணன் தவறான வழிமுறை
தருபவன். அதனால் நேர்மையற்றவன் எனச் சொல்லப் படுகிறான். பாபா உண்மையானவர்.
உண்மையான பாபா உண்மையைத் தான் சொல்வார். உண்மையான கண்டத்திற்காக உண்மையான ஞானத்தைச்
சொல்கிறார். மற்ற இந்த வேத சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்தினுடையவை. எவ்வளவு
மனிதர்கள் படிக்கின்றனர்! இலட்சக் கணக்கான கீதா பாடசாலைகள் அல்லது வேத பாடசாலைகள்
இருக்கும். ஜென்ம- ஜென்மாந்தரமாகப் படித்தே வந்துள்ளனர். கடைசியில் ஏதோ ஒரு
நோக்கம் குறிக்கோள் இருந்தாக வேண்டும். பாடசாலைக்காக நோக்கம் குறிக்கோள் இருக்க
வேண்டும். சரீர நிர்வாகத் திற்காகப் படிக்கின்றனர். நோக்கம் குறிக்கோள் உள்ளது.
என்னென்ன படிக் கின்றனரோ, சாஸ்திரம் சொல்கின்றனரோ, அதனால் சரீர நிர்வாகம்
நடைபெறுகின்றது. மற்றப்படி முக்தி- ஜீவன் முக்தியை அடைகின்றனர் அல்லது பகவானை
அடைகின்றனர் என்பதெல்லாம் கிடையாது. மனிதர்கள் பகவானை அடைவதற்காக பக்தி
செய்கின்றனர். பக்தி மார்க்கத்தில் சாட்சாத்காரமும் கிடைக்கிறது. அப்போது பகவானையே
அடைந்து விட்டதாகப் புரிந்து கொள்கின்றனர். அதிலேயே குஷி அடைந்து விடுகின்றனர்.
பகவானையோ அறிந்து கொள்ளவே இல்லை. கணேஷ், ஹனுமான் அனைவருக்குள்ளும் பகவான் இருப்பதாக நம்புகின்றனர். சர்வ வியாபி என்று
புத்தியில் பதிந்து விட்டுள்ளது இல்லையா? பாபா புரிய வைத்துள்ளார் - யார் எந்த பாவனையோடு யாருக்கு பக்தி செய்கின்றனரோ, அந்த பாவனையை நிறைவேற்று வதற்காக
சாட்சாத்காரம் செய்விக்கிறார். அவ்வளவு தான், நமக்கு பகவானே கிடைத்து விட்டார் என அவர்கள் நம்புகின்றனர், குஷி அடைகின்றனர். பக்த மாலை என்பது
வேறு, ஞான மாலை என்பது வேறு. இது ருத்ர
மாலை என சொல்லப்படுகின்றது. அது பக்த மாலை. யார் அதிகமாக ஞானத்தை
அடைந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மாலை உள்ளது. முன் ஜன்ம
பக்தியின் சம்ஸ்காரத்தைத் தான் எடுத்துச் செல்கின்றனர். அதனால் பிறகு பக்தியில்
சென்று விடு கின்றனர். அந்த சம்ஸ்காரங்கள் ஒரு பிறவிக்கு உடன் செல்கின்றன. அடுத்த
பிறவியிலும் கூட இருக்கும் என்பதில்லை. உங்களுடைய இந்த சம்ஸ்காரங்களோ அழிவில்லாததாகி
விடு கின்றன. இச்சமயம் என்ன சம்ஸ்காரத்துடன் செல்கின்றனரோ அந்த சம்ஸ்காரங்களின்
அனுசாரம் போய் இராஜா-ராணி ஆவார்கள். அதன் பிறகு கொஞ்சம்-கொஞ்சமாகக் கலைகள்
குறைந்துக் கொண்டே செல்கின்றன. இப்போது நீங்கள் இடையில் இருக்கிறீர்கள். புத்தி
அங்கே ஈடுபட்டுள்ளது. இங்கே தான் அமர்ந்துள்ளோம் என்ற போதிலும் புத்தியோகம் (புதிய
உலகில்) அங்கே உள்ளது. ஆத்மாவுக்கு ஞானம் உள்ளது, இப்போது நாம் சென்று கொண்டே இருக் கிறோம். பாபாவைத் தான் நினைவு செய்கிறோம்.
நாம் ஆத்மா இப்போது அப்பால் சென்று கொண்டிருக்கிறோம். இந்த சரீரத்தை இந்தப் பக்கமே
விட்டு விடுவோம். இந்தக் கரையில் உள்ளது பழைய சரீரம். அந்தக் கரையில் உள்ளது அழகிய
சரீரம். இது ஹுசைனின் இரதம். ஹுசைன் அகால மூரத் (அழிவில்லாதவர்) எனச்
சொல்லப்படுபவர். அவருடைய ஆசனம் இது. ஆத்மா தங்கயுகத்தில் இருந்து
வெள்ளியுகத்திற்கு வர வேண்டும். நிலைகள் உள்ளன இல்லையா? பாபாவோ உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்.
அவர் நிலைகளில் வருவதில்லை. ஆத்மாக்கள் தான் வருகின்றனர். தங்கயுகத்தவர் பிறகு
வெள்ளியுகத்தில் வருவார்கள். இப்போது உங்களை இரும்புயுகத்தில் இருந்து
தங்கயுகத்திற்கு அழைத்துச் செல்கிறார். தம்முடைய அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டே
இருக்கிறார். அவரை ஹெவன்லி காட் ஃபாதர் என்று சொல்லவும் செய்கின்றனர். அவருடையது
அலௌகீகமான தெய்விக ஜென்மம். அவரே வந்து நான் எவ்வாறு பிரவேசிக்கிறேன் என்பது
பற்றிச் சொல்கிறார். இதை ஜென்மம் என சொல்ல மாட்டார்கள். எப்போது சமயம்
முடிவடைகிறதோ, அப்போது பகவானுக்கு சங்கல்பம்
எழுகிறது - போய் படைப்பைப் படைக்க வேண்டும். டிராமாவில் அவருக்குப் பார்ட் உள்ளது
இல்லையா? பரமபிதா பரமாத்மாவும் கூட
டிராமாவுக்கு அடிமை (கட்டுப்பட்டவர்). எனது பார்ட்டே பக்திக்கான பலனைக்
கொடுப்பதாகும். பரமபிதா பரமாத்மா சுகம் கொடுப்பவர் என்று தான் சொல்வார்கள். நல்ல
காரியம் செய்கின்றனர் என்றால் அல்பகாலத்திற்கு அதனுடைய பிரதிபலன் கிடைக்கிறது.
நீங்கள் அனைவரைக் காட்டிலும் நல்ல காரியம் செய்கிறீர்கள். அனைவருக்கும் பாபாவின்
அறிமுகம் கொடுக்கிறீர்கள்.
இப்போது பாருங்கள், ராக்கி பண்டிகை வருகிறது என்றால் இதைப்
பற்றியும் கூடப் புரிய வைக்க வேண்டும். ராக்கி என்பதே தூய்மையற்றவர்கள்
தூய்மையாவதற்கான உறுதி மொழி எடுத்துக் கொள்வதற்காகத் தான். தூய்மையற்றவர்களைப்
தூய்மையாக்குவதற்கானது ரக்ஷா பந்தன். நீங்கள் முதல்-முதலில் பதீத-பாவனராகிய
தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். எது வரை அவர் வரவில்லையோ, அது வரை மனிதர்கள் தூய்மையாக
முடியாது. பாபா தான் வந்து பவித்திரமாவதற்கான உறுதிமொழி எடுக்கச் செய்கிறார்.
நிச்சயமாக எப்போதோ நிகழ்ந்திருப்பதால் தான் அந்தப் பழக்க-வழக்கங்கள் தொடர்ந்து
இருந்து வந்துள்ளன. இப்போது நடைமுறையில் பாருங்கள், பிரம்மாகுமார்-குமாரிகள் ராக்கி அணிந்து தூய்மையாக உள்ளனர். பூணூல், கங்கணம் இதெல்லாம் கூட தூய்மையின்
அடையாளங்களாகும். பதீத பாவனர் பாபா சொல்கிறார், காமம் மகாசத்ரு. இப்போது என்னிடம் உறுதி மொழி கொடுங்கள் - நான் தூய்மையாக
இருப்பேன். மற்றப்படி கங்கணம் எல்லாம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பாபா சொல்கிறார், உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், என்னிடம் 5 விகாரங்களை தானமாகக் கொடுத்து
விடுங்கள். இந்த ராக்கி கட்டுவது 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட இருந்தது. பதீத
பாவனர் பாபா வந்திருந்தார். வந்து தூய்மையாகுங்கள் என்ற ராக்கி கட்டச் செய்தார்.
ஏனென்றால் தூய்மையான உலகத்தின் ஸ்தாபனை ஆயிற்று. இப்போதோ நரகமாக உள்ளது. நான்
மீண்டும் வந்துள்ளேன். இப்போது ஸ்ரீமத்படி உறுதிமொழி எடுங்கள் மற்றும் பாபாவை
நினைவு செய்வீர்களானால் நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள். இப்போது தூய்மையை இழக்காதீர்கள்.
நீங்களும் சொல்லுங்கள், பிராமணர்கள் நாங்கள் வந்துள்ளோம், உங்களை உறுதிமொழி எடுக்க
வைப்பதற்காக. நாங்கள் உறுதிமொழி எடுக்கிறோம், நாங்கள் ஒரு போதும் தூய்மையற்றவர்களாக ஆக மாட்டோம். ஆனால் இப்படியும் அநேகர்
எழுதி விட்டுப் பிறகு இல்லாமல் போய் விட்டார்கள். பதீத-பாவனர் பாபா வருவதே சங்கம
யுகத்தில். பிரம்மா மூலம் வந்து குழந்தைகளுக்கு வழிமுறை தருகிறார், தூய்மை ஆகுங்கள் என்று. இங்கே
அனைவரும் உறுதிமொழி எடுத்துள்ளனர். நீங்களும் தீர்மானம் செய்யுங்கள். அப்போது தான்
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். நீங்கள் தூய்மையான பிராமணர் ஆகுங்கள். அப்போது
மீண்டும் தேவதை ஆகி விடுவீர்கள். பிராமணர்கள் நாம் உறுதிமொழி எடுத்துக்
கொண்டுள்ளோம். ஆல்பத்தையும் காட்ட வேண்டும் - இந்த ராக்கி அணிகின்ற வழக்கம்
எப்போதிருந்து ஆரம்பமாயிற்று? இப்போது சங்கமயுகத்தில் எடுத்துக் கொண்ட இந்த தூய்மைக்கான உறுதிமொழியினால்
பிறகு 21 பிறவிகள் வரை தூய்மையாக
இருப்பீர்கள். இப்போது பாபா சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். இவ்வா
றெல்லாம் பாயின்ட்டுகளை முதலிலேயே குறித்துக் கொண்டு சொற்பொழிவைத் தயார் செய்து
கொள்ள வேண்டும். இந்த வழக்கம் எப்போதிருந்து ஆரம்பமாயிற்று? 5000 ஆண்டுகளின் விˆயம். கிருஷ்ண ஜென்மாஷ்டமியும் கூட 5000 ஆண்டுகளின் விˆயமாகும். கிருஷ்ணருக்கு சரித்திரம்
(தெய்வீக காரியங்களின் வரலாறு) என்பது எதுவும் கிடையாது. அவரோ சிறு குழந்தை.
சரித்திரமோ ஒரு தந்தையினுடையது. அவர் சாமர்த்தியமாகக் குழந்தைகளைச் சோழியில்
இருந்து வைரமாக ஆக்குகிறார். மகிமை எல்லாமே அந்த ஒருவருக்குத் தான். வேறு
யாருக்கும் பிறந்த நாள் கொண்டாடுவது எதற்கும் உதவாது. பிறந்த நாள் என்பது ஒரு
பரமபிதா பரமாத்மாவுக்குத் தான் கொண்டாட வேண்டும். அவ்வளவு தான். மனிதர்களுக்கோ
எதுவும் தெரியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு
ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. வாரிசாக ஆவதற்கு தன்னுடைய அனைத்துக் கணக்கு-வழக்குகள், கர்ம பந்தனங்களை முடித்துவிட
வேண்டும். பாபாவிடம் இருந்து என்ன அறிவுரை கிடைக்கிறதோ, அதன் படி தான் நடக்க வேண்டும்.
2. அனைவருக்கும் பாபாவின் உண்மையான அறிமுகம் கொடுத்து, தூய்மையற்றவர்களை தூய்மையானவர்களாக
ஆக்குவதற்கான சிரேஷ்ட காரியத்தைச் செய்ய வேண்டும். தூய்மையின் அடையாளமான ராக்கி
கட்டிக் கொண்டு தூய்மையான உலகத்தின் எஜமான தன்மையின் ஆஸ்தியைப் பெற வேண்டும்.
வரதானம்:
ஒரே ஒரு பாஸ் (கடந்துச் செல்வதற்கான) என்ற வார்த்தையின் நினைவு மூலம் எந்தவொரு
பேப்பரிலும் முழுமையாக பாஸ் (தேர்ச்சி) ஆகக்கூடிய பாஸ் வித் ஆனர் (மரியாதையுடன்
தேர்ச்சியடைதல்) ஆகுக.
எந்தவொரு
பேப்பரிலும் முழுமையாக தேர்ச்சி பெறுவதற்காக அந்த பேப்பரில் கேள்வியின் விஸ்தாரத்தில்
செல்லாதீர்கள். இது ஏன் வந்தது, எப்படி வந்தது,
யாரால்
ஏற்பட்டது?
என்று
யோசிக்காதீர்கள். இதற்கு பதிலாக தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைத்து பேப்பரை
பேப்பர் எனப் புரிந்து கொண்டு கடந்துச் செல்லுங்கள். ஒரே ஒரு பாஸ் என்ற வார்த்தையை
நினைவில் வையுங்கள் - நான் பாஸ் ஆகவேண்டும், பாஸ் (கடந்து போவது) செய்ய வேண்டும். மேலும்
பாபாவிற்கு அருகாமையில்(பாஸ்) இருக்க வேண்டும்.அப்படியானால் பாஸ் வித் ஆனர்
ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
தன்னை பரமாத்மாவின் அன்பிற்கு அர்ப்பணம் செய்யக்கூடியவர் தான் வெற்றி மூர்த்தி
ஆகிறார்கள்.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments