Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 11.10.22

 Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

11-10-2022  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, ஆன்மீகப் பிராமணர்களான நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். எவ்வாறு தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுக்கலாம் என்று கலந்துரையாடுவதற்கும், தீர்மானிப்பதற்கும் ஒன்றுகூடுங்கள்.

கேள்வி:

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்க முடியும்?

பதில்:

1. முதன்முதலில், கடவுளே இங்கு உங்களுக்குக் கற்பிக்கின்றார், உங்கள் பெரும் பாக்கியத்தை (சௌபாக்கியம் - நூறுமடங்கு பாக்கியம்) அவரிடமிருந்தே பெற வேண்டும் என்ற நம்பிக்கை உங்கள் புத்தியில் இருக்கட்டும். அப்பொழுது மட்டுமே நீங்கள் ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து கற்று, உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்கிக் கொள்ள முடியும். தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நீங்கள் நாளாந்தம் கற்க வேண்டும். உங்களால் வகுப்புக்கு வர முடியாதிருந்தால், வீட்டில் முரளியை வாசியுங்கள்.

பாடல்: நீங்களே அன்புக்கடல். நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகின்றோம்



ஓம் சாந்தி. ஆத்மாக்களாகிய நாங்கள் புள்ளிகளைப் போன்றவர்கள், அதாவது, நாங்கள் நட்சத்திரங்கள் போன்றவர்கள் என்பது ஆத்மாக்களான உங்களுக்கு, அதாவது, குழந்தைகளான உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும், ஓர் ஆத்மாவினால் எவ்வாறு சுயத்தின் தந்தையை உணர முடியும்? உலகில் உள்ள எவருக்குமே சுயத்தையோ அல்லது தந்தையையோ தெரியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் புள்ளிகள்; நீங்கள் சின்னஞ்சிறியவர்கள் என்பதை அறிவீர்கள். தந்தையும் சின்னஞ்சிறியவரே. பரமதந்தை ஆத்மாக்களை விடப் பருமனில் பெரியவரல்ல. ஒரு சரீரம் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கலாம். நீங்கள் இப்பொழுது சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய புள்ளி என்பதை ஒருவர் அறிந்திருந்தாலும், அவருக்குள் 84 பிறவிகளின் பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் ஓர் அற்புதமாகும். ஓர் ஆத்மா சரீரம் ஒன்றை ஆதாரமாக எடுக்கும்வரை, அவரால் ஒரு பாகத்தை நடிக்க முடியாது. அவ்வாறே, பரமாத்மாவும் ஆத்மாக்களான எங்களைப் போன்று சின்னஞ்சிறியவரே, ஆனால் அவர் ஏன் தந்தை என அழைக்கப்படுகின்றார்? ஏனெனில், அவர் என்றென்றும் தூய்மையானவர் என்பதால் ஆகும். மக்களுக்குக் கடவுளைத் தெரியாதபொழுதிலும், அவரைத் தந்தை என்றே அழைக்கின்றார்கள். நீங்கள் அவரைப் புரிந்துணர்வுடன் நினைவுசெய்வதைப் போன்றே, அவர்களும் அவ்வாறே அவரை நினைவுசெய்கின்றார்கள். அந்தப் பக்தர்கள் அனைவருக்கும், ஒரேயொரு கடவுளே இருக்கின்றார், அவரையே அவர்கள் தூய்மையாக்குபவர் என அழைக்கின்றார்கள். எனவே, தூய்மையற்ற பலர் இருக்கின்றனர், ஆனால் ஒரேயொருவரே தூய்மையாக்குபவர். சாதுக்கள், புனிதர்கள் மற்றும் மகாத்மாக்களும் அவரைக் கூவியழைக்கின்றார்கள்; அவர்கள் அவரை தந்தையான கடவுளே!’ என அழைக்கின்றார்கள்: ஆகவே, அவரே அனைவரதும் தந்தையாவார். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்குத் தந்தை இங்கே வரவேண்டும். ஆத்மாக்கள் பாவச்சுமையைச் சேர்த்துள்ளதால், உங்களைத் தூய்மையாக்குவதற்கான வழியை அவர் மாத்திரமே காட்டுகின்றார். நாங்கள்புனிதமாக இருங்கள்என்று எழுதுகின்றோம், ஆனால் அத்தகைய சுலோகங்களை இடுவதில் எந்த நன்மையும் இல்லை, ஏனெனில் வெளியிலுள்ள மக்களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. இது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது, எனவே, உங்களுக்குச் சுலோகங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன? தூய்மையாகி, பாபாவை நினைவுசெய்யுங்கள் என்பதே அதன் அர்த்தம். நீங்கள் அதனை அவர்களுக்கு விளங்கப்படுத்தும்வரை, அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் யோகத்தில் நிலைத்திருப்பதனால், உங்களால் தூய்மையாக முடியும். ‘அதிபுனிதமானவர்என மக்கள் கூறுகின்றார்கள். அது தூய்மைக்கான தலைப்பு. சந்நியாசிகள் புனிதமானவர்கள் என்று கூறப்படுகின்றார்கள், ஏனெனில் அவர்கள் விகாரத்தில் ஈடுபடுவதில்லை. அவர்கள் தூய்மையாக இருந்து, பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்தாலும், விகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கே பிறக்க வேண்டும். தூய்மையாக இருந்து, சிவபாபாவை நினைவுசெய்யுமாறு உங்களுக்குக் கூறப்படுகின்றது. சந்நியாசிகள் தங்களைச் செயல்களைத் துறப்பவர்கள் என அழைக்கின்றார்கள், ஆனால் செயல்களைத் துறக்க முடியாது. ஓர் ஆத்மாவிற்குச் சரீரம் இல்லாதபொழுதே, செயல்களைத்; துறக்க முடியும். ஆத்மாக்கள் வீட்டில் (பரந்தாமத்தில்) சரீரங்களற்று வாழ்கின்றார்கள். இங்கே எவ்வாறு செயலின் துறவறம் இருக்க முடியும்? இவ்வாறு கூறுவதும் பொய்யாகும். தாம் இல்லறத்தினர் செய்கின்ற அதே செயல்களைச் செய்வதில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள். இல்லறத்தினர் பல செயல்களைச் செய்கின்றார்கள்: யாகம் வளர்த்தல், தபஸ்யா செய்தல், யாத்திரை செல்லுதல் போன்றன. சந்நியாசிகளும் அதனைச் செய்கின்றார்கள். இல்லறத்தினர் ஒரு வருமானத்தைச் சம்பாதித்து, தமது வீடுகளில் உணவு சமைக்கின்றார்கள், ஆனால் சந்நியாசிகள் அவ்வாறு செய்வதில்லை. அவர்களுடையது ஹத்தயோகம் என்பதால், உணவுக்காக அவர்கள் யாசிக்கின்றார்கள். ஹத்தயோகம் செய்வதால், அவர்களால் கடவுளைச் சந்திக்க முடியாது. தந்தை வரும்பொழுது மாத்திரமே, எவராலும் அவரைச் சந்திக்க முடியும், அவர் வரும்வரை, தூய உலகம் ஸ்தாபிக்கப்பட முடியாது. நீங்கள் அதிகளவு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் புரிந்துகொள்வதில்லை! குழந்தைகள் பாபாவிற்குச் செய்திகளை எழுதுகின்றார்கள்;: பலரும் வருகின்றார்கள். தமது பெரும் பாக்கியத்தைப் பெறப் போவது யார் என்று நாங்கள் இப்பொழுது பார்ப்போம். பலரும் வருகின்றார்கள், பரமாத்மாவான பரமதந்தையே தமக்குக் கற்பிக்கின்றார் என்பதும், அவரிடமிருந்து தங்கள் பெரும் பாக்கியத்தைத் தாங்கள் பெற வேண்டும் என்பதும் அவர்களின் புத்தியில் பதிவதில்லை. தந்தை பதிவேட்டைப் பார்க்கின்றார். சிலர் இங்கே மாதம் முழுவதிலும் எட்டு அல்லது பத்து நாட்களுக்கே வருகின்றார்கள், சிலரோ வருவதேயில்லை, ஆகவே, அவர்கள் எதனையும் எழுதுவதில்லை. ஒருவர் வகுப்பிற்கு வராதிருந்தால், அவர்கள் முரளியை வாசிக்கின்றார்களா, இல்லையா? எச்சந்தர்ப்பத்திலும், நீங்கள் ஒவ்வொரு நாளும் கற்க வேண்டும். அவர்கள் ஜாப் சஹேப் சுக்மணியின் (சீக்கிய சமயநூல்) சிறிய வாசகங்களைத் தயாரிக்கின்றார்கள், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தாங்கள் அதனை வாசிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அதனை வாசிப்பதனால் அவர்கள் எதனை அடைவார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எதனையும் இல்லை! ஒருவேளை, சிறிது நேரம் அவர்களின் புத்தி நன்றாக இருக்கக்கூடும், ஆனால் அதனைச் செய்வதால், எவராலும் தந்தையைச் சந்திக்க முடியாது. பின்னர் அவர்கள் விகாரத்தில் சிக்கிக் கொள்வதால், அதன்மூலம் பேறு எதுவும் இருப்பதில்லை. விநாச காலத்தில் துண்டிக்கப்பட்ட புத்தியை உடையவர்கள் இருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. உண்மையிலேயே இப்பொழுது இது விநாச காலம் என்பதாலேயே எவருமே கடவுளை அறியார். அவர்கள் தமக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையோ தெரியாது என்றும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், நீங்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்திருக்க வேண்டும். சத்திய யுகம் ஆரம்பம் என்றும், கலியுகம் இறுதி என்றும் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆகவே, முக்காலங்களையும், மூவுலகங்களையும் நீங்கள் புரிந்தகொள்ள வேண்டும். பௌதீக உலகம், சூட்சும உலகம், அசரீரி உலகம் என்பனவே மூவுலகங்கள். சமயநூல்கள் அநாதியானவை என்று அவர்கள் கூறுகின்றார்கள், ஆனால் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இராவண இராச்சியம் ஆரம்பமாகும்பொழுதே, சமயநூல்களும்; ஆரம்பமாகுகின்றன. ஆகவே, துவாபர யுகம் மத்தியில் உள்ளது. அரைக் கல்பத்திற்கு, சத்திய யுகமும், அரைக் கல்பத்திற்குக் கலியுகமும் உள்ளன. அரைக்கு, அரைவாசி என்ற கணக்கு உள்ளது. ஒவ்வொரு சக்கரத்தினதும் கால எல்லை நூறாயிரம் ஆண்டுகள் என்று அவர்கள் கூறியுள்ளதால், அம்மக்கள் மத்திய காலத்தை அறியார்கள். அவர்கள் தந்தையை அறிந்து, பிரம்மாகுமார்களாகவும், பிரம்மகுமாரிகளாகவும் ஆகினாலேயே ஆஸ்தியைப் பெறுவார்கள் என்று நீங்கள் அவர்களிடம் கூற வேண்டும். மக்கள் இங்கே வரும்பொழுது, முதலில், அவர்கள் எங்கே வந்துள்ளார்கள் என்று அவர்களிடம் வினவுங்கள். தாம் பிரம்மாகுமாரிகளிடம் வந்துள்ளதாக அவர்கள் கூறுவார்கள். அவர்களிடம் கூறுங்கள்: அதனைப் பற்றிச் சற்று சிந்தியுங்கள்! இத்தனை பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகள் இருப்பதால், அவர்களின் தந்தையான பிரம்மாவும் இங்கே இருப்பார், அல்லவா? பல நிலையங்களும், பல பிரம்மாகுமார்கள், பிரம்மகுமாரிகளும் இருக்கின்றார்கள். ஒரு தந்தைக்கு எவ்வாறு அத்தனை குழந்தைகள் இருக்க முடியும்? அவர் பிரஜாபிதா என்பதால், பல பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளும் உள்ளனர் என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இவ்வாறு விளங்கப்படுத்தி, அவர்களை உஷார்ப்படுத்த வேண்டும். நல்லது, அதனைப் பற்றிச் சற்று சிந்தியுங்கள்: பிரஜாபிதா பிரம்மா யாருடைய குழந்தை? இத்தனை குழந்தைகளையும் உருவாக்குவது பரமாத்மாவின் பணியாகும். ஆகவே, அவர் நிச்சயமாக இங்கே வருவார். நினைவுகூரப்பட்டுள்ளது: நீங்களே தாயும் தந்தையும். ஆகவே பிரம்மாவே தாயாவார். எனவே, பரமாத்மா அனைவரையும் பிரம்மாவினூடாகப் படைக்கின்றார்; அவர் அனைவரையும் மாற்றுகின்றார். உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்காக, அவர் உங்களைத் தத்தெடுக்கின்றார். அவர் உங்களை எவ்வாறு தூய்மையாக்குகின்றார்? நீங்கள் நினைவு செய்வதினூடாகவாகும். அவர் கூறுகின்றார்: சகல சமயங்களையும் மறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அனைவரும் என்னைக் கூவியழைக்கின்றார்கள். நானே ஞானம் நிறைந்தவரும், பேரானந்தம் மிக்கவரும், விடுதலையளிப்பவரும், வழிகாட்டியும் ஆவேன். ஆகவே, நான் அனைவரையும் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். எங்கே சந்தோஷம் உள்ளது? சந்தோஷ தாமத்தில் ஆகும். தந்தை இப்பொழுது உங்களை அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார், அதன்பின்னர் நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். எவ்வாறு இவ்விடயங்களை உங்களால் நினைவுசெய்ய முடியும்? ஒவ்வொரு நாளும் இவ்விடயங்களை நீங்கள் தொடர்ந்தும் பேசுவதுடன், அவற்றைப் பிறருக்கும் விளங்கப்படுத்தினால், அந்தக் கருத்துக்கள் உங்கள் புத்திக்குள் தொடர்ந்தும் பிரவேசிக்கும். நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்தினால், அந்நபரை அதனை நீங்கள் எழுதச் செய்ய வேண்டும். ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையான பரமாத்மாவின் விலாசத்தையும், சிவனே தந்தை என்பதையும், நாங்கள் அவரிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுவோம் என்பதையும் எழுதச் செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும் இந்த முயற்சியைச் செய்பவர் யார்? இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் உங்களை உஷார்ப்படுத்;திக் கொள்வதுடன், பிறரையும் உஷார்ப்படுத்தி, சேவைக்கான திட்டங்களையும் வகுக்க வேண்டும். இராணுவத்தைச் சேர்ந்த பெரிய தளபதிகள் கலந்தாலோசனை செய்வதற்கு ஒன்றுகூடுகின்றார்;கள். எனவே, குழந்தைகளான நீங்களும் ஒன்றுகூட வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் ஒன்றுகூடாதுவிடின் பாபாவினால் என்ன செய்ய முடியும்? உண்மையில், பிராமணர்களாகிய உங்களுக்கு ஒருவர் மீது ஒருவர் பேரன்பு இருக்க வேண்டும். ஒருவருக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவது என்று நீங்கள் கலந்துரையாடித் தீர்மானிக்க வேண்டும். பாருங்கள், இலக்ஷ்மி நாராயணனுக்குப் பல ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்களைக் கட்டியவர்களை நீங்கள் சந்திக்க வேண்டும்: நீங்கள் இவ் ஆலயங்களைக் கட்டியுள்ளீர்கள், ஆனால் அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைக் கோரினார்கள், அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தை இழந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணரின் படம் மிகவும் சிறந்ததாகும். 84 பிறவிகளின் கதையும், அது எவ்வாறு தொடர்கின்றது என்பதும் மிகவும் சிறந்ததாகும். நீங்கள் இந்தப் படத்தை அளவில் மிகப்பெரியதாக உருவாக்க வேண்டும். பாபா கூறுகின்றார்: ஒருவர் வரும்பொழுது, அவரிடம் சாதுரியமாக வினவுங்கள்: நீங்கள் கீதையைக் கற்றிருக்கின்றீர்களா? எனவே, என்னிடம்கீதையின் கடவுள் யார்என்று கூறுங்கள்? இவ்விதமாக, நீங்கள் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். ‘நீங்களே தாயும் தந்தையும்எனக் கூறப்படுகின்றது. எனவே, இந்தப் பிரம்மா தாய் என்பதால், அவருடன் நீங்கள் ஓர் உறவுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். அவர் மீது உங்களுக்கு அன்பு இல்லாது விட்டால், அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியை எவ்வாறு பெறுவீர்கள்? உங்கள் யுத்தம் பழைய எதிரியுடன் உள்ளது. இராவணனுடன் யுத்தம் ஒன்றுள்ளது என்பதை எவரும் அறியவும் மாட்டார்கள். சத்;தியப் படகு ஆட்டம் காணலாம், ஆனால் மூழ்காது என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆகவே, அது அதிகளவு ஆடுகின்றது! ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் படகு ஆடுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே, உங்கள் யுத்தம் மாயையுடன் ஆகும். தந்தையைப் புரிந்துகொள்ளும் வரை, அவர்கள் எழுத்தில் எழுதினாலும், அவர்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கூறுகின்ற கிளிகளாகவேனும் ஆகுவதில்லை. மாறாக வந்து போகின்ற காட்டுக்கிளிகள் போன்று அவர்கள் உள்ளார்கள். நீங்கள் அல்ஃபாவைப் புரிந்தகொள்ள வேண்டும். பல பிரஜைகள் உள்ளனர். ஆனால் இராச்சியத்தை அடைய எவரும் முன்வருவதில்லை. சுவாலையில் தம்மை அர்ப்பணித்தல் அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. \

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு:

குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பெற்றிருக்கின்றீர்கள்: குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்யுங்கள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, எங்களுக்கு நேரம் இல்லை. உங்கள் நேரம் எங்கே செல்கின்றது? நிச்சயமாக மாயையே உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்கின்றாள். மாயையும் மிகவும் சக்திவாய்ந்தவள், ஏனெனில், தந்தையை நினைவுசெய்ய அவள் உங்களுக்கு நேரம் கொடுப்பதில்லை, இதனாலேயே நாள் முழுவதிலும் நீங்கள் அரை மணித்தியாலமோ அல்லது 20 நிமிடங்களோ தான் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். மிகவும் சிரமத்துடனேயே ஒருவர் நாள் முழுவதும் இரண்டு மணித்தியாலங்களேனும் தந்தையை நினைவுசெய்கின்றார். நீங்கள் இரண்டு மணித்தியாலங்கள் பாபாவை நினைவுசெய்கின்றீர்கள் எனக் கூறுபவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! கடந்த கால நினைவாகிய, அந்தப் பௌதீக நினைவும் தொடர்கின்றது. அவர் அசரீரியானவர். அவருக்கெனச் சொந்தமாகக் கண்களோ, காதுகளோ இல்லை. அவர் சதா தன்னை மாத்திரமே நினைவுசெய்யுமாறும், உங்களை ஆத்மாக்களாகக் கருதுமாறும் குழந்தைகளான உங்களிடம் கூறுகின்றார். பாபா உங்களிடம் வினவுகின்றார்: எத்தனை மணித்தியாலங்கள் நீங்கள் நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள்? குழந்தைகள் சென்று விளையாடும்பொழுது, அவர்கள் தமது ஆசிரியரை நினைவுசெய்கின்றார்கள். வீட்டில் கற்கும்பொழுதும், தமது ஆசிரியரை அவர்கள் நினைவுசெய்கின்றார்கள். அது பௌதீக நினைவாகும். இது சற்றுச் சிரமமாகும். இதனாலேயே பாபா வினவுகின்றார்: தம்மை ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையை இரண்டு மணித்தியாலங்கள் நினைவுசெய்ய முடியும் எனக் கருதுபவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! வெட்கப்படாதீர்கள், ஆனால் பாபாவிடம் மிகச்சரியாகக் கூறுங்கள். நீங்கள் இங்கமர்ந்திருக்கின்றீர்கள், பாபா முரளியைக் கூறுகின்றார், இருப்பினும் உங்கள் புத்தி வேறு திசைகளில் அலைகின்றது, இல்லையா? உங்கள் புத்தியினால் அதிகளவு கிரகிக்கப்படுவதில்லை. உதாரணமாக, பாபா காலையில் உங்களுக்கு ஒரு மணித்தியாலம் விளங்கப்படுத்தும்பொழுது, அந்த ஒரு மணித்தியாலம் உங்கள் புத்தி தந்தையை நினைவுசெய்கின்றதா அல்லது வெளியில் அலைந்து திரிகின்றதா? உண்மையில், வரிசைக்கிரமமாக நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப, உங்கள் புத்தி நிச்சயமாக வெளியில் எங்கேனும் அலைந்து திரிகின்றது. நீங்கள் அனைத்தையும் செவிமடுப்பதில்லை. நீங்கள் அனைத்தையும் செவிமடுத்து, அவற்றைத் தொடர்ந்தும் குறித்துக் கொண்டால், உங்கள் யோகம் நன்றாக உள்ளது என்று பாபா கூறுவார். ஆகவே, பாபா கூறுவதைச் செவிமடுக்கும்பொழுது, நீங்கள் கவனம் செலுத்தி, கருத்துக்களை முழுமையாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இணைப்பு துண்டிக்கப்படும்பொழுது, நீங்கள் கருத்துக்களை மறக்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, இதய வழுவலினால் மரணித்தல் மிகவும் இனிய மரணமாகும். அதில்என்னுடையதுஅல்லதுஉங்களுடையதுஎன்ற சுழற்சிகள் எதுவும் இல்லை. எங்கேனும் அமர்ந்திருக்கும்பொழுது, நீங்கள் மயக்கமடைந்து உணர்விழக்கும்பொழுது, அனைத்தும் முடிவடைகின்றது. அவ்வளவுதான்! அதன்பின்னர் மீண்டும் உங்களுக்கு உணர்வு திரும்புவதில்லை. அது மிகவும் சிறந்த மரணமாகும். ஏனையோர் அழுவார்கள், ஆனால் நீங்கள்அற்புதம்என எண்ணிச் சந்தோஷமாக இருப்பீர்கள். இவர் மிகவும் இலகுவாக மரணித்து விட்டார்; இவர் எந்த வேதனையையும் அனுபவம் செய்யவில்லை. ஒருவர் மரணிப்பதாயின், இவ்வாறே மரணிக்க வேண்டும். இல்லாவிடின், பெருமளவு மருந்துகள், மருத்துவ தாதிகள், ஏனைய பல விடயங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனாலேயே எங்கேனும் அமர்ந்திருக்கும்பொழுது, ஒருவர் கர்மாதீத ஸ்திதியில் தனது பழைய சப்பாத்தைத் துறந்து செல்வதும், ஒருவர் தனது சரீரத்தை அவ்வாறு நீங்கிச் செல்வதுமே அனைத்திலும் அதி சிறந்ததாகும். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, சடுதியாகக் காரணமேயில்லாது, எவ்வாறு குண்டுகள் போடப்படுகின்றன என்பதையும், அனைவரும் எங்கேனும் அமர்ந்திருந்தவாறே திரும்பிச் செல்வதையும் பார்ப்பீர்கள். உங்கள் முகங்களும் மலர்ச்சியாக இருக்கும். ஒருவர் நல்ல முறையில் மரணிக்கும்பொழுது, பார்ப்பதற்கு, அந்த நபர் இன்னமும் உயிருடன் இருப்பதைப் போன்றே உள்ளது என்றே பார்ப்பவர்கள் கூறுவார்கள்; அவர் முகமலர்ச்சியுடன் காணப்படுவார். அவரைப் பார்ப்பவர்கள் எவராலும் அவர் மரணித்து விட்டார் என்று கூற முடியாதிருக்கும். ஆத்மா முகமலர்ச்சியுடன் வெளியேறுகிறார். ஓர் ஆத்மா மலர்ச்சியாக இருந்தால், அவரது முகத்தில் அது காணப்படும், அல்லவா? ஆத்மாக்கள் மரணிப்பதில்லை; ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களை நீங்கிச் செல்கின்றனர். ஆகவே, ஆத்மா புன்னகைத்தவாறே பெருஞ் சந்தோஷத்தில் இந்தச் சரீரத்தை நீங்கிச் செல்வார். இதுவே கர்மாதீத ஸ்திதி என அழைக்கப்படுகின்றது. இதுவே அதியுயர்வான ஸ்திதி என்று நினைவுகூரப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்களும் இவ்வாறே நீங்கிச் வேண்டும். சரீரத்தைப் பற்றிய அக்கறை எதுவும் இல்லை. வேறெதுவும் நினைவுசெய்யப்படுவதில்லை. இயல்பாகவே நீங்கள் சரீரத்தை நீங்கினால், அதுவே இனிமையிலும் அதி இனிமையானது என்று கூறப்படுகின்றது. இதனாலேயே பாம்பின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. சத்திய யுகத்தில், இவ்வாறே உள்ளது: அவர்கள் தமது சரீரங்களைச் சந்தோஷத்துடன் நீக்குகிறார்கள். ஆகவே, இங்கே இப்பயிற்சி வளர்க்கப்பட்டு, அங்கே இப்பயிற்சி தொடர்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அதிகளவு அன்புடன் நினைவுசெய்கின்றீர்கள். ‘அதிஅன்பிற்கினிய, பரம அன்பிற்கினிய, மிகவும் இனிமையானஎன ஆங்கிலத்தில், நீங்கள் கூறுவீர்கள். மக்களைப் பரம அன்பிற்கினியவர்கள் என்றோ, அதிஅன்பிற்கினியவர்கள் என்றோ உங்களால் கூற முடியாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்கள் தந்தையும், ஆசிரியரும், உங்கள் குருவும் ஆவேன். நீங்கள் ஆசிரியரை எப்பொழுதாவது மறந்தால், உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். பாபா வழிகாட்டியும் ஆவார். அவரே உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, உங்களை அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்பவர். அதன்பின்னர், சந்தோஷ தாமம் உள்ளது. நீங்கள் இப்பொழுது இந்த ஞானப் புல்லைப் பெறுவதால், அதனை நீங்கள் தொடர்ந்தும் அசைபோட வேண்டும் (ஞானக் கடலைக் கடைய வேண்டும்). ஒரு மாட்டின் வாய் தொடர்ந்தும் புல்லை அசைபோடும். இங்கே இவ்வேலையைச் செய்வதற்கு உங்கள் வாய் தேவையில்லை. எவ்வாறாயினும், உங்களுக்குள் அனைத்தையும் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நானும் உங்களைப் போன்றவரே. எனது புத்தியின் யோகம் வெளியில் அலைபாய்வதால், எனக்குக் குறைவான மணித்தியாலங்களே உள்ளன. சிலவேளைகளில், ‘இன்ன இன்னாருடன் முரண்பாடு உள்ளது என்று சிலரிடமிருந்து நான் ஒரு கடிதத்தைப் பெறுவேன். இது அல்லது அது நடக்கின்றது….. ஆகவே, எனது புத்தி நாள் முழுவதும் அங்கேயே செல்கின்றது. எவ்வாறாயினும், பாபா இவருக்கு மிகவும் அருகில் இருப்பதால், ஒருவேளை குழந்தைகளை விடவும் பாபாவிற்கு இலகுவாக இருக்கின்றது. பாபா தமது உணவை உண்பதற்காக அமரும்பொழுது, நினைக்கின்றார்: நல்லது, நான் பாபாவை நினைவுசெய்யப் போகின்றேன். அந்த நினைவு இரண்டு, மூன்று நிமிடங்களே நிலைத்திருக்கின்றது. பின்னர் நான் மறந்து விடுகின்றேன். நினைவு காற்றைப் போன்று பறந்து விடுகின்றது. குழந்தைகளே, நீங்களே இதனை முயற்சி செய்து பாருங்கள்! அது மிகவும் இலகுவாக இருந்தபொழுதிலும், நினைவுசெய்வதற்கு நேரம் எடுக்கின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையிடமிருந்தும் தாதாவிடமிருந்தும் இதய ஆழத்திலிருந்தும் ஆழமான அன்புடனும் அன்பும், நினைவும், இரவு வந்தனங்களும். இனிமையிலும் இனிமையான நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை நமஸ்தே கூறுகின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. ஒருவருக்கொருவர் பெருமளவு அன்புடன் ஒன்றுசேர்ந்து வாழுங்கள். தந்தையின் செய்தியை எவ்வாறு அனைவரையும் சென்றடையுமாறு செய்யலாம் என்று ஒன்றுகூடி, தீர்மானியுங்கள்.
  2. இதுவே விநாச காலம். ஆகவே, ஒரேயொரு தந்தை மீது உண்மையான அன்பு கொண்டிருங்கள். ஆத்மாவான உங்களைத் தூய்மையாக்குவதற்கு, யோகம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் ஓர் உண்மையான இராஜரிஷியாகவும், உங்கள் அதிபதியாகவும் இருப்பதுடன், எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தையும் கொண்டிருப்பீர்களாக.


ஒருபுறத்தில், உங்களிடம் இராச்சியம் உள்ளது, மறபுறத்தில், நீங்கள் ஒரு ரிஷி, அதாவது, எல்லையற்ற விருப்பமின்மை உடையவர். அத்தகைய இராஜரிஷிகளால் தங்கள் மீதோ, ஏனைய மக்கள் மீதோ, உடைமைகள் மீதோ பற்று எதனையும் கொண்டிருக்க முடியாது. இது ஏனெனில், உங்களிடம் சுய இராச்சியம் உள்ளபொழுது, உங்கள் மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன, உங்களுக்கு விருப்பமின்மை இருக்கும்பொழுது, பழைய உலகைப் பற்றிய சிறிதளவு எண்ணம் கூட உங்களுக்கு இருக்க முடியாது. ஆகவே, உங்களை ஓர் இராஜரிஷி என்று கருதுவதெனில், நீங்கள் ஓர் அரசராக இருப்பதுடன், எல்லையற்ற விருப்பமின்மையையும் கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தமாகும்.

சுலோகம்:

நீங்கள் ஒரு விவேகமான நபராக இருக்கும்பொழுது, உங்கள் ஏனைய ஆதாரங்கள் அனைத்தும் துண்டிக்கப்படுவதற்கு முன்பாகவே, ஒரேயொரு தந்தையை அனைத்துக்கும் உங்கள் ஆதாரமாக ஆக்குகின்றீர்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

Post a Comment

0 Comments