Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
11-10-2022 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! ஆன்மீக பிராமணர்களாகிய உங்களுக்குள்
மிகுந்த அன்பு இருக்க வேண்டும். எப்படி அனைவருக்கும் தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுக்கலாம் என தங்களுக்குள் சந்தித்து வழி காணுங்கள்.
கேள்வி:
குழந்தைகள் எந்த நிச்சயத்தின் ஆதாரத்தில் தமது பாக்கியத்தை உயர்வாக ஆக்க முடியும்?
பதில்:
முதலில் இந்த நிச்சயம் புத்தியில் பதிய வேண்டும் - இங்கே படிப்பிக்கக்
கூடியவர் சுயம் பரமாத்மா, அவரிடமிருந்துதான் நாம் சௌபாக்கியத்தை எடுக்க வேண்டும், அப்போது படிப்பை தினம் தோறும் படிப்பார்கள் மற்றும் தமது உயர்வான பாக்கியத்தை
உருவாக்க இயலும். மற்றபடி ஸ்ரீமத் குழந்தைகளே நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும்
படிப்பை தினம் தோறும் படிக்க வேண்டும். ஒரு வேளை வகுப்பிற்கு
வரமுடியவில்லை என்றால் கூட வீட்டில் முரளியைப் படியுங்கள்.
பாடல்: அன்புக் கடல் நீ.....
ஓம் சாந்தி. ஆத்மாக்களாகிய நாம் புள்ளி போல் இருப்பவர்கள், என ஆத்மாக்கள் அதாவது குழந்தை கள் தெரிந்து கொண்டு விட்டனர். ஒரு நட்சத்திரத்தைப் போல இருக்கின்றனர். ஆனால் ஆத்மா தனது தந்தையை எப்படி உணர்ந்து கொள்வது? உலகில் யாருமே தன்னைப் பற்றியோ அல்லது தந்தையைப் பற்றியோ தெரிந்து கொள்ளவில்லை. நான் ஆத்மா புள்ளியாக இருக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு சிறியதாக உள்ளது, தந்தையும் கூட அவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கிறார். ஆத்மாவை விட தந்தை எதுவும் பெரிதாக இல்லை. சரீரம் சிறிது, பெரிதாக ஆகிறது. இப்போது நீங்கள் சிவபாபா வின் நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆத்மா சிறிய புள்ளியாக இருப்பது என யாரேனும் தெரிந்து கொண்டு விட்டிருக்கலாம், ஆயினும் அதில் 84 பிறவிகளின் நடிப்பு இருக்கிறது, இது அதிசயம் அல்லவா! எதுவரை ஆத்மா சரீரத்தை ஆதாரமாக எடுக்கவில்லையோ அதுவரை நடிப்பை நடிக்க முடியாது. அதுபோல பரமாத்மாவும் ஆத்மாக்களாகிய நம்மைப் போல சிறிய புள்ளியாக இருக்கிறார். ஆனால் தந்தை என ஏன் சொல்லப்படுகிறார்? ஏனென்றால் அவர் எப்போதும் தூய்மையானவர். அவர்கள் பரமாத்மாவைத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் அவரை தந்தை என சொல்கின்றனர். நீங்கள் புரிந்து நினைவு செய்வது போல அவர்களும் நினைவு செய்கின்றனர். பக்தர்கள் இவ்வளவு பேர் இருக்கின்றனர், அவர்கள் அனைவரின் பகவான் ஒருவர் ஆவார். அவர் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் (பதித பாவனர்) என சொல்லப்படுகிறார். எனவே தூய்மையற்றவர்கள் பலர், தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஒருவர் ஆவார். சாது, சன்னியாசி, மகாத்மாக்களும் அழைக்கின்றனர், அவரை இறைத் தந்தை எனச் சொல்கின்றனர். அதனால் அனைவரின் தந்தை யாகிவிட்டார் அல்லவா! தந்தை தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்குவதற்காக வர வேண்டியிருக்கிறது. தூய்மையடைவதற்கான உபாயத்தை (வழியை) அவர்தான் சொல்ல வேண்டியிருக்கிறது, ஏனென்றால் ஆத்மாவின் மீது பாவத்தின் சுமை ஏறிவிட்டிருக்கிறது. நாம் தூய்மையாய் இரு என எழுதி மட்டும் வைத்து விடுகிறோம், ஆனால் இப்படி சுலோகனை எழுதி வைப்பதால் எந்த பலனும் கிடையாது, ஏனென்றால் வெளியாட்கள் புரிந்து கொள்ள முடியாது. மற்றபடி உங்களுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு சுலோகனின் அவசியம் என்ன இருக்கிறது? இதன் அர்த்தம் தூய்மையாய் இரு, பாபாவை நினைவு செய் என்பதாகும். எதுவரை பிறருக்கு புரிய வைக்கவில்லையோ அதுவரை புரிந்து கொள்ள முடியாது. நினைவில் இருப்பதன் மூலம் தூய்மையடைய முடியும். ஹிஸ் ஹோலினஸ் (புனிதமானவர்) என சொல்கின்றனர். இது தூய்மையின் பட்டமாகும். சன்னியாசிகளை புனிதமானவர்கள் என சொல்கின்றனர், ஏனென்றால் விகாரத்தில் போவதில்லை. அவர்கள் தூய்மையாய் இருக்கின்றனர், பிரம்மத்தை நினைவு செய்கின்றனர், ஆனால் விகாரிகளிடம் பிறவி எடுக்க வேண்டியுள்ளது. தூய்மையாய் இருங்கள் மற்றும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என உங்களுக்கு சொல்லப் படுகிறது. சன்னியாசிகள் தம்மை கர்ம சன்னியாசி என சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் கர்மத்தின் சன்னியாசம் ஏற்படுவதில்லை. தேகம் இல்லாத போது கர்ம சன்னியாசம் என்பது ஏற்படுகிறது. தேகம் இல்லாமல் வீட்டில் (பரமதாமத்தில்) இருக்கின்றனர். இங்கே கர்மத்தின் சன்னியாசம் எப்படி ஏற்படும்? இவ்வாறு சொல்வதும் பொய்யாகும். இல்லறவாசிகள் செய்யும் கர்மங்களை நாங்கள் செய்வதில்லை என அவர்கள் சொல்கின்றனர். இல்லறவாசிகளின் கர்மங்கள் நிறைய இருக்கின்றன - யக்ஞம், தவம், தீர்த்த யாத்திரை செய்கின்றனர். அதனை சன்னியாசிகளும் செய்கின்றனர். மற்றபடி இந்த வித்தியாசம் மட்டும் இருக்கிறது, அவர்கள் வருமானத்தை சம்பாதித்து வீட்டில் உணவு சமைக் கின்றனர், சன்னியாசிகள் இதனைச் செய்வதில்லை. அவர்கள் கேட்டு வாங்கி உண்ணுகின்றனர், ஏனென்றால் அவர்களுடையது ஹடயோகம் ஆகும். ஹடயோகத்தின் மூலம் பரமாத்மாவைச் சந்திக்க முடியாது. தந்தை எப்போது வருகிறாரோ அப்போது தான் அவரை யாராவது சந்திக்க முடியும், மேலும் எதுவரை தந்தை வரவில்லையோ அதுவரை தூய்மையான உலகத்தின் ஸ்தாபனையும் ஏற்பட முடியாது. எவ்வளவு புரிய வைக்கிறார், ஆனாலும் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகள் செய்தியை எழுதுகின்றனர் - இவ்வளவு இவ்வளவு பேர் வந்திருந்தனர். இப்போது யார் யார் தமது சௌபாக்கியத்தை எடுக்கின்றனர் என்று பார்க்கலாம். நிறைய பேர் வருகின்றனர், ஆயினும் இவர்களை படிப்பிக்கக் கூடியவர் பரமபிதா பரமாத்மா, அவர் மூலம் நாம் சௌபாக்கியத்தை அடைய வேண்டும் என்பது புத்தியில் பதிவதில்லை. தந்தை பதிவேட்டையும் (ரிஜிஸ்டர்) பார்க்கிறார். சிலர் மாதத்தில் 8-10 நாட்கள் கூட வருகின்றனர், சிலர் வருவதும் கிடையாது, அதனை எழுதுவது கிடையாது. யாராவது வரவில்லை என்றால் அவர் முரளி படிக்கிறாரா இல்லையா? எந்த சூழலிலும் தினமும் படிக்க வேண்டும். ஜப சாஹேப், சுகமனி போன்றவற்றைச் சிறியதாக உருவாக்குகின்றனர், எப்படி இருந்தாலும் படிக்கும்படி இருக்க வேண்டும் என புரிந்து கொள்கின்றனர். அதனைப் படிப்பதன் மூலம் என்ன பிராப்தி ஆகும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எதுவும் கிடையாது. கொஞ்ச நேரத்திற்கு புத்தி சரியாக இருக்கக் கூடும். ஆனால் தந்தையுடன் யாரும் சந்திக்க முடியாது. மேலும் விகாரத்தில் மாட்டிக் கொண்டார்கள் என்றால் பிறகு அதன் மூலம் எந்த பிராப்தியும் கிடையாது. வினாச காலத்தில் விபரீத புத்தி எனச் சொல்கின்றனர், இப்போது வினாச காலம் ஆகும், வேறு யாரும் பரமாத்மாவை அறியவில்லை. எங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியைப் பற்றி தெரியாது என சொல்கின்றனர். ஆனால் நாடகத்தின் முதல் இடை கடைசியை தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! சத்யுகம் முதலில் மற்றும் கலியுகம் கடைசி என தந்தை புரிய வைக்கிறார். ஆக, மூன்று காலங்களையும், மூன்று உலகங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று உலகங்கள் என்பவை ஸ்தூல வதனம், சூட்சும வதனம், மூல வதனம்.... சாஸ்திரங்கள் அனாதியானவை எனச் சொல்கின்றனர், ஆனால் இராவண இராஜ்ஜியம் தொடங்கும் போதிலிருந்து சாஸ்திரங்களும் தொடங்குகின்றன என தந்தை புரிய வைக்கிறார். ஆக துவாபர யுகம் இடைக் காலம் என ஆகி விட்டது. அரை கல்பம் சத்யுகம், அரை கல்பம் கலியுகம். பாதிப் பாதியின் கணக்காகும். அவர்களுக்கு இடைக்காலத்தைப் பற்றி தெரியாது, ஏனென்றால் கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் எனச் சொல்லி விடுகின்றனர். தந்தையை அறியுங்கள், பிரம்மாகுமார், குமாரி ஆகுங்கள், அப்போது ஆஸ்தி கிடைக்கும் எனச் சொல்ல வேண்டும். முதலில் யாராவது வந்தால் கேளுங்கள் - எங்கே வந்திருக்கிறீர்கள்? பி.கு. விடம் வந்துள்ளோம் என்று சொல்வார்கள். நீங்கள் சொல்லுங்கள் - இவ்வளவு பிரம்மாகுமார், குமாரிகள் உள்ளனர் எனும்போது பிரம்மா தந்தையும் இருப்பார்! எவ்வளவு சேவை மையங்கள் உள்ளன ! அளவற்ற பிரம்மா குமார், குமாரிகள் இருக்கின்றனர்! இவ்வளவு குழந்தைகள் ஒரு தந்தைக்கு எப்படி இருக்க முடியும்? பிரஜாபிதா என எழுதப்பட்டுள்ளது எனும்போது இவ்வளவு பிரம்மாகுமார், குமாரிகள் இருக்கின்றனர். இப்படி இப்படியாக புரியவைத்து அவர்களை நிற்க வைக்க வேண்டும். பிறகு பிரஜாபிதா பிரம்மா யாருடைய குழந்தை என சிந்தித்துப் பாருங்கள். இவ்வளவு குழந்தைகளைப் படைப்பது என்பது பரமாத்மாவின் வேலை அல்லவா! எனவே பரமாத்மா வருவார் அல்லவா! நீயே தாயும் தந்தையும் என பாடப்பட்டுள்ளது எனும்போது தந்தை பிரம்மா ஆகிவிட்டார் அல்லவா! ஆக பரமாத்மா பிரம்மாவின் மூலம் படைக்கிறார், மாற்றம் செய்கிறார். ஆஸ்தி கொடுப்பதற்காக தத்தெடுக்கிறார். எப்படி தூய்மைப் படுத்துகிறார்? நினைவின் மூலம். அனைத்து தர்மங்களையும் மறந்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என சொல்கிறார். அனைவருமே அழைக்கின்றனர், நான் ஞானம் நிறைந்த, ஆனந்தம் நிறைந்த, விடுவிக்கக் கூடிய, வழி காட்டியாக இருக்கிறேன். ஆக சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். சுகம் எங்கே உள்ளது? சுக தாமத்தில். இப்போது தந்தை சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார், பிறகு வருகிறோம் சுக தாமத்திற்கு. இந்த விஷயங்களை எப்படி நினைவு செய்வது? தினம்தோறும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், பிறருக்கு புரிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும், அப்போது விஷயங்கள் புத்தியில் வந்தபடி இருக்கும். பிறருக்குப் புரிய வைக்கும்போது அவரிடமிருந்து கருத்தை எழுதி வாங்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாய் இருக்கும் பரமாத்மாவின் முகவரியை எழுதி வாங்க வேண்டும். தந்தையாய் இருப்பவர் சிவன், எனவே தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுப்போம். ஆக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் யார் முயற்சி செய்வது? ஆகையால் குழந்தைகள் தாம் எழுந்து நின்று பிறகு மற்றவர்களையும் எழுந்து நிற்கச் செய்ய வேண்டும் மற்றும் சேவைக்காக திட்டங்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். எப்படி மிலிட்டரியில் பெரிய கமாண்டர்கள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்கின்றனர் அல்லவா! அதனால் இங்கும் கூட குழந்தைகள் சந்திக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? தங்களுக்குள் சந்திப்பதே இல்லை. உண்மையில் பிராமணர்களாகிய உங்களுக்கு, தங்களுக்குள் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். எப்படி பிறருக்கு புரிய வைப்பது என ஏதாவது வழியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பாருங்கள்! இலட்சுமி நாராயணருக்கு எத்தனை கோவில்கள் இருக்கின்றன! எனவே கோவில்களை கட்டுபவர்களை சந்திக்க வேண்டும், நீங்கள் இந்த கோவிலை கட்டியிருக்கிறீர்கள், ஆனால் இவர்கள் எப்படி இராஜ்யத்தை அடைந்தனர் எனத் தெரியுமா? பிறகு இராஜ்ஜியத்தை எப்படி இழந்தனர்? ஸ்ரீகிருஷ்ணரின் படம் மிகவும் நன்றாக இருக்கிறது, இதில் இருக்கும் 84 பிறவிகளின் கதை மிகவும் நன்றாக உள்ளது. இந்தப் படத்தை மட்டும் பெரியதாக உருவாக்க வேண்டும். பாபா சொல்கிறார் - யாராவது வரும்போது நீங்கள் கீதையைப் படித்திருக் கிறீர்களா என யுக்தியுடன் கேளுங்கள். பிறகு கீதையின் பகவான் யார் என்பதைக் கூறுங்கள். ஆக இப்படி யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். நீயே தாயும் தந்தையும். . . என சொல்கின்றனர் அல்லவா! ஆக இந்த பிரம்மா தாய் என ஆகிவிட்டார், எனவே இவருடன் சம்பந்தத்தை வைக்க வேண்டும். ஒருவேளை அவரிடமிருந்து அன்பு விலகி விட்டது என்றால் ஆட்டம் முடிந்தது. தந்தையிடம் இருந்து எப்படி ஆஸ்தியை அடைவீர்கள்? உங்களின் சண்டை பழைய எதிரியுடன் ஆகும். இராவணனுடன் கூட யுத்தம் இருக்கும் என யாருக்கும் தெரியாது. உண்மையின் படகு ஆடலாம், அசையலாம் ஆனால் மூழ்காது என்று சொல்கின்றனர். ஆக எவ்வளவு ஆடுகிறது! மற்ற சத்சங்கங்களில் ஆடக் கூடிய விசயம் எதுவும் கிடையாது. இங்கேயோ மாயையுடன் யுத்தம் நடக்கிறது. எதுவரை தந்தையைப் புரிந்து கொள்ளவில்லையோ அதுவரை அவர்கள் என்னதான் எழுதிக் கொடுத்தாலும் கிளித் தொண்டையுடையவர்களாக ஆகவில்லை. காட்டுக் கிளி வந்தது, சென்றது. அல்லாவைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பிரஜைகள் அளவற்றவர்கள் இருக்கின்றனர், மற்றபடி இராஜ்ஜியத்திற்காக யாரும் எழுந்து நிற்பதில்லை. ஜோதியில் பலியாக வேண்டும், அது மிகவும் கடினமாக உள்ளது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
இரவு வகுப்பு :-
குழந்தைகளே! தந்தையை நினைவு செய்யுங்கள் என குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் வழி கிடைத்திருக்கிறது. பாபா நேரமே கிடைப்பதில்லை என்று குழந்தைகள் சொல்கின்றனர். இப்போது நேரம் எங்கே சென்று விடுகிறது? கண்டிப்பாக மாயை உங்களின் நேரத்தை எடுத்துக் கொண்டு விடு கிறது. மாயையும் கூட மிகவும் கூர்மையானது, அது தந்தையை நினைவு செய்வதில் உங்களுக்கு நேரத்தைக் கொடுப்பதில்லை, எனவேதான் சொல்கிறீர்கள் - பாபா, முழு நாளில் அரை மணி நேரம், 20 நிமிடங்கள் நினைவில் இருந்தேன். சிலர் முழு நாளில் இரண்டு மணி நேரம் கூட தந்தையை நினைவு செய்திருப்பார்களா என்பதே கடினம். நான் 2 மணி நேரம் நினைவு செய்தேன் என யார் நினைக்கிறீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். அந்த ஸ்தூல நினைவு, பழைய நினைவு நடந்த படிதான் வருகிறது. இவரோ நிராகாரமானவர், இவருக்கு தனக்கென கண், காது எதுவும் கிடையாது. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என குழந்தைகளுக்குச் சொல்கிறார். தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். ஆக எத்தனை மணி நேரம் நினைவில் இருக்கிறீர்கள் என பாபா கேட்டுக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் விளையாடச் சென்றார்கள் என்றால் ஆசிரியரை நினைவு செய் கின்றனர். வீட்டில் படித்தார்கள் என்றாலும் ஆசிரியரின் நினைவு இருக்கும். ஆக அது ஸ்தூலமான நினைவு ஆகும். இதில் சிறிது கஷ்டம் உள்ளது, ஆக பாபா கேட்கிறார் - தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை 2 மணி நேரம் நினைவு செய்ய முடிந்தவர்கள் கை உயர்த்துங்கள்? வெட்கப் படாதீர்கள், சரியாகச் சொல்லுங்கள்.
நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், பாபா முரளியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றாலும் புத்தி வேறு எங்கோ சென்று விடுகிறது அல்லவா ! இவ்வளவும் புத்தியில் தாரணை ஆவதில்லை. இங்கே எப்படி அதிகாலையில் பாபா புரிய வைக்கிறார் எனும்போது அந்த ஒரு மணி நேரம் பாபாவை நினைவு செய்கிறீர்களா அல்லது புத்தி வெளியே சென்று விடுகிறதா? வரிசைக்கிரமமான முயற்சிக்குத் தகுந்தாற்போல் புத்தி எங்காவது சென்று விடுகிறது. முழுமையாகக் கேட்பதில்லை. ஒருவேளை முழுமையாக அமர்ந்து கேட்டால், எழுதிக் கொண்டிருந்தால் பாபா சொல்வார் - ஆம், இவருடைய நினைவு சரியாக உள்ளது. ஆக கேட்கும்போது கவனம் கொடுக்க வேண்டும் மற்றும் அனைத்தையும் எழுத வேண்டும். ஒரு வேளை தொடர்பு துண்டிக்கப்பட்டால் விசயங்கள் (பாய்ண்ட்கள்) மறந்து போய் விடும்.
குழந்தைகளே! மாரடைப்பால் ஏற்படும் (ஐஹழ்ற்ச்ஹண்ப்) மரணம் மிகவும் இனிமையான மரணம் ஆகும். இதில் உன்னுடையது, என்னுடையது என்று எதுவும் இல்லை. அமர்ந்தபடியே இவர் விழுந் தார், மயக்கமடைந்தார், முடிந்தது. அவ்வளவுதான். பிறகு விழிப்பே வரவில்லை. இது மிகவும் நல்ல மரணம் ஆகும். மற்ற மனிதர்கள் அழுது புலம்புவார்கள் மேலும் நீங்கள் குஷியடைவீர்கள், ஆஹா ! இவரின் மரணம் மிகவும் சகஜமாக நடந்தது, இவருக்கு எந்த துக்கமும் ஏற்படவில்லை. ஒருவேளை மரணம் என்றால் இப்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மருந்து, நர்ஸ், அது இது என நிறைய இருக்கிறதல்லாவா! ஆகையால் அமர்ந்தபடியே தனது இந்த பழைய செருப்பை விட்டு விட்டு, கர்மாதீத நிலையடைந்து, அப்படியே சரீரத்தை விட வேண்டும் - இது அனைத்தை விடவும் நல்லதாகும். நீங்கள் இன்னும் போகப் போக பார்க்கப் போகிறீர்கள், அனாயாசமாக குண்டுகளை வீசுவார்கள் மற்றும் அனைவரும் அமர்ந்தபடியே சென்று விடுவார்கள். முகமும் மகிழ்ச்சியாக இருக்கும். சில சமயம் நல்ல மரணம் ஏற்பட்டது என்றால் பார்ப்பவர்கள் சொல்வார்கள் - இவர் விழித்திருப்பது போல்தான் தெரிகிறது, இவர் மகிழ்ச்சியாக இருக்கிறார், இவர் இறந்து விட்டார் என யாருமே சொல்ல மாட்டார்கள். ஆத்மா மகிழ்ச்சியடைந்து செல்கிறது அல்லவா, ஆத்மாவில் மகிழ்ச்சி இருந்தது என்றால் முகத்தில் வெளிப்படையாகத் தெரியும் அல்லவா ! ஆத்மா எதுவும் அழிந்து போவதில்லை, ஆத்மா சரீரத்தை விடுகிறது. ஆக மிகவும் குஷியுடன் இந்த சரீரத்தை சிரித்தபடி விட்டு விடும், இதற்கு கர்மாதீத (கர்மங்களை வென்ற முழுமை) நிலை என்று சொல்லப்படும். அதுதான் இவ்வளவு உயர்வாக பாடப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும் சரீரத்தைப் பற்றிய கவலை எதுவுமே இல்லை, வேறு எந்த பொருளின் நினைவும் வரக் கூடாது, இது அனைத்திலும் இனிமையான, தன்னிச்சையுடன் சரீரம் விடுதல் என்று சொல்லப் படுகிறது, ஆகையால் சர்ப்பத்தின் (பாம்பின்) உதாரணத்தையும் கொடுக்கிறார். சத்யுகத்தில் இப்படித் தான் குஷியுடன் சரீரத்தை விடுவார்கள். ஆக பயிற்சி இங்கிருந்து தொடங்குகிறது, பின்னர் அந்த பயிற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை எவ்வளவு அன்புடன் நினைவு செய்கிறீர்கள்! ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. மோஸ்ட் பிலவட், பரம பிரியமான, மிகவும் இனிமையானவர். உலகினரை பரம பிரியமான, மோஸ்ட் பிலவட் எனச் சொல்ல முடியாது. குழந்தைகளே! நான் உங்களுடைய தந்தையாகவும் இருக்கிறேன், ஆசிரியராகவும் இருக்கிறேன், குருவாகவும் இருக்கிறேன் என தந்தை சொல்கிறார். நீங்கள் எப்போதாவது ஆசிரியரை மறந்துவிட்டீர்கள் என்றால் தந்தையை நினைவு செய்ய முடியும். தந்தை கைடு எனப்படுகிறார், கைடு என்பவர் வழிகாட்டி எனவும் சொல்லப்படுகிறார். அவர் துக்கத்திலிருந்து விடுவிப்பவர், சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்பவர், அதன் பின் இருப்பது சுகதாமம் ஆகும். ஆக உங்களுக்கு இந்த ஞானத்தின் புல் கிடைக்கிறது, எப்படி பசுவின் வாய் அசை போட்டபடி இருக்கிறது, அது போல இதனை மனன சிந்தனை செய்தபடி இருங்கள். உங்களின் வாய் அசை போட வேண்டியதில்லை, மற்றபடி உள்ளுக்குள் அனைத்தையும் நினைவு செய்ய வேண்டும். உங்களைப் போல்தான் நானும் (பிரம்மா பாபா). எனக்கோ இன்னும் கூட குறைவான நேரமே கிடைக்கிறது, ஏனென்றால் என்னுடைய புத்தியின் தொடர்பு வெளியில் நிறைய செல்கிறது, சில நேரம் யாருடைய கடிதமாவது வருகிறது, சில நேரம் இன்னாருடைய பிரச்சினை, இது, அது, . . . எனவே முழு நாளும் அவற்றின் மீது புத்தி செல்கிறது. ஆனாலும் குழந்தைகளை விட பாபாவுக்கு சகஜமாக இருக்கலாம், ஏனென்றால் கூடவே இருக்கிறார். பாபா உணவு அருந்த அமரும்போது நினைத்துக் கொள்கிறார், நல்லது, நான் பாபாவை நினைவு செய்கிறேன், 2 - 3 நிமிடங்கள் நினைவு இருக்கும், பிறகு மறந்து போய் விடுகிறேன். நினைவு காற்றைப் போல பறந்து போய் விடுகிறது. குழந்தைகளே! முயற்சி செய்து பாருங்கள். சகஜமாக இருந்த போதும் நினைவு செய்வதற்கு நேரம் எடுக்கிறது அல்லவா! நல்லது!
இனிமையிலும் இனிமையான, காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை மற்றும் தாதாவின் இதயம் நிறைந்த அன்புடன் அன்பு நினைவுகள் மற்றும் இரவு வணக்கம். இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
தங்களுக்குள் மிகுந்த அன்புடன் இருக்க வேண்டும், எந்த யுக்தியால் ஒவ்வொருவருக்கும் தந்தையின் செய்தியை கொண்டு சேர்க்கலாம் என்பதை தமக்குள் கலந்தாலோசித்து வழிகளைக் காண வேண்டும்
2. இது வினாசத்தின் சமயமாகும். ஆகையால் ஒரு தந்தையிடம் உண்மையான அன்பு வைக்க வேண்டும். யோகத்தின் மூலம் ஆத்மாவைத் தூய்மையாக்க வேண்டும்.
வரதானம்:
சுய இராஜ்யத்துடன்
கூடவே எல்லையில்லாத
வைராக்கிய உள்ளுணர்வு
தாரணை செய்யக்
கூடிய உண்மையிலும்
உண்மையான இராஜரிஷி
ஆகுக !
ஒரு பக்கம் இராஜ்ஜியம் மேலும் இன்னொரு பக்கம் ரிஷி அதாவது எல்லையில்லாத வைராக்கியாக இருப்பவருக்கு
மனிதர்களிடமோ, பொருட்களிடமோ
பற்றுதல் இருக்க முடியாது ஏனெனில் சுய இராஜ்யம் என்றாலோ மனம், புத்தி, சம்ஸ்காரம் அனைத்தும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் மேலும் வைராக்கியம் உள்ளது என்றால் பழைய உலகத்தின் மீது எண்ணத்தளவில் கூட பற்றுதல் இருக்க முடியாது. எனவே சுயம் தங்களை இராஜரிஷி என்று உணர்ந்திருப்பது
என்றால் இராஜா உடன் கூட கூடவே எல்லையில்லாத வைராக்கியம் உடையவர் ஆவது.
சுலோகன்:
யார் அனைத்து ஆதாரங்களும் விடுபட்டு போவதற்கு முன்பே ஒரு தந்தையை தனது ஆதாரமாக ஆக்கிக் கொண்டு விடுகிறார்களோ அவர்களே அறிவாளி.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments