Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
29-07-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களைப் போன்றவர்களுக்கு விமோச்சனம் அளிக்க
வேண்டும். பாபா மாதாக்கள் மீது ஞானக் கலசத்தை வைத்துள்ளார். அதனால் மாதாக்கள் மீது
பெரும் பொறுப்பு உள்ளது.
கேள்வி:
மாதாக்கள் நீங்கள் எந்த ஒரு விசேˆமான காரியத்திற்கு நிமித்தமாக இருக்கிறீர்கள்? உங்கள் மீது எந்த ஒரு பொறுப்பு
உள்ளது?
பதில்:
நீங்கள் இந்த தூய்மையற்ற உலகத்தை தூய்மையான உலகமாக, நரகத்தை சொர்க்கமாக மாற்றுவதற்கு
நிமித்தமாக இருக்கிறீர்கள். பாபா, மாதாக்களாகிய உங்கள் மீது ஞானக் கலசத்தை வைத்துள்ளார். அதனால் அனைவருக்கும்
சத்கதி அளிப்பதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் சிவசக்தி சேனைகள்.
நீங்கள் இப்போது உங்களைப் போன்றவர் களுக்கு நன்மை செய்ய வேண்டும். அனைவரையும்
தூய்மையற்ற நிலைக்கு செல்வதிலிருந்து காப்பாற்ற வேண்டும். விலை மாதர்களையும் கூட
சிர்திருத்த வேண்டும்.
பாடல்: இரவு நேரப் பயணியே! களைத்துப் போகாதே! விடியல் தூரமில்லை.....
ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். இப்போது செல்வோம்
வதனத்தின் பக்கம் என்றால் சுகதாமத்தின் பக்கம். சுகதாமத்தின் ஸ்தாபனைக்காக
மாதாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றனர். ஞான அமிர்தத்தின் கலசம் மாதாக்கள் மீது
வைக்கப் பட்டுள்ளது. எப்படி திறப்பு விழா அல்லது ஸ்தாபனையின் விழா நடத்தப்படுகிறது
இல்லையா? ஆதுபோல, பரமபிதா பரமாத்மா வைகுண்டத்தின்
திறப்பு விழாவை மாதாக்கள் மூலமாகச் செய்விக்கிறார். கலசத்தை மாதாக்கள் மீது தான்
வைக்கிறார். ஆகவே குழந்தைகள் இப்போது நிமிர்ந்து நிற்க வேண்டும். சக்தி சேனை
அல்லவா? குழந்தைகள் மீது பாபா பொறுப்பை
வைக்கிறார். அனைவருக்கும் சத்கதி அளியுங்கள் என்ற பொறுப்பை குருமார் களுக்கு
கொடுத்துள்ளார் என்பதெல்லாம் கிடையாது. இப்போது நீங்கள் அறிந்து கொண்டு
விட்டீர்கள், சத்கதி அளிப்பது இந்த மாதாக்களின்
வேலை. சத்கதி கிடைப்பது ஞானத் தினால். ஞானத்தின் கலசம் மாதாக்களுக்குக்
கிடைத்துள்ளது. முதன்முதலில் காட்டுகின்றனர் - ஜகத் அம்பா மீது கலசம்
வைக்கப்பட்டுள்ளது. சாஸ்திரங்களிலோ லட்சுமியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது
மாறுபாடாகி விட்டுள்ளது. மாதாக்களாகிய உங்கள் மீது கலசம் வைக்கப்பட்டுள்ளது. காளி
மீது கலசம் வைக்கப்பட்டுள்ளது. காளிக்கு மகிமை உள்ளது இல்லையா? சித்திரங்களோ அநேகம்
உருவாக்கியுள்ளனர். அதனால் இப்போது மாதாக்கள் மீது கலசம் வைக்கப் பட்டுள்ளது
ஏனென்றால் இச்சமயம் உங்களைப் போன்ற மாதாக்களுக்குக் கெட்ட கதி (துர்கதி). நீங்கள்
உங்களை சிவசக்திகள் எனச் சொல்லிக் கொள்கிறீர்கள். நீங்கள் குப்த சேனைகள் உங்கள்
புத்தியில் ஊக்கம் எழ வேண்டும். நீங்கள் உங்களுடைய சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறீர்கள். வந்தே மாதரம் என்றும் பாடப்பட்டுள்ளது. பாரத கண்டத்தின்
பெயர் தான் பாடப்படுகிறது. பாரத மாதாவுக்கு ஜே எனச் சொல்கின்றனர். அதாவது
பாரதத்தில் வசிக்கின்ற மாதாக்களுக்கு ஜே! எந்த மாதாக்கள் உலகத்தை
சொர்க்கமாக்குகின்றனரோ, அத்தகைய மாதாக்களுக்கு ஜே! அவர்கள்
பிறகு மறந்து விட்டு பாரத மாதா என்று மட்டும் சொல்லி விடுகின்றனர். பாபா, மாதாக்களாகிய உங்கள் பெயரை விளங்கச்
செய்கிறார். சொர்க்கத்தின் திறப்பு விழாவை நடத்தச் செய்கிறார். நீங்கள்
சொல்கிறீர்கள், சிவபாபா, மாதாக்களாகிய எங்கள் மூலம் உலகத்தை
சொர்க்கமாக்குகிறார். பீஷ்ம பிதாமகர் முதலானவர்களுக்கும் கூட நீங்கள் ஞான அம்பு
எய்திருக்கிறீர்கள். ஆக, பாபா சொல்கிறார், ஞான பாணம் எய்வதற்கு பயப்படா
தீர்கள். படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும். சேனையாகிய
நீங்கள் தான் நிமித்தமாகி இருக்கிறீர்கள். மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள் நீங்கள்.
சரஸ்வதிக்குப் பெரிய வீணை கொடுத்துள்ளனர். ஏனென்றால் அவர் அனைவரை விடவும்
தீவிரமானவர். உலகமோ இதை அறிந்திருக்கவில்லை. நீங்கள் அறிவீர்கள், இப்போது நாம் கருப்பிலிருந்து
வெள்ளை யாக (தூய்மையாக) மாறுகிறோம். காளியிடம் செல்வோம். அவர்களோ அம்மா-அம்மா
என்று சொல்லி இவ்வளவு அழுகின்றனர்- கேட்கவே வேண்டாம். எதுவுமே நடப்பதில்லை.
கல்கத்தா வில் காளிக்கு மிகுந்த மகிமை உள்ளது. இப்போது இந்த பிரம்மாவோ தாய்(பெண்)
இல்லை. அதனால் கலசம் பிறகு மாதாக்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் அம்மாவின் சேனை
(சக்தி சேனை. நீங்கள் சொல்கிறீர்கள், பாபா, யாராக இருக்கிறேனோ. எப்படி
இருக்கிறேனோ, அப்படியே நான் உங்களுடையவன். இவரும்
சொல்கிறார், எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் என்னுடையவர்கள்.
ஆனால் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நாயகிகளோ அனைவரும் தாம். அனைவரும் சொல்வார்கள், நாம் ஈஸ்வரனு டையவர்கள். இப்போது
உங்களுக்கு விளக்கங் களும் கொடுக்கப்படுகிறது ,சிவபாபாவுக்கு அனைவரும் குழந்தைகள். இதை நிருபிக்க வேண்டும். அனைத்திலும்
முதன்முதலானது சிவனின் மகிமை, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அவர் தான், அவரை தான் பகவான் என்கிறோம். சிவபாபா தான் ஆஸ்தி தருகிறார். அவர் நிராகார், அனைத்து ஆத்மாக்களின் தந்தை. ஆக, இப்போது பெண் குழந்தைகள் நீங்கள்
உங்களைப் போன்றவர்களுக்கு விமோச்சனம் அளிக்க வேண்டும். மாதாக்கள் மீது தான்
பொறுப்பு உள்ளது. வந்தே மாதரம் என்று பாபாவும் சொல்கிறார், சிவபாலகர் என்றால் வந்தே மாதரம்
என்று சொல்ல வேண்டும் இல்லையா? இவர் உங்களுக்கு வந்தனம் செய்கிறார், நீங்கள் அவருக்குச் செய்ய வேண்டும். அதிசயம் இல்லையா? இதுவும் டிராமாவில்
விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அறிவீர்கள், சிவபாபா சாட்சாத்காரமும் செய்விக்கிறார். வீட்டில் அமர்ந்தவாறே மயில்தோகைக்
கிரீட தாரியின் சாட்சாத்காரம் கிடைக்கிறது. ஆக, கிரீடமோ அனைவருக்கும் உள்ளது. இது ஒரு டிரேட் மார்க்காக (அடையாளமாக)
வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணருக்கு இவ்வளவு பெரிய கிரீடம் கொடுத்துள்ளனர்.
உண்மையில் அவர் இவ்வளவு பெரிய கிரீடம் அணிவதில்லை. பாபா அமர்ந்து மாதாக்களுக்கு
நோக்கம்-குறிக்கோளின் சாட்சாத்காரம் செய்விக்கிறார். நீங்கள் இளவரசருக்கு அம்மா
ஆவீர்கள். கிருஷ்ணருக்கு அம்மாவாகவோ அனைவரும் ஆக மாட்டார்கள். இளவரசர், இளவரசிகளோ அநேகம் பேர் இருப்பார்கள்
இல்லையா? இளவரசரின் அம்மா என்றால்
மகாராஜா-மகாராணி ஆவீர்கள். உங்களுடைய நோக்கம் குறிக்கோள் எவ்வளவு நல்லதாக உள்ளது!
உங்கள் மடியில் இளவரசர் இருப்பார்.
ஆக, பெண் குழந்தைகளாகிய உங்களுக்கு அதிக
பொறுப்பு உள்ளது. உங்களுடைய குழு மிகப் பெரியதாக இருக்க வேண்டும். மெமொராண்டம்
(காரியம் செய்வதற்கான குறிப்புகள்) தயார் செய்ய வேண்டும். நாங்கள் சிவசக்தி பாரத
மாதாக்கள். நாம் பாரதத்தைக் கல்பத்திற்கு முன்பும் கூட ஸ்ரீமத்படி சொர்க்கமாக
ஆக்கியிருந்தோம். மாதாக்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாக இருக்க வேண்டும். தற்போது
உங்களைப் போன்ற மாதாக்கள் மீது விˆத்திற்காக (விகாரம்) அதிகமாக அடி விழுகிறது. ஆக, எதிர்த்துப் போராட வேண்டும். அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டும் - நாங்கள்
கல்ப-கல்பமாக பாரதத்தைத் தூய்மையின் பலத்தினால் சொர்க்கமாக ஆக்குகிறோம்.
எங்களுக்கு இவர்கள் விக்னங்களை ஏற்படுத்துகிறார்கள். நாங்கள் தூய்மையாக இருக்க
விரும்புகிறோம். கூடவே இந்த ஆண்களும் சொல்வார்கள், தூய்மை நல்லது என்று. மக்கள், மருந்துகள் முதலியவற்றால் குழந்தை பிறப்பதை தடை செய்கின்றனர். ஆனால் இவற்றால்
எதுவும் நடக்காது. பாபா புரிய வைக்கிறார், பவித்திரமாகுங்கள். மாதாக்களாகிய உங்களோடு உதவியாளர்களாக கோபர்களும்
(சகோதரர்கள்) உள்ளனர். பெண் குழந்தைகள் துணிந்து நிற்க வேண்டும். தங்களின்
சிறப்பைக் காட்ட வேண்டும். பகவான் தந்தை தூய்மை யாகுங்கள் என சொல்கிறார் என்று
அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டும். அனைவருமே சிவபாபாவின் குழந்தைகள் தான். ஆகவே
சகோதர-சகோதரன் ஆகின்றனர். இப்போது புது உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
சிவபாபாவின் குழந்தை, பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள்
சகோதர-சகோதரிகள் விகாரத்தின் கொடுக்கல்-வாங்கல் செய்ய இயலாது. இது யுக்தியாகும்.
கல்பத்திற்கு முன்பும் கூட பாபா இது போலத்தான் பவித்திரமாக ஆக்கி யிருந்தார். நாம்
மாயா இராவணன் மீது வெற்றி கொள்கிறோம். இந்த இராவணன் தான் பாரதத்தின் பெரிய விரோதி
ஆவான். இராவணனிடம் தோல்வி மேல் தோல்வி அடைந்தோம். இராமர் வந்து இவன் மீது வெற்றி
பெறச் செய்கிறார். ஆனால் இது வரையிலும் அநேகருக்கு கணவர் முதலானவர் மீது அப்படி
ஒரு மோகம் உள்ளது, கேட்கவே வேண்டாம். இப்போது மாதாக்
களாகிய உங்களுக்குக் கலசம் கிடைக்கிறது. புரிய வைக்க வேண்டும் - நாங்களோ
சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறோம். அவர்கள் கலசத்தை லட்சுமிக்குக்
காட்டியுள்ளனர். ஆனால் லட்சுமியோ பவித்திரமாகவே இருப்பவர். அவர் ஞானக்கலசத்தை
வைத்துக் கொண்டு என்ன செய்வார்? ஞானத்தின் கலசம் ஜெகதம்பா மீது உள்ளது. இப்போது பரமபிதா பரமாத்மா கட்டளை
இட்டுள்ளார் - காமம் மகா சத்ரு(எதிரி) யார் இதன் மீது வெற்றி அடைகிறார்களோ, அவர்கள் தான் சிரேஷ்டாச்சாரி
(உயர்ந்தவர்) ஆகி சொர்க்கத்தின் எஜமானர் ஆவார்கள்.
குழந்தைகளாகிய உங்களுக்குள் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். பிரம்மாகுமார்
குமாரிகளின் சேனை ஒன்றாக ஒருமித்து இருக்க வேண்டும். சிலருக்கோ யார்-யார் எங்கே
இருக்கிறார் என்று தெரிவதில்லை. அனைத்து சென்டர்களின் குழந்தைகளையோ அழைக்கவும்
முடியாது. மாதாக்களுக்கு பந்தனம் அதிகம் உள்ளது. குழந்தைகளையும் பராமரிக்க
வேண்டும். இல்லை யென்றால் ஆண்கள் ரிப்போர்ட் செய்து விடுகின்றனர். ஆண்கள் சென்று
விட்டார்கள் என்றால் வீடு-வாசலை யார் பராமரிக்கிறார்கள்? நீங்கள் காண்பிக்க வேண்டும் -
அவர்களோ ஹடயோகம் கற்பிக்கின்றனர். நாங்கள் இராஜயோகம் கற்பிக்கிறோம். அதனால்
எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். பாபா புரிய வைத் திருந்தார், நீங்கள் விலை மாதர்களுக்கும் கூடப்
புரிய வையுங்கள் - இந்த அசுத்தத் தொழிலை இப்போது நிறுத்தி விடுங்கள், நீங்கள் சொர்க்கத்தின் வாசலாக
ஆகுங்கள். நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்து காட்டுவீர்களானால், உங்கள் பெயர் மிகவும் புகழ் பெறும்.
அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். இந்த சங்கம யுகமே நன்மையின் யுகம்.
தூய்மையின் மீது அதிக கவனம் வைக்க வேண்டும். இந்த விலை மாதர்கள் மீது இரக்கம்
கொள்ள வேண்டும். அரசாங்கமும் கூட இவர்களை ஏதேனும் நற்பணியில் ஈடுபடுத்திக் கொண்டே
இருக்கின்றனர். நீங்கள் அந்த மாதிரி புரிய வையுங்கள், செய்தித் தாளிலும் போடப்பட வேண்டும்
- பிரம்மாகுமார்-குமாரிகளோ விலை மாதர்களுக்கு கூட ஞானம் கொடுத்து இந்த அசுத்தத்
தொழிலில் இருந்து விடுவிக்கின்றனர். ஏனென்றால் காமம் என்பது மகா சத்ரு. இதனால்
நீங்கள் பதீத், அசுத்தமாக ஆகிறீர்கள். இந்த உலகமே
பிரஷ்டாச்சாரி (மிகத் தாழ்ந்தது) இல்லையா? பாபா வந்து மாதாக்களை எழுந்து நிற்கச் செய்கிறார். கோபர்களின் வேலை உதவியாளர்
ஆவது. யார் முயற்சி செய்கின்றனரோ, அவர்கள் உயர்ந்த பதவி பெறுவார்கள். தன்னைப் போன்றவர்கள் மீது இரக்கம் வைக்க
வேண்டும். இதன் பெயரே வேஷ்யாலயம் (விஷம் நிறைந்த உலகம்). பாபா வந்து சிவாலயமாக
ஆக்குகிறார். உண்மையில் இவை ஞான விசயங்களாகும். பாபா இந்த மனித உடலில் வந்து
உங்களுக்கு ஞானம் சொல்கிறார். நீங்கள் அறிவீர்கள், நாம் இப்போது சுடுகாட்டினர் (கப்ரிஸ்தானி) என்ற நிலையில் இருந்து
தேவலோகத்தினராக (பரிஸ்தானி) ஆகிக் கொண்டி ருக்கிறோம். இது ஞான மானசரோவர்.
ஞானத்தில் மூழ்கி எழுந்து கொண்டிருக்கின்றனர். மற்றபடி தண்ணீரின் விசயம் கிடையாது.
தீர்த்த ஸ்தலங்களுக்குச் சென்று அதிக முயற்சிகள் செய்கின்றனர். பாதயாத்திரை
செல்வது, பொருள்கள் முதலியவற்றைத் தூக்கிச்
சுமப்பது என்று அதிக முயற்சிகள் செய்கின்றனர். இப்போது நீங்கள் புரிந்து
கொண்டீர்கள் - பாபா மனித உடலில் அமர்ந்து ஞான ஸ்நானம்
செய்விக்கிறார். மற்றபடி பரி (தேவதை) முதலிய யாரும் கிடையாது. உங்களை ஞானப்
பரிகளாக ஆக்குபவர் பாபா. தாரணை செய்வதற்கான எவ்வளவு நல்ல-நல்ல விசயங்கள் உள்ளன!
பெண் குழந்தைகள் துணிந்து நிற்பார்களானால், அதிக காரியங்கள் செய்ய முடியும். மாதாக்களாகிய நீங்கள் தான் சேவைக்காகச் செல்ல
வேண்டும். சொல்லுங்கள், எங்கெல்லாம் விலை மாதர்கள் உள்ளனரோ, அவர்களின் குழுவை ஏற்பாடு
செய்யுங்கள். பெரிய-பெரியவர்களுக்கெல்லாம் புரிய வையுங்கள். ஆனால் வெளியில்
மட்டும் ஒருவரைத்தவிர எங்களுக்கு வேறு யாரும் இல்லை என்று சொல்லிக் கொண்டு, உள்ளுக்குள் யாரோ கவர்ந்திழுக்கும்
படியாக இருக்கக் கூடாது. அந்த மாதிரி இருந்தாலும் வேலைக்காகாது. பாபாவின் உண்மையான
குழந்தையாக ஆக வேண்டும். அந்த மகிழ்ச்சி நிறைந்த முகம் எங்கே? அட! எல்லையற்ற தந்தையை
சந்திப்பதற்காக செல்கிறீர்கள் என்றால் ஓடோடி வந்து குஷியோடு சந்திக்க வேண்டும்.
நாமோ போய் பாபாவின் மடியின் மாலை ஆவோம். களைத்துப் போகக் கூடாது. உங்களுடைய நினைவு
தான் ஓட்டம். அது உலகாயத ஓட்டம். இது உங்களுடைய ஆன்மிக ஓட்டம். முகம் குஷியினால்
மலர்ந்து விட வேண்டும். யாராவது ஒருவரின் கணவர் காணாமல் போய், மீண்டும் வந்து சந்தித்தால் மனைவி
தெருக்களில் பைத்தியம் மாதிரி ஓடி-ஓடி வந்து சந்திப்பார். இவர் பிறகு எல்லையற்ற
பதிகளுக்கெல்லாம் மேலான பதி. அவரிடம் பயப்பட வேண்டுமா என்ன? யாரிடம் சொர்க்கத்தின் ஆஸ்தி
கிடைக்கிறதோ, அவரை ஓடோடி வந்து சந்திக்க
வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு
ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபாவின் உண்மையான குழந்தையாக ஆக வேண்டும். உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என இருக்கக் கூடாது.
நினைவின் ஆன்மிக ஓட்டப் பந்தயத்தில் முன்னே செல்ல வேண்டும். குஷி நிறைந்தவராக ஆக
வேண்டும்.
2. தங்களுக்குள் மிக மிக அன்போடு இருக்க வேண்டும். சிவசக்தி சேனையின் குழுவைத்
தயார் செய்து தன்னைப் போன்றவர்களைப் பாதுகாக்க வேண்டும். தூய்மை ஆவதற்கும், மற்றவரை ஆக்குவதற்குமான யுக்தியைப்
படைக்க வேண்டும்
வரதானம்:
சிரேஷ்ட நினைவின் மூலம் சுகமான ஸ்திதியை உருவாக்கக்கூடிய சுக சொரூபமானவர்
ஆகுக.
ஸ்திதிக்கு
ஆதாரம் நினைவு. நீங்கள் நினைவு சொரூபமாக மட்டும் ஆகுங்கள், பிறகு நினைவு வருவதன் மூலம்
நினைவு எப்படியோ அப்படியே ஸ்திதி தானாகவே உருவாகி விடும். குஷிக்கான நினைவில்
இருந்தீர்கள் எனில் ஸ்திதியும் குஷியானதாக ஆகிவிடும். மேலும் துக்கத்தை நினைவு
செய்தீர்கள் எனில் துக்கமான ஸ்திதி உருவாகி விடும். உலகில் துக்கம் அதிகரித்தே ஆக
வேண்டும். அனைத்தும் மிக மோசமாக செல்ல வேண்டும். ஆனால் சுகக் கடலின் குழந்தைகளாகிய
நீங்கள் சதா குஷியாக இருக்கக் கூடியவர்கள், துக்கங்களிலிருந்து விடுபட்டு சுக சொரூபமாக
இருக்கிறீர்கள். ஆகையால் என்ன நடந்து கொண்டிருந்தாலும் நீங்கள் சதா மகிழ்ச்சியாக
இருங்கள்.
சுலோகன்:
நேரம் என்ற பொக்கிˆத்தை வீணானவைகளிலிருந்து
பாதுகாப்பது - இது தான் தீவிர முயற்சியாளர்களின் அடையாளம் ஆகும்.
மாதேஸ்வரி ஜீயின் விலைமதிப்பற்ற மகாவாக்கியம்
பாரதத்தின் பழமையான யோகம் பரமாத்மாவினால் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது
நமது இந்த ஈஸ்வரிய யோகமானது பாரதத்தின் பழமையான யோகா என்ற பெயரில் பிரபலமாக
இருக்கிறது. இந்த யோகாவை அழிவற்றது என்று ஏன் கூறுகின்றோம்? ஏனெனில் அழிவற்ற பரம்பிதா
பரமாத்மாவின் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. பிற மனித ஆத்மாக்களும் யோகா
கற்றுக் கொடுக்கின்றனர், அதனால் தான் யோக ஆசிரமம் போன்றவைகளை
திறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் பழமையான யோகா கற்றுக் கொடுக்க
முடியாது. ஒருவேளை அப்படிப்பட்ட யோகா இருந்தால் பிறகு அந்த பலம் எங்கே? பாரதம் நாளுக்கு நாள் பலமற்றதாக
ஆகிக் கொண்டே செல்கிறது. இதன் மூலம் அந்த யோகமானது அழிவற்ற யோகா கிடையாது என்பது
நிரூபனம் ஆகிறது. யாரிடத்தில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமோ, அவர் தான் சுயம் கற்றுக் கொடுக்க
முடியும். வேறு யாரிடத்திலும் தொடர்பு (யோகா) வைத்துக் கொள்ளவே கூடாது எனில் பிறகு
எப்படி கற்றுக் கொடுக்க முடியும்? சுயம் பரமாத்மா தான் இந்த காரியம் செய்ய முடியும். அவரே முழு
வித்தியாசத்தையும் கூற முடியும். மற்றபடி நாம் யோகா கற்றுக் கொடுக்கின்றோம் என்று
அனைவரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையான யோகா சுயம் பரமாத்மாவே கற்றுக்
கொடுத்து சூரியவம்சம், சந்திரவம்ச பூமியை ஸ்தாபனை செய்து
தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார் என்பதை நாம் அறிவோம். இப்பொழுது அந்த
பழமையான யோகாவும் பரமாத்மா வந்து கல்பத்திற்கு முன்பு போல் நமக்கு கற்றுக்
கொடுக்கின்றார். ஆத்மாவாகிய நீங்கள் பரமாத்மாவாகிய என்னிடத்தில் நிரந்தரமாக
தொடர்பு வைத்துக் கொண்டால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். நல்லது, ஓம்சாந்தி.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments