Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
29-07-2022 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே,
நீங்கள்
உங்களுக்குச் சமமானவர்களை ஈடேற்ற வேண்டும். தாய்மார்களாகிய உங்கள் மீது தந்தை
ஞானக் கலசத்தை வைத்திருக்கிறார். எனவே தாய்மார்களாகிய உங்களுக்குப் பெரிய பொறுப்பு
உள்ளது.
கேள்வி:
எந்தச் சிறப்பான பணிக்குத் தாய்மார்களாகிய நீங்கள் கருவிகளாக இருக்கின்றீர்கள்? உங்களுக்குள்ள பொறுப்பு யாது?
பதில்:
தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குவதற்கும், நரகத்தைச் சுவர்க்கமாக ஆக்குவதற்கும் நீங்கள்
கருவிகள் ஆகியுள்ளீர்கள்;
தாய்மார்களாகிய
உங்கள் மீது தந்தை ஞானக் கலசத்தை வைத்திருக்கிறார்; எனவே அனைவருக்கும்; சற்கதி அளிக்க வேண்டிய பொறுப்பு
உங்களுக்கு உள்ளது. நீங்கள் சிவசக்தி சேனையினர். நீங்கள் இப்பொழுது உங்களுக்குச்
சமமானவர்களுக்கு நன்மை ஏற்படுத்த வேண்டும். அனைவரையும் தூய்மையற்றவராகுவதிலிருந்து
காப்பாற்றுங்கள். நீங்கள் விலைமாதர்களையும் ஈடேற்றுங்கள்.
பாடல்: ஓ இரவுப் பயணியே,
களைப்படையாதே!
விடிவிற்கான இலக்கு வெகுதொலைவில் இல்லை.
ஓம் சாந்தி. இந்தப் பாடலின் வரியைக் குழந்தைகளாகிய நீங்கள் செவிமடுத்தீர்கள்.
நாங்கள் இப்பொழுது சூட்;சும தாமத்தை நோக்கிச் செல்கிறோம்.
அதாவது, இப்பொழுது சந்தோஷ தாமத்திற்குச்
செல்கிறோம். சந்தோஷ தாமத்தின் ஸ்தாபனைக்குத் தாய்மார்களாகிய நீங்கள்
கருவிகளாக்கப்பட்;டுள்ளீர்கள். தாய்மார்களாகிய உங்கள்
மீது ஞானாமிர்தக் கலசம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு திறப்பு விழாவிற்கு அல்லது ஒரு
ஸ்தாபனைக்காக ஒரு வைபவம் நடாத்தப்படுவது போலவே பரமாத்மாவாகிய பரமதந்தையும் வைகுந்தத் திறப்புவிழாவைத்
தாய்மார்களாகிய உங்கள் மூலம் மேற்கொள்கிறார். தாய்மார்களாகிய உங்கள் மீது கலசம்
வைக்கப்பட்டுள்ளது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விழிப்பாக இருக்க
வேண்டும். இது சக்தி சேனையாகும். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை பொறுப்பைக்
கொடுக்கிறார். அனைவருக்கும் ஜீவன்முக்தியை அளிக்கின்ற பொறுப்பைத் தந்தை எந்தக் குருமார்களுக்கும்
கொடுத்திருக்கிறார் என்பதல்ல. ஜீவன்முக்தி அளிக்கும் பணி தாய்மார்களுக்குரியது
என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜீவன்முக்தி ஞானத்தின் மூலமாகப் பெறப்படுகிறது.
தாய்மார்கள் ஞானக் கலசத்தைப் பெற்றுள்ளார்கள். முதலில் உலகமாதாவிற்கு ஞானக் கலசம்
வழங்கப்பட்டதாகக் காட்டப்படுகிறது. இலக்ஷ்மியின் பெயரை அவர்கள் சமயநூல்களில்
குறிப்பிட்டுள்ளார்கள். இந்த வித்தியாசம் உள்ளது. தாய்மார்களாகிய உங்களுக்குக்
கலசம் வழங்கப்பட்டுள்ளது. காளிக்கும் கலசம் வழங்கப்;பட்டுள்ளது. இங்கே காளியினுடைய புகழ் உள்ளது. அவர்கள் பல உருவங்களை உருவாக்கியுள்ளார்கள்.
இப்பொழுது உங்களுக்குச் சமமான தாய்மார்கள் சீரழிந்த நிலையில் இருப்பதால் கலசம்
உங்கள் மீது வைக்கப்;பட்டுள்ளது. நீங்கள் சிவசக்தி சேனை
என அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் மறைமுகமான சேனை. உங்களுடைய புத்தி ஆர்வத்தை
கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய சுய இறைமையை ஸ்தாபிக்கிறீர்கள். “தாய்மார்களுக்கு வந்தனங்கள்” என்ற வாழ்த்து நினைவு
கூரப்பட்டுள்ளது. பாரதபூமி என்ற பெயரும் நினைவு கூரப்படுகின்றது. அவர்கள்
கூறுகிறார்கள்: பாரதத் தாய்மார்களுக்கு வெற்றி. அதாவது, பாரதத்தில் வசிக்கும்
தாய்மார்களுக்கும் வெற்றி. உலகத்தைச் சுவர்க்கமாக மாற்றும் தாய்மார்களுக்கும்
வெற்றி. பாரதத்தின் தாய்மார்கள் என்று மட்டும் கூறுவது அவர்கள் செய்த தவறு ஆகும்.
பாபா தாய்மார்களாகிய உங்களது பெயரைப் பெருமைப்படுத்துகிறார். அவர் சுவர்க்கத்தின்
திறப்புவிழாவை ஏற்படுத்துவதற்காக ஊக்கமளிக்கிறார். சிவபாபா தாய்மார்களாகிய உங்கள்
மூலம் இவ்வுலகைச் சுவர்க்கமாக மாற்றுகின்றார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
நீங்கள் பீஷ்மபிதா மீது ஞான அம்புகளை எய்தீர்கள். நீங்கள் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்;க வேண்டும். உங்கள் சேனை
கருவியாகுகின்றது. நீங்கள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள். அவர்கள் சரஸ்வதியை
வீணையுடன் படத்தில் காட்டியுள்ளார்கள் ஏனெனில் அவர் அனைவரிலும் திறமையுள்ளவர்.
இதைப் பற்றி உலகிற்குத் தெரியாது. நீங்கள் அழகற்றவர்களில் இருந்து அழகானவர்களாக
மாறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் காளியிடம் செல்கிறார்கள்.
அவர்கள் “மா! மா!” (அம்மா! அம்மா!) என்று அவரைக் கூவி
அழைக்கிறார்கள். அவர்கள் எவ்வளவோ புலம்புகிறார்கள் கேட்கவும் வேண்டாம் ஆனாலும், எதுவும் நடப்பதில்லை. கல்கத்தாவில்
காளிக்கு நிறைய புகழ் உண்டு. இந்த பிரம்மா தாயல்ல. இ;தனாலேயே தாய்மார்களாகிய உங்களுக்குக்
கலசம் வழங்;கப்பட்டது. நீங்கள் தாய்மார்களின்
சேனைகள். அனைவரும் சமமானவர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நான் என்னவாக இருந்தாலும்;, நான் எவ்வாறு இருந்தாலும்; நான் உங்களுடையவரே. அந்த ஒருவரும்
கூறுகிறார்: நீங்கள்; எதுவாக இருந்தாலும்;, நீங்கள் எவ்வாறு இருந்தாலும்
நீங்கள் என்னுடையவரே. எவ்வாறாயினும், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் எல்லோரும் மணவாட்டிகள்.
நீங்கள் கடவுளுக்குரியவர் என்று நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். நீங்கள் அனைவரும்
சிவபாபாவின் குழந்தைகள் என்ற விளக்கம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள்
இதை நிரூபிக்க வேண்டும். முதலில்;, சிவனின் புகழ் உள்ளது. அவரே அதிமேலானவர். அவரே கடவுள் என்று
அழைக்கப்படுகிறார். சிவபாபா மாத்திரமே எங்களுக்கு ஆஸ்தியைத் தருகிறார். அவர்
ஆத்மாக்கள் அனைவரினதும் அசரீரியான தந்தையாவார். எனவே, புத்திரிகளாகிய நீங்கள் இப்பொழுது
உங்களுக்குச் சமமானவர்களை ஈடேற்ற வேண்டும். தாய்மார்களாகிய உங்களுக்குச் சகல
பொறுப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: தாய்மார்களுக்கு
வந்தனங்கள். சிவன் குழந்தையாவார், எனவே அவர்; தாய்மார்களுக்கு வந்தனங்கள் என்று
கூறவேண்டியுள்ளது. அந்த ஒருவரும் உங்களுக்கு வந்தனம் கூறுகிறார். நீங்களும்
அவருக்கு வந்தனம் கூறுகிறீர்கள். இது ஓர் அற்புதமே! இதுவும் நாடகத்தில்
நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிவபாபா காட்சிகளை வழங்குகிறார் என்பது உங்களுக்குத்
தெரியும். நீங்கள் வீட்டிலிருக்கும் போது கூட, மயில் இறகு கீரிடத்தை உடையவரின் காட்சிகளைக் காணலாம். அனைவரிடமும் கீரிடம்
உள்ளது. இது ஒரு வியாபாரச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள்
கிருஷ்ணரிற்கு மிகப்பெரியதொரு கீரிடத்தைக் கொடுத்துள்ளார்கள். இல்லையேல், இத்தகைய ஒரு பெரிய கீரிடத்தை அவர்
அணிவதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து தாய்மார்களாகிய உங்களுக்கு உங்கள் இலக்கும்
குறிக்கோளும் பற்றிய காட்சியைக் கொடுக்கிறார். நீங்கள் இளவரசரின் தாயாக
ஆகுவீர்கள். அனைவரும் கிருஷ்ணரின் தாய் ஆகுவதில்லை. பல இளவரசர்களும் இளவரசிகளும்
உள்ளனர். ஓர் இளவரசரின் தாய் ஆகுவது என்பது ஒரு சக்கரவர்த்தியாகவோ
சக்கரவர்த்தினியாகவோ ஆகுவதாகும். உங்கள் இலட்சியமும் இலக்கும் மிகவும் சிறந்;தது. நீங்கள் உங்கள் மடியில்
இளவரசனை வைத்திருப்பீர்கள். புத்திரிகளாகிய உங்களுக்கு அதிகளவு பொறுப்பு உண்டு.
உங்களுடைய ஒரு பெரிய ஒன்றுகூடல் இருக்க வேண்டும். நீங்கள் இந்த விஞ்ஞாபனத்தைத்
தயாரிக்க வேண்டும். சிவசக்திகளான நாங்கள் பாரதத் தாய்மார்கள். நாங்கள் ஸ்ரீமத்தைப்
பின்பற்றுவதன் மூலம் பாரதத்தைச் சென்ற கல்பத்திலும் சுவர்க்கமாக மாற்றினோம்.
தாய்மார்களே, நீங்கள் மிக்க விவேகிகளாக இருக்க
வேண்டும். இந்நாட்களில், உங்களுக்குச் சமமானவர்கள் நஞ்சின்
பொருட்டு, அதிகளவில்
துன்புறுத்தப்படுகிறார்கள். ஆகவே, நீங்கள் அவர்களுக்கு உதவுவதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கத்துக்குக்
கூறுங்கள்: ஒவ்வொரு கல்பமும், நாங்கள் தூய்மைச் சக்தி மூலம் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறோம், ஆனால் அவர்கள் இதில் இத்தடைகளை உருவாக்குகிறார்கள்.
நாங்கள் தூய்மையாக இருக்க விரும்புகிறோம். அவர்களுடன், உண்மையிலேயே தூய்மை மிகவும்
சிறந்தது எனச் சில ஆண்களும் கூறுவார்கள். குழந்தைகளைப் பெறாதிருப்பதற்காக மக்கள்
கருத்தடை மாத்திரைளையும் பயன்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், அதனூடாக எதுவும் இடம்பெறுவதில்லை.
தந்தை கூறுகிறார்: தூய்மை ஆகுங்கள்! சகோதரர்களும் தாய்மார்களாகிய உங்களின்
உதவியாளர்கள் ஆவார்கள். புத்திரிகளாகிய நீங்களும் உஷாராக வேண்டும். நீங்கள் உங்கள்
பிரகாசத்தைக் காட்ட வேண்டும். அரசாங்கத்திடம் கூறுங்கள்: தந்தையாகிய கடவுள்
கூறுகிறார்: தூய்மையாகுங்கள். அனைவரும் சிவபாபாவின் குழந்தைகளே. ஆகவே, அவர்கள் சகோதரர்கள் ஆவார்கள்.
பின்னர், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக
இருக்கும் காரணத்தினால், நாங்கள் சகோதரர்களும் சகோதரிகளும்
ஆவோம். இப்பொழுது புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. சிவபாபாவின் குழந்தைகள் பிரஜாபிதா
பிரம்மாவின் குழந்தைகளும் ஆவார்கள், அவர்கள் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவார்கள். அவர்களால் ஒருவருக்கொருவர்
நஞ்சைப் பரிமாற்றம் செய்ய முடியாது. இது சாதுரியம் ஆகும். முன்னைய கல்பத்திலும்
அவ்விதமாகவே தந்தை உங்களைத் தூய்மையாக்கினார். நாங்கள் இப்பொழுது இராவணனாகிய
மாயையை வெல்கிறோம். இந்த இராவணனே பாரதத்தின் மிகப்பெரிய எதிரியாவான். நீங்கள்
இராவணனினால் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் அனைத்திலும் தோற்கடிக்கப்பட்டீர்கள்.
இராமர் வந்து, உங்களை இராவணனை வெல்லுமாறு
செய்கிறார். எவ்வாறாயினும், இப்பொழுதும், சிலருக்குத் தங்கள் கணவன்
போன்றோருடன் அதிகளவு பற்று உள்ளது, கேட்கவும் வேண்டாம்! தாய்மார்களாகிய நீங்கள் இப்பொழுது கலசத்தைப்
பெற்றுள்ளீர்கள். நீங்கள் சுவர்க்க வாசல்களைத் திறக்கிறீர்கள் என நீங்கள்
விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் இலக்ஷ்மியை ஒரு கலசத்துடன்
சித்தரித்துள்ளார்கள். எவ்வாறாயினும், இலக்ஷ்மி தூய்மையானவர் ஆவார். அவர் ஞானக் கலசத்தின் மூலம் என்ன செய்வார்? உலகத் தாயுடனேயே ஞானக் கலசம்
உள்ளது. இப்பொழுது பரமாத்மாவாகிய பரமதந்தை ஒரு கட்டளையைப் பிறப்பித்துள்ளார்:
காமமே கொடி எதிரி. அதனை வெல்பவர்கள் மேன்மையானவர்களாக ஆகுவதுடன், சுவர்க்க அதிபதிகளாகவும்
ஆகுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க
வேண்டும். இது பிரம்மகுமார்களினதும், குமாரிகளினதும் ஒரு சேனை போன்றதாகும். யார் எங்கே இருக்கிறார்கள் என்பதை
எவரும் அறியார். அனைத்து நிலையங்களிலுமுள்ள குழந்தைகள் அனைவருமே இங்கே அழைக்கப்பட
முடியாது. தாய்மார்களுக்கு அதிகளவு பந்தனம் உள்ளது. அவர்கள் தங்கள் குழந்தைகளையும்
பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆண்கள் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வார்கள். எவ்வாறாயினும், உண்மையில், ஆண்கள் வெளியில் செல்லும்பொழுது, யார் இல்லறத்தைப் பராமரிக்கிறார்கள்? அம்மக்கள் ஹத்தயோகத்தைக்
கற்பிக்கிறார்கள் எனவும், நாங்கள் இராஜயோகத்தைக்
கற்பிக்கிறோம் எனவும் நீங்கள் அவர்களுக்குக் காட்ட வேண்டும். இதனாலேயே நாங்கள்
சற்கதியைப் பெற வேண்டும். பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: இப்பொழுது அந்த அசுத்தமான
தொழிலை நிறுத்த வேண்டும் விலைமாதர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். சுவர்க்க
வாசல்கள் ஆகுமாறு அவர்களுக்குக் கூறுங்கள். நீங்கள் இப்பணியை நிறைவேற்றினால், உங்கள் பெயர் அதிகளவில்
போற்றப்படும். நீங்கள் அவர்களுக்கும் நன்மையளிக்க வேண்டும். இச்சங்கமயுகம்
நன்மையளிப்பதாகும். நீங்கள் தூய்மைக்காக அதிகளவு குரல்கொடுக்க வேண்டும். இந்த
விலைமாதர்களின் மீது கருணையைக் கொண்டிருங்கள். அரசாங்கமும் அவர்களை ஏதோவொரு
வேலையில் ஈடுபடுத்துகிறது. காமமே கொடிய எதிரி என்பதால், பிரம்மகுமார்களும் குமாரிகளும்
விலைமாதர்களுக்கும் ஞானத்தைக் கொடுத்து, அவர்களை அந்த அசுத்தத் தொழிலிலிருந்து விடுவிக்கிறார்கள் என்பதைச்
செய்தித்தாள்களில் அச்சிடும் வகையில் விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் அதனூடாகத்
தூய்மையற்றவர்களாகவும் அசுத்தமானவர்களாகவும் ஆகுகிறீர்கள். இவ்வுலகம்
சீரழிந்ததாகும். தந்தை வந்து தாய்மார்களை ஈடேற்றுகிறார். உதவியாளர்கள் ஆகுவது
சகோதரர்களின் கடமையாகும். முயற்சி செய்பவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப்
பெறுவார்கள். நீங்கள் உங்களுக்குச் சமமானவர்கள் மீது கருணையைக் கொண்டிருக்க
வேண்டும். இந்த இடம் ஒரு விலைமாதர் இல்லம் என அழைக்கப்படுகிறது. தந்தை வந்து
அதனைச் சிவாலயமாக ஆக்குகிறார். உண்மையில், இவை ஞான விடயங்களாகும். தந்தை இந்த மனித சரீரத்தில் பிரவேசித்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக்
கொடுக்கிறார். நீங்கள் இப்பொழுது மயான பூமியில் இருப்பவர்களிலிருந்து தேவதை
பூமியில் இருப்பவர்களாக மாறுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். இது ஞான ஏரியாகும்.
நீங்கள் தொடர்ந்தும் ஞானத்தில் மூழ்கி எழுகிறீர்கள், ஆனால் இங்கு நீர் போன்றவற்றுக்கான கேள்வியே கிடையாது. அவர்கள் யாத்திரைகள்
செல்லும்பொழுது, அதிகளவு முயற்சிகளைச்
செய்கிறார்கள். அதிகளவு பயணப் பைகளைச் சுமந்தவாறு கால்நடையாகச் செல்வதற்கு அதிகளவு
கடின உழைப்பு தேவைப்படுகிறது. பாபா ஒரு மனித சரீரத்தில் அமர்ந்து, உங்களை ஞானத்தால்; நீராட்டுகிறார் என்பதை நீங்கள்
இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். எவ்வாறாயினும், தேவதைகள் போன்றோர் இல்லை. பாபாவே உங்களை ஞான தேவதைகளாக ஆக்குகிறார். இவை
கிரகிக்கப்பதற்கு, சிறந்த விடயங்களாகும்.
புத்திரிகளாகிய நீங்கள் உஷாராகினால், உங்களால் அதிகளவு வேலையைச் செய்ய முடியும். தாய்மார்களாகிய நீங்கள் செல்ல
வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: விலைமாதர்கள் உள்ள இடங்கள் அனைத்திலும் அவர்களின்
குழுவொன்றை உருவாக்குங்கள். அவர்களுடைய மூத்தோருக்கும் விளங்கப்படுத்துங்கள்.
எவ்வாறாயினும், வெளிப்புறமாக நீங்கள் “என்னுடையவர் ஒரு பாபாவே அன்றி, வேறு எவருமல்ல” எனக் கூறுவதாகவும், ஆனால் உள்ளுர உங்களை வேறு யாரோ ஈர்;த்தவாறு இருப்பதாகவும்
இருக்கக்கூடாது. அதுவும் பிரயோசனப்படாது. தந்தையின் ஓர் உண்மையான குழந்தை ஆகுங்கள்.
உங்கள் முகத்தில் உள்ள அந்த முகமலர்ச்சி எங்கே? ஓ! நீங்கள் எல்லையற்ற தந்தையைச் சந்திப்பதற்குச் செல்கிறீர்கள், ஆகவே நீங்கள் அவரைச்
சந்திப்பதற்குப் பெரும் சந்தோஷத்தில் ஓடிவர வேண்டும். “நான் சென்று பாபாவின் கழுத்து மாலை
ஆகுவேன்”. களைப்படைய வேண்டாம். உங்கள் நினைவு
ஓர் ஓட்டப் பந்தயம் ஆகும். அது ஒரு பௌதீகமான ஓட்டப் பந்தயம் ஆகும். இது உங்களுடைய
ஆன்மீக ஓட்டப் பந்தயம் ஆகும். உங்கள் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருக்க வேண்டும்.
ஒரு மனைவியின் கணவன், தொலைந்த பின்னர் மீண்டும்
கண்டுபிடிக்கப்பட்டால், அவள் ஒரு பைத்தியம் போன்று
வீதிகளினூடாக ஓடுகிறாள். அவரே கணவன்மார்கள் அனைவருக்கும் எல்லையற்ற கணவர் ஆவார்.
நீங்கள் எதனையிட்டு அச்சம் அடைய வேண்டும்? நீங்கள் யாரிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறீர்களோ, அவரைச் சந்திப்பதற்கு ஓடோடி வர
வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது
கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின்
அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு
நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் ஓர் உண்மையான குழந்தை
ஆகுங்கள். உள்ளே ஒன்றும் வெளியே வேறொன்றுமாக இருப்பதில்லை என்பதை நிச்சயம்
செய்யுங்கள். நினைவு என்னும் ஆன்மீக ஓட்டப் பந்தயத்தில் முன்னேறிச் செல்லுங்கள்.
மிகவும் முகமலர்ச்சியுடையவரும், சந்தோஷமானவரும் ஆகுங்கள்.
2. ஒருவரோடு ஒருவர் அதிகளவு அன்புடன்
வாழுங்கள். சிவசக்தி சேனையின் ஓர் ஒன்றுகூடலை உருவாக்கி, உங்களுக்குச் சமமானவர்களைக்
காப்பாற்றுங்கள். தூய்மையாகுவதற்கும், ஏனையோரைத் தூய்மையாக்குவதற்குமான வழிமுறைகளை உருவாக்குங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களுடைய மேன்மையான விழிப்புணர்வினால், உங்களுடைய சந்தோஷ ஸ்திதியை உருவாக்கி சந்தோஷ
சொரூபம் ஆகுவீர்களாக.
உங்களுடைய
ஸ்திதிக்கு அடிப்படையாக இருப்பது உங்களுடைய விழிப்புணர்வாகும். நீங்கள்
விழிப்புணர்வின் சொரூபமாக இருக்க வேண்டும், ஏனெனில், உங்கள் விழிப்புணர்வு எதுவோ உங்கள் ஸ்திதி
அதுவாகவே இருக்கும். சந்தோஷமாக இருக்கின்ற விழிப்புணர்வை பேணுங்கள், அப்பொழுது உங்கள் ஸ்திதியும்
சந்தோஷமாக இருக்கும். நீங்கள் துன்ப விழிப்புணர்வை கொண்டிருந்தால், உங்கள் ஸ்திதி துன்பமானதாக
இருக்கும். உலகில் துன்பம் அதிகரிக்க உள்ளது, அனைத்தும் அதன் உச்சத்தை அடைய உள்ளன, ஆனால் சந்தோஷக் கடலின்
குழந்தைகள்,
சந்தோஷ
சொரூபமாக இருப்பதனால்,
சதா
சந்தோஷமாக இருப்பதுடன்,
துன்பத்திலிருந்து
விடுபட்டிருப்பீர்கள். ஆகையால், என்ன நடந்தாலும்,
நீங்கள்
சதா களிப்புடன் இருப்பீர்கள்.
சுலோகம்:
பொக்கிஷமான நேரத்தை வீணாக்காது, அதனை சேமிப்பது ஒரு தீவிர முயற்சியாளரின்
அடையாளமாகும்.
---ஓம் சாந்தி---
மாதேஸ்வரிஜியின் பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்
கடவுளால் கற்பிக்கப்பட்ட பாரதத்தின் புராதன யோகம்
எங்களுடைய இறை யோகம் பாரதத்தில் புராதன யோகம் என மிக நன்றாக அறியப்பட்டுள்ளது.
இந்த யோகம் ஏன் அநாதியான யோகம் எனப்படுகின்றது? ஏனெனில் இது அநாதியான பரமதந்தையான பரமாத்மாவினால் கற்பிக்கப்படுகின்றது. ஏனைய
ஆத்மாக்களும் யோகம் கற்பித்து, யோக ஆச்சிரமங்களை திறந்தாலும், அவர்களால் இந்த புராதன யோகத்தைக் கற்பிக்க முடியாது. அவர்கள் அத்தகைய யோகத்;தை செய்தாலும், எங்கே அந்த சக்தி? பாரதம் நாளுக்கு நாள் பலவீனம்
அடைவதால், அந்த யோகம் அநாதியான யோகம் இல்லை
என்பதை அது காட்டுகின்றது. நீங்கள் யாருடன் யோகம் செய்ய வேண்டுமோ, அவரால் மாத்திரமே உங்களுக்குக்
கற்பிக்க முடியும். நீங்கள் பிறருடன் யோகம் செய்ய வேண்டியதில்லை, அவ்வாறாயின் அவர்களால் எவ்வாறு
உங்களுக்குக் கற்பிக்க முடியும்? கடவுளால் மாத்திரமே இப் பணியை மேற்கொள்ள முடியும். அவரால் மாத்திரமே இந்த
இரகசியங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எங்குமுள்ள மக்கள் தாம் எமக்கு
யோகம் கற்பிக்கின்றோம் எனக் கூறினாலும், கடவுளே எமக்கு உண்மையான யோகத்தைக் கற்பித்து, சூரிய, சந்திர வம்ச இராச்சியங்களை
ஸ்தாபிக்கின்றார் என்பதை நாம் அறிவோம். கடவுளே வந்து ஒவ்வொரு கல்பத்திலும் இப்
புராதன யோகத்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் சதா
பரமாத்மாவுடன் உங்கள் யோகத்தைக் கொண்டிருந்தால், உங்கள் பாவங்கள் அழியும். அச்சா.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments