Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
07-09-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! தந்தையின் போதனைகளை
தாரணை செய்து நீங்கள் நற்குணங்கள் உள்ள மலராக ஆக வேண்டும். உங்களுக்கு ஞானத்தின்
ஒளி கிடைத்துள்ளது. அதனால் சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுடைய எந்த (ரமணீகரமான)
மகிழ்ச்சியூட்டும் விஷயங் களைக் கேட்டு மனிதர்கள் குழப்ப மடைகின்றனர்?
பதில்:
நீஙகள் சொல்கிறீர்கள் லி இப்போது பிராமணகுல பூஷணர்களாகிய
(அலங்கரிக்கப்பட்ட) நாம் சுயதரிசனச் சக்கரதாரிகள். நாம் ஞானத்தின் சங்கொலி
எழுப்புகிறவர்கள். நாம் திரிநேத்திரி, திரிகாலதரிசிகள். தேவதைகளுக்கு என்ன
அலங்காரங்கள் கொடுக்கின்றனரோ, அவை அனைத்தும் நம்முடையவை. இந்த விஷயங்களைக்
கேட்டு மனிதர்கள் குழப்ப மடைகின்றனர். 2. நீங்கள் சொல்கிறீர்கள் லி தந்தை வாயினால்
என்ன ஞானம் தருகிறாரோ லி இது சங்கொலி. இதனால் நாம் மனிதரிலிருந்து தேவதை ஆகிறோம்.
இது தான் முரளி என்று சொல்லப்படுகிறது. மூங்கிலின் (புல்லாங்குழல்) முரளி இல்லை.
இவை கூட மிகவும் மன மகிழ்ச்சி உண்டாக்கும் விஷயங்களாகும். இவற்றைப் புரிந்து
கொள்வதில் மனிதர்களுக்குக் கஷ்டமாக உள்ளது.
பாடல்: இது தான் வசந்த காலம்
.......
ஓம்
சாந்தி. இனிமையிலும் இனிமையான ஈஸ்வரியக் குழந்தைகள் அறிவார்கள், நமக்காக அனைத்திலும் உயர்ந்த
வசந்தத்தின் பருவகாலம் இது. வசந்தகாலத்தில் பூக்கள் முதலிய அனைத்தும் மலர்ந்து
விடுகின்றன. இது எல்லையற்ற வசந்தகாலம். உங்கள் மீது ஞானத்தின் மழை பொழிகின்றது. ஆக, காய்ந்து போன முள்ளில் இருந்து
நீங்கள் மலராக ஆகி விடுகிறீர்கள். இதையும் நீங்கள் தான் நம்பர்வார்
புருசார்த்தத்தின் அனுசாரம் அறிவீர்கள். நாம் இந்த ஞான மழையால் முள்ளில் இருந்து
மலராகிறோம் என சிலர் மிகுந்த குஷியில் உள்ளனர், மரம் எப்போது முற்றிலும் காய்ந்து போகிறதோ, அப்போது ஓர் இலை கூட இருக்காது.
ஒவ்வொரு வருடமும் இதே நிலை உருவாகின்றது. பிறகு மழையில் இலைகளும் அழகாக, மலர்களும் அழகாக ஆகி விடுகின்றன.
எனவே,
இந்த ஞான
மழையின் வசந்த காலம் முதல் தரமாக உள்ளது. இப்போது இது முள் நிறைந்த உலகம். மரம்
(படைப்பு) சொல்கிறது லி நான் முள் நிறைந்த காடாக ஆகி விட்டிருக்கிறேன். பிறகு
ஞானமழையால் மலர்கள் நிறைந்த மரமாக ஆகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் சைதன்ய மரம்
இல்லையா?
இப்போது
உங்களுக்கு ஞானத்தின் ஒளி கிடைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் உயர்ந்த பதவி
பெறுகிறீர்கள். நீங்கள் எதிலிருந்து எதுவாக மாறி விடுகிறீர்கள்! நீங்கள்
அறிவீர்கள்,
நாம்
இப்போது தூய்மையற்ற திலிருந்து தூய்மையாக ஆகிறோம். விஷ்ணுவும் கூட யுகல் ரூபம்
இல்லையா?
ஜோடி
ரூபம் தான் சாட்சாத்காரமாகக் கிடைக்கிறது. விஷ்ணுவுக்கு நான்கு புஜங்கள்
காட்டுகின்றனர் இல்லையா?
ஆனால்
அவர்களுக்கு ஞானமோ எதுவும் கிடையாது. இரண்டு ரூபமும் சேர்ந்து நடனமாடுகின்றனர்.
பாபா புரிய வைக்கிறார்,
தீபாவளி
வருகிறது என்றால் மகாலட்சுமி வருகிறார். நீங்கள் இருவரையும் அழைக்கிறீர்கள்.
முன்னால் லட்சுமியும் பின்னால் நாராயண ரும் இருக்கின்றனர். லட்சுமி இரண்டு
புஜங்கள் உள்ளவராக இருக்கிறார். மகாலட்சுமி 4 புஜங்கள் உள்ளவராக இருக்கிறார்.
ஆனால் இந்த விஷயங்களை இப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். இதற்கு முன் இதை
முற்றிலும் அறியாமல் தான் இருந்தீர்கள். முற்றிலும் முள்ளாகவே இருந்தீர்கள், இப்போது மலராக மாறிக்
கொண்டிருக்கிறீர்கள். மனிதரிலிருந்து தேவதையாக்கினார் என்று. தேவதைகள் இருப்பது
சத்யுகத்தில். அவர்கள் தெய்விக குணங்கள் உள்ளவர்கள். இச்சமயத்தின் மனிதர்கள்
அசுரகுணம் உள்ளவர்கள். நீங்கள் ஈஸ்வரிய குணம் உள்ளவர்கள். ஈஸ்வரன் அமர்ந்து உங்களை
நற்குணங்கள் நிறைந்தவர்களாக ஆக்குகிறார். பாபாவின் போதனைகளால் நாம் சர்வகுண
சம்பன்னம் ஆகிறோம். பாரதத்திற்கு மகிமை உள்ளது என்றால் பாரதத்தில்
வசிப்பவர்களுக்கு மிகவும் மகிமை பாடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இது தெரியாது -
அவர்களை இது போல் ஆக்குபவர் யார்? என்பது பெரிய பெரிய கோவில்களைக் கட்டுகின்றனர். ஆனால் அவர்களின் தொழில் பற்றித்
தெரியாது. உங்களுக்கோ அதிக ஒளி கிடைத்துள்ளது. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும். அங்கேயும் 21 பிறவிகளுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள்
அறிவீர்கள்,
நாம் 21
பிறவிகளுக்கான பதவி பெறுவதற்காகப் படிப்பைப் படிக்கிறோம். வருமானம் ஞானத்தினால் வருகிறது.
இது காட் ஃபாதர்லி ஸ்டூடன்ட் லைஃப் (இறைத் தந்தையின் மாணவ வாழ்க்கை). சூரியவம்சி
குலத்தின் எஜமானராக ஆகிறோம். அதாவது சொர்க்கத்தின் எஜமானர் ஆகிறோம். தூய்மையான
உலகத்திலும் கூட அனைவரும் ஒரே மாதிரிப் பதவி பெற மாட்டார்கள். ஒரு
லட்சுமி-நாராயணர் மட்டுமே இராஜ்யம் செய்ய மாட்டார்கள் இல்லையா? இதுவும் யாருக்கும் தெரிய வில்லை
லி இராஜ பரம்பரை இருக்கும்,
மேலும்
இராஜ்யமும் இருக்கும். சூரியவம்சி, சந்திரவம்சி இருந்தனர். சிவபாபா புது உலகத்தை
ஸ்தாபனை செய்திருக்கிறார். உலகத்தினரின் புத்தியிலோ (அஞ்ஞான) இருள் உள்ளது.
உங்களிடமோ ஒளி உள்ளது. தூய்மை இல்லாத உலகம் மற்றும் தூய்மையான உலகம் உள்ளன. பாவன
உலகத்திலும் நம்பர்வார் பதவிகள் உள்ளன. பிரஜைகளிலும் இருக்கும். அங்கோ
அனைவருக்கும் சுகமே சுகம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவரவர் இராஜ்யம், ஜமீன்தாரி முதலியன இருக்கும்.
தூய்மையில்லாத உலகத்திலும் அனைவரும் தூய்மை இல்லாதவர்களே ஆனால் அவர்களிலும்
நம்பர்வார் உள்ளனர். எப்படி சத்யுகத்தில் உயர்ந்த திலும் உயர்ந்த இராஜ பரம்பரை
லட்சுமி-நாராயணருடையது. இராதை கிருஷ்ணர் இளவரசர் இளவரசி சுயம்வரத்திற்குப் பிறகு
லட்சுமி-நாராயணராக ஆயினர். லட்சுமி-நாராயணரின் இராஜ பரம்பரை எனச் சொல்வார்கள்.
இராஜாக்களின் பெயர் சொல்லப் படுகிறது. ஒரு சிறு விஷயமும் கூட யாருக்கும் தெரிய
வில்லை. நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அதுவும் வரிசைக்கிரமமாக. இராஜதானியிலோ
வரிசைக்கிரமமாக பதவிகள் உள்ளன இல்லையா? சூரிய வம்சி ராஜ்யம் எங்கே, பிரஜைகளிலும் சண்டாளர் முதலானவர்
களாக ஆவது எங்கே?
தூய்மை
இல்லாத உலகத்திலும் நம்பர்வார் உள்ளனர்.
இப்போது
பாபா உங்களுக்கு கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் கதியைப் புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். பாபா சொல்கிறார், குழந்தைகளே, ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள். அநேகக்
குழந்தைகள்,
பாபா
அவர்களை இதுவரை பார்க்காமலே இருந்தாலும் கூட தங்களுக்குள் நல்ல சேவை செய்து
கொண்டிருக்கின்றனர். பாபாவின் அறிமுகம் கொடுத்துக் கொண்டே இருக் கின்றனர். பிராமணி
நியமிக்கப் படாமலே கூட சென்டரை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாபாவை நேராக
சந்தித்ததும் இல்லை. பிறகும் கூட சேவை செய்து தங்களைப் போல் பிறரையும் ஆக்கிக்
கொண்டிருக்கின்றனர். முன்பாக இருப்பவர்கள் இவ்வளவு சேவை செய்வ தில்லை. ஆன்மிக
யாத்திரை கற்றுத் தர வேண்டும் இல்லையா? நீங்கள் ஆன்மிக வழி காட்டிகள். நீங்களும் வழி
சொல்கிறீர்கள். ஹே ஆத்மாக்களே! தந்தையை நினைவு செய்யுங் கள். ஆத்மாக்களும்
பரமாத்மாவும் நீண்ட காலமாகப் பிரிந்து இருந்து விட்டனர் என்று சொல்ல வும்
செய்கின்றனர். அதுவும் கணக்கு இல்லையா? நீண்ட காலம் என்பதை உறுதிப் படுத்திச்
சொல்கிறீர்கள் இல்லையா?
நீங்கள்
தான் அனைவரை விடவும் அதிகமாக நீண்ட காலம் பிரிந்து இருந்திருக்கிறீர்கள்.
சூரியவம்சி,
சந்திரவம்சி
குலத்தவராக இருந்தீர்கள். பிறகு புனர்ஜென் மத்தின் சக்கரத்தில் வந்து 84
ஜென்மங்கள் எடுத்திருக்கிறீர்கள். அதுவும் அனைவருக்கும் 84 பிறவிகள் இருக்க
முடியாது. இந்த ஞானத்தின் மழைத் தூரலில் குழந்தைகள் நீங்கள் இருக் கிறீர்கள். இது
உங்களுடைய மாணவ வாழ்க்கை. சிலர் இல்லற விவகாரங்களைப் பராமரித்துக் கொண்டு பிறகு
வேறொரு கோர்ஸ் கூட எடுத்துக் கொள்கின்றனர். இங்கோ தூய்மையின் விஷயம் மட்டும் தான்.
தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். மேலும் படிக்கவும் வேண்டும்.
தூய்மையாக அவசியம் ஆக வேண்டும். சொல்லவும் செய்கின்றனர், சிங்கத்தின் பால் தங்கப்
பாத்திரத்தில் தான் தங்கும் என்பதாக பாபாவும் சொல்கிறார், தூய்மை ஆகாமல் தாரணை ஆகாது.
அதனால் பாபா சொல்கிறார்,
இந்தக்
காமம் என்ற மகா விரோதியை வெற்றி கொள்ளுங்கள். நீங்கள் தூய்மை ஆகுங்கள். என்னை
அறிந்து கொள்ளுங்கள். அப்போது தான் நான் புத்தியின் பூட்டைத் திறப்பேன். எது வரை
தூய்மையான பிராமணகுல அணிகலன் களாக ஆகவில்லையோ, அது வரை தாரணையும் ஆகாது.
பிராமணகுல
பூஷணர்களாகிய நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். வேறு யாரும் புரிந்து கொள்ள
முடியாது. மனிதர்கள் நினைக்கின்றனர், சுயதரிசனச் சக்கரதாரிகளோ தேவதைகள், யார் இவர்கள் வெளிவந்துள்ளனர்? தங்களை பிராமணகுல பூஷணர்கள், சுயதரிசனச் சக்கரதாரி எனச்
சொல்லிக் கொள்கின்றனர்?
இந்த
விஷயங்களைக் குழந்தைகள் நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். இவை மிகவும் ஆழமான, களிப்பூட்டும் விஷயங்களாகும். ஞானத்தின்
சங்கொலியை நீங்கள் எழுப்புகிறீர்கள். தேவதைகளோ செய்வதில்லை. அவர்களோ சிவபாபா வின்
சங்கொலியைக் கேட்டு தேவதை ஆகிறார்கள். சிவபாபாவோ ஞானம் நிறைந்தவர். ஆனால் அவருக்கு
சங்கு எப்படிக் கொடுப்பார்கள்? ஞானத்தையோ நிச்சயமாக யார் வாயின் மூலமாகவாவது தான் கொடுப்பார் இல்லையா? அது தான் முரளி எனச் சொல்லப்
படுகின்றது. மற்றப்படி மூங்கிலால் ஆன முரளி எதுவும் (புள்ளாங்குழல் இசை) கிடையாது.
நிச்சமயாக ஞானத்தின் முரளி ஒலித்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களோ, இந்தப் பூஜை, பக்தி முதலியவை பரம்பரையாக
நடந்து வந்துள்ளதாக நினைக்கின்றனர். ஆனால் பரம்பரையாக எந்த ஒரு விசயமும் நடைபெற
முடியாது. இரட்சாபந்தன் முதலியவை பரம்பரையாக நடைபெற்று வந்துள்ளன என்று சொல்லவும்
செய்கின்றனர். நல்லது,
பரம்பரையாக
என்றால் எப்போதிருந்து?
இதை
சொல்லுங்கள். பரமாத்மா தூய்மை இல்லாத ஒரு உலகத்தைப் படைத்தாரா என்ன? அப்போது அவரைப் பதீதலிபாவனர் என
ஏன் அழைக்கிறீர்கள்?
படிப்பின்
விஷயங்கள் தினமும் புத்தியில் வர வேண்டும். வாயைத் திறப்பதற்கான (பேசுவதற்கு)
பயிற்சி செய்ய வேண்டும். நீங்களோ அநேகருக்குப் புரிய வைக்க முடியும். தனது
முன்னேற்றத்திற்காக ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். எப்படி பாபா அனைவருக்கும்
வழி சொல்கிறார். நாம் பிறகு மற்றவர்களுக்கு வழி சொல்ல வேண்டும். அப்போது தான்
பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெறுவீர்கள். மற்றப்படி வெற்றுக் கூச்சல் போடுவதால்
ஆஸ்தியைப் பெற முடியாது. பாபாவுக்கு மிகவும் இரக்கம் வருகிறது எவ்வளவு புரிய
வைக்கிறார்! ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை. எவ்வளவு இரத்தினங்கள் கிடைக்கின்றன!
இரத்தினங்களின் விஸ்தாரமும் அதிகம் உள்ளது இல்லையா? இரத்தினங் களிலும் வித்தியாசம் அதிகம்
உள்ளது. சிலவற்றின் மதிப்பு லட்சம் ரூபாய் பெறுமானதாக உள்ளதென்றால் சிலவற்றின்
மதிப்பு பிறகு ஒரு ரூபாய் இருக்கும். இவை கூட அழியாத ஞான இரத்தினங்கள். அவற்றை
தாரணை செய்து,
மற்றவர்
களையும் செய்வித்தால் எவ்வளவு உயர்ந்த பதவி பெறுவார்கள்! குழந்தைகளின்
வாயிலிருந்து எப்போதுமே இரத்தினங்கள் தான் வெளிப்பட வேண்டும். புத்தி புரிந்து
கொள்கிறது,
ஆனால்
வாயினால் சொல்லவில்லை என்றால் அதன் மதிப்பு என்னவாகும்? யார் முயற்சி செய்கிறார் களோ, தங்களுக்கு சமமாக ஆக்குகிறார்கள்
என்றால் பலனும் கூட அதிகம் கிடைக்கும். இந்தச் சேவை செய்வதும் கற்றுத் தருவதும்
குறைந்த சேவையா என்ன?
உங்களுடைய
புத்தியில் இப்போது ஒளி வந்துள்ளது. அனைவரிலும் பெரிய செல்வந்தர் யார்? அப்போது 10-12 பேரின் பெயர்களைச்
சொல்கின்றனர். நீங்களும் அறிவீர்கள், இந்த டிராமாவில் முக்கிய மானவர்கள் யார்-யார்? பரமபிதா பரமாத்மா சிவன்
படைப்பவர்,
இயக்குநர், முக்கிய நடிகர். உயர்ந்தவரிலும்
உயர்ந்தவர் சிவபாபா. அதன் பிறகு சூட்சுமவதன, ஸ்தூலவதனவாசிகள். இந்த அனைத்து விஷயங்களையும்
நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருக்கிறீர்கள். கல்பத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான
வருடங்கள் கிடையாது. கல்பத்தின் ஆயுளே 5000 வருடங்கள் தான். மனிதர்கள் அனைவரும்
எவ்வளவு அடர்ந்த காரிருளில் உள்ளனர்! நீங்கள் இப்போது அஞ்ஞான இருளில் இருந்து
விலகி எவ்வளவு ஒளியில் வந்திருக்கிறீர்கள்! சிலரோ ஒளியில் வந்துள்ளனர், இன்னும் சிலரோ இருளிலேயே
உள்ளனர். இதில் முழுவதும் புத்தியின் விஷயமாகும். விசாலபுத்தி உள்ள சிலரோ உடனே
புரிந்து கொள்கின்றனர். ஆத்மாவோ நட்சத்திரம் போல் உள்ளது. புருவமத்தியில் பெரிய
பொருளோ இருக்க முடியாது. நிச்சயமாக இந்தக் கண்களால் பார்க்க முடியாத அப்படிப்பட்ட
ஒரு பொருள். பெரிய பொருளாக இருந்தால் பார்க்க முடியும். ஆத்மாவோ மிக சூட்சுமமானது, புள்ளியைப் போல் உள்ளது. இவை
ஆழத்திலும் ஆழமான விஷயங்கள். ஆரம்பத்தில் அகண்ட ஜோதி தத்துவம் என்று சொல்லி யிருந்தனர்.
ஆரம்பத்திலேயே நட்சத்திரம் போன்றது எனச் சொல்லியிருந்தால் புரிந்து கொண்டிருக்க
மாட்டார்கள். முழு ஞானத்தையும் ஒரு நாளிலேயே தந்து விட மாட்டார். நாளுக்கு நாள்
ஆழமான விஷயங்களை பாபா சொல்கிறார். ஞானக் கடலிடம் இருந்து அளவற்ற செல்வம்
கிடைக்கிறது. உயிருடன் இருக்கும் வரை ஞான அமிர்தத்தை அருந்திக் கொண்டே இருக்க
வேண்டும். தண்ணீரின் விஷயமல்ல. ஞானக்கடலிடம் இருந்து ஞான கங்கைகள்
வெளிப்படுகின்றன. அதுவோ தண்ணீரின் கடல், கங்கை என்றுமே உள்ளது என்று சொல்கின்றனர்.
இந்த ஸ்நானம் முதலியவை நடைபெற்றே வந்துள்ளன. நீங்கள் பார்த்தீர்கள் – பெண் குழந்தைகள் டிரான்ஸில்
சென்றார்கள் என்றால் கங்கை,
யமுனை
நதியில் போய் ராஸ்-நடனம் ஆடி வந்தனர். இங்கோ மூழ்கிப்போகக் கூடாது என்ற பயம்
உள்ளது. அங்கோ மூழ்குவது முதலான விஷயமே கிடையாது. ஒரு போதும் விபத்து நடக்காது. ஆக, இது தான் வசந்தகாலம், இப்போது தான் நீங்கள் சோழியில்
இருந்து வைரமாக அல்லது தூய்மையற்ற திலிருந்து தூய்மையாக ஆகிறீர்கள். தூய்மையான
உலகம் உருவாகுமானால் நிச்சயமாக தூய்மையற்ற உலகத்தின் விநாசம் நடைபெறும்.
மகாபாரதத்திலோ முழுமையாகக் காட்டப் படவில்லை. பாண்டவர்கள் மலை மீது போய் உருகி
மறைந்து போனார்கள்,
கூடவே
நாயையும் அழைத்துச் சென்றனர் எனக் காட்டுகின்றனர். பாண்டவர்கள் நாயையும் கூட
வளர்ப்பார்களா என்ன?
நீங்களோ
நாய் வளர்க்கவில்லை. நாய்க்கு எவ்வளவு மதிப்பு வைக்கப் பட்டுள்ளது! அநேகர் நாய்
வளர்க்கின்றனர்.
பாபா
குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார் - குழந்தைகள் நீங்கள் மிகவும்
மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும். உங்கள் மீது தினம் ஞானமழை பொழிந்து கொண்டுள்ளது.
பாபா எப்படி வருகிறார் என்று நீங்கள் அறிவீர்கள். ஞானமழை பொழியச் செய்கிறார்
மற்றும் பாரதத்தில் தான் வருகிறார். அதனால் பாரதத்திற்கு அதிக மகிமை உள்ளது. பாரதம்
தான் அழிவில்லாத கண்டம். பாரதம் தான் அழிவற்ற தந்தையின் பிறப்பிடமாக உள்ளது.
சிவபாபா அனைவரையும் தூய்மையாக்குபவர், வேறு யாரும் அறிந்து கொள்ளவில்லை. அவர்களோ, பரமாத்மா பெயர் வடிவத்திற்கு
அப்பாற் பட்டவர்,
சர்வவியாபி
என்று சொல்கின்றனர். எவ்வளவோ விஷயங்களைக் கூறிவிட்டனர்! பாபா சொல்கிறார், நான் வருகிறேன், பிராமணர் களை நான் அவசியம்
படைக்க வேண்டும். நாங்கள் பிரம்மாவின் குழந்தைகள், அதனால் பிராமணர் எனச் சொல்லிக் கொள்கிறோம்
என்று சொல்லவும் செய்கின்றனர். ஆனால் இந்த விஷயங்களை மறந்து விட்டுள்ளனர். சிவபாபா
வந்து என்ன செய்தார்?
எப்படி
பிரம்மா முகவம்சாவளியை உருவாக்கினார்? நீங்கள் இப்போது அறிவீர்கள் லி சிவபாபா
வந்திருக்கிறார். அவர் படைப்பவர் என்றால் நிச்சயமாகப் புது உலகம் தான் படைக்கப்
பட்டிருக்கும். யாருக்கும் தெரியாது. தெரியாத காரணத்தால் நிந்தனை செய்து கொண்டே
இருக்கின்றனர். அதனால் பாபா சொல்கிறார் யதா யதாஹி.... இதை யார் சொன்னார்? கிருஷ்ணரோ சொல்லவில்லை.
கிருஷ்ணரின் ஆத்மாவுக்கும் கூட இப்போது தெரிந்து விட்டது லி நாம் 84 பிறவிகளை
எடுக்கிறோம். உங்களில் யார் முதலில் பாஸாகி டிரான்ஸ்ஃபர் ஆகிறீர்களோ, அவர்கள் தான் முதலில் பிறவி
எடுக்கிறீர்கள். உங்கள் புத்தியில் எவ்வளவு ஞான ஒளி உள்ளது! ஆப்பரேஷன்
செய்கின்றனர் என்றால் ஒரு கண்ணை எடுத்து வேறொரு கண்ணில் வைக்கின்றனர். அதனால்
கண்ணில் ஒளி வந்து விடுகிறது. சிலருடைய குறைபாடு அப்படியே இருந்தும் விடுகிறது.
ஆத்மாக்களாகிய உங்களுடைய ஞானக்கண்கள் அழிந்து விட்டுள்ளன - அவற்றை மீண்டும்
தருவதற்காக பாபா வந்துள்ளார். உங்களுடைய ஞானக்கண் திறந்து கொண்டிருக்கின்றது.
மூன்றாவது கண் ஞானத்தின் கண்ணாகும். இப்போது அந்த மூன்றாவது கண்ணை தேவதைகளுக்குக்
கொடுத்து விட்டனர். அலங்காரம் சக்கரம் முதலியவை கூட விஷ்ணுவுக்குக் கொடுக்கப்
பட்டுள்ளது. உண்மையில் மூன்றாவது கண் பிராமணர்களாகிய உங்களுடையது. நீங்கள்
சர்வோத்தம பிராமணகுல பூஷணர்கள். தெய்விக குலம் மற்றும் அசுர குலம் உள்ளது. வர்ணம்
எனச் சொல்லுங்கள் அல்லது குலம் எனச் சொல்லுங்கள் லி இரண்டும் ஒன்று தான். ஞானம்
ஒன்று தான். எவ்வளவு நல்ல விஷயங்கள்! எந்த ஒரு சாஸ்திரத்திலும் இது கிடையாது.
நீங்கள் இப்போது திரிகாலதரிசி, திரிநேத்திரி,
சுயதரிசனச்
சக்கரதாரி ஆகியிருக் கிறீர்கள். தாமரை மலருக்கு சமமாகப் தூய்மையாக இருப்பதற்கு
முயற்சி செய்பவர்கள். நீங்கள் அறிவீர்கள் - சிலருக்குக் கண்கள் நன்றாகத் திறந்துள்ளது, சிலருக்குத் திறந்து கொண்டே
செல்கிறது. கடைசியில் நூற்றுக்கு நூறு திறக்கவே செய்யும். வாயிலிருந்து ஞான
ரத்தினங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பீர்களானால் ரூப்லிபஸந்த் எனச் சொல்லப்
படுவீர்கள். இப்போது நீங்கள் முயற்சி செய்யுங்கள். புருஷôர்த்தம் செய்ய வேண்டும். எவ்வளவு
முடியுமோ,
ஞானத்தில்
மிகவும் மலர்ந்த முகம்,
கம்பீரம், விசாலபுத்தி உள்ளவராகி சுகத்தை
அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்
கிறது,
வேறென்ன
வேண்டும்?
நல்லது.
இனிமையிலும்
இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய சாரம்:
1. சதா
ஞானத்தின் மழைத் தூறலில் குஷியாக இருக்க வேண்டும். ஆன்மிக வழிகாட்டி ஆகி
அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும். வாயிலிருந்து ஞானரத்தினங்கள் மட்டுமே வெளிவர
வேண்டும்.
2.
ஞானத்தைச் சிந்தனை செய்து சதா மலர்ந்த முகத்துடன், கம்பீரம் மற்றும் விசாலபுத்தி உள்ளவராகி சுகத்தை
அனுபவம் செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும்.
வரதானம்:
பணம் சம்பாதித்துக் கொண்டு அல்லது உறவினர்களைப்
பராமரித்துக் கொண்டு,
துக்கங்களில்
இருந்து விடுபட்டு இருக்கக் கூடிய பற்றற்றவர், டிரஸ்டி ஆகுக.
லௌகிக
சம்பந்தங்களின் இடையில் இருந்து கொண்டு சம்பந்தங்களைப் பராமரிப்பது வேறு விஷயம்
மற்றும் அவர்களின் பக்கம் கவரப்படுவது என்பது மற்றொரு விஷயம். டிரஸ்டியாக இருந்து
கொண்டு பணம் சம்பாதிப்பது வேறு விஷயம், பற்றுதலால் சம்பாதிப்பது, மோகத் தினால் சம்பாதிப்பது
என்பது வேறு விஷயம். பற்றற்றவர் அல்லது டிரஸ்டியின் அடையாளம் துக்கம் மற்றும்
அசாந்தியின் பெயர் அடையாளம் இருக்கக் கூடாது. சில நேரம் சம்பாதிப்பதில் பணம்
மேலேலிகீழே ஆனாலும் சம்பந்தங்களைப் பராமரிப்பதில் யாராவது நோய்வாய்ப் பட்டாலும்
துக்கத்தின் அலை வரக் கூடாது. சதா கவலையற்ற மகாராஜா.
சுலோகன்:
யார் பலமற்றவருக்கு தைரியமும் பலமும் கொடுத்துக் கொண்டே
இருக்கிறாரோ,
அவர்
தான் இரக்க மனம் உள்ளவர் எனச் சொல்லப்படுவார்.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments