Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
07-09-2022 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் கற்பித்தல்களைக் கிரகித்து, தெய்வீகக் குணங்கள் உடைய
மலர்கள் ஆகுங்கள். நீங்கள் ஞானோதயம் பெற்றுள்ளீர்கள், ஆகவே, சதா முகமலர்ச்சியுடன்
இருங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின் எந்த ஆழமான, களிப்பூட்டுகின்ற
விடயங்கள் பற்றிச் செவிமடுக்கும்பொழுது, மக்கள் குழப்பமடைகின்றார்கள்?
பதில்:
1.
நீங்கள்
கூறுகின்றீர்கள்: இப்பொழுது நாங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகளான, பிராமணக் குல
அலங்காரங்கள். நாங்களே ஞானச் சங்கை ஊதுபவர்கள். நாங்களே திரிநேற்றிகளும், திரிகாலதரிசிகளும் ஆவோம்.
தேவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அலங்காரங்கள் அனைத்தும் உண்மையில் எங்களுக்கே
உரியன. மக்கள் இவ்விடயங்களைச் செவிமடுக்கும்பொழுது, குழப்படைகின்றனர். 2) நீங்கள் கூறுகின்றீர்கள்:
இவரின் வாயினூடாகத் தந்தை எங்களுக்குக் கொடுக்கின்ற ஞானமே சங்கை ஊதுவதாகும். இதன்
மூலம் நாங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாகுகின்றோம். இதுவே முரளி என
அழைக்கப்படுகின்றது;
இது
ஒரு மரப் புல்லாங்குழல் அல்ல, இவற்றையே மக்கள் புரிந்துகொள்வதற்குச்
சிரமமான,
மிகவும்
ஆழமான,
களிப்பூட்டும்
விடயங்கள் என்று கண்டுகொள்கின்றார்கள்.
பாடல்: இதுவே உலகை மறப்பதற்கான
வசந்த காலம்…..
ஓம்
சாந்தி. இதுவே எங்களுக்கான அதிமேன்மையான வசந்த காலம் என்பதை இனிமையிலும் இனிமையான, கடவுளின் குழந்தைகள் அறிவார்கள்.
மலர்கள் போன்ற அனைத்தும் வசந்த காலத்தில் மலர்கின்றன. இதுவே எல்லையற்ற வசந்த
காலமாகும். உங்கள் மீது ஞான மழை பொழியப்;படுகின்றது. எனவே, நீங்கள் காய்ந்த முட்களிலிருந்து
மலர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் மாத்திரமே நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக இதனை அறிவீர்கள்.
ஞான மழையினால்,
தாங்கள்
முட்களிலிருந்து மலர்கள் ஆகுகின்றார்கள் எனச் சிலர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.
ஒரு விருட்சம் முற்றிலும் காய்ந்து விட்டபொழுது, ஓர் இலை கூட எஞ்சுவதில்லை. இது ஒவ்வொரு
வருடமும் நடைபெறுகின்றது. பின்னர், மழைக் காலத்திலே அழகான இலைகளும், மலர்களும் உள்ளன. ஆகவே, இந்த வசந்த காலத்தின் ஞான
மழையானது முதற்தரமானதாகும். இப்பொழுது இது முட்களின் உலகமாகும். விருட்சம்
கூறுகின்றது: நான் முட்களின் விருட்சமாகி விட்டேன், பின்னர் ஞான மழையினால் மலர்கள் நிறைந்த
விருட்சம் ஆகுகின்றேன். நீங்கள் ஒவ்வொருவருமே ஓர் உயிர்வாழும் விருட்சம் ஆவீர்கள்.
இப்பொழுது நீங்கள் ஞானோதயம் பெற்றுள்ளீர்கள், அதன் மூலம் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக்
கோருகின்றீர்கள். நீங்கள் என்னவாக இருந்ததிலிருந்து என்னவாக ஆகியுள்ளீர்கள் எனப்
பாருங்கள்! நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள்
ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். விஷ்ணு என்பது இரட்டை ரூபமாகும். ஒரு
தம்பதியின் ரூபத்தில் காட்சியும் கொடுக்கப்படுகின்றது. அவர்கள் விஷ்ணுவை நான்கு
கரங்களுடன் காட்டியுள்ளார்கள்; எவ்வாறாயினும்,
அவரிடம்
எந்த ஞானமுமில்லை. இரண்டு ரூபங்களும் ஒன்றிணைந்து, நடனம் ஆடுகின்றன. தந்தை
விளங்கப்படுத்துகின்றார்: தீபாவளியின்பொழுது, மகா இலக்ஷ்மி (நான்கு கரங்களுடைய இலக்ஷ்மி)
வருகின்றார். நீங்கள் அவர்கள் இருவரையுமே வரவழைக்கின்றீர்கள். இலக்ஷ்மி முன்னாலும், நாராயணன் அவருக்குப் பின்னாலும்
உள்ளனர். இலக்ஷ்மிக்கு இரண்டு கரங்களும், மகா இலக்ஷ்மிக்கு நான்கு கரங்களும் உள்ளன.
இப்பொழுதே நீங்கள் இவ்விடயங்களை அறிவீர்கள். முன்னர் நீங்கள் அவற்றில் எதையுமே அறிந்திருக்கவில்லை.
நீங்கள் முற்றிலும் முட்களைப் போன்று இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் மலர்கள் ஆகுகின்றீர்கள்.
மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு, கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை என்று
கிராந்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திய யுகத்திலேயே தேவர்கள் உள்ளனர். அவர்கள்
தெய்வீகக் குணங்களைக் கொண்டுள்ளனர். மனிதர்கள் இந்நேரத்தில் அசுர குணங்களைக்
கொண்டிருக்கின்றனர்,
ஆனால்
நீங்களோ கடவுளின் தெய்வீகக் குணங்களைக் கொண்டுள்ளீர்கள். கடவுள் இங்கமர்ந்திருந்து, உங்களைத் தெய்வீகக் குணங்கள்
உடையவர்கள் ஆக்குகின்றார். பாபாவின் கற்பித்தல்கள் மூலம் நாங்கள் தெய்வீகக்
குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆகுகின்றோம். பாரதத்தின் புகழும் உள்ளது; அதாவது, பாரதத்தில் வாழ்ந்த மக்களின்
பெருமளவு புகழ் பாடப்பட்டுள்ளது, ஆனால் அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார் என்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள்
பெரிய ஆலயங்களைக் கட்டுகின்றார்கள், ஆனால் தாங்கள் கட்டிய ஆலயங்களுக்கு
உரியவர்களின் தொழிலை அவர்கள் அறிய மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது சிறந்த
ஞானோதயத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் மிகவும் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும்.
அங்கே நீங்கள் 21 பிறவிகளுக்கு முகமலர்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் 21
பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காகவே இந்தக் கல்வியைக் கற்கின்றீர்கள்
என்பதை அறிவீர்கள். நீங்கள் ஞானத்தைக் கற்பதால், வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். இது
உங்களின் இறைதந்தையின் மாணவ வாழ்க்கையாகும். நீங்கள் சூரிய வம்ச குலத்தின்
அதிபதிகளாக,
அதாவது, சுவர்க்கத்தின் அதிபதிகளாக
ஆகுகின்றீர்கள். தூய உலகிலும் அனைவரும் சம அந்தஸ்தைக் கோருவதில்லை. ஓர்
இலக்ஷ்மியும்,
நாராயணனும்
மட்டுமே இராச்சியத்தை ஆட்சிசெய்கின்றார்கள் என்றில்லை. அங்கே வம்சமும், இராச்சியமும் மட்டுமே இருக்கும்
என்பதை எவருமே அறியார். அங்கே சூரிய, சந்திர வம்சத்தவர்கள் இருந்தார்கள். சிவபாபா
ஒரு புதிய உலகை ஸ்தாபித்தார். இவ்வுலக மக்களின் புத்தியில் இருளே உள்ளது. நீங்கள்
ஒளியில் இருக்கின்றீர்கள். தூய உலகமும், தூய்மையற்ற உலகமும் உள்ளன. தூய உலகில்
வரிசைக்கிரமமான அந்தஸ்து உள்ளது. பிரஜைகளின் அந்தஸ்தும் வரிசைக்கிரமமானது. அங்கே
அனைவருக்கும் சந்தோஷத்தைத் தவிர, வேறு எதுவுமில்லை. ஒவ்வொருவரும் தனது சொந்த இராச்சியத்தை அல்லது தனது சொந்த
நிலத்தைக் கொண்டிருப்பர். தூய்மையற்ற உலகில் அனைவரும் தூய்மைற்றவர்கள், ஆனால் அதுவும்
வரிசைக்கிரமமாகும். உதாரணமாக, சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனுடையதே, அதியுயர்ந்த வம்சம் ஆகும். இளவரசி இராதையும், இளவரசர் கிருஷ்ணரும் தங்களது
திருமணத்தின் பின்னர் இலக்ஷ்மியும், நாராயணனும் ஆகுகின்றனர். அது இலக்ஷ்மி
நாராயணனின் வம்சம் என அழைக்கப்படும். அது இராதை, கிருஷ்ணரின் வம்சம் என அழைக்கப்பட மாட்டாது.
அரசரின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தகைய சிறிய விடயத்தைக் கூட எவரும்
அறியார். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக இதை அறிவீர்கள். ஓர் இராச்சியத்தில்
உள்ள அந்தஸ்து வரிசைக்கிரமமானது. சூரிய வம்ச இராச்சியத்திற்கும், சுடலையாண்டிகளாக ஆகுகின்ற
பிரஜைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. தூய்மையற்ற உலகிலும் அது
வரிசைக்கிரமமானது. தந்தை இப்பொழுது செயல், நடுநிலைச் செயல், பாவச் செயலின் தத்துவத்தை
உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்!
பாபா ஒருபொழுதும் பார்த்திராத பல குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தங்கள் மத்தியில்
மிக நல்ல சேவையைச் செய்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் தந்தையின் அறிமுகத்தைக்
கொடுக்கின்றனர். அவர்கள் நியமிக்கப்பட்ட ஒரு பிராமண ஆசிரியர் இல்லாமலே, நிலையத்தை நடாத்துகின்றனர். இருப்பினும், அவர்கள் தந்தையை நேரடியாகச்
சந்திக்கவில்லை,
இருந்தும்
அவர்கள் சேவை செய்து,
ஏனையோரையும்
தங்களுக்குச் சமமாக ஆக்குகின்றனர். பாபாவுக்கு முன்னால் நேரடியாக இருப்பவர்கள், அந்தளவு சேவையைச் செய்வதில்லை.
நீங்கள் ஆன்மீக யாத்திரையைக் கற்பிக்க வேண்டும். நீங்களே ஆன்மீக வழிகாட்டிகள்; நீங்களும் பாதையைக்
காட்டுகின்றீர்கள். ஓ ஆத்மாக்களே, தந்தையை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்கள் நீண்டகாலமாகத் தந்தையிடமிருந்து
பிரிந்திருந்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தக் கணக்கும் உள்ளது. அவர்கள் நீண்ட
காலத்தை நிரூபிக்கின்றார்கள். நீங்களே அதிகளவு காலம் பிரிந்திருந்தவர்கள். நீங்கள்
சூரிய,
சந்திர
வம்சங்களுக்கு உரியவர்களாக இருந்தீர்கள். மறுபிறவிச் சக்கரத்தில், நீங்கள் 84 பிறவிகளை
எடுத்துள்ளீர்கள்;;
அனைவருக்கும்
84 பிறவிகள் இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞான மழைப் பொழிவின் கீழ்
உள்ளீர்கள். இது உங்கள் மாணவ வாழ்க்கையாகும். சிலர் தங்கள் வீட்டையும், குடும்பத்தையும்
பராமரிக்கின்றபொழுது,
வேறொரு
பாடநெறியையும் எடுக்கின்றனர். இங்கே இது தூய்மைக்கான கேள்வி மட்டுமே ஆகும்.
நீங்கள் தந்தையையும்,
உங்கள்
ஆஸ்தியையும் நினைவு செய்வதுடன், கற்கவும் வேண்டும். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். பெண் சிங்கத்தின்
பாலைத் தங்கப் பாத்திரத்தில் மாத்திரமே வைத்திருக்க முடியும் என்று
கூறப்படுகின்றது. தூய்மையில்லாமல், உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாது எனத்
தந்தையும் கூறுகின்றார். இதனாலேயே பாபா கூறுகின்றார்: இந்தக் கொடிய எதிரியான
காமத்தை வெல்லுங்கள். தூய்மையாகுங்கள்! என்னை அறிந்து கொள்ளுங்கள், அப்பொழுதே என்னால் உங்கள்
புத்தியின் பூட்டைத் திறக்க முடியும். நீங்கள் தூய்மையாகி, பிராமணக் குலத்தின்
அலங்காரங்களாகும்வரை,
உங்களால்
எதையும் கிரகிக்க முடியாது. பிராமணக் குலத்தின் அலங்காரங்களாகிய நீங்களே, சுயதரிசனச் சக்கரதாரிகள். வேறு
எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. தேவர்களே சுயதரிசனச் சக்கரத்தைச்
சுழற்றுபவர்கள் என மக்கள் நினைக்கின்றனர். அவர்கள் வினவுகின்றனர்: தாங்கள்
பிராமணக் குலத்தின் அலங்காரங்கள் எனவும், சுயதரிசனச் சக்கரதாரிகள் எனவும் கூறுகின்ற
இவர்கள் யார்?
குழந்தைகளாகிய
நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். இவை மிகவும் ஆழமான, களிப்பூட்டும் விடயங்களாகும்.
நீங்கள் ஞானச் சங்கை ஊதுகின்றீர்கள். தேவர்கள் அதனைச் செய்யவில்லை. சிவபாபா ஊதிய
சங்கைச் செவிமடுத்து,
அவர்கள்
தேவர்கள் ஆகினார்கள். சிவபாபா ஞானம் நிறைந்தவர், ஆனால் எவ்வாறு நீங்கள் அவருக்குச் சங்கைக்
கொடுக்க முடியும்?
அவர்
நிச்சயமாக ஒருவரின் வாயினூடாகவே, உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். அவர் பேசுபவை முரளி என அழைக்கப்படுகின்றது.
அது மரப் புல்லாங்குழல் அல்ல. இப்பொழுதே ஞான முரளி இசைக்கப்படுகின்றது. பூஐpப்பது, பக்தி போன்றவை தொன்றுதொட்ட
காலத்திலிருந்தே தொடர்கின்றன என மக்கள் எண்ணுகின்றனர், ஆனால்;, தொன்றுதொட்ட காலத்திலிருந்து
எதுவும் தொடர முடியாது. இரக்ஷாபந்தன் போன்றவை ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்துள்ளன
என அவர்கள் கூறுகின்றனர். சரி, “ஆரம்ப காலத்திலிருந்து”
என்றால்
எப்பொழுது?
குறைந்தபட்சம்
அதையாவது எங்களுக்குக் கூறுங்கள்! கடவுள் தூய்மையற்ற உலகைப் படைத்தாரா? எனவே, ஏன் நீங்கள் அவரைத்
தூய்மையாக்குபவர் என அழைக்கின்றீர்கள்? கற்பதால், உங்கள் புத்தியில் ஒவ்வொரு நாளும்
கருத்துக்கள் பிரவேசிக்க வேண்டும். நீங்களும் உங்களின் வாயைத் திறப்பதற்குப் (இந்த
ஞானத்தைப் பேசுவதற்கு) பயிற்சி செய்ய வேண்டும். உங்களால் ஏனைய பலருக்கும்
விளங்கப்படுத்த முடியும். நீங்கள் உங்களுடைய சொந்த முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை
உருவாக்க வேண்டும். பாபா எவ்வாறு அனைவருக்கும் பாதையைக் காட்டுகின்றாரோ, அவ்வாறே பின்னர் நாங்களும்
அனைவருக்கும் பாதையைக் காட்ட வேண்டும். அப்பொழுதே, நாங்கள் எங்களுடைய தந்தையிடமிருந்து
ஆஸ்தியைக் கோர முடியும். எவ்வாறாயினும் பெருமளவு சத்தம் செய்வதால், எங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து
எங்களால் கோர முடியாது. தந்தை பெருமளவு கருணை கொள்கின்றார். அவர் அதிகளவு
விளங்கப்படுத்துகின்றார்,
ஆனால் அது
சில குழந்தைகளின் பாக்கியத்தில் இல்லாதுள்ளது. நீங்கள் பல இரத்தினங்களைப்
பெறுகின்றீர்கள். இரத்தினங்களின் பெருமளவு விரிவாக்கம் உள்ளது.
இரத்தினங்களுக்கிடையேயும்,
அதிகளவு
வேறுபாடு உள்ளது. சில நூறாயிரம் ரூபாய்கள் பெறுமதி வாய்ந்தவை, சில ஒரு ரூபாய் பெறுமதி
வாய்ந்தவை. இவை நீங்களும் கிரகித்து, ஏனையோரையும் கிரகிக்கத் தூண்டுவதனால், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக்
கோருகின்ற,
அழியாத
ஞான இரத்தினங்களாகும். குழந்தைகளாகிய உங்கள் வாயிலிருந்து, சதா இரத்தினங்கள் மாத்திரம்
வெளிவர வேண்டும். இவ்விடயங்களை உங்கள் புத்தியால் புரிந்துகொண்டாலும், நீங்கள் அவை பற்றிப்
பேசவில்லையானால்,
அவற்றின்
பெறுமதி என்னவாக இருக்கும்?
முயற்சி
செய்து,
ஏனையோரையும்
தமக்குச் சமமாக்குபவர்களும் பெருமளவு பலனைப் பெறுவார்கள். இந்தச் சேவையைச்
செய்வதுடன்,
பிறருக்குக்
கற்பிப்பதும் ஒரு சிறிய சேவை அல்ல. உங்களுடைய புத்தி இப்பொழுது ஞானோதயம்
பெற்றுள்ளது. அனைவரிலும் செல்வந்தர்கள் யார்? அவர்கள் 10 அல்லது 12 பெயர்களைக்
குறிப்பிடுவார்கள். இந்த நாடகத்தில் பிரதானமானவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனே படைப்பவரும், இயக்குபவரும், பிரதான நடிகருமாவார். சிவபாபாவே அதிமேலானவர், பின்னர் சூட்சும உலகவாசிகளும், பௌதீக உலக வாசிகளும் உள்ளனர்.
இந்நேரத்திலேயே நீங்கள் இந்த விடயங்களை அறிவீர்கள். கல்பத்தின் கால எல்லை நூறாயிரக்
கணக்கான வருடங்களல்ல. ஒவ்வொரு கல்பத்தினதும் கால எல்லை 5000 வருடங்கள் மட்டுமே
ஆகும். மக்கள் அதிகளவு காரிருளில் உள்ளனர்! நீங்கள் இப்பொழுது அறியாமை; இருளிலிருந்து விலகி, அதிக ஒளிக்குள் வந்துள்ளீர்கள்.
சிலர் ஒளிக்குள் வந்துள்ளனர், ஏனையோர் இன்னமும் இருளிலேயே உள்ளனர். இங்குள்ள அனைத்தும் புத்தியைப் பற்றிய
கேள்வி ஆகும். ஒரு பரந்த,
எல்லையற்ற
புத்தியைக் கொண்டவர்கள் விரைவாகப் புரிந்துகொள்கின்றனர். ஓர் ஆத்மா நட்சத்திரம்
போன்றவர்,
பெரிதான
ஒன்று நெற்றியின் மத்தியில் இருக்க முடியாது. இது நிச்சயமாக இந்தக் கண்களால் பார்க்க
முடியாத ஒன்றாகும். அது ஒரு பெரிய பொருளாக இருந்திருந்தால், அதனைப் பார்க்க இயலும். ஆத்மா
ஒரு புள்ளியைப் போல் அதி சூட்சுமமானவர். இவை மிகவும் ஆழமான விடயங்களாகும்.
ஆரம்பத்தில் ஓர் ஆத்மாவானவர் ஒளித் தத்துவமே என உங்களுக்குக் கூறப்பட்டது. அது
நட்சத்திரம் போன்றது என ஆரம்பத்தில் உங்களுக்குக் கூறியிருந்தால், உங்களால் புரிந்துகொள்ள
முடியாதிருந்திருக்கும். அவர் ஒரு நாளிலேயே உங்களுக்கு ஞானம் அனைத்தையும் கொடுக்க
மாட்டார். நாளுக்கு நாள்,
தந்தை
உங்களுக்கு மிகவும் ஆழமான விடயங்களைக் கூறுகின்றார். நீங்கள் ஞானக் கடலிடமிருந்து
பெருமளவு செல்வத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் வாழும்வரை, தொடர்ந்தும் ஞானாமிர்தத்தை
அருந்த வேண்டும். இதில் தண்ணீர் பற்றிய கேள்வியே இல்லை. ஞானக் கடலிலிருந்தே ஞான
கங்கைகள் வெளியாகுகின்றன. அது நீராலான கடல் ஆகும். கங்கை அநாதியானது என அவர்கள்
கூறுகின்றனர். அந்த நீPரில் நீராடுவது இன்னமும்
தொடர்கின்றது. புத்திரிகள் திரான்சில் செல்லும்பொழுது, கங்கை, யமுனை ஆற்றங்கரைகளில் எவ்வாறு
நடனமாடுவார்கள் என நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். இங்கே நீங்கள் மூழ்கி
விடுவீர்கள் எனப் பயப்படுகின்றீர்கள். அங்கே மூழ்குதல் என்ற கேள்விக்கே இடமில்லை.
அங்கே விபத்துக்களும் இருக்க மாட்டாது. ஆகவே, இதுவே நீங்கள் சிப்பிகளிலிருந்து
வைரங்களாகவும்,
தூய்மையற்றவர்களிலிருந்து
தூய்மையானவர்களாகவும் ஆகுகின்ற வசந்த காலமாகும். தூய உலகம் உருவாக்கப்படும்பொழுது, தூய்மையற்ற உலகம் நிச்சயமாக
அழிக்கப்படும். அவர்கள் மகாபாரதத்தில் அனைத்தையும் முழுமையாகக் காட்டவில்லை.
பாண்டவர்கள் மலையிலே சென்று உருகி விட்டதாகவும், அவர்களுடன் ஒரு நாய் இருந்ததாகவும் அவர்கள்
காட்டியுள்ளனர். பாண்டவர்களும் செல்லப் பிராணியாக நாயை வைத்திருந்தார்களா? நீங்கள் நாய்களைச் செல்லப்
பிராணிகளாக வைத்திருப்பதில்லை. மக்கள் நாய்களுக்கு அதிகளவு மதிப்பு
கொடுக்கின்றார்கள். பலர் நாய்களைச் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கின்றனர்.
நீங்கள் மிகவும் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனத் தந்தை குழந்தைகளான
உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்கள் மீது தினமும் ஞானம் பொழியப்படுகின்றது.
எவ்வாறு பாபா வந்து,
உங்கள்
மீது ஞானத்தைப் பொழிகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் பாரதத்தில்
மாத்திரமே வருகின்றார். இதனாலேயே பாரதத்துக்குப் பெரும் புகழ் உள்ளது. பாரதம் ஓர்
அழியாத பூமியாகும். பாரதமே அநாதியான தந்தையின் பிறப்பிடம். அனைவரையும்
தூய்மையாக்குகின்ற சிவபாபாவை எவருமே அறியார். கடவுள் பெயர், ரூபத்துக்கு அப்பாற்பட்டவர்
எனவும்,
சர்வவியாபி
எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பல வித்தியாசமான விடயங்கள் பற்றிப்
பேசியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார் நான் வருகிறேன். நான் நிச்சயமாகப் பிராமணர்களை
உருவாக்க வேண்டும். அவர்களே பிரம்மாவின் குழந்தைகள், இதனாலேயே அவர்கள் பிராமணர்கள் என
அழைக்கப்படுகின்றனர் என மக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், சிவபாபா வந்தபொழுது என்ன
செய்தார்,
எவ்வாறு
அவர் பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களை உருவாக்கினார் என்பதையும் மக்;கள் மறந்து விட்டார்கள். சிவபாபா
வந்து விட்டார்,
அவரே
படைப்பவர் என்பதை நீங்கள் அறிந்துள்ளதால், நிச்சயமாக அவர் ஒரு புதிய படைப்பைப்
படைத்திருக்க வேண்டும். எவரும் அதனை அறியார். இதை அறிந்து கொள்ளாததால், அவர்கள் தொடர்ந்தும் அவரை
அவமதிக்கின்றனர். ஆகவே,
தந்தை கூறுகின்றார்:
அதர்மம் உச்சக் கட்டத்தை அடையும்பொழுது, நான் வருகின்றேன். இதைக் கூறியவர் யார்? கிருஷ்ணர் இதைக் கூறவில்லை. தான்
84 பிறவிகள் எடுப்பதைக் கிருஷ்ணரின் ஆத்மா இந்நேரத்திலேயே அறிகின்றார்.
சித்தியடைந்து,
மாற்றப்பட்டவர்களே, முதலில் பிறப்பு எடுக்கின்றனர்.
உங்களுடைய புத்தி அதிகளவு ஞானோதயம் பெற்றுள்ளது. ஒருவருக்குக் கண்ணில்
சத்திரசிகிச்சை நடக்கின்றபொழுது, அவர்கள் ஒரு கண்ணை அகற்றி, இன்னொன்றை அதற்குப் பதிலாக வைக்கின்றார்கள், அப்பொழுது பார்வையற்றவரால் பார்க்க
முடிகின்றது. சிலர் குறைபாடுகளுடன் விட்டுச் செல்கின்றனர். இப்பொழுது இல்லாத
ஞானமாகிய கண்ணை ஆத்மாக்களான உங்களுக்குக் கொடுப்பதற்கு பாபா வந்துள்ளார்.
உங்களுடைய ஞானக் கண்கள் இப்பொழுது திறக்கின்றன. மூன்றாவது கண்ணே ஞானமாகும்.
அவர்கள் தேவர்களை மூன்றாவது கண்ணுடன் காட்டியுள்ளார்கள். சக்கரம் போன்ற அனைத்து
அணிகலன்களும் விஷ்ணுவிற்கே கொடுக்கப்பட்டுள்ளன. உண்மையில், மூன்றாவது கண் பிராமணர்களான
உங்களுக்கு உரியது. நீங்களே பிராமணக் குலத்தின் அதிமேன்மையான அலங்காரங்கள்
ஆவீர்கள். தேவ குலமும்,
அசுர
குலமும் உள்ளன. நீங்கள் அதனை ஒரு குலம் அல்லது ஒரு சாதி என அழைத்தாலும், அது ஒரே விடயமே. ஒரேயொரு ஞானமே
உள்ளது. இவை மிக நல்ல விடயங்கள், ஆனால் இவை எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. இப்பொழுது நீங்கள்
திரிகாலதரிசிகளாகவும்,
திரிநேற்றிகளாகவும், சுயதரிசனச் சக்கரதாரிகளாகவும்
ஆகியுள்ளீர்கள். நீங்கள் தாமரை மலர் போல் தூய்மையாக இருப்பதற்கு முயற்சி
செய்பவர்கள். சிலரது கண்கள் மிக நன்றாகத் திறந்துள்ளன என்பதையும், ஏனையோரின் கண்கள் இப்பொழுது
தொடர்ந்தும் திறக்கின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இறுதியில் அவை 100
சதவீதம் திறக்கும். உங்கள் வாயிலிருந்து தொடர்ந்தும் ஞான இரத்தினங்கள் வெளியாகும்.
அப்பொழுதே நீங்கள் ரூப்;பும், பசாந்தும் என்று
அழைக்கப்படுவீர்கள். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி
செய்து,
இயன்றளவுக்கு
மிகவும் முகமலர்ச்சி உடையவர்களாகவும், முதிர்ச்சியானவர்களாகவும், ஞானத்தில் பரந்த, எல்லையற்ற புத்தி
உடையவர்களாகவும் ஆகி,
தொடர்ந்தும்
சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவதால், உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன்
கொண்டாட வேண்டும். அச்சா.
இனிமையிலும்
இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும்
பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக்
குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான
சாராம்சம்:
1. சதா பொழியப்படுகின்ற ஞான மழையின்
கீழ் நிலைத்திருங்கள். ஓர் ஆன்மீக வழிகாட்டியாகி, அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். உங்கள்
வாயிலிருந்து ஞான இரத்தினங்கள் மாத்திரமே வெளிவரட்டும்.
2. ஞானக் கடலைக் கடைந்து, சதா முகமலர்ச்சியாகவும், முதிர்ச்சியாகவும், ஒரு பரந்த, எல்லையற்ற புத்தியுடையவராகவும்
இருந்து,
சந்தோஷத்தை
அனுபவம் செய்து,
ஏனையோரையும்
அவ்வாறு செய்ய உதவுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கும்பொழுதும், உங்கள் உறவினர்களுக்கான
உங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றும்பொழுதும், துன்பத்திலிருந்து விடுபட்டுள்ள, பற்றை வென்றவராகவும், நம்பிக்கைப்
பொறுப்பாளராகவும் இருப்பீர்களாக.
உங்கள்
லௌகீக உறவினர்கள் மத்தியில் வாழ்ந்தவாறு, அவர்களுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவது
என்பது அவர்கள் மீது பற்றைக் கொண்டிருப்பதிலிருந்து வேறுபட்ட ஒரு விடயமாகும். ஒரு
நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்து, வருமானத்தைச் சம்பாதிப்பது ஒரு விடயம், பற்றினால் சம்பாதிப்பது
இன்னுமொரு விடயமாகும். பற்றை வென்றவராகவும், நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் இருப்பவரின்
அடையாளமானது,
துன்பத்தினதோ
அல்லது அமைதியின்மையினதோ பெயரோ, சுவடோ இல்லாதிருப்பதாகும். நீங்கள் உங்கள்
உறவினர்களுக்கான உங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றும் வேளையில், வருமானத்தைச்
சம்பாதிப்பதில் ஏதேனும் தளம்பல் ஏற்பட்டாலோ, ஒருவர் நோய்வாய்ப்பட்டாலோ துன்ப அலைகள்
எதுவும் இல்லாதிருக்கட்டும். சதா ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாக இருங்கள்.
சுலோகம்:
பலவீனமான ஆத்மாக்களுக்குத் தொடர்ந்தும் தைரியத்தையும், வலிமையையும் கொடுப்பவரே
ஒரு கருணைநிறைந்த நபர் ஆவார்.
---ஓம் சாந்தி---
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments