Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 01.10.22

 Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

01-10-2022  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே ! தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். தங்களை அனைத்தும் அறிந்தவர் என்று நினைத்து கொள்ளக் கூடாது. நான் என்ன கர்மம் செய்வேனோ, என்னைப் பார்த்து எல்லோரும் செய்வார்கள் என்பது புத்தியில் இருக்கட்டும்.

கேள்வி:

எந்த நிலையை அமைத்து கொள்ள மிக மிக உழைப்பு (முயற்சி) செய்ய வேண்டும்?

பதில்:

இல்லற விவகாரங்களில் இருக்கையிலும், கணவன் மனைவி என்ற உணர்வு நீங்கி விட வேண்டும். மனதின் அளவில் கூட சங்கல்பம் விகல்பம் (விகார எண்ணங்கள்) எழக் கூடாது. ஆத்மாக் களாகிய நாம் சகோதர சகோதரர்கள் ஆவோம். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், சகோதர சகோதரிகள் ஆவோம். இந்த நிலையை அமைத்துக் கொள்வதில் நேரம் பிடிக்கிறது. சேர்ந்து இருக்கை யிலும், விகாரங்களின் நெருப்பு பிடிக்கக் கூடாது. தீயபார்வை கூடாது. இந்த பயிற்சி செய்ய வேண்டும். சர்வ சம்பந்தங்களின் சுவையாக இருக்கும் தாய் தந்தையை நினைவு செய்ய வேண்டும்.

பாடல்:  உலகமே மாறினாலும் நாங்கள் மாற மாட்டோம்



ஓம் சாந்தி. இது குழந்தைகளின் உத்தரவாதம் அல்லது வாக்குறுதி ஆகும். வாக்குறுதி ஒன்றும் வாயால் கூறப்படுவதில்லை. குழந்தைகள் தந்தையை அடையாளம் கண்டு கொண்டு விடும் பொழுது பிரதிக்ஞை (வாக்குறுதி) ஆகி விடுகிறது. ஒவ்வொருவரும் பதவியை அடைவதற்காக சுயேச்சையாக முயற்சி செய்கிறார்கள். பள்ளிக் கூடத்தில் எல்லோருமே நாம் உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்பதற்காக சுய விருப்பத்துடன் முயற்சி செய்கிறார்கள். இங்கு ஆத்மா படிக்கிறது. மேலும் பரமாத்மா கற்பிப்பதற்காக ஜீவாத்மா ஆகிறார். மேலும் இவருக்குள் பிரவேசம் செய்து இவருக்கு (பிரம்மாவிற்கு) மேலும் பிரம்மா முக வம்சாவளிக்கு படிப் பிக்கிறார். சுயம் பிரம்மாவிற்கு முக வம்சாவளி என்று கூற மாட்டார்கள். பிராமணர்கள் பிரம்மா முக வம்சாவளி ஆவார்கள். பிரம்மா சிவனின் முக வம்சாவளி கிடையாது. சிவபாபாவோ வந்து இவருக்குள் பிரவேசம் செய்து தன்னுடையவராக ஆக்குகிறார். இவர் கூட படைப்பு ஆவார். முதலில் பிரம்மாவைப் படைக்கிறார். விஷ்ணுவை படைப்பதில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரன் என்றும் பாடப்படுகிறது. விஷ்ணு, சங்கரர் மற்றும் பிரம்மா என்று கூறப்படுவ தில்லை. முதலில் பிரம்மாவைப் படைக்கிறார். பிரம்மாவின் தொழில் தனியானது ஆகும். இந்த ஒவ்வொரு விஷயமும் புரிந்து கொள்ள வேண்டியது ஆகும். இவருக்கு த்வமேவ மாதாஸ்ய பிதா... தந்தையும் தாயும் நீயே... என்று கூறப்படுகிறது. எனவே அவர் நிராகாரமானவர் ஆவார் அல்லவா? எனவே சாகாரத்தில் தாய் தந்தை வேண்டும். அதனால் தான் மம்மாவிற்கு தாய் இருக்கிறாரா? என்று கேட்கிறார்கள். ஆம் என்று கூறுவோம். பிரம்மா, மம்மாவிற்கும் தாயாக இருக்கிறார். பிரம்மாவிற்கு தாய் யாரும் கிடையாது. இந்த தாய் (பிரம்மா) பெண்ணாக இல்லாத காரணத்தினால், சரஸ்வதியை மம்மா என்று கூறுகிறார்கள். தந்தை படிப்பிக்கிறார். ஆக இவரும் படிக்கிறார். எப்படி நீங்கள் மாணவர் கள் ஆவீர்கள், அதே போல இவரும் ஆவார். சிவ பாபா ஒன்றும் மாணவர் அல்ல.

குழந்தைகளாகிய நீங்கள் பிரம்மாவின் பதவியையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இவர் எல்லோ ரையும் விட அதிகமாகப் படிக்கிறார். இவர் உண்மையில் அருகாமையில் இருக்கிறார் என்பதைப் பார்க்கிறீர்கள். முதலில் யாருடைய காதுகள் கேட்கின்றன? இந்த பிரம்மா எல்லோரையும் விட அருகில் இருக்கிறார். எனவே மம்மா, பாபா அதிகமாக கற்கிறார்கள் என்று கூறுவோம். பிறகு வரிசைக்கிரமமாக எல்லா குழந்தைகளும் படிக்கிறார்கள். பாபா, ஜகதீஷ் குழந்தை, மம்மா பாபாவை விடவும் நன்றாகப் புரிய வைக்கிறார் என்று கூறுகிறார் தான். பாபாவின் முரளியைப் படித்து தாரணை செய்து, பிறகு கீதா பத்திரிகை ஆகியவை தயாரிக்கிறார். ஏனெனில் இவர் சாஸ்திரங்கள் அதிகம் படித்துள்ளார். ஆங்கிலத்தில் கூட புத்திசாலியாக இருக்கிறார். இதற்கு மதிப்பு கொடுப்பது என்று கூறப் படுகிறது. மாணவர்கள் ஒருவர் மற்றவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். பாபா கூட மதிப்பு கொடுக் கிறார் அல்லவா? எனவே தந்தையைப் பின்பற்ற வேண்டும் (ஃபாலோ ஃபாதர்). இப்பொழுது 16 கலை ஆகவில்லை தான். வரிசைக் கிரமமாகவோ இருக்கிறார்கள் அல்லவா? ஏதாவதொரு தவறுகள் அனைவர் மூலமாகவும் ஆகிக் கொண்டே இருக்கிறது. எனவே தங்களை அனைத்தும் தெரிந்தவர் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எப்படிப்பட்ட கர்மம் தந்தை செய்கிறாரோ அல்லது நான் செய்வேனோ, என்னைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள். எனவே ஒருவர் மற்றவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். பாபா கூட மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டி உள்ளது. இவர்கள் கணவன் மனைவியை சகோதர சகோதரியாக ஆக்குகிறார்கள் என்று ஜனங்கள் கூறுகிறார்கள். ஆக யார் புத்திசாலி குழந்தையாக இருப்பாரோ அவர் சட்டென்று இவ்வாறு கூறுவார், பரமாத்மாவின் குழந்தைகளாக அனைவரும் ஆவார்கள். எனவே சகோதர சகோதரி ஆகிறார்கள் அல்லவா? பிரஜாபிதாவின் குழந்தைகள், சகோதர சகோதரி ஆகிறார்கள் அல்லவா? சகோதர சகோதரியாக இருப்பது நல்லது அல்லவா? பாபாவின் குழந்தைகள் ஆனீர்கள் என்றால், ஆஸ்தியை எடுக்க முடியும். ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து பிரம்மா பாபா மூலமாக கிடைக்க வேண்டி உள்ளது. எனவே பிரம்மா குமார் குமாரி ஆக வேண்டி உள்ளது. பிறகு ஒரு பொழுதும் விகாரத்தில் போக முடியாது. இல்லையென்றால் குற்றத் தாக்குதல் ஆகி விடும். பாபா எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார். தூய்மையாக இருப்பதற்கான வழி முறைகள் கூட கூறுகிறார். மனைவியும் பாபா என்று கூறுகிறார். கணவனும் பாபா என்று கூறுகிறார். எனவே கணவன் மனைவி என்ற உணர்வு அறுபட்டு விடும். ஆதாம் மற்றும் பீபி மூலமாக சிருஷ்டியின் ஸ்தாபனை ஆகியது என்றும் கூறுகிறார்கள். எனவே அனைவரும் அவர்களது குழந்தைகள் ஆகிறார்கள். சகோதர ககோதரி ஆகிறார்கள். குமாரர்கள் குமாரிகளுக்கு அவ்வளவு உழைப்பு இல்லை. யார் படி ஏறி இருக்கிறார்களோ, அவர்கள் இறங்க வேண்டி இருக்கும். எனவே இறங்குவதில் முயற்சி தேவையாகிறது. அப்படியின்றி இருவரும் தனித் தனியாக இருக்க வேண்டும் என்பதல்ல. தோழன் தோழியாக ஆகி மட்டும் இருங்கள். சத்யுகத்தில் யாரும் அபவித்திரமாக இருப்பதில்லை. மேலும் அங்கு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்காது. இங்கு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அங்கு நேரத்திற்கேற்ப தானாவே சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) ஆகும். மனிதர்களோ இது எப்படி நடக்க முடியும் என்பார்கள்? உண்மை தான் இங்கு இருக்கக் கூடிய சம்பூர்ண விகாரிகளால் அங்கு நிர்விகாரியாக இருப்பார்கள் என்பதை எப்படி புரிந்து கொள்ள முடியும்.? அங்கு தேக அபிமானம் இருப்பதில்லை. இங்கு தேக அபிமானம் இருக்கிறது. சரீரம் விடும் பொழுது மனிதர்கள் எவ்வளவு அழுகிறார்கள். அங்கு அழுவது இருக்காது. அங்கு நேரம் வரும் பொழுது சரீரம் விட்டு போய் இளவரசர் ஆக வேண்டும் என்ற சாட்சாத்காரம் ஆகும். இங்கு கூட நீங்கள் வருங்காலத்தில் போய் மகாராஜா மகாராணி ஆகப் போகிறீர்கள் என்று சாட்சாத்காரம் செய்கிறீர்கள். கிருஷ்ணர் போன்ற பாலகனை மடியில் பார்க்கிறீர்கள். சாட்சாத்காரத்தினால் சூரிய வம்ச மகாராஜா மகாராணி ஆவீர்களா, இல்லை சந்திரவம்ச மகாராஜா மகாராணி ஆவீர்களா என்பது தெரிய வராது. ஏனெனில் இது முற்றிலும் புதிய விஷயம் ஆகும். எனவே முதலில் தந்தையை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. பாருங்கள் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.

அனைத்து சம்பந்தங்களின் சுவையாக நான் இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். என்னை நினைவு செய்யுங்கள் என்று நான் கூறுகிறேன். த்வமேவ மாதாஸ்ய பிதா... என்று கூறுகிறார்கள்....... ஒவ்வொரு விஷயத்திலும் நிச்சயம் ஏற்படுத்த வேண்டும். ஆனால் ஏதாவதொரு விஷயத்தில் சந்தேகம் வந்து விடுகிறது. பிறகு இராஜ்ய பதவியை அடைய முடியாது. எனவே மன்மனா பவ என்று தந்தை கூறுகிறார். தந்தையை நினைவு செய்யுங்கள். எனவே நீங்கள் பிரிய தரிசினிகள் ஆகிறீர்கள். இது ஆன்மீக பிரியதரிசினிகள் மற்றும் ஆன்மீக பிரியதரிசனர் ஆவார்கள். ஆத்மாக்களாகிய நாம் பரமாத்மாவின் பிரியதரிசினிகள் ஆவோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கிருஷ்ணர் அனைவருக்கும் பிரியதரிசனர் ஆக முடியாது. கிருஷ்ணரை எல்லோரும் நினைவு செய்வதில்லை. இது மன்மனாபவ என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது என்னிடம் வர வேண்டி உள்ளது. நாடகம் முடிவடைய வேண்டி உள்ளது. வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். எனவே அவசியம் வீடு நினைவிற்கு வரும். ஒவ்வொரு விஷயத்திற்குமான விளக்கம் முரளியில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் முரளியிலிருந்து குறித்துக் கொள்வதில்லை. பிறகு அதே விஷயங்களை பாபாவிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பிரியதரிசினிகள் மற்றும் பிரியதரிசனருடையதே முக்கியமான விஷயம் ஆகும். எல்லா பக்தர்களும் பிரியதரிசினிகள் ஆவார்கள். ஏனெனில் பரமாத்மாவை நினைவு செய்கிறார்கள். என்னுடையவர் ஒரே ஒருவர் மற்றவர் யாருமில்லை என்று கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இச்சமயத்தில் எல்லாமே புது புது விஷயங்கள் கேட்கிறீர்கள். ஆனால் கேட்க கேட்கவே மாயை ஓங்கி அறைந்து விடுகிறது. இராவணன் குறைவானவனா என்ன? தந்தை சர்வ சக்திவான் ஆவார். மாயை கூட சர்வ சக்திவான் ஆகும். அரை கல்பம் மாயையின் இராஜ்யம் நடக்கிறது. 5 விகாரங்களின் தானம் கொடுத்தீர்கள் என்றால் கிரகணம் விட்டு போகும் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். இருப்பினும் ஒரேயடியாக விடுபடுவதில்லை. ஒரு சிலர் தானம் கொடுத்து பிறகு திரும்ப வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். இது பைசாக்களின் விஷயம் அல்ல. விகாரங்களின் விஷயம் ஆகும். சாது சந்நியாசிகள் தானம் கொடுத்து திரும்பி வாங்கக் கூடாது என்று பைசாவிற்காக கூறுகிறார்கள். ஏனெனில் இதில் அவர்களுக்கு சம்பாத்தியம் உள்ளது. ஒரு சில மனிதர்கள் பின் சந்நியாசிகளிடம் சென்று குழந்தை வேண்டும் என்பார்கள். எங்களுடைய ஆசீர்வாதத்தினால் ஆகி விடும் என்று அவர்கள் கூறுவார்கள். ஒரு வேளை குழந்தை பிறந்து விட்டது என்றால் நாங்கள் தான் கொடுத்தோம் என்பார்கள். இறந்து விட்டால் விதி என்று கூறி விடுவார்கள். ஒரு வேளை யாரோ ஒருவருக்கு நினைத்த காரியம் ஏதோ நடந்து விட்டது என்றால், பின் அநேகருக்கு நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. இது போல் அவர்களுடைய விருத்தி ஆகிறது. ஒரு பக்கம் தங்களது மகிமை செய்கிறார்கள். மறு பக்கம் விதி என்று கூறுகிறார்கள். இச்சமயத்தில் நீங்கள் யாருக்குமே தெரியாத படை வீரர்கள் ஆவீர்கள். அங்கு பெயர் தெரியாத வீரர்களுக்கு நினைவார்த்தம் அமைக்கிறார்கள். மேலும் அங்கு மிகப் பெரியவர்களே போகிறார்கள் கூறுவார்கள் அந்த இராணுவ வீரர்கள் மீது மலர் மாலை இடுங்கள் என்று. அடே, யார் பற்றி தெரியவே இல்லையோ அவர்களுக்கு நினைவார்த்தம் எவ்வாறு அமைய முடியும். இப்பொழுது நீங்கள் (அன்-நோன்) யாருக்கும் தெரியாதவர்களாக இருக்கிறீர்கள். பின் நீங்கள் (வெரி வெல் நோன்) மிகவுமே பிரபலமானவர்களாக ஆகி விடுகிறீர்கள். உங்களுடைய கோவில்கள் அமைக்கப் படுகின்றன. இப்பொழுது நீங்கள் மறைமுக மாகவே இராம இராஜ்யம் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே - அருமையான குழந்தைகளாக ஆகி விட்டுள்ளீர்கள் அல்லவா? 5 ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் சந்தித்துள்ளீர்கள். யாருக்காவது காணாமல் போய் விட்ட குழந்தை கிடைத்து விட்டால் தாய் தந்தைக்கு எவ்வளவு குஷி ஏற்படும்! குழந்தை கூட பாபா பாபா (தந்தை) என்று கூறிக் கொண்டே இருக்கும். எனவே இப்பொழுது விநாசம் ஆகிறது. மேலும் நீங்கள் காணாமல் போய் விடுகிறீர்கள். அதாவது தந்தையிடமிருந்து பிரிந்து விடுகிறீர்கள். பிறகு கல்பத்திற்கு பின்னால் தந்தையை சந்திக்கிறீர்கள். எனவே தாய் தந்தையினுடைய அன்பு எவ்வளவு இருக்கிறது. அரைகல்பம் நீங்கள் சுகத்தை அனுபவிக்கிறீர்கள். பிறகு மெல்ல மெல்ல துக்க முடையவர்களாக ஆகிறீர்கள். சுகம் காக்கை எச்சிலுக்குச் சமமானது என்று சந்நியாசிகள் கூறுகிறார்கள் அல்லவா? அவர்கள் கூட விகாரத்திற்காக கூறுகிறார்கள். அசுத்தமான துணிகளை துவைத்தார் என்று குருநானக் கூட கூறி உள்ளார். ஆக யார் துவைத்தார். அவர் ஒரே ஒரு பரமாத்மா ஆவார். அவருக்கு கூறுவதே ஏகோ அங்கார்..... சீக்கியர்கள் இதை பாடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஞானத்தில் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தி கூர்மையானதாக இருக்க வேண்டும். ஏனெனில், ஆத்மாவை எழுப்ப வேண்டி உள்ளது. எனவே ஆத்மா கூட திறமைசாலியாக ஆகி விடுகிறது. ஒரு சிலரோ மிகவும் நல்ல கூர்மையான புத்தி உடையவராக ஆகி விடுகிறார்கள். தாய்மார்கள், கன்னியர்கள் மிகவும் நன்றாக முன்னிலையில் இருப்பவர்களாக ஆகி விடுகிறார்கள். இல்லையென்றால் தாய்மார்கள் அமர்ந்து கணவருக்கு புரிய வைக்க வேண்டும் என்றால், இதில் மிகவும் துணிவு மற்றும் பயமற்ற தன்மை வேண்டும். மற்றபடி அனைவருமே நரகவாசிகள் ஆக இருக்கிறார்கள். துர்க்கதியில் இருக்கிறார்கள். அவர்களோ பக்தியில் நிறைய நடனமாடி கை தட்டிக் கொண்டே இருப்பார்கள். சத்கதியோ ஆவது இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் சத்கதியில் செல்வதற் காக முற்றிலும் மௌனமாக இருக்கிறீர்கள். இலட்சுமியை வரன் (மணம்) முடிக்கட்டுமா என்று நாரதர் கூறினார். உண்மையில் இலட்சுமியை மணம் முடிப்பதற்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். பக்தர்களோ வரன் முடிக்க முடியாது. இலட்சுமி நாராயணருக்கு எப்படி இராஜ்யம் கிடைத்தது. எப்பொழுது கிடைத்தது, மேலும் அவர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் என்பதை நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள். எனவே நீங்கள் கோவிலுக்கு சென்று தலை வணங்கு வதில்லை. நாம் தான் இலட்சுமி நாராயணர் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்துள்ளீர்கள். நீங்கள் தலை வணங்குவது நின்று விட்டுள்ளது. அவர்கள் பின் இவர்கள் நாஸ்திகர்கள் ஆவார்கள். தலை வணங்குவதில்லை என்பார்கள். உண்மையில் நீங்கள் தான் வரிசைக் கிரமமாக முயற்சிக்கேற்ப ஆஸ்திகர்கள் ஆவீர்கள். அவர்களோ பரமாத்மாவை அறியாதவர்கள் நாஸ்திகர்கள்.. இப்பொழுது நீங்கள் தலைவனுடையவர்கள் ஆகி உள்ளீர்கள். பிறகும் மாயை ஓங்கி அறைந்து விடுகிறது. எனவே அநாதைகளாக ஆகி விடுகிறார்கள். முதியவர்களாகக் கூட இருப்பார்கள். ஆனால் மாயை அவர்களையும் வாலிபர்களாக ஆக்கி விடுகிறது. மாயையின் புயல்கள் வருகின்றது. நீங்கள் ஒருவர் மற்றவரின் கையை பிடித்து சகயோகி (ஒத்துழைப்பு அளிப்பவர்) ஆகி இந்த புது யாத்திரையில் தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருக்க வேண்டும். எல்லாமே புத்தியின் யாத்திரையைப் பொறுத்தது. ஆடாது அசையாது அங்கதன் போல இருக்க வேண்டும். கடைசியில் அந்த நிலை அமைய வேண்டி உள்ளது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஒருவர் மற்றவர் கை பிடித்து சகயோகி ஆகி, தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து கொண்டே இருக்க வேண்டும். அனைத்து சம்பந்தங்களின் சுவையாக இருக்கும், தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்ய வேண்டும்.

2. எப்படி தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் மதிப்பு கொடுக்கிறார். அதே போல பின்பற்ற வேண்டும். தன்னை விட பெரியவர்களுக்கு அவசியம் மதிப்பு கொடுக்க வேண்டும்.

வரதானம்:

எதுவும் புதிதல்ல என்ற பாடத்தின் மூலம் தடைகளை விளையாட்டு எனப் புரிந்துகொண்டு கடந்து செல்லக் கூடிய அனுபவி மூர்த்தி ஆகுக.
தடைகளைப் பார்த்து பயப்படாதீர்கள். மூர்த்தி ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள், ஆகையால், கொஞ்சம் சுத்தியலால் அடி விழும். சுத்தியலால் அடித்து, அடித்து சரி செய்வார்கள். எனவே, எவ்வளவு முன்னேறிச் செல்வீர்களோ, அவ்வளவு அதிகமாகப் புயலைக் கடந்து செல்லத் தான் வேண்டும். ஆனால், உங்களுக்கு இந்தப் புயல் நீங்கள் அனுபவி ஆகுவதற்காக கிடைத்த பரிசு ஆகும். ஆகை யினால், இந்தத் தடைகளின் அனுபவம் என்னிடம் தான் வர வேண்டுமா என்ன! என்று நினைக்கா தீர்கள். அதை வாராய் என்று வரவேற்பு செய்யுங்கள். எதுவும் புதிதல்ல என்ற பாடம் உறுதியாக இருந்தது என்றால் இந்தத் தடை விளையாட்டாகத் தோன்றும்.

சுலோகன்:

சத்தியம் என்ற விசேஷத்தன்மை இருந்தது என்றால்,

 

ஆத்மா என்ற வைரத்தின் ஜொலிப்பு நாலாபுறங்களிலும் தானாகவே பரவும்.

மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பற்ற மகாவாக்கியம்

1. யாராவது ஒருவேளை உங்களிடம் நமக்கு இந்த சங்கமயுக சமயத்தில் இந்த ஈஸ்வரிய ஞானம் என்ன கிடைத்துக் கொண்டு இருக்கிறதோ, அது மீண்டும் நம்முடைய சத்யுகத்தில் கிடைக்குமா? என்று கேள்வி கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர்களிடம் சத்யுகத்தில் சுயம் நாம் ஞான சொரூபமாக இருப்போம், தெய்வீகப் பலனை அனுபவித்துக் கொண்டு இருப்போம், அங்கு ஞானத்தின் கொடுக்கல் வாங்கல் இருக்காது, இப்பொழுதே அஞ்ஞானிகளுக்கு ஞானத்தின் அவசியம் உள்ளது. ஆனால், அங்கேயோ அனைவரும் ஞான சொரூபமாக இருப்பார்கள், அங்கே ஞானம் அளிக்கும் அவசியம் இருக்கும்படியாக அஞ்ஞானி எவருமே இருக்கமாட்டார்கள் என்று புரிய வைக்கப்படுகிறது. இப்பொழுதோ இதே சமயத்தில் தன்னுடைய முழு விராட நாடகத்தின் முதல், இடை, கடை நிலையை அறிந்திருக்கின்றீர்கள். ஆரம்பத்தில் நாம் யாராக இருந்தோம், எங்கிருந்து வந்தோம் மற்றும் மத்திம காலத்தில் கர்ம பந்தனத்தில் மாட்டிக் கொண்ட பிறகு, எப்படி விழுந்தோம், இறுதியில் நாம் கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டு கர்மாதீத் தேவதை ஆகவேண்டும். என்ன முயற்சி இப்பொழுது நடந்து கொண்டு இருக்கின்றதோ, அதன் மூலம் நாம் எதிர்காலப் பலனாக சத்யுக தேவதைகளாக ஆகின்றோம். தேவதைகளாகிய நாம் கீழே விழுந்துவிடுவோம் என்பது ஒருவேளை நமக்கு தெரிந்ததென்றால் இந்த எண்ணம் வந்த உடனேயே மகிழ்ச்சி மறைந்துவிடும், எனவே, அங்கே கீழே விழுவதற்கான ஞானமே கிடையாது. இந்த எண்ணம் அங்கே இருக்காது, நமக்கு இந்த ஞானத்தின் மூலம் இப்பொழுது தெரிய வந்திருப்பது என்னவென்றால், நாம் ஏற வேண்டும் மற்றும் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும். பிறகு, அரை கல்பத்திற்குப் பின்னர் தன்னுடைய பிராப்தியை அனுபவித்த பிறகு, தன்னைத் தானே மறந்து மாயைக்கு வசமாகி கீழே விழுந்துவிடுகிறோம். மேலே ஏறுவது மற்றும் கீழே விழுவது என்ற இந்த விளையாட்டு அனாதியாக உருவான உருவாக்கப்பட்ட விளையாட்டு ஆகும். இந்த முழு ஞானம் இப்பொழுது புத்தியில் உள்ளது, இந்த ஞானம் சத்யுகத்தில் இருக்காது.

2. சில மனிதர்கள் - நாம் என்னவெல்லாம் கர்மம் செய்கின்றோமோ, அதாவது அது நல்ல கர்மமோ அல்லது தீய கர்மமோ, அதற்கான பலன் அவசியம் கிடைக்கிறது என்று புரிந்திருக்கின்றனர். சிலர் தானம், புண்ணியம் செய்கின்றார்கள், யாகம், வேள்வி வளர்க்கின்றார்கள், வழிபாடு செய்கின்றார்கள், அவர்கள் நாம் ஈஸ்வரன் பெயரைச் சொல்லி என்ன தானம் செய்தோமோ, அது பரமாத்மாவின் தர்பாரில் தாக்கல் (பதிவு) செய்யப்படுகிறது, எப்பொழுது நாம் இறந்து போவோமோ, அப்பொழுது அதன் பலன் அவசியம் கிடைக்கும் மற்றும் நமக்கு முக்தி கிடைத்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், இதைச் செய்வதால் சதா காலத்திற்காக எந்தப் பலனும் கிடைக்காது என்பதை நாம் அறிந்து கொண்டோம். எப்படிப்பட்ட கர்மம் செய்வார்களோ, அதன் மூலம் அல்ப காலத்திற்கு ஒரு துளி சுகம் அவசியம் கிடைக்கிறது. ஆனால், எதுவரை இந்த நடைமுறை வாழ்க்கை சதா சுகமானதாக ஆகவில்லையோ, அதுவரை அதனுடைய ரிட்டர்ன் கிடைக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் என்னவெல்லாம் செய்து வந்திருக்கிறீர்களோ, அதைச் செய்ததனால் உங்களுக்கு முழுமையான இலாபம் கிடைத்துள்ளதா என்று யாரிடமாவது நாம் கேட்டுப் பார்க்கலாம். இதைக் கேட்டதுமே அவர்கள் வாயடைத்துப் போய்விடுவார்கள். இப்பொழுது பரமாத்மாவிடம் தாக்கல் ஆனதா அல்லது இல்லையா என்பது நமக்கு என்ன தெரியும்? எதுவரை தன்னுடைய நடைமுறை வாழ்க்கையில் கர்மம் சிரேஷ்டமானதாக ஆகவில்லையோ, அதுவரை எவ்வளவு தான் உழைத்தாலும் முக்தி, ஜீவன்முக்தியை அடைய முடியாது. நல்லது. தானம், புண்ணியம் செய்தார்கள், ஆனால், அதைச் செய்ததால் எந்தப் பாவ கர்மமும் எரியவில்லையே, பிறகு, முக்தி, ஜீவன்முக்தி எப்படி கிடைக்கும்! இத்தனை துறவிகள், மகாத்மாக்கள் உள்ளனர், எதுவரை அவர்களுக்கு கர்மங்களைப் பற்றிய ஞானம் இல்லையோ, அதுவரை அந்தக் கர்மம் அகர்மம் ஆகமுடியாது, அவர்கள் முக்தி, ஜீவன்முக்தியை அடையமாட்டார்கள். சத்திய தர்மம் எது மற்றும் சத்திய கர்மம் எது என்பது அவர்களுக்கும் தெரியாது. வாயினால் ராம், ராம் என்று சொல்வதனால் மட்டும் முக்தி கிடைக்காது. மரணத்திற்குப் பிறகு எனக்கு முக்தி கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு இருப்பது அறிவீனம் என்று சொல்லப்படும். மரணத்திற்குப் பிறகு என்ன இலாபம் கிடைக்கும்? எதுவுமே கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியவே தெரியாது. மற்றபடி மனிதர்கள் தன்னுடைய வாழ்வில் தீய கர்மம் செய்யட்டும் அல்லது நல்ல கர்மம் செய்யட்டும், அதையும் இதே வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும். இப்பொழுது எவ்வாறு சுத்த கர்மம் செய்து தன்னுடைய நடைமுறை வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற இந்த முழு ஞானமும் ஆசான் பரமாத்மா மூலம் நமக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. நல்லது. ஓம்சாந்தி.

 Download PDF

Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

Post a Comment

0 Comments