Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
01-10-2022 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒருவருடன் ஒருவர் மரியாதையைக்
கொண்டிருங்கள். உங்களை மிகத் திறமைசாலி எனக் கருதாதீர்கள். நீங்கள் என்ன செயல்களைச் செய்கின்றீர்களோ, அதையே உங்களைப் பார்ப்பவர்களும் செய்வார்கள்
என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள்.
கேள்வி:
எந்த ஸ்திதியை உறுதியாக்குவதற்காக அதிக முயற்சி தேவைப்படுகிறது?
பதில்:
உங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் வாழ்கின்ற போது, கணவன் மனைவி என்ற உணர்வு முற்றிலும் முடிந்துவிட வேண்டும். உங்களது மனதில் அத்தகைய உணர்வுகள் இருக்கக் கூடாது. ஆத்மாக்களாகிய
நாங்கள் சகோதரர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதர சகோதரியினர் ஆவர். இந்த ஸ்திதியை உறுதியாக்குவதற்கு காலம் எடுக்கும். இணைந்து வாழ்கின்ற போது, விகாரத்தீ மூட்டப்படக்கூடாது. எவ்விதமான சரீரத் துன்புறுத்தல்களும் இடம்பெறக் கூடாது. அதைப் பயிற்சி செய்யுங்கள். உறவு முறைகள் அனைத்தினதும் வெல்லக்கட்டியாக உள்ள தந்தையையும் தாயையும் நினைவு செய்யுங்கள்.
பாடல்: உலகமே மாறினாலும் நாங்கள் மாற மாட்டோம்….
ஓம் சாந்தி.
இது குழந்தைகளின் உத்தரவாதம் அல்லது சத்தியம் ஆகும்.
சத்தியம் வார்த்தைகளால் செய்யப்படுவது இல்லை.
எவ்வாறாயினும் குழந்தைகள் தந்தையை இனம் காணும் போதே,
ஒரு சத்தியம் செய்யப்படுகிறது. ஒவ்வொருவரும் அந்தஸ்தைக் கோருவதற்காக சுதந்திரமான முயற்சியைச் செய்கின்றனர். உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்காக பாடசாலையிலுள்ள ஒவ்வொருவரும் சுதந்திரமான முயற்சியைச் செய்கிறார்கள். இங்கு ஆத்மாக்கள் கற்கின்றனர்,
எங்களுக்குக் கற்பிப்பதற்காக பரமாத்மா சரீரத்தில் பிரவேசிக்கிறார். அவர் இவரினுள் பிரவேசித்து,
இவருக்கும் (பிரம்மா)
பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களுக்கும் கற்பிக்கிறார். பிரம்மாவை வாய்வழித் தோன்றல் என அழைக்க முடியாது.
பிராமணர்களே பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள் ஆவர். பிரம்மா சிவனின் வாய்வழித் தோன்றல் அல்ல.
சிவபாபா வந்து அவரினுள் பிரவேசித்து அவரைத் தனக்குரியவர் ஆக்குகிறார். அவரும் படைப்பே ஆவார்.
அவர் முதலில் பிரம்மாவை உருவாக்கிறார். அவர் முதலில் விஷ்ணுவை உருவாக்குவதி;ல்லை. பிரம்மா,
விஷ்ணு, சங்கர் நினைவு கூரப்படுகின்றனர். விஷ்ணு, சங்கர்,
பிரம்மா எனக் கூறுப்படுவதில்லை. அவர் முதலில் பிரம்மாவையே உருவாக்கிறார். பிரம்மாவின் தொழில் வேறுபட்டது.
இவை அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் இவரிடம் (சிவபாபா)
கூறுகிறீ;ர்கள்:
நீங்களே தாயும் தந்தையும். ஆகவே அவர் அசரீரியானவர் ஆவார். பௌதீக ரூபத்தில் ஒரு தாயும் தந்தையும் தேவைப்படுகின்றனர், இதனாலேயே நீங்கள் வினவுகிறீர்கள்: மம்மாவிற்குத் தாய் உள்ளாரா? அதற்கான பதில் “ஆம்”
என்பதாகும். பிரம்மாவும் மம்மாவின் தாய் ஆவார். பிரம்மாவிற்கு தாய் இல்லை.
ஏனெனில் இந்த தாய் (பிரம்மா)
பெண் அல்ல,
சரஸ்வதியே மம்மா என அழைக்கப்படுகிறார். தந்தை கற்பிப்பதால் இவரும் கற்கிறார்.
நீங்கள் எவ்வாறு மாணவர்களாக உள்ளீர்களோ,
அவ்வாறே இவரும் மாணவராக உள்ளார்.
சிவபாபா மாணவர் அல்ல. அதிகளவில் கற்கின்ற பிரம்மாவின் அந்தஸ்தை குழந்தைகளாகிய உங்களால் காண முடிகிறது. அவரே உண்மையில் நெருக்கமாக உள்ளார் என்பதையும் உங்களால் பார்க்க முடிகிறது. யாரது செவிகள் முதலில் அவரை (சிவபாபா)
செவிமடுக்கின்றன? இந்த பிரம்மாவே அனைவரிலும் நெருக்கமானவர் ஆவார்.
குழந்தை ஜெகதீஷ் மம்மாவையும் பாபாவையும் விட நன்றாக விளங்கப்படுத்துகிறார் என பாபா கூறுகின்ற போதிலும், மம்மாவும் பாபாவுமே அதிகளவில் கற்கின்றனர் என்றும் பின்பு குழந்தைகள் வரிசைக்கிரமத்திலேயே கற்கின்றனர் என்றுமே கூறப்படும்.
அவர் (ஜெகதீஷ்)
முரளியைக் கற்று,
அதனைக் கிரகித்து பின்னர் கீதை பற்றி சஞ்சிகை போன்றவற்றிற்கு எழுதுகிறார் ஏனெனில் அனைத்து சமய நூல்கள் போன்றவற்றையும் அவர் கற்றுள்ளார். அத்துடன் அவர் ஆங்கிலத்திலும் திறமைசாலி ஆவார்.
இதுவே மரியாதை கொடுத்தல் என அழைக்கப்படுகிறது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும்.
பாபாவும் மரியாதையைப் பேணுகிறார். ஆகவே எவருமே 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள் ஆகாதிருக்கின்ற போதிலும்,
நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும்.
அது வரிசைக்கிரமமானதாகும். ஒவ்வொருவரும் ஏதோவொரு தவறை இழைக்கின்றனர். இதனாலேயே உங்களை நீங்கள் அதி திறமைசாலிகளாகக் கருதக்கூடாது. தந்தையோ அல்லது நானோ எவ்வகையான செய்களைச் செய்தாலும் பார்க்கின்ற ஏனையோரும் அதனையே செய்வார்கள். ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும். பாபாவும் மரியாதை கொடுக்க வேண்டும். கணவன் மனைவியை நீங்கள் சகோதர சகோதரிகள் ஆக்குகிறீர்கள் என மக்கள் கூறுகின்றனர்.
புத்திசாலி குழந்தைகளோ அனைவரும் கடவுளின் குழந்தைகள் ஆகவே அவர்கள்; அனைவரும் சகோதர சகோதரிகள் என உடனடியாகக் கூறுவர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதர சகோதரிகள் ஆவர். சகோதர சகோதரிகள் ஆகுவது சிறந்தது. நீங்கள்;
பாபாவின் குழந்தைகள் ஆகினால் உங்களால் ஆஸ்தியைக் கோரிக்கொள்ள முடியும். நீங்கள் பிரம்மபாபாவினூடாக சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெற உள்ளீர்கள். ஆகவே நீங்கள் பிரம்ம குமாரர்கள் குமாரிகள் ஆக வேண்டும்.
பின்னர் நீங்கள் விகாரத்தில் ஈடுபடக் கூடாது. அவ்வாறாயின்,
அது சரீரத் துன்புறுதலாகும். பாபா உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களுக்கு தூய்மையாகுவதற்கான வழிகளையும் கூறுகிறார்.
மனைவியும் “பாபா”
எனக் கூறுகிறார்,
கணவனும் “பாபா”
எனக் கூறுகிறார்.
ஆகவே கணவன்,
மனைவி என்ற உணர்வு முறிவடைந்துவிடுகிறது. உலகம் ஆதாம் ஏவாள் மூலமாகவே ஸ்தாபிக்கப்பட்டது எனக் கூறுகின்றனர்,
ஆகவே அனைவருமே அவர்களது குழந்தைகள் ஆதலால் அனைவரும் சகோதர சகோதரிகள் ஆவர். குமார்கள்,
குமாரிகளுக்கு அதிகளவு முயற்சி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏணியில் ஏறுபவர்கள், இறங்கவும் வேண்டும். இறங்குவதற்கும் முயற்சி தேவையாகும்.
நீங்கள் இருவரும் பிரிந்து வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை.
மாறாக, சகபாடிகளாக வாழுங்கள். சத்தியயுகத்தில் தூய்மையற்ற எவருமே இருக்கமாட்டார்கள். அங்கு குழந்தைகள் பிறப்பதற்கு அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இங்கு சிலவேளைகளில் அவர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. அங்கு நேரத்திற்கேற்ப இயல்பாகவே அவர்கள் ஒரு காட்சியைக் காண்பார்கள்.
இது எவ்வாறு நிகழும் என மக்கள் வியக்கின்றார்கள். முழுமையாக விகாரத்திலுள்ள இங்குள்ள மக்களால் அங்கு எவ்வாறு மக்கள் விகாரமற்றிருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்;? அங்கு சரீர உணர்வு இல்லை. இங்கு சரீர உணர்வே உள்ளது. எவராவது சரீரத்தை நீக்கிவிட்டால் மக்கள் அதிகளவில் அழுகின்றனர். அங்கு அவர்கள் அழுவதில்லை.
அங்கே அவர்கள் சரீரத்தை நீக்கப்போகின்ற நேரத்தில் காட்சியைக் கண்டு, இளவரசர் ஆகின்றனர். இங்கிருந்து சென்று எதிர்காலத்தில் சக்கரவர்த்தி சக்கரவர்த்தினி ஆகுகின்ற காட்சியை நீங்கள் இங்கும் காண்கிறீர்கள். கிருஷ்ணரைப் போன்றதொரு குழந்தையை உங்கள் மடியில் நீங்கள் பார்க்கிறீர்கள். ஒருவர் சூரிய வம்சத்;தின் அல்லது சந்திர வம்சத்;தின் சக்கரவர்த்தியாகவா அல்லது சக்கரவர்த்தினியாகவா ஆகுவார்;
என்பதை நீங்கள் காட்சிகளின் மூலம் புரிந்து கொள்ள மாட்டீர்கள் ஏனெனில் இவை முற்றிலும் புதிய விடயங்களாகும். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: முதலில் தந்தையை இனம் காணுங்கள்.
தந்தை கூறுகிறார்:
நான் எவ்வளவு வசீகரமாக உள்ளேன் எனப் பாருங்கள்!
தந்தை கூறுகிறார்:
நானே அனைத்து உறவுமுறைகளினதும் வெல்லம் ஆவேன். என்னை நினைவு செய்யுமாறு நான் உங்களுக்குக் கூறுகிறேன். மக்கள் கூறுகின்றனர்: நீங்களே தாயும் தந்தையும்.
ஒவ்வொன்றிலும் நம்பிக்கை உறுதியாக்கப்படல் வேண்டும்.
எவ்வாறாயினும், ஏதோ ஒரு விடயத்தில் சந்தேகம் இருந்தால் பின்னர் இராஜரீக அந்தஸ்தைக் கோர முடியாது. ஆகவே,
தந்தை கூறுகிறார்:
மன்மனாபவ. நீங்கள் தந்தையை நினைவு செய்து பின்னர் அவருடைய காதலர்கள் ஆகுங்கள். இவர் ஆன்மீக காதலரும்,
அன்பிற்கினியவரும் ஆவார்.
ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவின் காதலர்கள் என்பதை உறுதி செய்யுங்கள். கிருஷ்ணர் அனைவரதும் அன்பிற்கினியவராக இருக்க முடியாது.
அனைவரும் கிருஷ்ணரை நினைவு செய்வதில்லை.
இத்தந்தை கூறுகிறார்:
மன்மனாபவ. நீங்கள் இப்பொழுது என்னிடம் வரவேண்டும். நாடகம் முடிவுக்கு வருகிறது நீங்கள் வீடு திரும்ப வேண்டும்.
எனவே, வீடு நிச்சயமாக நினைவு செய்யப்பட வேண்டும்.
நீங்கள் முரளியில் அனைத்து விடயங்கள் பற்றிய விளக்;கங்களையும் தொடர்ந்து பெறுவீர்கள்;. சில குழந்தைகள் முரளியிலிருந்து விடயங்களை குறிப்பெடுப்பதில்லை பின்னர் அவர்கள் தொடர்ந்தும் அதே விடயங்களை பாபாவிடம் வினவுகிறார்கள். காதலரும் அன்பிற்கினியவரும் என்பதே பிரதான விடயமாகும்.
பக்தர்கள் அனைவரும் காதலர்கள் ஏனெனில் அவர்கள் பரமாத்மாவை நினைவு செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: என்னுடையவர் ஒருவரேயன்றி வேறு எவருமல்ல.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த நேரத்தில் அனைத்துப் புதிய விடயங்களையும் செவிமடுக்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அவற்றை செவிமடுத்தாலும் மாயை உங்களை அறைகிறாள். இராவணன் சற்றும் குறைந்தவனல்ல.
தந்தையும் சர்வசக்திவான் மாயையும் சர்வசக்திவானே. மாயையின் இராச்சியம் அரைக்கல்பத்திற்கு தொடர்கிறது.
இப்பொழுது தந்தை கூறுகிறார்: ஜந்து விகாரங்களையும் தானம் செய்வதால் தீயசகுனங்கள் அகற்றப்படும். எவ்வாறாயினும், அவர்கள் முழுவதையும் நீக்குவதில்லை. சிலர் தானம் செய்ததை திரும்பவும் எடுக்கிறார்கள். இது பணத்திற்கான கேள்வி அல்ல,
ஆனால் விகாரத்திற்கான கேள்வியாகும். தானமாகக் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கக் கூடாது என சாதுக்களும் புனிதர்களும் கூறுகிறார்கள், ஏனெனில் அதுவே அவர்களுடைய வருமானமாகும். சில மக்கள் சந்நியாசிகளிடம் சென்று குழந்தைவரம் கேட்கிறார்கள். அவர் பதில் கூறுகிறார்:
உங்களுக்கு எனது ஆசீர்வாதங்கள் மூலம் குழந்தை கிடைக்கும்.
அவர்களுக்கு குழந்தை கிடைக்கும் போது,
தானே குழந்தைவரம் கொடுத்ததாக அவர் கூறுவார். அக்குழந்தை இறந்தால், அது விதியாகும் என அவர் கூறுவார்!
ஒருவருக்கு ஏதாவது நிறைவேற்றப்பட்டு இருந்தால்,
பலர் அவரில் நம்பிக்கை கொள்வார்கள்.
அவர்களுடைய வளர்ச்சி இந்த வழியில் இடம்பெறகிறது. அவர்கள் ஒரு புறம் தங்களைப் புகழ்கிறார்கள் மறுபுறம் அது விதி என்கிறார்கள்.
இந்த நேரத்தில் நீங்கள் அறியப்படாத போர்வீரர்;கள்.
மக்கள் அந்த அறியப்படாத போர்வீரர்;களுக்கு ஞாபகார்த்தங்களை உருவாக்கிறார்கள், முக்கியஸ்தர்கள் அந்த நினைவிடங்களைப் பார்க்க செல்வார்கள்.
இராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க அவர்கள் மலர்களைக் கேட்கிறார்கள். உங்களுக்கு உங்களுக்கு ஒருவரைப்பற்றி எதுவுமே தெரியாத போது நீங்கள் எப்படி அவருக்கு ஞாபகார்த்தம் செய்ய முடியும்?
இந்நேரம் நீங்கள் அறியப்படாத போர்வீரர்கள் பின்னர் நீங்கள் பிரபல்யமானவர்கள் ஆகுவீர்கள்.
உங்களுடைய ஆலயங்களும் உருவாக்கப்படும். இந் நேரம் நீங்கள் இராமருடைய இராச்சியத்தை மறைமுகமான வழியில் உருவாக்குகிறீர்கள். அச்சா.
நீங்கள் எப்போதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய குழந்தைகள் அல்லவா?
5000 வருடங்களுக்கு பின்பு நீங்கள் வந்து என்னை சந்தித்துள்ளீர்கள். பெற்றோர்கள் அவர்களுடைய தொலைந்த குழந்தைகளை கண்டுபிடிக்கின்ற போது,
மிகவும் சந்தோஷமடைவதுடன் குழந்தைகளும் சதா
“பாபா, பாபா!”
என்று கூறுவார்கள்.
ஆகவே, இப்பொழுது,
விநாசம் இடம் பெற்றுகையில் நீங்கள் தொலைந்து விடுகிறீர்கள், அதாவது, நீங்கள் தந்தையிடமிருந்து பிரிக்கப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு கல்பத்திற்கு பின்பு தந்தையை சந்திக்கிறீர்கள் எனவே தாயும் தந்தையும் உங்களில் அதிகளவு அன்பைக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் சந்தோஷத்தை அரைக்கல்பத்திற்கு அனுபவம் செய்கிறீர்கள்;. பின்னர்,
நீங்கள் படிப்படியாக சந்தோஷமற்றவர்கள் ஆகுகிறீர்கள்.
சந்நியாசிகள் சந்தோஷமானது காகத்தின் எச்சம் போன்றது என்று கூறுகிறார்கள். அவர்கள் விகாரத்தைப்பற்றியும் இவ்வாறே கூறுகிறார்கள். குருநானக்கும் கூறுகிறார்: கடவுள் தூய்மையற்ற, அழுக்கான ஆடைகளைக் கழுவினார்.
எனவே, யார் அவற்றைக் கழுவியது?
பரமாத்மா ஒருவரே அசரிரீயானவர் என அழைக்கடுகிறார். சீக்கிய மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு பாடுகிறார்கள். ஆத்மாக்களை விழித்தெழச் செய்ய வேண்டும் என்பதால் குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானப்பாதையில் மிகவும் புத்திகூர்மையுடன் இருக்க வேண்டும்;. ஆகையால்,
ஆத்மாக்கள் புத்திகூர்மையானவர்கள் ஆகின்றனர்.
சிலரது புத்தி மிகவும் கூர்மையுடன் உள்ளனர். தாய்மார்களும் குமாரிகளும் மிகவும் விழிப்பானவர்கள் ஆகுகின்றனர்;.
இல்லாவிடின், பெண்கள் தங்களுடைய கணவன்மார்களுக்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்துவதற்கு அதிகளவு தைரியமும் பயமின்மையும் தேவைப்படுகிறது. அனைவரும் நரகவாசிகளும் சீரழிந்தவர்களும் ஆவார்கள.; அவர்கள் பக்திமார்க்கத்தில் பெருமளவில் கைதட்டி நடனம் ஆடுகிறார்கள், ஆனால் அதன்மூலம் சற்கதி கிடைப்பதில்லை. சற்கதியைப் பெறுவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் முற்றிலும் அமைதியுடன் இருக்கிறீர்கள். நாரதர் இலக்ஷ்மியைத் திருமணம் செய்வதற்குக் கேட்டார். உண்மையில்,
நீங்கள் இலக்ஷ்மியைத் திருமணம் செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பக்தர்கள் அவரைத் திருமணம் செய்ய முடியாது,
இலக்ஷ்மி நாராயணன்;
தங்களுடைய இராச்சியத்தை எப்பொழுது எவ்வாறு பெற்றார்கள் என்றும் இப்பொழுது அவர்கள் எங்கே உள்ளார்கள் என்றும் உங்களுக்கு மட்டுமே தெரியும்.
இதனாலேயே நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று அவர்களுக்கு தலைவணங்குவது இல்லை. நீங்கள் இலக்ஷ்மி நாராயணனாக மாறுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் தலைவணங்குவதை நிறுத்திவிட்டீர்கள்;. நீங்கள் தலைவணங்காததால், மக்கள் உங்களை நாத்தீகர்கள் என அழைக்கிறார்கள். உண்மையில், நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமான ஆஸ்திகர்கள் நீங்களே ஆவீர்கள்.
கடவுளைத் தெரியாத அந்த மக்கள் நாத்திகர்கள் ஆவார்கள்.
நீங்கள் இப்பொழுது பிரபுவிற்கும், அதிபதியிற்கும் உரியவர்கள், பின்னர் மாயை உங்களை அறைவதால் நீங்கள் அநாதைகளாகுகிறீர்கள். மாயை மிகவும் வயோதிபர்களையும் திரும்பவும் இளமையாக்குகிறாள். மாயையின் புயல் உள்ளது. நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கரத்தை நீட்டி, ஒத்துழைப்பவராகி இந்தப் புதிய யாத்திரையில் தொடர்ந்தும் செல்வதுடன் பாபாவின் ஸ்ரீமத்தையும் பின்பற்றுங்கள். அனைத்தும் புத்தியின் யாத்திரையிலேயே தங்கி உள்ளது. நீங்கள் அங்கதனைப் போன்று ஆட்ட அசைக்க முடியாதவராக ஆகவேண்டும்.
அந்த ஸ்திதி இறுதியில் வரும்.
அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- ஒருவரோடொருவர் கைகோர்த்து, ஒத்துழைப்பவராகி தந்தையின் ஸ்ரீமத்தைப் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். அனைத்து உறவு முறைகளிலும் வெல்லமாக இருக்கின்ற தந்தையை அதிகளவு அன்புடன் நினைவு செய்யுங்கள்.
- எவ்வாறு தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையைக் கொடுக்கிறாரோ அதேபோன்று தந்தையைப் பின்பற்றுங்கள். நிச்சயமாக உங்கள் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
எல்லா தடைகளையும்
ஒரு விளையாட்டாகக்
கருதி அவற்றிலிருந்து
விடுபடுவதுடன்; “எதுவுமே
புதிதல்ல” எனும்
பாடத்தின் மூலம்
ஒரு அனுபவ
சொரூபமாக ஆகுவீர்களாக.
தடைகளைப் பார்த்து அச்சப்படாதீர்கள். நீங்கள் சிலைகளாக உருவாகுவதால் உங்கள் மீது நிச்சயமாக சிறிது சம்மட்டியாலடிக்கப்படும். சம்மட்டியாலடிக்கப்படுவதாலேயே நீங்கள் நன்றாக ஆகுவீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில் பல புயல்களை கடக்க நேரிடும். எனவே ஒரு அனுபவசாலியாகுவதற்கு நான் மட்டுமா தடைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். இல்லை. அவைகளை வரவேற்பு செய்யுங்கள்.
எப்போது எதுவுமே புதிதல்ல என்ற பாடம் உறுதியாகுகின்றதோ அப்போது தடைகள் ஒரு விளையாட்டாக தென்படும்.
சுலோகம்:
உங்களிடம் உண்மையின் விசேடத்துவம் இருக்கும் போது ஆன்மாவின் பிரகாசம் வைரம் போன்று எங்கும் பரவுகின்றது.
---ஓம் சாந்தி---
மாதேஷ்வரிஜீயின் மேன்மையான வாசகங்கள்
1)
கடவுளின் இந்த ஞானம் சத்திய யுகத்தில் பெறப்பட மாட்டாது.
யாராவது நாங்கள் இப்போது பெறுகின்ற கடவுளின் இந்த ஞானம் சத்திய யுகத்தில் பெறப்படுமா என வினவினால் இவ்வாறு விளங்கப்படுத்தலாம் : சத்திய யுகத்தில் நாங்கள் ஞானத்தின் சொரூபமாக இருப்பதுடன் தேவர்களாக இருந்து பேறுகளை அனுவம் செய்து கொண்டிருப்போம். ஞானத்தைப் பரிமாறுதல் அங்கே இருக்காது.
அறியாமையில் இருப்பவர்களுக்கே ஞானம் தேவைப்படுகின்றது. அங்கே அவர்கள் எல்லோரும் ஞானத்தின் சொரூபமாக இருப்பார்கள்.
ஞானத்தின் தேவை ஏற்படும் அளவுக்கு எவருமே அறியாமையில் இருக்கமாட்டார்கள். இப்போது இந்நேரத்தில் முழு வேறுபட்ட நாடகத்தின் ஆரம்பம் மத்தி மற்றும் இறுதி இவற்றினை நாம் அறிவோம். நாங்கள் ஆரம்பத்தில் யாராக இருந்தோம் நாம் எங்கிருந்து வந்தோம் எவ்வாறு மத்தியில் கர்ம பந்தனத்தில் சிக்குண்டு விழுந்தோம் இப்போது இறுதியில் கர்ம பந்தனங்களுக்கு அப்பால் சென்று கர்மாதீதமான தேவர்களாக வேண்டும் என்பவற்றை அறிவோம். இந்நேரத்தில் நாங்கள் செய்கின்ற முயற்சிகளின் ஊடாகவே சத்திய யுக தேவ அந்தஸ்தினை எதிர்காலத்தில் பெறுகின்றோம்.
அந்த நேரத்தில் தேவர்களாகிய நாங்கள் வீழ்வோம் என்று தெரிந்தால் எங்கள் சந்தோஷம் மறைந்து விடும். எனவே அங்கே கீழே வருதலைப் பற்றிய ஞானம் இல்லை.
அங்கே இந்த எண்ணங்கள் இல்லை.
இந்நேரத்திலேயே இந்த ஞானத்தின் ஊடாக நாங்கள் மேலேறி ஒரு சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். பின் அரைக் கல்பத்தின் பின்னர் எங்கள் பேறுகளை அனுபவித்த பின்னர் நாங்கள் எங்களை மறந்து மாயாவின் செல்வாக்கினால் கீழே விழுந்து விடுகின்றோம். மேலெழுவதும் விழுவதும் அநாதியான நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும்.
இந்த ஞானம் அனைத்தும் இப்போது எங்கள் புத்தியில் இருக்கும் ஆனால் சத்தியயுகத்தில் எங்களிடம் இருக்க மாட்டாது.
2)
நாங்கள் நடைமுறையில் கடவுளின் குழந்தைகளாக ஆகாது விட்;டால் கடவுளின் நீதிமன்றத்தில் நாங்கள் எதனையும் பெற முடியாது.
நாங்கள் எச் செயலைச் செய்தாலும் அவை நல்லவையோ கெட்டவையோ நிச்சயமாக அவற்றின் பலாபலன்களைப் பெறுவோம் என்று பலர் நம்புகின்றார்கள். உதாரணத்திற்கு
மக்கள் எதையாவது தானம் செய்யும் போது அல்லது புண்ணிய காரியங்கள் செய்யும் போதுஇ யாகத்தீ வளர்த்து வழிபாடுகளைச் செய்யும் போதுஇ கடவுளின் பெயரில் செய்த எல்லா செயல்களும் கடவுளின் நீதிமன்றத்தில் சேமிக்கப்பட்டிருக்குமெனவும் அவர்கள் மரணிக்கும் போது அவற்றின் பலனாக முக்தி பெறுவார்கள் எனவும் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும் அவற்றினைச் செய்வதால் நிரந்தரமான பலன்களைப் பெற முடியாது என எங்களுக்குத் தெரியும்.
எந்தச் செயல்களைச் செய்தாலும் தற்காலிகமான அல்லது அந்நேரத்திற்கான சந்தோஷத்தினை நிச்சயமாக நாங்கள் பெறுவோம்.
எவ்வாறாயினும் நடைமுறை வாழ்க்கையில் நிரந்தரமாக சந்தோஷத்தை அடையும் வரை நாங்கள் அவற்றின் பலனை பெற முடியாது.
நீங்கள் இவை அனைத்தையும் செய்ததால் முழுமையாக நன்மையடைந்து விட்டீர்களா? என நாங்கள் யாரையாவது கேட்கலாம். இக் கேள்வியினைக் கேட்கும் போது அவர்கள் பேச்சற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். அது கடவுளிடம் சேர்க்கப்பட்டதா இல்லையா என எவ்வாறு எங்களுக்குத் சொல்ல முடியும்? உங்கள் நடைமுறை வாழ்க்கையில் மேன்மையான செயல்கள் இல்லாது விட்டால் இ நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் முக்தியோ ஜீவன்முக்தியோ அடைய முடியாது. அச்சாஇ நீங்கள் தானங்கள் கொடுத்து புண்ணியங்களைச் செய்திருக்கலாம். ஆனால் அவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படவில்லை. எனவே எவ்வாறு நீங்கள் முக்தியோ ஜீவன் முக்தியோ அடைய முடியும்.
பல குருக்களும் இ மகாத்மாக்களும் இருந்த போதிலும் கர்மாவினைப் பற்றிய ஞானமோ அல்லது அவர்களது செயல்கள் நடுநிலையானவையாகவோ இல்லாது விட்டால் அவர்களால் முக்தியோ ஜீவன் முக்தியோ அடைய முடியாது. உண்மையான சமயம் எது எனவும் உண்மையான செயல்கள் எது எனவும் கூட அவர்களுக்குத் தெரியாது.
அவர்கள் வெறுமனே
“ராம் ராம்”
என உச்சரிப்பதால் முக்தியடைய முடியாது.
எவ்வாறாயினும் நீங்கள் மரணித்த பின்னர் முக்தியினைப் பெறுவீர்கள் என நினைப்பது விவேகமற்றது. அவர்களுக்கு தமது மரணிப்பதனால் என்ன நன்மை இருக்கும் எனவும் தெரியாது. ஒருபோதும் இல்லை. மக்கள் தமது வாழ்க்கையில் என்ன செயல்களைச் செய்தாலும் நன்மையோ தீமையோ அவற்றின் விளைவுகளை தமது அடுத்த வாழ்வில் முகம் கொடுக்க வேண்டும். நாங்கள் இந்த எல்லா ஞானத்தினையும் கடவுளிடமிருந்தும் எமக்கு தூய செயல்களை எவ்வாறு செய்வது எனவும் எமது நடைமுறையில் வாழ்வினை சாத்தியமாக்குவதெனவும் கற்பிக்கின்ற ஆசிரியரிடமிருந்தும் பெறுகின்றோம்.
அச்சா.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments