Header Ads Widget

Header Ads

ILANGAI TAMAIL MURLI 24.08.22

Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala 

24-08-2022  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 

Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, நீங்கள் வாழும் வரை தூய்மைக்கான சத்தியத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள், ஏனெனில் இது உங்களுடைய இறுதிப் பிறவியாகும். தூய்மையாகித் தூய உலகிற்குச் செல்லுங்கள்.

கேள்வி:

எக்குழந்தைகளைத் தந்தை நேசிக்கிறார்? எக்குழந்தைகள் மீது தந்தைக்கு ஓர் உரிமை உள்ளது?

பதில்:

மிக நன்றாகக் கற்று, ஏனையோருக்கும் கற்பித்து, அதன் அத்தாட்சியைக் கொடுப்பவர்கள் மீதே தந்தைக்கு அதிகளவு அன்பு உள்ளது. நன்கு கற்பவர்களே மாலையில் கோர்க்கப்படுபவர்கள் ஆவார்கள்.

கேள்வி:

எதிர்கால தேவ அந்தஸ்தை அடைவதற்கு, நீங்கள் உங்களில் எதனைச் சோதிக்க வேண்டும்?

பதில்:

நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கும்பொழுது, எத்தடைகள் வருகின்றன எனச் சோதியுங்கள். அந்தத் தடைகளை அகற்றுவதற்கு ஒரு வழியைக் கண்டறியுங்கள். நீங்கள் எந்தளவுக்குத் தூய்மையாகி விட்டீர்கள் என உங்களையே சோதியுங்கள். எந்த முள்ளும் இடையூறை உருவாக்கக்கூடாது.

பாடல்: உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டு, கீழே பூமிக்கு வாருங்கள். 

ஓம் சாந்தி. பக்தர்கள் கடவுளைக் கூவியழைக்கிறார்கள், அதாவது, அவர்கள் தந்தையைக் கூவி அழைக்கிறார்கள். ஏன்? ஏனெனில் அவர்கள் சந்தோஷமற்றிருக்கிறார்கள். நிச்சயமாகத் துன்பத்தின் பின்னர் சந்தோஷம் இருக்கப் போகின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். சந்தோஷம் இருந்தது; அது இங்கே இப்பொழுது இல்லை. ஆகவே, வந்து இலகு இராஜயோகத்தைக் கற்பிக்குமாறு மக்கள் அவரைக் கூவியழைக்கிறார்கள். நிச்சயமாக அதனைக் கற்பிக்கின்ற தந்தையே தேவைப்படுகிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் கருப்பைகளில் பிரவேசித்து, சரீரங்களைப் பெறுவதைப் போன்று, நான் ஒரு சரீரத்தைப் பெறுவதில்லை. நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்க வேண்டும், இதனாலேயே எனக்கு ஒரு பெரிய சரீரம் தேவையாகும். அனைவரையும் தூய்மையாக்குவதற்கு நான் வர வேண்டும். இராவணனாகிய மாயை உங்களைத் தூய்மையற்றவர்களாக்கி விட்டாள். ஆகவே, நீங்கள் அந்த ஐந்து விகாரங்களையும் தானமளித்தால், கிரகணம் அகற்றப்படும். சரீர உணர்வே முதலாவது பிரதான விகாரமாகும். இப்பொழுது உங்களை ஆத்ம உணர்வுடையவராகக் கருதுங்கள். நான் சரீரங்களில் வசிக்கின்ற ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறேன். நான் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன். 5000 வருடங்களுக்கு முன்னரும் நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தேன். நான் இராஜயோகத்தைக் கற்பித்தேன்; ஒவ்வொரு கல்பத்திலும் நான் அதனைக் கற்பிக்கிறேன். நான் வந்தவுடன், தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதே எனது தொழிலாகும். வந்து, குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையாக்குவதே தந்தையின் பாகமாகும். நீங்கள் தூய தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், நீங்கள் மீண்டும் தூய்மையானவர்களாக வேண்டும் என்பதையும் அறிவீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்! எதிர்காலத்தில் நீங்கள் சூரிய, சந்திர வம்சத்து இளவரசர்களும், இளவரசிகளுமாக ஆகுவீர்கள். இந்த ஞானம் எதிர்கால இளவரசர்களும், இளவரசிகளும் ஆகுவதற்கு உரியது. ஆகவே, நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கும்பொழுது, இளவரசர்களும், இளவரசிகளும் ஆகுவீர்கள். நீங்கள் அவற்றைக் கிரகிக்கிறீர்களா என உங்களைச் சோதியுங்கள். எத்தடைகள் வருகின்றன? அத்தடைகளை அகற்றுவதற்கு ஒரு வழியைக் கண்டறியுங்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதால், உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையுங்கள். பாதையில் வருகின்ற முட்களை அகற்றியவாறே, தொடர்ந்தும் முன்னேறுங்கள். சரீர உணர்வைத் துறவுங்கள், ஆத்ம உணர்வு உடையவர்களாகித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் அவரை நினைவுசெய்யுமளவுக்கேற்ப, உங்கள் பாதை தொடர்ந்தும் தெளிவாகும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, ஒரு தாமரையைப் போன்று வாழுங்கள். ஒருபொழுதும் விகாரத்தில் ஈடுபடாதீர்கள். விகாரமே பிரதான விடயமாகும். விகாரத்தில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் பரவாயில்லை, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். பெண்கள் அதிகத் தடைகளுக்கு முகங் கொடுக்கிறார்கள். அவர்கள் தூய்மையாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் கிருஷ்ணரின் பிறந்த நாளில் பெருமளவு அன்புடன் அவரைத் தொட்டிலில் ஆட்டுகிறார்கள். அவர்கள் அவரை வழிபடுவதுடன், ஒரு விரதத்தையும் கடைப்பிடிக்கிறார்கள். இது ஏழு நாட்களுக்கு மட்டுமேயான ஒரு விரதமாகும். தந்தை கூறுகிறார்: ஒருபொழுதும் விகாரத்தில் ஈடுபட மாட்டீர்கள் என்னும் சத்தியத்தை நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டும். நீங்கள் வாழும் வரைக்கும் தூய்மைக்கான சத்தியத்தைக் கடைப்பிடியுங்கள். இது இப்பொழுது இப்பழைய உலகில் எங்கள் இறுதிப் பிறவி என்பதை நீங்கள் அறிவீர்கள். இது எங்களுடைய இறுதிப் பிறவி மாத்திரம் அன்று, ஆனால் உலகில் உள்ள அனைவரினதும் இறுதிப் பிறவி ஆகும். நாங்கள் இப்பொழுது தூய்மையாகித் தூய உலகத்துக்குச் செல்வோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தூய உலகிலேயே எங்கள் அடுத்த பிறவி இருக்கும். இது தங்களுடைய இறுதிப் பிறவி என்னும் எண்ணத்தின் மூலம் அந்த ஹத்தயோக சந்நியாசிகள் தூய்மையாகுவதில்லை. இங்கே, முயற்சி தேவைப்படுகிறது. ஒன்றாக வாழும்பொழுதும், ஒருபொழுதும்; விகாரத்தில் ஈடுபடாதீர்கள். இருவரும் இச்சத்தியத்தைச் செய்ய வேண்டும். அப்பாவிகள் அதிகளவு துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் கூவியழைக்கிறார்கள். ஆண்கள் ஒருபொழுதும் கூவியழைப்பதில்லை: கடவுளே, எனது கௌரவத்தைப் பேணுங்கள்! தாய்மார்களே கூவியழைக்கிறார்கள்: துகிலுரியப்படுவதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்! தாய்மார்கள் தந்தையைக் கூவியழைக்கிறார்கள்: ஓ பாபா! துகிலுரியப்படுவதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்! இவையே பகவத் கீதையிலிருக்கும் அதே விடயங்கள் ஆகும், ஆனால் அவர்கள் தவறுதலாகக் கிருஷ்ணரின் பெயரை இட்டு விட்டார்கள். கிருஷ்ணர் தூய்மையாக்குபவர் அல்ல. ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். தூய்மையாகுவதற்குச் சிலசமயங்களில் அடித்தல்களும் சகித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். முன்னைய கல்பத்திலும் அதே விடயமே நடைபெற்றது, அது மீண்டும் ஒருமுறை நடைபெறுகிறது. ஒரு திரௌபதி மாத்திரம் இருப்பதில்லை; திரௌபதிகளான, உங்களில் பலர் இருக்கின்றீர்கள். தூய்மையற்றவர்கள் பலரும் தூய்மையாக்கப்பட வேண்டும். ஏனையோரைத் தூய்மையாக்குவதற்கான கருவிகள் ஆகுவதற்குத் தாய்மார்களாகிய நீங்கள் தூய்மையாகியுள்ளீர்கள். நீங்கள் கற்பதில்; அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குச் சமமானவர்களை ஈடேற்றுங்கள். சந்நியாசிகள் துறவறப் பாதைக்கு உரியவர்கள். இது இல்லறப் பாதை ஆகும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, தூய்மையாக இருந்து, கற்று, ஏனையோருக்கும் கற்பியுங்கள், ஏனெனில் நீங்கள் இவ்வாறு செய்வதால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். இக்கல்வி மிகவும் இலகுவானது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தபொழுது, ஒரு வைரத்தைப் போல் இருந்த பாரதம் ஏன் மிகவும் சீரழிந்ததாகி விட்டது என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கு எல்லையற்ற வரலாறையும், புவியியலையும் விளங்கப்படுத்துவோம். சுவர்க்கம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கூட மக்கள் அறியார்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்த இலக்ஷ்மியும் நாராயணனும் பூஜிப்பவர்களாகி விட்டார்கள் என்பதை எவரும் அறியார். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் பூஜிப்பவர்கள் ஆகினார்கள்என்பது கடவுளுக்குப் பொருந்தாது. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் தமோபிரதான் பூஜிப்பவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதை எவரும் அறியார். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் நிச்சயமாக மறுபிறவி எடுத்திருப்பார்கள். சத்திய யுகத்துக்குச் செல்பவர்கள் மறுபிறவி எடுக்க வேண்டும் எனத் தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகிறார். நாங்கள் சூரிய வம்சத்தினராகி, பின்னர் சந்திர வம்சத்தினர் ஆகினோம், இப்பொழுது பிராமண வம்சத்தினராகி விட்டோம், பின்னர் நாங்கள் தேவ வம்சத்தினர் ஆகுவோம். தந்தை வந்து, இவரைத் தத்தெடுத்து, இவரைப் பிரம்மாவாக ஆக்கியுள்ளார். சிலர் வினவலாம்: நீங்கள் எப்படி இவ்வாறு ஆகினீர்கள்? அவர்களுக்குக் கூறுங்கள்: பிரம்மாவின் வாயினூடாக, பரமாத்மாவாகிய பரமதந்தை எங்களைத் தனக்குரியவர்களாக ஆக்கியுள்ளார். தந்தை மாத்திரமே தூய்மையற்றவர்களைத்; தூய்மையாக்குகிறார். இப்பொழுது நாங்கள் தூய்மைக்கான ஒரு சத்தியத்தைச் செய்கிறோம். தந்தையை நினைவுசெய்வதனால், நாங்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறோம். தந்தை கருணை காட்டுவாரா? அவர் கருணை கொள்கின்றார். அவர் பரந்தாமத்திலிருந்து தூய்மையற்ற உலகிற்கு வந்து, ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிவேசிக்கிறார். தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது வந்து விட்டேன். ஆகவே, நான் உங்களுக்குக் கற்பிப்பவற்றைக் கற்றிடுங்கள். என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் சக்தியைப் பெறுவதுடன், உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். இதில் ஆசீர்வாதங்களுக்கான கேள்வியே கிடையாது. நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் கருணை காட்டுமாறும், அதனால் நீங்கள் 100 புள்ளிகளுடன் சித்தியடைய முடியும் எனவும் கூறுவீர்களா? அவர் எல்லையற்ற ஆசிரியரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். சிலரால் ஞானத்தைக் கிரகிக்க இயலாதிருப்பின், அவரால் என்ன செய்ய முடியும்? அனைவர் மீதும் ஆசிரியர் கருணை கொண்டிருப்பின், அப்பொழுது அனைவரும் சித்தி அடைவார்கள். அச்சந்தர்ப்பத்தில், எவ்வாறு ஓர் இராச்சியம் உருவாக்கப்படும்? குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள்! தந்தையை நினைவுசெய்யுங்கள். வேறெந்த வழியும் கிடையாது. இல்லாவிட்டால், நீங்கள் ஏன் தந்தையைக் கூவியழைக்கிறீர்கள்? சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் கூறுகிறார்கள்: வந்து, எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்! விநாசம் ஆரம்பிக்கும்பொழுது, பெரும் அனர்த்தங்கள் ஏற்படும். அதே கடவுளே இங்கே ஒரு மறைமுகமான ரூபத்தில் இருக்கிறார் என்பதை அவர்கள் அப்பொழுது புரிந்துகொள்வார்கள். அது கிருஷ்ணராக இருந்திருப்பின், உலகம் முழுவதிலும் முரசுகள் கொட்டப்பட்டிருக்கும். கிருஷ்ணரால் இங்கே வர முடியாது. தந்தையே வர வேண்டும். தந்தை இறுதிவரையில் ஞானத்தைப் பேச வேண்டும். இங்கே அவர் ஒரு மறைமுகமான ரூபத்தில் வருகிறார். அது கிருஷ்ணராக இருக்க முடியாது. ஒரேயொருவரே அனைவரினதும் அசரீரியான தந்தையாவார். அவர் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கும், அவர்களுக்கு அவர்களின் ஆஸ்தியைக் கொடுப்பதற்கும் வந்து விட்டார். அனைவருக்கும் கூறுவது உங்கள் கடமையுமாகும். நீங்கள் வினவ வேண்டும்: பரமாத்மாவாகிய பரமதந்தையுடனான உங்கள் உறவுமுறை என்ன? தந்தைக்குப் பல குழந்தைகள் இருக்கிறார்கள். பரமாத்மாவாகிய பரமதந்தையின் வழிகாட்டல்: முதலில், என்னை நினைவுசெய்து, நன்றாகக் கற்றிடுங்கள். பாபாவை மிக நன்றாக நினைவுசெய்து, ஒரு மேன்மையான ஆஸ்தியைக் கோருங்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குத் தொடர்ந்தும் எல்லையற்ற வரலாறையும், புவியியலையும் விளங்கப்படுத்துகிறார். உங்களால் படங்களைப் பயன்படுத்தி, அதனை விளங்கப்படுத்த முடியும். சத்திய யுகத்தில் பாரதம் கிரீடம் அணிந்திருந்தது. சூரிய வம்சத்துத் தேவர்கள் ஆட்சிசெய்தார்கள், பின்னர் அது சந்திர வம்ச இராச்சியம் ஆகியது, கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தன. நீங்கள் நன்றாகக் கற்கிறீர்களா என்பதையும் பார்த்து, நீங்களும் நன்றாகக் கற்க வேண்டும். நீங்கள் கற்காது விட்டால், சித்தியடைய மாட்டீர்கள். யார் உங்களை எச்சரிக்கை செய்வார்கள்? இந்நாட்களில், மாயை உங்களை மிகவும் கவனயீனமாக்குகிறாள். இங்கே உண்மை மறைந்திருக்க முடியாது. பாவச் செயல்களைச் செய்கின்ற எவரும் தொடர்ந்தும் அக்கர்மத்தைச் சேகரிப்பார்கள். நிச்சயமாகப் பாவமும், புண்ணியமும் சேகரிக்கப்படுகின்றன. இவற்றிற்கேற்பவே உங்கள் அடுத்த பிறவியைப் பெறுகிறீர்கள். நீங்கள் பாவச் செயல்களைச் செய்தால், அதற்கேற்பவே ஒரு பிறவியைப் பெறுவீர்கள். இதனாலேயே தந்தை கூறுகிறார்: நீங்கள் பாவச் செயல் எதனையாவது செய்தால், உடனடியாகத் தந்தைக்குக் கூறுங்கள். கடவுள் அனைத்தையும் அறிவார் என எண்ணாதீர்கள். நீங்கள் தந்தையிடம் கூற வேண்டும். இப்பிறவியில் தான் செய்துள்ள பாவங்கள் அனைத்தையும் ஆத்மா அறிவார். தான் செய்துள்ள அனைத்தையும் ஆத்மா நினைவுசெய்கிறார். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதை பாப்தாதாவுக்குக் கூறுங்கள். விகாரமே பிரதான விடயமாகும். திருடுவது அல்லது ஏமாற்றுவது என்பவை சிறிய விடயங்களாகும். பிரதான விடயம் விகாரமாகும். காமமே கொடிய எதிரியாகும். விகாரத்தில் ஈடுபடுபவர்கள் தூய்மையற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். முதலில் நீங்கள் அவ்விகாரங்களை வெல்ல வேண்டும். உங்களைத் தூய்மையற்றவர்களாக்;குகின்ற இராவணனே உங்கள் எதிரி ஆவான். இப்பொழுது, தூய்மையாகுவதற்காக, தந்தையை நினைவுசெய்யுங்கள்! நீங்கள் தந்தைக்கு உரியவராகிய பின்னர் விகாரத்தில் ஈடுபட்டால், பெருமளவு புண்படுத்தப்படுவீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், சரீர உணர்வைத் துறவுங்கள். காமமே கொடிய எதிரியாகும். முழு யுத்தமும் இதனைப் பற்றியதேயாகும். ஆகவே, இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு, பின்னர் பிறருக்கும் விளங்கப்படுத்துங்கள். பாபா வினவுவார்: நீங்கள் எத்தனை பேருக்கு உண்மையான கீதையையும், சத்திய நாராயணனின் கதையையும், அமரத்துவக் கதையையும் கூறியுள்ளீர்கள்? பல பாவாத்மாக்கள் உள்ளார்கள். ஆகவே, உங்களுடைய இந்த அட்டவணையைக் காட்டுவதனால், நீங்கள் பிராமணர்களாகி விட்டீர்கள் என்பதை பாபாவினால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எத்தனை பேரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கியுள்ளீர்கள்? இவையே இலகு இராஜயோகத்தின் விடயங்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். உலகிலுள்ள எவரும் இதனை அறியார். தந்தை தொடர்ந்தும் பலரிடமிருந்தும் ஒரு நற்சான்றிதழைப் பெறுகிறார். அவர்கள் எழுதுகிறார்கள்: இன்னார் இவ்விதமாக எனக்கு விளங்கப்படுத்தினார், அவர் என்னைச் சுவர்க்க அதிபதியாக்குவதற்குக் கருவியான எனது குருவாக இருந்தார். பிரம்மாகுமார்களும் குமாரிகளும் அத்தாட்சியைக் கொடுக்கிறார்கள், ஆனால் இவ்வாறு ஆகுபவர்கள் வேறு எவருக்காவது விளங்கப்படுத்துகிறார்களா? அவர்கள் ஏனையோரை இங்கே அழைத்து வருகிறார்களா? அவர்கள் ஏனையோரை இங்கே அழைத்து வர வேண்டும். நம்பிக்கை உடையவர்கள் உடனடியாகக் கூறுவார்கள்: எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களைத் தந்தையின் மடிக்கு வர அனுமதியுங்கள். கிறிஸ்தவர்களுக்கு ஒரு குழந்தை கிடைக்கும்பொழுது, அவர்கள் அக்குழந்தையைக் கிறிஸ்தவர் ஆக்குகிறார்கள். நாங்களும் கடவுளின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக வேண்டும். நாங்கள் சற்குருவின் மடிக்குள் செல்ல வேண்டும். நாங்கள் அவரால் தத்தெடுக்கப்பட்டு, தந்தையைச் சந்திக்கிறோம், ஆகவே இது எங்களுடைய ஆஸ்தியாகும். அரிதாகவே எவராவது இந்தளவு போதையுடன் வெளிப்படுகிறார்கள். நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, மக்கள் மிகவும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் அச்சக்தியைக் கொண்டிருப்பீர்கள். பின்னர், உங்களால் தந்தையைச் சந்;திக்காமல் இருக்க இயலாது; நீங்கள் உடனடியாகவே அவரிடம் ஓடிச் செல்வீர்கள். அவரே தாயும், தந்தையும், ஆசிரியரும் அத்துடன் குருவும் ஆவார். தாயும், தந்தையுமானவரினால் தத்தெடுக்கப்பட்டவர்கள் ஆகுங்கள்! அம்மக்கள் தங்கள் குருமார்களிடம் செல்கிறார்கள், ஆனால் அவர்களிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியை அவர்கள் பெறுவதில்லை. தந்தையிடமிருந்தே இராச்சியம் பெறப்படுகிறது, தந்தையே ஆசிரியரும், குருவும் ஆவார். ஆகவே, ஏன் மூவரிடமிருந்தும் ஆஸ்தியைக் கோரக்கூடாது? இது ஓர் அற்புதம், இல்லையா? கிருஷ்ணரே தந்தையும், ஆசிரியரும், குருவும் என நீங்கள் கூற மாட்டீர்கள். கிருஷ்ணர் ஓர் இளம் இளவரசர் மாத்திரமே. அந்த ஒரேயொருவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் என்பது இங்கே, குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அவர் தனக்கென ஒரு தந்தையையோ, ஆசிரியரையோ அல்லது குருவையோ கொண்டிருப்பதில்லை. கிருஷ்ணருக்கு ஒரு தாயும், தந்தையும் இருந்தார்கள். ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். ஒரு தாயையும் தந்தையையும் உடையவர்கள் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. அத்தகையதோர் ஆத்மாவைக் கடவுள் என அழைக்க முடியாது. கடவுளுக்கு ஒரு தாயோ அல்லது தந்தையோ இருப்பதில்லை. தந்தையாகிய கடவுளுக்கு ஒரு தந்தை இருப்பதில்லை. தந்தையாகிய கடவுள் மாத்திரமே தூய்மையாக்குபவர் எனவும், விடுதலையளிப்பவர் எனவும் அழைக்கப்பட முடியும். அவரை விடுவிப்பதற்கு எவருமே இல்லை. இது தந்தையின் பணி மாத்திரமே ஆகும். மனிதர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. படைப்பவராகிய தந்தையே பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் படைப்பவர். கடவுள் அதிமேன்மையானவர் என நினைவுசெய்யப்படுகிறார். அவர் எங்கள் அனைவரினதும் தந்தையாவார். கிருஷ்ணர் அனைவரினதும் தந்தை என அழைக்கப்பட மாட்டார். நாங்கள் அனைவரும் ஒரேயொரு அசரீரியான தந்தையின் குழந்தைகள். அவரே புதிய உலகைப் படைப்பவர். புதிய உலகம் சந்தோஷ தாமம் என அழைக்கப்படுகிறது. பின்னர், அது புதியதிலிருந்து பழையதாகுகிறது. இது இராவண இராச்சியமாகும். மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள், ஆனால் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. தாங்கள் கொண்டாடுகின்ற விழாக்கள் அனைத்தினதும் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது உங்களுடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவி. இது இப்பொழுது இராவணனின் முடிவும் ஆகும். நீங்கள் சத்திய யுகத்தில் அவனுடைய கொடு;ம்பாவியை உருவாக்க மாட்டீர்கள். அவர்கள் தொடர்ந்தும் அவனை எரிக்கின்ற வகையில் அவன் எவ்விதமான எதிரியாவான்? அவன் எப்பொழுது பிறந்தான்? எவரும் அறியார். அவர்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள், ஆகவே அவர்கள் இராவணனின் பிறந்த நாளையும் கொண்டாட வேண்டும். அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. உங்களுக்கு அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகிறது. இவ்விடயங்களே விபரமாகும். உங்கள் புத்தி இவற்றைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் வகுப்புக்கு வராது விட்டால், எதனைக் கற்;பீர்கள்? நீங்கள் கற்று, ஏனையோருக்கும் கற்பிக்காது விட்டால், என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? கற்று, ஏனையோருக்கும் கற்பித்து, அதன் அத்தாட்சியைக் கொடுப்பவரே ஒரு சிறந்த குழந்தை ஆவார். நீங்கள் அனைவரும் குழந்தைகள். நீங்கள் பலருக்கும் சேவை செய்து, ஏனைய பலரையும் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கினால், தந்தையிடமிருந்து அன்பைப் பெறுவீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு அன்பைக் கொடுக்கிறார். குழந்தைகளே, நன்கு கற்றிடுங்கள். அனைத்தையும் கற்றுக் கொள்கின்ற, தனது கழுத்தைச் சுற்றி ஒரு மாலையை உடைய (வர்ண ஆரம்) ஒரு வகையான கிளி உள்ளது. இங்கேயும் அதுவே நடைபெறுகிறது. நன்கு கற்பவர்கள் மாலையில் கோர்க்கப்படுவார்கள். நீங்கள் கற்காது விட்டால், அது நீங்கள் கல்வியறிவு அற்றவர் என்பதைப் போன்றுள்ளது. அப்பொழுது உங்களால் வெற்றி மாலையில் ஒருவராக முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் நன்கு கற்பதுடன், ஏனையோருக்கும்; கற்பிக்க வேண்டும். இதுவே உண்மையான தந்தை மாத்திரமே உங்களுக்குக் கூறுகின்ற, உண்மையான கதையாகும். அவர் சத்திய பூமியை ஸ்தாபிக்கிறார். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் அவர்கள் ஒருபொழுதும் பொய்களைக் கூறுவதில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1.     வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, ஒரு தாமரையைப் போல் வாழுங்கள். நீங்கள் வாழும்வரை, நிச்சயமாக, தூய்மைக்கான சத்தியத்தைக் கடைப்பிடியுங்கள்.

2.     கருணையை வேண்டுவதற்குப் பதிலாக, தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள். கவனத்துடன் கற்று, ஏனையோருக்கும் கற்பியுங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் உங்களுடைய கர்மத்தினதும், யோகத்தினதும் சமநிலையினூடாக இலகுவாக அனைவரினதும் ஆசீர்வாதங்களைப் பெற்று, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.
கர்மத்தில் யோகத்தையும்;, யோகத்தில் கர்மத்தையும் செய்பவரே மேன்மையான உணர்வையும், ஒரு மேன்மையான ஸ்திதியையும், கொண்டிருந்து, ஒரு மேன்மையான சூழலை உருவாக்குபவர் ஆவார். அத்தகையதொரு கர்மயோகி அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ஓர் உரிமையைக் கோருகின்றார். கர்மத்திலும், யோகத்திலும் சமநிலையைக் கொண்டிருப்பதால், நீங்கள் நிச்சயமாக ஒவ்வொரு செயலுக்காகவும் தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதுடன், உங்களுடன் தொடர்பிலும் உறவுமுறையிலும் வருபவர்களிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகின்றீர்கள். அத்தகைய நபர் நல்லவர் எனவும், அவை அவர்களுடைய ஆசீர்வாதங்கள் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள். ஆகவே, ஆசீர்வாதங்கள் இருக்குமிடத்தில், ஒத்துழைப்பும் உள்ளது, இந்த ஆசீர்வாதங்களும், ஒத்துழைப்புமே உங்களை ஒரு வெற்றி சொரூபம் ஆக்குகின்றன.

சுலோகம்:

சதா சந்தோஷமாக இருப்பதும், தொடர்ந்தும் சந்தோஷப் பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொள்வதுமே உண்மையான சேவையைச் செய்வதாகும்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

 

Post a Comment

0 Comments