Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 20.07.22

 Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

20-07-2022 காலை முரளி  ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்

 

Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! நீங்கள் ஆன்மீகப் படையினர் ஆவீர்கள். உங்களைத் தவிர வேறு யாருமே முழு உலகத்தை இராவணனிடமிருந்து பாதுகாக்க முடியாது. இதே தூய்மையான போதையில் இருக்க வேண்டும்.

கேள்வி:

பாப்தாதா எந்த குழந்தைகளினுடைய சமர்ப்பணத்திற்கு பாடல் (மகிமை) பாடுகிறார்?

பதில்:

பாபா கூறுகிறார் - பந்தனத்தில் இருக்கும் எந்த பெண்கள், அபலைகள் அடிவாங்கி கூட சிவபாபாவை நினைவு செய்கிறார்களோ, அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அடி வாங்கு வதால் இன்னுமே நஷ்டோ மோகா - மோகத்தை நீக்கியவர்களாக ஆகி விடுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுடைய பதவி இன்னுமே உயர்ந்ததாக ஆகி விடுகிறது. தந்தை அப்பேர்ப் பட்ட குழந்தைகளுக்கு தைரியம் அளிக்கிறார். குழந்தை களே! நீங்கள் உங்களை ஆத்மா என்று உணருங்கள். இந்த தேகம் உங்களுடையது அல்ல. நீங்கள் தந்தை யினுடையவராக ஆகி விட்டுள்ளீர்கள். எனவே உங்கள் நிலை பக்குவமானதாக ஆகிக் கொண்டே போகும். உண்மை யான உள்ளத்தில் தலைவன் திருப்தி அடைவார்.

பாடல்: உன்னை அடைந்து.. .. ..

ஓம் சாந்தி. குழந்தைகள் முன்னால் அமர்ந்துள்ளார்கள். நாம் படையினர் ஆவோம் என்பதையும் அறிந்துள்ளார்கள். யாருடைய சேனை? இறைவனினுடைய சேனையாகும். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நாம் இராவணன் மீது வெற்றி அடைந்துக் கொண்டிருக்கிறோம். அதாவது இந்த முழு சிருஷ்டியை இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து எனது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன். பாருங்கள் எப்படி சாதாரண முறையில் அமர்ந்துள்ளீர்கள். எந்தவொரு கை கால்களையும் அசைப்பதில்லை. ஆனால் மிகவும் பலம் பொருந்திய சேனையாக இருக்கிறீர்கள். நீங்கள் இறைவனுக்கு உதவி செய்பவர்கள் ஆவீர்கள். இறைவன் கூட மறைமுகமாக இருக்கிறார். நீங்களும் கூட மறைமுகமாக இருக்கிறீர்கள். அவருக்கு அரசர்களுக்கெல்லாம் அரசர் என்றும் கூறுகிறார்கள். உங்களுடைய இந்த யுத்தம் எவ்வளவு வலுவானது மற்றும் மறைமுகமானது என்றால் நீங்கள் விகாரங்கள் மீது வெற்றி அடைந்து, உலகத்தின் மீது வெற்றி அடைந்து விடுகிறீர்கள். எப்படி அந்த சேனை உள்ளதோ, அதே போல நாம் கூட ஆன்மீக சேனை ஆவோம் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். பாரதமே முழுமையாக இந்த சேனையைப் பொருத்து இருக்கிறது என்பதைப் புரிந்துள்ளீர்கள். இந்த சேனை இருக்கவில்லை என்றால் மற்றவர்கள் வெற்றி அடைந்துக் கொண்டு விடுவார் கள். அந்த சேனையிலோ சில சமயம் இராஜாக்கள் ஆகியோரை கூட விரட்டி இராணுவ இராஜ்யம் அமைத்துக் கொண்டு விடுகிறார்கள். இராணுவம் தங்களைத் தவிர வேறு யாரும் தேசத்தை பாதுகாக்க முடியாது என்று நினைக்கிறது. இப்பொழுது அந்த இராணுவத்தையும் பாருங்கள். மேலும் இதையும் பாருங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே இருக்கிறீர் கள். உங்களிடம் எந்த ஒரு ஆடை அல்லது ஆயுதங்கள் முத-யவை இல்லை. அவர்களோ எவ்வளவு உடை அணிகிறார்கள். எப்படி போலி வேடம் போடுகிறார்கள். ஹோலியில் கூட போலி வேடம் அணிகிறார்கள். இராமருக்கும் சேனை காண்பிக்கிறார்கள். அவர்களுக்கு குரங்கு முகத்தை கொடுத்து விட்டுள்ளார் கள். அதுவோ வெறும் பொம்மைகைளின் விளையாட்டு! இப்பொழுது நாம் இராவணன் என்ற 5 விகாரங்களின் சிறையிலிருந்து விடுதலை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒன்று இராவணனினுடைய சிறை, மற்றொன்று இராவணனின் வழிப்படி நடப்பவர்களின் சிறை. பக்தி யினுடையதும் சங்கிலிகள், குருமார்களினுடையதும் சங்கிலிகள். பிறகு கணவனுடை யதும் சங்கிலிகள். இராவணனுடைய வழிப்படி நீங்கள் எவ்வளவு துக்கமுடையவர்கள் ஆகிறீர்கள். எவ்வளவு முறையிடுகிறீர்கள். இராவணன் எங்களை மிகவும் துன்புறுத்து கிறான்.

எந்த அளவிற்கு நாம் யோகத்தில் இருப்போமோ அந்த அளவு நமது ஆத்மா துக்கத் திலிருந்து விடுபடுகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அபலைகள் மீது கொடுமையோ நிறைய ஆகிறது. நிறைய அடி வாங்குகிறார்கள். இப்பொழுது நாம் என்ன செய்வது என்று அபலைகள் முறையிடுகிறார்கள். தந்தை பிறகு தைரியம் (ஆறுதல்) கொடுக்கிறார். நீங்கள் உங்களை ஆத்மா என்று உணருங்கள் என்பதைப் புரிய வைத்துள்ளார். இந்த தேகம் நம்முடையது அல்ல. நாம் இறந்து விட்டுள்ளோம். தந்தையினுடையவர் ஆகி விட்டுள்ளோம். வேறு எந்த வழியும் கிடையாது. நாமோ சிவபாபாவினுடையவர்கள் ஆவோம். யார் உண்மையான குழந்தைகளாக இருப்பார் களோ அவர்களுடைய நிலை பக்குவமாக இருக்கும். சிறிதளவு கூட விகாரத்தின் பக்கம் சிந்தனை செல்வதில்லை. அப்பேர்ப்பட்ட குழந்தைகள் மீது யாராவது பலாத்காரமாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்றால் அதனுடைய பாவம் ஏற்படுவதில்லை. பாபா நாங்களோ உங்களுடையவர் ஆவோம் என்று முறையிடுகிறார்கள். உடலோ ஒரு பிணம் போல. அந்தளவு நிச்சய புத்தி உடையவர்களாக இருப்பவர்கள் கூட உண்மையான இதயம் இருந்தது என்றால் மிகவும் உயர்ந்த பதவியை அடைந்து விடுகிறார்கள். அப்பேர்ப்பட்ட உண்மையான உள்ளம் உடையவர்களிடம் அவசியம் தலைவன் (பாபா) திருப்தியாக இருப்பார். அந்த அடி வாங்கும் பெண்கள் நினைவு செய்யும் அளவிற்கு இங்கு இருக்கும் பெண் குழந்தைகள் கூட நினைவு செய்வதில்லை. தந்தையிடம் பந்தனம் உள்ளது என்ற புகார் வருகிறது. பாபா பந்தனத் திலிருந்து விடுவியுங்கள். யார் விடுபட்டு பந்தனத் திலிருந்து முக்தராக இருக்கிறார்களோ அவர்கள் கூட பந்தனத்தில் இருக்கும் பெண்கள் நினைவு செய்யும் அளவிற்கு நினைவு செய்வ தில்லை. சிவபாபாவின் நினைவினால் தான் படகு கரையேறும். பாபா எங்களை முரளி கூட படிக்க விடுவதில்லை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அட, நீங்கள் தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். முரளியில் கூட தினமும் இது தான் புரிய வைக்கப் படுகிறது. முக்கியமான அடிப்படை விஷயமானது நினைவின் சார்ட் வையுங்கள். நாம் பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்கிறோம். இந்த உழைப்பு நிறைய பேர் மூலமாக ஆகாமல் இருக்கிறது. அடிக்கடி நினைவு மறந்து விடுகிறது. பந்தனத்தில் இருக்கும் பெண் குழந்தை களோ அடி வாங்கி வாங்கி இன்னுமே அதிகமாக நினைவு செய்கிறார்கள். அடி வாங்கி கூட நினைவு செய்து கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட அபலைகளுக்கு நன்றி கூற வேண்டும். பாபா கூறுகிறார் - நீங்கள் உங்களை ஆத்மா என்று உணர்ந்து நினைவு செய்துக் கொண்டே இருங்கள். எந்த அளவிற்கு அதிகமாக அடிப்பார்களோ அந்த அளவிற்கு இன்னும் நஷ்ட மோகா (மோகத்தை நீக்கியவராக) ஆகிக் கொண்டே செல்வீர்கள். அடி கூட நல்ல பதவியை அமைத்து விடுகிறது. பாபாவிற்கு கூட அப்பேர்ப் பட்ட பெண் குழந்தைகள் நினைவிற்கு வருகிறார்கள். ஆம், ஒரு சிலர் மிகவும் நல்ல மகாரதி கூட இருக்கிறார்கள். அவர்கள் அநேகருக்கு சேவை செய்கிறார் கள். யோகியாக ஆக்குகிறார்கள். யோகத்திற்கு நிறைய மகிமை உள்ளது. நீங்களோ அனைவர் மீதும் இரக்கம் காட்ட வேண்டும்.

குழந்தைகளாகிய நீங்கள் கீதையை மேற்கோள் காட்டுகிறீர்கள். அவர்களுடைய புத்தியிலோ கிருஷ்ண பகவான் இராஜயோகம் கற்பித்தார் என்று மட்டுமே உள்ளது. பரமபிதா பரமாத்மா இராஜயோகம் கற்பித்தார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதை நிரூபிப்பதற்காகத் தான் நீங்கள் பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்கிறீர்கள். பிதா என்று கூறுகிறார்கள் அல்லவா? என்னுடன் யோகம் கொண்டீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும் என்பது தந்தையினுடைய கட்டளை ஆகும். எந்த ஒரு மனிதனுடனும் யோகம் வைக்கக் கூடாது. கற்பிப்பவரே ஒரு வேளை மனிதனாக இருந்தார் என்றால், உங்களுக்கு நன்மை ஆகாது. ஆனால் கீதையில் தேகதாரியின் பெயரை வைத்து விட்டுள்ளார்கள். நமக்கு நிராகார பரமபிதா பரமாத்மா யோகம் கற்பிக்கிறார் என்று நாம் கூறுகிறோம். நீங்கள் யாருக்குமே நிந்தனை செய்வதில்லை. நீங்களோ தந்தைக்கு மகிமை செய்கிறீர்கள். ஆனால் புரிய வைப்பவர் மிகவும் கூர்மையானவராக புத்திசாலியாக இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு பெரிய பெரிய வித்வான்கள், பண்டிதர்கள் கூட நிறைய வருகிறார் கள். சந்நியாசிகளினுடையதும் சேனை உள்ளது அல்லவா? எல்லோருடைய தலைவர் கள் வருகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருக்க வேண்டு மென்றால் முற்றிலும் குறைவாகப் பேச வேண்டும். மேலும் ஒரேயடியாக அம்பு போல பதிந்து விட வேண்டும். அதிகமாக எதுவும் பேசுவதற்கான அவசியமே இல்லை. ஏனெனில் அவர்கள் மிகவும் கோபக் காரர்களாக கூட இருப்பார்கள். அவர்களுடையதும் பெரிய சேனை உள்ளது. எங்கிருந்து அழைப்பு வந்தாலும் கூட நீங்கள் போகலாம். நம்மிடையே யார் யார் நன்றாக முழங்க முடியும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் கூட புரிந்து கொள்ள முடியும். ஒரு அல்ஃப் தந்தையின் பொருளைத் தான் புரிய வைக்க வேண்டும். இரண்டு விஷயங்கள் உள்ளன. அவ்வளவே! தந்தை அல்ஃப் கூறுகிறார் - என்னை நினைவு செய்தீர்கள் என்றால், நீங்கள் உலகத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள். இதுவோ படைப்புக்கர்த்தாவான அல்ஃப் - பகவான் தான் கூற முடியும். ஹெவென்லி காட்ஃபாதர் ஆவார். அவர் கூறுகிறார் - என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும். ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாசம் ஆகாது. கிருஷ்ணர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அவரோ ஒரு சரீரம் விட்டு மற்றொன்று எடுத்துக் கொண்டு விட்டார். நிராகாரமானவரோ அவினாஷி ஆவார். முழு விளக்கம் இந்த விஷயம் பற்றித் தருகிறார். எவ்வளவு தவறு செய்து விட்டுள்ளார்கள். பகவான் கூறுகிறார் - நான் உங்களுக்கு உலகத்தின் ஆஸ்தி அளிக்கிறேன். கிருஷ்ணர் எப்படி அனைவருக்கும் ஆஸ்தி அளிப்பார்? கிருஷ்ணரோ பாரதத்தினுடையவர் ஆவார் அல்லவா? முழு உலகமே தூய்மையற்றதாக இருக்கிறது. அனைவருக்கும் பதீத பாவனரோ ஒரே ஒரு நிராகாரமானவர் ஆவார். உங்களுடைய புத்தியில் இந்த எல்லா விஷயங்களும் உள்ளன. பக்தியின் பாகத்தைப் பற்றிய ஞானம் கூட உள்ளது. முதன் முதலில் சிவனின் பூஜை ஆகிறது. சோமநாத்தின் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய சோமநாத்தின் கோவிலை யார் அமைத்தார்கள்? வேறு யாருக்குமே அந்த ஆற்றல் கிடையாது. அவசியம் அந்த நேரத்தில் இவ்வளவு பேர் செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும். அது காரணமாக இப்பேர்ப்பட்ட கோவில்கள் கட்டினார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குள் இப்பொழுது அறிவு இருக்கிறது. உண்மையில் நீங்கள் எவ்வளவு செல்வந்தராக இருந்தீர்கள். இவ்வளவு பெரிய சோமநாத்தின் கோவிலைக் கட்டி இருக்கிறார் என்றால் அவசியம் மகாராஜாவாக இருந்திருக்கக்கூடும். தேவி தேவதைகள் சுயம் அவர்களே பூஜைக்குரியவர் களாக இருந்தார்கள். அவர்களே பூஜாரி ஆகி விட்டார்கள். பிறகு அவர்களே பூஜைக்காக கோவில் கட்டுவார்கள். அப்படியின்றி யாராவது ஒருவர் தான் சோமநாத்தின் கோவில் கட்டுகிறார் என்பதல்ல. ஒருவர் ஆரம்பித்தார். பிறகு அநேகர் கட்டினார்கள். பிறகு அநேக கோவில்களைக் கொள்ளையடித்திருக்க வேண்டும். ஒரு கோவிலிலிருந்தே எவ்வளவு சாமான்கள் வெளிப்பட்டது என்றால், ஒட்டகங்களில் நிரப்பிக் கொண்டு எடுத்து சென்றார் கள். படையெடுக்கும் பொழுது தலை நகரத்தையே கைப்பற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். பிறகு அவர்களுக்கு வெற்றி கிட்டியது. உண்மையில் இந்த டில்லி பரிஸ்தான் - சொர்க்கமாக இருந்தது என்பது இப்பொழுது உங்களது புத்தியில் உள்ளது. தர்மராஜர் ஸ்தாபனை செய்திருந்தார். டில்லி மீண்டும் பரிஸ்தான் ஆகப் போகிறது. அதற்காக நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நீங்கள் கேட்கிறீர்கள் என்றால் புத்தியில் போதை ஏறுகிறது. நமது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்று புரிந்துள்ளீர்கள். நமது பெயர் புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. மறைமுகமான சேனை அஹிம்சையானது என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய பொருளை யாரும் புரியாமல் இருக்கிறார்கள். நீங்கள் ஸ்தூல ஆயுதங்களும் எடுப்பதில்லை. காம வாளும் செலுத்துவ தில்லை. நீங்கள் தான் அஹிம்சை உடைய சக்தி சேனை ஆவீர்கள். நீங்கள் தான் யோக பலத்தினால் இராஜ்யத்தை அடைந்துள்ளீர்கள். உலகத்திற்கு அதிபதி ஆவதற்காக ஸ்ரீமத்படி நாம் ஒரு தந்தையைத் தான் நினைவு செய்கிறோம். இப்பொழுது இந்த நாடகம் முடிவடைகிறது என்று அறிந்துள்ளீர்கள். பிறகு புதியதாக ஆரம்பமாகும். இது அழியாத நாடகமாகும். இது ஒரு பொழுதும் அழிந்து போவதில்லை. மற்றபடி புதிய உலகம் ஆகும் பொழுது பழைய உலகம் முடிந்து போய் விடுகிறது என்பது நிச்சயமானது ஆகும். சக்கரமோ சுற்றிக் கொண்டே இருக்கிறது. இது அனாதி நாடகமாகும். எப்படி பகவானுக்கு அவர் முன்னால் ஆஜராக இருக் கிறார் என்று கூறுகிறார்கள். அதே போல இந்த நாடகம் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த நாடகத்தில் எல்லா நடிகர்களும் இருக்கவே இருக்கிறார்கள். மூலவதனம் மற்றும் ஸ்தூல வதனம் இருக்கவே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு சத்யுகம், திரேதா சக்கரம் சுற்றி வந்து, மீண்டும் திரும்ப நடைபெறுகிறது. இது அவினாஷி நாடகமாகும். நடிகர்களாகிய நாம் கூட நாடகத்தில் இருக்கவே இருக்கிறோம். ஆரம்ப முதல் கடைசி வரை அனைவரின் பாகம் இருக்கவே இருக்கிறது. அந்த சிறிய நாடகம் நாளடைவில் பழையதாக ஆகி விடுகிறது. இது ஒரு பொழுதும் பழையது ஆவதில்லை. இந்த அவினாஷி நாடகம் எப்பொழுதாவது பழையதாக ஆகிறதா என்ன? இல்லை. மற்றபடி நாம் பாகம் ஏற்று நடிக்க வருகிறோம். புதியதிலிருந்து பழையதாக ஆகி, பிறகு பழையதிலிருந்து புதியதாக ஆகி விடு கிறது. உண்மையில் நாம் ராஜா ராணியாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது ஏழை ஆகி விட்டோம். ஆண்டியிலிருந்து மீண்டும் அரசனாக ஆகிறோம். ஆண்டி என்றால் ஏழை. தந்தை வந்து அனைவருக்கும் வழி கூறுகிறார். உங்களுக்கு மிகுந்த போதை இருக்க வேண்டும். இந்த புதிய ஞானம் உங்களுக்கு கிடைக்கிறது. மேலும் ஒரு முறை தான் கிடைக்கிறது. நாம் பாபாவின் உத்தரவு படி இந்த சிருஷ்டியில் நமது இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துள்ளீர்கள் அல்லவா? என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் அரசாட்சியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆம். மற்றபடி இந்த கொடுமைகளோ ஆகும் தான். கொடுமை கூட கர்ம கணக்காகும். கணவன் மனைவியை அடிக்கிறான். சும்மாவே யாராவது அடிப்பாரா என்ன? நீங்கள் கூட அவரை அடித்திருக்கக் கூடும். அதே கணக்கு வழக்கு முடிந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாமே கர்மங்களின் கணக்கு வழக்கு ஆகும். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத் படி சிறந்த செயல்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது எந்த ஒரு இழிந்த செயலை யும் செய்யாதீர்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பது எல்லா வற்றையும் விட சிறந்த செயல் ஆகும். என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்ற தந்தையின் கட்டளை கிடைத்துள்ளது. எல்லோரும் தந்தையையே மறந்து விட்டுள்ளார்கள். சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். ஆனால் எதுவுமே தெரியாமல் உள்ளார்கள். அமரநாத்தில் கூட பெரிய லிங்கம் அமைத்து வைத்துள்ளார்கள். தந்தையின் ரூபம் இவ்வளவு பெரியதாக இருக்குமா என்ன? எதுவுமே தெரியாமல் இருக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இந்த எல்லா விஷயங்களையும் சரியாகப் புரிந்து கொண்டு விட்டுள்ளீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஸ்ரீமத் படி எப்பொழுதும் சிறந்த செயல்களை செய்ய வேண்டும். எந்த ஒரு இழிந்த செயலும் ஆகக் கூடாது என்ற கவனம் கொள்ள வேண்டும். அநேகரை யோகியாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.

2. உண்மையான உள்ளம் கொண்டிருக்க வேண்டும். சரீரமோ ஒரு பிணம் போல. இதன் மீதுள்ள அபிமானத்தை விட்டு விட வேண்டும். முழுமையாக நஷ்டோ மோகா - மோகத்தை அழித்தவராக ஆக வேண்டும்.

வரதானம்:

கல்ப-கல்பத்தின் விதிக்கப்பட்ட வெற்றியை நினைவில் வைத்து சதா கவலையற்று இருக்கக் கூடிய நிச்சயபுத்தி உள்ளவர், வெற்றியாளர் ஆகுக.
நிச்சயபுத்தி உள்ள குழந்தைகள் விவகாரங்கள் அல்லது பரமார்த்தத்தின் ஒவ்வொரு காரியத் திலும் சதா வெற்றியின் அனுபவம் செய்வார்கள். எவ்வளவு சாதாரணமான காரியமாக இருந்தாலும், அவர்களுக்கு வெற்றிக் கான அதிகாரம் அவசியம் கிடைக்கிறது. அவர்கள் எந்த ஒரு காரியத்திலும் தன்னிடம் மனச்சோர்வு அடைவ தில்லை. ஏனென்றால் நிச்சயம் உள்ளது - கல்ப-கல்பத்தின் வெற்றியாளர் நாம். யாருடைய உதவியாளராக சுயம் பகவான் இருக் கிறாரோ, அவருக்கு வெற்றி கிடைக்காமல் வேறு யாருக்குக் கிடைக்கும்? இந்த விதியை யாராலும் விலக்க முடியாது. இந்த நிச்சயம் மற்றும் ˆô, கவலையற்றவராக ஆக்கி விடும்.

சுலோகன்:

சதா குஷி என்ற சத்துணவு மூலம் ஆரோக்கியம் மற்றும் குஷியின் கஜானாவினால் நிரம்பிய, மகிழ்ச்சி நிறைந்தவர் ஆகுங்கள்.

 

மாதேஷ்வரி அவர்களின் விலைமதிக்க முடியாத மகாவாக்கியம்

1) நாம் சொல்கிறோம் - கல்பம் என்பது 5000 வருடங்கள் கொண்டது தான். மேலும் இந்தக் கல்பம், ஒவ்வொரு கல்பமும் அப்படியே திரும்பத் திரும்ப நடைபெறுகிறது. இதைப் பற்றி அநேக மனிதர்களின் கேள்வி - கல்பம் எவ்வளவு பெரியது! அது பிறகு 5000 வருடங்கள் என்று எப்படி இருக்க முடியும்? கல்பமோ லட்சக்கணக்கான வருடங்கள் கொண்டது. லட்சம் வருடங்கள் பழைமையான பொருள்கள் வெளிப்பட்டுள்ளன என்றால் இதிலிருந்து தெரிய வருவது - இது ஏதோ லட்சம் வருடங்களுக்குரியது. பிறகு மனிதர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள், கல்பம் 5000 வருடங்கள் என்று? இது போல் சரித்திரம் லட்சக்கணக்கான வருடங்களால் ஆனது என்று யாராவது சொல்வார்களானால் அவர் களுக்குப் புரிய வையுங்கள் -- லட்சம் வருட சரித்திரங்கள் எப்படி இருக்க முயும்? ஒரு கல்பத்துக்குள் இவ்வளவு மேலே-கீழே ஆகிறது, இவ்வளவு விநாசம் ஆகி விடுகிறது. அப்போது உங்களுடைய அந்த சரித்திரம் எப்படி நிரூபிக்கப் பட்டதாகும்? பிறகு சரியான சரித்திரம் என்று எப்படித் தெரிய வரும்? ஆகவே இந்த விஷயம் உறுதி செய்யப்படவில்லை. இப்போது நமக்கோ சுயம் உலக சர்வசக்திவான் மிகச் சரியாகச் சொல்கிறார். மேலும் அதோடு கூடவே நமக்கு திவ்ய திருஷ்டி மூலம் சாட்சாத்காரமும் செய்விக்கிறார். அப்போது நாம் அதில் நம்பிக்கை வைக்க மாட்டோமா? அவசியம் யாராவது சாட்சாத்காரத்தில் நம்பிக்கை வைக்காமல் போனாலும் சுயம் பரமாத்மா நமக்கு முன்னிலையில் வந்து சொல்லிக் கொண்டி ருக்கிறார். முதலிலோ நமக்கு இந்த நிச்சயம் உள்ளது - கற்றுத் தருபவர் யார்? பிறகு சிருஷ்டி முழுவதும் எப்படி இப்படியே சக்கர மாகச் சுற்றி வருகிறது - இந்த ரகசியத்தையும் கூட நாம் புரிந்து கொண்டிருக் கிறோம். அதனால் தான் நாம் நமது அனுபவம் மற்றும் நடைமுறை வாழ்க்கையைப் பார்த்து யதார்த் தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் -- கல்பம் 5000 வருடங்களைக் கொண்டது தான்.

2) ஆத்மா மற்றும் பரமாத்மாவுக்கிடையில் உள்ள வேறுபாடு புரிய வைக்கப் படுகிறது - அதாவது ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ஆத்மா ஒரே மாதிரி ஒரே அளவு தான். மற்றப்படி ஆத்மா மற்றும் பரமாத்மாவுக்கிடையில் குணங்களின் சக்தியில் வேறுபாடு என்பது அவசியம் உள்ளது. இப்போது இவ்வளவு குணங்கள் உள்ளன என்றால் மகிமை அனைத்தும் பரமாத்மாவுடையது. பரமாத்மா சுகம், துக்கத்திற்கு அப்பாற் பட்டவர். சர்வசக்திவான், சர்வ குணங்களும் நிரம்பப் பெற்றவர், 16 கலை சம்பூர்ணம். அவருடைய சக்தி தான் முழுவதுமாகக் காரியமாற்றிக் கொண்டிருக்கிறது. மற்றப்படி மனித ஆத்மாவினுடைய எந்த ஒரு சக்தியும் செல்லுபடியாகாது. பரமாத்மாவின் பார்ட் தான் முழுமையாக நடைபெறுகிறது. பரமாத்மா நாடகத்தின் பார்ட்டிலும் வருகிறார் என்ற போதிலும் கூட சுயம் விலகி, தனிப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆத்மா பார்ட்டில் வந்தாலும் பார்ட்தாரியின் ரூபத்தில் வருகிறது. பரமாத்மா பார்ட்டில் வந்தாலும் கர்ம பந்தனத்திலிருந்து விலகியிருக்கிறார். ஆத்மா பார்ட்டில் வந்து கொண்டு, கர்ம பந்தனங்களின் வசமாகி விடுகிறது. இது ஆத்மா மற்றும் பரமாத்மாவுக்கிடையில் உள்ள வேறுபாடாகும். நல்லது. ஓம் சாந்தி

 Download PDF

Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

Post a Comment

0 Comments