Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala
20-07-2022 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே ஆன்மீக சேனையினர். உங்களைத் தவிர எவராலும், இராவணனிடமிருந்து உலகைப் பாதுகாக்க முடியாது. இத்தூய போதையை வைத்திருங்கள்.
கேள்வி:
எக்குழந்தைகளின் மகத்துவத்தை பாப்தாதா புகழ்கிறார்?
பதில்:
பாபா கூறுகிறார்: தாங்கள் அடிக்கப்படும்பொழுதும் சிவபாபாவை நினைவுசெய்கின்ற, பந்தனத்தில் உள்ள புத்திரிகளின் (அப்பாவிகள்) மகத்துவத்தையாகும். அடிக்கப்படுவதால், அவர்கள் தொடர்ந்தும் பெருமளவுக்குப் பற்றை அழித்தவர்களாகவும் ஆகுகிறார்கள்,
இதன் காரணமாக அவர்களின் அந்தஸ்து மேலும் உயர்ந்ததாக ஆகுகிறது. தந்தை அத்தகைய குழந்தைகளுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அச்சரீரங்கள் உங்களுக்கு உரியவையல்ல. இப்பொழுது நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் என்பதால், உங்கள் ஸ்திதி தொடர்ந்தும் உறுதியாகும். ஒரு நேர்மையான இதயத்தினால் தந்தை பூரிப்படைகிறார்.
பாடல்: உங்களைக் கண்டு கொண்டதும் நாங்கள் முழு உலகையும் கண்டு கொண்டோம், பூமி, ஆகாயம் அனைத்தும் எங்களுக்கே உரியவை.
ஓம் சாந்தி. குழந்தைகள் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு சேனையினர் என்பதை அறிவீர்கள். யாருடைய சேனையினர்? கடவுளுடைய சேனையினர். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இராவணனை வெல்கிறீர்கள். நீங்கள் முழு உலகையும் இராவணனிடமிருந்து விடுவிப்பதுடன், உங்கள் சொந்த இராச்சியத்தையும் ஸ்தாபிக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். நீங்கள் எவ்வளவு சாதாரணமாக அமர்ந்திருக்கிறீர்கள் எனப் பாருங்கள். நீங்கள் உங்கள் கரங்களையோ அல்லது பாதங்களையோ பயன்படுத்துவதில்லை, ஆனால் நீங்கள் மிகவும் சக்திவாய்ந்ததொரு சேனையினர். நீங்கள் கடவுளின் உதவியாளர்கள். கடவுள் மறைமுகமானவர், நீங்களும் மறைமுகமானவர்கள். அவர் சக்கரவர்த்தி எனவும் அழைக்கப்படுகிறார். விகாரங்களை வெல்வதனால், முழு உலகையும் வெல்கின்ற உங்கள் யுத்தம் மிகவும் சக்திவாய்ந்ததும், மறைமுகமானதுமாகும். அது ஓர் இராணுவம் என்பதைப் போன்றே, நீங்களும் ஓர் ஆன்மீக சேனையினர் என நீங்கள் உணர்கின்றீர்கள். பாரதத்திற்குரிய அனைத்தும் சேனையாகிய, உங்களிலேயே தங்கியுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். எங்கள் சேனை இல்லாது விட்டால், ஏனையோர் எங்களை வெற்றி கொண்டு விடுவார்கள். அந்த இராவணுவத்தில் அவர்கள் சிலசமயங்களில் அரசர்களை விரட்டி விட்டு, அதனை ஓர் இராணுவ ஆட்சியாக ஆக்குகிறார்கள். தங்களைத் தவிர எவராலும் தங்கள் நாட்டைப் பாதுகாக்க முடியாது என அந்த இராணுவம் எண்ணுகிறது. கடவுளின் சேனையாகிய, உங்களைத் தவிர, எவருமே இராவணனிடமிருந்து பாதுகாக்கப்பட முடியாது எனும் தூய பெருமை உங்களுக்கும் உள்ளது. அந்த இராணுவத்தையும் பாருங்கள், உங்களையும் பாருங்கள். நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள். உங்களுக்கு எச்சீருடைகளோ அல்லது ஆயுதங்கள் போன்றவையோ இருப்பதில்லை. அம்மக்களுக்குப் பல்வேறு சீருடைகள் இருக்கின்றன. அவர்கள் முகமூடிகளுடன் மாறுவேடங்களிலும் வருகிறார்கள். அவர்கள் ஹோலியின்பொழுது, முகமூடிகளைச் செய்கிறார்கள். அவர்கள் இராமரின் சேனையையும் காட்டுகிறார்கள். அவர்கள் அனுமனுக்கு ஒரு குரங்கின் முகத்தைக் கொடுத்து விட்டார்கள். அது பொம்மைகளுடன் விளையாடுவது மாத்திரமேயாகும். நீங்கள் ஐந்து விகாரங்களாகிய, இராவணனின் சிறையிலிருந்து இப்பொழுது விடுதலை அடைகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒன்று இராவணனின் சிறையாகும். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுபவர்களின் சிறையும் உள்ளது. பக்தியின் சங்கிலிகளும், பின்னர் குருமார்களின் சங்கிலிகளும், அதன்பின்னர் கணவன்மாரின் சங்கிலிகளும் உள்ளன. நீங்கள் இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், மிகவும் சந்தோஷமற்;றவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் அதிகளவு கூவியழைக்கிறீர்கள்: இராவணன் எங்களைப் பெருமளவில் தொந்தரவு செய்கிறான். ஆத்மாக்களாகிய நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக யோகத்தில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாகத் துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆகுகிறீர்கள். அப்பாவிகள் பெருமளவில் துன்புறுத்தப்படுகிறார்கள்;; அவர்கள் பெருமளவு அடிக்கப்படுகிறார்கள். அப்பாவி ஏழைகள் கூவியழைக்கிறார்கள்: இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தந்தை அவர்களுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார். உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அச்சரீரங்கள் உங்களுடையவை அல்ல. நீங்கள் மரணித்து விட்டீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள், ஆகவே வேறெந்த வழியும் கிடையாது. நாங்கள் சிவபாபாவுக்கு உரியவர்கள். உண்மையான குழந்தைகளின் ஸ்திதி மிகவும் உறுதியாக உள்ளது. அவர்களின் எண்ணங்கள் விகாரத்தை நோக்கிச் செல்வதேயில்லை. எவரேனும் அத்தகைய குழந்தைகளின் மீது பலாத்காரத்தைப் பிரயோகித்தாலும், அவர்களுக்குத் தீங்கு செய்தாலும், அக் குழந்தைகள் பாவத்தைச் சேகரிப்பதில்லை. அவர்கள் கூவியழைக்கிறார்கள்: பாபா, நான் உங்களுக்கு உரியவன். இச்சரீரம் ஒரு பிரேதத்தைப் போன்றதாகும். புத்தியில் அத்தகைய நம்பிக்கை உடையவர்கள், ஓர் உண்மையான இதயத்தைக் கொண்டிருந்தால், மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். பிரபு அத்தகைய நேர்மையான இதயங்களைக் கொண்டவர்களுடன் நிச்சயமாகப் பூரிப்படைவார். இங்கும், அடிக்கப்படுபவர்கள் நினைவுசெய்யும் அளவுக்குப் புத்திரிகள் பாபாவை நினைவுசெய்வதில்லை. பந்தனத்தில் இருப்பவர்கள் அழைப்பது தந்தையை வந்தடைகிறது: பாபா, எங்களை இப்பந்தனத்திலிருந்து விடுவியுங்கள்! பந்தனத்தில் இருப்பவர்கள் பாபாவை நினைவுசெய்யுமளவுக்குப் பந்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களும், பந்தனமற்றவர்களும் பாபாவை நினைவுசெய்வதில்லை. சிவபாபாவின் நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே, உங்கள் படகு அக்கரை செல்லும். சிலர் கூறுகிறார்கள்: பாபா, அவர்கள் எங்களை முரளியை வாசிப்பதற்குக் கூட அனுமதிப்பதில்லை. ஓ! ஆனால் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். இது ஒவ்வொரு நாளும் முரளியில் விளங்கப்படுத்தப்படுகிறது. ஒரு நினைவு அட்டவணையை வைத்திருப்பதே பிரதான விடயம்: நான் எவ்வளவு நேரம் பாபாவை நினைவுசெய்கிறேன்? பலரால் இம்முயற்சியைச் செய்ய இயலாதுள்ளது; அவர்கள் மீண்டும் மீண்டும் பாபாவை நினைவுசெய்வதை மறந்து விடுகிறார்கள். எவ்வாறாயினும், பந்தனத்திலுள்ள புத்திரிகளும், அடிக்கப்படுபதை அனுபவம் செய்கின்றவர்களும் மேலும் அதிகமாக பாபாவை நினைவுசெய்கிறார்கள். இது அடிக்கப்படும்பொழுதும் பாபாவைத் தொடர்ந்தும் நினைவுசெய்கின்ற, அப்பாவிகளின் மகத்துவமே ஆகும். பாபா கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். எந்தளவுக்கு அதிகமாக அவர்கள் உங்களை அடிக்கின்றார்களோ, அந்தளவுக்கு அதிகமாக நீங்கள் தொடர்ந்தும் பற்றை வென்றவர்கள் ஆகுவீர்கள். அடிவாங்குதல்கள் உங்களை ஒரு சிறந்த அந்தஸ்தைப் பெறுமாறு செய்கின்றன. பாபா அத்தகைய புத்திரிகளை நினைவுசெய்கிறார். ஆம், சிலர் மிகச்சிறந்த மகாராத்திகள், அவர்கள் பலருக்கும் சேவை செய்து, அவர்களையும் யோகிகளாக ஆக்குகிறார்கள். யோகத்தின் புகழ் பெருமளவில் உள்ளது. நீங்கள் அனைவர் மீதும் கருணையைக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் கீதையைக் குறிப்பிடுகிறீர்கள். கடவுள் கிருஷ்ணரே இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பது மாத்திரமே அவர்களின் புத்தியில் உள்ளது. பரமாத்மாவாகிய பரமதந்தையே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார் என நீங்கள் கூறுகிறீர்கள். அவர்களுக்கு இதனை நிரூபிப்பதற்கு, அவர்களிடம் இவ்வினாவை வினவுங்கள்: பரமாத்மாவாகிய பரமதந்தையுடனான உங்கள் உறவுமுறை என்ன? அவரே தந்தை என நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் வகையில், தந்தையுடன் யோகம் செய்ய வேண்டும் என்பதே தந்தையின் கட்டளை ஆகும். எம்மனிதர்களுடனும் யோகத்தைக் கொண்டிராதீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதராக இருப்பின், நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். கீதையில், அவர்கள் ஒரு சரீரதாரியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையே எங்களுக்கு யோகத்தைக் கற்பிக்கிறார் என நாங்கள் கூறுகிறோம். நீங்கள் எவரையும் அவதூறு செய்வதில்லை. நீங்கள் தந்தையைப் புகழ்கிறீர்கள். எவ்வாறாயினும், விளங்கப்படுத்துபவர்கள் மிகவும் திறமைசாலிகளாகவும், விவேகிகளாகவும் இருக்க வேண்டும், ஏனெனில் பெரும் கல்விமான்களும், பண்டிதர்களும் கூட அங்கு வருகிறார்கள். சந்நியாசிகளின் சேனையும் உள்ளது. அவர்களின் தலைவர்கள் அனைவரும்; வருகிறார்கள். நீங்கள் மிகச்சிறிதளவே பேசினாலும், அம்பானது அவர்களைத் தைக்கும்வகையில் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். பெருமளவு கூறத் தேவையில்லை, ஏனெனில் அவர்களுக்கும் பெருமளவில் கோபம் உள்ளது. அவர்களுடைய சேனையும் மிகவும் பெரியதாகும். நீங்கள் எங்கேயிருந்தாவது ஓர் அழைப்பிதழைப் பெற்றால், உங்களால் அங்கே செல்ல முடியும். உங்கள் மத்தியில் எவரால் பிறருக்கு மிக நன்றாகச் சவால் விடுக்க முடியும் என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் அல்பா என்பதன் அர்த்தத்தை விளங்கப்படுத்த வேண்டும். இரு விடயங்கள் மாத்திரமே உள்ளன. தந்தையாகிய அல்பா கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். படைப்பவராகிய அல்பாவான கடவுளால் மாத்திரமே உங்களுக்கு இதனைக் கூற முடியும். அவரே தந்தையாகிய சுவர்க்கக் கடவுள். அவர் கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஸ்ரீ கிருஷ்ணரை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் எங்கே இருக்கிறார்? அவர் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, இன்னுமொன்றை எடுத்தார். அசரீரியானவரே அழிவற்றவர். இதனைப் பற்றிய முழு விளக்கமும் உள்ளது. அவர்கள் அத்தகையதொரு பெரிய தவறைச் செய்துள்ளார்கள். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு உலக ஆஸ்தியைக் கொடுக்கிறேன். கிருஷ்ணரால் எவ்வாறு அனைவருக்கும் ஆஸ்தியைக் கொடுக்க முடியும்? கிருஷ்ணர் பாரதத்துக்கு உரியவர், ஆனால் முழு உலகமுமே தூய்மையற்றுள்ளது. அசரீரியான ஒரேயொருவரே அனைவரையும் தூய்மையாக்குபவர். உங்கள் புத்தியில் இவ்விடயங்கள் அனைத்தும் உள்ளன. நீங்கள் பக்திப் பாகத்தின் ஞானத்தையும் கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், சிவனின் வழிபாடு உள்ளது; அவர்கள் சோமநாதருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டினார்கள். சோமநாதருக்கு அத்தகையதொரு பெரிய ஆலயத்தைக் கட்டியவர் யார்? வேறு எவருக்கும் இதனைச் செய்வதற்கான சக்தி இல்லை. அத்தகையதோர் ஆலயத்தைக் கட்டுவதற்கு அவர்கள் அந்நேரத்தில் நிச்சயமாகச் செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும். உண்மையிலேயே நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். சோமநாதருக்கு அத்தகையதொரு பெரிய ஆலயம் கட்டப்பட்டது; அது ஒரு சக்கரவர்த்தியாலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். தேவர்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, பின்னர் வழிபடுபவர்கள் ஆகினார்கள். அவர்களே வழிபடுவதற்காக ஆலயங்களை மீண்டும் ஒருமுறை கட்டுபவர்கள்;. ஒரேயொரு சோமநாதர் ஆலயம் மாத்திரமே கட்டப்பட்டது என்பதல்ல. ஒருவர் கட்டுவதற்கு ஆரம்பித்த பின்னர், ஏனைய பலரும் அதைச் செய்தார்கள். பின்னர் பல ஆலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவர்கள் ஒட்டகங்களில் சுமந்து செல்லக்கூடிய வகையில் ஓர் ஆலயத்திலிருந்து மாத்திரமே அதிகளவு பொருட்களைப் பெற்றார்கள். மக்;கள் ஒரு நாட்டைத் தாக்கும்பொழுது, தலைநகரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கின்றார்;கள். பின்னர் அவர்கள் வெற்றியாளர்கள் ஆகுகின்;றார்கள். உண்மையிலேயே டெல்லி பாரிஸ்தானாக (தேவதைகளின் பூமி) இருந்தது என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. அதனை தர்மராஜ் ஸ்தாபித்தார். டெல்லி மீண்டும் ஒருமுறை தேவதைகளின் பூமியாகும். அதற்காக நாங்கள் இராஜயோகத்தைக் கற்கிறோம். நீங்கள் இவ்விடயங்களைச் செவிமடுக்கும்பொழுது, உங்கள் புத்தி போதையுற்றிருப்பதை உணர்கிறது; உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதைப் புரிந்துகொள்கிறீர்கள். எங்கள் பெயர் போற்றப்படுகிறது. கூறப்பட்டுள்ளது: இதுவே மறைமுகமான அகிம்சா சேனையாகும். அத்தகையதொரு முக்கியமான அர்த்தத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் பௌதீகமான ஆயுதங்களையோ அல்லது காம வாளையோ பயன்படுத்துவதில்லை. நீங்களே யோக சக்தியின் மூலம் இராச்சியத்தை அடைகின்ற, அகிம்சா சக்தி சேனையினர். உலக அதிபதிகள் ஆகுவதற்கு, நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்கிறோம். இந்நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்; பின்னர் அது மீண்டும் புதிதாக ஆரம்பிக்கும். இது ஓர் அழிவற்ற நாடகம்;;; அது ஒருபொழுதுமே முடிவடைவதில்லை. எவ்வாறாயினும், புதிய உலகம் வரும்பொழுது, பழைய உலகம் முடிவடைகிறது என்பது நிச்சயமே. சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இது ஓர் அநாதியான நாடகமாகும். கடவுள் எங்கும் பிரசன்னமாகியுள்ளார் என அவர்கள் கடவுளைப் பற்றிக் கூறுவதைப் போன்று, இந்நாடகம் தொடர்ந்தும் சுழல்கிறது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். இந்நாடகத்தின் நடிகர்கள் அனைவரும் எப்பொழுதும் இருக்கிறார்கள். அசரீரி உலகமும், பௌதீக உலகமும் சதா காலமும் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். சக்கரம் சத்திய, திரேதா யுகங்களினூடாகச் சென்று, பின்னர் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. இது ஓர் அழிவற்ற நாடகமாகும். நாடகத்தில் நடிகர்களாகிய நாங்களும் இருக்கிறோம். ஆரம்பத்திலிருந்து இறுதிவரையான பாகங்கள் எங்கள் அனைவருக்கும் உள்ளன. அவை பழையவை ஆகுகின்ற, சிறிய நாடகங்கள் மாத்திரமே. இதுவோ என்றுமே பழையதாகுவதில்லை. எப்பொழுதாவது இந்த அழிவற்ற நாடகம் பழையதாகுகின்றதா? இல்லை, ஆனால் நாங்கள் தொடர்ந்தும் எங்கள் பாகங்களை நடிக்கிறோம். அது புதியதிலிருந்து பழையதாகி, பின்னர் பழையதிலிருந்து புதியதாகுகின்றது. உண்மையிலேயே நீங்கள் அரசர்களும் அரசிகளுமாக இருந்தீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது ஆண்டிகள் ஆகியுள்ளீர்கள். பின்னர் நீங்கள் ஆண்டிகளிலிருந்து அரசர்கள் ஆகுகின்றீர்கள். “ஆண்டி” என்றால் ஓர் ஆன்மீகப் பிச்சைக்காரர் (பக்கிரி) என அர்த்தமாகும். தந்தை வந்து, அனைவருக்கும் பாதையைக் காட்டுகிறார். உங்களுக்குப் பெருமளவு போதை இருக்க வேண்டும். நீங்கள் இப்புதிய ஞானத்தைப் பெறுகிறீர்கள், நீங்கள் அதனை ஒருமுறை மாத்திரமே பெறுகிறீர்கள். வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நீங்கள் உங்களுடைய இராச்சியத்தை இவ்வுலகம் முழுவதும் ஸ்தாபிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள். எவ்வாறாயினும், அந்தத் துன்புறுத்தல்கள் இருக்கும். துன்புறுத்தல்;களும் கர்ம வேதனை ஆகும். ஓர் ஆண் ஒரு பெண்ணை அடிக்கும்பொழுது, அவன் அதனைப் போன்று செய்வானா? நீங்கள் அநேகமாக அவனையும் அடித்திருப்பீர்கள். அந்தக் கர்மக் கணக்கு தீர்க்கப்படுகிறது. இவை அனைத்தும் கர்மக் கணக்கு ஆகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் இப்பொழுது மேன்மையான செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது எச்சீரழிந்த செயல்களையும் செய்வதில்லை. அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே, அனைத்திலும் அதிமேன்மையான செயலாகும். தந்தையின் கட்டளையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அனைவரும் தந்தையை மறந்து விட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் சிவனை வழிபடுகிறார்கள், ஆனால் அவர்கள் எதனையும் அறியார்கள். அவர்கள் அமர்நாத்தில் ஒரு பெரிய லிங்கத்தையும் உருவாக்கியுள்ளார்கள். தந்தையின் ரூபம் அத்தனை பெரியதா? அவர்கள் எதனையும் அறியார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் மிகச்சரியாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- எப்பொழுதும் ஸ்ரீமத்துக்கேற்ப மேன்மையான செயல்களைச் செய்யுங்கள். நீங்கள் சீரழிந்த செயல்களைச் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனைய பலரையும் யோகிகளாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.
- ஒரு நேர்மையான இதயத்தைக் கொண்டிருங்கள். அச்சரீரம் ஒரு பிரேதத்தைப் போன்றது. ஆகவே அதிலுள்ள பெருமையைத் துறந்து விடுங்கள். முழுமையாகப் பற்றை அழித்தவர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதுடன்,
சதா கவலையற்றவராக இருப்பதாலும், ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருப்பதாலும், வெற்றியாளர் ஆகுவீர்களாக.
புத்தியில் நம்பிக்கை உடைய குழந்தைகளே தங்கள் லௌகீக வேலைகள் மற்றும் தொடர்புகள் அனைத்திலும், தங்கள் ஆன்மீக வேலையிலும் எப்பொழுதும் வெற்றி அடைகின்றார்கள். வேலை எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும்,
அவர்கள் நிச்சயமாக வெற்றிக்கான ஓர் உரிமையைக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு கல்பத்திலும் தாங்கள் வெற்றியாளர்கள் எனும் நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதால், அவர்கள் என்றுமே எந்தப் பணியிலும் மனந்தளர்வதில்லை.
எவருக்குக் கடவுளே உதவியாளராக இருக்கின்றாரோ, அவர் வெற்றியடையவில்லை எனில், அப்பொழுது யார் வெற்றி அடைவார்? இந்த நியதியை எவராலும் தவிர்க்க முடியாது. அந்த நம்பிக்கையும், போதையும் அவர்களைக் கவலையற்றவர்கள் ஆக்குகின்றன.
சுலோகம்:
சந்தோஷம் எனும் போஷாக்கு மூலம் எப்பொழுதும் ஆரோக்கியமானவர்களாகவும், சந்தோஷம் எனும் பொக்கிஷம் மூலம் முழுமையாகச் சந்தோஷமானவர்களாகவும் இருங்கள்.
---ஓம் சாந்தி---
மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்.
சக்கரம் 5000 வருடங்கள் கொண்டது எனவும், இந்தச் சக்கரம் அதேபோன்று மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது எனவும் நாங்கள் கூறுகின்றோம். இதனைப் பற்றிப் பலருக்கும் ஒரு கேள்வி உள்ளது. சக்கரம் மிகவும் நீண்டது, எனவே, அது எவ்வாறு 5000 வருடங்கள் கொண்டதாக இருக்க முடியும்? சக்கரம் நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு உரியது. நூறாயிரக் கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்தது என்று காட்டுகின்ற ஏதேனும் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால், எவ்வாறு மக்களால் சக்கரம் 5000 வருடங்கள் கொண்டது என ஏற்றுக் கொள்ள முடியும்? வரலாறு நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு உரியது என்று எவரேனும் கூறினால், அப்பொழுது அவர்களிடம் கூறுங்கள்: எவ்வாறு நூறாயிரக் கணக்கான வருடங்களுக்குரிய வரலாறு இருக்க முடியும்? ஒவ்வொரு கல்பத்திலும் சகல குழப்பங்களும், விநாசமும் நடைபெற்று, அனைத்து இராச்சியங்களும் அழிக்கப்படுவதால், எவ்வாறு உங்கள் வரலாறு நிரூபிக்கப்பட முடியும்? எது மிகச்சரியான வரலாறு என்பதை எவ்வாறு உங்களால் அறிந்துகொள்ள முடியும்? எனவே, இதனை நிரூபிக்க முடியாது. சர்வசக்திவான் கடவுளே எங்களுக்கு அனைத்தையும் மிகச்சரியாகக் கூறி, தெய்வீகக் காட்சி மூலம் எங்களுக்கு எஒரு காட்சியையும் அருள்கின்றார். எனவே, அதனை நாங்கள் நம்ப மாட்டோமா? ஒருவருக்குக் காட்சி கிடைத்தாலும், அவருக்கு அதில் நம்பிக்கை இல்லாது விட்டாலும், கடவுளே எங்களுக்கு நேரடியே கூறுகின்றார். முதலில், எங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதிலும், எவ்வாறு முழு உலகமும் சக்கரத்தில் சுற்றி வருகின்றது என்பதிலும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் இந்த இரகசியத்தைப் புரிந்துகொண்டு விட்டோம், எங்கள் அனுபவம் மற்றும் எங்கள் நடைமுறை வாழ்வுகள் காரணமாக, சக்கரம் 5000 வருடங்கள் கொண்டது என்று எங்களால் கூற முடிகின்றது.
ஆத்மாக்களினதும், கடவுளினதும் ரூபமான, ஒளி ரூபம் ஒன்றே என எங்களால் ஆத்மாக்களுக்கும் கடவுளுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளங்கப்படுத்த முடியும். ஆத்மாக்களினதும், கடவுளினதும் அளவும் ஒன்றே, ஆனால் ஆத்மாக்களினதும், கடவுளினதும் தகுதிகளின் சக்தியில் நிச்சயமாக ஒரு வேறுபாடு உள்ளது. தெய்வீகக் குணங்கள் அனைத்தினதும் புகழ் கடவுளுக்கேரியது. கடவுள் சந்தோஷத்திற்கும், துன்பத்திற்கும் அப்பாற்பட்டவரும், ஒரு சர்வசக்திவானாக, அவர் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவரும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவரும் ஆவார், அவருடைய சக்தியே செயற்படுகின்றது. மனித ஆத்மாக்களின் சக்தி அந்தளவிற்குச் செயற்படுவதில்லை. முழுப் பாகமும் கடவுளுக்கே உரியது. ஒரு பாகத்தை நடிப்பதற்குக் கடவுள் வந்தாலும், அவர் பற்றற்றவராக இருக்கின்றார். ஓர் ஆத்மா ஒரு பாகத்தை நடிப்பதற்கு வரும்பொழுது, தனது பாகத்தை நடித்து, ஒரு நடிகர் ஆகுகின்றார். கடவுள் ஒரு பாகத்தினுள் பிரவேசித்தாலும், கர்ம பந்தனம் எதற்கும் அப்பால் இருக்கின்றார். ஓர் ஆத்மா ஒரு பாகத்தை நடிப்பதற்கு வரும்பொழுது, கர்ம பந்தனத்தினால் கட்டுப்பட்டுள்ளார். இதுவே ஆத்மாக்களுக்கும் கடவுளுக்கும் இடையிலான வேறுபாடாகும்.
Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala


0 Comments