Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam
19-05-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! தற்சமயம் இந்த
பாரதத்திற்கு ஸ்ரீமத் (உயர்ந்த வழி) - தேவைப்படுகிறது ஸ்ரீமத் மூலம் தான் சோழி
போன்ற பாரதம் வைரத்தைப் போல் மாற்றமடையும். அனைவருக்கும் கதி, சத்கதி ஏற்படும்.
கேள்வி:
மனிதரிடம்
இல்லாத எந்த ஒரு சக்தி சர்வசக்திவான் தந்தையிடம் உள்ளது?
பதில்:
இராவணனை
அழிக்கக் கூடிய சக்தி ஒரு சர்வ சக்திவான் தந்தையிடம் உள்ளது, மனிதர் களிடம் இல்லை.
இராமனின் சக்தியில்லாமல் இராவணன் இறக்க முடியாது. தந்தை வரும் போது குழந்தைகளாகிய
நீங்களும் இராவணன் மீது வெற்றி அடையும்படியான சக்தியை கொடுக்கிறார்.
ஓம்
சாந்தி. இது புனித அன்னப்பறவைகளின் சபை, இங்கே பிராமணர்கள் அனைவரும் அமர்ந்திருக்
கின்றனர் என இனிமையான குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். தூய்மை யானவர்கள் என்று
பிராமணர்களை கூறுகின்றனர்,
தூய்மையற்றவர்களை
சூத்திர வர்ணத்தவர் என சொல்வோம். யார் முயற்சியாளர்களாக இருக்கின்றனரோ அவர்களை
பாதி தர்மத்தவர் என சொல்வோம் - அதாவது இங்கும் அல்ல, அங்கும் அல்ல. ஒரு காலை அக்கரைக்குச்
செல்லும் படகிலும்,
மற்றொரு
காலை இக்கரைக்குச் செல்லும் படகிலும் வைத்தால் தடுமாறி விழுந்து விடுவீர்கள், ஆகையால் எந்தப் பக்கம் செல்வது
என தீர்மானிக்க வேண்டும். யாராவது அசுரர்கள் வந்து அமர்ந்து கொண்டால் தடைகளை
ஏற்படுத்துவார்கள். இதனை யார் புரிய வைப்பது? சிவாபாபா. சிவனைக் குறித்துத்தான் பாபா என்ற
வார்த்தை வாயிலிருந்து வெளிப் படுகிறது. சிவபாபாதான் பையை நிரப்பக் கூடியவர்.
தந்தையிடமிருந்து கண்டிப்பாக ஆஸ்தி கிடைக்கும். சிவனுக்கு எவ்வளவு அதிகமாக
கோவில்கள் உள்ளன,
அவர்
நிராகாரமானவர்,
உலகைப்
படைப்பவர். உலகில் இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது என்றால் கண்டிப் பாக
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கும். இப்போது நீங்கள் சூத்திரரிலிருந்து
பிராமணராக ஆகியுள்ளீர்கள்,
சூத்திரர்கள்
கல்புத்தியானவர்கள்,
இலட்சுமி
நாராயணர் தங்க புத்தி யானவர்களாக இருந்தனர் அல்லவா. மாயையால் புத்தி
வீழ்த்தப்படுகிறது (கெடுக்கப்படுகிறது). மாயையின் பெயர் பாரதத்தில் புகழ்
வாய்ந்தது. இந்த சமயத்தில் மாயையின் இராஜ்யமாக உள்ளது அதாவது இராவண சம்பிரதாயம்
உள்ளது,
ஆகையால்
இராவணனை கொல்கின்றனர்,
ஆனால்
சாவதில்லை. இராமனின் சக்தி இல்லாமல் இராவணன் மீது வெற்றி அடைய முடியாது. சர்வ
சக்திவானிடமிருந்து தான் சக்தி கிடைக்கும். அவர் ஒருவர் தான் பரமபிதா பரமாத்மா
ஆவார். அவருக்கு சூட்சும சரீரமோ ஸ்தூல சரீரமோ கிடையாது - பிறகு அந்த நிராகாரமானவர்
பாரதத்தில் எப்படி வந்தார் என்பதும் கூட யார் புத்தியிலும் வருவதில்லை. ஆத்மா
கர்மேந்திரியங்கள் இல்லாமல் கர்மம் செய்ய முடியாது. எதையும் புரிந்து கொள்வதில்லை, ஆகையால் கல்புத்தி என
சொல்லப்படுகிறது. தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார், பகவான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். அவருடைய
வழி அனைவரையும் விட உயர்வானதாகும். இல்லாவிட்டால் பகவானை ஏன் நினைவு
செய்கிறார்கள். அவருடைய வழியை நினைக் கின்றனர். கண்டிப்பாக பகவான் வருவதும் கூட
நாடகத்தில் அவரது நடிப்பு இருக்கிறது. மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. கிறிஸ்துவுக்கு
3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கீதை சொல்லப்பட்டது என பல மனிதர்கள் சொல்கின்றனர்.
ஆனால் அந்த கீதை எந்த தேசத்திற்காக, எந்த யுகத்தில் சொல்லப்பட்டது, மேலும் யார் சொன்னது என்பதை
சொல்லுங்களேன். ஒரே ஒரு சாஸ்திரத்தில் மட்டும் கிருஷ்ண பகவானுடைய மகா வாக்கியம் என
எழுதப்பட்டுள்ளது,
பிறகு
ருத்ர ஞான யக்ஞம் என்றும் கூட சொல்கின்றனர். ருத்ரன் என சிவபாபாவுக்கு
சொல்லப்படுகிறது. கிருஷ்ணரை ஒருபோதும் தந்தை என சொல்ல மாட்டார்கள். சிவபாபா தந்தை
என சொல்லப்படுகிறார். சிவபாபாதான் ஞானம் நிறைந்தவர், ஆனந்தம் நிறைந்தவர் என சொல்லப்படுகிறார், ஆகவே தான் பக்தர்களும்
கூப்பிடுகின்றனர். பக்தி செய்த பிறகு பகவான் கிடைப்பார் என புரிந்து கொள்கின்றனர்.
நல்லது,
பக்தி
எப்போது தொடங்குகிறது,
பகவான்
எப்போது கிடைப்பார்?
பாவாத்மாக்களின்
உலகத்திலிருந்து புண்ணியாத்மாக்களின் உலகத்திற்கு எப்போது செல்வது என்பது
யாருக்கும் தெரியாது. நீங்களும் சூத்திர வர்ணத்தவராக இருந்தீர்கள். இப்போது
நீங்கள் பிரம்மாவின் வாய்வழி வம்சாவளி பிராமணர் என சொல்லிக் கொள்கிறீர்கள்.
பிராமணராக யார் மாற்றியது?
சிவபாபா.
இவர் தான் படைப்பவர் ஆவார். பிராமண வர்ணம் அனைத்திலும் உயர்ந்ததாகும். பிராமணர்
களின் குடுமியும் உள்ளது,
ஏனென்றால்
சாகாரத்தில் இருக்கின்றனர் அல்லவா. ஆனால் அவர்களை உருவாக்குபவர் நிராகாரமானவர்.
அவர் பரமபிதா பரம ஆத்மா அதாவது பரமாத்மா. இந்த வார்த்தையை உறுதியாக நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள். நாடகத்தின்படி சிருஷ்டி தமோபிரதானமாகும் போது நான்
வரவேண்டியிருக்கிறது. நானும் கூட நாடகத்தின் பந்தனத்தில் கட்டுப்பட்டுள்ளேன்.
உங்களை தூய்மையற்றவரிலிருந்து தூய்மை யானவராக ஆக்கி சுகம், அமைதியின் ஆஸ்தியை வந்து
கொடுக்கிறேன். மற்ற அனைவருக்கும் அமைதியின் ஆஸ்தி கிடைத்து விடுகிறது. சத்யுகம், திரேதா யுகத்தில் புதிய உலகமாக
இருந்தது,
அதனை
இராமன் ஸ்தாபனை செய்தார். இராமன் என்பதை விட சிவபாபா எனும் வார்த்தையே சரியானது.
சிவபாபா எனும் வார்த்தை அனைவரின் வாயிலும் உள்ளது. ஆக பாபா புதிய உலகத்தை
படைப்பவர்,
அவர்
வந்து ஆஸ்தியை கொடுக்கிறார். கீதை பிராமணருக்குத்தான் சொல்ல வேண்டும்.சூத்திரரிலிருந்து
பிரம்மா வாய்வழி வம்சாவளி பிராமணர் ஆகும்போது அவர்களுக்கு கீதையை சொன்னார்.
பிராமணர்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண் திறந்தது, ஆகவே சொல் கின்றனர் - ஞானத்தின் மையை சத்குரு
கொடுத்தார்,
அஞ்ஞானத்தின்
காரிருள் வினாசம் ஆனது. இந்த நரகம் போன்ற உலகத்திலிருந்து சொர்க்கத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள் பாபா என்று குழந்தைகள் சொல்கின்றனர். இது சிவபகவானின்
வாக்கியம்,
சிவாச்சாரியரின்
வாக்கியம். சிவாச்சாரியார் (சிவபாபா) எல்லைக் காப்பாற்பட்ட சன்னியாசத்தைக்
கற்றுக்கொடுக் கிறார். சங்கராச்சாரியாரு டையது எல்லைக்குட்பட்ட சன்னியாசம் ஆகும்.
பழைய உலகத்தை மறந்துவிடுங்கள் என்று எல்லைக் கப்பாற்பட்ட தந்தை சொல்கிறார்.
இப்போது நீங்கள் சதா சுகம் நிறைந்த உலகத்திற்கு செல்ல வேண்டும். கிருஷ்ணபுரி
மற்றும் கம்சபுரி என்று சொல் கிறீர்கள் அல்லவா! கிருஷ்ணபுரி என்று சத்யுகத்தையும்
கம்சபுரி என்று கலியுகத்தையும் சொல்லப் படுகிறது. இரண்டும் சேர்ந்திருக்க
முடியாது. சத்யுகத்தில் கம்சன் எங்கிருந்து வந்தார்? புத்தி மூலம் சிந்தனை செய்ய வேண்டும்.
இப்போது சொர்க்கத்தின் அளவற்ற சுகத்தைக் கொடுப்பதற்காக பாபா அவரே வந்துள்ளார்.
பாபா
சொல்கிறார்,
இந்த கடைசிப்
பிறவியில் யார் படித்திருந்தார்களோ, அவர்களே படிக் கிறார்கள், பிறகு இராஜ்யம் ஸ்தாபனை
ஆகிவிடுகிறது. பாபா வந்து சூத்திரனிலிருந்து பிராமணனாக தேவதையாக மாற்றுகிறார்.
அந்த மனிதர்கள் ஹிந்துவை கிறிஸ்தவனாக, புத்த மதத்தவனாக மாற்றுவார்கள். ஒவ்வொருவரும்
தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும் - நாம் முதலில் எந்த தர்மத்தைச் சேர்ந்தவராக
இருந்தோம்?
எந்த
வர்ணத்தில் இருந்தோம்?
குருவாக
யார் இருந்தார்?
எந்த
சாஸ்திரங்களைப் படித்திருந்தோம்? குருவிட மிருந்து என்ன மந்திரம் கிடைத்தது? பிறகு எப்போது சிவபாபா பிரம்மா மூலமாக பிராமண
வர்ணத்தில் கொண்டு வந்தார்?
இதை
ஒவ்வொருவரையும் எழுத வைக்க வேண்டும். இப்போது என்னை நினைவு செய்யுங்கள் என்று
குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா சொல்கிறார். மாயை இராவணன் உங்களுக்கு எப்படிப்பட்ட
கெட்ட திசையை (துர்கதியை) உருவாக்கிவிட்டான்! இப்போது நீங்கள் பிராமண சம்பிரதாயத்தவராக
ஆகியுள்ளீர்கள்,
பிறகு
தெய்வீக சம்பிரதாயத் தவராக ஆக வேண்டும். உங்களை நிராகார பரமபிதா பரமாத்மா
மாற்றியுள்ளார். குழந்தைகள் ஒவ்வொருவரையும் எழுத வைக்க வேண்டும்: எந்த தர்மத்தவராக
இருந்தோம்?
யாரை பூஜை
செய்து வந்தோம்?
ஏதாவது
குருவிடம் சென்றோமா?
இல்லையா? பிறகு பிராமண வர்ணத்துக்கு யார்
அழைத்து வந்தார்?
இந்த பாபா
(பிரம்மா பாபா) கூட எழுதுவார் - நான் இந்து தர்மம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
நிறைய குருக்களிடம் சென்றேன்.நிறைய சாஸ்திரங்கள் படித்தேன். சீக்கிய தர்மத்தவர்
நான் சீக்கியன் என்று சொல்வார்கள். பாரதவாசிகளுக்குத் தான் தன்னுடைய தேவி தேவதா
தர்மத்தைப் பற்றித் தெரியவில்லை. மற்றபடி சீக்கிய தர்மத்தினர் தன்னை தேவதா தர்மம்
என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொருவரும் தத்தமது தர்மத்தைத் தான்
கூறுவார்கள். இப்போது பாபா சொல்கிறார் - யார் சிவனுடைய பக்தர்கள் அல்லது சிவனுடைய
படைப்பாகிய தேவி தேவதைகளின் பக்தர்களோ அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள்
நன்றாகக் கேட்பார்கள். சத்யுகம் திரேதா யுகத்தில் சூர்யவம்சத்தவர், சந்திர வம்சத்தவர் இருந்தார்கள்.
அவர் களுடைய சித்திரமும் கூட இருக்கிறது. ஆங்கிலத்தில் டெய்டிசம் (தேவி தேவதா தர்மம்)
என்று சொல்லப்படுகிறது. இப்போது பாபா தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறார். நீங்கள் பிராமண வர்ணத் திலிருந்து தேவதா வர்ணத்தினராக
மாறிக்கொண்டிருக்கிறீர்கள். பாரதவாசிகள் பூஜைக் குரியவர் களாக இருந்து பின்பு
அவர்களே பூஜாரி ஆகின்றார்கள். சத்யுகத்தில் பூஜைக்குரிய வர்களாக இருந்தார்கள்.
பாபா சொல்கிறார்,
நான்
எப்போதும் பூஜைக்குரியவராக இருக்கிறேன். இப்போது நீங்கள் இங்கே இராஜயோகம் கற்றுக்
கொள்ள வந்துள்ளீர்கள். எதிர்கால 21 பிறவிகளுக்காக சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய
வந்துள்ளீர்கள். எனவே அவர் வழியைப் பின்பற்ற வேண்டும். எதுவரை பிரம்மாவம்சத்தவர்
ஆக வில்லையோ,
அதுவரை
பிராமணன் என்று எப்படி சொல்ல முடியும்? நல்லது. இன்று போக் தினம். பிராமணர்களுக்கு
உணவு ஊட்டக்கூடிய பழக்கம் (திதி) உள்ளது. மற்றபடி ஞானத்திற்கும் இதற்கும்
சம்மந்தம் கிடையாது. இங்கே ஞானக்கடல் மற்றும் ஞான நதிகளின் சங்கமம். பிறகு அங்கே
தேவதைகளுக்கும் பிராமணர் களாகிய உங்களுக்கும் சந்திப்பு நடக்கிறது. இதில்
குழப்பமடைவதற்கான எந்த விசயமும் இல்லை. பாபா சொல்கிறார் - தேகத்தின் கூடவே
தேகத்தின் அனைத்து சம்மந்தங் களிலிருந்தும் பற்றுதலை நீக்கிக் கொண்டே செல்லுங்கள்.
என் ஒருவனை நினைவு செய்யுங்கள், அப்போது கடைசியில் புத்தியில் என்ன இருக்கிறதோ அதற்கேற்ப பதவி கிடைக்கும்.
உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன் என உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன்.
தினம்தோறும் வகுப்பில் கேளுங்கள் - சிவபாபாவிடம் வாக்குறுதி கொடுப் போமா? சிவபாபா சொல்கிறார் - என்னுடைய
வழிப்படி நடந்திடுங்கள். தந்தையின் ஸ்ரீமத் புகழ் வாய்ந்தது. ஸ்ரீமத் என்றால்
சிரேஷ்டமான வழி. பிரம்மாவின் வழியும் பாடப்பட்டுள்ளது. பிரம்மாவை விட பிரம்மாவின்
தந்தை சிவபாபா உயர்ந்தவர் அல்லவா. உணவு உண்ண அமரும்போதும் சிவபாபாவை நினைவு
செய்யுங்கள். மிகவும் அன்பான தந்தையாக இருக்கிறார். அவருடன் சேர்ந்து நாம் உணவு
உண்கிறோம். இந்த நினைவின் மூலம் மிகுந்த சக்தி கிடைக்கும். ஆனால் குழந்தைகள்
அடிக்கடி மறந்து விடுகின்றனர். பாரதத்தில் இப்போது சிவபாபாவின் ஸ்ரீமத் தேவையாக
உள்ளது. ஏனென்றால் தந்தைதான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், பதித பாவனராக இருக்கிறார்
அல்லவா. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். மாயை பலவிதமான தடைகளை
ஏற்படுத்தும்,
அதைக்
கண்டு பயப்படக் கூடாது. ஞானம் மிக எளிமையானது, மற்றபடி யோகத்தில் இருப்பது, ஒருவருடன் (தந்தையோடு) புத்தியை
இணைப்பது - இதில்தான் உழைப்பு உள்ளது. மற்ற விசயங்களில் மனம் அலைபாய்வதை விட ஒரு
சிவபாபாவை நினைவு செய்வது நல்லது. கீதை படிக்கக் கூடிய விசயம் அல்ல. ஏனெனில் தந்தை
தாமே வந்திருக்கிறார். மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும் குழந்தை குட்டிகள் ஆகும். அதன்
மூலம் ஆஸ்தி கிடைக்க முடியாது. எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி ஒரே ஒரு
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து கிடைக்கிறது. நல்லது.
பாப்தாதா
குழந்தைகளின் முன்னால் அமர்ந்திருக்கிறார். தந்தை சொல்கிறார் - நான் உங்களுடைய
தந்தை,
பிரம்மாவின்
மூலம் மம்மாவினுடைய,
தாதாவினுடைய, குழந்தைகளுடைய, அனைவருடைய அன்பு நினைவுகளை
கொடுக்கிறேன். நல்லது!
இனிமையிலும்
இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான
பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய
சாரம்:
1. மிகவும் அன்பான தந்தையை உடன்
வைத்துக் கொண்டு உணவு உண்ண வேண்டும். ஒரு தந்தையிடம் தான் புத்தியின் தொடர்பை
இணைக்க வேண்டும். ஒருவரின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.
2.
புத்தியிலிருந்து எல்லைக்கப்பாற்பட்ட பழைய உலகை மறக்க வேண்டும், இதைத்தான் சன்னியாசம் செய்ய
வேண்டும்.
வரதானம்:
தேகம், தேகத்தின் சம்மந்தம் மற்றும் பொருட்களின்
பந்தனத்திலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய வாழ்க்கை என்ற பந்தனத்திலிருந்து
விடுபட்ட ஃபரிஸ்தா ஆகுக.
ஃபரிஸ்தா
என்றால் பழைய உலகம் மற்றும் பழைய தேகத்தோடு பற்றுதலின் உறவு இல்லை. தேகத்தோடு
ஆத்மாவிற்கு உறவு இருக்கிறதே தவிர, பற்றுதலின் தொடர்பு இல்லை.
கர்மேந்திரியங்களின் மூலம் கர்ம சம்மந்தத்தில் வருவது தனிப்பட்ட வி‘யம், ஆனால் கர்மபந்தனத்தில்
வருவது அல்ல. ஃபரிஸ்தா என்றாலே காரியங்கள் செய்துக் கொண்டிருந் தாலும் கர்ம
பந்தனத்திலிருந்து விடுபடுவதாகும். தேகத்தின் பந்தனமும் இல்லை, தேக சம்மந்தத்தின்
பந்தனமும் இல்லை,
தேகத்தின்
பொருட்களின் பந்தனமும் இல்லை – அப்படிப் பட்ட பந்தனத்திலிருந்து விடுப்பட்டு
இருக்கக் கூடியவர்கள் தான் ஜீவன் முக்த் (வாழ்க்கையிலிருந்து விடுப்பட்ட)
ஃபரிஸ்தா.
சுலோகன்:
ஸ்தூலமான செல்வத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது
- ஆன்மீக அன்பு என்ற செல்வம்.
மாதேஸ்வரி
அவர்களின் விலைமதிப்பு மிக்க மகாவாக்கியங்கள்
துரதிஷ்டம்
மற்றும் அதிர்ஷ்டம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளின் ஆதாரம் எதன் மீது செல்கிறது? அதிர்ஷ்டத்தை உருவாக்கக்கூடியவர்
பரமாத்மா என்றும்,
துரதிஷ்டத்தை
உருவாக்க கூடியவர் மனிதன் என்பதை நாம் தெரிந்திருக்கிறோம். எப்பொழுது மனிதன்
என்றென்றும் சுகமுடையவர்களாக இருக்கிறானோ, அவருக்கு நல்ல பாக்கியம் நிறைந்தவர்கள் என்று
மனிதர்கள் சொல்கிறார்கள். மேலும் மனிதர்கள் தன்னை துக்கமானவர் என்று புரிந்துக்
கொள் கிறார்கள் என்றால் அவர்களை துரதிஷ்டசாலி என்று புரிந்துக் கொள்கிறார்கள்.
துரதிஷ்டம் மற்றும் அதிர்ஷ்டம் பரமாத்மா தான் உருவாக்குகிறார் என்பதில்லை.
அதிர்ஷ்டத்தை சீரழித்துக் கொள்வது மற்றும் உருவாக்கிக் கொள்வது, இவை அனைத்தும் செயலின்
அடிப்படையில் தான் இருக்கிறது. இவை அனைத்தும் மனிதர்களின் சம்ஸ்காரங் களின் மீது
தான் இருக்கிறது. பாவம் மற்றும் புண்ணியத்தின் சம்ஸ்காரம் உருவாகிறதோ, அதுபோல அதிர்ஷ்டத்தை
உருவாக்குகிறது,
ஆனால்
மனிதர்கள் இந்த இரகசியத்தை தெரிந்துக் கொள்ளாத காரணத் தினால் பரமாத்மாவின் மீது
எப்படி தோˆம் ஏற்படும். இப்பொழுது
பாருங்கள்,
மனிதர்கள்
தன்னை சுகமுடையவராக வைத்துக் கொள்வதற்காக மாயாவி முறைகளை பின்பற்றுகிறார் கள், பிறகு அந்த மாயாவினால் சிலர்
தன்னை சுகமுடையவர்களாக புரிந்து கொள்கிறார்கள், மேலும் ஒருசிலர் அந்த மாயாவின் சன்னியாசம்
செய்து மாயாவை விடுவதினால் தன்னை சுகமுடைவர்களாக புரிந்து கொள்கிறார்கள். அதன்
பொருள் பலவிதத்திலும் திட்டம் தீட்டுகிறார்கள், ஆனால் இத்தனை விதமான முறைகளை பின்பற்றினாலும்
அதனுடைய முடிவு துக்கத்தின் பக்கம் தான் செல்கிறது. உலகத்தில் நிறைய துக்கம்
ஏற்படும் பொழுது அந்த சமயத்தில் சுயம் பரமாத்மா வந்து குப்தமான முறையில் தனது
ஈஸ்வரிய நினைவு சக்தியின் மூலம் தெய்வீக உலகத்தை ஸ்தாபனை செய்ய வைத்து அனைத்து
மனித ஆத்மாக்களையும் பாக்கியசாலியாக மாற்றுகிறார்.
2.
மனிதர்கள் பாடுகிறார்கள் - நீயே தாயும் தந்தையும் நாங்கள் உங்களின் குழந்தையாக
இருக்கிறோம்,
உங்களுடைய
கருணையின் மூலம் சுகத்தை அடைந்தோம்...... இப்பொழுது இந்த மகிமை யாருக்காக
பாடப்படுகிறது?
அவசியம்
பரமாத்மாவிற்காக பாடப்படுகிறது, ஏனெனில் பரமாத்மாவே தாயும் தந்தையின் ரூபத்தில் வந்து இந்த உலகத்திற்கு அளவு
கடந்த சுகத்தை தருகிறார்,
பரமாத்மா
அவசியம் சுகமான உலகத்தை உருவாக்குகிறார், அதனால் தான் அவரை தாயும், தந்தையும் என்று சொல்லி
அழைக்கிறார்கள். ஆனால் சுகம் என்றால் என்ன என்பது பற்றி மனிதர்கள் தெரியாமல்
இருக்கிறார்கள். இந்த உலகத்தில் அளவுகடந்த சுகம் இருந்த பொழுது அமைதியும் இருந்தது, ஆனால் இப்பொழுது அந்த சுகம்
இல்லை. இப்பொழுது மனிதர் களுக்குள் அந்த சுகம் எங்களுக்கு வேண்டும் என்ற விருப்பம்
வருகிறது,
அதன்
பிறகு சிலர் செல்வம்,
பொருளை
யாசிக்கிறார்கள்,
சிலர்
குழந்தைகளை யாசிக்கிறார்கள், மேலும் சிலர் நாங்கள் பதிவிரதா (கணவன் மீது மட்டும் கொண்ட பக்தி) இருக்கும்
பெண்ணாக இருக்க வேண்டும்,
எனது
கணவன் இருக்கும் வரை நான் விதவை ஆக மாட்டேன். எனவே சுகத்தை தான் விரும்புகிறார்கள்
அல்லவா. எனவே பரமாத்மாவும் ஏதாவதொரு நேரத்தில் அவர்களின் ஆசையை அவசியம்
நிறைவேற்றுகிறார். சத்யுகத்தில் உலகம் சொர்க்கமாக சதா சுகம் நிறைந்தாக இருந்தது, அங்கு பெண்கள் விதவை ஆவதில்லை.
எனவே அந்த ஆசை சத்யுகத்தில் நிறைவேறுகிறது, அங்கு அளவு கடந்த சுகம் இருக்கிறது. மற்றபடி
இந்த நேரம் கலியுகமாக இருக்கிறது. இந்த சமயத்தில் மனிதர்கள் மிகுந்த துக்கத்தை
அனுபவம் செய்கிறார்கள். பிரபுவை அடைவது என்பது இனிமையை அடைவதாகும் என்பதை துக்கமான
மனிதர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபொழுதும் யாருக்கும் துக்கத்தை
தரமுடியாது. அவை நமது அனைத்து கர்மங்களின் கணக்கை முடிக்க செய்ய வைக்கும் பொழுது
தான் தாய் நீயே,
தந்தையும்
நீயே நான் உங்களின் குழந்தைகள் என்று சொல்கிறோம். நல்லது. ஒம்சாந்தி


0 Comments