26-04-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய கடமை அழியாத ஞான ரத்தினங்களின் வருமானத்தை பெறுவது, மேலும் மற்றவர்களையும் பெற வைப்பது தானம் என்பது கேட்ட பின் செய்வதில்லை, செய்து காட்ட வேண்டும்
கேள்வி:
பாபாவின் உள்ளத்தில் என்ன சுபமான ஆசை சதா இருக்கின்றது? எந்த விஷயத்தில் தனக்கு சமமாக ஆக்க விரும்புகின்றார் ?
பதில்:
பாபாவின் உள்ளத்தில் சதா குழந்தைகளுக்கு சுகத்தினை தர வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. எல்லையற்ற தந்தைக்கு ஒரு போதும் தீய எண்ணம் அல்லது கெட்ட கர்மம் செய்வதற்கான எண்ணம், துக்கத்தினை கொடுக்கும் எண்ணம் வருவதில்லை. ஏனென்றால் அவர் சுகத்தினை கொடுக்க கூடிய வள்ளல். இந்த விஷயத்தில் பாபா தன்னுடைய குழந்தை களைத் தன்னை போல் ஆக்க விரும்புகின்றார். பாபா கூறுகின்றார், இனிமையான குழந்தை களே! சோதனை செய்யுங்கள் எனக்குச் சதா சுத்தமான எண்ணங்கள் வருகின்றதா? தீய எண்ணங்கள் வருவதில்லைதானே ?
பாடல்: ஏ மனிதனே! முகத்தினைப் பார்!......... ஓம் சாந்தி
பகவானுடைய மகாவாக்கியம், யார் கூறினார்கள், மனிதனே முகத்தினைப் பார் என்று. மனிதன் என்று யாரை சொல்லப்படுகின்றது. ஜீவாத்மாக்களை. ஜீவாத்மா என்பது குழந்தைகள். நான் ஆத்மா என்று புரிந்து கொண்டீர்கள். இச்சமயம் ஆத்மாக்களின் தந்தை பரமபிதா பரமாத்மா இச்சமயம் ஆத்மா இருக்கும் சரீரத்திற்கும் கூட தந்தை பிரஜாபிதா பிரம்மா. நாம் பாப்தாதாவின் குழந்தை. பாபா வந்து ஜீவாத்மாக்களுக்கு புரியவைக்கின்றார். ஓ, குழந்தைகளே! தனது உள்ளம் என்ற கண்ணாடியில் சோதனை செய்து பாருங்கள். எத்தனை சதவீதம் புண்ணியாத்மாவாக ஆகி உள்ளேன், நாம் எத்தனை புண்ணியம் செய்துள்ளோம்? அழியாத ஞான ரத்தினங்களைத் தான் தானம்-புண்ணியம் செய்ய வேண்டும் என்று இந்த விஷயங் களைப் பற்றி மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. நம்முடைய தந்தை, டீச்சர், சத் குரு அனைவருமே எல்லையற்ற பாபா என்று இப்போது புரிந்து கொண்டோம். தேகம் என்ற எண்ணம் துண்டிக்கப் பட்டு விட்டது. அந்த எல்லையற்ற தந்தையை பாதி கல்பமாக நினைவு செய்தோம். நினைவு செய்யும்போது பக்திமார்க்கம் ஆரம்பம் ஆகிவிட்டது. பக்தர்கள் பகவானை நினைவு செய் கின்றார்கள். ஒரே ஒருவர் தான் பகவான் என்பதனை புரிந்துள்ளனர். ஆத்மாக் களின் தந்தை நிராகாரமானவர். சாகார தந்தை என்பது மிருகங்களுக்குக் கூட உள்ளது. இவர் தான் உண்மை யான தந்தை பரந்தாம்வாசி. நம்மை உண்மையானவராக ஆக்குகின்றார். புண்ணிய ஆத்மாக்கள் அனைவரும் சத்திய கண்டத்தில் இருப்பார்கள். உங்களுக்குத் தெரியும் பாபாவுடன் எந்தளவு சத்தியமாக இருக்கின்றீர்களோ, அந்தளவு பாபாவின் சத்திய கண்டத்தில் நமக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். அதற்கான பந்தயம் நடைபெறுகின்றது. அந்த படிப்பின் மூலமாக சிலர் வழக்கறிஞர் ஆகின்றனர், சிலர் பொறியாளர் ஆகின்றார்கள். சிலர் பக்குவமடைந்தவர்களாக உள்ளார்கள். சிலர் (காயாக) அரை குறையாக உள்ளார்கள். சிலர் மாத வருமானம் இலட்சம் சம்பாதிக் கின்றார்கள். சிலர் ஐநுôறு ரூபாய் கூட சம்பாதிக்க கஷ்டப் படுகின்றார்கள். படிப்பு தான் ஆதார மாக உள்ளது. இப்போது நீங்கள் குழந்தைகள் அழிவற்ற ஞான ரத்தினங்களால் புத்தி என்ற கருவூலத்தில் நிரப்பிக் கொள்கின்றீர்கள். இவைகள் யாவும் பயனுள்ளது. தாரணை செய்து புண்ணியாத்மாவாக ஆக வேண்டும். பிறருக்கு தானம் செய்து புண்ணியாத்மா ஆக வேண்டும். நாம் எவ்வளவு தாரணை செய்து புண்ணியாத்மாவாக ஆகி உள்ளோம் என்று உள்ளத்தில் கேளுங்கள்? புண்ணியம் செய்யவில்லை என்றால் பாவ ஆத்மாவாகவே இருந்து விடுவீர்கள். ஆதலால் உங்களது முகத்தினைப் பாருங்கள். பின்னால் அமர்ந்து உள்ளவர் களையும் ஆசிரியர் அறிந்திருப்பார். பாபாவும் அறிந்துள்ளார். ரிஜிஸ்டர் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது ஸ்துôலமான விஷயம், இங்கு மறைமுகமானது. மம்மா, பாபா. தாரணை செய்ய வைக் கின்றார்கள், அழிவற்ற ஞான ரத்தினங்களை தாரணை செய்து மற்றவர்களை தாரணை செய்விக்க வேண்டும். தானே புண்ணியாத்மா ஆகவில்லை என்றால் மற்றவர்களை எப்படி புண்ணியாத்மாவாக ஆக்க முடியும்? இது உலகிய விஷயம் போல் அல்ல. இங்கு ஈஸ்வரிய விஷயங்கள். எந்தளவு யார் செல்வந்தர்களோ, அந்தளவு மகிழ்ச்சி என்பது அதிகமாகும். மனிதர்களிடம் அதிகமான செல்வம் இருக்கின்றது. இச்சமயம் இன்னார் அனைவரிலும் செல்வந்தர் என்று செய்திதாளில் போடுகின்றனர். அனைவரும் வரிசைப்படியாக இருப்பார்கள். இங்கு அழியக் கூடிய செல்வத்தின் பேச்சு அல்ல. இங்கு அழியாத ஞான ரத்தினங் களை சம்பாதிக்க செய்ய வேண்டும் மற்றும் மற்றவர்களையும் சம்பாதிக்கும் படி செய்விக்க வேண்டும். இதில் கேட்க வேண்டிய பேச்சே அல்ல. கேட்டு தானம் செய்யப்படுவதில்லை, செய்து காட்ட வேண்டும்.
பாபா கூறுகின்றார் உள்ளம் என்ற கண்ணாடியில் பாருங்கள் நாம் எவ்வளவு புண்ணியாத் மாவாக ஆகி உள்ளோம்? நாம் நெம்பர் ஒன் பாவ ஆத்மாவாக இருந்தோம். நெம்பர் ஒன் புண்ணியாத்மாவாகவும் இருந்தோம். இப்போது மீண்டும் ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்துள்ளது. புண்ணிய ஆத்மாவாக ஆகி கொண்டிருக்கிறோம் இப்போது எந்தளவு ஞான செல்வத்தினை சேமிக்கின்றீர்களோ அந்தளவு செல்வந்தராக ஆகின்றீர்கள். அந்த அழியக் கூடிய செல்வத்தின் மூலம் பிச்சைகாரர்களாக ஆகின்றோம், இந்த அழியாத செல்வத் தின் மூலம் செல்வந்தராக ஆகின்றோம். இப்படி மாறி மாறி ஆகின்றோம், உடல், மனம், செல்வம் நாம் பாபாவிடம் கொடுக்கின்றோம். பிறகு நமக்கு பாபா ஞான ரத்தினங்களை கொடுக்கின்றார். இதன் மூலம் மனம், உடல், செல்வம் யாவுமே நமக்கு புதிய தாகக் கிடைக் கிறது. அங்கு மாயை என்பது இருக்காது. மாயையால் மனம் அலை பாய்கின்றது. இங்கு மனம் என்பது மாயைக்கு வசம் ஆகி உள்ளது. அதிகமாக மனம் தான் தொல்லை செய்கின்றது. யோகம் செய்யவில்லை என்றால் மனம் என்பது சைத்தான் போல் ஆகிவிடுகின்றது. தன்னைத் தான் பாருங்கள், நாம் பாபாவிடம் இருந்து செல்வத்தினைப் பெற்று எந்தளவு தானம் செய்கின்றேன்? உங்களை போல் மம்மா, பாபா கூட மனிதர்கள் தான். காதுகள் மூலமாக கேட்கின்றனர். இந்த கருவியின் (பிரம்மா) மூலம் நிராகாரமான பாபா பேசு கின்றார். தனக்கென்று சரீரம் நிராகாரமான ஆத்மாக்களுக்கு உள்ளது. இது கலியுகத்தில் பழைய சரீரம், துக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. பாபா வந்து சதா சுகமானவர்களாக ஆக்குகின்றார் என்று குழந்தைகள் அறிந்து கொண்டோம். பாபா கிடைத்துவிட்டார் என்று இதயத்திலிருந்து குஷியால் கர ஒலி எழுகின்றது. முதலில் எண்ணத்தால் கைகள் தட்டுகின்றன. பிறகு வெளியே தட்டுகின்றனர். இது செய்யலாம் என்று முதலில் உள்ளத்தில் வரும், பின்னர் கர்மேந்திரியங்களின் மூலம் செய்து விடுகின்றோம். ஆதலால் தன்னைத் தான் சோதனை செய்து பாருங்கள், எனக்குள் சுத்த மான எண்ணங்கள் வருகின்றதா? அல்லது தீய எண்ணங் கள் வருகின்றதா? நல்ல சங்கல்பத் திற்கு சுத்தமான எண்ணம் என்றும், விகல்பத்திற்கு கெட்ட எண்ணம் என்றும் சொல்லப் படுகின்றது. எல்லையற்ற தந்தைக்கு கெட்ட எண்ணங்கள் வருமா என்ன? அவர் சுகத்தினை கொடுக்கின்ற வள்ளலாக இருக்கின்றார். அவர் சுகத்தின் வள்ளல். உங்களிடம் கெட்ட எண்ணங்கள் வரும். பிறருக்கு துக்கம் கொடுப்பது, அல்லது பாவ கர்மம் செய்வதற்கான எண்ணங்கள் வருகின்றது. நான் உங்களை மிக சரியாக என்னைப் போல் ஆக்கவே வந்துள்ளேன். அவர் சுகத்தின் வள்ளலாக இருக்கின்றார். இதனை அறிந்துள்ளோம் தந்தை எப்பொழுதும் குழந்தையை தன்னை போல் ஆக்குவார். குழந்தை களுக்கு ஜென்மம் கொடுப்பது துக்கத்திற்கு அல்ல. கர்மத்தின் அனுசாரம் துக்கம் கிடைக் கின்றது. தாய், தந்தைக்கு ஆசை இருக்கும். குழந்தைகளை மிகவும் சுகமாக வைத்து கொள்ள. ஆனால் மாயை பிரவேசம் ஆகின்றது. லௌகீகத் தந்தை எண்ணுகின்றார் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தால் மிகவும் சுகத்தை கொடுக்கின்றோம். ஆனால் பரலௌகீகத் தந்தை கூறுகின்றார் திருமணம் செய்வது என்பது வீண். நான் உங்களை மலராக ஆக்கு கின்றேன். சொர்க்கத்தில் திருமணம் செய்து கொண்டால் பட்டத்து ராணி, பட்டத்து ராஜாவாக ஆவீர்கள். ஊஞ்சலில் ஊஞ்சலாடுவீர்கள். லௌகீக தந்தை மற்றும் பரலௌகீகத் தந்தையின் புத்தியில் எவ்வளவு வேறுபாடு உள்ளது. இச்சமயம் மனிதர்களிடம் மாயையின் சம்ஸ்காரம் மிகவும் கடுமையாக உள்ளது. (அஜாமில் மாதிரி) நான் விரும்புகின்றேன் குழந்தைகளை மிகவும் சுகமாக ஆக்கி ஊஞ்சலில், ஊஞ்சலாட வைக்க வேண்டும். எல்லையற்ற தந்தையின் உள்ளத்தில் குழந்தை களை சுகமாக ஆக்க மிகவும் நல்ல ஆசை உள்ளது. தாய், தந்தையர் குழந்தைகளுக்கு பிறப்பு கொடுக்கின்றார்கள், பின்னர் சுகமானவர்களாக ஆக்கு கின்றார். எல்லையற்ற தந்தை கூட விரும்புகின்றார் குழந்தைகள் சுகமாக இருக்க வேண்டும். ஆனால் லௌகீகத் தந்தை மற்றும் பரலௌகீகத் தந்தையின் புத்தியில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது. எல்லையற்ற தந்தை கூறுகின்றார் ஒருவரிடம் உங்களுடைய புத்தியின் தொடர்பினை வையுங் கள். லௌகீக சம்மந்தமான தாய், தந்தை மற்றும் அனைத்து சம்மந்தங்களிலிருந்து புத்தியின் தொடர்பினை துண்டித்துவிடுங்கள். அனைத்துமே நான் தான் உங்களுக்கு. ஒவ்வொரு விஷயத்திலும் மாயை உங்களுக்கு துக்கத்தினைக் கொடுக்கின்றது. நான் உங்களுக்கு சுகத்தின் கடலாக ஆக்கு கின்றேன். நான் இராஜ்யத்தின் சுகத்தினை அனுபவம் செய்வதில்லை. ஆனால் சுகத்தின் கடலாக இருக்கின்றேன், சாந்தியின் கடலாக இருக்கின்றேன், எனவே தான் சுக மானவர்களாக ஆக்குகின்றேன். எவ்வளவு நன்றாக புரிய வைக்கின்றேன். வேறு யாரும் புரிய வைக்க முடியாது. தாயும் நீயே, தந்தையும் நீயே என்று பாரதத்தில் தான் பாடுகின்றார்கள். இந்த மகிமை எங்கிருந்து வந்தது? இன்னும் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்! பாபா கூறுகின்றார் என் மூலமாகத்தான் உங்களுக்கு அனைத்து சுகமும் கிடைக்கின்றது. ஆகையால் தான் கூறுகின்றேன் மற்ற உறவுகள் அனைத்தையும் துண்டித்துவிடுங்கள். தேகத்துடன் தேக சம்மந்தங்கள் யாவற்றையும் மறந்து விடுங்கள். தன்னைத் தான் ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். பாபா எவ்வளவு மணம் வீசும் மலராக ஆக்குகின்றார். நான் சொல்வதையே கேளுங்கள், என்னிடம் யோகம் வையுங்கள். நான் எவ்வாறு ஞான கடலாக இருக்கின்றேன். படைப்பின் முழு ஞானத்தையும் அறிந்துள்ளேன். அதே போல தங்களுக்குள் சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் தாய், தந்தையர் குழந்தைகளுக்கு துக்கம் தர மாட்டார்கள். துக்கம் தருவதற்காக படைப்பை படைக்க மாட்டார்கள். இப்போது பாபா கூறுகின்றார் கடந்தது, முடிந்தது, முடிந்து விட்டது. நாடகத்தின் அனுசாரம் தற்போது மணம் வீசும் மலராக ஆகுங்கள். அங்கு விகாரம் என்ற பேச்சே இருக்காது. மகாராஜா- மகாராணியாக ஆகின்றீர்கள். முழு உலகம் கூறுகின்றது. சத்யுகம் சொர்க்கம், விகாரமற்ற உலகம். அங்கிருந்த தேவி, தேவதைகளை அனைவரும் பூஜை செய்கின்றனர். ஏனென்றால் பவித்திரமாக வாழ்ந்தார்கள். சர்வ குணங்களும் நிறைந்து இருந்தார்கள். 16கலையிலிருந்து பின்னர் கலை களற்றவர்களாக ஆகித் தீரவேண்டும். இறுதியில் சந்திரன் கூட என்னவாக ஆகின்றது? அதனை அமாவாசை என்று சொல்கின்றார்கள். இது கூட அப்படித்தான், எந்த குணமும் மனிதர்களிடம் இல்லை. 16 கலைகள் என்ன, ஒரு கலை கூட இல்லை. ஒரு கலை கூட இல்லாத காரணத்தால் மிகவும் காரிருள் என்று கூறப்படுகின்றது. பின்னர் கலை கள் வர வர 16 கலைகள் உடையவர்களாக ஆகிவிடுகின்றோம். இப்போது கலை களற்றவர் களாக கருப்பாக ஆகிவிட்டீர்கள். பிரம்மாவின் இருள் என்று கூறப்படுகின்றது. பிரம்மாவை பிரஜா பிதா என்று கூறப்படுகின்றது. நீங்கள் பிரம்மாகுமார், குமாரி என்று அழைக்கப் படுகின்றீர்கள். முன்னால் பிரம்மா குமார், குமாரிகள் இருளில் இருந்தார்கள். தற்போது வெளிச்சத்தில் வந்து விட்டார்கள். பிறகு 16 கலைகள் உடையவர்களாக ஆகிவிடுகின்றார்கள். யார் 16 கலைகள் உடைய சூரிய வம்சத்தினராக இருந்தார்களோ, அவர்களின் கலைகள் என்பது குறைந்து கொண்டே வந்தது. இப்போது மீண்டும் அனைத்து கலைகளையும் தாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். சத்யுகத்தில் 16 கலைகள் உடையவர்களாக ஆகுமளவு தாரணை செய்கின்றனர் எவ்வாறு ராஜா, ராணி 16 கலைகள் நிரம்பிய சம்பூர்ணமானவர்களோ. அவ்வாறே அதிர்ஷ்ட நட்சத்திரங்கள், ராஜா, ராணி எவ்வாறோ அதே போல் பிரஜைகளும் (நம்பர் பிரகாரம்) வரிசைப்படியாக உள்ளனர். இப்பொழுது ராஜாக்கள் ஏழைகளாக ஆகிவிட்டார் கள். ஏழைகளிலிருந்து இராஜாவாக ஆக வேண்டும்.
இப்பொழுது பாபா கூறுகின்றார் அனைத்தையும் மறந்து அசரீரி ஆகிவிடுங்கள். தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு சொந்த பந்தங்கள் யாவற்றையும் மறந்துவிடுங்கள். இப்பொழுது அனைத்தையும் பலி கொடுக்கின்றீர்கள். நான் உங்களுக்கு அழிவற்ற ஞான ரத்தினங்களைக் கொடுக்கின்றேன். ஒவ்வொரு ரத்தினத்தை யாராலும் மதிப்பிட முடியாது. பாபா ரூப் பசந்த் என்ற கதையைக் கூறுகின்றார். அவர் வாயிலிருந்து ஞான ரத்தினங்கள் வருகின்றது. அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாக உருவாக்கி விட்டார்கள். ஒரே ஒரு பாபாதான் சக்தியைக் கொடுக்கக் கூடியவர். ஞானத்தின் மூலமாக சக்தியைக் கொடுக் கின்றார். இதனை ஞான ரத்தினங்கள் என்று சொல்லப்படுகின்றது. ஞான அமிர்தம் என்றும் சொல்லப்படுகின்றது. மான சரோவர் என்றும், அமிர்தம் என்றும் கூறப்படுகின்றது. அங்கு தண்ணீரை பருக வைப்பார்கள். பிராமணர்கள் டம்ளரில் (கிளாஸில்) ஊற்றி அமிர்தம் என்று கூறுகின்றனர். உண்மையில் இந்த ஞானம் என்பது கல்வி. பாபா கூறுகின்றார்: செல்லமான குழந்தைகளே! நீங்கள் ஆத்மா என்ற எண்ணத்தில் இருங்கள். மாயை என்பது விடாது. நீங்கள் ஆத்மா என்ற எண்ணத்தில் இருக்க முயற்சி செய்வீர்கள். ஆனால் மாயை தேகம் என்ற எண்ணத்தினை உருவாக்கும். இது தான் முதலாவது யுத்தம். மாயை தேகம் என்ற எண்ணத்தை கொண்டு வந்து சாக்கடையில் தள்ளிவிடுகின்றது, தாமதிப்பதில்லை. தன்னுடைய புத்திக்கு சிந்தனை கொடுக்க வேண்டும். பாபா நல்ல விதமாக படியுங்கள் என்று கூறுவார் அப்போது, டீச்சரின் புகழ் பாடப்படும். நன்கு படிப்பவர்களுக்கு பாபா பரிசு கொடுப்பார் மற்றும் படிப்பு சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் பாபா பரிசு கொடுப்பார். ஆஹா!, ஆஹா! என்று கூறுவார். உயர்ந்த பதவியையும் கொடுப்பார். முதலில் தன்னைத் தான் பாருங்கள் பாபாவுடன் அன்பு உள்ளதா? எந்தளவு ஆத்மா என்ற எண்ணத்தில் இருக் கின்றேன்? எந்தளவு இரவு பகல் முயற்சி செய்கின்றேன்? தேகம் என்ற எண்ணம் வந்தவுடன் யாத்திரை செய்வதினை நிறுத்தி விடு கின்றீர்கள். பாபாவை நினைவு செய்வதனை மறந்துவிடு கின்றீர்கள். மேலும் இரண்டு அடி பின்னே சென்றுவிடுவார்கள். ஒரு புறம் நன்மை உள்ளது, மறு புறம் நஷ்டம் ஆகின்றது. ஆத்மா என்ற எண்ணத்தில் வந்தால் கணக்கு (வருமானம்) நிரம்பிக் கொண்டே இருக்கும். மாயை எப்படியாவது நஷ்டத்தினை ஏற்படுத்துகின்றது. பொறுப்பான குழந்தைகள் தனது கணக்கை பற்றி சிந்திக்கிறார்கள், இல்லையெனில் சிலர் நஷ்டத்தில் போய்விடுகின்றார்கள். இந்த வியாபாரமும் அப்படித்தான், சேமிப்பாகின்றது, சேமிப்பு ஆகாமலும் போய்விடுகின்றது. மாயை மறக்க வைத்துவிடுகிறது. எவ்வளவு பாபாவை நினைவு செய்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். மேலும் எவவளவு பேரை தன்னைப் போல் ஆக்குகின்றார்கள்? வியாபாரிகள் கணக்கு வைத்திருப்பார்கள். கணக்கு வைக்கவில்லை என்றால் புத்தி அற்றவர்கள். சிலர் நிறைய பேருக்கு சுகத்தினை கொடுக்கின்றனர். பாபாவிற்கு குழந்தைகள் கடிதம் போடு கின்றனர், இன்னார் ஞான அம்பு போட்டார்கள் நான் பாவத்திலிருந்து விடுபட்டுவிட்டேன். பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக ஆகிவிட்டேன். ஆதலால் பலியாகி விட்டேன். சரீர நிர்வாகத்திற்காக காரியம் செய்ய வேண்டும். குடும்பத்திலிருந்தாலும் பாபாவிடம் வியாபாரம் செய்ய வேண்டும். யோக பலத்தால் பாவங்களை அழிக்க வேண்டும். பிறரையும் புண்ணிய ஆத்மாவாக ஆக்க வேண்டும். இவையாவும் புத்திக்கான வேலை. பாபாவை நினைவு செய்தால் தான் புத்தி கூர்மையாகும். இல்லையென்றால் தேக எண்ணத்தில் உற்றார், உறவினர்கள் நினைவு வந்துவிடுகின்றது. மாயை என்பது விடுவதில்லை. சிவ பாபாவின் வழிப்படி நடந்து கொண்டு இருக்கின்றீர்கள், பின்னர் ஸ்ரீமத்தை விட்டுவிடுகின்றார்கள், பதவி குறைவானதாக ஆகிவிடுகின்றது. இறுதியில் மிகவும் பட்சாதாபம் அடைவார்கள். ஐயோ, ஐயோ என்று கதறுவார்கள். நல்ல, நல்ல, குழந்தைகள் அனைவரின் உள்ளத்தில் இடம் பிடிப்பார்கள். புகழைப் பரப்புவார்கள். பாண்டவ சேனையில் யார், யார் மகாரதியாக உள்ளார்கள். யார், யார் அந்த (உலகீய) சேனையில் மகாரதியாக உள்ளார்கள். நீங்கள் இந்த இரண்டு சேனைகளைப் பற்றியும் தெரிந்துள்ளீர்கள். இவைகள் யாவுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். கோடியில் ஒரு சிலரே ஸ்ரீமத்படி நடப்பார்கள். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் பாபாவின் பெயரைக் கெடுத்து விடுகின்றார்கள். இது சத்தியமான தொடர்பு. ஒருவர், மற்றவரை தன்னைப் போல் ஆக்கி சொர்க்கத்தின் எஜமானர் களாக ஆக்க வேண்டும். மாயை மிகவும் பாவ ஆத்மாவாக ஆக்கிவிடு கின்றது. பாபாவை விவாகரத்து செய்துவிடுகின்றனர். அனைவருமே பக்தி மார்க்கத்தில் நாயகிகளே! பின்னர் தந்தை என்ற ரூபத்தின் கீழ் நீங்கள் குழந்தைகளாக உள்ளீர்கள். நீங்கள் நாயகிகளாகவும் இருக்கின்றீர்கள். நாயகிகளுக்கு நாயகனின் நினைவு எவ்வளவு இருக்க வேண்டும்? நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகுகாலம் காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான, பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ரூப் பசந்த் (ஞானம் மற்றும் யோகம் நிறைந்தவர்) ஆகி வாயிலிருந்து ஞான ரத்தினங்கள் தான் வர வேண்டும். யோகத்தின் மூலம் புத்தியை சுத்தம் செய்ய வேண்டும்.
2. பாபாவிற்குச் சமமாக அனைவருக்கும் சுகத்தினை கொடுக்கும் வள்ளலாக ஆக வேண்டும்.ஒருபோதும் துக்கத்தினைத் தருகின்ற கெட்ட எண்ணங்கள், வீண் எண்ணங்கள் வரக் கூடாது.
வரதானம்:
மனதை உயர்ந்த நிலையில் (பொஸிஷன்) நிலைத்திருக்கச் செய்து, போஸை (நிலைமை) மாற்றுவதற்கான விளையாட்டை முடித்துவிடக் கூடிய சகஜயோகி ஆகுக.
எப்படி மனதின் நிலை உள்ளதோ, அது முகத்தின் மூலம் காணப்படும். அநேக குழந்தைகள் அவ்வப்போது சுமையைத் தூக்கி வைத்துக் கொண்டு பருமனாகி (மோட்டா) விடுகிறார்கள். சில நேரம் அதிகம் யோசிப்பதற்கான சம்ஸ்காரத்தின் காரணத்தால் ஊகத் தினாலும் கூட நழுவிச் சென்று விடுகிறார்கள். இன்னும் சில நேரம் மனச்சோர்வடைந்து விடுவதால் தன்னை மிகவும் சிறியவனாகப் பார்க்கிறார்கள். எனவே தனது அத்தகைய போஸை சாட்சியாகிப் பாருங்கள் மற்றும் மனதின் சிரேஷ்ட பொஸிஷனில் நிலைத்திருந்து, அது போன்ற பல விதமான போஸ்களை மாற்றியமைத்து விடுங்கள். அப்போது உங்களை சகஜயோகி எனச் சொல்வார்கள்.
சுலோகன்:
குஷிகளின் சுரங்கத்திற்கு அதிகாரி ஆத்மா சதா குஷியில் இருப்பார்கள் மற்றும் குஷியை அனைவருக்கும் வழங்குவார்கள்.
0 Comments