Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam
12-04-2022 |
காலை முரளி ஓம்சாந்தி பாப்தாதா |
மதுபன் |
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் துக்கத்தை
நீக்கி சுகம் அளிக்கும் தந்தையின் குழந்தைகள். நீங்கள் எண்ணம், சொல், செயலில் யாருக்கும் துக்கம்
கொடுக்கக் கூடாது. அனைவருக்கும் சுகம் அளியுங்கள். |
|
கேள்வி: |
குழந்தைகளாகிய நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாகிறீர்கள். ஆகவே உங்களுடைய
முக்கியமான தாரணை என்னவாக இருக்க வேண்டும்? |
பதில்: |
உங்களுடைய வாயிலிருந்து எந்த ஒரு வார்த்தை வந்தாலும் அந்த ஒவ்வொரு
வார்த்தையும் மனிதர்களை வைரம் போல மாற்ற வேண்டும். நீங்கள் மிகவும் இனிமையாக மாற
வேண்டும். அனைவருக்கும் சுகம் அளிக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக்
கூடிய எண்ணம் வரக் கூடாது. இப்போது நீங்கள் அப்படிப்பட்ட சத்யுகமான சொர்க்க
லோகத் திற்குச் செல்கிறீர்கள். அங்கே சுகமே சுகம் தான். துக்கத்தின் பெயர்
அடையாளம் இல்லை. எனவே, உங்களுக்கு
பாபாவின் ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது. குழந்தைகளே, பாபாவிற்கு சமமாக துக்கத்தை நீக்கி சுகம்
அளியுங்கள். உங்களுடைய தொழிலே அனைவரின் துக்கத்தை நீக்கி சுகம் அளித்தல் ஆகும். |
பாடல்: |
இந்த பாவ உலகத்திலிருந்து... |
ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். நாம் அந்த மாதிரியான
உலகத்திற்குச் செல்வதற்காக முயற்சி செய்கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். அங்கே
ஒன்று மாயை இருக்காது. மேலும் ஒரு போதும் எண்ணம், சொல், செயல் யாரும் யாருக்கும் துக்கம் கொடுக்க
மாட்டார்கள். ஆகையால் அதனுடைய பெயரே சொர்க்கம், பேரடைஸ், வைகுண்டம் ஆகும். மேலும், அவ்விடத்தின் அதிபதி லஷ்மி
நாராயரின் சித்திரமும் காட்டப்பட்டிருக்கிறது. பிரஜை களின் சித்திரத்தைக் காட்ட
மாட்டார்கள். லஷ்மி நாராயணனின் சித்திரம் இருக்கிறது. அதன் மூலம் அவர்களின்
இராஜ்யத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் தான் இருப்பார்கள் என்பது நிரூபணம் ஆகிறது.
இவர்கள் பாரதத்தில் தான் சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தனர். அங்கே துக்கத்தின்
பெயர் அடையாளம் இருக்காது. எண்ணம், சொல், செயல் மூலமாக யாரும் யாருக்கும் துக்கம்
கொடுப்பதில்லை. தந்தையும் ஒரு போதும் யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டார்.
துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் என்று அவருடைய பெயர் புகழ் பெற்றது. அவர் வந்து
குழந்தைகளாகிய உங்களைப் படிக்க வைக்கின்றார். இந்த உலகத்தில் அனைவரும் எண்ணம், சொல், செயலினால் ஒருவருக்கொருவர்
துக்கம் அளிப்பவர்களாக இருக்கிறார்கள். அங்கே எண்ணம், சொல், செயல் அனைத்தினாலும் சுகம்
கொடுக்கக் கூடியவர்களாக இருப்பார் கள். பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும்
சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்க முடியாது. உண்மையில் அப்படிப்பட்ட சொர்க்கமாக
இருந்தது. இங்கேயும் பாருங்கள், விஞ்ஞானத்தின் மூலம் என்னென்ன உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். விமானம், கார், மாளிகை போன்றவை எப்படி
உருவாகின்றன. அங்கே கூட விஞ்ஞானம் அனைத்து வேலை களிலும் பயன்படுகிறது. துவாரகா
சமுத்திரத்தின் கீழே சென்று விட்டது என்று காட்டுவது போல பூமியிலிருந்து வைகுண்டம்
வெளியே வரும் என்பது கிடையாது. எது சமுத்திரத்தின் கீழே செல்லுமோ அது உருகுலைந்து
அழிந்து போகும். புதிய தலைமுறை அனைத்தும் உருவாக வேண்டும் என்றால் பாபாவிடமிருந்து
இராஜ்ய பதவி கிடைத்துக் கொண்டிருக்கும் போது எண்ணம், சொல், செயல் மூலமாக யாருக்கும் புத்தியில் கூட
துக்கம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக் கூடாது. இது மாயாவின் இராஜ்யம் ஆகும்.
மனதில் புயல் வரலாம். மற்றபடி மனதில் யாருக்கும் துக்கம் கொடுக்க கூடிய எண்ணம்
வரக் கூடாது. இச்சமயம் அனைவரும் ஒருவருக்கொருவர் துக்கத்தைத் தான்
கொடுக்கிறார்கள். சுகம் இருக்கிறது என நினைக்கிறார்கள். ஆனால் துக்கம் தான்
இருக்கிறது. பாபாவிடமிருந்து அனைவரும் பாராமுகமாக இருக் கிறார்கள். இந்த பக்தி
மார்க்கம் கூட நாடகத்தில் இருக்கிறது. நாடகத்தை யாரும் புரிந்து கொள்ள வில்லை.
நாம் சாஸ்திரம் போன்றவைகளை சொல்கின்றோம், இவர்களும் ஞானத்தைக் கூறுகிறார்கள் என அந்த
மக்கள் கூறுகிறார்கள். ஜபம், தவம் போன்றவைகளைச் செய்வதால் மனிதர்கள் ஜீவன் முக்தியைப் பெறலாம் என பல்வேறு
விதமான வழிகளைக் கூறுகிறார்கள். பல காலமாக பக்தி செய்து வந்ததால் தான் பகவான்
வந்திருக்கிறார் என கூறுவார்கள். எப்போது பக்தி முடிவடைகிறதோ அப்போது தான் பகவான்
வர வேண்டியுள்ளது. வந்து பக்தியின் பலனை அளிக்கிறார் என்று நாமும் கூறு கின்றோம்.
அவர்கள் அனைவரும் பக்தியின் வரிசையில் சென்று விடுகிறார்கள். இதற்கு ஞானம் என்று
கூற முடியாது. சாஸ்திரங்களின் ஞானத்தினால் சத்கதி கிடைப்பதில்லை. சிருஷ்டியின்
முதல்,
இடை, கடையின் ஞானம் அவர்களுக்கு
இல்லை. பழமையான ஞானம் மற்றும் யோகத்தால் பாரதம் சொர்க்க மாகியது. நிச்சயமாக பகவான்
தான் கற்பித்தார் என நீங்கள் அறிகிறீர்கள். மனிதர்கள் இராஜயோகத்தை கற்பிக்க
முடியாது. பகவான் சகஜ இராஜ யோகத்தைக் கற்பித்தார். பிறகு அது சாஸ்திரங்களாக
உருவாகி இருக்கிறது. இங்கே பகவான் அவரே வந்து ஞானத்தைப் புரிய வைக்கின்றார்.
கீதையில் ஒரேயொரு தவறு செய்யப் பட்டிருக்கிறது. பெயரை மாற்றி விட்டனர். மேலும்
காலத்தையும் வேறாக எழுதி விட்டனர்.
இப்போது பகவான் நமக்கு ஞானம் மற்றும் இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். சிருஷ்டியின் முதல், இடை, கடை ஞானம் வேறு எந்த
சாஸ்திரத்திலும் இல்லை. கல்பத்தின் ஆயுளை மிக அதிகமாக காட்டி விட்டனர். மனிதர்கள்
அதே சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டிருக் கிறார்கள். இது சிருஷ்டி என்ற மரமாகும்
என பாபா புரிய வைத்திருக்கிறார். மரத்தில் முதலில் சில இலைகள் இருக்கும். பிறகு
வளர்ந்துக் கொண்டே போகின்றது. வேறு வேறு தர்மத்தின் இலைகள் காண்பிக்கப் பட்டுள்ளன.
உண்மையில் இந்த வேத சாஸ்திரங்கள் அனைத்தும் பகவத் கீதையின் இலை களாக இருக்கிறது.
அதாவது அனைத்துமே அதிலிருந்து வெளியே வந்த சாஸ்திரங்கள் ஆகும். முற்றிலும் புதிய
மரம் உருவாகிக் கொண்டிருக் கிறது என நீங்கள் பார்த்துக் கொண்டி ருக்கிறீர்கள்.
புயல் வரும் போது சில உடனடியாக வாடிப் போகின்றன, விழுந்தும் விடுகின்றன. இப்போது நம்முடைய
தெய்வீக மரத்தின் அடித்தளம் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது என நீங்கள்
அறிகிறீர்கள். நாம் கிறிஸ்தவ தர்மத்தின் மற்றும் இந்த தர்மத்தின் அடித்தளத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்று மற்ற தர்மத்தின் ஸ்தாபகர்கள் அறியவில்லை.
இவர் இந்த தர்மத்தை உருவாக்கினார் என பின்னால் தெரிய வருகிறது. இங்கே
முள்ளிலிருந்து மலராக மாற்ற வேண்டியிருக்கிறது. நாம் தேவதையாக வேண்டும் என நீங்கள்
அறிகிறீர்கள். அனைவருக்கும் சுகம் அளிக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்க
வேண்டும் என்ற எண்ணம் கூட வரக் கூடாது. வாயிலிருந்து ஒவ்வொரு வார்த்தையையும்
மனிதனை வைர மாக மாற்ற கூடியதாக இருக்க வேண்டும். பாபாவும் நமக்கு ஞானம்
கூறுகின்றார். அதை கடைப்பிடித்து நாம் வைரம் போல மாறி விடுகின்றோம். உண்மையில்
டீச்சர் யாருக்கும் துக்கம் கொடுப்பாரான் என்ன? அவர் படிக்க வைக்கிறார். ஆம், புரிய வைக்கப்படுகிறது. ஒரு வேளை
நன்கு படிக்கவில்லை என்றால் 21 பிறவிகளுக்கு நஷ்டம் ஏற்படும். 21 பிறவிகளுக்காக இப்போது முயற்சி செய்ய
வேண்டும். பாபா கிடைத்திருக்கிறார். அவரைத் தான் பக்தி மார்க்கத்தில் ஓ, பகவானே என்று நினைத்தீர்கள்.
சாது சன்னியாசிகள் போன்ற அனைவரும் நினைக்கிறார்கள். பகவான் ஒருவரே. ஆனால் அவர்
யார் என்பதை அறியவில்லை. ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தில் இளவரசனாக இருந்தார். அவரை
யாரும் துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் என்று கூற மாட்டார்கள். ஸ்ரீகிருஷ்ணரின்
ஆத்மா சுகத்தில் இருந்தவரே இப்போது துக்கத்தில் இருக்கிறார். பகவானை இவ்வாறு கூற
மாட்டார்கள் இல்லையா?
அவரோ சுக
துக்கத்திலிருந்து விடுபட்டவர். அவருக்கு மனித உடல் கிடையாது. பாபா எதை ஸ்தாபனை
செய்கிறாரோ அங்கே சுகமே சுகம் ஆகும். எனவே தான் துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர்
என பாடப்படுகிறது.
நாம் இராவணனின் இராஜ்யத்தில அரைக் கல்பமாக துக்கத்திலிருந்தோம் என
அறிகிறீர்கள். அல்ப கால சுகம் இருக்கிறது. மற்றபடி துக்கமே துக்கம் தான். இதைத்
தான் சன்னியாசிகள் காகத்தின் எச்சத்திற்கு சமமான சுகம் என்று கூறுகிறார்கள்.
ஏனென்றால் விகாரத்தினால் பிறக்கிறார்கள் அல்லவா? ஆனால் பவித்ரமான இல்லற மார்க்கம் கூட
இருக்கும். அங்கே எந்த ஒரு விகாரமும் இருக்காது. உண்மையில் அது சத்யுகத்தில
இருந்தது. அதனுடைய பெயரே சொர்க்கமாகும். அது தூய்மையான மார்க்கமாகும். பிறகு
அழுக்காகிறார் கள் என்றால் அதற்கு கீழான மார்க்கம் நரகம் என்று கூறப்படுகிறது.
இந்த சுக துக்கத்தின் விளையாட்டு உருவாக்கப் பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு
அவ்வப்போது சுகம்,
அவ்வப்போது
துக்கம். சொர்க்கத்தில் எப்போதும் சுகம் இருக்கிறது. துக்கத்தின் பெயர் அடையாளமே
கிடையாது என்பது அவர் களுக்குத் தெரியாது. இங்கேயோ சுகத்தின் பெயர் அடையாளம் கூட
இல்லை. விகாரத்தில் ஈடுபடுவது துக்கம் தானே! அதனால் தான் சன்னியாசிகள் சன்னியாசம்
செய்கிறார்கள். துறவற மார்க்கம் ஆகும். சத்யுகத்தில் இல்லற மார்க்கம் இருந்தது.
அது சிவாலயமாக இருந்தது. தேவி தேவதைகள் லஷ்மி நாராயணன் போன்றவர்களின் ஜட
சித்திரங்கள் (சிலை) கோவில்களில் கூட எப்படி கிரீடம் சிம்மாசனம் போன்றவைகளால்
அலங்கரிக்கப்படுகின்றன. பாரதத்தில் தான் இராஜா இராணி தெய்வீக சம்பிரதாயம்
இருந்தது. வேறு எந்த தர்மத்திலும் இவ்வாறு கிடையாது. இராஜாக்கள் இருந்தார்கள்.
ஆனால் டபுள் கிரீடம் இல்லை. சத்யுகத்தின் ஆரம்பத்திலிருந்தே இராஜ்யம் நடக்கிறது.
ஆதி சனாதன டபுள் கிரீடம் உடைய தேவி தேவதைகள் இருந்தனர். அந்த தர்மம் எப்படி
உருவாகியது. இந்த விஷயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிகிறீர்கள்.
சிவபாபாவின் வழியினால் நீங்கள் துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆகிறீர்கள்.
உங்களுடைய வேலையே இதுதான்-அனைவரின் துக்கத்தை யும் நீக்கி சுகம் அளிப்பதே. ஒரு
வேளை நீங்கள் யாருக்காவது துக்கம் கொடுத்தீர்கள் என்றால், இவர்கள் துக்கத்தை நீக்கி சுகம்
அளிப்பவரின் வாரிசு என யார் கூறுவார்கள். முதலில் மனதில் எண்ணம் வருகின்றது
என்றால்,
பிறகு
செயலில் வருகிறது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையாக மாற வேண்டும். பகவான்
படிக்க வைக்கின்றார் எனும் போது நடத்தை உங்களுடையது. தெய்வீகமானதாக இல்லை என்றால், மனிதர்கள் எப்படி உங்கள் மீது
நம்பிக்கை கொள்வார்கள். கீதையில் கூட பகவான் வாக்கு நான் உங்களை நரனிலிருந்து
நாராயணனாக மாற்றுகிறேன் என்று எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பகவான் சங்கமத்தில்
வருவார். பகவான் வாக்கு நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன் என்றால், நிச்சய மாக பழைய உலகம் வினாசமும்
ஆகும். இந்த வேலை கிருஷ்ணருடையது கிடையாது. திரிமூர்த்தியைக் காண்பிக்கிறார்கள்.
ஆனால் சிவனை விட்டு விட்டனர். பிறகு பிரம்மாவிற்கு மூன்று முகம் இருக்கிறது என
கூறுகின்றார்கள். இந்த ஒரு முகம் உடைய பிரம்மா எங்கிருந்து வந்தார். இப்போது
மனிதர்களுக்கு மூன்று முகம் எப்படி இருக்கும்? நீங்கள் என்னுடைய மிக புத்திசாலியான
குழந்தைகள் என பாபா கூறுகின்றார். நீங்கள் தான் உலகத்தை ஆட்சி செய்தீர்கள், மட்டுமே. இப்போது பாபா உங்களை
ஆத்மா உணர்வுடையவராக மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்போது தன்னை ஆத்மா என
உணருங்கள். முக்தி தாமத்தில் அனைவரையும் அசரீரியாக மாற்றி அனுப்பி விடுகின்றார்.
இங்கே வந்து நீங்கள் இந்த உடலை எடுத்து இருக்கின்றீர்கள். சரீரத்தை எடுத்து
எடுத்து உங்களுக்கு தேக அபிமானம் உறுதியாகி விட்டது. இப்போது நீங்கள் தன்னை ஆத்மா
என உணருங்கள். ஆத்மாவாகிய நான் 84 பிறவிகளின் பாகத்தை நடித்தாகிவிட்டது. இப்போது இது கடைசி பிறவியாகும். இவ்வாறு
தன்னுடன் பேசிக் கொண்டே இருங்கள். இப்போது நீங்கள் ஆத்ம உணர்வுடையவராகுங்கள்.
திரும்பிப் போக வேண்டும். மீண்டும் நீங்கள் சொர்க்கத்தில் வருவீர்கள் என பாபா
கூறுகின்றார். இப்போது நீங்கள் என் மூலமாக சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை அடைவதற்கு
உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாபாவை நீங்கள் மறந்து விடுவதால் குஷியின் அளவு
அதிகரிப்ப தில்லை. சாஸ்திரங்களில் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டனர்.
சிவபாபாவையே விட்டு விட்டனர். பூஜை செய்தாலும் கூட பெயர் ரூபத்திலிருந்து
விடுபட்டவர் என கூறி விடு கிறார்கள். அட, அப்படி என்றால் யார் யாருடைய பூஜை
செய்கிறீர்கள்! யாரை நினைக்கிறீர்கள்! ஆத்மா புருவ மத்தியில் இருக்கிறது என
கூறுகிறீர்கள். ஆனால் ஆத்மா யாருடைய வாரிசு என அறியவில்லை. நான் ஆத்மா புருவ
மத்தியில் இருந்து இந்த உடல் மூலமாக நடிப்பை நடிக்கிறேன். இந்த பொம்மையை ஆட
வைக்கிறேன். கைபொம்மைகளின் (பொம்மலாட்டம்) நடனம் இருக்கிறது அல்லவா? அங்கே இன்னொரு மனிதர் நடனத்தை
செய்விக்கின்றார். முதன் முதலில் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். பாபா எதை புரிய
வைக்கின்றாரோ அதை தாரணை செய்ய வேண்டும். பட கண்காட்சிகளில் முதன் முதலில் பாபாவின்
அறிமுகத்தைப் புரிய வைக்க வேண்டும். இவர் அனைவருக்கும் தந்தை, அவர் நிராகாரர். இன்னொருவர்
சாகார பிரஜா பிதா இரண்டு தந்தைகள் இருக்கின்றனர். லௌகீக தந்தையும் இருக்கிறார்.
பாரலௌகீக தந்தையும் இருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். அவர் எல்லைக்குட்பட்டவர்
இவர் எல்லைக்கப்பாற்பட்டவர். இப்பொழுது புதிய படைப்பை படைத்து கொண்டிருக்கிறார்.
நாம் சிவபாபா விடமிருந்து சொத்தை அடைகின்றோம். இப்படிப்பட்ட விஷயங்களைத் தனக்கு
தானே உறுதி செய்துக் கொள்ள வேண்டும். ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். நாம்
சிவபாபாவிடம் படிப்பதற்காகச் செல்கின்றோம். பரம்பிதா பரமாத்மா நிராகாரர் ஆவார்.
பிரஜா பிதா பிரம்மா சாகரமானவர். நீங்களோ பிரஜா பிதா (சரீரமுடையவர்) பிரம்மாவின்
வாய்வழி வம்ச பிராமணர். உங்களை பிரம்மா தத்தெடுத்திருக்கிறார். நீங்கள் புதிய
படைப்பு,
பிராமணர்.
அவர்களோ பழைய உலகீய பிராமணர். அவர்கள் உலகீய யாத்திரை செய்விக்கிறார்கள். ஆனால்
இது ஆன்மீகமானது.
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது உயர்ந்தவர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இது
கீழானவர்களிலிருந்து உயர்ந்தவர்களாக மாறக் கூடிய ஈஸ்வரிய மிஷன் ஆகும். மனிதர்கள்
மாற்ற முடியாது. உண்மையிலும் உண்மை யான நன்னடத்தை சபை உங்களுடையது ஆகும்.
உங்களுடைய லீடர் யார் எனப் பாருங்கள். நான் மீண்டும் இராஜயோகத்தைக் கற்பிக்க
வந்திருக்கிறேன். இது அதே சங்கமயுகம் ஆகும் என பாபா கூறுகிறார். இப்போது மனிதனி
லிருந்து தேவதையாக மாற்றுகிறேன். நான் சூத்திரனிலிருந்து இப்போது பிராமணன் ஆகிக்
கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். உச்சிக் குடுமி பிராமணர்களுடையதாகும்.
பிரம்மா கூட உயர்ந்தவரே. பிரம்மாவிற்குள் யார் பிரவேசமாகி இருக்கிறாரோ அவரை இந்த
கண்களால் காண முடியாது. மற்ற அனைவரையும் பார்க்கிறீர்கள். புத்தியினால் புரிந்துக்
கொள்கிறீர்கள். நிராகார் பாபா நம்மை படிக்க வைக்கின்றார். பிரம்மாவிற்கு இங்கே
பிராமணர்கள் வேண்டும். சூட்சும வதனத்தில் இருக்க முடியாது. தத்தெடுக்கின்றார்.
சாகார பிரம்மாவிலிருந்து (ஓளி வடிவ) அவ்யக்தமாகிறார். இது மிகவும் புரிந்துக்
கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். முதன் முதலில் லட்சியத்தைப் புரிந்து கொண்டால், பிறகு எங்கு வேண்டுமானாலும்
அமர்ந்து படிக்கலாம். தினந்தோறும் முரளியைக் கேட்க வேண்டும். ஒரு நாள் தவறினாலும்
மிகவும் நஷ்டம் ஏற்படுகிறது. ஏனென்றால் கருத்துகள் மிகவும் ஆழமானது. வைரம் போன்று
வெளிப்படுகிறது. முதல் தரமான இரத்தினங்கள் கிடைத்து, அதைத் தவற விட்டு விட்டால் நஷ்டம் ஏற்படும்.
தினந்தோறும் படிக்கக் கூடிய மாணவர்கள் மிகவும் துல்லியமாக படிக்கிறார்கள். நன்கு
முயற்சி செய்யவில்லை என்றால், உயர்ந்த பதவி பெற முடியாது. இது மிக உயர்ந்த படிப்பாகும். சரஸ்வதிக்கு
வீணையையும்,
கிருஷ்ணருக்குப்
புல்லாங்குழலையும் கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் கிருஷ்ணருக்கு தவறுதலாக
கொடுத்திருக்கிறார்கள். இருப்பதோ பிரம்மா. இவர் சிவபாபாவின் வாய் என உங்களுக்குத்
தெரியும். கிருஷ்ணருக்கும் சரஸ்வதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அனைத்தையும்
குழப்பமாக்கி விட்டனர். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நான் ஆத்மா,
இந்த உடல்
என்ற பொம்மையை ஆட வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் இதிலிருந்து தனிப்பட்டவன்.
இவ்வாறு பயிற்சி செய்து செய்து ஆத்ம உணர்வுடைய வராக வேண்டும்.
2. ஒரு போதும் முரளியைத் தவற விடக் கூடாது. ரெகுலர் ஆக வேண்டும். படிப்பில் மிக
மிக துல்லியமாக இருக்க வேண்டும்.
வரதானம்: |
மாயை மற்றும் இயற்கையின் குழப்பத்திலிருந்து எப்பொழுதும் பாதுகாப்பாக
இருக்கக் கூடிய இதயராமனின் இதய சிம்மாசனத்தில் இருப்பவர் ஆவீர்களாக. |
சுலோகன்: |
ஞான சொரூபம் மற்றும் அன்பின் சொரூபம் ஆவது தான் அறிவுரைகளை சொரூபத்தில்
எடுத்து வருவது ஆகும் (நடைமுறை படுத்துவது) |
0 Comments