Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 29.04.23

 

29-04-2023  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே ! ஸ்ரீமத் தான் சிரேஷ்டமானதாக, சிறந்தவர்களாக ஆக்கும். பர வழி அல்லது மன வழி சாபக்கேட்டிற்கு உள்ளாக்கி விடும். எனவே ஸ்ரீமத்தை ஒரு பொழுதும் மறக்காதீர்கள்.

கேள்வி:

சதோபிரதான (புருஷார்த்தி) முயற்சியாளர்கள் யார், மேலும் தமோபிரதான முயற்சி யாளர்கள் யார்? இருவருக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கும்?

பதில்:

சதோபிரதான முயற்சியாளர்கள் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி எடுப்பதற்கான புருஷார்த்தம் அல்லது உறுதி எடுக்கிறார்கள். அவர்கள் நினைவில் இருப்பதற்கான பந்தயம் மேற்கொள்கிறார்கள். மேலும் முதல் நம்பரில் செல்வதற்கான இலட்சியம் கொள்கிறார்கள். தமோபிரதான முயற்சியாளர்கள் எது அதிர்ஷ்டத்தில் இருக்குமோ.... நல்லது, பிரஜைகளாக ஆகிறோம் என்றால் பிரஜையே சரி என்பார்கள். அவர்களுக்கு முன்னால் மாயையினுடைய எப்பேர்ப்பட்ட தடை வருகிறது என்றால், நாட்போக்கில் பந்தயத்திலிருந்தே வெளியேறி விடு கிறார்கள்.

பாடல்:  எனக்கு ஆதாரமளிப்பவரே ......

ஓம் சாந்தி. குழந்தைகள் முன்னால் அமர்ந்திருக்கும் பொழுது நாங்கள் ஜீவ ஆத்மாக்கள் என்பதை அறிந்துள்ளார்கள். இங்கோ ஜீவ ஆத்மாக்கள் தான் இருப்பார்கள் அல்லவா? ஆத்மா விற்கு சரீரம் இல்லாதிருக்கும் பொழுது தனியாக இருக்கும். அதற்கு அசரீரி என்று கூறப் படுகிறது. நீங்களோ சரீர சகிதம் அமர்ந்துள்ளீர்கள். ஆத்மா அல்லது பரமாத்மா உடலில் வராத வரையும் பேச முடியாது. ஜீவ ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது தந்தையின் முன்னால் அமர்ந்துள்ளோம் என்பதை அறிந்துள்ளீர்கள். மிகச் சரியாக எப்படி 5 ஆயிரம் வருடங் களுக்கு முன்னால் நேரிடையாக வந்திருந்தார். குழந்தைகள் அவசியம் தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி பெறுவார்கள். நாம் நமது பரமபிதா பரமாத்மாவாகிய எல்லையில்லாத தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளோம் என்பதை அறிந்துள்ளீர்கள். ஏன் அமர்ந்துள்ளோம்? தந்தை யிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தியைப் பெறுவதற்காக. எப்படி நாம் ஆசிரியர் மூலமாக பொறியியல் கற்கிறோம், சட்டவியல் கற்கிறோம் என்று பள்ளிக்கூடத்தில் புரிந்திருப்பார்கள். இந்த இலட்சிய நோக்கம் இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் பரமபிதா பரமாத்மா நமக்கு பிரம்மாவின் உடலில் வந்து இராஜயோகம் கற்பிக்கிறார் என்று புரிந்துள்ளீர்கள். பகவான் கூறுகிறார் - பகவான் என்று நிராகாரமானவருக்குக் கூறப்படுகிறது என்பதோ குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஜீவாத்மாக்கள் அவசியம் மறுபிறவி எடுக்கிறார்கள். மனிதர்கள் மறுபிறவி எடுக்கிறார்களா? என்று எந்த ஒரு சந்நியாசியிடம் கூட கேட்டு பாருங்கள். புனர் ஜென்மம் எடுப்பதில்லை என்று கூற மாட்டார்கள். இல்லையென்றால் 84 இலட்சம் பிறவிகள் என்று எப்படி கூறுகிறார்கள்? நீங்கள் மறுபிறவியை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேளுங்கள், இதுவோ மிகச் சரியானது ஆகும். ஆத்மா சம்ஸ்காரங்களுக்கேற்ப ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறது. இவ்வாறு செய்து செய்து மனிதர்கள் 84 இலட்சம் பிறவி எடுப்ப தில்லை. ஆனால் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். இதிலிருந்து என்ன நிரூபணம் ஆகிறது என்றால், முதல் பிறவி அவசியம் மிகவும் நல்லதாக சதோபிரதானமாக இருக்கும். கடைசியில் சீ - சீ தமோபிரதானமாக ஆகி விடுவார்கள். 16 கலையிலிருந்து பிறகு 14 கலை, 12 கலை ஆகிக் கொண்டே போகும். அவசியம் புனர்ஜென்மம் எடுப்பார்கள். நல்லது. பரமபிதா பரமாத்மா புனர்ஜென்மம் எடுத்துள்ளாரா, இல்லை பிறப்பு இறப்பு அற்றவரா என்று கேட்க வேண்டும். பாருங்கள், இந்த பாயிண்ட் (குறிப்பு) மிகவும் சூட்சுமமானது ஆகும். பிறப்பு இறப்பு அற்றவர் என்று கூறுகிறார்கள் என்றால், சிவஜெயந்தியின் நிரூபணம் ஆவதில்லை. சிவஜெயந்தியோ கொண்டாடப்படுகிறது என்று கூறுவார்கள். ஆம், சிவஜெயந்தி இருக்கிறது, ஆனால் பிறப்புடன் எதற்கு மரணம் என்று கூறப்படுகிறதோ அது இருப்பதில்லை என்று புரிய வைக்கப்படுகிறது. ஒரு வேளை இறந்தார் என்றால் பின் மறுபிறவி எடுக்க வேண்டி வரும். தந்தை ஒரு பொழுதும் புனர்ஜென்மம் எடுப்பதில்லை. அவர் இந்த உடலில் ஒரு முறை தான் வருகிறார். அவ்வளவே! பிறகு புனர்ஜென்மத்தில் வருவதில்லை. பரமபிதா பரமாத்மா மறுபிறவி அற்றவர் ஆவார். அவர் ஒரு பொழுதும் சதோபிரதான நிலையிலிருந்து தமோ நிலை உடையவராக ஆவதில்லை. ஆத்மாக்களோ எல்லாரும் ஜன்ம மரணத்தில் வந்து வந்து பதீதமாக (தூய்மை யற்றவராக) ஆகி விடுகிறார்கள். மீண்டும் தந்தை பாவனமாக ஆக்க வருகிறார். இதிலிருந்து ஆத்மா தான் பதீதமாக ஆகிறது என்று நிரூபணமாகிறது. ஆத்மா பாவனமாக வருகிறது. பிறகு மாயை பதீதமாக ஆக்கி விடுகிறது.

தந்தை ஒரு பொழுதும் குழந்தைகளுக்கு அசுத்தமான வழியைப் கொடுக்க முடியாது. இச்சமயத்தில் பதீதமான மனிதர்கள் பதீத வழியைப் கொடுக்கிறார்கள். இப்பொழுது பதீதமாக ஆகாதீர்கள். அதாவது விகாரங்களில் செல்லாதீர்கள் என்று பாவனமான தந்தை கூறுகிறார். இராவணனின் வழியினால் துக்கதாமமாக ஆகி விட்டுள்ளது. முதலில் சுகதாமமாக இருந்தது. அப்படி இன்றி தந்தை தான் சுகம் துக்கம் அளிக்கிறார் என்பதல்ல. இல்லை தந்தை ஒரு பொழுதும் குழந்தைகளுக்கு துக்கத்தின் வழியைக் கொடுக்க முடியாது. மாயை தான் துக்கம் கொடுக்கிறது. அந்த மாயை மீது வெற்றி அடையும் பொழுது தான் நீங்கள் உலகத்தை வென்றவராக ஆகிறீர்கள். மனிதர்கள் மாயையின் பொருள் புரியாமல் உள்ளார்கள். அவர்கள் பணத்தை மாயை என்று கூறி விடுகிறார்கள். இவருக்கு மாயையின் போதை நிறைய இருக் கிறது என்று கூறுகிறார்கள் அல்லவா? ஆனால் மாயை என்று 5 விகாரங்களுக்குக் கூறப்படு கிறது. ஒரு வேளை 5 விகாரங்களின் போதை இருக்கிறது என்றால், மாயை ஒரேயடியாக சாப்பிட்டு விடுகிறது. சத்யுக திரேதாவில் மாயையின் போதை இருப்பது இல்லை. அங்கு இராவணனின் கொடும்பாவி செய்து எரிப்பதில்லை. கொடுமையான எதிரிக்குத் தான் கொடும்பாவி அமைக் கப்படுகிறது. அரை கல்பத்திலிருந்து இராவண இராஜ்யம் ஆரம்பமா கிறது. தேக அகங்காரம் வருவதால் பின் மற்ற விகாரங்கள் வந்து விடுகின்றன. சாஸ்திரங் களில் ஒன்றும் இந்த விஷயங்கள் இல்லை. தேவதைகள் வாம மார்க்கத்தில் அதாவது விகாரங்களில் போகிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. மாயைக்கு வசப்பட்டு விடும் பொழுது தங்களை இழந்து விடு கிறார்கள். பர வழி படி நடந்து கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்படி நடக்கிறீர்கள். பரவழி என்றால் மாயையின் வழி. ஸ்ரீ என்றால் சிறந்த வழி, தந்தையினுடையது ஆகும். அது பர வழி, இராவணனின் வழியாகும். எனவே அசுர சம்பிர தாயத்தினர் அனைவரும் இராவணனின் சங்கிலிகளில் துக்கமுற்றிருக்கிறார்கள் என்று தந்தை கூறி உள்ளார்.

மனிதர்கள் சத்யுகத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என்று நினைத்து விட்டுள்ளார்கள். எனவே 5 ஆயிரம் வருடங்கள் எப்படி என்று நீங்கள் கணக்கு வழக்கு கூறுகிறீர்கள். கிறிஸ்து வந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியது. புத்தருக்கு 2250 வருடங்கள் ஆகியது. பிறகு இஸ்லாமியருக்கு 2500 வருடங்கள் ஆகியது. எல்லாம் ஒன்று சேர்ந்து அரை கல்பம் ஆகியது. இதற்கு முன்பு தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பின் தேவதைகள் வந்து இலட்சக்கணக்கான வருடங்கள் ஆகிறது என்று எப்படிக் கூற முடியும்? இத்தனை வருடங்கள் ஆகி இருந்தால் பின் மனிதர்கள் அதிகமாக ஆகி இருப்பார்களே! ஆனால் அத்தனை பேரோ இல்லை. 5 ஆயிரம் வருடங்களிலேயே 500-600 கோடி மனிதர்கள் ஆகி விடுகிறார்கள். கிறிஸ்து விற்கு 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பாரதத்தில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. 5 ஆயிரம் வருடங்கள் முடிந்து விடுகிறது. நாடகம் பூர்த்தி அடைகிறது அல்லவா? இந்த விசயங்கள் யாருக்குமே தெரியாது. நான் யாராக இருக்கிறேன், எப்படியாக இருக்கிறேன், இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது யாருமே தெரிந்து கொள்ள முடியாது. தந்தை தான் புரிய வைக்கிறார். இது தான் கீதை ஆகும். தந்தை வந்து சகஜ இராஜயோகத்தைக் கற்பித் திருந்தார். அப்பொழுது அதற்கு கீதை என்ற பெயர் வைத்துள்ளார்கள். எப்படி கிறிஸ்து கற்பித்தார். எனவே அதற்கு பைபிள் என்ற பெயர் வைத்துள்ளார்கள். இந்த அனாதி பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் நடைபெறுகிறது. பாபா வயதான தாய்மார்களுக்கும் புரிய வைக்கிறார். இது மிகவும் சுலபமான விˆயமாகும். தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்யுங்கள். குழந்தை பிறந்து விட்டது என்றால், வாரிசு பிறந்து விட்டது. நாம் பாபாவின் வாரிசு ஆவோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். 5 ஆயிரம் வருடங்களுக்குப் பின் மீண்டும் சந்திக்க வந்துள்ளோம். அடிக்கடி 5 ஆயிரம் வருடங்கள் என்றே கூறுவோம். 2-3 வருடங்கள் பின்னால் வருபவர்கள் கூட நாங்கள் 5 ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் மீண்டும் வந்துள்ளோம் என்பார்கள். இவை மிகவும் ஆழமான விˆயங்கள் ஆகும். இதற்கு முன்பு எப்பொழுதாவது சந்தித்துள் ளீர்களா? என்று பாபா கேட்கிறார். ஆம் பாபா! என்று கூறுவார்கள். நாங்கள் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உங்களை சந்தித்திருந்தோம் என்று ஆத்மா இந்த வாய் மூலமாக கூறுகிறது. நாங்கள் பிரம்மா மூலமாக எல்லையில்லாத தந்தையினுடைய வராக ஆகி உள்ளோம். என்னை அடையாளம் கண்டு கொள்கிறீர்களா என்று தந்தை கூறுகிறார். நான் உங்களுடைய தந்தை ஆவேன். ஆம் பாபா ஆத்மாக் களாகிய எங்களுக்கு நீங்கள் பரமபிதா பரமாத்மா தந்தை ஆவீர்கள் என்று கூறுவீர்கள். உங்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி இருந்தேன், ஆஸ்தி அளித்திருந்தேன். பிறகு மாயை பறித்துக் கொண்டு விட்டது. மீண்டும் இப்பொழுது நான் அளிக்கிறேன் என்று தந்தை தான் கூறுகிறார். மாயை ஆஸ்தியை பறிக்கிறது. தந்தை வழங்குகிறார். இதுவோ அநேக முறை நாடகம் நடந்து விட்டுள்ளது. நடந்து கொண்டே இருக்கும். இதற்கு முடிவு கிடையாது. தந்தையினுடையவர்களாக ஆகிறார்கள். பிறகு ஒரு சிலர் நேரிடை குழந்தைகள், ஒரு சிலர் மாற்றான் தாய் குழந்தைகள் ஆகிறார்கள். அரைகுறையானவர்கள் பக்குவமானவர்கள் என்றோ ஆகிறார்கள் அல்லவா? பக்குவ மானவர்களைக் கூட மாயை ஒரேயடியாக ஜெயித்து விடுகிறது. பாபா நாங்கள் உயிருள்ள வரையும் உங்களிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டே இருப்போம் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். விகர்மங்களின் சுமை தலை மீது நிறைய உள்ளது. எனவே எந்த அளவிற்கு நீங்கள் நினைவில் இருப்பீர்களோ, அந்த யோக அக்னி மூலமாக ஆத்மாவாகிய நீங்கள் பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆகிக் கொண்டே செல்வீர்கள். நெருப்பு பொருளை தூய்மை ஆக்குகிறது. உங்களுடையது யோக அக்னி ஆகும்.

இது எல்லையில்லாத வேள்வி ஆகும். இதை எல்லையில்லாத சேட் (முதலாளி) இயற்றி இருக்கிறார். இவ்வளவு காலம் எந்த ஒரு வேள்வியும் நடப்பதில்லை. 5-5 நாட்கள் அல்லது ஒரு மாதம் வேள்வி நடத்துகிறார்கள். உங்களுடைய யக்ஞமோ எத்தனை வருடங்களாக நடந்து வருகிறது. தந்தை கூறிக் கொண்டே இருக்கிறார். மறந்து விடாதீர்கள் என்று கூறுகிறார். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் ஜன்ம ஜன்மாந்திரத்தின் விகர்மங்களின் சுமை நீங்கிக் கொண்டே போகும். எந்தவொரு சந்நியாசி, வித்வான் ஆகியோருக்கு இவ்வாறு கூற வரவே வராது. தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று பகவான் கூறுகிறார். அவசியம் வந்து விட்டுள்ளார். அப்பொழுது தான் கூறுவார் அல்லவா? இப்பொழுது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். உங்களது ஆத்மா இச்சமயம் மிகவுமே பதீதமாக (தூய்மையற்று) உள்ளது. யோகத்தினால் நாங்கள் பாவனமாக ஆகிக் கொண்டே போவோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஞான அமிருதத்தைப் பருகி பாவன சொர்க்கத்திற்கு அதிபதி ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். இந்த மணமகன் மணமகள் களாகிய உங்கள் அனைவரையும் பாவனமாக ஆக்க வந்துள்ளார். நிரந்தரமாக என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். நீங்கள் வந்தீர்கள் என்றால் மற்ற சேர்க்கை களை விடுத்து உன்னுடன் இணைத்து கொள்வோம் என்பது உங்களுடைய வாக்குறுதி ஆகும். உங்கள் மீது சமர்ப்பணம் ஆவோம். மனைவி கணவன் மீது கணவன் மனைவி மீது சமர்ப்பணம் ஆகிறார்கள். இங்கு தந்தை மீது சமர்ப்பணம் ஆவது ஆகும். திருமணத்தில் ஒருவர் மற்றவர் மீது சமர்ப்பணம் ஆகிறார்கள் அல்லவா? ஆனால் இப்பொழுது நீங்கள் மனிதர்கள் மீது சமர்ப்பணம் ஆக வேண்டாம் என்று தந்தை கூறுகிறார். உங்கள் மீது சமர்ப்பணம் ஆவோம் என்பது உங்களுடைய வாக்குறுதி ஆகும். நீங்கள் எங்கள் மீது சமர்ப்பணம் ஆகுங்கள். நீங்கள் சமர்ப்பணம் ஆனீர்கள் என்றால், 21 பிறவிகளுக்கு உங்களை சதா சுகமுடையவர்களாக ஆக்கி விடுவேன். எவ்வளவு உயர்ந்த ஆஸ்தி ஆகும். சாது சந்நியாசிகள் ஆகியோர் ஆஸ்தி கொடுக்க முடியுமா என்ன? நான் உங்களுக்கு வரம் அதாவது ஆஸ்தி அளிக்கிறேன் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். நீங்கள் என்னை நிரந்தரமாக நினைவு மட்டும் செய்யுங்கள். ஸ்ரீமத் மூலமாகத் தான் நீங்கள் சிறந்தவர்களாக ஆகி விடுவீர்கள். இதை மறக்காதீர்கள். இந்த இலட்சுமி நாராயணரின் படத்தைக் கூட வீட்டில் வைத்து விடுங்கள். நாங்கள் தந்தையிட மிருந்து மீண்டும் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். தந்தை பரந்தாமத்திலிருந்து வந்து விட்டுள்ளார். ஆனால் மாயை என்ற பருந்து கூட குறைந்தது அல்ல. கெட்டியாக பிடித்து விடுகிறது. எல்லாருடைய விசயம் கிடையாது. வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். நாம் தந்தை யிடமிருந்து ஆஸ்தியை எடுக்கிறோம் என்பதை ஒரு சிலர் ஒரேயடியாக மறந்து விடுகிறார்கள். இங்கு அமர்ந்திருக்கும் பொழுது போதை ஏறுகிறது. இங்கிருந்து வெளியே சென்ற உடனேயே மறந்து விடுகிறார்கள். மீண்டும் காலையில் புத்துணர்வு (ரிஃப்ரெஷ்) பெறுகிறார்கள். பிறகு நாள் முழுவதும் மறந்து விடுகிறார்கள். 4-5 வருடங்களாக நல்ல சேவை செய்பவர்கள் கூட இன்று பார்த்தீர்களென்றால், இல்லாமல் போய் விட்டார்கள். ஏதாவது கொஞ்சம் கட்டளையை மீறினார்கள் என்றால் மாயை பலமாக அறைந்து விடுகிறது. பின் சென்று விட்டார்கள். குழந்தைகளே! மாயை மிகவும் கடுமையானது என்று பாபா கூறுகிறார். கட்டளையை மீறுவதால் மாயை ஒரேயடியாக வீழ்த்தி விடுகிறது. எனவே ஏறினால் ஒரேயடியாக அன்பு சுவை ஏறும்.... என்று பாடப்படுகிறது.... விழுந்தால் எப்படி சுக்குநூறாக ஆகி விடுகிறார்கள் என்பதைப் பார்க்கிறீர்கள். வைகுண்டத்திற்கோ அவசியம் செல்வார்கள். ஆனால் பதவியோ வரிசைக்கிரமமாக இருக்கும் அல்லவா? அங்கு எல்லாருமே சுகமாகத் தான் இருப்பார்கள் என்றாலும் கூட பிறகும் பதவிகளோ இருக்கும் அல்லவா? பள்ளிக் கூடத்தில் பதவி அடைவதற் காகத் தானே முயற்சி (புருஷார்த்தம்) செய்கிறார்கள். அப்படியின்றி, பிரஜையே சரி தான், எது அதிர்ஷ்டத்தில் இருக்குமோ .. .. ..என்பதல்ல. இல்லை இதற்கு தமோபிரதான புருஷார்த்தம் என்று கூறுவார்கள். யார் தந்தை யிடமிருந்து முழுமையான ஆஸ்தி எடுப்பதற்கான புருஷார்த்தம் செய்கிறார்கள் அல்லது உறுதி எடுக்கிறார்களோ அவர்களை சதோபிரதான முயற்சியாளர்கள் என்று கூறுவார்கள். இது குதிரை ஓட்டப் பந்தயம் அல்லவா? யாருமே முதல் நம்பரில் ஒன்றும் செல்ல மாட்டார்கள். இது மனிதப் பந்தயம் ஆகும். மாயை எப்பேர்ப்பட்ட தடையை ஏற்படுத்துகிறது என்றால் ஒரேயடியாக பந்தயத்திலிருந்து வெளியேற்றி விடுகிறது. உங்களுடையது மனித பந்தயம் (ஹ்யூமன் ரேஸ்) ஆகும். நாங்கள் மிகவும் துக்கமடைந்திருக் கிறோம் என்று ஆத்மா கூறுகிறது. சரீரம் எடுத்து எடுத்து மிகவுமே துன்பப்பட்டுள்ளோம். இப்பொழுது பாபாவிடம் போகலாம் என்று கூறுகிறார்கள். வழிமுறைகளோ பாபா கூறியே இருக்கிறார். பாபா நாங்கள் உங்களது நினைவில் இருப்போம். எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நல்லது. எப்படி அரசாங்க சேவையில் கூட 8 மணி நேரம் இருக் கிறார்கள் அல்லவா? எனவே இதில் கூட 8 மணி நேரம் இருங்கள். சிருஷ்டியை சொர்க்கமாக ஆக்குவது எவ்வளவு பெரிய சேவை ஆகும். தந்தையை நினைவு மட்டும் செய்யுங்கள் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். அவ்வளவே! 8 மணி நேரம் சேவை செய்தீர்கள் என்றால் முழு ஆஸ்தி பெறுவீர்கள். இவ்வாறு நினைவு செய்து செய்து உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகும். எட்டு மணி நேரம் நீங்கள் இந்த சேவையில் கொடுங்கள். 16 மணி நேரம் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். கூடுமானவரை அடிக்கடி நினைவில் இருங்கள். நினைவோ எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து செய்யலாம். எல்லாவற்றையும் விட நல்ல நேரம் உங்களுக்கு அதிகாலையில் கிடைக்கும். நேரத்தில் உறங்குவது, நேரத்தில் (அதிகாலை) எழுந்திருப்பது என்று சிந்தியில் கூறுகிறார்கள். இந்த குணம் மனிதர்களைப் பெரியவர்களாக ஆக்குகிறது. அஞ்ஞானிகள் 8 மணி நேரம் உறங்குகிறார்கள். உங்களது உறக்கம் பாதி அளவு இருக்க வேண்டும். 4 மணி நேரம் உறக்கம் போதுமானது. கர்மயோகி ஆவீர்கள் அல்லவா? இரவு 10 மணிக்கு உறங்கி விடுங்கள். 2 மணிக்கு எழுந்திருங்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள். 2 மணிக்கு எழுந்திருக்க முடியவில்லை என்றால் 3 மணிக்கு எழுந்திருங்கள், 4 மணிக்கு எழுந்திருங்கள். அது முதல் தரமான நேரம் ஆகும். முற்றிலும் அமைதி இருக்கும். எல்லாரும் அசரீரி ஆகி விடுகிறார்கள். அந்த நேரத்தில் மிகவும் நிசப்தமாக இருக்கும். மூலவதனம் போலவே ஆகி விடுகிறது. எல்லாருமே இறந்து விட்டது போல் தோன்றுகிறது. அந்த நேரத்தில் நீங்கள் பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால், அந்த நினைவு பக்குவமாக ஆகி விடும். அமிருதவேளையின் நினைவு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாபா பெரும்பாலும் இரவு விழித்துக் கொண்டே இருப்பார். ஸ்தூல காரியங்களில் வரும் பொழுது தலை பாரமாகி விடுகிறது. சூட்சும சேவை யில் களைப்பு ஏற்படுவதில்லை. சம்பாத்தியம் களைப்படைய செய்யுமா என்ன? சம்பாத்தியத் தினாலோ குஷி ஏற்படும். எனவே அதிகாலை எழுந்து நினைவு செய்வதால் மிகுந்த சம்பாத்தியம் உள்ளது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தினமும் அமிருதவேளை எழுந்து அசரீரி ஆகி தந்தையை நினைவு செய்வதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும். முழு ஆஸ்தி பெறுவதற்காக நினைவில் முன்னேறி செல்லவேண்டும். குறைந்தது 8 மணி நேரம் நினைவு அவசியம் செய்ய வேண்டும்.

2. ஒரு தந்தை மீது முழுமையாக சமர்ப்பணம் ஆக வேண்டும். பரவழி அல்லது மனவழிப்படி நடக்காமல் ஒரு தந்தையின் சிறந்த வழிப்படி நடக்க வேண்டும்.

வரதானம்:

ஆன்மிக எக்சர்சைஸ் மூலம் சுமையை முடிவடையச் செய்யக்கூடிய சமமானவர் மற்றும் சமீபமானவர் ஆகுக.

ஆன்மிக எக்சர்சைஸ் என்றால் இந்த நொடி நிராகாரி, அடுத்த நொடி அவ்யக்த ஃபரிஷ்தா, அதற்கடுத்த நொடி சாகாரத்தில் கர்மயோகி, அடுத்த நொடி உலக சேவாதாரி என்று பயிற்சி செய்வது. அப்படிப்பட்ட எக்சர்சைஸ் செய்தீர்கள் என்றால் வீணானதின் சுமை என்ன இருக் கின்றதோ, அது முடிவடைந்துவிடும். எப்பொழுது சுமை முடிவடைந்து விடுமோ, நாயகனுக்கு சமமாக டபுள் லைட் ஆவீர்களோ, அப்பொழுதே ஜோடி நன்றாக இருக்கும். ஒருவேளை, நாயகன் இலேசாக இருக்கின்றார் மற்றும் நாயகி சுமையுடன் இருக் கின்றார் என்றால் ஜோடி நன்றாக இருக்காது. சமமானவர் ஆகுங்கள், சமீபமானவர் ஆகுங்கள் என்று ஆன்மிக நாயகன் நாயகிகளுக்குக் கூறுகின்றார்.

சுலோகன்:

தன்னுடைய வாழ்க்கை என்ற மலர்ச்செண்டு மூலம் தெய்வீகத்தன்மையின் நறுமணத்தைப் பரப்புவது தான் குணமூர்த்தி ஆகுவதாகும்.

 Download PDF

 

Post a Comment

0 Comments