Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 23.04.23

 

23-04-2023  காலை முரளி  ஓம் சாந்தி  "அவ்யக்த பாப்தாதா"


Listen to the Murli audio file



இன்று அன்பு மற்றும் சக்தியின் மூர்த்தியான பாப்தாதா தன்னுடைய நாலாபுறங்களிலும் உள்ள சினேகி குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். எத்தனை சபைகள் சாகாரத்தில் இருக்கின்றனவோ, அதைவிடவும் அதிகமாக ஆகார ரூபத்தினுடைய சபை உள்ளது. அனைத்து சாகார ரூபதாரி மற்றும் ஆகார ரூபதாரி குழந்தைகளையும் பாப்தாதா அன்பின் கரங்களில் நிறைத்திருக்கின்றார்கள். அன்பின் கரங்கள் எவ்வளவு பெரியதாக உள்ளன! எவ்வாறு நதியானது கடலில் கலக்கின்றதோ, அதுபோல், நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து குழந்தை களும் அன்புக் கரங்களில் நிறைந்திருக்கின்றார்கள். அன்பின் கரங்கள், அன்பின் கடல் எல்லை யற்றது. அனைத்து குழந்தைகளும், வரிசைக்கிரமமாக இருக்கும்போதிலும், அன்பில் அனைவரும் கட்டுண்டு இருக்கின்றார்கள். அனைத்து குழந்தை களிடத்திலும் பாப்தாதாவின் அன்பு நிறைந்திருக்கின்றது. அன்பின் சக்தியால் தான் அனைவரும் முன்னேறி பறந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். அன்பின் விமானம் அனைத்து குழந்தைகளையும் உடலால் மற்றும் மனதால், உள்ளத்தால் தந்தைக்கு அருகாமையில் கொண்டு வருகிறது. அன்பின் விமானம் ஒரு நொடிப்பொழுதில் தந்தைக்கு அருகாமையில் கொண்டு வருகிறது. ஞானம், யோகம், தாரணை ஆகியவற்றில் அவரவர் சக்திக்கேற்ப வரிசைக்கிரமமாக இருக்கின்றார்கள், ஆனால், அன்பில் ஒவ்வொருவரும் தன்னை முதல் எண்ணில் இருப்பதாக அனுபவம் செய்கின்றார்கள். அனைத்து குழந்தைகளுக்கும் பிராமண வாழ்க்கையை வழங்குவதற்கான மூல ஆதாரமே அன்பு தான். ஒருவேளை, அனைத்து குழந்தைகளிடமும், நிரந்தர யோகியாக இருக்கின்றீர்களா? நிரந்தர ஞான சொரூபமாக இருக்கின்றீர்களா? ஞானி அல்ல ஆனால், ஞான சொரூபமாக இருக்கின்றீர் களா? என்று கேட்டால் இருக்கிறோம், ஆனால் . . . என்று யோசிப்பார்கள், கூறுவார்கள். நிரந்தர தாரணை சொரூபமாக இருக்கின்றீர்களா? என்று கேட்டால் என்ன கூறுவார்கள்? இலட்சியமோ இருக்கத் தான் செய்கின்றது. ஆனால், நிரந்தர சினேகியாக இருக்கின்றீர்களா என்று எப்பொழுது கேட்போமோ, அப்பொழுது ஆமாம் என்று கூறுவார்கள். அன்பில் அனைவரும் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். சிலர் மதிப்புடன் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர், சிலர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். தேர்ச்சி அடைந்திருக்கின்றீர்கள் தானே! இரட்டை அயல்நாட்டினர், பாரதவாசிகள் அனைவரும் தேர்ச்சி அடைந்திருக் கின்றீர்களா? தேர்ச்சி பெறவில்லை என்றால் அருகாமையில் வரமுடியாது. அருகாமையில் வருவது என்பது நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டதை நிரூபிக்கின்றது. அன்பின் அர்த்தமே அருகில் (பாஸ்) இருப்பது மற்றும் தேர்ச்சி (பாஸ்) பெறுவது மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையையும் மிகவும் சகஜமாகக் கடந்து (பாஸ்) செல்வது என்பதாகும். எனவே, அனைவரும் மூன்றிலும் தேர்ச்சி (பாஸ்) அடைந்திருக்கிறீர்கள் அல்லவா? கடந்து செல்வதும் சகஜமாக இருக்கின்றது அல்லவா? அல்லது கடந்து செல்வதில் சில நேரம் கடினமாக, சில நேரம் சகஜமாக இருக் கின்றதா? அருகாமையில் இருப்பதில் கூட ஆனந்தமே ஆனந்தம் இருக்கின்றது மற்றும் கடந்து செல்வது என்பதில் வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்களா அல்லது அனைவரும் நம்பர் ஒன் ஆக இருக்கின்றீர்களா? பாருங்கள், நம்பர் ஒன் என்று கூறவில்லை, அனைவரும் அமைதியாக இருக்கின்றீர்கள் என்றால் ஏதோ இருக்கின்றது (சம்திங்) என்று அர்த்தம். ஆனால், எவ்வாறு அருகாமையில் இருப்பது சகஜமாக உள்ளதோ, அதுபோல் அன்பின் சக்தியால் கடந்து செல்வது என்பதும் சமயத்தின் அனுசாரம் அந்தளவு சகஜமாகிக் கொண்டு இருக்கின்றது மற்றும் ஆகத் தான் வேண்டும், மேலும், எப்பொழுது கடந்து செல்வது சதா சகஜமாகிவிடுமோ, அப்பொழுது தேர்ச்சி பெறுவது என்ன, தேர்ச்சி பெற்றுவிட்டதாக அர்த்தம். தேர்ச்சி அடைந்தே இருக்கின்றேன் என்ற இந்த உறுதியான நம்பிக்கை உள்ளது. ரிப்பீட் (திருப்பி) மட்டும் செய்ய வேண்டும். அந்தளவு உறுதியான நம்பிக்கை இருக்கிறது அல்லவா? தொலைவில் அமர்ந்திருந்தாலும் அனைவரும் அருகில் இருக்கின்றீர்கள் அல்லவா! இதய சிம்மாசனத்தில் இருக்கின்றீர்கள். சிலர் கண்களின் மணியாக இருக்கின்றீர்கள், சிலர் இதய சிம்மாசனதாரியாக இருக்கின்றீர்கள். அனைத்தையும் விட நெருக்கத்தில் கண்கள் உள்ளன மற்றும் உள்ளம் உள்ளது. நீங்கள் அனைவரும் ஓம்சாந்தி பவனில் அமர்ந்திருக்க வில்லை, ஆனால், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அல்லது கண்களில் பிரகாசிக்கும் ஒளியாக அமர்ந்திருக் கின்றீர்கள். நிறைந்திருப்பவர்கள் ஒருபொழுதும் விலகி இருக்க முடியாது.

இந்த வருடம் என்ன செய்யப் போகின்றீர்கள்? இந்த வருடத்தினுடைய சந்திப்பின் கடைசி முறை என்று கூறவும் செய்கின்றீர்கள். ஆனால், முடிவு, ஆதியினுடைய நினைவை அதிகமாக ஏற்படுத்துகிறது. ஆதி, மத்திமத்தின் நினைவை ஏற்படுத்துகிறது, ஆனால், முடிவு, ஆதியின் நினைவை ஏற்படுத்துகிறது. எனவே, முடிவு அல்ல, ஆனால், ஆரம்பம் ஆகும். தீவிர வேகத்தில் பறப்பதற்கான ஆரம்பம் ஆகும். எது அனாதி வேகமோ, ஆத்ம சொரூபமே அனாதி சொரூபம் ஆகும், எனில், அனாதி சொரூபத்தின் வேகம் என்ன? எவ்வளவு தீவிரமான வேகம்! தற்காலத்தின் வித விதமான அறிவியல் சாதனங்களுடைய தீவிர வேகத்தை விடவும் தீவிர வேகமானது. அறிவியல் சாதனங்களின் வேகமானது பிறகும் கூட விஞ்ஞானத் தினுடையது தான், விஞ்ஞானத்தின் மூலம் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடிகிறது, நிறுத்தவும் முடிகிறது. ஆனால், ஆத்மாவினுடைய வேகத்தை யாரும் இதுவரை பிடிக்க முடியவில்லை, பிடிக்கவும் முடியாது. இதில் தான் விஞ்ஞானம் தன்னை தோல்வியுற்றதாகப் புரிந்திருக்கிறது. மேலும், எங்கே விஞ்ஞானம் தோற்றுப் போகிறதோ, அங்கே அமைதியின் சக்தியினால் என்ன விரும்பு கிறீர்களோ அதை செய்ய முடியும். எனவே, ஆத்ம சக்தியின் விமானத்தின் தீவிர வேகத்தை ஆரம்பம் செய்யுங்கள். அது, சுயமாற்றத்திலோ, பிறர் ஒருவருடைய விருத்தியினுடைய (உள்ளுணர்வின்) மாற்றத்திலோ, வாயுமண்டலத்தின் மாற்றத்திலோ, சம்பந்தம், தொடர்பின் மாற்றத்திலோ இப்பொழுது தீவிர வேகத்தைக் கொண்டு வாருங்கள். தீவிரத்தன்மையின் அடையாளம் நினைத்தேன் மற்றும் நடந்துவிட்டது என்பதாகும். நினைக்கத் தான் செய்கின்றேன்..... நடந்துவிடும்..... அப்படி இல்லை. நினைத்தேன் மற்றும் நடந்துவிட்டது. சங்கல்பம், வார்த்தை மற்றும் கர்மம் மூன்றுமே சிரேஷ்டமானதாக இணைந்தே இருக்க வேண்டும். வீணானதை மற்றும் தலைகீழான சங்கல்பத்தை சோதனை செய்தீர்கள் என்றால் அதனுடைய நிலை மிகவும் வேகமாக இருக்கின்றது. இப்பொழுது தான் சங்கல்பம் வந்தது, இப்பொழுதே பேசிவிட்டேன், இப்பொழுதே செய்தும்விட்டேன். சங்கல்பம், வார்த்தை, கர்மம் இணைந்து இணைந்து மிகவும் வேகமாகிவிடுகின்றது. சிரேஷ்ட சங்கல்பம், கர்மம், நியமம், பிராமண வாழ்க்கையின் மகான்தன்மையின் உணர்வு சமாப்தி ஆகிவிடுமளவு அதனுடைய வேகம் தீவிரமாகிவிடுகிறது. வீணானதின் வேகம் - சத்தியத்தின் உணர்வை, யதார்த்தத்தின் உணர்வை சமாப்தி செய்துவிடுகிறது மற்றும் சிறிது நேரத்திற்குப் பிறகு எப்பொழுது உணர்வு வருகிறதோ, அப்பொழுது இதை செய்திருக்கக் கூடாது, இது யதார்த்தமானது அல்ல என்று நினைக்கின்றார்கள். ஆனால், எந்த சமயத்தில் (வீணானதின்) வேகம் வருகிறதோ, அப்பொழுது யதார்த்தத்தின் அறிமுகம் மாறி, யதார்த்தமற்றதை யதார்த்த மானது என்று அனுபவம் செய்கின்றார்கள். எனவே, வீணானதின் வேகம், விழிப்புணர்வை அழித்துவிடுகிறது. எனவே, இந்த வருடம் அனைத்து குழந்தைகளும் விசேஷமாக வீணானதிலிருந்து இன்னொசென்ட் (அறியாதவர்) ஆகுங்கள். எவ்வாறு ஆத்மாக்களாகிய நீங்கள் எப்பொழுது தன்னுடைய சத்யுக இராஜ்யத்தில் இருந்தீர்களோ, அப்பொழுது வீணானது மற்றும் மாயையைப் பற்றி அறியாதவர்களாக இருந்தீர்கள், ஆகையினால், தேவதை களை மகான் ஆத்மாக்கள், செயிண்ட் (புனிதமானவர்) என்று கூறுகின்றார்கள், அவ்வாறு தன்னுடைய அந்த சமஸ்காரத்தை எமர்ஜ் (வெளிக்கொணருங்கள்) செய்திடுங்கள், வீணானதைப் பற்றிய ஞானமற்றவராக ஆகுங்கள். சமயம், சுவாசம், வார்த்தை, கர்மம், போன்ற அனைத்திலும் வீணானதைப் பற்றி அறியாதநிலை அதாவது இன்னொசென்ட் ஆகுங்கள். எப்பொழுது வீணானதைப் பற்றிய அறியாதநிலை ஏற்பட்டுவிட்டதோ, அப்பொழுது தெய்வீகத் தன்மை தானாகவே சகஜமாகவே அனுபவம் ஆகும் மற்றும் அனுபவம் செய்ய வைக்கும். முயற்சியோ செய்து கொண்டு தான் இருக்கின்றேன் . . . என்று இப்பொழுது வரை நினைக் காதீர்கள். புருஷ் (ஆத்மா) இந்த ரதத்தின் மூலம் செய்து கொண்டு இருக்கின்றது, எனில், புருஷ் (ஆத்மா) ஆகி ரதத்தின் மூலம் செய்விக்க வேண்டும், இதையே முயற்சி என்று கூறப் படுகிறது. முயற்சி நடந்து கொண்டு இருக்கின்றது என்பதல்ல, ஆனால், முயற்சியாளர் சதா பறந்து கொண்டிருப்பார். யதார்த்த முயற்சியாளர் என்று இவர்களைத் தான் கூறப்படுகிறது. ஒரு முறை செய்த தவறை அடிக்கடி செய்துகொண்டு இருக்கின்றீர்கள் மற்றும் முயற்சியை தன்னுடைய ஆதரவாக ஆக்குகின்றீர்கள் என்றால் இது முயற்சி என்பதன் அர்த்தம் கிடையாது. யதார்த்த முயற்சியாளராக இருக்க வேண்டும், சுபாவமும் கூட இயல்பானதாக இருக்க வேண்டும், மிகவும் சகஜமானதாக இருக்க வேண்டும். இப்பொழுது உழைப்பை ஒதுக்கி விடுங்கள். அல்பகால ஆதாரங்களின் ஆதரவை, எதை ஒதுக்கி வைத்திருக்கின்றீர்களோ, அந்த அல்பகால ஆதரவின் பிடிமானத்தை இப்பொழுது விட்டுவிடுங் கள். எதுவரை இந்த பிடிமானம் உள்ளதோ, அதுவரை சதா தந்தையின் ஆதரவை அனுபவம் செய்ய முடியாது மற்றும் தந்தையின் ஆதரவு இல்லை, ஆகையினால், எல்லைக்குட்பட்ட பிடிமானங்களை ஆதாரவாக ஆக்குகின்றீர்கள். தன்னுடைய சுபாவ சமஸ்காரங்களை, சூழ்நிலைகளை, எதை பிடிமான மாக ஆக்கி இருக்கின்றீர்களோ, அவை அனைத்தும் ஏமாற்றக்கூடிய அல்பகால பகட்டு ஆகும். ஏமாற்றத்தில் வந்துவிடாதீர்கள். தந்தையினுடைய ஆதரவு என்பது குடைநிழல் ஆகும். அல்பகாலத்தின் விசயங்கள் ஏமாற்றக் கூடியவை. மாயை யினுடைய மிகவும் இனிமை யிலும் இனிமையான விசயங்களைக் கேட்டுக் கொண்டும் இருக்கின்றீர்கள், நிறைய கேட்டு விட்டீர்கள். எவ்வாறு துவாபரயுகத்தின் சாஸ்திரத்தை உருவாக்கக் கூடியவர்கள், விசயங்களை உருவாக்குவதில் மிகவும் புத்திசாலிகளாக இருக்கின்றார்கள், எவ்வளவு இனிமையிலும் இனிமையான விசயங்களை உருவாக்கி இருக் கின்றார்கள். எனவே, விசயங்களை உருவாக்காதீர் கள், விசயங்களை உருவாக்குவதில் அனைவரும் ஒருவரை விட ஒருவர் புத்திசாலியாக இருக்கின்றீர்கள். விசயங்களை உருவாக் காதீர்கள், விசயங்களைப் பார்க்காதீர்கள், விசயங்களைப் பேசாதீர்கள். ஆனால், என்ன செய்ய வேண்டும்? தந்தையைப் பாருங்கள், தந்தைக்கு சமமாகச் செய்யுங்கள், தந்தைக்கு சமமாக ஆகுங்கள். எப்பொழுது ஏதாவது ஒரு விசயம் முன்னால் வருகிறதோ, அப்பொழுது விசயத்தை உருவாக்குவது ஒரு நொடிப்பொழுதில் வந்துவிடுகிறது, ஏனென்றால், மாயையின் வேகம் கூட தீவிரமாக இருக்கின்றது அல்லவா. அப்படி அழகாக விசயத்தை உருவாக்கிவிடுகிறது, அதைக் கேட்டதும் தந்தைக்கு சிரிப்பு வருகிறது, ஆனால், பிறர் பிரபாவத்தில் வந்துவிடுகின்றனர். இவர்கள் சரியாகத் தான் பேசுகின்றார்கள், மிகவும் நன்றாக இருக்கின்றது, விசயமோ சரியானதாக இருக்கின்றது மற்றும் தனக்குத் தானேயும் சரியாகத் தோன்றுகிறீர்கள். ஆனால், சமயத்தின் தீவிர வேகத்தைப் பார்த்து, இப்பொழுது இந்தப் பிடிமானங்களிலிருந்து வேகமாகப் பறந்து செல்லுங்கள். இந்த அனேக விதமான விசயங்கள், வீணான ரிஜிஸ்டரின் (பதிவேட்டின்) ரோலை (சுருளை) உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. ரோலுக்கு மேல் ரோல் உருவாகிக் கொண்டே இருக்கிறது, ஆகையினால், இதிலிருந்து இன்னொசென்ட் ஆகுங்கள். இந்த இன்னொ சென்ட் ஸ்டேஜினால் (நிலையினால்) உருவான உருவாக்கப்பட்ட சேவையின் ஸ்டேஜ் (மேடை) உங்களுக்கு முன்னால் வரும். இந்த வருடத்தின் யதார்த்த முயற்சியினுடைய பிரத்யட்ச பலனின் அடையாளமாக, உருவான உருவாக்கப்பட்ட சேவையானது உங்களுக்கு முன்னால் வரும். வீணானவற்றை எதிர் கொள்வதை முடிவடையச் செய்தீர்கள் என்றால் சேவையின் வாய்ப்பு முன்னால் வரும். நீங்கள் அனைவரும் சேவைக்கு நிமித்தமாக அனேக வருடங்களாக இருக்கின்றீர்கள், இப்பொழுது மற்றவர்களை நிமித்தமாக்கும் சேவைக்கு நிமித்தம் ஆகுங்கள். அவர்கள் மைக் ஆகவேண்டும் மற்றும் நீங்கள் மைட் (சக்தி) ஆக வேண்டும். நீண்ட காலம் நீங்கள் மைக் ஆகியிருந்தீர்கள், இப்பொழுது மற்றவர்களை மைக்காக ஆக்குங்கள், நீங்கள் மைட் (சக்திசாலி) ஆகுங்கள். உங்களுடைய சக்தியினால் மைக் நிமித்தமாக ஆகவேண்டும். இதையே தீவிர வேகத்தில் பறப்பதற்கான அடையாளம் என்று கூறப்படுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? வேகமான விமானம் அல்லவா. அல்லது சில நேரம் வேகமானதாக, சில நேரம் மெதுவானதாக உள்ளதா? சதா தீவிர வேகம் என்ற விமானத்தில் பறந்து கொண்டே இருப்பீர்கள். மேகங்களைப் பார்த்து பயப்படாதீர்கள். இந்த விசயங்கள் தான் மேகங்கள். ஒரு நொடியில் கடந்துவிடுங்கள். விதியை அறிந்து கொள்ளுங்கள் மற்றும் ஒரு நொடியில் விதி மூலம் வெற்றியை அடையுங்கள். ஒருபுறம் ரித்தி - ஸித்தியின் வேகம் உள்ளது மற்றும் உங்களுடையதோ விதி சம்பன்ன வெற்றியினுடைய வேகம் ஆகும். ரித்தி - ஸித்தி அல்ப காலத்திற்கானது மற்றும் விதி- ஸித்தி சதா காலத் திற்கானது.

யார் சதா மனதால், பேச்சால், வார்த்தையால், தொடர்பால் அர்ஜூனனாக இருக் கின்றார்களோ, அப்பேற்பட்டவர்களுடைய குழுவை இப்பொழுது பாப்தாதா விரும்புகின்றார்கள். நான் அர்ஜூனன் ஆவேன். நான் என்ன செய்வேனோ, நான் என்பது தேக உணர்விற்கானது அல்ல, நான் சிரேஷ்ட ஆத்மா ஆவேன்) என்னைப் பார்த்து பிறர் செய்வார்கள். எனவே, யார் தன்னை நிமித்தமானவராக, பொறுப்பானவராக உணர்கின்றார்களோ, அவர்களே அர்ஜூனன் ஆவார்கள். முதல் நம்பர் என்றால் அர்ஜூனன், அலௌகீகமானவர், என்ற இந்த மகிமை என்ன பாடப்பட்டுள்ளதோ, அப்படிப்பட்ட குழுவை பாப்தாதா பார்க்க விரும்பு கின்றார்கள். விசயங் களைப் பார்க்கக் கூடாது, பிறரை பார்க்கக் கூடாது, பிறரைப் பற்றிய வீணானதைக் கேட்கக் கூடாது. அத்தகைய அலௌகீகமானவர் ஆகவேண்டும், அவ்வளவு தான். சங்கல்பம், பேச்சு மற்றும் கர்மம் ஆகிய அனைத்திலும் அலௌகீகத் தன்மை, தெய்வீகத் தன்மையின் ஜொலிப்பு இருக்க வேண்டும். இப்பேற்பட்டவர்களையே அர்ஜூனன், அலௌகீகமானவர்கள் என்று கூறப் படுகிறது. அப்படிப்பட்ட குழு இந்த வருடத்தில் தயார் ஆகுமா அல்லது அடுத்த வருடத்தில் தயார் ஆகுமா? யார் இந்தக் குழுவில் வர விரும்பு கின்றீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். நான் ஆகவேண்டும், நான் அர்ஜூனன் ஆவேன். என்ன செய்வது . . . நடந்துவிடுகிறது . . . சூழ்நிலை அப்படி இருக்கின்றது . . . உதவி கிடைக்கவில்லை . . . ஆசீர்வாதங்கள் கிடைக்கவி ல்லை . . . ஆதரவு கிடைக்கவில்லை.... என்று பிறகு இப்படிப்பட்ட எந்த சமாச்சாரமும் வரக் கூடாது. யாருக்கு கொஞ்சம் சமயம் தேவைப்படுகின்றதோ, அவர்கள் கை உயர்த்துங்கள். ஒன்று - இரண்டு மாதங்கள் வேண்டுமா அல்லது ஒரு வருடம் வேண்டுமா? எந்தக் குழு வந்தாலும் அவர்களிடம் கேட்க வேண்டும், பிறகு, முடிவைச் சொல்ல வேண்டும். டீச்சர்கள் முதலில் சொல்ல வேண்டும், ஏனென்றால், யார் நிமித்தமாக ஆகின்றார்களோ, அவர்களுடைய சூட்சும வாயுமண்டலம், அதிர்வலைகள் அவசியம் செல்கின்றது. பலகோடி மடங்கு புண்ணியமும் கிடைக்கின்றது மற்றும் பல கோடி மடங்கு நிமித்தமாகவும் ஆகின்றார்கள். வேறு வார்த்தைகள் சொல்லமாட்டீர்கள் தானே. டீச்சர் ஆவது மிகவும் நல்லது, சிம்மாசனமோ கிடைத்துவிடுகிறது அல்லவா. தாதி - தீதி என்ற டைட்டில் (பட்டம்) கிடைத்துவிடுகிறது அல்லவா. ஆனால், பிறகு பொறுப்பும் அந்தளவு உள்ளது. இந்த வருடத்தில் கொஞ்சம் புதுமைத்தன்மையைக் காண்பியுங் கள். கையோ பல முறை தூக்கிவிட்டேன், உறுதிமொழியும் பல வருடங்கள் செய்துவிட்டேன் என்று நினைக்காதீர்கள், இப்படிப்பட்ட சங்கல்பம் சூட்சுமத்திலும் வரக்கூடாது, பிறரைப் பற்றியும் வரக்கூடாது. இந்த சங்கல்பம் கூட மந்தமாக ஆக்கிவிடுகிறது. இது இருந்து கொண்டே தான் இருக்கிறது, இது நடந்துகொண்டே தான் இருக்கிறது . . . இந்த அதிர்வலை கூட பலவீனம் ஆக்கிவிடுகிறது. திடமான சங்கல்பம் செய்யுங்கள், அப்பொழுது அந்த உறுதித் தன்மை வெற்றியை அவசியம் கொண்டு வரும். பலவீனமான சங்கல்பத்தை உற்பத்தி செய்யா தீர்கள். அதை பாலனை செய்வதில் அதிக நேரம் வீணாகிறது. உற்பத்தி செய்வது மிகவும் சீக்கிரத்தில் நடைபெறுகிறது. ஒரு நொடியில் நூறு உற்பத்தி ஆகிவிடுகின்றன. மேலும், பாலனை செய்வதற்கு எவ்வளவு சமயம் ஆகிறது! அழிப்பதற்கு உழைப்பும் செய்ய வேண்டியுள்ளது, நேரமும் செலவாகிறது மற்றும் பாப்தாதாவின் வரதானம் மற்றும் ஆசீர்வாதங்களில் இருந்தும் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆகிவிடுகின்றார்கள். அனைவருடைய சுபபாவனைகளின் ஆசீர்வாதங் களில் இருந்தும் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆகிவிடுகின்றார்கள். அனைவருக்காகவும் சுத்த சங்கல்பத்தின் பந்தனம், வேலியை அப்படி கட்டுங்கள், யாராவது கொஞ்சம் பலவீனமாகவும் இருக்கலாம், அவர்களுக்காகவும் கூட இந்த சுத்த சங்கல்பங்களின் வேலியானது ஒரு குடை நிழலாக ஆகவேண்டும், பாதுகாப்பிற்கான சாதனம் ஆகவேண்டும், கோட்டை ஆக வேண்டும். சுத்த சங்கல்பத்தின் சக்தியை இப்பொழுது குறைவாக அறிந்திருக்கின்றீர்கள். ஒரு சுத்தமான மற்றும் சிரேஷ்டமான சக்திசாலியான சங்கல்பத்தால் என்ன அதிசயம் செய்ய முடியும் - என்பதன் அனுபவத்தை இந்த வருடத்தில் செய்து பாருங்கள். முதல் பயிற்சியில் யுத்தம் ஏற்படும், வீணான சங்கல்பம் சுத்த சங்கல்பத்தைத் துண்டிக்கும். எவ்வாறு கௌரவர்கள் - பாண்டவர்களின் அம்பைக் காண்பிக்கின்றார்கள் அல்லவா, அம்பு, அம்பை வழியிலேயே அழித்துவிடுகிறது, எனில், சங்கல்பம், சங்கல்பத்தை அழித்துவிடுவதற்கான முயற்சி செய் கின்றது, செய்யும், ஆனால், திடமான சங்கல்பம் செய்பவர்களின் துணைவனாக தந்தை இருக்கின்றார். வெற்றித் திலகம் சதா இருக்கவே இருக்கின்றது. இப்பொழுது இதை எமர்ஜ் செய்தீர்கள் என்றால் வீணானது தானாகவே மெர்ஜ் (அமிழ்ந்துவிடும்) ஆகிவிடும். வீணானதிற்கு நேரம் கொடுக்கின்றீர்கள், துண்டிக்கவில்லை, ஆனால், அதனுடைய வண்ணத்தின் சாயத்தைப் பூசிக்கொள்கிறீர்கள். ஒரு நொடியிலும் குறைவான சமயத்தில் துண்டித்துவிடுங்கள். சுத்த சங்கல்பத்தினால் சமாப்தி செய்யுங்கள். எனவே, அனைவருடைய சுபமான சங்கல்பங்களின் வாயுமண்டலத்தினுடைய வேலியானது அதிசயம் செய்து காண்பிக்கும். அதிகமாக செய்கின்றேன், ஆனால், ஒன்றும் நடப்பதில்லை, நிறைய கேட்கின்றேன், மிகவும் நன்றாகவும் இருக்கின்றது, ஆனால், ஒன்றும் நடப்பதில்லை என்று முதலில் இருந்தே இதுபோன்று சிந்திக்காதீர்கள். இந்த வீணான வாயுமண்டலம் கூட பலவீனம் ஆக்கிவிடுகிறது. நடந்தே ஆகவேண்டும் என்ற உறுதித்தன்மை கொள்ளுங்கள், பறந்து செல்லுங்கள். உங்களால் என்ன செய்ய முடியாது! ஆனால், முதலில் சுயத்தின் மீது கவனம் (அட்டென்சஷன்) வேண்டும். சுயத்தின் அட்டென்ஷன் தான் டென்ஷனை அழிக்கும். என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? இதுவோ நடந்துகொண்டு தான் இருக்கின்றது, முன்பே உறுதிமொழி செய்துள்ளேன் என்று யாராவது சொன்னால் அதைக் கேட்காதீர்கள். இதில் பலவீனமானவர்களுக்குத் துணை போக வேண்டாம், துணைவன் ஆக்கவேண்டும். ஒருவேளை, யாராவது இப்படி - அப்படி பேசு கின்றார்கள் என்றால் ஒருவருக்கொருவர் சுபமானதைப் பேசுங்கள், சுபமானதை சிந்தியுங்கள், சுபமானதைச் செய்திடுங்கள் என்று கூறுகின்றீர்கள் அல்லவா. நல்லது. அனைவரும் குஷியாக, மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் அல்லவா! அனைவருடனும் உரையாடி விட்டோம் அல்லவா! இது கூட தந்தையின் அன்பு ஆகும். அன்பின் அடையாளம் - அவர்களால் அன்பானவர்களின் குறையைப் பார்க்க முடியாது, அன்பானவர்களின் தவறை தன்னுடைய தவறாகப் புரிந்துகொள் வார்கள். தந்தை கூட எப்பொழுது குழந்தைகளின் ஏதாவது விசயத்தைக் கேட்கின்றாரோ, அப்பொழுது இது என்னுடைய விசயம் என்று புரிந்து கொள்கின்றார். எனவே, சினேகியாக, சம்பன்னமாக, சம்பூரணமாக, சமமாகப் பார்க்க விரும்புகின்றார். அனைவரும் அன்பில் ஒரு வார்த்தையை பாப்தாதாவிற்கு முன்னால் உள்ளத்திலோ, பாடலினாலோ, வார்த்தையினாலோ, சங்கல்பத்தினாலோ அவசியம் கூறுகின்றார் கள், பாப்தாதாவோ அனைவருடையதையும் கேட்கின்றார் அல்லவா. பாபாவினுடைய அன்பிற் கான ரிட்டர்ன் (கைமாறு) என்ன கொடுப்பது? என்ற இந்த ஒரு விசயத்தை அனைவரும் அனேக முறை கூறுகின்றார்கள். ஏனென்றால், எப்படிப்பட்டவர்களாகவோ இருந்த நீங்கள், எப்பேற்பட்டவர்களாகவோ ஆகிவிட்டீர்கள் அல்லவா. கோடியில் ஒருவராக ஆகிவிட்டீர்கள் அல்லவா, ஒரு சிலரில் ஒருவராக ஆக வில்லை. கோடியில் ஒருவராக ஆகிவிட்டீர்கள் அல்லவா. இதில் அனைவரும் தேர்ச்சி அடைந்துவிட்டீர்கள். தந்தை ரிட்டர்னாக (கைம்மாறாக) என்ன விரும்பு கின்றார்? ரிட்டர்ன் செய்ய வேண்டும், தன்னை டர்ன் (மாற்றுவது) செய்ய வேண்டும். புரிந்ததா! இதுவே கைம்மாறு செய்வதாகும், அவ்வளவுதான். இதைச் செய்ய முடியும் அல்லவா! அன்பிற்காக இதைச் செய்ய முடியாதா என்ன! சுயநலமுடன் கூடிய அன்பு இல்லை அல்லவா! அன்பில் தியாகம் செய்வ தற்குத் தயாராக இருக்கின்றீர்களா? தந்தை என்ன கட்டளை கொடுத்தாலும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றீர்களா? அன்பில் அனைவரும் நூறு சதவிகிதம் இருக்கின்றீர்களா அல்லது சதவிகிதத்தில் இருக்கின்றீர்களா? தன்னை மாற்றுவதற்குத் தயாராக இருக்கின்றீர்களா? அன்பிற்குப் பின்னால் இது தியாகமா அல்லது பாக்கியமா? பக்தர்கள் தலையைக் கொய்து வைப்பதற்கும் தயாராக இருக்கின்றார்கள், நீங்கள் இராவணனுடைய தலையைக் கொய்து வைப்பதற்குத் தயாராக இருக்கின்றீர்களா? சரீரத் தினுடைய தலையை அகற்றாதீர்கள், ஆனால், இராவணனுடைய தலையைக் கொய்திடுங்கள். ஐந்து தலைகளையும் கொய்துவிடுவீர்களா அல்லது ஒன்று - இரண்டை வைப்பீர்களா? கொஞ்சம் பலவீனத்தினுடைய தலையை வைத்துக் கொள்வீர்களா? ஐந்து அல்ல, அறிவின்மை என்ற ஆறாவது தலையைக் காண்பிக்கின்றார்கள் அல்லவா, அதை வைப்பீர்களா? நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள மனதின் விமானத்தில் பறக்கக்கூடிய மதுபனில் வசிக்கக்கூடிய அவ்யக்த ரூபத்தை தரித்திருக்கக்கூடிய ஆத்மாக்களுக்கு மற்றும் கூடவே சங்கல்பத்தின் விமானம் மூலம் மதுபனிற்கு வந்தடையக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு மற்றும் நாலாபுறங்களிலும் உள்ள சர்வ சிரேஷ்ட சினேகி, சினேகத்தில் தியாகம் செய்து பாக்கியத்தைப் பெறுவதற்கான சிரேஷ்ட சங்கல்பம் செய்யக்கூடிய ஆத்மாக்களுக்கு, சதா ஒன் சங்கல்பத்தை பிரத்யட்ச வாழ்வில் கொண்டு வரக்கூடிய தந்தைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய ஆத்மாக் களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் வெவ்வேறு இடத்திலுள்ள பாரத தேசத்தினுடைய ஒவ்வொருவருக்கும் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தைக்கும் பெயர் சகிதமாக விசேஷத்தன்மை நிறைந்த அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

வரதானம்:

பயிற்சி எனும் எக்சர்சைஸ் மூலம் சூட்சும சக்திகளை வாழ்க்கையில் நிறைக்கக்கூடிய சக்தி சம்பன்னமானவர் ஆகுக.

பிரம்மா தாய்க்கு குழந்தைகளிடத்தில் ஆன்மிகப் பற்றுதல் உள்ளது. ஆகையினால், சூட்சுமமான அன்பான அழைப்பினால் குழந்தைகளுடைய சிறப்பான குழுவை வதனத்தில் எமர்ஜ் செய்து சக்திகளின் சத்துணவை ஊட்டிவிடுகின்றார். எவ்வாறு இங்கே நெய் குடிக்க வைத்தாரோ மற்றும் கூடவே எக்சர்சைஸ் செய்ய வைத்தாரோ, அதுபோன்று வதனத்தில் கூட நெய் குடிக்க வைக்கின்றார் அதாவது சூட்சம சக்திகளின் பொருட்களைக் கொடுக்கின்றார் மற்றும் பயிற்சியினுடைய எக்சர்சைஸ் கூட செய்விக்கின்றார். மூன்று உலகங்களுக்கும் ஓட்டப் பந்தயம் செய்ய வைக்கின்றார், இதன் மூலம் விசேஷ உபசரிப்பை வாழ்வில் நிறைத்து விட வேண்டும் மற்றும் அனைத்து குழந்தைகளும் சக்தி சம்பன்னமானவர் ஆகி விடவேண்டும்.

சுலோகன்:

சுயமரியாதையில் நிலைத்திருக்கக் கூடிய ஆத்மா, பிறருக்கும் கூட மரியாதை கொடுத்து முன்னேற்றுகின்றார்கள்.

 Download PDF

 

Post a Comment

0 Comments