01-05-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
தன்னுடைய முன்னேற்றத்திற்காக
அமிர்த வேளையில்
எழுந்து தந்தையை
நினைவு செய்யுங்கள்,
அதிகாலை நேரம்
வருமானம் சேகரிக்க
மிக மிக
உகந்த நேரமாகும்.
கேள்வி:
சதா பாதுகாப்பாக
இருப்பதற்கு ஆதாரம் என்ன? சதா பாதுகாப்புடன்
இருக்கக் கூடியவர்கள்
என்று யாரைக் கூறலாம்?
பதில்:
தந்தையின் ஸ்ரீமத் மட்டுமே சதா பாதுகாப்பானவர்களாக ஆக்குகின்றது. ஒருபொழுதும்
எந்த துக்கமும், கஷ்டமும் ஏற்படாது. குழந்தைகளாகிய
உங்களுக்கு எந்த நஷ்டமும் (மனக்கஷ்டம்) ஏற்பட முடியாத அளவிற்கு அதிர்ஷ்டசாலிகளாக
ஆகின்றீர்கள். நோயற்ற சரீரமுடையவர்களாக ஆகிவிடுவீர்கள். நீங்கள் தங்களது அதிஷ்டத்திற்கான மகிமையைப் பாடிக்கொண்டே இருங்கள். எழுந்தாலும்,
அமர்ந்தாலும் தந்தையின் நினைவில் இருக்கக் கூடியவர்களே
அதிஷ்டசாலியான குழந்தைகள். அவர்களையே சதா பாதுகாப்பானவர்கள் என்று கூறலாம்.
பாடல்: இரவு பயணிகளே .............
இனிமையிலும் இனிமையான,
முயற்சியாளர்களாக உள்ள குழந்தைகள் வரிசைக் கிரமமாக இந்த பாட்டின் பொருளை சுயம் அறிந்திருப்பீர்கள். யார் யாத்திரையில் இருக்கின்றார்களோ அவர்களே யதார்த்தமான பொருளை புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது இந்த யாத்திரையானது இரவில் நடக்கின்றது,
மற்ற உலகீய யாத்திரைகள் பகலில் நடைபெறுகின்றன. அமர்நாத்,
பத்ரீநாத்திற்கு செல்கின்றனர் எனில் பகலில் யாத்திரை செய்து இரவில் தூங்கி விடுகின்றனர். குழந்தைகளாகிய உங்களது யாத்திரையானது இரவில் நடை பெறுகின்றது. பகலில் நீங்கள் சரீர நிர்வாகத்திற்காக காரியம் செய்ய வேண்டி யிருக்கின்றது. வேலைக்குச் செல்கின்றீர்கள், தாய்மார்கள் வீட்டை கவனிக்கின்றனர். மிக அதிகமான முன்னேற்றம் இரவில் ஏற்படுகின்றது. அந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் தூங்கியிருப்பார்கள். நீங்கள் அந்த நேரத்தில் மிக நல்ல யாத்திரை செய்ய முடியும்.
பக்தர் களும் அதிகாலையில் அமிர்தவேளையில் நினைவில் இருக்கின்றனர். குழந்தைகள் சுய முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்று நினைக் கின்றீர்களெனில் தூக்கத்தை வென்றவர் களாக ஆகுங்கள் என்று தந்தை அறிவுரை கூறுகின்றார். 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பும் கூறியிருந்தார். பகலில் தூங்கினாலும் பரவாயில்லை.
"சீக்கிரமாக தூங்கி சீக்கிரமாக எழுந்து கொள்ள வேண்டும் என்ற கதையும் உள்ளது. இந்த குணமானது மனிதர்களை உயர்ந்தவர்களாக ஆக்குகின்றது.
நீங்கள் எவ்வளவு உயர்ந்த செல்வந்தர்களாக ஆகின்றீர்கள்! உங்களுக்கு ஒருபொழுதும் பணக் கஷ்டம் இருக்காது.
உங்களுக்கு 21 பிறவிகளுக்கு சிவாலயத்திற்கான ஆஸ்தி கிடைத்து விடுகின்றது.
இங்கு நீங்கள் பல பிறவிகளாக முயற்சி செய்கின்றீர்கள். மேலும் இப்போதைய உங்களது முயற்சியானது
21 பிறவிகளுக்கானதாக ஆகிவிடுகின்றது. அதிசயமல்லவா! இவ்வாறு முயற்சி செய்விக்கக் கூடியவர்கள் வேறு யாரும் கிடையாது.
அழிவற்ற தந்தை அழிவற்ற முயற்சி செய்விக்கின்றார். இங்கு பணத்திற்காக செய்யாதது என்ன இருக்கின்றது
- தந்தை குழந்தையை,
குழந்தை தந்தையை கொன்று விடுகின்றனர்.
நீங்கள் இப்பொழுது அழிவற்ற தந்தையிடமிருந்து அழிவற்ற ஆஸ்தியடைய வேண்டுமெனில் அழிவற்ற தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும்.
வேறு எந்த கடினமும் கிடையாது.
இரண்டு வார்த்தைகள் மட்டும் போதும்.
இதனை மகா மந்திரம் என்றும் கூறுகின்றோம். இந்த இரண்டு வார்த்தைகளை நினைவு செய்வதன் மூலம் உங்களுக்கு இராஜ்ய திலகம்
(இராஜ்ய அதிகாரம்)
கிடைத்து விடுகின்றது.
இப்பொழுது இந்த
(தந்தை மற்றும் ஆஸ்தி) நினைவில் பலம் இருக்கின்றது.
எந்தளவு யார் நினைவு செய்கின்றார்களோ அவ்வளவு பலன்!
யோகா மற்றும் ஞானம் இதன் அடிப்படை. சாஸ்திரங்கள் போன்ற ஞான விசயங்கள் இங்கு கிடையாது. இரண்டு வார்த்தைகளை நினைவு செய்வதற்கு நேரம் இல்லை என்று கூறுகின்றனர். என்னால் நினைவு செய்ய முடியவில்லை, அடிக்கடி மறந்து விடுகின்றது என்று கூறுகின்றனர்.
இரண்டு வார்த்தைக் கான யாத்திரை செய்ய முடியாதா!
நீங்கள் பாட்டு,
கவிதை, உரையாடல்
(டயலாக்) போன்ற வற்றை உருவாக்கு கின்றீர்கள், நினைவு செய்கின்றீர்கள், உண்மையில் இவை யனைவற்றிற்கும் இங்கு அவசியமில்லை.
இங்கு அமைதியாக இருக்க வேண்டும்.
உங்களால் விதை மற்றும் மரத்தின் ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியாதா?
விதையை கைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் முழு மரமும் எதிரில் வந்து விடும்.
இதில் நான்கு யுகம் மற்றும் நான்கு வர்ணங்கள் உள்ளன. இவையனைத்தும் புத்தியில் கொண்டு வர வேண்டும்.
தாமதம் ஏற்படாது.
விநாடியில் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைத்து விடுகின்றது. நினைவில் மட்டும் இருக்க வேண்டும். விநாடியில் சாட்சாத்கார் செய்விக்கப்படுகின்றது. அந்த நேரத்தில் சொர்க்கத்தில் அல்லது கிருஷ்ண புரியில் இருப்பது போன்று தோன்றுகின்றது. இரண்டு விசயங்களை மட்டும் நினைவு செய்ய வேண்டும்
- ஒன்று தந்தையின் நினைவு, இரண்டா வதாக மனிதனிலிருந்து தேவதையாக ஆகக் கூடிய இந்த உயர்ந்த ஞானம்.
தேவதைகள் தூய்மையாக இருப்பார்கள். படிப்பு எப்பொழுதும் பிரம்மச்சரிய காலத்தில் படிக்கின்றனர். படித்து விட்டு வீட்டை கவனிப்பதற்கான தகுதி வரும்பொழுது திருமணம் செய்து வைக்கின்றனர். தனது வீட்டிலுள்ளவர்களை படைப்பவர் கவனிப்பார். ஆகையால் சுய வருமானம் வேண்டுமல்லவா! ஆக பிரம்மச்சரியத்துடன் இருக்கின்றபொழுது தான் வருமானம் செய் கின்றனர்.
இன்றைய நாட்களில் பணப்பசியுள்ளவர்களாக ஆகி விட்டனர். சிறிது லாபம் கிடைத்ததும் பிறகு வேறு உயர் பாடங்களைக்
(வருமானத்திற்காக) கற்கின்றனர்.
இப்பொழுது தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே!
இந்த கோர்ஸ் மிகவும் எளிமையானதாகும். இரவு விழித்திருந்து ஸ்ரீமத்படி பயிற்சி செய்யுங்கள். இரவில் புத்தி மூலம் யாத்திரை செய்வது மிகவும் எளிதாகும்.
மேலும் அதிக உதவியும் கிடைக்கும்.
இரண்டு மூன்று மணிக்கு அமிர்த வேளை என்று கூறப்படுகின்றது. அதிகாலையில் எழுந்து சுயதரிசனச் சக்கரத்தைச் சுற்ற வேண்டும். இது புத்திக்கான வேலையாகும்.
நிரந்தரமாக என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும் என்பது தந்தையின் கட்டளையாகும். இல்லை யெனில் நாயகிகளாகிய உங்களை எப்படி அழைத்துச் செல்ல முடியும்? நாயகிகளாகிய நீங்கள் அனைவரும் தூய்மை இல்லாதவர்களாக இருக்கின்றீர்கள். உங்கள் அனைவரின் இறக்கைகளும் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. இப்பொழுது நினைவு செய்தால் கூட போதும் தூய்மையாகி விடுவீர்கள். அதிகாலையில் எழுந்திருக்கும் முயற்சி செய்யுங்கள். பகலில் நினைவு நிலைத்திருக்காவிட்டாலும் இரவில் முயற்சி செய்வது எளியதாகும், மேலும் தந்தையின் உதவியும் அதிகமாகக் கிடைக்கும்.
முக்கியமானது நினைவாகும்.
நான் ஆத்மா,
பரம்பிதா பரமாத்மா எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக் கின்றீர்கள். அவரிடமிருந்து கற்க வேண்டும்.
அவர் தந்தையாகவும் இருக்கின்றார், அவருடையவராக ஆக வேண்டும்.
நாம் ஆத்மாக்கள்,
சிவபாபாவிடத்தில் வந்திருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஆத்மா பரமாத்மாவை பிரிந்து அதிக காலம்
...... ஜீவாத்மாக்கள் வந்து தந்தையிடத்தில் சந்திக்கின்றன. ஆக பரமாத்மாவும் ஜீவாத்மாவாக ஆக
(பிரம்மாவின் உட-ல்) வேண்டியிருக்கின்றது. அவரோ சுப்ரீம்
(மிக மேலான)
ஆத்மா வாக இருக்கின்றார். ஆத்மா,
பரமாத்மாவின் ரூபம் ஒன்று தான்.
நட்சத்திரம் ஜொலிப்பது போன்று, ஆத்மாவில்
84 பிறவிகளுக்கான பாகம் நிறைந்திருக்கின்றது. நானும் நடிகனாக இருக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். நானும் நாடகத்தின் பந்தனத்தில் கட்டுப் பட்டிருக்கின்றேன். ஒவ்வொரு கல்பத்தின் சங்கம யுகத்தைத் தவிர வேறு எப்போதும் வரமுடியாது என்பதை மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. ஆபத்துக்கள் போன்றவைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அனைவரும் தூய்மையில்லாதவர்களாக ஆகிவிடும் பொழுது தான் நான் வருகின்றேன்.
நான் தான் புது உலகை படைக்கக் கூடியவனாக இருக்கின்றேன். தூய்மை யில்லாத உலகில் தான் வருகின்றேன்.
தூய்மையில்லாமல் ஆவது முதலில் ஆத்மாவே.
நான் ஆத்மா முதலில் தூய்மையாக இருந்தேன், இப்பொழுது தூய்மை இல்லாமல் ஆகியிருக்கின்றேன் என்பதை ஆத்மா அறிந்திருக்கின்றது. இந்த கல்வியானது உங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. ஆசிரியரின் எதிரில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும்.
இந்த கல்வியானது முதன் முதலில் உங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. இந்த
5 விகாரங்களை வெல்லுங்கள்.
யோக அக்னியின் மூலம் விகர்மங்களை அழியுங்கள். இந்த விஷம் (விகாரம்)
உங்களை சுடுகாடாக ஆக்கிவிட்டது. ஞான அமிர்தத்தின் மூலம் நீங்கள் தூய்மையாகி விடுகின்றீர்கள்.
தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வது மிகவும் எளிதாகும். பாபா,
தாரணை ஏற்படுவதில்லை, மூத்த சகோதரிகளைப் போன்று புரிய வைக்க முடிவதில்லை என்று சில சகோதரிகள் கூறுகின்றனர்.
தந்தை கூறுகின்றார்:
குழந்தைகளே! இது ஒவ்வொருவரின் கர்ம கணக்கு-வழக்காகும்.
சிலர் 25-30 ஆண்டுகள் இருந்தும் தாரணை செய்ய முடிவதில்லை. ஆத்மாக்களாகிய உங்களுக்கு பரமாத்மா தந்தையாக இருக்கின்றார். அவர் சொர்க்கத்தை படைக்கக் கூடியவராக இருக்கின்றார். தந்தை சொர்க்கத்திற்கான ஆஸ்தியைக் கொடுப் பதற்காக வந்திருக்கின்றார். நீங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள். குழந்தைகளையும் புத்தி சாலிகளாக ஆக்க வேண்டும்.
தங்களது குழந்தைகளின் மீது முதலில் நீங்கள் கருணை காண்பிக்க வேண்டும்.
நான் இந்த நேரத்தில் எனது மிக அன்பான பரம்பிதா பரமாத்மாவின் எதிரில் அமர்ந்திருக்கின்றேன் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் நினைக்கின்றீர்கள். முந்தைய கல்பத்திலும் நாம் நிராகார தந்தையிடமிருந்து சொர்க்கத்திற்கான எல்லையற்ற ஆஸ்தி அடைந்திருந்தோம். நானும் இந்த சரீரத்தை கடனாக எடுக்க வேண்டியிருக்கின்றது என்று தந்தை கூறுகின்றார். வாடகை வீட்டில் அமர்ந்திருக்கின்றேன். தனக்கென்று இல்லாததால் கண்டிப்பாக வாடகைக்கு எடுப்பார்.
இந்த ரதத்தில் தான் கல்ப கல்பத்திற்கு சாரதியாக ஆகின்றார். ரதத்தில் சாரதியை பார்க்கின்றார்களல்லவா! முன்பு கீதை படிப்பதன் மூலம் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அர்ஜுனனின் குதிரையில் அமர்ந்திருப்பதாக காண்பித்திருக்கின்றனர். உங்களது தந்தை சாரதியாக இருக்கின்றார். தந்தை யாகிய என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் குறிப்பு
(சார்ட்) வையுங்கள் என்று குழந்தை களுக்குக் கூறுகின்றார்.
இவ்வாறு 21 பிறவிகளுக்கு சுகம் கொடுக்கும் நாயகனை ஏன் நினைவு செய்யக் கூடாது? ஆனால் இது ரகசியமானதாக இருக்கின்றது. இப்பொழுது தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து, பிறகு தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டு மென்று தந்தை கூறுகின்றார். ஆனால் இதில் தான் மாயை மிகவும் தொந்தரவு செய்கின்றது.
அதுவும் குறைந்த தந்திரசா- கிடையாது.
நல்ல நல்ல குழந்தைகளையும் வென்று விடு கின்றது.
பாபா சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார், மாயை சண்டாளனாகக் கூடிய பிறப்பில் கொண்டு செல்கின்றது.
ஏனெனில் ஸ்ரீமத்தை விட்டு விடுகின்றனர்.
நமக்கு பகவான் கற்பிக்கின்றார் என்று இங்கு குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் இறை மாணவர்களல்லவா! மற்ற கோர்ஸ் எடுத்தாலும் ஆசிரியரையும் நினைவு செய்வார்கள்.
தந்தை கூறுகின்றார்
- குடும்ப விவகாரத்தில் இருங்கள், ஆனால் சதா சுகமானவர்களாக ஆவதற்காக கூடவே பிற கோர்ஸையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு அளவற்ற செல்வத்தைக் கொடுக்கின்றேன். அதன் மூலம் நீங்கள்
21 பிறவிகளுக்கு ஒரு பொழுதும் துக்கத்தைப் பார்க்கமாட்டீர்கள். உங்களைப் போன்ற புத்திசாலிகள் உலகில் வேறு யாரும் கிடையாது.
ஜனாதிபதி போன்றவர்களை எவ்வளவு மகிமைகள் செய்கின்றனர்! ஆனால் நீங்கள் மிக அதிசயமான, ரகசியமான மிக உயர்ந்த அதிகாரம் உடையவர்களாக இருக்கின்றீர்கள். உங்களைப் போன்ற ஞானம் நிறைந்தவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது.
பாரதத்தை நாம் சொர்க்கமாக்கி 21 பிறவிகளுக்கு சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஜெகதம்பாவிற்கு எவ்வளவு உயர்ந்த பிராப்தி இருக்கின்றது!
(பயன் அடைந்துள்ளார்). சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று அவரும் இந்த மகா மந்திரத்தையே கொடுக் கின்றார்.
தந்தை நேராகவே கூறுகின்றார் - செல்லமான குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள்.
இந்த யாத்திரையை மறந்து விடாதீர்கள்.
நேரத்தை வீணாக்காதீர்கள். இது மிகவும் உயர்ந்த வருமானமாகும்.
புத்தியின் தொடர்பை அங்கு செலுத்த வேண்டும். நாம் சிவபாபாவின் எதிரில் இருக்கின்றோம். தந்தையின் வீட்டிற்கு வந்திருக்கின்றோம். இப்பொழுது நீங்கள் ஹரிதுவாரில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஹரியாகிய பரமாத்மா சுயம் அமர்ந்திருக்கின்றார். அங்கு தண்ணீர் இருக்கின்றது.
இது உண்மையிலும் உண்மையான ஹரியின் வாசலாக இருக்கின்றது.
ஹர, ஹர என்றால் அனைத்து துக்கங்களையும் போக்கக் கூடியவர். துக்கங்களைப் போக்கி சுகம் கொடுக்கக் கூடியவர் இங்கு உங்கள் முன்பு அமர்ந்திருக்கின்றார். பக்தர்கள் சென்று கங்கை கரையில் அமர்கின்றனர்.
கங்கையின் நீர் வாயில் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். யாராவது இறந்து விட்டால் கங்கை நீரை குடிக்க வைக்கின்றனர். இப்பொழுது கங்கை பதீத பாவனி (தூய்மைபடுத்தக் கூடியது) கிடையாது.
பதீத பாவனனாக சிவபாபா இருக்கின்றார். ஒவ்வொருவரும் அந்த சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும்.
அப்பொழுது தான் இறுதி நேர மனநிலைக் கேற்ப எதிர்காலமும் (நிலை)
அமையும். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று கடைசியில் அமர்ந்து யாராவது புரிய வைப்பார்கள் என்பது கிடையாது.
கடைசியில் தானாகவே சிவபாபாவின் நினைவிலிருந்து சரீரத்தை விட வேண்டும். இப்பொழுது நாம் சிவபாபாவுடன் முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும்.
சத்யுகத்தை ஜீவன் முக்திதாமம் என்று கூறப்படுகின்றது. தாமம் என்றால் இருக்கும் இருப்பிடத்தை குறிப்பதாகும். நிர்வாண் தாமத்தில் நிராகார ஆத்மாக்கள் பிரம்ம தத்துவத்தில் இருக்கின்றன. இப்பொழுது நீங்கள் வந்து ஹரியின் வீட்டில் அமர்ந்திருக்கின்றீர்கள். துக்கத்தை நீக்கக் கூடியவர் ஒரே ஒருவரே.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு சிவபாபா மற்றும் அவரது இனிய வீட்டின் நினைவு வருகின்றது.
நம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். இப்பொழுது சிவபாபாவின் இனிய வீட்டை நினைவு செய்ய வேண்டும். இங்கு யாரும் இனிமையானவர்களாக கிடையாது.
எல்லையற்ற இராஜ்யம் அடைய வேண்டுமெனில் இரவு விழித்திருந்து யாத்திரை செய்யுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்கு கூறுகின்றார்.
மிகவும் முடிவில்லாத காரிருளான இரவில் தான் நான் வருகின்றேன். பிரம்மாவின் இரவு முடிவடைந்து பகல் ஏற்பட வேண்டும். எல்லையற்ற இரவு மற்றும் எல்லையற்ற பகலின் சங்கமத்தில் நான் வரு கின்றேன்.
ஆக நீங்களும் இரவில் தூக்கத்தை வென்றவர்களாகி நினைவு செய்வதற்கான பயிற்சி செய்யுங்கள். அதிகாலை
2-3 மணி காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படு கின்றது. பிரம்மாவின் மூலமாக தந்தை கல்வி கொடுக்கின்றார். இரவு விழித்திருந்து என்னை நினைவு செய்தால் பக்காவாக ஆகிவிடு வீர்கள்.
மாயை அதிகமாக தொந்தரவு செய்யும்,
இருப்பினும் முயற்சி செய்யுங்கள். இதில் புத்திக்கான முயற்சி இருக்கின்றது. எழுந்தாலும்,
அமர்ந்தாலும், நடந்தாலும் நினைவில் இருக்க வேண்டும். இரவு பயணிகளே! ஒரு பொழுதும் களைப்படைய வேண்டாம் என்று தந்தை கூறுகின்றார்.
இரவில் (நினைவால்)
அதிகமான ஆனந்தம் ஏற்படும். பிறகு அந்த போதையானது பகலிலும் இருக்கும்.
ஒன்று தனது தந்தையை நினைவு செய்யுங்கள், மற்றும் தனது அதிர்ஷ்டத்தின் மகிமை செய்யுங்கள்.
மற்ற அனைவரின் அதிர்ஷ்டமும் தூங்கிவிட்டது. உங்களது அதிர்ஷ்டம் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கின்றது. மற்றவர்களுடையது தூங்கிக் கொண்டிருக்கின்றது. பணம் சம்பாதிப்பதில் யாருடைய புத்தி இந்த நேரத்தில் ஈடுபட்டிருக்கின்றதோ அவர்களது அதிர்ஷ்டம் தூங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உண்மையான உங்களது அதிர்ஷ்டம் இப்பொழுது விழித்துக் கொண்டு விட்டது. வயிறு அதிகமாக சாப்பிடுவதில்லை. காட்டு வாசிகள் என்ன சாப்பிடுகின்றனர்? மிளகாய் மற்றும் மாவை ஒன்றாக சேர்த்து சாப்பாத்தி செய்து சாப்பிடுகின்றனர். இங்கு உங்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றது. நீங்கள் மிகவும் சாதாரணமாக இருக்க வேண்டும். மிகவும் செல்வந்தர்களாகவோ, மிகவும் ஏழையாகவோ இருக்கக் கூடாது. இப்பொழுது தந்தை கூறுகின்றார்
- ஏ, செல்லமான குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள்.
நான் உங்களை கண்ணுக்குள் அமர்த்தி அழைத்துச் செல்கின்றேன்.
எனது கண்ணின் மணிகளே! கண்ணின் மணி யாக இருக்கும் குழந்தைகள் எப்பொழுதும் அன்பு செலுத்தப்படுகின்றனர். ஸ்ரீமத் படி நடப்பதன் மூலமாக சதா பாதுகாப்புடன் இருப்பீர்கள்.
சதா பாதுகாப்புடன் இருப்பதன் பொருளும் மிகவும் உயர்ந்ததாகும். உங்களுக்கு துன்பம் ஏற்படாது, எந்த கஷ்டமும் வராது.
அந்த அளவிற்கு உங்களை சதா பாதுகாப்பானவர்களாக ஆக்குகின்றேன். நோயற்ற உடல் இருக்கும். காலனுக்கும் சக்தி இருக்காது.
நல்ல முறையில் நினைவு செய்தால் தந்தையின் உதவி கிடைக்கும். கல்பத்திற்கு முன்பு முயற்சி செய்து பிராப்தியை உருவாக்கி யவர்களே இப்பொழுதும் உருவாக்கிக்கொள்வர். சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் - இவர் தன்னை காப்பீடு (இன்சூரன்ஸ்)
செய்து கொள்கிறாரா?
பாபா பக்தி மார்க்கத்திலும் காப்பீட்டின் காந்தமாக (ஒய்ள்ன்ழ்ங் ஙஹஞ்ய்ங்ற்) இருக்கிறார்.
ஈஸ்வரனின் பெயரால் தானம் செய்கின்றனர்.
ஏழைகளுக்கு ரகசியமான முறையில் தானம் செய்கின்றனர். யாருக்காவது திருமணம் செய்விக்க வேண்டுமெனில் ரகசியமான முறையில் கொடுத்து விட்டு வருகின்றனர்.
ரகசியமாய் செய்யப்பட்ட பலனும் அவ்வாறே கிடைக்கும். அதை பிரபலப் படுத்தி,
வெளிப்படுத்து வதன் மூலம் அதன் சக்தி பாதியாக குறைந்து விடுகின்றது.
காந்தம் என்று தந்தையை கூறுகின்றோம்,
நீங்கள் காப்பீடு செய்கின்றீர்கள். யார்,
எவ்வாறு தன்னை காப்பீடு செய்கின்றார்களோ அவ்வாறே பலனை அடைவார்கள். பாவம் செய்தால் அதற்கான தண்டனை கிடைத்து விடும். புண்ணியத்திற்கான பலன் நல்லதாக கிடைக்கும். அவர்கள் எல்லைக்குட்பட்ட கருணையுள்ள வள்ளல்களாக இருப்பர்.
வருமானத்தில் 8 அணா,
4 அணாவை ஒதுக்கி வைக்கின்றனர். இப்பொழுது நீங்கள் முழுமையான தன் சகோதர இனத்தவருக்கு இரக்கம் காட்டும் வள்ளலாக ஆக வேண்டும்.
முழுமையாக காப்பீடு செய்து விட வேண்டும். மம்மாவைப் பாருங்கள், உடல் மற்றும் மனதை மட்டும் காப்பீடு செய்திருந்தார். கன்னிகளிடத்தில் செல்வம் இருப்பதே இல்லை. அவர்கள் இப்படிப் பட்ட எண்ணங்களை (நாம் பணத்தால் சேவை செய்யவில்லையே) எண்ணத் தேவை யில்லை.
அவர்கள் பிறகு உடலாலும், மனதாலும் சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் கன்னியர்கள் மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கின்றனர். கன்னியர்கள் நம்பர் ஒன்னாக வந்து விடுகின்றனர்.
பாபா அதர்குமாராக இருந்தார். ஆம்,
சில குமாரர்கள் அம்மாதிரியும் வெளிப்படுகின்றனர். சுயம்வரம் செய்து தூய்மையாக இருந்து வாழ்ந்து காண்பித்தால் ஆஹா, சௌபாக்கியம்.
முழுமையாக சமர்ப்பணமாகியும் இருக்க வேண்டும்.
அவர்கள் மிகவும் நல்ல பதவியை அடைய முடியும்.
கர்மங்களின் கணக்குகளையும் இங்கு தான் முடிக்க வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார்.
மம்மா, பாபாவும் கர்ம கணக்குகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. மீதமிருக்கும் கணக்கு-வழக்குகளை இங்கேயே முடிக்க வேண்டும்.
ஈஸ்வர குழந்தை ஆன பின்பு ஏன் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று நினைக்கக் கூடாது.
கர்ம கணக்குகளை கண்டிப்பாக இங்கே தான் முடிக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தையான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1)
புத்தியின் தொடர்பு மூலமாக உண்மையான யாத்திரை செய்ய வேண்டும். அழியக்கூடிய செல்வத்தின் பின்னால் சென்று தனது அதிர்ஷ்டத்தை இழந்து விடக் கூடாது.
உண்மையான வருமானம் செய்ய வேண்டும்.
2)
உடல், மனம்,
பொருள் மூலமாக முழுமையாக (இரக்க மனமுள்ள) மகாதானியாக ஆக வேண்டும்.
தன்னிடமுள்ள அனைத்தையும்
21 பிறவிகளுக்காக காப்பீடு செய்து விட வேண்டும்.
வரதானம்:
தெய்வீக புத்தியின் பலத்தின் மூலம் பரமாத்மாவின்
டச்சிங் (தூண்டுதலின்)
அனுபவம் செய்யக்கூடிய
மாஸ்டர் சர்வசக்திவான்
ஆகுக.
தெய்வீக புத்தியை புத்தியின் பலம் என்று சொல்லப்படுகிறது. இந்த புத்தியின் பலத்தின் தான் பாபாவிடமிருந்து
அனைத்து சக்திகளையும்
கேட்ச் செய்து (பெற்றுக் கொண்டு) மாஸ்டர் சர்வசக்திவான் ஆகிறார்கள். எப்படி விஞ்ஞானிகளிக்கு புத்தியின் பலம் இருக்கிறது, ஆகையால் இந்த உலகத்தை பற்றிய, இயற்கையை பற்றி சிந்தனை செய்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் தெய்வீக புத்தியின் பலம் இருக்கிறது. அது பரமாத்மாவின்
பிராப்தியை அனுபவம் செய்ய வைக்கிறது. தெய்வீக புத்தியின் மூலம் ஒவ்வொரு கர்மத்திலும் பரமாத்மாவின் தூய்மையான தொடுதலை அனுபவம் செய்து வெற்றியை அனுபவம் செய்ய முடியும். தெய்வீக புத்தியின் பலத்தினால் மாயாவை போரில் தோல்வியை அடைய செய்ய முடியும்.
சுலோகன்:
மாஸ்டர் ஞான சூரியன் ஆகி அனைவருக்கும்
ஞானத்தின்
லைட் மற்றும் மைட் தரக்கூடியவர் தான் உண்மையான சேவாதாரி ஆவார்.
குறிப்பு: இந்த மாதத்தின் அனைத்து முரளிகளும்
(ஈஸ்வரிய மகாவாக்கியம்)
நிராகார் பரமாத்மா சிவன் பிரம்மாவின் தாமரை (தூய்மையான)
வாயின் மூலம் தனது மகாவாக்கியங்கள் அதாவது பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரிகளின்
18.01.1969 க்கு முன்னதாகவே உச்சரிக்கப்பட்டது. இதை பிரம்மா குமாரிகள் மட்டும் தான் தகுதி வாய்ந்த சகோதரிகள் மூலம் நியமபடி நடக்கும் பி.கே மாணவர்கள் கேட்பதற்காக மட்டும்.
0 Comments