22-04-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
தனது சுபாவத்தை
மிகவும் இனிமையானதாகவும்
மற்றும் அமைதியானதாகவும்
ஆக்குங்கள். இவர்கள்
தேவதைகளைப்போன்று உள்ளனர்
என்று கூறும்
அளவிற்கு பேச்சும்,
நடத்தையும் இருக்க
வேண்டும்
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எந்த சான்றிதழை சங்கம யுகத்தில் தந்தையிடமிருந்து பெற வேண்டும்?
பதில்:
தனது தெய்வீக நடத்தைகளுக்கான சான்றிதழ். தந்தை எந்த அளவிற்கு அலங்கரிக் கின்றாரோ, குழந்தைகளுக்கு சேவை செய்கின்றாரோ அதற்கு கண்டிப்பாக கைமாறு செய்ய வேண்டும். தந்தைக்கு உதவியாளர் களாக ஆக வேண்டும். யாருடைய சுபாவமானது தேவதை களைப் போன்று இருக்கின்றதோ அவர்களே உதவி யாளர்கள். ஈஸ்வரிய சேவையில் ஒரு பொழுதும் களைப்படையக் கூடாது. யக்ஞ சேவையின் மீது அன்பு இருக்க வேண்டும். அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு தந்தையும் பரிசு கொடுக்கின்றார், உபசரிக்கின்றார்.
அவ்வாறு சேவை செய்யக் கூடிய, அன்பான குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து தந்தை மகிழ்ச்சி அடைகின்றார்.
பாடல்: உன்னை அழைப்பதற்கு உள்ளம் விரும்புகின்றது ........
ஓம் சாந்தி. பக்தர்களுக்காக பகவானின் மகாவாக்கியம். பக்தர்கள் எதிரில் இருக்கின்றனர் மற்றும் பகவான் அமர்ந்து நமக்கு ஞானப் பாட்டைக் கூறுகின்றார் அல்லது ஞான நடனம் செய்விக்கின்றார் என்பதை பக்தர்கள் அறிந்திருக்கின்றனர். சரி, இதன் மூலமாக பிறகு என்ன ஆகும்? அவர்கள் தேவதைப் போன்று சதா சுகமானவர்களாகவும் மற்றும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள் என்று கூறுவர். பகவானுக்கு மட்டுமே எல்லையற்ற தந்தை அல்லது உலகை படைக்கக் கூடியவர் என்று கூறப்படுகின்றது. அவர் சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர். உலகம் முதன் முதலில் சொர்க்கமாக இருந்தது, பிறகு நரகமாக ஆகின்றது. ஆக இப்பொழுது நரகமாக இருக்கின்றது. மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். பக்தர்கள் பகவானை நினைவு செய்கின்றனர். தந்தை நமக்காக சொர்க்கம் என்ற பரிசைக் கொண்டு வருவார் என்று ஆத்மா நினைக்கின்றது. அவரே படைக்கக்கூடிய வராக இருக்கின்றார். சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக இராஜயோகத்தைக் கற்பிக் கின்றார். தந்தையே உலக எஜமானர் என்பதை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். உலகைப் படைக்கக் கூடியவர் புத்தியில் வரும் பொழுது பரம்பிதா பரமாத்மா புது உலகைப் படைக்கின்றார் என்பது புரிய வைக்கப்படுகின்றது. இந்த உலகமானது மனிதர்கள் மட்டுமே இருக்கக் கூடிய இடமாகும். தந்தை எல்லையற்ற எஜமானனாக இருக்கின்றாரெனில் கண்டிப்பாக எல்லையற்ற பெரிய உலகையே படைப்பார். உங்களுக்காக சிறிய வீட்டை உருவாக்க மாட்டார். அதனை லௌகீக தந்தை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார். இவர் புது உலகை உருவாக்குகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு உலகமே வீடாகும், அதாவது நடிப்பு நடிக்கக் கூடிய இடமாகும். நாம் பாரதவாசிகள் என்றால் நமக்கு பாரதம் வீடாகி விட்ட தல்லவா என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது பாரதவாசிகள் தங்களை எல்லைக்குட்பட்ட எஜமான் என்று நினைக் கின்றனர். ஆனால் பாரத வாசிகள் எல்லையற்ற உலகவாசிகளாக இருந்தனர். தந்தை மிகவும் நல்ல முறையில் புரிய வைக்கின்றார். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றீர்கள். நன்றியும் கூறுவதில்லை. எல்லை யற்ற தந்தை வந்து எல்லையற்ற உலகம் அதாவது வீட்டை உருவாக்கு கின்றார். அது சொர்க்கமாக இருக்கின்றது. எல்லையற்ற நரகத்தை உருவாக்கக் கூடியவராக தந்தை இருக் கின்றார் என்பது கிடையாது. தந்தை வந்து சொர்க்கத்தைப் படைக்கின்றார் மற்றும் அந்த சொர்க்கத்தில் குழந்தைகளை எஜமானர்களாக ஆக்குகின்றார். அதாவது புது உலகம், புது உலகிற்கு எஜமானர்களாக உங்களை ஆக்குகின்றார். இந்த உலகிற்கு எஜமானர்களாக லெட்சுமி, நாராயணன் பாரதத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் வேறு எந்த தர்மமும் இல்லை. பாரதம் மட்டுமே இருந்தது. தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார்! ஆனால் குழந்தை களுக்கு இந்த போதை ஏறுவதில்லை. குழந்தைகள் எல்லைக்குட்பட்ட போதையில் இருக் கின்றனர். ஆத்மாவிற்கு போதை இருக்குமல்லவா! ஆத்மாவிற்கு சரீரம் பெரிதாக ஆகும் பொழுது இந்த கர்மேந்திரியங்களின் மூலம் அனைத்தையும் வர்ணிக்க முடியும். நான் உலகிற்கே எஜமானாக இருக்கின்றேன் அல்லது இன்னாராக இருக்கின்றேன் என்று சிறு குழந்தை கூற முடியாது. இளமைப் பருவம் வரும் பொழுது தான் நான் எஜமானாக இருந்தேன் என்பதை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் சிறியவர்கள் கிடையாது. நீங்கள் பெரியவர்களாக இருக்கின்றீர்கள். தந்தையும் வயோதிக சரீரத்தை எடுத்திருக்கின்றார். தந்தை உலகைப் படைக்கக் கூடியவர் என்பதை புரிந்திருக்கின்றீர்கள். எஜமானாக ஆவதில்லை. வார்த்தைகள் கூறும் பொழுது சில இடங்களில் தவறு ஏற்பட்டுவிடுகின்றது. தந்தை உலகைப் படைக்கக் கூடியவராக இருக் கின்றார். நான் உலகை இராஜ்யம் செய்வதில்லை என்று கூறுகின்றார். முழு உலகையும் படைப்பது நான் ஒருவனே. வார்த்தைக்கு வார்த்தை தெளிவுபடுத்தி புரிய வைக்க வேண்டியிருக்கின்றது. உலகைப் படைக்கக் கூடிய தந்தை நேரடியாக புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். நான் உங்களை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக வந்திருக் கின்றேன். பாரதத்தை மட்டுமே எஜமான் ஆக்குவதற்கு வந்திருக்கின்றேன் என்பது கிடையாது. இந்த நேரத்தில் பாரதத்திற்கு எஜமானர்களாக இருப்பவர்களிடத்தில் அந்த சுகம் கிடையாது. இப்பொழுது அனைத்தும் சுடுகாடாக ஆகப் போகின்றது. இதனையே கடைசி நேரம் என்று கூறப்படுகின்றது. உலகைப் படைக்கக் கூடியவரை கண்டிப்பாக கடவுள் என்று கூறுகின்றோம். அவரே புது உலகைப் படைக்கக் கூடியவராக இருக்கின்றார். புது உலகை சொர்க்கம், பழைய உலகை நரகம் என்று கூறுகின்றோம். குழந்தைகளாகிய உங்களிலும் வரிசைக்கிரமமாக புரிந்து கொள்கின்றீர்கள். ஞானம் குறைவாக இருப்பவர்களிடத்தில் அந்த அளவிற்கு குஷியிருப் பதில்லை. மாயை குஷியுடன் இருக்க விடுவதில்லை. குழந்தைகள் ஆத்ம அபிமானிகளாக ஆவதில்லை. தேகாபிமானம் வந்த பிறகு அனைத்து விகாரங்களும் எதிர்கொள்கின்றது. ஆத்மாக்களாகிய நம் அனைவருக்கும் தந்தையானவர் அவர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். வந்து எங்களுக்கு ஏதாவது கூறுங்கள் என்று பக்தர்கள் அனைவரும் அழைக்கின்றனர். பகவானின் மகாவாக்கியம் என்று எழுதப்பட்டுள்ளது. உங்களை சொர்க்கத் திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக நான் வந்திருக்கின்றேன், உங்களை தகுதியுடையவர் களாக ஆக்குகின்றேன். உங்களுக்கு முழு உலகின் சரித்திர, பூகோளத்தைக் கூறுகின்றேன். இந்த எல்லையற்ற நாடகத்தில் யார், யார் முக்கிய நடிகர்களாக இருக்கின்றனர்? உங்களது புத்தி எல்லையற்றதில் சென்று விடுகின்றது. நாடகத்தில் மூலவதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் அனைத்தும் வந்து விடுகின்றது. உங்களிலும் கூட சிலர் இந்த விசயங்களை நல்ல முறையில் புரிந்திருக்கின்றீர்கள். சிலருக்கு தாரணை ஏற்படுவதில்லை. ஏனெனில் அநேக பிறப்புகளில் பெரிய பாவ ஆத்மாக்களாக இருக்கின்றனர். அந்த சம்ஸ்காரம் இருக்கின்றது. சூடான தோசைக்கல் போன்று இருப்பதால் தாரணை ஏற்படுவதில்லை. அவர்களுக்கும் முன்னேற்றம் ஏற்படுகின்றது. குறைந்ததிலும் குறைந்தது சொர்க்கத்திற்காவது செல்கின்றனர். வேலைக்காரர்களாக ஆகின்றனர். பிரஜைகளாக செல்கின்றனர். முன்னேற்றம் என்பதன் பொருள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார் அல்லவா! மற்றபடி முயற்சியின் படியே பதவி கிடைக்கின்றது. ஒருவேளை தாரணை செய்யவில்லையெனில் சொர்க்கத்திற்குச் செல்வார்கள், ஆனால் வேலைக்காரன், வேலைக்காரி பதவி கிடைக்கும். குழந்தைகளுக்கு எவ்வளவு தான் புரிய வைத்தாலும் சூடான தோசைக்கல்லில் ஊற்றிய தண்ணீரைப் போன்றே இருக்கின்றனர். ஆக அவர்கள் அப்படிப்பட்ட சம்ஸ்காரம் உடையவர்கள் என்று புரிய வைக்கப் படுகின்றது. சந்நியாசிகளும் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கின்றனர் அல்லவா! பிறப்பு எடுப்பார்கள், இருப்பினும் சந்நியாசம் செய்யும் எண்ணம் ஏற்படும். இந்த விசயங்களும் இங்கு புரிய வைக்கப்படுகின்றது. சத்யுகத்தில் விகாரத்திற்கான விசயம் கிடையாது. அங்கு பல பிறப்புகளுக்கு விகாரமற்ற சம்ஸ்காரம் இருக்கும், மாயை இருக்காது. இங்கு குழந்தைகளை விழிப்படையச் செய்வதற்கு அதிகமான முயற்சி செய்கின்றார். சிலர் முற்றிலுமாக கறை படிந்த துணியாகவே இருக்கின்றனர். சிறிது துவைத்தாலே ஒரேயடியாக கிழிந்து விடுகின்றது. சலவை தொழிலாளியும் துணிகளை பத்திரப்படுத்துவார். ஆனால் இற்றுப் போன துணிகளாக இருந்தால் கிழிந்து விடுகின்றன. பிறகு ஆச்சரியத்துடன் ஓடி விடுகின்றனர். தந்தை எவ்வளவு முயற்சி செய்கின்றார்! இராஜயோகத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரே கருணை யுள்ளம் உடையவராக இருந்து அனைவரின் மீதும் கருணை காண்பிக்கின்றார். பாபா கருணை யுள்ளம் உடையவராக இருக்கின்றார். மாயை கருணையற்றதாக இருக்கின்றது. மாயை அனைத்தையும் அழித்து விட்டது. ஆகையால் தான் கல்ப கல்பத்திற்கும் கல்பத்தின் சங்கம யுகத்தில் நான் வருகின்றேன் என்கின்றார். தந்தை பதீத பாவனனாக இருக்கின்றார். பதீத மானவர்களை திரும்ப அழைத்துச் செல்வதற்காகவே வர வேண்டியிருக்கின்றது. திரேதாவில் நான் வந்து பாவனமாக்குமளவிற்கு யாரும் பதீதமானவர்கள் கிடையாது. பகவான் சத்திய மானவராக இருக்கின்றார், அவரே சத்தியத்தைக் கூறுகின்றார்.
உலகைப் படைக்கக் கூடிய சிவபாபா பிரம்மாவின் உடல் மூலமாக நம்மை உலகிற்கே எஜமானர்களாக ஆக்கக் கூடிய முயற்சி செய்விக்கின்றார் என்பதை இப்பொழுது குழந்தை களாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். என்னுடைய முயற்சியை வீணாக்கினால், தனது நடத்தையினால் அதிகமானவர்களை ஏமாற்றினால் பதவி குறைந்து விடும் என்று தந்தை கூறுகின்றார். இவரிடமிருந்து பூதம் நீங்கவில்லை என்று கூறுவார். இவர்கள் தேவதைப் போன்று இருக்கின்றனர் என்று அனைவரும் நினைக்குமளவிற்கு குழந்தைகளின் நடத்தைகள் இருக்க வேண்டும். தேவதைகள் பிரசித்தமானவர்களாக இருக்கின்றனர். இவர்களது சுபாவம் தேவதைகளைப் போன்று உள்ளன என்று கூறுகின்றனர். ஆக மற்றவர்களுடையது அசுரத் தனமானது என்பது புரிந்து கொள்ள வேண்டிய விசயமல்லவா! சில குழந்தைகள் மிகவும் முதல் தரமான தேவதைகளாக, குணங்கள் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். முற்றிலும் இனிமையான, அமைதியான சுபாவம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆக அப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்த்து தந்தையும் மகிழ்ச்சியடைகின்றார். தந்தை நமக்காக கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கின்றார் எனில் நாமும் சேவை செய்ய வேண்டுமென்று குழந்தைகள் நினைப்பர். அப்படிப்பட்ட குழந்தைகள் உள்ளத்தில் அதிகமாக அமர்கின்றனர். சொல்லாமலேயே செய்யக் கூடியவர்கள் தேவதைகள், சொல்லி செய்யக் கூடியவர்கள் மனிதர்கள். சொல்லியும் செய்யா தவர்கள் மனிதர்களைக் காட்டிலும் மிக மோசமானவர்கள். குழந்தைகளே! ஒருவேளை யோகாவில் இல்லையெனில் மாயையின் தூசியில் அழிந்து விடுவீர்கள் என்று பாபாவும் கூறுகின்றார். ஸ்ரீமத் படி நடக்குமாறு பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார். அசுர செயல்களை செய்யாதீர்கள். பேசுவது, நடப்பது மிகவும் இனிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவதைகள் எவ்வளவு இனிமையான சுபாவமுடையவர்களாக இருக்கின்றனர்! பாரதத்தில் இராஜ்யம் செய்தனர், இராஜா இராணியைப் போன்றே மனிதர்களும் தெய்வீக சுபாவமுடையவர் களாக இருந்தனர். சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார் எனில் தந்தைக்கு எவ்வளவு உதவியாளர்களாக ஆக வேண்டும்! சேவையில் சுயமாகவே ஈடுபட வேண்டும். நான் களைப்படைந்து விட்டேன், எனக்கு நேரமில்லை என்று கூறக் கூடாது. தகுந்த நேரத்தில் அனைத்துக் காரியங்கள் செய்வதில் நன்மை இருக்கின்றது. யக்ஞ சேவைக் கான பரிசை சிவபாபா கொடுக்கின்றார். வெளிப்படையாக உபசரிப்பு செய்து விட்டு உள்ளத்தை எடுத்துக்கொள்வார் இந்த பாபா. எல்லையற்ற உள்ளங்களை எடுக்கக் கூடியவர் அந்த பாபா. எல்லையற்ற உள்ளங்களை கொள்ளைக் கொள்ளக் கூடியவர் இவர். குழந்தை களின் தெய்வீக நடத்தைகளைப் பார்க்கும் பொழுது பலியாகி விடுகின்றார். சொல்லாமலேயே சேவையில் தயாராக இருக்கக் கூடியவர்கள் தான் தேவதைகள் என்று கூறப்படுகின்றார்கள். தேவதை களுக்கு எதையும் கூற வேண்டிய அவசியமில்லை. அங்கு அசுர சுபாவம் இருக்காது. இங்கு சில குழந்தைகள் தாய், தந்தையின் வழிப்படி நடக்கவில்லை எனில் தனக்குத் தானாகவே நஷ்டமாக்கிக் கொள்கின்றனர்.
குழந்தைகளுக்கு சேவை செய்வதற்காகவே நான் பரந்தாமத்திலிருந்து வருகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். எனது வழிப்படி நடக்காததால் எத்தனை பேருக்கு துக்கம் கொடுக்கின்றீர் கள்! முந்தைய கல்பத்திலும் இவ்வாறு நடந்திருந்தது. அமிர்தம் குடித்து குடித்து பிறகு பதீதமாகி விடுகின்றனர். லெட்சுமி அமிர்தத்தைப் பருக வைத்தும் அசுரனாகி விட்டதாக கதையும் உள்ளது. ஆக ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கும் முயற்சி செய்யக் கூடாது. இல்லையெனில் முழு இராஜ்ய பாக்கியத்தையும் இழந்து தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆகி விடுவீர்கள். நான் தர்மராஜராகவும் இருக்கின்றேன் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். நேரடியாக இல்லாமல் ஏதாவது செய்தால் எல்லைக்குட்பட்ட அல்பகால தண்டனைகளை அடைவார்கள். இப்பொழுது நேரடியாக வந்த பிறகும் பாபாவின் முயற்சியை வீணாக்கினால் அதிகமான தண்டனையை அடைய வேண்டியிருக்கும். நான் உங்களை தேவதைகளாக ஆக்குகின்றேன். பிறகு மாயை வந்து அசுரர்களாக ஆக்குகின்றது. தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள் என்று தந்தை அடிக்கடி புரிய வைக்கின்றார். இராம ராஜ்யத்தில் மிருகங்களும் ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தும் என்று பாடப்பட்டுள்ளது. ஒரே குளத்தில் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் குடித்தன. இங்கு அமிர்தம் குடித்த பிறகு அசுரர் களாக ஆகி துரோகிகளாக ஆகிவிடுகின்றனர். பிராமண குலத்தைச் சார்ந்தவர் களுக்கு பிறகு கஷ்டத்தைக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு எவ்வளவு துர்க்கதி ஏற்படும்! சத்கதி கொடுப்ப தற்காக தந்தை வருகின்றார். ஆக குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குணங்கள் நிறைந்தவர் களாக ஆக வேண்டும். சுயமாக சேவை செய்ய வேண்டும். தந்தையும் சான்றிதழ் கொடுப்பார். நல்ல நிச்சய புத்தி உள்ளவர்கள் சதா தந்தையை நினைவு செய்து கொண்டேயிருப்பார்கள். பெயரைக் கெடுத்து விடக் கூடாது, அசுர குணத்தைக் காண்பித்து விடக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும். இப்பொழுது அனைவரும் வரிசைப்படியான முயற்சி யாளர்களாக இருக்கின்றனர். நான் இறை தந்தையின் மாணவன் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். குழந்தைகளுக்காக பகவானின் மகாவாக்கியம் என்னவெனில் நான் உங்களுக்கு படிப்பித்து இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்குகின்றேன். உங்களுக்கு யோகா மற்றும் ஞானத்தைக் கற்பிக்கின்றேன். நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆகுங்கள். நான் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். ஆத்மாக்களாகிய நீங்கள் கொசுக்களைப் போன்று என்னைப் பின்பற்றுவீர்கள். மகா பாரத யுத்தம் நடைபெற்ற பொழுது கொசுக் கூட்டத்தைப் போன்று வழிகாட்டியை பின்பற்றினார்கள். பாபா வழிகாட்டியாக இருக்கின்றார். நான் உங்களை விடுவிப்பதற்காக வந்திருக் கின்றேன் என்று கூறுகின்றார்.
நீங்கள் மாயையின் வலையில் மாட்டிக் கொண்டு மிகவும் துக்கமானவர்களாக இருக்கின்றீர் கள். ஒன்று கர்ப்ப சிறைக்குச் செல்கின்றீர்கள். மற்றொன்று அந்த சிறைக்குச் செல்வதும் மனிதர்களுக்கு மிகவும் எளிதாகி விட்டது. மிகவும் குஷியுடன் சிறைக்குச் செல்கின்றனர். ஒருவருக்கொருவரைப் பார்த்து உண்ணா விரதமும் இருக்கின்றனர். தனது ஆத்மாவிற்கு துக்கம் கொடுப்பதற்காக என்ன என்ன செய்கின்றனர்! அதுவே தற்கொலை என்று கூறப்படு கின்றது. சரீரம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது ஆத்மா நான் சுகமாக இருக்கின்றேன் என்று கூறுகின்றது. ஆரோக்கியமாக இல்லையெனில் நான் துக்கமாக இருக்கின்றேன் என்று ஆத்மா கூறுகின்றது. சதா சுகமானவர்களாக, சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார். நான் புது உலகை படைப்பவன் என்பதால் என்னை எஜமான் என்று கூறுகின்றனர் என்று உலகிற்கே எஜமானனாக இருப்பவர் கூறுகின்றார். ஆனால் நான் இராஜ்யம் செய்வதில்லை. அனைத்து பக்தர்களும் என்னை பூஜிக்கின்றனர். ஏ, பகவானே! வாருங்கள், வந்து எங்களை இந்த கலியுக துக்கத்திலிருந்து விடுவியுங்கள், நிர்வாணதாமம் அல்லது சொர்க்கத்திற்கு அனுப்பிவிடுங்கள் என்று கூறுகின்றனர். தந்தை முதலில் சுகதாமத்திற்கு அனுப்பி வைக்கின்றார், பிறகு மாயை துக்கதாமமாக ஆக்குகின்றது. இவ்வாறு இந்த சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கின்றது. குழந்தை களே! இப்பொழுது தவறுகள் செய்யாதீர் கள் என்று தந்தை கூறுகின்றார். அதிகமான கெட்ட காரியங்களை மாயை செய்ய வைக் கின்றது. அதன் மூலம் பதவி குறைந்து விடுகின்றது. தந்தையை புரிந்துக் கொண்டு அவரது வழிப்படி நடப்பதன் மூலம் நீங்கள் சிரேஷ்டமாக முடியும். இல்லையெனில் அதிக தண்டனை களை அடைவீர்கள். ஈஸ்வரனின் மகிமை அளவற்றதாக இருப்பது போன்று தண்டனை அடையும் துர்தசையும் அளவற்றதாகவே இருக்கின்றது. இறுதி நேரமாக இருக்கின்றது, அனைவரும் அவரவர்களது கணக்கு- வழக்குகளை முடிக்க வேண்டும். தண்டனை அடையக் கூடியவர்கள் வெற்றி மணி மாலையில் வர முடியாது. உலகை படைக்கக் கூடிய, ஞானம் நிறைந்த இறை தந்தை நமக்கு படிப்பிக்கின்றார். அவர் கண்டிப்பாக உலகிற்கு எஜமானன் என்ற ஆஸ்தியை கொடுப்பார் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருப்பீர்கள் என்று தந்தை கூறுகின்றார்.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை மற்றும் பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1)
தனது பேச்சு, நடத்தைகள் மிகவும் இனிமையானதாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த அசுர செயல்களும் செய்யக் கூடாது. தெய்வீக நடத்தைகளை தாரணை செய்ய வேண்டும்.
2)
தந்தையின் சேவையில் சொல்லாமலேயே உதவியாளர்களாக ஆக வேண்டும். தந்தை யின் முயற்சிக்கான கைமாறு கண்டிப்பாக செய்ய வேண்டும். தவறுகள் செய்யக் கூடாது.
வரதானம்:
புத்தி என்ற
விமானத்தின் மூலம்
நொடியில் மூன்று
உலகங்களையும் வலம்
வரக்கூடிய சகஜயோகி
ஆகுக.
குழந்தைகளே! சங்கல்பம் என்ற சுவிட்சை ஆன் செய்திடுங்கள் மற்றும் வதனத்திற்கு
வந்தடைந்து சூரியனுடைய கிரணங்களைப் பெறுங்கள், சந்திரனுடைய
குளுமையையும் பெறுங்கள், பிக்னிக்கும் செய்திடுங்கள் மற்றும் விளையாடவும் செய்திடுங்கள் என்று பாப்தாதா குழந்தைகளுக்கு அழைப்பு கொடுக்கின்றார்கள். இதற்காக புத்தி என்ற விமானத்தில்
டபுள் ரீஃபைன் (இரட்டை சுத்திகரிப்பு செய்யப்பட்ட)
பெட்ரோல் மட்டும் அவசியமாக இருக்கிறது. இரட்டை சுத்திகரிப்பு என்றால் ஒன்று நான் ஆத்மா, தந்தையினுடைய
குழந்தை ஆவேன் என்ற நிராகாரி நம்பிக்கையினுடைய
போதை, இரண்டாவது சாகார ரூபத்தில் அனைத்து சம்பந்தங் களின் போதை. இந்த போதை மற்றும் குஷி சகஜயோகியாகவும் ஆக்கிவிடும்
மற்றும் அப்பேற் பட்டவர்கள் மூன்று உலகங்களையும்
வலம் வந்து கொண்டே இருப்பார்கள்.
சுலோகன்:
சிரேஷ்ட கர்மத்தின் ஞானம் தான் சிரேஷ்ட பாக்கியத்தின் ரேகையை வரைவதற்கான பேனா ஆகும்.
0 Comments