Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 20.04.23

 

20-04-2023  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களுக்கு இந்த படிப்பை படிப்பித்துக் கொண்டு இருப்பதுவே அவருடைய கிருபை (கருணை) ஆகும். நீங்கள் வருங்கால புதிய உலகத்தில் தேவி தேவதை ஆகும் பாக்கியத்தை எழுப்பி வந்துள்ளீர்கள்.

கேள்வி:

குழந்தைகள் தந்தைக்கு முன்னால் என்ன ஒரு உறுதி எடுத்துள்ளார்கள்?

பதில்:

பாபா நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்க வந்துள்ளீர்கள், நாங்கள் உங்களது ஸ்ரீமத் படி நடந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவதில் உங்களுக்கு உதவியாளர் ஆவோம். தூய்மை யாகி பாரதத்தை தூய்மையாக மாற்றுவோம் என்று நீங்கள் உறுதிமொழி செய்துள்ளீர்கள்.

பாடல்:  பாக்கியத்தை எழுப்பி வந்துள்ளோம். ஓம் சாந்தி

குழந்தைகளே! பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். இது பள்ளிக்கூடம் அல்லது பல்கலைக் கழகம் ஆகும். என்ன யுனிவர்சிட்டி? காட் ஃபாதர்லி யுனிவர்சிட்டி. காட்ஃபாதர் கற்பிக்கிறார். பகவான் கூறுகிறார் எல்லையில்லாத தந்தை காட் ஃபாதர் என்று அழைக்கப்படுகிறார். லௌகீக தந்தையை காட்ஃபாதர் என்று கூறமாட்டார்கள். ஒரு கடவுளைத்தான் எல்லா மனிதர்களும் காட்ஃபாதர் என்று கூறுகிறார்கள். அவர் எல்லை யில்லாத தந்தை ஆவார். இந்த முழு சிருஷ்டியை படைப்பவர் காட் ஃபாதர் ஆவார். லௌகீக குழந்தைகளுக்கும் ஃபாதர் இருக்கிறார் கள். அவர் பாபா என்று அழைக்கப்படுகிறார். இவர் எல்லையில்லாத பரலோக தந்தை ஆவார். லௌகீக தந்தைகளோ இங்கு அநேகர் உள்ளார்கள் ஒவ்வொரு வருக்கும் அவரவர் குழந்தைகள் இருப்பார்கள். எனவே எல்லையில்லாத தந்தையிடமிருந்து அவசியம் ஏதாவது ஆஸ்தி கிடைக்க வேண்டும். இங்கு நீங்கள் தந்தையிடமிருந்து எல்லையில்லாத சுகத்தின் ஆஸ்தி பெறும் பாக்கியத்தை அமைத்துக் கொண்டு வந்துள்ளீர்கள். இங்கு யார் கற்பிக்கிறார்? பகவான் கூறுகிறார்: அங்கு மனிதர்கள் சட்டவியல், பொறியியல், மருத்துவம் ஆகியவை கற்பிக்கிறார் கள். இங்கோ எல்லை யில்லாத தந்தையே வந்து கற்பிக் கிறார். எனவே நீங்கள் இங்கு பாக்கியத்தை அமைத்து வந்துள்ளீர்கள், நீங்கள் மனிதரிலிருந்து தேவதையாக ஆக்கப் படுகிறீர்கள்,

பாரதத்தில் தான் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாரதம் தான் பழையதிலும் பழைய கண்டமாகும். அழியாத கண்டமாகும். பாரதம் முதல் நம்பர் ஆகும். பாரதவாசிகள் பாரத கண்டமாகிய புதிய உலகத்தில் இருக்கும் பொழுது தேவி தேவதை கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தபொழுது இந்த பாரதம் புதியதாக இருந்தது. பாரத கண்டம் மட்டுமே இருந்தது. அச்சமயம் வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. தேவி தேவதைகள் தூய்மையாக இருந்தார்கள். ராஜா ராணி, லட்சுமி நாராயணர் தூய்மையாக இருந்தார்கள். பாரதம் மிகவும் செல்வம் நிறைந்து இருந்தது. வைரம் போன்ற பாரதமாக இருந்தது. இப்பொழுது பாரதம் மிகவும் ஏழையாக உள்ளது. சோழிக்கு சமமாக உள்ளது. சொர்க்கத்தில் சண்டை சச்சரவு எதுவும் இருக்கவில்லை. நிர்விகாரி பாரத மாக இருந்தது. இச்சமயம் கலியுகமாக இருக்கும் பொழுது பாரதம் தூய்மை இல்லாமல் உள்ளது. எவ்வளவு துக்கம் இருக்கிறது. இப்பொழுது இந்த பாரதத்தை மீண்டும் சொர்க்கமாக யார் ஆக்குகிறார்? தந்தை விளக்குகிறார், நீங்கள் மனிதனிலிருந்து தேவதை ஆகும் பாக்கியத்தை எழுப்பி வந்துள்ளீர்கள். மனிதனை தேவதை யாக எல்லையில்லாத தந்தை தான் ஆக்குகிறார். மனிதர்கள் யாராலும் சத்கதி அளிக்க முடியாது. சொர்க்கத்தில் ஒரு பொழுதும் பதீத பாவனரே வாருங்கள் என்று அழைக்க மாட்டார் கள். ஏனெனில் அங்கு எல்லோரும் தூய்மையாகவே இருந்தார்கள். பாரதம் சதா சுகமுடைய தாக இருந்தது. மீண்டும் பாரதத்தை சதா சுகமுடையதாக ஆக்குவது தந்தையினுடைய காரியமே ஆகும். பாரதம் சிவாலயமாக இருந்தது. பரமபிதா பரமாத்மா சிவன் என்று அழைக்கப் படுகிறார். அவரது ஜெயந்தி பாரதத்தில் கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும் தந்தையான சிவ பரமாத்மாவே வந்து அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கிறார். அந்த தந்தையை எல்லாரும் மறந்து விட்டார்கள். சாந்தியின் வள்ளல் சுகத்தின் வள்ளல் அந்த ஒரே ஒரு தந்தை ஆவார். பாரதம் சொர்க்கமாக இருந்தது. தூய்மையாக இருக்கும் பொழுது சாந்தியும் இருந்தது. சுகமும் இருந்தது. தூய்மையான சாந்தி சுகம் இருந்தது. சந்நியாசிகள் கூட தூய்மை யின் சக்தி கிடைக்கட்டும் என்று பாரதத்திற்கு உதவி செய்வதற்காக சந்நியாசம் செய்கிறார்கள். எல்லா விகாரி மனிதர்களும் சென்று அவர் களுக்கு முன்னால் தலை வணங்கு கிறார்கள். சந்நியாசிகள் தூய்மையின் உதவியால் பாரதத்தை தாங்குகிறார்கள். பாரதம் போன்ற சுகமான தூய்மையான கண்டம் வேறு எதுவும் இல்லை. உயர்ந்ததிலும் உயர்ந்தது என்று பாரத கண்டம் தான் பாடப்படுகிறது. மீண்டும் பாரதத்தை புதியதாக தந்தை தான் ஆக்குகிறார் எந்த ஒரு மனிதரையும் பகவான் என்று கூற முடியாது. எல்லாருக்குள்ளும் இறைவன் இல்லை. ஆனால் எல்லாருக்குள்ளேயும் 5 சாத்தான் கள் இருக்கிறது. இந்த 5 விகாரங்களையும் சேர்த்து இராவணன் என்று கூறப்படுகிறது. இச்சமயம் இராவணனின் இராஜ்யம் ஆகும். எல்லாரும் விகாரி தூய்மையற்றவர்களாக உள்ளனர். சத்யுகத்தில் தூய்மையான இல்லற தர்மம் இருந்தது. சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தார்கள். பாரதத்தில் தேவி தேவதைகள் ஆட்சி புரிந்துக் கொண்டிருந் தார்கள். இப்பொழுது நாடகப்படி மீண்டும் பாரதம் பழையதாக ஆகிவிட்டுள்ளது. புதிய சிருஷ்டி அவசியம் பழையது ஆகும். பாரதத்தில் ஒரு உலகத்தின் சர்வ வல்லமை படைத்த இராஜ்யம் இருந்தது. அது சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. அதை எல்லை யில்லாத பாபா இந்த தாய்மார்கள் மூலமாக ஸ்தாபனை செய்கிறார். சிவசக்தி சேனை தாய்மார்கள் அல்லவா? ஜகதம்பாவும் பாடப் பட்டுள்ளார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் யார் என்பதை மனிதர்கள் அறியாமல் இருக்கிறார்கள். எல்லோரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பரமபிதா பரமாத்மா ஆவார். பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கர் ஆவார்கள் பரமபிதா பரமாத்மாவின் பார்ட் என்ன? அவர் வந்து பாரதத்தை தூய்மை இல்லாத நிலையிலிருந்து தூய்மையாக்குகிறார் பிரம்மா மூலமாக தூய்மையான உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார். பிரம்மாகுமார் குமாரிகளாகிய நீங்கள் நாம் பாரதத்தை தூய்மையாக ஆக்குவோம் என்று ராக்கி கட்டுகிறீர்கள். ஹே! பாபா, நாங்கள் உங்களது ஸ்ரீமத் படி நடந்து தூய்மையாகி பாரதத்தை தூய்மையாக்கி பிறகு ஆட்சி புரிவோம். தந்தை வந்து பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்விக்கிறார். பிரஜாபிதா பிரம்மா அனைவரின் தந்தை ஆவார். ஜகதம்பா அனைவரின் தாய் ஆவார். தந்தையும் நீயே தாயும் நீயே நாங்கள் உனது பாலகர்கள் என்று பாரதவாசிகள் பாடுகிறார்கள். தந்தை சுயமாக வந்து கற்பிக்கும் கிருபை செய்கிறார். அதன் மூலம் நாங்கள் வருங்காலத்தில் நிறைய சுகம் பார்ப்போம். இங்கோ நிறைய துக்கம் உள்ளது. இது தான் நாடகம் என்று கூறப்படுகிறது. தேவதா உலகத்திலிருந்து அசுர (சைத்தான்கள்) உலகமாக ஆகிறது. தேவதைகளின் உலகத்தில் வேறு எந்த கண்டமும் இருப்பதில்லை. எல்லையில்லாத தந்தையே வந்து குழந்தைகளுக்கு எல்லையில்லாத உலக சரித்திரம் பூகோளம் பற்றி விளக்குகிறார். இதை யாரும் விளக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் எல்லையில்லாத தந்தையிடம் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறீர்கள், ஹே பாபா! நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்க வந்துள்ளீர்கள். நாங்கள் ஸ்ரீமத்படி நடந்து பாரதத்தை சொர்க்கமாக அதாவது சிரேஷ்டமாக ஆக்கி மீண்டும் அதன் மீது ஆட்சி புரிவோம். இது இராஜ யோகத்தின் கல்வி என்று அழைக்கப்படுகிறது. சந்நியாசி களினுடையது ஹடயோகம் ஆகும். அவர்கள் வீடு வாசலை விட்டு விடுகிறார்கள். நீங்கள் விட வேண்டியதில்லை. இந்த பழைய உலகத்தை மறக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது புது உலகத்திற்குச் செல்லவிருக்கிறீர்கள். தந்தை வழிகாட்டி ஆகி வந்துள்ளார். அவர் லிபரேட்டர் ஆவார். எல்லோரையும் துக்கங் களிலிருந்து விடுவிப்பவர். சிவபாபாவினுடைய ஜன்மபூமி பாரதம் ஆகும். சோமநாத்தின் கோவில் கூட இங்கு தான் உள்ளது. பாரதம் பெரிய தீர்த்தம் என்பதை மனிதர்கள் மறந்து விட்டார்கள். எல்லா மனிதர்களுக்கும் சுகம் சாந்தி அளிப்ப வருடைய ஜன்மபூமி ஆகும். அனைவரும் பாரதத்திற்கு வந்து சிவனின் கோவிலில் சிவனை வணங்க வேண்டும். எல்லாவற்றையும் விட சிரேஷ்டமான வழி பகவானுடையது ஆகும். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா எல்லையில்லாத சுகம் அளிப்பவர் ஆவார். சுகம் தந்தையிடமிருந்து கிடைக்கிறது. விநாசம் முன்னால் நின்றுள்ளது. இந்த மகாபாரத போர் மூலமாக சுகதாமம், சாந்தி தாமத்தின் கதவுகள் திறக்கவிருக்கின்றன. நீங்கள் பி.கே. பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவதற்காக உடல், மனம், பொருளால் சேவை செய்து கொண்டு இருக்கிறீர்கள். அமைதியின் வழிப்படி உடல், மனம் பொருளால் சேவை செய்து அந்நியரின் ஆட்சியை விரட்டி விட்டார்கள். ஆனால் இப்பொழுது மிகுந்த துக்கம் உள்ளது. இப்பொழுது இந்த இராவணன் மீது வெற்றி அடைய வேண்டும். அரைக் கல்பம் இராவண இராஜ்யம், அரைக் கல்பம் இராம இராஜ்யம். துவாபரயுகம் முதற்கொண்டு தேக அபிமானத்தில் வந்ததால் தந்தையை மறந்து விடுகிறார்கள். மற்றும் தந்தையை அறியாத காரணத்தால் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே பாரதவாசி துக்கமுடையவர் களாக ஆகும் பொழுது தான் குழந்தைகளின் பாக்கியத்தை எழுப்ப தந்தை வருகிறார். இங்கு குருட்டு நம்பிக்கையின் எந்த விஷயமும் கிடையாது. இதுவோ படிப்பு ஆகும். தந்தையே வந்து முழு ஞானத்தை அளிக்கிறார். ஏனெனில் அவர் தான் ஞானக் கடல் ஆவார். என்னிடம் முழு சக்கரத்தின் ஞானம் உள்ளது என்று கூறுகிறார். சத்யுகத்தில் லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. பிறகு இராமர் சீதையின் இராஜ்யம் இருந்தது. ஆடும் புலியும் ஒன்றாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. ராஜா ராணி எப்படியோ அவ்வாறே பிரஜைகள் இருந்தனர். தர்மத்தின் நன்மை இருந்தது இப்பொழுதோ வீட்டிற்கு வீடு துக்கம் உள்ளது. தந்தை வந்து எல்லாரையும் சுகம் உடையவராக ஆக்குகிறார். நீங்கள் பாரத மாதா சக்தி சேனை ஆவீர்கள். இது உங்களுடைய கோவில் ஆகும் இப்பொழுது நீங்கள் இராஜ யோகத்தில் அமர்ந்துள்ளீர்கள். இது இராஜயோகத்தின் படிப்பு என்று கூறப்படுகிறது. தந்தையே வந்து தாய்மார்களாகிய உங்கள் மூலமாக எல்லோருடைய பாக்கியத்தை எழுப்புகிறார். பரமபிதா பரமாத்மாவிற்கு பூஜை செய்யப்படுகிறது. தேவதை களுக்கும் பூஜை செய்கிறார்கள். தூய்மை இல்லாத மனிதர்கள் சந்நியாசிளுக்கும் கூட பூஜை செய்கிறார்கள். தாய்மார்களாகிய உங்களுக்கு வந்தே மாதரம் என்று கூறப்படுகிறது. தாய்மார் களாகிய உங்கள் மூலம் தான் பாரதம் சொர்க்கமாக ஆகிறது. தூய்மை இன்றி சுகம் கிடைக்க முடியாது. யார் நிரந்தரமாக இடைவிடாது நடந்தாலும், சென்றாலும் காரியம் செய்யும் பொழுதும் ஒரே ஒரு தந்தையை நினைவு செய்கிறார்களோ, மற்ற எல்லா தொடர்பை விடுத்து ஒருவரிடம் தொடர்பை இணைக்கிறார்களோ அவர்களே சிவபாபாவிடம் சென்று விடுவார்கள். பாரதத்தில் தான் தந்தை அவதாரம் எடுக்கிறார். நீங்கள் எவ்வளவு துக்கமுடையவர்களாக இருந்தீர்கள். எத்தனை குழந்தைகள் இங்கு சுகம் பெறுவதற்காக வந்துள்ளார்கள். நீங்கள் எல்லோருக்கும் ஆன்மீக சமூக சேவை செய்கிறீர்கள். நீங்கள் ரகசியமான சேனை ஆவீர்கள். இராவணன் மீது வெற்றி அடைந்து சொர்க்கத்தின் எஜமானர் ஆகிறீர்கள். நிராகார தந்தை நிராகார ஆத்மாக்களிடம் உரையாடுகிறார். ஆத்மா உறுப்புக்கள் மூலமாக கேட்கிறது. ஆத்மாவில் 84 பிறவிகளின் சம்ஸ்காரம் உள்ளது. முதலில் வருபவர்கள் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். பின்னால் வருபவர்கள் குறைவாக எடுப்பார்கள். பாரதம் தலையின் கிரீடமாக இருந்தது. பாரதம் தான் ஏழையாக ஆகி உள்ளது மீண்டும் தலையின் கிரீடமாக ஆகிக் கொண்டிருக்கிறது. இது 5000 வருடத்திற்கு முன்னதாக நடந்த அதே போர் ஆகும். அதனால் பாரதம் சொர்க்கமாக ஆகி இருந்தது. உங்களுடைய இந்த படிப்பு இராஜயோகத்தின் படிப்பு ஆகும். சந்நியாசிகளுடையது ஹடயோகம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் பழைய உலகத்தை மறந்து ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். யோக அக்னி மூலமாகவே உங்களது விகர்மங்கள் வினாசம் ஆகிவிடும் மற்றும் தூய்மை ஆவதற்கு வேறு வழியே கிடையாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகுகாலம் கழித்து காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே !

இரவு வகுப்பு : 28.06.1968

இங்கு அமர்ந்துள்ள அனைவரும் நாம் ஆத்மாக்கள், தந்தை நம்முன் அமர்ந்துள்ளார் என உணர்ந்துள்ளனர். இதற்கு ஆத்மா அபிமானியாகி அமர்ந்திருப்பது என்று சொல்லப் படுகிறது. நாம் ஆத்மா (பிரம்மா) பாபாவிற்கு முன்பாக அமர்ந்துள்ளோம் என்பதல்ல. இப்போது பாபா இதை நினைவூட்டுகிறார் எனவே கவனம் கொடுக்க வேண்டும் என்பது நினைவிற்கு வருகிறது. இங்குள்ள நிறைய பேர்களுடைய புத்தி வெளியில் ஓடுகிறது. இங்கு அமர்ந்திருந் தாலும் கூட காது மூடப்பட்டுள்ளது போல இருக்கிறது. புத்தி வெளியில் எங்கெங்கோ ஓடிக் கொண்டி ருக்கிறது. எந்த குழந்தைகள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்கள் வருமானம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். அநேகருடைய புத்தியோகம் வெளியில் இருக் கிறது, அவர்கள் நினைவு யாத்திரையில் இல்லாதது போல தோன்றுகிறது. நேரம் வீணாகிறது. தந்தையைப் பார்த்தப் பிறகும் கூட பாபாவின் நினைவில் இருக்கும் முயற்சிக்கு ஏற்றாற் போலத்தான் வரிசைகிரமம் அமைகிறது.ஒரு சிலருக்கு பக்காவாக பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. நாம் ஆத்மாக்கள், சரீரம் அல்ல. தந்தை ஞானம் நிறைந்தவர், எனவே குழந்தை களுக்கும் ஞானம் வந்து விடுகிறது. இப்போது வீடு திரும்ப வேண்டும். சக்கரம் முடிந்து விட்டது, இப்போது முயற்சி செய்ய வேண்டும். நிறைய காலம் கடந்து விட்டது இன்னமும் கொஞ்ச காலமே தீதமுள்ளது. சோதனை காலங்களிலும் கூட அதிகமாக முயற்சியில் ஈடுபட வேண்டி யிருக்கும். புரிந்துக் கொள்ளவில்லையானால் தேர்ச்சி அடைய முடியாது. பதவியும் கூட குறைந்ததாகி விடும். குழந்தைகளின் முயற்சி என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேக அபிமானத்தின் காரணத்தால் விகர்மங்கள் நடைபெறும், அதற்கு நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். ஏனென்றால் எமக்கு (சிவபாபாவிற்கு) அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். தந்தையின் பெயர் கெடுமளவிற்கு எந்த ஒரு காரியமும் செய்யக் கூடாது. ஆகவே தான் சத்குருவிற்கு நிந்தனை செய்பவர்கள் உயர் பதவியை அடைய மாட்டார்கள் எனப்பாடப்பட்டுள்ளது. உயர்பதவி என்றால் இராஜ்ய பதவி (அரசாட்சி). கற்பிப்பவர் கூட தந்தை தான். வேறெந்த சத்சங்கத்திலும் இதுபோல நோக்கம் மற்றும் குறிக்கோள் என்பது இல்லை. இது நமது இராஜயோகம். நாங்கள் இராஜயோகம் கற்றுத் தருகிறோம் என்று வேறு எவராலும் கூற முடியாது. அவர்களோ அமைதியில் தான் சுகம் இருப்பதாக புரிந்து கொண்டுள்ளனர். அங்கு நிர்வாண் தாமம் துக்கம் மற்றும் சுகம் என்ற விசயமே இல்லை. அமைதியே அமைதி தான் நிலவும். எனவே அவர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவு என புரிய வைக்கப்படுகிறது. யார் முதல் முதலாக நடிப்பின் பாகம் ஏற்று நடிக்கின்றாரோ அவருடைய அதிர்ஷ்டம் அனைவரையும் விட உயர்வானது. ஆனால் அங்கே அவருக்கு அந்த ஞானம் இருக்காது. அங்கே வேறு எண்ணமே ஓடாது. நாம் அனைவரும் அவதாரம் எடுக்கிறோம் என்று குழந்தைகளுக்குத் தெரியும். வெவ்வேறான பெயர், உருவத்தில் வருகின்றனர். இது நாடகம் அல்லவா. ஆத்மாக்கள் நாம் சரீரத்தை தாரணை செய்து பார்ட்டை நடிக்கிறோம். அந்த இரகசியம் முழுவதையும் தந்தை வந்து புரிய வைக்கிறார். குழந்தைகள் உங்களுக்கு உள்ளூர அதீந்திரிய சுகம் இருக்கிறது. மனதினுள் குஷி உள்ளது. இவர் ஆத்ம அபிமானம் உள்ளவர் என கூறப்படுவார். நீங்கள் மாணவர்கள் என்று தந்தை புரிய வைக்கவும் செய்கிறார். நீங்கள் புரிந்துள்ளீர்கள் நாம் தேவதைகள் வாழும் சொர்க்கத்திற்கு எஜமானர் ஆகக் கூடியவர்கள் என்று. வெறுமனே தேவதை மட்டுமல்ல, நாம் உலகிற்கே எஜமானர் ஆகக் கூடியவர்கள். இந்த மனநிலையானது எப்போது கர்மாதீத நிலை ஏற்படுமோ அப்போது தான் நிரந்தரமாக இருக்கும். நாடகத்தின் திட்டப்படி நிச்சயம் நடந்தேறும். நீங்கள் புரிந்துள்ளீர்கள் நாம் ஈஸ்வரிய பரிவாரத்தில் இருக் கிறோம் என்று. சொர்க்கத்தின் இராஜ்யம் அவசியம் கிடைக்கும். யாரெல்லாம் அதிகமாக சேவை செய்கின்றார் களோ அவர்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். சிலருக்கு நமக்கு குறைந்த பதவியே கிடைக்கும் என்று மனதில் இருக்கும். யார் அதிகமான சேவை செய்கிறாரோ, பலருக்கு நன்மை செய்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக உயர்ந்த பதவி கிடைக்கும். பாபா புரிய வைத்துள்ளார் இந்த யோக பட்டி (நினைவு யாத்திரையில் அமரும் கூட்டம்) இங்கே நடக்க முடியும். வெளியில் உள்ள சென்டர்களில் இவ்வாறு நடக்க முடியாது. நான்கு மணிக்கு வருவது, (நிஷ்டை) தியானத்தில் அமர்ந்திருப்பது அங்கே எப்படி சாத்தியப் படும். முடியாது. சென்டரில் வசிப்பவர்கள் வேண்டு மானால் அமரலாம். வெளியில் உள்ளவர் களுக்கு மறந்தும் கூட இதை சொல்லாதீர்கள். கால கட்டம் (சமயம்) ஏற்றவாறு இல்லை. இங்கு நடப்பது சரியே. வீட்டிலேயே அமர்ந்துள்ளார்கள். அங்கெல்லாம் வெளியில் வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இங்கு மட்டுமே. புத்தியின் ஞானம் தாரணை ஆக வேண்டும் நாம் ஆத்மாக்கள். அதன் அழியாத ஆசனம் இது (புருவ மத்தியில்) இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் சகோதர, சகோதரர்கள், சகோதரனோடு பேசுகின்றோம். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்தீர்களானால் விகர்மங்கள் விநாச மாகிவிடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை மற்றும் தாதா (மூத்த சகோதரர்) வினுடைய அன்பு நினைவு, இனிய இரவுக்கான வாழ்த்து மற்றும் வணக்கம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உங்களது உடல், மனம், பொருளால் ஆன்மீக சமூக சேவை செய்ய வேண்டும். இராவணன் மீது வெற்றி அடைந்து பாரதத்தை சொர்க்கமாக மாற்ற வேண்டும்.

2. அளவற்ற சுகம் பெறுவதற்காக தூய்மைக்கான வாக்குறுதி கொடுத்து மற்ற எல்லா தொடர்பையும் விடுத்து ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.

வரதானம்:

தன்னை எல்லைக்கு அப்பாற்பட்ட மேடையில் இருப்பதாக புரிந்து கொண்டு சதா உயர்ந்த நடிப்பை நடிக்கக்கூடிய ஹீரோ நடிகர் ஆகுக.

நீங்கள் அனைவரும் உலகம் என்ற காட்சி பெட்டகத்தில் இருக்கக்கூடிய காட்சி பொருளாக இருக்கிறீர்கள். எல்லைக்கு அப்பாற்பட்ட பல ஆத்மாக்களுக்கு இடையில் பெரிய திலும் பெரிய மேடையில் இருக்கிறீர்கள். உலகத்திலிருக்கக்கூடிய ஆத்மாக்கள் நம்மை பார்த்துக் கொண்டி ருக்கின்றனர் என்ற நினைவில் ஒவ்வொரு எண்ணம், வார்த்தை மற்றும் செயலை செய்யுங்கள், இதனால் ஒவ்வொரு நடிப்பும் உயர்ந்ததாக இருக்கும், மேலும் ஹீரோ ஆகிவிடு வீர்கள். அனைவரும் நிமித்தமாக இருக்கக்கூடிய ஆத்மாக்களாகிய உங்களிடம் ஏதாவது அடைய வேண்டுமென்ற விருப்பம் வைத்திருப்பதால் சதா வள்ளல் குழந்தையாக இருந்து கொடுத்துக் கொண்டே இருங்கள். மேலும் அனைத்து ஆத்மாக்களின் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டே இருங்கள்.

சுலோகன்:

சத்தியத்தன்மையின் சக்தி நம்மிடம் இருந்தால் குஷி மற்றும் சக்தி கிடைத்தும் கொண்டே இருக்கும்.

 Download PDF

 

Post a Comment

0 Comments