Hindi/Tamil./English/Telugu/Kannada/Malayalam
16-05-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்தினர், ஈஸ்வரிய குடும்பத்தின் நியமம்
சகோதரன் சகோதரனாக இருத்தல் ஆகும். பிராமண குலத்தின் நியமம் சகோதரன் சகோதரியாக
இருத்தல் ஆகும். ஆகையால் விகார பார்வை இருக்கக் கூடாது.
கேள்வி:
இந்த சங்கமயுகம் கல்யாணகாரி யுகம் (நன்மை புரியும்) எப்படி?
பதில்:
இச்சமயம் பாபா தன்னுடைய செல்லமான குழந்தைகளுக்கு முன்பு வருகிறார். மேலும்
அப்பா,
டீச்சர், சத்குருவின் பாகம் இப்போது தான்
நடக்கிறது. இது கல்யாணகாரி நேரமாகும். பாபாவின் தனிப்பட்ட வழி நரகத்தை
சொர்கமாக்கக் கூடிய அல்லது அனைவருக்கும் சத்கதி கொடுக்கக்கூடிய வழி என்கிற அந்த
ஸ்ரீமத்தை அறிந்து கொண்டு குழந்தைகளாகிய நீங்கள் அதன் படி நடக்கிறீர்கள்.
கேள்வி:
உங்களுடைய சந்நியாசம் சதோபிரதானமான சந்நியாசம் எப்படி?
பதில்:
நீங்கள் புத்தியினால் இந்த முழு உலகத்தையும் மறக்கிறீர்கள். நீங்கள் இந்த
சன்னியா சத்தில் பாபா மற்றும் சொத்தை மட்டும் நினைக்கிறீர்கள். பவித்திரமாகி, பத்தியமும் இருக்கிறீர்கள். இதன்
மூலம் தேவதையாகி விடுகிறீர்கள். அவர்களுடைய சந்நியாசம் எல்லைக்குட் பட்டது. எல்லைக்கப்பாற்பட்டது
கிடையாது.
பாடல்: கள்ளம் கபடம் அற்றவர் விசித்திரமானவர்.....
ஓம் சாந்தி. முதன் முதலில் பாபா தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை
நினையுங்கள் என புரிய வைக்கின்றார். 5000 வருடங்களுக்கு முன்பு கூட மன்மனாபவ என்று
கூறியிருந்தார். தேகத்தின் அனைத்து உறவுகளையும் விட்டு விட்டு தன்னை அசரிரீ ஆத்மா
என்று உணருங்கள். அனைவரும் தன்னை ஆத்மா என்று உணருகிறீர்களா? தன்னை யாரும் பரமாத்மா என்று
நினைக்க வில்லையே?
பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா, மகான் ஆத்மா என பாடு கிறார்கள்.
மகான் பரமாத்மா என்று கூறுவதில்லை. ஆத்மா தூய்மையாகிறது என்றால், உடல் கூட பவித்திரமாகிறது. துரு
ஆத்மாவில் தான் படிகிறது. பாபா குழந்தைகளுக்கு யுக்தியோடு புரிய வைக்கின்றார்.
ஆத்ம ரூபத்தில் நாம் அனைவரும் சகோதரன் சகோதரன் மற்றும் சரீரத்தின் உறவில் வந்தால்
சகோதரன் சகோதரி என்பது நிச்சயம். இப்போது பல ஜோடிகள் அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு தங்களை சகோதரன் சகோதரி என்று புரிந்து கொள்ளுங் கள் என்றால்
கோபித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த நியமம் புரிய வைக்கப்படுகிறது. நம் அனைத்து
ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவர் என்றால், சகோதரன் சகோதரன் ஆகிவிட்டோம். பிறகு மனித
உடலில் வருகிறார் என்றால் பிரஜா பிதா பிரம்மா மூலமாக படைப்பை படைக் கிறார். எனவே
நிச்சயமாக அவருடைய வாய் வழி வம்சங்கள் தங்களுக்குள் சகோதரன் சகோதரி ஆகி விட்டனர்.
அனைவரும் பரம்பிதா பரமாத்மா என்றார்கள். பாபா தான் சொர்க்கத்தைப்
படைக்கக்கூடியவர். நாம் அவருடைய குழந்தைகள் என்றால், ஏன் சொர்க்கத் திற்கு அதிபதியாகக் கூடாது? ஆனால் சொர்க்கம் சத்யுகத்தில்
தான் இருக்கிறது. பாபா வந்து ஏதோ புதிய சிருஷ்டியைப் படைக்கிறார் என்பது கிடையாது.
பாபா வந்து பழையதை புதியதாக மாற்றுகிறார். அதாவது இந்த உலகத்தை மாற்றுகிறார். எனவே
பாபா நிச்சயமாக இங்கே வந்தார். பாரதத்திற்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுத்தார்.
அதனுடைய நினைவு சின்னம் சோம்நாத் கோவில் எல்லாவற்றையும் விட மிகப் பெரியதாக
கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பாரதத்தில் ஒரேயொரு தேவி தேவதா தர்மம் இருந்தது.
வேறு எந்த தர்மமும் இல்லை. பிறகு அனைத்தும் வளர்ச்சி அடைந்திருக்கின்றது. எனவே
நிச்சயமாக மற்ற அனைத்து ஆத்மாக்களும் நிர்வாண தாமத்தில் பாபாவுடன் இருப்பார்கள்.
பாரதவாசிகள் ஜீவன் முக்தியில் இருந்தனர். சூரிய வம்சத்தின் குலத்தில் இருந்தனர்.
இப்போது வாழ்க்கை பந்தனத்தில் இருக்கிறார்கள். ஒரு நொடியில் ஜீவன் முக்தி
கிடைத்தது என்று ஜனகரின் எடுத்துக்காட்டு இருக்கிறது. முழு சொர்க்கத்திற்கும் ஜீவன்
முக்த் என்று கூறுவார்கள். பிறகு அதில் யார் எவ்வளவு உழைத்தார் களோ அவ்வளவு
பதவியைப் பெறுகிறார்கள். அனைவருக்கும் ஜீவன் முக்தி என்று தான் கூறுவார்கள். எனவே, நிச்சயம் முக்தி, ஜீவன் முக்தி வள்ளலாக ஒரேயொரு
சத்குரு தான் இருக்க வேண்டும். ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை. இப்போது
அனைவரும் மாயா வின் பந்தனத்தில் இருக்கிறார்கள். ஈஸ்வரனின் வழி தனிப்பட்டது.....
அவருடைய ஸ்ரீமத் என்று கூறப்படுகிறது. அவர் நிச்சயமாக வருகிறார். ஆஹா பிரபு !
என்று அனைவரும் கடைசியில் கூறுவார்கள். இப்போது நீங்கள் ஆஹா பிரபு ! இந்த நரகத்தை
சொர்கமாக மாற்றக் கூடிய உங்களுடைய வழி மிகவும் தனிப்பட்டது என்று கூறிக் கொண்டு
இருக்கிறீர்கள். மீண்டும் நாம் சகஜ இராஜ யோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என
நீங்கள் அறிகிறீர்கள். போன கல்பத்தில் கூட சங்கமயுகத்தில் தான் கற்றுக்
கொடுத்திருப்பார் அல்லவா?
செல்லமான
குழந்தைகளே,
நான்
குழந்தைகளாகிய உங்கள் முன்பு தான் வருகிறேன் என்று பாபாவே கூறு கிறார். அவர் பரம
தந்தையாகவும் இருக்கிறார். பரம ஆசிரியராகவும் இருக்கிறார். ஞானத்தை அளிக்கிறார்.
வேறு யாரும் இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தைக் கொடுக்க முடியாது. இந்த சிருஷ்டி
சக்கரத்தின் முதல்,
இடை, கடை அல்லது உலகத்தின் வரலாறு
புவியியலை யாரும் அறியவில்லை. பரம்பிதா பரமாத்மா ஸ்தாபனை மற்றும் விநாசத்தின்
காரியத்தை எப்படி செய்விக்கிறார் என்பதை யாரும் அறியவில்லை. குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துக் கொண்டீர் கள். மனிதனிலிருந்து தேவதை ஆக்கினார்..... இந்த மகிமைகள்
அவருடைய தாகும். அழுக்கான துணிகளைத் துவைத்து...... இப்போது ஒவ்வொருவரும் தன்னை
நாம் அழுக்கு நிறைந்தவர் களாக இருக்கிறோமா அல்லது தூய்மையாக இருக்கிறோமா என
தன்னையே கேளுங்கள். அழிவற்ற சிம்மாசனம் அல்லவா? அகால மூர்த்தி சிம்மாசனம் எங்கே? அது நிச்சயமாக பரந்தாமம் அல்லது
பிரம்ம மகா தத்துவம் ஆகும். ஆத்மாக்களாகிய நாமும் அங்கே தான் வசிக் கிறோம்.
அவருக்கும் அழிவற்ற சிம்மாசனம் என்று கூறப்படுகிறது. அங்கே வேறு யாரும் வர
முடியாது. அந்த இனிமையான இல்லத்தில் நாம் வசிக்கின்றோம். பாபாவும் அங்கே இருக்
கிறார். மற்றபடி அங்கே வேறு எந்த சிம்மாசனம் அல்லது நாற்காலி போன்றவைகள்
இருக்காது. அங்கேயோ அசரிரீ அல்லவா? ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைக்கிறது
என்றால் தகுதி அடைகிறோம் என்பதைப் புரிய வைக்க வேண்டும். சிவ பாபாவை நினையுங்கள்.
விஷ்ணு புரியை நினையுங்கள் என்று பாபா கூறுகிறார். இப்போது நீங்கள் பிரம்மா
புரியில் அமர்ந்திருக் கிறீர்கள். பிரம்மாவின் வாரிசு மற்றும் சிவபாபாவின்
குழந்தையாக இருக்கிறீர்கள். ஒரு வேளை தங்களை சகோதரன் சகோதரி என்று புரிந்து
கொள்ளவில்லை என்றால் காம விகாரத்தில் விழுந்து விடுவீர்கள். இது ஈஸ்வரிய குடும்பம்
ஆகும். முதலில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். தாதாவும் இருக்கிறார். பாபாவும்
இருக்கிறார். மேலும் நீங்கள் அவருடைய குழந்தை என்றால், நீங்கள் பிரம்மா மூலமாக
சிவபாபாவின் வாரிசாகி விட்டீர்கள். சிவனின் பேரக்குழந்தை களாகவும் இருக்கிறீர்கள்.
பிறகு மனித உடலில் இருப்பதால் சகோதரன் சகோதரி ஆகிவிட்டீர் கள். இச்சமயம் நீங்கள்
நடைமுறையில் சகோதரன் சகோதரியாக இருக்கிறீர்கள். இது பிராமணர்களின் குலம் ஆகும்.
இது புத்தியினால் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். ஜீவன் முக்தி கூட ஒரு
நொடியில் கிடைக்கிறது. மற்றபடி பதவிகள் பல இருக்கின்றது. அங்கே துக்கம் கொடுக்கக்
கூடிய மாயை கிடையாது. சத்யுகத்தில் இருந்து இராவணனை கலியுகம் வரை எரித்துக் கொண்டே
இருக்க மாட்டார்கள். பரம்பரையாக எரித்துக் கொண்டே வருகிறார் கள் என கூறுகிறார்கள்.
அது முடியாது. சொர்க்கத்தில் அசுரன் எங்கிருந்து வந்தான். இது அசுர சம்பிரதாயம்
என்று பாபா கூறுகிறார். அவர்களின் பெயர் அகாசூரன், பகாசூரன் என்று வைக்கப் பட்டிருக்கிறது.
கிருஷ்ணர் பசுக்களை மேய்த்தார் என்று கூறுகிறார்கள். இப்படியும் பாகம் இருக்கிறது.
நீங்கள் சிவபாபாவின் பசுக்கள் அல்லவா? சிவ பாபா அனைவருக்கும் ஞானப் புல்லை
அளிக்கிறார். புல் அளிக்கக் கூடியவர், பாலனை செய்யக் கூடியவர் அவரே ஆவார்.
மனிதர்கள் கோவில்களுக்கு சென்று தாங்கள் அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள், நாங்கள் கீழானவர்கள், பாவி...... என்றெல்லாம்
தேவதைகளின் மகிமைகளைப் பாடுகிறார்கள். தன்னை தேவதை என்று கூற முடியாது. இந்து எனக்கூறுகிறார்கள்.
உண்மையான பெயர் பாரதம் ஆகும். கீதையில் கூட இருக்கிறது யதா யதாஹி..... கீதையில்
இந்துஸ்தான் என்று கூறப்பட வில்லை. இது பகவான் வாக்கு ஆகும். பகவான் ஒரேயொரு
நிராகாரரே. அவரை அனைவரும் அறிகிறார்கள். சொர்க்கத்தில் அனைத்து தெய்வீக குணம்
நிறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். எனவே, நிச்சய மாக சொர்க்கத்திலிருந்து
நரகத் திற்கு வருவார்கள். தாங்களே பூஜைக்குரியவர் தாங்களே பூஜாரி, அதற்கும் பொருள் இருக்கிறது
அல்லவா?
நம்பர்
ஒன் பூஜைக்குரியவர் கிருஷ்ணர் ஆவார். குழந்தை பருவத்திற்கு சதோபிர தானம் என்று
கூறப்படுகிறது. பால்ய (குழந்தை) பருவத்திற்கு சதோ, இளைஞர் பருவத்திற்கு இரஜோ, முதுமைப் பருவத்திற்கு தமோ என்று
கூறப்படுகிறது. சிருஷ்டியும் சதோ, இரஜோ,
தமோவாகிறது.
கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும். பாபா சங்கமத்தில் தான் வருகின்றார்.
இது மிகவும் நன்மை நடக்கக் கூடிய யுகமாகும். இது போன்ற யுகம் வேறு எதுவும்
கிடையாது. சத்யுகத்திலிருந்து திரேதாவில் வந்தனர். அதை நன்மை நடக்கக் கூடியது
என்று கூற முடியாது. ஏனென்றால், இரண்டு கலைகள் குறைந்து விடுகிறது, அதை கல்யாண காரி யுகம் என்று எப்படிக் கூற
முடியும். பிறகு துவாபர யுகத்தில் வந்தால் மேலும் கலைகள் குறைந்துக் கொண்டே
போகும். எனவே இது கல்யாணகாரி யுகம் கிடையாது. இந்த சங்கமயுகம் தான் நன்மை நடக்கக்
கூடிய யுகம் ஆகும். இப்போது தான் பாபா முக்கியமான பாரதத்திற்கும் மொத்தத்தில
அனைவருக்கும் கதி சத்கதி அளிக்கின்றார். இப்போது நீங்கள் சொர்க்கத்திற்காக முயற்சி
செய்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த தேவி தேவதா தர்மம் தான் சுகம் அளிக்கக்
கூடியது என்று பாபா கூறுகிறார். நீங்கள் உங்களுடைய தர்மத்தை மறந்து விட்டீர்கள்.
அப்போது மற்ற தர்மங்களில் நுழைந்து விடுகிறீர்கள். உண்மையில் உங்களுடைய தர்மம்
அனைத்தையும் விட உயர்ந்தது. இப்போது மீண்டும் நீங்கள் அதே இராஜயோகத்தைக் கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். மற்ற அனைவரும் அசுரன் இராவணனின் வழிப்படி
செல்கிறார்கள். அனைவருக்குள்ளும் 5 விகாரங்கள் இருக்கின்றது. அதிலும் முதலாவது
அசுத்த அகங்காரம் ஆகும். தேக அகங்காரத்தை விட்டு விட்டு ஆத்ம அபிமானி ஆகுங்கள்.
அசரிரீ ஆகுங்கள். தந்தையாகிய என்னை நீங்கள் மறந்து விட்டீர்கள். இது கண்ணாமூச்சி
விளையாட்டாகும். கீழே விழத்தான் வேண்டும் என்றால் ஏன் முயற்சி செய்ய வேண்டும் என
சிலர் கேள்வி கேட்கிறார்கள். அட, முயற்சி செய்யவில்லை என்றால் சொர்க்கத்தில் இராஜ்ய பதவி எப்படிக் கிடைக்கும்? நாடகத்தைப் புரிந்து கொள்ள
வேண்டும். இது ஒரேயொரு சிருஷ்டியின் இந்த சக்கரம் சுழல்கிறது. சத்யுகத்தின்
ஆரம்பம் சத்யமானது. சத்தியமாக இருக்கிறது. சத்தியமாக இருக்கும்...... உலகத்தின்
வரலாறு புவியியல் திரும்ப மீண்டும் நடக்கும் எனக் கூறுகிறார்கள். எப்படி ரிப்பீட்
ஆகும்?
அதற்காக
நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். மீண்டும் உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்றுக்
கொடுப்பதற்காக மீண்டும் வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். நீங்களும் கற்றுக்
கொள்கிறீர்கள். இராஜ்ஜியம் ஸ்தாபனை ஆகும். யாதவர்கள் கௌரவர்கள் மடிந்து விட்டனர்.
வெற்றி கிடைத்தது. பிறகு முக்தி, ஜீவன் முக்தியின் வாயில் திறந்து விடுகிறது. இல்லை என்றால் அது வரை வழி மூடியே
இருக்கும். போர் நடக்கும் போது தான் வாயில் திறக்கிறது. தந்தை வந்து வழி காட்டியாக
இருந்து அழைத்துச் செல்கிறார். விடுவிக்கக் கூடியவராகவும் இருக்கிறார். மாயாவின்
வலையில் இருந்து விடுவிக்கிறார். குருக்களின் சங்கிலியில் மிகவும் மாட்டிக்
கொண்டிருக்கின்றனர். குருவின் கட்டளையை ஏற்கவில்லை என்றால், ஏதாவது சாபம் கிடைத்து விடுமோ
என்று பலர் பயப்படுகின்றனர். அட, கட்டளையை நீங்கள் எங்கே ஏற் கிறீர்கள். அவர் நிர்விகாரி பவித்ரமானவர் நீங்கள்
விகாரி அபவித்ரமானவர்கள். குருவிடம் மனிதர்களுக்கு எவ்வளவு பாவனை இருக்கிறது. என்ன
செய்கிறார்கள் எதுவும் தெரியவில்லை. பக்தி மார்க்கத்தின் தாக்கம் இருக்கிறது.
இப்போது நீங்கள் புத்திசாலிகளாக புரிந்தவர்களாக மாறியுள்ளீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சும வதனவாசி என
நீங்கள் அறிகிறீர்கள். அதிலும் கூட பிரம்மாவிலிருந்து விஷ்ணுவின் பாகம் இங்கு
தான். சங்கர் இங்கே வர வேண்டிய அவசியம் இல்லை. இங்கே ஜகதம்பா ஜகத்பிதா மற்றும்
குழந்தை களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். பிறகு இத்தனை புஜங்கள் உடைய தேவிகள்
போன்று எவ்வளவு பேரை உருவாக்குகிறார்கள். அளவற்ற சித்திரங்கள் இருக்கின்றன. இந்தச்
சித்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்காக ஆகும். மனிதர்கள் மனிதர்கள் தான்.
இராதை கிருஷ்ணர் போன்றோருக்கு 4 புஜங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தீபாவளியில் மகாலட்சுமியின் பூஜை
செய்கிறார்கள். அதில் இரண்டு இலஷ்மியினுடையது, இரண்டு புஜங்கள் நாராயணனுடையது. ஆகவே இணைந்த
ரூபத்தில் இருவரின் பூஜைகள் நடக்கிறது. இது இல்லற மார்க்கம் ஆகும். வேறு எதுவும்
இல்லை. காளியின் நாக்கை எப்படி காண்பிக்கிறார்கள்! கிருஷ்ணரைக் கூட கருப்பாக
உருவாக்கியிருக் கிறார்கள்! வாம மார்க்கத்தில் சென்ற காரணத்தால் கருப்பாக்கி
விட்டனர். பிறகு ஞான சிதையில் அமர்வதால் வெள்ளையாகி விடுகிறார்கள். ஜகதம்பா
இனிமையான மம்மா,
அனைவரின்
மனோ விருப்பங்களை நிறைவேற்றக் கூடியவர். அவரின் சிலையையும் கருப்பாக உருவாக்கி
விட்டனர். எத்தனை தேவிகளை உருவாக்குகிறார்கள். பூஜை செய்து விட்டு கடலில்
மூழ்கடித்து விடுகிறார்கள். எனவே இது பொம்மை பூஜையாகி விட்டது அல்லவா? இது அனைத்தும் நாடகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் நடக்கும் என பாபா கூறுகிறார். பக்தி
மார்க்கம் மிகவும் விஸ்தாரமானதாகும். எத்தனை கோவில்கள்! எத்தனை சித்திரங்கள், சாஸ்திரங்கள் போன்றவை உள்ளன!
கேட்காதீர்கள். நேரமும் வீணா கிறது..... பணமும் வீணாகிறது...... இச்சமயம்
மனிதர்களின் புத்தி முற்றிலும் கீழான புத்தியாக இருக்கிறது. கிளிஞ்சல் போன்றாகி
விட்டார்கள். இப்போது பக்தி மார்க்கத்தில் நிறைய ஏமாற்றத்தை அடைந்து விட்டீர்கள்
என்று பாபா கூறுகின்றார். இப்போது பாபா இந்த குழப்பங் களிலிருந்து விடுவிக்கிறார்.
பாபாவையும் ஆஸ்தியையும் மட்டும் நினையுங்கள். மேலும் நிச்சயமாக தூய்மையாக
வேண்டியிருக்கிறது. பத்தியமும் இருக்க வேண்டி யிருக்கிறது. இல்லை என்றால் எப்படி
உணவோ அப்படி மனம் ஆகிவிடுகிறது. சந்நியாசிகள் கூட இல்லறத்தில் இருப்பவர்களிடம்
தான் பிறப்பு எடுக்க வேண்டியிருக்கிறது. அது இரஜோ பிரதான மான சந்நியாசம் ஆகும்.
இது சதோபிரதானமான சந்நியாசம் ஆகும். நீங்கள் பழைய உலகத்தை சந்நியாசம்
செய்கிறீர்கள். அந்த சந்நியாசத்தில் கூட எவ்வளவு பலம் இருக்கிறது. குடியரசுத்
தலைவர்கள் கூட குருக்களுக்கு முன்பு தலை வணங்குகிறார்கள். பாரதம் தூய்மையாக
இருந்தது. அதனுடைய மகிமைகள் பாடப்படுகிறது. பாரதவாசிகள் சர்வ குணமும் நிறைந்தவர்
களாக இருந்தனர். இப்போது சம்பூர்ண விகாரிகளாக இருக் கிறார்கள். தேவதைகளின்
கோவிலுக்குச் செல்கிறார்கள் என்றால், நிச்சயமாக அந்த தர்மத்தைச் சார்ந்தவர்கள்.
குரு நானக்கின் கோவிலுக்கு செல்கிறார்கள் என்றால், நிச்சயம் சீக்கிய தர்மத்தைச் சார்ந்தவர்களாக
இருப்பார்கள் அல்லவா?
ஆனால்
இவர்கள் அனைவரும் தங்களை தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ள
முடியாது. ஏனென்றால் தூய்மையானவர்களாக இல்லை.
மீண்டும் சிவாலயத்தை உருவாக்குவதற்காக வந்திருக்கிறேன் என்று தந்தை கூறு
கின்றார். சொர்க்கத்தில் தேவி தேவதைகள் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த ஞானம்
மறைந்து போகிறது. கீதை இராமாயணம் போன்ற அனைத்தும் அழியப் போகின்றது. நாடகத்தின்
படி மீண்டும் தனது நேரத்தில் வருவார்கள். எவ்வளவு புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம்
ஆகும். இந்த பாடசாலை தான் மனிதனிலிருந்து தேவதையாக மாறக் கூடிய பாடசாலையாகும்.
ஆனால் மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதி ஒருகாலும் அளிக்க முடியாது. அற்பகால சுகத்தை
அனைவரும் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள். இங்கேயோ அற்பகால
சுகமாகும். மற்றபடி துக்கமே துக்கம் தான். சத்யுகத்தில் துக்கத்தின் பெயரே இல்லை.
பெயரே சொர்க்கம்,
சுக
தாமம்! சொர்க்கத்தின் பெயர் எவ்வளவு பிரசித்தமாக இருக்கிறது! நல்லது குடுபத்தில்
இருங்கள். ஆனால் இந்த கடைசி பிறவியில் பாபாவிடம் பாபா நான் உங்களுடைய குழந்தை, இந்தக் கடைசி பிறவி நிச்சயமாக
தூய்மையாகி தூய்மையான உலகத்தின் ஆஸ்தியை எடுப்பேன் என்று உறுதிமொழி எடுக்க
வேண்டும் என பாபா கூறுகிறார். பாபாவை நினைப்பது மிகவும் எளிதாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தேக அகங்காரத்தை விட்டு விட்டு ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். அசரிரீ ஆவதற்கு
பயிற்சி செய்ய வேண்டும்.
2. நாடகத்தின் உண்மையைப் புரிந்து கொண்டு முயற்சி செய்ய வேண்டும். நாடகத்தில்
இருந்தால் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.
வரதானம்:
சங்கமயுகத்தின் மகத்துவத்தைத் தெரிந்து கொண்டு சிரேஷ்ட வெகுமதியை உருவாக்கக்
கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக,
சங்கமயுகம்
என்பது மிகச் சிறிய யுகமாக இருக்கிறது, இந்த யுகத்தில் தான் பாபாவுடன் இருப்பதை
அனுபவம் செய்கிறோம். சங்கமயுக நேரம் மற்றும் இந்த வாழ்க்கை இரண்டுமே வைரத்திற்கு
சமமாக இருக்கிறது. எனவே இந்தளவு மகத்துவதை தெரிந்து கொண்டி ருந்தாலும் ஒரு நொடி
கூட துணையை விட்டு பிரிந்து இருக்கக் கூடாது. நொடிப் பொழுது சென்றாலும் கூட அது
நொடி இழக்கவில்லை,
அனைத்தும்
சென்றுவிட்டது. முழு கல்பத்தில் சிரேஷ்டமான வெகுமதியை சேமிப்பதற்கான யுகம்
இதுதான். ஒருவேளை இந்த யுகத்தின் மகத்துவத்தையும் நினைவில் வைத்தீர்கள் என்றால்
தீவிர முயற்சியின் மூலம் இராஜ்ய அதிகாரத்தை அடைந்து விடலாம்.
சுலோகன்:
அனைவருக்கும் அன்பையும், ஒத்துழைப்பையும் கொடுப்பது தான் உலக சேவாதாரி ஆவதாகும்.
0 Comments