06-02-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
பிராமணர்களாகிய நீங்கள்
இப்போது மிக
உயர்ந்த (இலட்சிய)
யாத்திரையில் இருக்கிறீர்கள்,
ஆகையால் உங்களுக்கு
இரட்டை என்ஜின்
கிடைத்திருக்கிறது, இரண்டு
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையர்
இருக்கின்றனர், அது
போல் இரண்டு
தாய்மார்களும் உள்ளனர்.
கேள்வி:
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய
நீங்கள் எந்த பட்டப் பெயரை (டைட்டில்) வைத்துக் கொள்ள முடியாது?
பதில்:
புனிதர் (ஹிஸ் ஹோலினஸ்/ ஹெர் ஹோலினஸ்) என்ற பட்டப் பெயரை பி.கு.க்களாகிய நீங்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ளவோ, எழுதவோ முடியாது, ஏனென்றால் உங்களின் ஆத்மா தூய்மையடைந்து கொண்டிருக்கிறது எனினும் சரீரம் தமோபிரதானமான தத்துவங்களால்
ஆனதாகும். இந்தப் பெருமையை இப்போது நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் இப்போது முயற்சியாளர்களாக
இருக்கிறீர்கள்.
பாடல்: இந்தக் கதை தீபம் மற்றும் புயலினுடையது. . .
ஓம் சாந்தி.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார்.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையர் இருவர் இருக்கின்றனர் எனும்போது கண்டிப்பாக இரண்டு தாய்மார்களும் இருப்பார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொண்டு விட்டனர்.
ஒருவர் ஜகதம்பா,
மற்றொருவர் இந்த பிரம்மாவும் தாயாக இருக்கிறார். இருவரும் அமர்ந்து புரிய வைக்கும்போது உங்களுக்கு இரட்டை என்ஜின் கிடைத்தது போலாயிற்று.
மலை மீது வண்டி செல்லும்போது இரட்டை என்ஜின் பொருத்துகின்றனர் அல்லவா.
இப்போது பிராமணர்களாகிய நீங்களும் கூட உயர்ந்த யாத்திரையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது அடர்ந்த காரிருளாக இருக்கிறது என இப்போது நீங்கள் அறிவீர்கள்.
இறுதிக் காலம் வரும்போது கூச்சல் குழப்பம் அதிகமாக ஏற்படுகிறது. உலகம் மாறும்போது இப்படி நடக்கிறது. இராஜ்யம் மாறுதல் அடையும்போது கூட அடிதடி சண்டைகள் ஏற்படுகின்றன.
இப்போது புதிய இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக் கிறது என குழந்தைகளுக்குத் தெரியும்.
அடர்ந்த காரிருளிலிருந்து மிகுந்த பிரகாசமாக ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த முழு சக்கரத்தின் வரலாறு - புவியியலை அறிந்திருக்கிறீர்கள் எனும்போது மற்றவர் களுக்கும் புரிய வைக்க வேண்டும். பல தாய்மார்கள் அல்லது குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் படிப்பை சொல்லிக் கொடுக்கும்போது இந்த எல்லைக்கப்பாற்பட்ட வரலாறு புவியியலை புரிய வைத்தார்கள் என்றால் இதில் அரசாங்கத்தினர் எதுவும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். அரசாங்கத்திலுள்ள பெரியவர்களுக்கும் கூட புரிய வைக்க வேண்டும், அப்போது அவர்கள் இன்னும் குஷியடைவார்கள். எதுவரை இந்த எல்லைக்கப்பாற்பட்ட வரலாறு, புவியியலை புரிந்து கொள்ளவில்லையோ அதுவரை குழந்தைகளுக்கு நன்மை ஏற்பட வாய்ப் பில்லை,
உலகத்தில் வெற்றி கோஷம் எழ முடியாது என அவர் களுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கான சைகை கொடுக்கப்படுகிறது. ஆசிரியராக இருந்தால் கல்லூரியில் இந்த உலகின் வரலாறு,
புவியியலை அமர்ந்து புரிய வைத்தீர்கள் என்றால் குழந்தைகள் திரிகாலதரிசிகளாக (மூன்று காலங்களையும் அறிந்தவர்களாக) ஆக முடியும்.
மேலும் திரிகாலதரிசிகளாக ஆவதன் மூலம் சக்கரவர்த்தி இராஜாவாக ஆக முடியும்.
தந்தை உங்களை திரிகால தரிசிகளாகவும், சுயதரிசன சக்கரதாரிகளாகவும் ஆக்கியிருக்கிறார் எனும் போது நீங்கள் பிறகு மற்றவர்களையும் தமக்குச் சமமாக ஆக்க வேண்டும்.
இப்போது இந்த பழைய உலகம் மாறிக்கொண்டிருக்கிறது என மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
தமோபிர தானமான உலகம் மாறி சதோபிரதானமாக ஆகிக் கொண்டிருக்கிறது. சதோபிரதானமாக ஆக்குபவர் ஒரே ஒரு பரமபிதா பரமாத்மா மட்டுமே ஆவார், அவர் சகஜ இராஜயோகம் மற்றும் சுயதரிசன சக்கரத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார். சக்கரத்தைப் பற்றி புரிய வைப்பது மிகவும் சகஜமே யாகும்.
இந்த சக்கரத்தை
(படத்தை) முன்னால் வைத்தால் கூட சத்யுகத்தில் யார் யார் இராஜ்யம் செய்து கொண்டிருந்தனர் என மனிதர்கள் வந்து புரிந்து கொள்ள முடியும்.
பிறகு துவாபரத்திலிருந்து மற்ற பல தர்மங்கள் வளர்ச்சியடைகின்றன. இப்படி நல்ல விதமாக புரியவைக்கபட்டது என்றால் புத்தியின் கதவு கண்டிப்பாக திறக்கும். இந்த சக்கரத்தை முன்னால் வைத்து நீங்கள் நல்ல விதமாக புரிய வைக்க முடியும். தலைப்பும் கூட வைக்க முடியும். வாருங்கள்,
நாங்கள் உங்களுக்கு திரிகாலதரிசி ஆகக் கூடிய வழியை காட்டுகிறோம், அதன் மூலம் நீங்கள் இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக முடியும்.
பிராமணர்களாகிய நீங்கள்தான் இந்த சக்கரத்தைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள், எனவே நீங்கள் சக்கரவர்த்தி இராஜாவாக ஆகிறீர்கள்.
ஆனால் யார் இந்த சக்கரத்தை புத்தியில் சுழற்றியபடி இருக் கின்றனரோ அவர்கள்தான் ஆவார்கள்.
தந்தை ஞானக்கடலாக இருக்கிறார், அவர் அமர்ந்து குழந்தைகளுக்கு சிருஷ்டியின் முதல்,
இடை, கடைசியின் ஞானத்தைக் கூறுகிறார்.
மற்ற மனிதர்களுக்கு எதுவும் தெரியாது.
ஈஸ்வரன் எங்கும் நிறைந்தவர் என சொல்வதன் மூலம் ஞானத்தின் விஷயமே வெளிப்படுவதில்லை. ஈஸ்வரனை அறிந்து கொள்வதற்கான முயற்சி யையும் கூட யாரும் செய்வதில்லை என்றால் பிறகு பக்தியும் நடக்கப் போவதில்லை.
ஆனால் எதையெல்லாம் சொல்கின்றனரோ, அது குறித்து கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை.
பக்குவமற்றவர்கள் அவர் எப்படி எங்கும் நிறைந்தவர் அல்ல என்பதை புரிய வைக்கவும் முடியாது.
யாரோ ஒருவர் சொன்னார், உடன் மற்றவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர்.
யாரோ ஆதி தேவனை மஹாவீரர் என சொன்னார்,
உடன் அந்தப் பெயரே நிலைத்து விட்டது - அது போல. யார் எந்தப் பெயரை புரியாமல் வைத்தாரோ அந்தப் பெயரே தொடர்ந்து வருகிறது.
நீங்கள் மனிதராக இருந்தும் படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள வில்லை,
தேவதைகளின் பூஜை செய்கிறீர்கள், ஆனால் அவர்களின் வாழ்க்கை வரலாறு தெரியாது என்றால் இதனை குருட்டு நம்பிக்கை என சொல்லப்படுகிறது. இவ்வளவு தேவி தேவதைகள் இராஜ்யம் செய்து விட்டுச் சென்றனர் எனும்போது கண்டிப்பாக அவர்கள் புத்திசாலிகளாக இருந்தார்கள்,
அதனால்தான் பூஜைக்குரியவர்களாக ஆகினார்கள். இப்போது பிரம்மாவின் முகவம்சாவளியினராகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கேட்டு புத்திசாலிகளாக ஆகிறீர்கள்.
மற்றபடி முழு உலகத்தையும் இராவணன் சிறையில் அடைத்து வைத்திருக்கிறான். இது இராவணனின் சிறைச்சாலையாக இருக்கிறது, இதில் அனைவருமே சோக வனத்தில் உள்ளனர்.
அமைதி எப்படி ஏற்படுவது என மாநாடுகளை நடத்துகின்றனர். ஆக, அசாந்தியும் துக்கமும் உள்ளன,
அதாவது அனைவருமே சோக வனத்தில் அமர்ந்திருக்கின்றனர். இப்போது சோக வனத்திலிருந்து, அசோக வனத்திற்கு யாரும் உடனே போவதில்லை. இந்த சமயத்தில் யாருமே அமைதி அல்லது சுக வனத்தில் இல்லை. சத்யுகத்தை அசோக வனம் என சொல்வோம்,
இது சங்கமயுகமாகும், உங்களை முழுமையான தூய்மையானவர் என ஏதும் சொல்ல முடியாது. புனிதர்
(ஹிஸ் ஹோலினஸ்)
என எந்த பி.கு.க்களும் தம்மை சொல்லிக் கொள்ளவோ எழுதவோ முடியாது.
புனிதர்கள் (ஹிஸ் ஹோலினஸ் மற்றும் ஹெர் ஹோலினஸ்)
சத்யுகத்தில் இருப்பார்கள்.
கலியுகத்தில் எங்கிருந்து வந்தார்கள்? ஆத்மா இங்கே தூய்மை யடைந்து கொண்டிருக்கிறது, ஆனால் சரீரமும் தூய்மையாக இருக்க வேண்டும், அப்போது புனிதர் (ஹிஸ் ஹோலினஸ்) என சொல்ல முடியும்,
ஆகையால் இந்த ஒரு பெருமையை எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்போது நீங்கள் முயற்சியாளர்களாக இருக்கிறீர்கள். ஸ்ரீ ஸ்ரீ அல்லது புனிதர் (ஹிஸ் ஹோலினஸ்) என சன்னியாசிகளைக் கூட சொல்ல முடியாது என தந்தை சொல்கிறார். ஆத்மா தூய்மையடைகிறது, ஆனால் சரீரம் எங்கே தூய்மையாய் இருக்கிறது?
ஆக அரை குறை என்றாகி விட்டதல்லவா. இந்த தூய்மையற்ற உலகத்தில் புனிதர் (ஹிஸ் அல்லது ஹர் ஹோலினஸ்) என யாரும் இருக்க முடியாது. ஆத்மாவும் பரமாத்மாவும் எப்போதும் சுத்தமானவர்கள் என அவர்கள் புரிந்து கொள் கின்றனர்,
ஆனால் சரீரமும் கூட சுத்தமாக இருக்க வேண்டும்.
ஆம், இலட்சுமி நாராயணரை சொல்ல முடியும், ஏனென்றால் அங்கே சரீரமும் கூட சதோபிரதானமான தத்துவங்களால் ஆனதாக இருக்கும். இங்கே தத்துவங்களும் கூட தமோபிரதானமாக இருக்கின்றன.
இந்த சமயத்தில் யாரையும் முற்றிலும் தூய்மையானவர்கள் என சொல்ல முடியாது.
தூய்மையாக சிறு குழந்தைகள் கூட இருக்கின்றனர். தேவதைகள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தனர்.
ஆக, தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார் - நீங்கள் எவ்வளவு புத்திசாலிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சக்கரத்தைப் பற்றின ஞானமும் முழுமையாக உள்ளது.
இந்த சைதன்யமான மரத்தின் விதை ரூபமாக இருக்கும் பரமபிதா பரமாத்மாவுக்கு முழு மரத்தின் ஞானம் உள்ளது,
அவர்தான் உங்களுக்கு ஞானத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தின் மூலம் நீங்கள் யார் மீதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
நீங்கள் பரமதாமத்திலிருந்து இங்கே வந்து சரீரத்தை தாரணை செய்து நடிப்பை நடித்துக் கொண்டிருக் கிறீர்கள் என புரிய வைக்க வேண்டும். இப்போது கடைசியில் அனைவருமே திரும்பிச் செல்ல வேண்டும், பிறகு வந்து தனது நடிப்பை நடிக்க வேண்டும். இங்கே இப்போது யார் முயற்சி செய்வார்களோ அவர்கள் அதற்குத் தகுந்தாற்போல இராஜாக்களிடமோ, செல்வந்தர்களிடமோ சென்று பிறவி எடுப்பார்கள்.
அனைவருமே வரிசைக்கிரமமாக பதவியை அடைவார்கள்.
வரிசைக் கிரமமாக வகுப்பு மாற்றல் அடைந்து செல்வார்கள்.
இதுவும் காட்டப்பட்டிருக்கிறது - எங்கே வெற்றியோ அங்கே
(அதற்கேற்ப) பிறவி.
. . இப்போது இந்த விசயங்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.
முன்னே போகப் போக வெளிச்சம்
(வழி) கிடைத்துக் கொண்டே இருக்கும்,
இந்த அளவில் மட்டும் இப்போது உள்ளது - இப்போது சரீரத்தை விடுபவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வீட்டில் பிறவி கிடைக்கும். எந்தக் குழந்தைகள் அதிகமாக முயற்சி செய்கின்றனரோ அவர்களுக்கு குஷியும் அதிக அளவில் ஏறும். யார் சேவையில் மூழ்கி இருக்கின்றனரோ அவர்களுக்கு போதை இருக்கும்.
உங்களைத் தவிர மற்ற அனைவரும் இருளில் இருக்கின்றனர். கங்கா ஸ்நானம் முதலாவை செய்வதன் மூலம் எந்தப் பாவத்தையும் கழுவ முடியாது. யோக அக்னியின் மூலம் தான் பாவங்கள் பஸ்மம் ஆகும்.
இந்த இராவணனின் சிறையில் இருந்து விடுவிப்பவர் ஒரு தந்தையே ஆவார்,
எனவேதான் பதித பாவனா. . . என பாடுகின்றனர். ஆனால் தன்னை பாவாத்மா என புரிந்து கொள்வதில்லை. கல்பத்திற்கு முன்பும் கூட இவர்களை கன்னியர்களான உங்கள் மூலம்தான் முன்னேற்றினேன் என தந்தை சொல்கிறார்.
கீதையிலும் கூட எழுதப்பட்டுள்ளது, ஆனால் யாரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் புரிய வைக்க முடியும் - இந்த தூய்மையற்ற உலகத்தில் ஒருவர் கூட தூய்மையானவர் கிடையாது.
ஆனால் புரிய வைப்பதற்கு நிறைய தைரியம் வேண்டும்.
உலகம் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்போது ஈஸ்வரனுக்கு குழந்தையாக ஆகியிருக்கிறீர்கள். இந்த பிராமண குலம் அனைத்தையும் விட உயர்ந்ததாகும். உங்களுக்கு சுயதரிசன சக்கரத்தின் ஞானம் இருக்கிறது. பிறகு விஷ்ணுவின் குலத்தில் செல்லும்போது உங்களுக்கு இந்த ஞானம் இருக்காது. இப்போது ஞானம் இருக்கிறது,
ஆகையால் உங்களுக்கு சுயதரிசன சக்கரதாரி என பெயர் வைக்கப் பட்டிருக்கிறது. இந்த ஆழமான விசயங்கள் உங்களைத் தவிர வேறும் யாருக்கும் தெரியாது.
அனைவருமே ஈஸ்வரனுடைய குழந்தைகள் என பேச்சளவில் சொல்லி விடுகின்றனர், ஆனால் நடை முறையில் நீங்கள் இப்போது ஆகியிருக்கிறீர்கள். நல்லது.
அனைத்து இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். தந்தையின் கடமை, குழந்தைகளை நினைப்பது, குழந்தைகளின் கடமை தந்தையை நினைப்பதாகும். ஆனால் குழந்தைகள் அந்த அளவு நினைவு செய்வது கிடையாது. நினைவு செய்தால் ஆஹா சௌபாக்கியமே. நல்லது இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
இரவு வகுப்பு - 08.04.1968
இந்த ஈஸ்வரிய மிஷன் நடந்து கொண்டிருக்கிறது. யார் நம்முடைய தேவி தேவதா தர்மத்தினரோ அவர்கள் வந்து விடுவார்கள் - கிறிஸ்தவர்களாக ஆக்குவதற்காக அவர் களுடைய மிஷன் இருப்பது போல.
கிறிஸ்தவர்களாக ஆகக் கூடியவர்களுக்கு கிறிஸ்தவ இராஜ்யத்தில் சுகம் கிடைக்கிறது. நல்ல சம்பளம் கிடைக்கிறது,
ஆகையால் கிறிஸ்தவர்கள் அதிகரித்து விட்டனர்.
பாரதவாசிகள் இவ்வளவு சம்பளம் முதலானவைகளை கொடுக்க முடியாது.
இங்கே நிறைய ஊழல் உள்ளது.
இடையில் லஞ்சம் வாங்காவிட்டால் வேலையி-ருந்து நீக்கம்..
இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என குழந்தைகள் தந்தையிடம் கேட்கின்றனர்.
யுக்தியுடன் காரியம் செய்யுங்கள், பிறகு சுப காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என சொல்வார்.
-
வந்து தூய்மையற்ற எங்களை தூய்மையாக்குங்கள், விடுவியுங்கள், வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று இங்கே அனைவரும் தந்தையை அழைக்கின்றனர் .தந்தை கண்டிப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார் அல்லவா. வீட்டிற்குச் செல்வதற் காகத்தான் இவ்வளவு பக்தி முதலானவைகளை செய்கின்றனர்.
ஆனால் தந்தை எப்போது வருவாரோ அப்போதுதான் அழைத்துச் செல்வார். பகவான் ஒருவரே ஆவார்.
அனைவருக் குள்ளும் பகவான் வந்து பேசுகிறார் என்பதல்ல.
அவர் வருவதே சங்கமயுகத்தில் ஆகும்.
இப்போது நீங்கள் அப்படியும் இப்படியுமான விசயங்களை ஏற்றுக் கொள்வதில்லை. முன்னர் ஏற்றுக் கொண்டிருந்தீர்கள். இப்போது நீங்கள் பக்தி செய்வதில்லை.
நாங்கள் முன்னர் பூஜை செய்து கொண்டிருந்தோம், எங்களை பூஜைக்குரிய தேவதைகளாக ஆக்கு வதற்காக இப்போது தந்தை வந்திருக்கிறார் என நீங்கள் சொல்கிறீர்கள். சீக்கியர்களுக்கும் கூட நீங்கள் புரிய வையுங்கள். மனிதரிலிருந்து தேவதையாக ஆக்கினார்.....
என்ற பாடல் உள்ளதல்லவா. தேவதைகளுக்கு மகிமை உள்ளது.
தேவதைகள் சத்யுகத்தில் வசிக்கின்றனர். இப்போது க-யுகம்.
பாபா சங்கம யுகத்தில் வந்து புருஷோத்தமர்களாக ஆவதற்கான கல்வி கற்றுத் தருகிறார். தேவதைகள் அனைவரையும் விட உத்தமமானவர்கள். அதனால் தான் இந்தளவு பூஜை செய்கின்றனர்.
யாரை பூஜிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக இருந்துள்ளனர். இப்போது இல்லை. இராஜதானி இருந்து முடிந்துவிட்டது என்று புரிந்துள்ளனர். இப்போது நீங்கள் மறைமுகமாக (குப்தமாக)
இருக்கின்றீர்கள். நாம் உலகிற்கு எஜமானனாகக் கூடியவர்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. நாம் படித்து இப்படி ஆகிறோம் என்பதை அறிவீர்கள். ஆக படிப்பின் மீது முழு கவனம் கொடுக்க வேண்டும்.
தந்தையை மிகவும் அன்போடு நினைவு செய்ய வேண்டும்.
பாபா நம்மை உலகின் எஜமானாக ஆக்குகிறார் எனும்போது ஏன் நினைவு செய்ய மாட்டோம்.
பிறகு தெய்வீக குணங்களும் தேவை.
மற்றொரு இரவு வகுப்பு 09.04.1968
இன்றைய நாட்களில் உலகில் எப்படி அமைதி ஏற்படும் என்ற மாநாடுகளை பெரும்பாலும் ஏற்பாடு செய்கின்றனர். அவர்களுக்குச் சொல்ல வேண்டும்
- பாருங்கள், சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம், ஒரே ஒரு இராஜ்யம்,
அத்வைத தர்மம் இருந்தது. கை தட்டுவதற்கு (சண்டை ஏற்படுவதற்கு) வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. இராம இராஜ்யமாகத்தான் இருந்தது,
அப்போதுதான் உலகில் அமைதி இருந்தது.
உலகில் அமைதி ஏற்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். அது சத்யுகத்தில் இருந்தது.
பின்னர் பல தர்மங்கள் உண்டானதால் அசாந்தி ஏற்பட்டது.
ஆனால் எதுவரை புரிந்து கொள்ள வில்லையோ அதுவரை மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னும் போகப்போக செய்தித்தாள்களிலும் வெளிவரும்.
பிறகு இந்த சன்னியாசிகள் முதலானவர் களின் காதுகளும் திறக்கும். குழந்தைகளுக்காக நம்முடைய இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக் கிறது.
இதே போதை இருக்கிறது. மியூசியத்தின் (காட்சிச் சாலை)
சிறப்பான ஏற்பாட்டைக் கண்டு பலரும் வருவார்கள். உள்ளே வந்து ஆச்சரியப்படுவார்கள். புதிய புதிய படங்கள் குறித்து புதிய புதிய விசயங்களை கேட்பார்கள்.
நினைவின் தொடர்பை ஈடுபடுத்துவது (யோகம்)
முக்தி, ஜீவன்முக்திக்காக என குழந்தைகளுக்குத் தெரியும். அதனை மனிதர்கள் கற்றுத் தர முடியாது.
பரமபிதா
பரமாத்மாவைத் தவிர முக்தி, ஜீவன் முக்திக்கான யோகத்தை வேறு யாரும் கற்றுத் தர முடியாது என்பதையும் எழுதிப் போட வேண்டும். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒருவரே ஆவார். இதனை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்,
அதனை மனிதர்கள் படிக்கட்டும். சன்னியாசிகள் எதனை கற்றுத் தரப் போகிறார்கள்?
யோகம், யோகம் என எதையோ செய்கின்றனர், உண்மையில் யாரும் யோகம் கற்றுத் தர முடியாது. மகிமையே ஒருவருடைய தாகும்.
உலகில் அமைதியை ஸ்தாபனை செய்வதும்,
முக்தி, ஜீவன் முக்தியை கொடுப்பதும் தந்தையின் காரியம்தான் ஆகும். இவ்வாறெல்லாம் மனன சிந்தனை செய்து கருத்துகளை புரிய வைக்க வேண்டும். மனிதர்களுக்கு விசயம் சரியே என தோன்றும்படியாக எழுதிப் போட வேண்டும். இந்த உலகம் மாறத்தான் வேண்டி யுள்ளது.
இது மரணலோகமாகும்.
புதிய உலகம் அமரலோகம் எனப்படுகிறது.
அமரலோ கத்தில் மனிதர்கள் எப்படி அமரர்களாக இருக்கின்றனர் என்பது அதிசயமானதல்லவா. அங்கே ஆயுளும் அதிகமாக இருக்கும்,
அந்த சமயத்தில் உடையை மாற்றுவது போல தாமாக சரீரத்தை மாற்றம் செய்து விடுகின்றனர்.
இவையனைத்தும் புரிய வைக்க வேண்டிய விசயங்கள் ஆகும்.
நல்லது!
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை மற்றும் தாதாவின் (மூத்த சகோதரரின்) அன்பு நினைவுகள், இரவு வணக்கம் மற்றும் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தின் மூலம் தானும் திரிகாலதரிசி மற்றும் சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும் மற்றும் பிறரையும் ஆக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும்.
2.
சங்கமயுகத்தில் சோகவனத்திலிருந்து வெளியேறி, சுகம்,
அமைதியின் வனத்திற்குச் செல்வதற்காக கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும்.
வரதானம்:
ஞானத்தை அழகாக
(இரம்மியமான) சிந்தனை
செய்து முன்னேற
கூடிய சதா
புன்முறுவல், பாக்கியசாலி
ஆகுக.
இங்கு ஆத்மா, பரமாத்மா என்பது போன்ற வறண்ட ஞானம் மட்டும் கிடையாது, மிகவும் இரம்மியமான ஞானமாக இருக்கிறது, தினந்தோறும்
புது புது டைட்டிலை (பட்ட பெயரை) நினைவில் வையுங்கள் - நான் ஆத்மா தான், ஆனால் எப்படிப்பட்ட ஆத்மாவாக இருக்கிறேன்.
சில நேரங்களில் ஆர்டிஸ்ட் (கலைஞன்) என்ற நடிப்பை நடிக்கக்கூடிய ஆத்மாவாக, சில நேரங்களில் வியாபாரியாக,
. அதுபோன்ற இரம்மியமாக முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள்.
பாபாவும் கூட சில நேரங்களில் வண்ணானாக இருக்கிறார், சில நேரங்களில் உலகத்தை படைக்கக் கூடியவராக இருக்கிறார், சில நேரங்களில் கீழ்படிந்துள்ள சேவகனாகவும் . இரம்மியமாக (அழகாக) இருப்பதை போன்று பாருங்கள். எனவே தந்தை எப்படியோ, அப்படியே குழந்தைகளும்,
. அதுபோல இந்த ரம்மியமான ஞானத்தை சிந்தைனை செய்து புன்முறுவலுடன் இருங்கள், அப்பொழுது தான் பாக்கியசாலி
என்று சொல்ல முடியும்.
சுலோகன்:
யாருடைய ஒவ்வொரு நரம்பும் அதாவது எண்ணத்திலும்
ஊக்க உற்சாகத்தின்
உதிரம் நிறைந்திருக்கிறதோ, அவர்கள் தான் உண்மையான சேவாதாரி ஆவார்கள்.


0 Comments