Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam
20-05-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! தன்னுடைய இந்த வாழ்க்கையை சோழியிலிருந்து வைரம் போன்று
உருவாக்க வேண்டுமெனில் நேரத்தை பயனுடையதாக ஆக்கிக் கொள்ளுங்கள், அவகுணங்களை நீக்குங்கள், சாப்பிடுவது - அருந்துதல்
மற்றும் தூங்குவதில் நேரத்தை விரயமாக்காதீர்கள்.
கேள்வி:
மனிதர்கள் எந்த ஒரு வார்த்தையை சொல்வதனால் அனைவரும் பகவானின் ரூபம் என்று
புரிந்து கொண்டிருக்கின்றனர்?
பதில்:
நான் இந்த நேரத்தில் பல ருபங்களை தரிப்பவனாக இருக்கிறேன் என்று பாபா கூறு
கின்றார். இங்கு முரளி நடத்தும் போது பரந்தாமம் காலியாகி விடும் என்பது கிடையாது.
நான் இந்த நேரத்தில் அதிக காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதிக சேவைகள்
நடைபெறு கிறது குழந்தைகளுக்கு, பக்தர்களுக்கு சாட்சாத்காரம் செய்விக்க வேண்டியிருக்கிறது. நான் இந்த
நேரத்தில் பல வேடங்களை தாரணை செய்கிறேன் இந்த ஒரு வார்த்தையால் அனைத்தும் பகவானின்
ரூபம் என்று மனிதர்கள் கூறி விட்டனர்.
கேள்வி:
தந்தையின் எந்த ஸ்ரீமத்தை கடைபிடிப்பவர்கள் நல்ல குழந்தைகள் ஆவார்கள்?
பதில்:
பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! ஒருபோதும் சேவைக்கு புறம்பான காரியங்கள்
செய்யாதீர்கள்,
நேரம்
மிகவும் மதிப்பு வாய்ந்தது,
தூக்கத்தினால்
இதை இழந்து விடாதீர்கள். குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் எனக்காக ஒதுக்குங்கள். இந்த
ஸ்ரீமத்தை கடைபிடிப் பவர்கள் நல்ல குழந்தைகள் ஆவார்கள்.
பாடல்: நீங்கள் இரவெல்லாம் தூங்கி கழித்தீர்கள் .....
ஓம்சாந்தி. குழந்தைகளுக்கு தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். நாம்
அனைவரும் தந்தையின் குழந்தைகள் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். நமது சரீரத்தின்
தந்தை சரீர முடையவர் ஆவார்,
ஆனால்
அசரீரியான ஆத்மாவின் தந்தையும் அசரீரியாக இருக்கின்றார். எல்லையற்ற தந்தையிடமிருந்து
எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்பதை தந்தை புரிய வைத்திருக்கின்றார்.
இப்போது ஆரம்பமாகிறது,
இது
திரேதா கடைசி வரை நடைபெறும். எதிர்கால 21 பிறவிகளின் பலனை அடைவதற்காக நீங்கள் இப்போது
முயற்சி செய்து கொண்டி ருக்கிறீர்கள். பிறகு எல்லைக்குட்பட்டது ஆரம்பமாகிறது, எல்லை யற்ற நிலை முடிவடைந்து
விடுகிறது. இது ஆழமான விசயமல்லவா! அரைக்கல்பமாக நாம் எல்லைக்குட்பட்ட தந்தையிட
மிருந்து ஆஸ்தி அடைந்து வந்தோம் மற்றும் எல்லை யற்ற தந்தையை நினைவு செய்து வந்தோம்
என்பதை அறிவீர்கள். ஆத்மாவின் சம்மந்தத்தில் அனைவரும் சகோதரர்கள். அவர் நமது
தந்தை. ஆத்மாக்களாகிய நாம் சகோதர சகோதரர் களாக இருக்கிறோம், பிறகு மனித சிருஷ்டி
படைக்கப்படும் போது சகோதர சகோதரிகளாக ஆகிவிடுகிறோம் என்று கூறுகின்றார். இது புது
படைப்பு அல்லவா! பிறகு குடும்பம் அதிகரிக்கிறது. சித்தப்பா, பெரியப்பா, மாமா போன்ற (உறவுகள்) அனைத்தும்
பின்நாட்களில் உருவாகிறது. இந்த நேரத்தில் தந்தை படைப்பு களை படைத்துக்
கொண்டிருக்கின்றார். சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், வேறு எந்த சம்மந்தமும் கிடையாது. இப்போது
நீங்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டு சகோதர சகோதரி களாக ஆகிவிடுகிறீர்கள். வேறு
சம்மந்தங் களின் தொடர்பும் கிடையாது. இப்போது உங்களுக்கு புது பிறப்பு கிடைத்து
விட்டது. நாம் இப்போது ஈஸ்வரிய குழந்தை என்பதை அறிவீர்கள். சிவ வம்சி பிரம்மா
குமார்,
குமாரிகள்.
பிரம்மா குமார்,
குமாரிகளிடத்தில்
வேறு எந்த சம்மந்தமும் கிடையாது. இந்த நேரத்தில் முழு உலகமும் தூய்மை இல்லாமல்
இருக்கிறது. இதை தூய்மையாக்க வேண்டும். பாபா, நாம் உங்களுடையவர்கள் என்று கூறுகின்றோம்.
பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! எதிர்காலத்திற்காக முயற்சி செய்து தனது
வாழ்க்கையை வைரம் போன்று உருவாக்கிக் கொள்ளுங் கள். முழு நாளும்
சாப்பிடுவது-அருந்துவது,
இரவில்
தூங்கு வது,
தந்தையை
நினைவு செய்யாமல் இருப்பது....... இவ்வாறு இருந்தால் வைரம் போன்ற வாழ்க்கை
கிடைக்காது. சரீர நிர்வாகத்திற்காக காரியங்கள் செய்தாலும், இல்லறத்தில் இருந்தாலும் தாமரை
மலர் போன்று இருக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். நாம் சோழியிலிருந்து வைரம்
அதாவது மனிதனிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை
புரிந்திருக்கிறீர்கள். மனிதர்களிடத்தில் அதிக அவகுணங்கள் உள்ளன. தேவதை களிடம்
நற்குணங்கள் உள்ளன. அதனால் தான் மனிதர்கள் தேவதைகளின் முன் சென்று தனது அவகுணங்களை
கூறுகின்றனர் அல்லவா! நீங்கள் அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள் ....... நாங்கள்
பாவிகள்,
கீழானவர்கள்.
இப்போது தன்னிடத்திலுள்ள அவகுணங்களை நீக்கி ஈஸ்வரிய தெய்வீக குணங்களை தாரணை
செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை நிராகாராக இருக்கின்றார், மனித சிருஷ்டியின் விதையாக
இருக்கின்றார். அவர் சத்தியமானவர், சைத்தன்ய மானவர், ஞானக் கடலாக இருக்கின்றார். இந்த
ஞானம் புத்தியில் அமர்ந்திருக்கிறது அல்லவா! இது புது ஞான மாகும். எந்த வேத
சாஸ்திரங்களிலும் இந்த ஞானம் கிடையாது. இப்போது நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது
பிறகு மறைந்து போய் விடும். இப்போது நாம் அசுர குணமுடைய மனிதனிலிருந்து தெய்வீக
குணங்களை தாரணை செய்து தந்தையின் மூலம் தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை
நீங்கள் அறிவீர்கள். தலை மீதிருக்கும் பாவச்சுமைகளை நாம் தந்தையின் நினைவின் மூலம்
அழிக்கின்றோம். தண்ணீரில் குளித்தால் பாவம் அழிந்து விடும் என்று பக்தி
மார்க்கத்தில் கூறிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் தண்ணீர் மூலம் தூய்மையாக ஆக
முடியாது. ஒருவேளை இவ்வாறு நடக்கிறது எனில் பிறகு பதீத பாவனாகிய தந்தையை ஏன்
நினைவு செய்கின்றனர்?
எதுவும்
புரிந்து கொள்வது கிடையாது. புத்திசாலி மற்றும் புத்தியற்றவர் - இதுவும் ஒரு
நாடகமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலி களாக
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். முழு சிருஷ்டிச் சக்கரத்தை அறிவீர்கள். சரித்திரம், பூகோளத்தை அறிந்து கொள்வதும்
புத்திசாலித் தனம் அல்லவா! அறிந்து கொள்ள வில்லையெனில் அவர்களை புத்தியற்றவர்கள்
என்று கூறலாம் அல்லவா!
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், உங்களை வைரம் போன்று உருவாக்கு வதற்காக நான்
வந்திருக்கிறேன் என்று பாபா தனது அறிமுகத்தை தனது குழந்தைகளுக்கு
கொடுத்திருக்கின்றார். இங்கு கேட்டு விட்டு சென்றதும் சாப்பிட்டீர்கள், தூங்கினீர்கள், முன்பு போன்றே இருந்தீர்கள்
...... என்று கூடாது,
அது சோழி
போன்ற வாழ்க்கையாக இருந்தது. தேவதைகளின் வாழ்க்கை வைரம் போன்றது. அவர்கள்
சொர்க்கத்தில் சுகத்தை அனுபவித்தனர். சித்திரங்களும் உள்ளன அல்லவா! நாமும்
சுகமாகத் தான் இருந்தோம்,
இப்போது
துக்கமாக இருக்கிறோம் என்று முன்பு நீங்கள் அறியாமல் இருந்தீர்கள். நாம் 84 பிறவிகள் எவ்வாறு எடுத்தோம்? என்பதை அறியாமல் இருந்தீர்கள்.
இப்போது நான் கூறுகிறேன். நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்குமளவிற்கு
தகுதியானவர்களாக ஆகி விட்டீர்கள். தந்தை புத்திசாலியாக மாற்றுகின்றார் எனில்
மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். வீட்டிற்கு சென்றதும் அதே பழைய நடத்தைகள்
இருந்து விடக் கூடாது. அறிவுரைகளை பெற்று மற்றவர்களுக்கும் அறிவுரை கொடுக்க
வேண்டும். தந்தையின் அறிமுகம் கொடுப்பதற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. எல்லையற்ற
தந்தை அனைவருக் கும் ஒரே ஒருவர் தான். அனைத்து தர்மத்தினர்களும் அவரையே
அழைக்கின்றனர் - ஹே பரம்பிதா பரமாத்மா அல்லது ஹே பிரபு! பரமாத்மாவை நினைவு செய்யா
தவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைத்து தர்மத்தினர்களுக்கும் தந்தை ஒரே ஒருவர்
தான். ஒருவரைத் தான் அனைவரும் நினைவு செய்கின்றனர். தந்தையிடமிருந்து
ஆஸ்தியடைவதற்கு அனைவரும் உரிமை உள்ளவர்கள் ஆஸ்தி பற்றியும் புரிய வைக்க வேண்டும்.
தந்தை என்ன ஆஸ்தி கொடுக்கின்றார்? முக்தி மற்றும் ஜீவன் முக்தி. இங்கு அனைவரும் ஜீவன் பந்தனத்தில்
இருக்கின்றனர். தந்தை வந்து அனைவரையும் இராவணனின் பந்தனத் திலிருந்து விடுவிக்கின்றார்.
இந்த நேரத்தில் யாரும் ஜீவன் முக்தியில் கிடையாது. ஏனெனில் இராவண இராஜ்யமாகும்.
தேக அபிமானத்தில் இருக்கின்றனர். தேவதைகள் ஆத்ம அபிமானியாக இருப்பதால் நான் ஆத்மா, ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை
எடுப்பேன் என்பதை அறிந்திருப்பார்கள். ஆனால் பரமாத்மாவை அறிந்திருக்கமாட்டார்கள்.
ஒருவேளை பரமாத்மாவை அறிந்திருந்தால் பிறகு முழு சிருஷ்டிச் சக்கரத்தையும் அறிந்து
விடுவர். திரிகாலதர்சிகளாக இருப்பது நீங்கள் மட்டுமே. பிராமணர் களுக்குத் தான்
தந்தை வந்து திரிகாலதர்சிகளாக ஆக்குகின்றார். தேவதைகளே திரிகாலதர்சி களாக இல்லையெனும்
போது அவர்களது வம்சத்தினர்களிடத்திலும் இந்த ஞானம் இருக்காது. பிறகு
மற்றவர்களிடத்தில் இது எங்கிருந்து வரும்? கொடுக்கக் கூடியவரும் ஒரே ஒருவர் தான். எளிய
இராஜயோகத் தின் இந்த ஞானம் யாரிடத்திலும் இருக்க முடியாது. தேவி தேவதை களுக்கான
சாஸ்திரமும் இருக்க வேண்டும். நாடகப்படி அவர்களுடையதை சாஸ்திரமாக உருவாக்க வேண்டி
யிருக்கிறது. கீதை,
பாகவதம்
போன்ற அனைத்தும் இவ்வாறே மீண்டும் உருவாகும். கிரந்தமும் இவ்வாறே உருவாகும்.
இப்போது கிரந்தம் எவ்வளவு பெரியதாக ஆகிவிட்டது! அது மிகச் சிறயதாக இருந்தது -
கைகளினால் எழுதப்பட்டதாகும். பின்நாட்களில் பெரியதாக்கினர். இதுவும் அவ்வாறே
இருக்கிறது. இதை கிரந்தம் போன்று உருவாக்கினால் மிகப் பெரியதாக ஆகிவிடும். பிறகு
அதை சுருக்கமாக ஆக்கப்படுகிறது. கடைசியில் தந்தை இரண்டு வார்த்தை கூறுகின்றார் -
மன்மனாபவ. நான் உங்களுக்கு அனைத்து வேத சாஸ்திரங் களின் சாரத்தை புரிய வைக்கிறேன்.
ஆக அவசியம் பெயரை பயன்படுத்த வேண்டும் அல்லவா! இந்த சாஸ்திரங்களில் இவ்வாறெல்லாம்
இருக்கிறது! அது எந்த தர்ம சாஸ்திரமும் கிடையாது. பாரதத்தின் தர்மம் ஒன்றே ஒன்று
தான். மற்றபடி அது எந்த தர்மத்தின் சாஸ்திரம்? என்பதை ஒரு போதும் நிரூபிக்க முடியாது.
பாரதத்தின் சாஸ்திரம் ஒரே ஒரு கீதை ஆகும். கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும்
சிரோன்மணியானது (முதன்மையானது) என்று பாடப்பட்டிருக் கிறது. கீதையின் மகிமையை
நீங்கள் மிகச் சரியாக அறிந்திருக்கிறீர்கள். இந்த கீதையின் மூலம் தந்தை வந்து
பாரதத்தை சொர்க்கமாக உருவாக்கு கின்றார். பாரதத்தின் சாஸ்திரங் களுக்கு அதிக
மதிப்பு இருக்கிறது. ஆனால் கீதையின் பகவான் யார்? என்பதை அறியாத காரணத்தினால் பொய்யான
உறுதிமொழி எடுக்கின்றனர். இப்போது அதை சரி செய்யுங்கள். நான் சர்வவியாபி என்று
பகவான் கூறவேயில்லை.
சிவபாபா இங்கு வந்து முரளி நடத்தும் போது பரந்தாமத்திலும் இருப்பாரா? என்று குழந்தைகள் கேள்வி
கேட்கின்றனர். இந்த நேரத்தில் நான் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று
பாபா கூறுகின்றார். அதிக சேவைகள் நடைபெறுகிறது. எத்தனையோ குழந்தைகள், பக்தர் களுக்கு சாட்சாத்காரம்
செய்விக்கிறேன்! இந்த நேரத்தில் நான் பல வேடங்களை தரிப்பவனாக இருக்கிறேன். பல
வேடதாரி என்ற வார்த்தையினால் அனைத்து ரூபமும் அவருடையது தான் என்று மனிதர்கள்
புரிந்து கொண்டு விட்டனர். மாயை தலைகீழாக்கி விட்டது. பிறகு தந்தை சீராக்குகின்றார்.
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது முக்திதாமம் செல்வதற்கான முயற்சி செய்கிறீர்கள்.
உங்களது புத்தி முக்திதாமத்தின் பக்கம் இருக்கிறது. தந்தை உங்களுக்கு முயற்சி
செய்விப்பது போன்று வேறு எந்த மனிதனும் செய்விக்க முடியாது. இப்போது தனது
புத்தியோகத்தை அங்கு செலுத்துங்கள். உயிருடன் இருந்து இந்த சரீரத்தை மறந்துக்
கொண்டே செல்லுங்கள். மனிதர்கள் இறந்து விட்டால் சொர்க்கத்திற்கு சென்று விட்டதாக
கூறுகின்றனர்,
இருப்பினும்
அழுது கொண்டே இருக்கின்றனர். தந்தைக்கு நல்ல குழந்தைகளாக இருப்பவர்கள் தான்
தந்தைக்கு உதவியாளர்களாகி சேவை செய்வார்கள். அவர்கள் ஒருபோதும் சேவைக்கு புறம்பாக
எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள். ஒருவேளை யாராவது தீங்கு செய்கிறார்கள் எனில்
அவர்கள் தனக்குத் தானே செய்து கொள்கின்றனர். பாபா கூறுகின்றார் - இனிய குழந்தைகளே!
இந்த நேரம் மிகவும் மதிப்பானது, எதிர்கால 21
பிறவிகளுக்கு
நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். நமக்கு உலக இராஜ்யம் கிடைக்கிறது என்பதை நீங்கள்
அறிவீர்கள்,
எவ்வளவு
உயர்ந்த வருமானம்! ஆக அதிலேயே ஈடுபட்டு விட வேண்டும். தந்தையை நினைவு செய்ய
வேண்டும். எவ்வாறு அரசாங்க வேலை 8 மணி நேரமாக இருக்கிறது! எனக்கும் 8 மணி நேரம் ஒதுக்கிக் கொடுங்கள் என்று
பாபாவும் கூறுகின்றார். இரவில் தூங்கி தனது நேரத்தை வீணாக்காதீர்கள். இரவு பகல்
வருமானம் செய்ய வேண்டும். இது மிகவும் எளிதான, புத்திக்கான விசயமாகும். மனிதர்கள்
தொழிலுக்கு செல்லும் போது கோவில் முன் கை கூப்பி வணங்கி விட்டு கடைக்குச்
செல்கின்றனர். திரும்பி வரும் பொழுது மறந்து விடுகின்றனர், வீட்டு நினைவு வந்து விடுகிறது.
அதுவும் நல்லது தான். ஆனால் அதன் பொருள் புரிந்து கொள்வது கிடையாது.
குழந்தைகளாகிய நீங்கள் கொல்கத்தாவில் மிக நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும்
- காளி தேவிக்கு அங்கு மிகுந்த மகிமை இருக்கிறது. வங்காளத்தினர்களின் சடங்குகள், வழக்கங்கள் தனிப்பட்டதாக
இருக்கின்றன. பிராமணர்களுக்கு அவசியம் மீன் பரிமாறுவர். பெரிய மனிதர்கள் தங்களது
குளத்தில் மீன் வளர்ப்பர்,
பிறகு அதை
பிராமணர்களுக்கும் பரிமாறுவர். இப்போது நீங்கள் உறுதியான வைஷ்ணவர்களாக ஆகிறீர்கள்.
நடைமுறையில் நீங்கள் விஷ்ணுபுரிக்கு செல்கிறீர்கள். அங்கு 4 கைகளுடைய மனிதர்கள் இருப்பர்
என்பது கிடையாது. லெட்சுமி நாராயணன் தான் விஷ்ணு என்று கூறப்படுகின்றார். இரண்டு
கைகள் இவருடையது,
இரண்டு
கைகள் லெட்சுமியினுடையதாகும். நீங்கள் லெட்சுமிக்கு பூஜை செய்கிறீர்கள், உண்மையில் விஷ்ணுவிற்கு செய்கிறீர்கள்.
இருவரும் இருக்கின்றனர் அல்லவா! ஆனால் இந்த நேரத்தில் மகிமை தாய்மார்களுக்கு
இருக்கிறது. ஜெகதம்பாவிற்கு மகிமை இருக்கிறது. லெட்சுமிக்கும் மகிமை
பாடப்பட்டிருக்கிறது. தந்தை வந்து தாய்மார்களின் மூலம் அனைவருக்கும் சத்கதி
கொடுக்கின்றார். ஜெகதம்பாவே பிறகு இராஜ இராஜேஸ்வரியாக ஆகின்றார். தாய்க்கு பூஜை
நடைபெறுகிறது. உண்மையில் ஜெகதம்பா ஒரே ஒருவர் அல்லவா! ஒரே ஒரு சிவலிங்கத்தை
உருவாக்கி பிறகு சிறிய சிறிய சாலிகிராமத்தையும் உருவாக்கு கின்றனர். அதே போன்று
காளிக்கும் சிறிய கோயில்கள் அதிகம் உள்ளன. அவர் தாயின் குழந்தையாக இருக்கின்றார்.
இப்போது தந்தை உங்களை தன்னுடையவராக ஆக்குகின்றார். இது தான் பலி கொடுப்பது என்று
கூறப்படுகிறது. நீங்கள் அவரிடத்தில் பலியாகிறீர்கள், இந்த பிரம்மாவிடத்தில் அல்ல.
ஆக இப்போது நேரத்தை வீணாக்கக் கூடாது என்று தந்தை புரிய வைக்கின்றார். தொழில்
போன்றவைகளை செய்யுங்கள். சாப்பிடும் அளவிற்கு செல்வம் அதிகம் போதுமான தாக உள்ளது
எனில் ஏன் அதிகம் தலை உடைத்துக் கொள்கிறீர்கள்? ஆம், சிவபாபாவின் யக்ஞத்தில் கொடுக்கிறீர்கள்
எனில் உலக சேவையில் ஈடுபடுத்து கிறீர்கள். சென்டர் உருவாக்குங்கள், அங்கு இந்த சகோதரிகள் மனிதனை
தேவதையாக்கக் கூடிய வழி கூறு வார்கள் என்று பாபா கூறுவார். இந்த படிப்பு எவ்வளவு
முதல் தரமானதாக இருக்கிறது! பலருக்கு நன்மை ஏற்பட்டு விடும். இலட்சம், கோடி சம்பாதியுங்கள், ஆனால் பாரதம் தூய்மையாகுமளவிற்கு, சதா ஆரோக்கியமாக ஆகுமளவிற்கு
காரியங்கள் செய்யுங்கள். நீங்கள் இப்போது எதிர்காலத்திற்கான முழு ஆஸ்தியை
அடைகிறீர்கள். அங்கு யாரும் ஏழைகளாக இருக்கமாட்டார்கள். அங்கு இந்த நேரத்திற்கான
பலனை அனுபவிக்கிறீர்கள் எனில் அந்த அளவிற்கு தாரணை செய்ய வேண்டும். உங்களது
ஒவ்வொரு பைசாவும் வைரம் போன்ற தாகும், இதன் மூலம் பாரதம் சொர்க்கமாக ஆகிறது.
மற்றபடி எது மீதமாகுமோ அது அழிந்து விடும். மீதமாகும் செல்வத்தை இந்த சேவையில்
ஈடுபடுத்துங்கள். இது மிகப் பெரிய மருத்துவ மனையாகும். சில ஏழைக் குழந்தைகள்
நாங்கள் 8
அணா
கொடுக்கிறோம்,
கட்டிடத்தில்
செங்கல் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். இங்கு மனிதர்கள் சதா
ஆரோக்கியமானவர்களாக ஆவார்கள் என்பதை நாம் அறிவோம். இங்கு பலர் வருவார்கள். இதுவரை
பார்க்காத அளவிற்கு கூட்டம் (வரிசை) ஏற்பட்டு விடும். ஆக நான் எந்த நிலையிலிருந்து
என்ன ஆகிறேன்?
என்ற
குஷியிருக்க வேண்டும். நாம் சிவபாபாவிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைகிறோம். தந்தை
நிராகார மானவர்,
ஞானக்
கடலானவர். அவர் இந்த ரதத்தில் பிரவேசமாகின்றார். ஆக குழந்தைகள் மிகவும்
கருணையுள்ளம் உடையவர்களாக ஆக வேண்டும். தன் மீதும், மற்றவர்களின் மீதும் கருணை காண்பிக்க
வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாரதத்தை தூய்மையாக்கும் சேவையில் தனது உடல், மனம், பொருளை பயன்படக் கூடியதாக ஆக்க வேண்டும்.
ஒவ்வொரு பைசாவையும் வைரம் என்று புரிந்து கொண்டு சொர்கத்தை உருவாக்கும் சேவையில்
ஈடுபடுத்த வேண்டும்,
வீணாக்கக்
கூடாது.
2) எதிர்கால 21
பிறவிகளுக்கான
பலனை உருவாக்குவதற்காக இரவு, பகல் வருமானம் சேமிக்க வேண்டும், நேரத்தை விரயமாக்கக் கூடாது. சரீரத்தை
மறக்கக் கூடிய முயற்சி செய்ய வேண்டும்
வரதானம்:
அழிவற்ற சிம்மாசனம் மற்றும் இதய சிம்மாசனதாரி ஆகி சுய இராஜ்யத்தின் போதையில்
இருக்கக் கூடிய இயற்கையை வென்றவர், மாயாவை வென்றவர் ஆகுக.
அழிவற்ற
சிம்மாசனதாரி ஆத்மா சதா ஆன்மீக போதையில் இருப்பர். எவ்வாறு இராஜா இராஜ்ய போதை
யின்றி இராஜ்யம் நடத்த முடியாதோ, அவ்வாறு ஆத்மா சுய இராஜ்யத்தின் போதையில் இல்லையெனில் கர்மேந்திரியங்கள் என்ற
பிரஜைகளின் மீது இராஜ்யம் செய்ய முடியாது. ஆகையால் அழிவற்ற சிம்மாசனதாரி மற்றும்
இதய சிம்மாசனதாரி ஆகுங்கள். மேலும் இந்த ஆன்மீக போதையில் இருந்தீர்கள் எனில் எந்த
தடையும் அல்லது பிரச்சனையும் உங்கள் முன் வர முடியாது. இயற்கை மற்றும் மாயை
யுத்தம் செய்ய முடியாது. ஆக சிம்மாசனதாரி ஆவது என்றால் எளிதாக இயற்கையை வென்றவர்
மற்றும் மாயாவை வென்றவர் ஆவதாகும்.
சுலோகன்:
சங்கல்பங்களில் வெற்றி பிராப்தியாக அடைய வேண்டுமென்றால் ஆத்ம சக்தி என்ற
எரிபொருளை நிரப்பிக் கொண்டே இருங்கள்.


0 Comments