Header Ads Widget

Header Ads

TAMIL MURLI (22.04.22)

 Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam

22-04-2022  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! தந்தை குழந்தைகளாகிய உங்களிடமிருந்து தானம் பெறுவதற்காக வந்துள்ளார், உங்களிடம் உள்ள பழைய குப்பைகளை தானம் கொடுத்து விட்டீர்கள் என்றால் புண்ணிய ஆத்மா ஆகிவிடுவீர்கள்.

கேள்வி:

புண்ணிய உலகில் செல்லக் கூடிய குழந்தைகளுக்கான தந்தையின் ஸ்ரீமத் (உயர்ந்த வழி) என்ன?

பதில்:

இனிமையான குழந்தைகளே, புண்ணிய உலகிற்குச் செல்ல வேண்டும் என்றால் அனைத்திலிருந்தும் பற்றுதலை நீக்குங்கள். 5 விகாரங்களை விட்டு விடுங்கள். இந்தக் கடைசி பிறவியில் ஞானச் சிதையில் அமருங்கள். தூய்மையடைந்தீர்கள் என்றால் புண்ணிய ஆத்மாக்கள் ஆகி புண்ணிய உலகிற்கு சென்று விடுவீர்கள். ஞான யோகத்தை தாரணை செய்து தனது நடத்தையை தெய்வீகமாக ஆக்குங்கள். தந்தையிடம் உண்மையான வியாபாரம் செய்யுங்கள். தந்தை உங்களிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்வதில்லை. பற்றுதல் நீங்க வேண்டும் என்பதற்காகத் தான் யுக்தியை சொல்கிறார். புத்தியின் மூலம் அனைத்தையும் தந்தைக்கு அர்ப்பணித்து விடுங்கள்.

பாடல்:  இந்த பாவ உலகத்திலிருந்து. . .

ஓம் சாந்தி. உலகிலுள்ள மனிதர்கள் அதாவது இராவண இராஜ்யத்திலுள்ள மனிதர்கள் ஓ ! பதீத பாவனா வாருங்கள் என கூக்குரலிடுகின்றனர். தூய்மையான உலகிற்கு அதாவது புண்ணிய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். பாடலை உருவாக்குபவர்களுக்கு இந்த விஷயங் கள் புரியாது. இராவண இராஜ்யத்திலிருந்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என கூப்பிடுகின்றனர், ஆனால் தன்னை தூய்மையற்றவர் என புரிந்து கொள்வதில்லை. தமது குழந்தைகளுக்கு அருகில் நேரில் தந்தை அமர்ந்திருக்கிறார். இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வதற்கென உயர்ந்தவர்களாக ஆக்குவதற் காக உயர்ந்த வழியை கொடுத்துக் கொண்டிருக் கிறார். பகவானுடைய மகா வாக்கியம் லி இராம பகவானுடைய மகா வாக்கியம் அல்ல. சீதையின் கணவரை பகவான் என்று சொல்ல மாட்டார்கள். பகவான் நிராகாரமானவர் (உடலற்றவர்). நிராகார, ஆகார, சாகார என மூன்று உலகங்கள் உள்ளன அல்லவா. நிராகாரமான பரமாத்மா நிராகாரமான குழந்தைகளுடன் நிராகார உலகில் இருக்கக்கூடியவர். சொர்க்க இராஜ்ய பாக்கியத்தை கொடுப்பதற்காக, நம்மை புண்ணிய ஆத்மாவாக ஆக்குவதற்காக இப்போது பாபா வந்துள்ளார். இராம இராஜ்யம் என்றால் பகல், இராவண இராஜ்யம் என்றால் இரவு. அஞ்ஞானம் அல்லது பக்தியின் விஷயங்கள் யாருக்கும் தெரியாது. உங்களிலும் அபூர்வமாகத்தான் ஒரு சிலர் தெரிந்திருக்கின்றனர். இந்த ஞானத்திற்காகவும் தூய்மையான புத்தி தேவை. முக்கியமான விஷயம் நினைவு செய்வதாகும். நல்ல பொருள் எப்போதும் நினைவில் இருக்கும். நீங்கள் என்ன புண்ணியம் செய்ய வேண்டும்? உங்களிடம் உள்ள குப்பைகளை எனக்கு அர்ப்பணித்து விடுங்கள். மனிதர்கள் இறக்கும் போது அவர்களுடைய படுக்கை, துணிமணிகள் முதலானவைகளை சடங்கு செய் பவர்களுக்கு கொடுக்கின்றனர். அவர்கள் மற்றொரு விதமான பிராமணர்கள் ஆவர். இப்போது தந்தை உங்களிடமிருந்து தானத்தைப் பெறுவதற்காக வந்துள்ளார். இந்த பழைய உலகம், பழைய சரீரம் அனைத்தும் காய்ந்து (உயிரற்று) போய்விட்டது. இவைகளை எனக்குக் கொடுத்து விட்டு இவைகளிலிருந்து பற்றுதலை நீக்குங்கள். 10லி20 கோடி பணம் இருக்கலாம். ஆனால் தந்தை சொல்கிறார் லி இவற்றிலிருந்து புத்தியை நீக்குங்கள். அதற்குப் பதிலாக உங்களுக்கு அனைத்துமே புதிய உலகத்தில் கிடைக்கும். எவ்வளவு மலிவான வியாபாரமாக உள்ளது. தந்தை சொல்கிறார் லி நான் யாருக்குள் பிரவேசமாகியிருக்கிறேனோ அவர் அனைத்தையும் (கொடுக்கல்லிவாங்கல்) வியாபாரம் செய்து விட்டார். இப்போது பாருங்கள் அதற்குப் பதிலாக எவ்வளவு இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது. குமாரிகள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது என்றால் அவர்களுக்கு ஆஸ்தியின் போதை இருக்கும். இன்றைய நாட்களில் மனைவியை பாதி பங்குதாரர் (பார்ட்னர்) என ஆக்குவதில்லை. அனைத்தை யும் குழந்தை களுக்குத்தான் கொடுக்கின்றனர். கணவர் இறந்து விடும்போது மனைவியை யாரும் விசாரிப்பதில்லை. இங்கேயோ தந்தையிடமிருந்து நீங்கள் முழுமையான ஆஸ்தியை எடுக்கிறீர் கள். இங்கே ஆண், பெண் என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருமே ஆஸ்திக்கு உரிமை உள்ளவர் ஆவர் தாய்மார்கள், கன்யாக்களுக்கு இன்னும் கூட உரிமை அதிகம் கிடைக்கிறது, ஏனென்றால் கன்யாக்களுக்கு லௌகிக தந்தையின் ஆஸ்தியின் மீது பற்றுதல் கிடையாது. உண்மையில் நீங்கள் அனைவரும் குமார்லி குமாரிகளாக ஆகியுள்ளீர்கள். தந்தையிடமிருந்து எவ்வளவு ஆஸ்தியை அடைந்தோம். ஒரு கதையும் உள்ளது லி நீங்கள் யாருடையதை சாப்பிடு கிறீர்கள்? என ஒரு ராஜா தன் மகள்களிடம் கேட்டார். அப்போது ஒரு மகள் தனது பாக்கியத்தை என சொன்னாள். ராஜா அவளை வெளியில் துரத்தி விட்டார். பிறகு அந்த மகள் தந்தையை விடவும் பணக்காரியாக ஆகி விட்டாள். தந்தைக்கு அழைப்பு விடுத்தாள். இப்போது யாருடையதை சாப்பிடுகிறேன் என பாருங்கள் என சொன்னாள். ஆக, தந்தையும் சொல்கிறார், குழந்தைகளே, நீங்கள் அனைவருமே தம்முடைய அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறீர்கள்.

தில்லியில் ஒரு மைதானம் உள்ளது, அதன் பெயர் ராம்லீலா மைதானம் என வைக்கப் பட்டுள்ளது. உண்மையில் ராவண லீலா என பெயர் வைக்கப்பட வேண்டும், ஏனென்றால் இப்போது முழு உலகிலும் இராவண லீலை நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் ராமலீலா மைதானத்தை (வாடகைக்கு) எடுத்துக் கொண்டு அதில் படங்களை வைக்க வேண்டும். ஒரு புறத்தில் இராமனின் படம் இருக்கட்டும், அதற்குக் கீழே பெரிய இராவணனின் படமும் இருக்கட்டும். மிகப் பெரிய உலக உருண்டை இருக்க வேண்டும். இடையில் எழுத வேண்டும் லி இது இராம இராஜ்யம், இது இராவண இராஜ்யம். அப்போது புரிந்து கொள்வார்கள். தேவதைகளுக்கு எவ்வளவு மகிமைகள் உள்ளன பாருங்கள் லி அனைத்து குணங்களும் நிரம்பியவர்கள். . . அரை கல்பம் கலியுகத்தின் பிரஷ்டாச்சாரமான (கீழான) இராவண இராஜ்யம். . . அதில் அனைவரும் வந்து விடுகின்றனர். இப்போது இராவண இராஜ்யத்தை இராமன் தான் முடித்து வைப்பார். இந்த சமயத்தில் இராம லீலை இல்லை, முழு உலகிலும் இராவண லீலையாக உள்ளது. ராம லீலை சத்யுகத்தில் இருக்கும். ஆனால் அனைவருமே தம்மை பெரிய புத்திசாலிகளாக புரிந்து கொள்கின்றனர். ஸ்ரீ ஸ்ரீ என்ற பட்டத்தை வாங்கிக் கொள்கின்றனர், இந்த தகுதி நிராகார பரமபிதா பரமாத்மா வினுடையதாகும், அவர் மூலம்தான் ஸ்ரீலட்சுமி நாராயணரும் இராஜ்யத்தை அடைகின்றனர். இப்போது பாபா வந்திருக்கிறார், உங்களை பக்தி எனும் இருளிலிருந்து விடுவித்து வெளிச்சத்திற்கு எடுத்துச் செல்வதற்காக. யாரிடம் ஞானம் லி யோகம் இருக்குமோ அவர்களுடைய நடத்தை தெய்வீகமாக இருக்கும். அசுரத்தனமான நடத்தை உள்ளவர்கள் யாருக்கும் நன்மை செய்ய முடியாது. இவருக்குள் அவகுணங்கள் உள்ளனவா அல்லது தெய்வீக குணங்கள் உள்ளனவா என சட்டென தெரிந்து விடும். இது வரை யாரும் முழுமையடையவில்லை. இப்போது ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் எனும்போது தந்தை வள்ளலாக இருக்கிறார், உங்களிடமிருந்து எதை எடுத்துக் கொள்ளப் போகிறார்? எடுத்துக் கொள்வதை உங்களுக்காக சேவையில் ஈடுபடுத்தி விடுகிறார். பாபா இவரைக் (பிரம்மாவை) கூட சமர்ப்பணம் ஆக வைத்தார் லி பட்டி நடத்த வேண்டும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். பணம் இல்லாமல் இவ்வளவு பேரை எப்படி கவனித்துக் கொள்ள முடியும்? முதலில் பாபா இவரை அர்ப்பணம் ஆக வைத்தார், பிறகு யாரெல்லாம் வந்தார்களோ அவர்களை அர்ப்பணம் ஆக செய்தார். ஆனால் அனைவருடைய மன நிலையும் ஒன்று போல இல்லை, நிறைய பேர் திரும்பிச் சென்றும் விட்டனர். (பூனைக் குட்டிகளின் கதை) வரிசைக்கிரமமான முயற்சிக்குத் தகுந்தாற்போல அனைவரும் பக்குவப்பட்டு வெளியேறி விட்டனர். பாபா புண்ணிய உலகிற்கு அழைத்துச் செல்கிறார். 5 விகாரங்களை மட்டும் விட்டு விடுங்கள் என சொல்கிறார். நான் உங்களை இளவரசன் லி இளவரசியாக ஆக்குவேன். பிரம்மாவின் காட்சி பலருக்கு வீட்டில் இருக்கும் போதே கிடைத்து விடுகிறது. அங்கிருந்து எழுதி அனுப்புகின்றனர் லி பாபா நாங்கள் உங்களுடையவர்களாக ஆகி விட்டோம், எங்களுடைய அனைத்தும் உங்களுடையது. பாபா எதையும் எடுத்துக் கொள்வதில்லை. அனைத்தையும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள் என பாபா சொல் கிறார். இங்கே வீடு கட்டுகிறோம், சிலர் பணம் எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என கேட் கின்றனர். அட, பாபாவுக்கு இவ்வளவு அளவற்ற குழந்தைகள் இருக்கின்றனர். பிரஜாபிதா பிரம்மாவின் பெயரைக் கேட்டிருக்கிறீர்கள்தானே. பற்றுதலை மட்டும் விடுங்கள், இப்போது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என சொல்கிறார். பாபாவை நினைவு செய்யுங்கள். நம்மை பகவான் படிப்பிக்கிறார் எனும்போது குஷியின் அளவு அதிகரித்தபடி இருக்க வேண்டும். லட்சுமி நாராயணரை பகவான் என சொல்ல மாட்டார்கள், தேவி தேவதை என சொல்வார்கள். பகவானிடம் பகவதி இருப்பதில்லை. எவ்வளவு யுக்தியின் விஷயங்களாக உள்ளன. நேரில் வராமல் யாரும் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. நீயே தாயும் தந்தையும். . . என பாடவும் செய்கின்றனர். ஞானம் இல்லாத காரணத்தால் லட்சுமி நாராயணரின் முன்னால், அனுமாருக்கு முன்னால், கணேசருக்கும் முன்னால் சென்று இந்த மகிமையைப் பாடுகின்றனர். அட, அவர்கள் சாகாரத்தில் இருந்தார்கள், அவர்களை அவர்களுடைய குழந்தை கள் தான் தாய் தந்தை என சொல்வார்கள். நீங்கள் அவர்கள் குழந்தையா என்ன? நீங்கள் இராவண இராஜ்யத்தில் இருக்கிறீர்கள். இந்த பிரம்மாவும் மாதாவாக (தாயாக) இருக்கிறார். இவர் மூலம் பாபா சொல்கிறார் லி நீங்கள் என்னுடைய குழந்தைகள். ஆனால் தாய்மார்களை, கன்யாக்களை கவனித்துக் கொள்வதற்காக மாதா (தாய்) வேண்டும். தத்தெடுக்கப்பட்ட குழந்தை பி.கு. சரஸ்வதி ஆவார். எவ்வளவு ஆழமான விஷயங்களாக உள்ளன. பாபா கொடுக்கக் கூடிய ஞானம் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. பாரதத்தின் ஒரு முக்கியமான சாஸ்திரம் கீதையாகும். அதில் ஞானத்தின் படிப்பின் விஷயங்கள் உள்ளன. அதில் சரித்திரத்தின் விஷயம் எதுவும் கிடையாது. ஞானத்தின் மூலம் பதவி கிடைக்கிறது.

பாபா மந்திரவாதியாக இருக்கிறார். நீங்கள் பாடுகிறீர்கள் லி ரத்ன வியாபாரி, மந்திரவாதி, . . . உங்களுடைய பை சொர்க்கத்திற்கென நிரம்புகிறது. பக்தியில் கூட காட்சிகளை பார்க்கின்றனர், ஆனால் அதன் மூலம் எந்த லாபமும் கிடையாது. எழுதினால், படித்தால் நவாப் ஆகலாம்..... காட்சியின் மூலம் நீங்கள் அப்படி எதுவும் ஆகினீர்களா? காட்சிகளை நான் காட்டுகிறேன். கல்லாலான மூர்த்தி காட்சி காட்டாது. தீவிர பக்தியில் சுத்தமான பாவனை வைக் கின்றனர். அதன் பலனை நான் கொடுக்கிறேன், ஆனால் தமோபிரதானமாக கண்டிப்பாக ஆகவேண்டி யுள்ளது. மீரா காட்சிகள் பார்த்தார், ஆனால் ஞானம் கொஞ்சமும் இருக்கவில்லை. மனிதர்கள் நாளுக்கு நாள் தமோபிரதானமாக ஆகிக் கொண்டு செல்வார்கள். இப்போது அனைத்து மனிதர்களுமே தூய்மையற்றவர்கள். எங்களை சுகம், அமைதி மிக்க இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் எனப் பாடவும் செய்கின்றனர்.

பாரதவாசிகளான உங்களுக்கு சத்யுகத்தில் நிறைய சுகம் இருந்தது. சத்யுகத்தின் பெயர் புகழ் பெற்றது. சொர்க்கம் பாரதத்தில்தான் இருந்தது, ஆனால் புரிந்துக் கொள்வதில்லை. பாரதம்தான் பழமை யானது, சொர்க்கமாக இருந்தது என்பதையும் அறிவார்கள். அங்கே வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. இந்த அனைத்து விஷயங் களையும் தந்தைதான் புரிய வைக்கிறார். நீங்கள் அனைவரும் இப்போது சரவண குமார் மற்றும் குமாரிகளாக ஆகிறீர்கள். நீங்கள் அனைவரை யும் ஞானத்தின் காவடியில் (சரவணகுமார் தன் தாய் தந்தையை அமர வைத்தது போல) அமர வைக்கிறீர்கள். நீங்கள் அனைத்து நண்பர்கள், உறவினர்களுக்கு ஞானம் கொடுத்து விழிப் படையச் செய்ய வேண்டும். பாபாவிடம் யுகல்கள் (தம்பதிகள்) கூட வருகின்றனர். முன்னாளில் ஸ்தூலமான பிராமணர்கள் மூலம் பூணூல் அணிய வைத்துக் கொண்டிருந்தனர். இப்போது ஆன்மீக பிராமணர்களாகிய நீங்கள் காமச் சிதையின் பூணூலை நீக்குகிறீர்கள். பாபாவிடம் வருபவர்களை பாபா கேட்கிறார் லி சொர்க்கத்திற்குச் செல்கிறீர்களா? சிலர் சொல்கின்றனர் லி எங்களுக்கு சொர்க்கம் இங்கேயே இருக்கிறது. அட, இது அல்ப காலத்தின் சொர்க்க மாகும். நான் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தைக் கொடுப்பேன். ஆனால் முதலில் தூய்மையாய் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும்தான் தயக்கம் ஆகி விடுகின்றனர். அட, எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொல்கிறார் லி இந்த கடைசி பிறவியில் ஞானச் சிதையில் அமருங்கள். அப்போது பெண்கள் அதிக அளவில் உடனே வந்து விடு கின்றனர். ஒரு சிலர் சொல்கின்றனர் - பதி பரமேஸ்வரனை (ஈஸ்வரன் போன்ற கணவரை) எப்படி கோபப் படுத்த முடியும்?

பாபாவுடையவர்களாக ஆகி விட்டால் ஒவ்வொரு காலடியிலும் (காரியத்திலும்) ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். இப்போது பாபா சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குவதற்காக வந்துள்ளார். தூய்மையடைவது நல்லதாகும். குலத்திற்கு களங்கம் விளைவிப்பவராக ஆகாதீர்கள். தந்தை சொல்வார் அல்லவா. லௌகிக தந்தையோ அடிக்கவும் செய்வார். மம்மா இனிமையானவராக இருப்பவர். மிகவும் இனிமையானவராக இரக்க மனமுள்ளவராய் ஆக வேண்டும். குழந்தை களே, நீங்கள் என்னை மிகவும் நிந்தனை செய்கிறீர்கள். இப்போது நான் அபகாரம் செய்பவர் களுக்கு உபகாரம் செய்கிறேன். உங்களுடைய இந்த நிலை இராவணனின் வழிப்படி நடந்ததால் ஏற்பட்டது. எந்த வினாடி நடந்து முடிந்ததோ அது நாடகமாகும். ஆனால் இனி வரவிருக்கும் காலத்தில் நம்முடைய கணக்கு கெட்டு விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கென பிரஜைகளையும் உருவாக்க வேண்டும், வாரிசு களையும் உருவாக்க வேண்டும். யாரும் முரளியை தவற விடக்கூடாது. எந்த கருத்துகளையும் (கவனக் குறைவால்) விட்டு விடக் கூடாது. நல்ல நல்ல ஞான ரத்தினங்கள் வெளிப்படும், கேட்காவிட்டால் தாரணை எப்படி செய்வீர்கள். தவறாமல் வரும் மாணவர்கள் ஒருபோதும் முரளியை தவற விட மாட்டார்கள். முயற்சி செய்து தினம் தோறும் முரளியைப் படிக்க வேண்டும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தன்னுடைய புண்ணிய கணக்கு கெட்டு விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருபோதும் குலத்திற்கு களங்கம் விளைவிப்பவர் ஆகக் கூடாது. தினம் தோறும் படிப்பை படிக்க வேண்டும், தவற விடக் கூடாது.

2. சரவண குமார் லி குமாரிகள் ஆகி ஞானத்தின் காவடியில் அனைவரையும் அமர வைக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களுக்கும் ஞானத்தைக் கொடுத்து அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்

வரதானம்:

தனது தொழிலின் நினைவின் மூலம் மனதை கட்டுப்படுத்தக் கூடிய இராஜயோகி ஆகுக.
அமிர்தவேளை மற்றும் முழு நாளும் இடையிடையில் நான் இராஜயோகி என்ற தனது தொழிலின் நினைவில் இருக்க வேண்டும். இராஜயோகி என்ற இருக்கையில் செட் ஆகி விடுங்கள். இராஜயோகி என்றால் இராஜா. இதில் கட்டுப்படுத்தும் சக்தி மற்றும் அதிகார சக்தி (ரூலிங் பவர்) இருக்கும். அவர் ஒரு விநாடியில் மனதை கட்டுப்படுத்தி விடுவார். அவர் ஒருபோதும் தனது சங்கல்பம், வார்த்தை மற்றும் செயலை வீணாக்கமாட்டார். ஒருவேளை விரும்பினாலும் வீணாகி விடுகிறது எனில் அவரை ஞானம் நிறைந்தவர் அல்லது இராஜா என்று கூற முடியாது.

சுலோகன்:

சுயத்தின் மீது இராஜ்யம் செய்பவர் தான் சுய இராஜ்ய அதிகாரி ஆவார்.

மாதேஸ்வரிஜீயின் விலை மதிப்பற்ற மகாவாக்கியம் :

இந்த அழிவற்ற ஞானத்திற்கு பல பெயர்கள் இருக்கின்றன.

இந்த அழிவற்ற ஈஸ்வரிய ஞானத்திற்கு பல பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. சிலர் இந்த ஞானத்தை அமிர்தம் என்று கூறுகின்றனர், சிலர் ஞானத்தை கண் மை என்று கூறுகின்றனர். ஞானக் கண்மை குரு கொடுத்தார் என்று குருநானக் கூறியிருக்கின்றார். சிலர் ஞான மழை என்றும் கூறுகின்றனர். ஏனெனில் இந்த ஞானத்தின் மூலம் தான் முழு உலகமும் செழிப்பாகி விடுகிறது. தமோ பிரதான மனிதர்கள் சதோ பிரதான மனிதர்களாக ஆகிவிடுகின்றனர். மேலும் ஞானக் கண்மை மூலம் இருள் விலகி விடுகிறது. இதே ஞானத்தை சிலர் அமிர்தம் என்றும் கூறுகின்றனர். இதன் மூலம் 5 விகாரங்கள் என்ற நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் குளிர்ந்தவர்களாக ஆகிவிடுகின்றனர். கீதையில் பரமாத்மா தெளிவாக கூறுகின்றார் - காமம், கோபம். இதில் முக்கிய மானது, முதன்மையானது காமம். இது தான் ஐந்து விகாரங்களின் முக்கிய விதையாகும். விதை இருக்கின்ற காரணத்தினால் பிறகு கோபம், போராசை, பற்றுதல் அகங்காரம் போன்ற மரம் உருவாகி விடுகிறது. இவைகளின் மூலம் மனிதர்களின் புத்தி பிரேஷ்டம் ஆகிவிடுகிறது. இப்பொழுது அதே புத்தியில் ஞான தாரணை ஏற்படுகிறது. எப்பொழுது ஞான தாரணை முழுமையாக புத்தியில் ஏற்பட்டு விடுகிறதோ, அப்பொழுது தான் விகாரங்களின் விதை அழிந்து விடும். மற்றபடி விகாரங்களை வசப் படுத்துவது என்பது மிகவும் கடினமான விசயம் என்று சந்நியாசம் நினைக்கின்றனர். ஆனால் இந்த ஞானம் சந்நியாசிகளிடம் கிடையாது. பிறகு இதற்கான போதனைகளை எப்படி கொடுக்க முடியும்? நியமத்துடன் இருங்கள் என்பதை மட்டுமே கூறுகின்றனர். ஆனால் உண்மையான நியமம் எது? அந்த நியமம் இப்பொழுது மீறப்பட்டு விட்டது. சத்யுகம், திரேதா யுக தேவி, தேவதைகள் குடும்பத் தில் இருந்துக் கொண்டே எவ்வாறு விகாரமற்ற இல்லறத்தில் இருந்தனர்! இப்பொழுது அப்படிப்பட்ட உண்மையான நியமம் எங்கு இருக்கிறது? இப்பொழுது தவறான விகார நியமங்களை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கொருவர் நியமப்படி நடங்கள் என்று மட்டுமே கற்றுக் கொடுக்கின்றனர். மனிதர்களின் முதல் கடமை என்ன? என்பதை யாரும் அறியவில்லை. நியமப்படி நடங்கள் என்று மட்டுமே பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் மனிதர்களின் முதல் நியமம் என்ன? என்பதையும் அறியவில்லை. மனிதர்களின் முதல் நியமம் விகாரமற்றவர்களாக ஆவதாகும். நீங்கள் இந்த நியமத்தை கடைபிடிக்கிறீர்களா? என்று யாரிடத்திலாவது கேட்டால் இந்த கலியுகத்தில் விகாரமற்றவராக ஆவதற்கான தைரியம் கிடையாது என்று கூறிவிடுகின்றனர். நியமத்துடன் இருங்கள், விகாரமற்றவர்களாக ஆகுங்கள் என்று வாயின் மூலம் கூறுவதனால் யாரும் விகார மற்றவர்களாக ஆகிவிட முடியாது. விகாரமற்றவர்களாக ஆவதற்கு முதலில் இந்த ஞான அம்பினால் இந்த ஐந்து விகாரங்களின் விதையை அழிக்க வேண்டும் அப்பொழுது தான் விகர்மங்கள் அழிந்து போகும். நல்லது, ஓம்சாந்தி.

Download PDF

  Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam

Post a Comment

0 Comments