07-02-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
இந்த நேரத்தில்
உங்களுக்கு நிராகாரமானவரின்
வழி (அறிவுரை)
கிடைத்துக் கொண்டிருக்கிறது,
கீதை சாஸ்திரம்
நிராகாரமானவரின் அறிவுரைகளின்
சாஸ்திரமாகும், சரீரம்
உள்ளவரின் வழி
கிடையாது, இந்த
விசயத்தை நிரூபனம்
செய்யுங்கள்.
கேள்வி:
எந்த ஆழமான விசயத்தை மிக யுக்தியுடன்
முதல் தரமான குழந்தைகள் மட்டுமே புரிய வைக்க முடியும்?
பதில்:
இந்த பிரம்மா தான் ஸ்ரீகிருஷ்ணர் ஆகின்றார். பிரம்மாவை பிரஜாபிதா என்று கூறுகிறோம், ஸ்ரீ கிருஷ்ணரை கிடையாது. நிராகார பகவான் பிரம்மாவின் வாயின் மூலம் பிராமணர்களை படைக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர்
சிறு குழந்தை ஆவார். கீதையின் பகவான் நிராகார பரமாத்மா. கிருஷ்ணரின்
ஆத்மா முயற்சி செய்து இந்த பிராப்தியை அடைந்திருக்கின்றார். இது மிகவும் ஆழமான விசயம், இதை முதல் தரமான குழந்தைகள் மட்டுமே யுக்தியாக புரிய வைக்க முடியும். 20 விரல்கள் கொடுத்து இந்த விசயத்தை நிரூபணம் செய்தால் சேவையில் வெற்றி கிடைக்கும்.
பாடல்: எனது மனம் என்ற வாசலில் யார் வந்தது....
ஓம்சாந்தி. குழந்தைகள் கேட்டீர்களா? இந்த கண்களால் அறிந்து கொள்ள முடியாது,
யாரை? பகவானை.
இந்த கண்கள் ஸ்ரீகிருஷ்ணரை அறிந்து கொள்ள முடியும்.
மற்றபடி பகவானை அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாவினால் தான் பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியும். நமது பரம்பிதா பரமாத்மா நிராகாராமானவர் என்று ஆத்மா ஏற்றுக் கொள்கிறது. நிராகாராக
(அசரீரியாக) இருக்கின்ற காரணத்தினால், இந்த கண்களினால் பார்க்க முடியாத காரணத்தினால் அந்த அளவிற்கு நினைவு நிலைத்திருப்பது கிடையாது. இதை நிராகார தந்தை நிராகார குழந்தைகளுக்கு (ஆத்மாக்களுக்கு) கூறுகின்றார்.
உங்களுக்கு நிராகாரமானவரின் வழி (அறிவுரை)
கிடைக்கிறது. கீதா சாஸ்திரமே நிராகாரமானவரின் வழியாகும். சரீரம் உள்ளவரின் வழி கிடையாது. கீதை தர்ம சாஸ்திரம் அல்லவா! இஸ்லாமியர்களுக்கும் தர்ம சாஸ்திரம் இருக்கிறது. இம்ராஹிம் கூறியிருந்தார், புத்தர் கூறியிருந்தார், கிறிஸ்து கூறியிருந்தார். அவர்களுக்கான சித்திரம் இருக் கிறது. அனைத்து சாஸ்திரங்களுக்கும் தலை சிறந்ததாக விளங்கும் கீதையில் மனிதர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் சித்திரத்தை காண்பித்து விட்டனர்.
இது தவறு என்று தந்தை புரிய வைக்கின்றார்.
கீதையை உச்சரித்தது
(கூறியது) நான்,
இராஜயோகத்தை கற்பித்தது நான் மற்றும் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ததும் நான் தான். நான் நிராகரராக, பரம்பிதா பரமாத்மாவாக இருக்கிறேன்.
நான் அனைத்து ஆத்மாக்களாகிய உங்களது தந்தையாக இருக்கிறேன்,
மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கிறேன். என்னைத் தான் விருட்சபதி என்று அழைக்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்னரை விருட்சபதி என்று கூறுவது கிடையாது. பரம்பிதா பரமாத்மா தான் மனித சிருஷ்டியின் விதை ரூபமானவர்,
படைப்பவர். கிருஷ்ணரை படைப்பவர் என்று கூறமாட்டோம். அவர் தெய்வீக குணங்களுடைய மனிதர், அவ்வளவு தான். கிருஷ்ணரை பகவான் என்று கூறுவதனால் மனிதர்கள் குழப்பமடைகின்றனர். பகவான் ஒரே ஒருவர்.
கிருஷ்ணரை அனைவரின் பரமாத்மா என்று யாரும் கூற முடியாது. நான்
5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். நான் முழு சிருஷ்டியின் தந்தை ஆவேன்.
என்னைத் தான் இறை தந்தை என்று கூறுகின்றனர்.
கிருஷ்ணரின் பெயர் வைத்த காரணத்தினால் பரம்பிதா பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியவில்லை. இந்த மிகப் பெரிய தவறை செய்து விட்டனர். கீதையின் மூலம் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை நான் தான் ஸ்தாபனை செய்தேன்.
என்னை ருத்ரன் அல்லது பகவான் என்று கூறுகிறீர்கள். வேறு எந்த சூட்சும தேவதை அல்லது மனிதர்களை பகவான் என்று கூற முடியாது.
லெட்சுமி-நாராயணன் போன்ற யாரையும் பகவான் என்று கூற முடியாது.
பரமாத்மா ஒருவர் தான் என்று கூறப்படுகிறது. பகவானின் மகாவாக்கியம் எனில் அவசியம் பகவான் வந்திருக்க வேண்டும் மற்றும் வந்து இராஜயோகம் கற்பித்திருக்க வேண்டும். கல்பத்திற்கு முன்பும் நான் குழந்தைகளாகிய உங்களுக்கு கூறியிருந்தேன் என்று தந்தை கூறுகின்றார்.
கிருஷ்ணர் ஒருபோதும் குழந்தைகளே, குழந்தைகளே என்ற கூற முடியாது. பரம்பிதா பரமாத்மா தான் அனைவரையும் குழந்தைகளே என்று கூறுகின்றார்.
ஆத்ம அபிமானி யாக ஆகுங்கள்,
நிராகாரமான என்னை தனது தந்தை என்று புரிந்து கொள்ளுங்கள் என்று கல்பத்திற்கு முன்பும் குழந்தைகளாகிய உங்களுக்கு நான் கூறியிருந்தேன். சாகார தந்தை பிரஜாபிதா ஆவார்,
ஏனெனில் பிரம்மாவின் மூலம் தான் பகவான் பிராமண,
பிராமணிகளைப் படைக் கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் பிரஜாபிதா அல்ல.
பிரம்மாவின் வாயின் மூலம் நான் பிராமண, பிராமணிகளை படைக்கிறேன் என்ற பகவான் கூறுகின்றார்.
இவ்வாறும் கிருஷ்ணர் கூற முடியாது.
பிரம்மா பெரியவர்,
கிருஷ்ணர் சிறு குழந்தை. பிரம்மா தான் கிருஷ்ணராக ஆகின்றார். இது எவ்வளவு ஆழமான விசயமாகும். இதை புரிய வைப்பதற்கு மிகுந்த யுக்தி
(புத்திசாலித்தனம்) தேவை.
முதல் தரமான குழந்தைகள் தான் புரிய வைக்க முடியும். தந்தை கூறுகின்றார் - மிக நல்ல சகோதரர் அல்லது சகோதரிகள் கீதையின் பகவான் நிராகாரமான பரமாத்மா என்பதை நிரூபணம் செய்ய வேண்டும்.
யார் கீதை உருவாக்கினாரோ அவரே தான் குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பித்திருந்தார் மற்றும் சொர்க்கம் படைத்திருந்தார். அவசியம் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை மட்டுமே இராஜயோகம் கற்பிப்பார்.
ஸ்ரீகிருஷ்ணர் பிராப்தி அடைந்திருக்கின்றார். பிராப்தி கொடுக்கக் கூடியவர் பரம்பிதா பரமாத்மா.
கிருஷ்ணர் அவரது குழந்தை. கிருஷ்னரின் ஆத்மா முயற்சி செய்திருக்கிறது மற்றும் பிராப்தி அடைந்திருக்கிறது. முயற்சி செய்விப்பவரை நீக்கி விட்டு முயற்சியின் பலனை அடையக் கூடியவரின் பெயரை வைத்து கீதையை தவறானதாக்கி விட்டனர். ஒரு கீதையை பொய்யானதாக ஆக்கியதனால் அனைத்தும் பொய் யானதாக ஆகி விட்டது,
அதனால் தான் பொய்யான உலகம்,
பொய்யான உலகம்...
என்று கூறப்படுகிறது.
சேவையை அதிகப்படுத்துவதற்காக குழந்தைகள்
20 நகம் (விரல்கள்)
கொடுத்து வேகப் படுத்த வேண்டும்.
கீதையை கூறியது யார்? கீதையின் மூலம் எந்த தர்மம், யார் ஸ்தாபனை செய்தது?
இந்த விசயத்தின் மூலம் தான் நீங்கள் நல்ல முறையில் வெற்றியடைய முடியும். பரம்பிதா பரமாத்மாவின் மூலம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள், கிருஷ்ணர் மூலம் அல்ல.
ஆக இந்த விசயத்தில் முயற்சி செய்ய வேண்டும்.
அனைத்து சாஸ்திரங்களும் கீதை யின் குழந்தைகள். ஆக குழந்தைகளின் மூலம் ஒருபோதும் ஆஸ்தியடைய முடியாது. ஆஸ்தி அவசியம் தந்தை தான் கொடுப்பார்.
சித்தப்பா, மாமா,
பெரியப்பா, குரு போன்ற யாரிடமிருந்தும் ஆஸ்தியடைய முடியாது.
எல்லையற்ற தந்தையிடமிருந்து தான் எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறது.
கீதையை தவறு செய்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ளுமளவிற்கு வாக்கியம் தெளிவாக இருக்க வேண்டும். கீதையை அவமதித்து விட்டோம்,
ஆகையால் பாரதம் ஏழையாக ஆகிவிட்டது,
சோழி போன்று ஆகிவிட்டது. இவ்வாறு வாக்கியங்கள் எழுதுங்கள்.
பாரதத்தை சொர்க்கமாக்கக் கூடியவர் யார்?
சொர்க்கம் எங்கு இருக்கிறது? க-யுகத்திற்குப் பிறகு சத்யுகம் ஏற்படும்.
ஆக அதற்கான ஸ்தாபனை அவசியம் சங்கமத்தில் தான் ஏற்பட வேண்டும்.
சிவபகவானின் மகாவாக்கியம்
- நான் கல்ப கல்பம் சங்கமத்தில் தூய்மையான உலகை உருவாக்க வருகிறேன்.
சிவபரமாத்மா தான் அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கின்றாரே தவிர கிருஷ்ணர் அல்ல என்பதை புரிந்து கொள்ளுமளவிற்கு நிரூபனம் செய்யுங்கள். கீதையின் பகவானை யார் புரிந்து கொள்வார்களோ அவர்கள் தான் வந்து மலர்களை தூவுவார்கள். அனைவரும் தூவிடமாட்டார்கள். யார் புரிந்து கொள்வார்களோ அவர்கள் மலராகி பலியாகி விடுவார்கள்.
பாபாவிற்கு யாராவது மலர் கொடுக்கின்றனர் எனில் எனக்கு இப்படிப்பட்ட மலர்
(குழந்தை) தேவை என்று பாபா கூறுவார். முட்கள் என்னிடத்தில் பலியாகும் போது நான் அவர்களை மலராக ஆக்குவேன். பபூல்நாத்
(முள்ளை மலராக்குபவர்)
என்பதும் எனது பெயர் ஆகும்.
முள்ளை மலராக்கும் பபூல் என்று என்னைத் தான் கூறுகின்றனர், ஸ்ரீகிருஷ்ணர் சுயம் மலராக இருக்கின்றார். அது அல்லாவின் பூந்தோட்டம்,
இது பேய்கள் நிறைந்த காடு.
இதை மீண்டும் தெய்வீக பூந்தோட்டமாக தந்தை ஆக்குகின்றார். நீங்கள் தான் புது உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள்.
லெட்சுமி-நாராயணனின் தெய்வீக இராஜ்யம் என்று கூறப்பட்டிருக் கிறது. பிராமண குலத்தின் இராஜ்யம் என்று கூறுவது கிடையாது. இது பிராமண குலமாகும்.
பரம்பிதா பரமாத்மா பிரம்மாவின் மூலம் பிரஜைகளை படைக்கின்றார், அதனால் தான் அவர் பிரஜாபிதா என்று கூறப்படுகின்றார். சிவபாபா அல்லது ஸ்ரீகிருஷ்ணரை பிரஜாபிதா என்று கூறுவது கிடையாது. 16108 இராணிகள் இருந்தனர் என்று கிருஷ்ணர் மீது களங்கம் ஏற்படுத்தி விட்டனர்.
இந்த பிரஜாபிதா பிரம்மா இவ்வளவு குழந்தைகள் (சகோதர,
சகோதரிகளை) பெற்றெடுத் திருக்கின்றார்.
ஞானக் கடலானவர் ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மா தான். பாவத்தின் தண்டனை தர்மராஜர் கொடுக்கின்றார். ஜனாதிபதிக்கும் பெரிய பெரிய நீதிபதி சத்தியம் செய்வார். அரசரிடம் ஒருபோதும் சத்தியம் வாங்கமாட்டார்கள். ஏனெனில் அவரை அரசராக ஆக்கியது பகவான்.
அது அல்ப காலத்திற்கானது. இங்கு தந்தை 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை கொடுக்கின்றார். அங்கு சத்தியம் வாங்குவதற்கான விசயம் கிடையாது.
இது மனித சிருஷ்டி மரமாகும்,
காட்டு மரம் கிடையாது. பரம்பிதா பரமாத்மா விருட்சபதி என்று கூறப்படுகின்றார். கிருஷ்ணரால் இந்த விருட்சத்தின் ரகசியத்தைக் கூற முடியாது.
விருட்சபதியினால் மட்டுமே புரிய வைக்க முடியும். நரனிலிருந்து நாராயணனாக தந்தை தான் ஆக்குகின்றார், கிருஷ்ணர் அல்ல.
முக்கிய தர்ம சாஸ்திரங்கள் 4, மற்ற அனைத்தும் கட்டுக் கதைகளாகும். முதன் முத-ல் ஸ்தாபனை செய்யப்பட்ட தர்மம் எது?
யார் மூலம்?
சொர்க்கத்தில் தேவி தேவதா தர்மம் இருந்தது, ஆக அவசியம் அதை தந்தை தான் படைப்பார். தந்தை பழைய உலகிலிருந்து விடுவிக்கின்றார், ஏனெனில் அதிக துக்கம் இருக்கிறது. ஐயோ ஐயோ என்று கூறுகின்றனர். தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி அடைய வேண்டுமென்றால் இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரண மனிதர்களால் ஆஸ்தி கொடுக்க முடியாது.
குழந்தைகளுக்கு அனைத்து பிராப்தி களையும் ஏற்படுத்தக் கூடியவர் ஒரே ஒரு தந்தை. எல்லையற்ற தந்தை தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். இவ்வாறு தூண்டுதல் கொடுக்க வேண்டும். எவ்வாறு வேட்டைக்காரர்கள் யார் மூலமாவது வேட்டையாடச் செய்விப்பார்கள், முழு ஏற்பாடுகளையும் செய்து வேட்டையை எதிரில் கொண்டு வந்து அவர்கள் மூலம் வேட்டையாடச் செய்விப் பார்கள். இங்கு தாய்மார்களை அழைத்து வர வேண்டும்.
இங்கு தாய்மார்களை எதிரில் அழைத்து வர வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தாய்மார்கள் அதிகம் இருக்கின்றனர். ஒருவரது பெயர் பிரபலமாகி விடுகிறது.
நீங்கள் சக்தி சேனைகள். சக்தி வம்சம் என்று கூற முடியாது.
சக்தி சேனையில் முக்கிய மானவர் ஜெகதம்பா, காளி,
சரஸ்வதி ஆவார்.
மற்றபடி சண்டிகா போன்ற தலைகீழான பெயர்களையும் அதிகம் வைத்து விட்டனர்.
ஆக குழந்தைகளாகிய நீங்கள் இப்படிப்பட்ட விசயங்களை தெளிவுபடுத்த வேண்டும், உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான்,
பிறகு பிரம்மா,
விஷ்ணு, சங்கர்.
பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தை சரஸ்வதி.
அவரை கல்விக் கடவுள் என்று கூறுகிறோம். ஆக அவசியம் அவரது குழந்தைகளையும் கல்விக் கடவுள் என்று கூற முடியும்.
கடைசியில் உங்களுக்குத் தான் வெற்றி கிடைக்கப் போகிறது.
சிலர் கீதையை விட வேதங்களின் பெயரை அதிகம் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் கீதையின் பிரச்சாரம் அதிகமாக இருக்கிறது.
நான் சங்கமயுகத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
கிருஷ்ணரின் சித்திரம் சத்யுகத்திற்கானது. பிறகு
84 பிறவிகளில் ரூபம் மாறி விடுகிறது.
எப்போது பரம்பிதா பரமாத்மா வந்து ஆத்மாவிற்கு ஞானம் கொடுக்கிறாரோ அப்போது தான் ஞானி ஆத்மாவாக ஆக முடியும். பரம்பிதா பரமாத்மா ஞானக் கடலானவர். அவர் மூலம் நீங்கள் ஞானி ஆத்மாக்களாக ஆகிறீர்கள். மற்ற அனைவரும் பக்த ஆத்மாக்கள். எனக்கு ஞானி ஆத்மாக்கள் மிகவும் பிரியமானவர்கள் என்று தந்தை கூறுகின்றார். மகிமை அனைத்தும் கீதையினுடையது. தியானத்தில் செல்பவர்களை விட ஞானமுள்ளவர்கள் சிரேஷ்டமானவர்கள். ஆழ் தியானம் என்றால் டிரான்ஸ் என்று கூறப்படுகிறது. இங்கு தந்தை யிடத்தில் யோகா (தொடர்பு)
வைத்துக் கொள்ள வேண்டும். தியானத்தில் செல்வதால் எந்த நன்மையும் கிடையாது.
நான் இராஜயோகம் கற்பித்திருந்தேன் என்று தந்தை கூறுகின்றார்.
கிருஷ்ணருக்கு இந்த பிராப்தியை நான் தான் கொடுத்திருந்தேன். அவசியம் முந்தைய பிறவியில் முயற்சி செய்திருக்க வேண்டும்.
முழு சூரியவம்ச இராஜ்யமும் என் மூலமாகத் தான் பிராப்தி அடைந் திருக்கிறது. தில்வாடா கோயிலை ஒப்பிட்டு இந்த மாதிரி எழுதுங்கள், அதை படித்தவுடனேயே மனிதர்களுக்கு அம்பு பதிந்து விட வேண்டும்.
படிவத்தையும் நிரப்ப வேண்டும். எல்லையற்ற தந்தை ஞானக் கடலானவர், மிக இனிமையானவர், நமக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அந்த சத்குரு இல்லையெனில் காரிருள் இருக்கும். இவ்வாறு தந்தையின் மகிமை செய்வதன் மூலம் புத்தியில் அன்பு ஏற்படும். தந்தை எதிரில் வந்து பிறப்பு கொடுக்கும் போது தான் அன்பு ஏற்படும் அல்லவா! உங்களுக்கு பிறப்பு கொடுத்திருப்பதால் தான் அன்பு ஏற்படுக்கிறது. தந்தை என்று கூறியதும் சொர்க்கத்தின் நினைவு வருகிறது. தந்தை சொர்க்க ஸ்தாபனை செய்கின்றார். நாம் அவரிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். நம்பிக்கை வையுங்கள் அல்லது வைக்காமல் இருங்கள். எல்லையற்ற தந்தை அனைவருக்கும் தந்தை, அவரிடமிருந்து சொர்க்க ஆஸ்தி கிடைக்கும். கிருஷ்னரிடமிருந்து ஆஸ்தியடைய முடியாது.
தந்தை புது உலகை படைப்பவர் ஆவார். ஆக அவசியம் புது உலக ஆஸ்தி கொடுப்பார். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமாக குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நன்ஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1)
தந்தைக்கு பிரியமானவர்களாக ஆவதற்கு புத்தியில் ஞானத்தை தாரணை செய்து ஞானம் நிறைந்த ஆத்மாவாக ஆக வேண்டும்.
தந்தையிடத்தில் யோகா
(தொடர்பு) வைக்க வேண்டும். தியானத்தின் ஆசை வைக்கக் கூடாது.
2)
தாய்மார்களை முன் வைத்து அவர்களது பிரபலப்படுத்த வேண்டும்.
அதிகாரத்தோடு கீதையின் உண்மையான பகவானை நிரூபிக்க வேண்டும்.
20 விரல்களை கொடுத்து தீவிரமாக சேவையை அதிகப்படுத்த வேண்டும்.
வரதானம்:
(சிரேஷ்ட)
சிறந்த வாழ்க்கையின்
நினைவு மூலமாக
விசாலமான மேடையில்,
விசேஷ பாகத்தை
ஏற்று நடிக்கும்
ஹீரோ பார்ட்தாரி
ஆவீர்களாக.
பிரம்மா தந்தை தனது குழந்தைகளுக்கு தெய்வீக பிறவி அளித்த உடனேயே பவித்திர பவ, யோகி பவ - தூய்மையாக இருப்பீர்களாக,
யோகியாக இருப்பீர்களாக
என்ற வரதானத்தை கொடுத்தார். ஜென்மம் எடுத்த உடனேயே, பெரிய தாயின் ரூபத்தில், அன்புடன் தூய்மையின் பாலனை செய்தார். எப்பொழுதுமே
குஷிகளின் ஊஞ்சலில் ஊஞ்சலாட்டினார். ஒவ்வொரு நாளும் அனைத்து குணங்களின் வடிவமாக, ஞானத்தின் வடிவமாக, சுகம் சாந்தியின் சொரூபம் ஆவதற்கான தாலாட்டு பாடினார். அப்பேர்ப்பட்ட
தாய் தந்தையின் சிறந்த குழந்தைகள் பிரம்மா குமார், குமாரி ஆவீர்கள். இந்த வாழ்க்கையின் மகத்துவத்தை
நினைவில் கொண்டு, உலகம் என்ற விசாலமான மேடையில், விசேஷமான பாகம், (ஹீரோ) கதாநாயகனின் பாகம் ஏற்று நடியுங்கள்.
சுலோகன்:
(பிந்து) புள்ளி என்ற வார்த்தையின் மகத்துவத்தை அறிந்து பிந்து ஆகி, பிந்து தந்தையை நினைவு செய்வது தான் யோகி ஆவது ஆகும்.
மாதேஷ்வரி அவர்களின் விலை மதிப்பிட முடியாத மகா வாக்கியம்.
முதன் முதலில் நமது உண்மையான இலட்சியம் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். அதை கூட நல்ல முறையில் புத்தியில் தாரணை செய்ய வேண்டும். அப்பொழுது தான் முழுமையான முறையில் அந்த இலட்சியத்தில் ஆஜராகி இருக்க முடியும்.
நமது உண்மையான இலட்சியமாவது, நான் ஆத்மா, அந்த பரமத்மாவின் குழந்தை ஆவேன் என்பதாகும்.
உண்மையில் கர்மாதீதராவேன், பிறகு தன்னைத் தானே மறந்த காரணத்தால் கர்மபந்தனத்தில் வந்து விட்டேன்.
இப்பொழுது மீண்டும் அது நினைவிற்கு வரும் பொழுது,
இந்த ஈசுவரிய யோகத்தில் இருப்பதன் மூலமாக நாம் செய்திருக்கும் விகர்மங்களை விநாசம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே நான் ஆத்மா,
பரமாத்மாவின் குழந்தை ஆவேன் என்பது நமது இலட்சியம் ஆகியது. மற்றபடி யாராவது தங்களை
(ஹம் சோ தேவதா) நாமே தான் தேவதை என்று நினைத்து,
அந்த இலட்சியத்தில் நிலைத்திருந்தார்கள் என்றால்,
பிறகு அந்த இருக்கக் கூடிய பரமாத்ம சக்தி கிடைக்க முடியாது.
மேலும் உங்களுடைய விகர்மங்களும் விநாசம் ஆகாது. இப்பொழுது இதுவோ நமக்கு முழுமையான ஞானம் உள்ளது - நான் ஆத்மா, பரமாத்மாவின் குழந்தை, கர்மாதீதராக ஆகி வருங்காலத்தில் போய் ஜீவன் முக்தரான தேவி தேவதா பதவியை அடைவேன். இந்த இலட்சியத்தில் இருப்பதால்,
அந்த பலம் கிடைத்து விடுகிறது.
இப்பொழுது இந்த மனிதர்கள் எங்களுக்கு சுகம், சாந்தி,
தூய்மை வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது கூட முழுமையான யோகம் இருந்தால் தான் பிராப்தி ஏற்படும்.
மற்றபடி தேவதா பதவி என்பதோ நமது வருங்கால பிராலப்தம் (பிராப்தி)
ஆகும். நமது புருஷார்த்தம் (முயற்சி)
என்பது தனி.
மேலும் நமது பிராலப்தம் கூட தனி ஆகும்.
எனவே இந்த இலட்சியம் கூட தனி ஆகும்.
நான் பவித்திர ஆத்மா, கடைசியில் பரமாத்மா ஆகி விடுவேன் என்று நாம் இந்த இலட்சியத்தில் இருக்கக் கூடாது. இல்லை.
ஆனால் நாம் பரமாத்மாவுடன் யோகம் செய்து பவித்திர ஆத்மா ஆக வேண்டும். மற்றபடி ஆத்மா ஒன்றும் பரமாத்மா ஆக வேண்டியது கிடையாது,
2.
இந்த அவினாஷி ஈசுவரிய ஞானத்திற்கு அநேக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் இந்த ஞானத்திற்கு அமிருதம் என்றும் கூறுகிறார்கள் - ஒரு சிலர் ஞானத்திற்கு மை என்று கூறுகிறார்கள். ஞான மையை குரு கொடுத்தார் என்று குருநானக் கூறினார். ஒரு சிலர் பிறகு ஞான மழை என்றும் கூறி உள்ளார்கள். ஏனெனில் இந்த ஞானத்தினால் தான் முழு படைப்பும் பசுமை நிறைந்ததாக ஆகி விடுகிறது. யாரெல்லாம் தமோபிரதான மனிதர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் சதோ குண மனிதர்களாக ஆகி விடுகிறார்கள். மேலும் ஞான மையினால் இருள் நீங்கி விடுகிறது. இதே ஞானத்தை பிறகு அமிருதம் என்றும் கூறுகிறார்கள். அதனால் ஐந்து விகாரங்களின் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள்
(குளிர்ச்சி) தணிந்து விடுகிறார்கள். பாருங்கள் கீதையில் பரமாத்மா காமேசு- குரோதேசு என்று தெளிவாக கூறுகிறார். அதில் கூட முதலில் முக்கியமானது காமம்.
அது தான் ஐந்து விகாரங்களில் முக்கிய விதை ஆகும். விதை இருக்கும் பொழுது பிறகு கோபம்,
பேராசை, மோகம்,
அகங்காரம் போன்ற செடிகள் உருவாகி விடுகின்றன. அதனால் மனிதர்களின் புத்தி இழிந்ததாக ஆகி விடுகிறது. இப்பொழுது அதே புத்தியில்,
ஞானத்தின் தாரணை ஆகிறது. ஞானத்தின் தாரணை முழுமையாக புத்தியில் ஏற்பட்டு விடும் பொழுது
- அப்பொழுது தான் விகாரங்களின் விதை அழிந்து போய் விடுகிறது. மற்றபடி சந்நியாசி களோ விகாரங்களை வசப்படுத்துவது மிகவும் கடினமான விஷயம் ஆகும் என்று நினைக் கிறார்கள். இப்பொழுது இந்த ஞானமோ சந்நியாசிகளிடம் இல்லவே இல்லை. பின் இப்பேர்ப்பட்ட அறிவுரையை அவர்கள் எப்படி கொடுக்க முடியும்?
மரியாதை - நியமங்கள் படி இருங்கள் என்று மட்டுமே கூறுகிறார்கள். ஆனால் உண்மையான மரியாதை எதுவாக இருந்தது?
அந்த மரியாதையோ,
இந்த காலத்தில் உடைந்து போய் விட்டுள்ளது. இல்லறத் தில் இருந்தபடியே எப்படி? நிர்விகாரி குடும்பத்தில் இருந்த அந்த சத்யுக திரேதாயுக தேவி தேவதைகளின் மரியாதை எங்கே? இப்பொழுது அந்த உண்மையான மரியாதை எங்கே உள்ளது? தற்காலத்திலோ தலைகீழான விகாரி மரியாதையை பாலனை செய்து கொண்டிருக்கிறார்கள். மரியாதைப்படி நடவுங்கள் என்று ஒருவருக்கொருவர் சும்மாவே கற்பிக் கிறார்கள். மனிதனுடைய முதல் கடமை என்ன என்பது யாருக்குமே தெரியாது.
மரியாதையில் இருங்கள் என்று அதை மட்டும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் மனிதனின் முதல் மரியாதை என்ன என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். நிர்விகாரியாக இருப்பது தான் மனிதனின் முதல் மரியாதை
(நியமம்) ஆகும்.
யாராவது இந்த மரியாதையில் இருக்கிறீர்களா? என்று கேட்டார்கள் என்றால், தற்காலத்தில் இந்த கலியுக கடைப்பில் நிர்விகாரியாக இருப்பதற்கான தைரியம் இல்லை என்று கூறி விடுகிறார்கள். இப்பொழுது மரியாதையில் இருங்கள் நிர்விகாரி ஆகுங்கள் என்று வாயால் கூறுவதால் மட்டும் நிர்விகாரி ஆகி விட முடியாது. நிர்விகாரி ஆக வேண்டும் என்றால், முதலில் இந்த ஞானம் என்ற வாளினால் இந்த ஐந்து விகாரங்களின் விதையை அழித்து விட வேண்டும். அப்பொழுது தான் விகர்மங்கள்
(பாவங்கள்) சாம்பலாக முடியும். நல்லது.
ஓம் சாந்தி
0 Comments