Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 10.02.23

 

10-02-2023  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களுக்கு எல்லை மற்றும் எல்லைக்கப்பாற்பட்டது பற்றிய ஞானம் அளித்து பிறகு இவற்றிலிருந்தும் அப்பால் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். சத்யுக திரேதா என்பது எல்லைக்குட்பட்டது. துவாபர கலியுகம் என்பது எல்லையில்லாதது.

கேள்வி:

தந்தை மூலமாக கிடைத்திருக்கும் ஞானத்தில் யார் உறுதியாக இருக்க முடியும்?

பதில்:

யார் முழுமையாக தூய்மை ஆகிறார்களோ. தூய்மை இல்லையென்றால் ஞானம் தாரணை ஆவதில்லை. தூய்மையான தங்க யுகத்தின் புத்தியில் தான் முழு ஞானம் தாரணை ஆகும். அவர்களே தந்தைக்கு சமானமாக மாஸ்டர் நாலேஜ்ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) ஆகிறார்கள்.

கேள்வி:

முயற்சி (புருஷார்த்தம்) செய்து செய்து குழந்தைகளாகிய உங்களுடைய எந்தவொரு நிலை அமைந்து விடும்?

பதில்:

இதுவரையும் நடந்து கொண்டிருக்கும் தப்பும் தவறுமான சங்கல்பங்கள், விகல்பங்கள் எல்லாமே முடிந்து போய் விடும். புத்தியோகம் ஒரு தந்தையிடம் ஈடுபட்டு விடும். புத்தி தங்க பாத்திரமாக ஆகி விடும். தந்தை தரும் அனைத்து ஆலோசனைகளும் தாரணை ஆகிக் கொண்டே போகும்.

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை தினம் தினம் வந்து புரிய வைக்கிறார். ஞானம் பக்தி மற்றும் வைராக்கியத்தின் இந்த சிருஷ்டி சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. எல்லை மற்றும் எல்லைக்கப்பாற்பட்டதைக் கடந்து செல்ல வேண்டும். எல்லை மற்றும் எல்லையில்லாதவற்றிற்கு அப்பால் என்று கூறப்படுகிறது அல்லவா? எனவே எல்லை மற்றும் எல்லையில்லாதவற்றிற்கு அப்பால் செல்ல வேண்டும் என்ற இந்த ஞானத்தை புத்தியில் இருத்த வேண்டும். தந்தைக்காகக் கூட எல்லை எல்லையில்லாதவற்றிற்கு அப்பாற் பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனுடைய பொருள் கூட புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஞானம், பக்தி பின்னால் வைராக்கியம் என்ற பொருள் (டாபிக்) பற்றி புரிய வைக்கிறார். ஞானம் என்று பகலுக்கு கூறப்படுகிறது என்பதையோ அறிந்துள்ளீர்கள். அப்பொழுது புதிய உலகமாக இருக்கும். அங்கு பக்தி இருப்ப தில்லை. அது எல்லைக்குட்பட்ட உலகமாகும். அங்கு மிக குறைவான மனிதர்கள் இருப்பார்கள். பிறகு மெள்ள மெள்ள சிருஷ்டியினுடைய விருத்தி ஆகிக் கொண்டே போகிறது. ஜீவ ஆத்மாக்களின் விருத்தி ஆகிறது. ஆத்மாக்கள் பரந்தாமத்திலிருந்து வந்து கொண்டே இருப்பார்கள். எல்லைக்குட்பட்டதிலிருந்து ஆரம்பமாகிறது. இச்சமயம் எல்லை யில்லாததாக உள்ளது. எனவே தந்தை எல்லை, எல்லையில்லாதது இவற்றிற்கு அப்பாற்பட்டு உள்ளார். எல்லைக்குட்பட்டதில் எவ்வளவு குறைவான குழந்தைகள் இருக்கிறார்கள். பின் சிருஷ்டி விருத்தி அடைகிறது. இப்பொழுது இவற்றிலிருந்தும் அப்பால் செல்ல வேண்டும். இதற்கு எல்லை யில்லாதது என்று கூறப்படுகிறது. முதலில் ஆத்மாக்கள் எல்லைக்குள் இருந்தார்கள். சத்யுக திரேதாவில் பாகம் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார்கள். 9 இலட்சம் மனிதர்கள் எங்கே - எங்கே 500 - 600 கோடி ஆத்மாக்கள் - எல்லைக்கப்பால் சென்று விடுங்கள். மனிதர்கள் எதுவரை ஆகாயம் உள்ளது, எதுவரை கடல் உள்ளது என்று சோதனை செய்கிறார்கள். அதன் முடிவை அடைய முடியாமல் இருக்கிறார்கள். மேலே செல்வதற்கு எவ்வளவு முயற்சி செய்கிறார்கள். போய் மீண்டும் திரும்பி வரும் அளவிற்கு அவ்வளவு எண்ணெய் ஊற்ற வேண்டி இருக்கும். எல்லைக்கு அப்பால் போக முடியாது. எல்லைக்குட்பட்டவரையும் செல்வார்கள். எல்லை, எல்லையில்லாதது இவற்றிற்கும் அப்பாற்பட்டது பற்றிய இரகசியத்தை தந்தை உங்களுக்குப் புரிய வைக்கிறார். முதன் முதலில் புதிய உலகத்தில் எல்லைக்குட்பட்டது இருக்கும். மிகவும் குறைவாக இருப்பார்கள். உங்களுக்கு படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானம் இருக்க வேண்டும். இந்த ஞானம் யாருக்குமே இல்லை. தந்தையையோ அறியாமல் உள்ளார்கள். இந்த அனைத்து இரகசியங்களை யும் எல்லை, எல்லையில்லாதது இவற்றிற்கும் அப்பாற்பட்டு இருக்கும் தந்தை தான் புரிய வைக்கிறார். எனவே தந்தை வந்து உங்களுக்கு படைப்பின் முதல் இடை கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கிறார். பிறகு குழந்தைகளே இவற்றிற்கும் அப்பால் செல்லுங்கள் என்று தந்தை கூறுகிறார். அங்கு ஒன்றுமே இல்லை. ஆகாயமே ஆகாயமாக இருக்கும். தண்ணீரே தண்ணீராக இருக்கும். பூமி ஆகியவை ஒன்றும் இருக்காது. இதற்கு எல்லை எல்லையற்ற வைக்கும் அப்பால் என்று கூறப்படுகிறது. இதற்கு எந்தவொரு முடிவையும் அடைய முடியாது. முடிவற்றது, முடிவற்றது என்று கூறு கிறார்கள். ஆனால் அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். தந்தை தான் முழு அறிவு அளிக்கிறார். ஏனெனில் அவர் சிறந்தவர் அதாவது மிகவும் அறிவாளி ஆவார். புரிந்து கொண்டு தான் மிகவும் அறிவாளிகளாக மாலையின் மணியாக ஆகி உள்ளார்கள். எந்தவொரு மனிதரும் கூட படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல் இடை கடையின் இரகசியத்தைப் புரியாமல் உள்ளார்கள். தந்தை தான் புரிய வைக்கிறார். நான் எல்லைக்குட் பட்டதையும் பார்த்து கொண்டிருக்கிறேன், எல்லைக்கு அப்பாலும் செல்கிறேன் என்று கூறுகிறார். இத்தனை அனைத்து தர்மங்கள் உள்ளன. இப்படி இப்படி ஸ்தாபனை ஆகிறது. அந்த சத்யுகமானது எல்லைக்குட்பட்ட சிருஷ்டி ஆகும். பிறகு கலியுகத்தில் இருப்பது எல்லையில்லாதது. பிறகு எல்லை, எல்லையற்றது இவற்றிற்கு அப்பாற்பட்டு நமது சாந்தி தாமம் இனிமையான இல்லம் உள்ளது. சத்யுகம் கூட இனிமையான இல்லம் ஆகும். அங்கு அமைதியும் இருக்கிறது பின் இராஜ்ய பாக்கியம் கூட இருக்கிறது. அங்கு சுகம் மற்றும் அமைதி இரண்டுமே இருக்கும். வீடு சென்றீர்கள் என்றால் அங்கு அமைதி மட்டும் இருக்கும். சுகத்தின் பெயர் இருக்காது. இப்பொழுது நீங்கள் சாந்தி மற்றும் சுகம் இரண்டையும் ஸ்தாபனை செய்து கொண்டி ருக்கிறீர்கள். அங்கு அசாந்தியின் பெயரே இருக்காது. அசாந்தி 5 விகாரங்களால் ஏற்படுகிறது என்பது உலகத்தில் யாருக்கும் தெரியாது. அரை கல்பத்திற்குப் பிறகு இராவண இராஜ்யம் ஆகிறது. அந்த ஜனங்கள் கல்பத்தின் ஆயுள் இலட்சக் கணக்கான வருடங்கள் என்று கூறி விடுகிறார்கள். எதுவும் புரிந்து கொள்வதில்லை. எனவே தாழ்ந்தவர்களாக, துக்கமுடையவர் களாக, தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள். சிறிதளவு கூட நாகரிகம் இல்லை. எந்தவொரு தெய்வீக பண்பாடு இருந்ததோ அதற்குப் பதிலாக அநாகரிகம் அசுர குணங்கள் உடையவர் களாக ஆகி விட்டுள்ளார்கள்.

இது எல்லையில்லாத நாடகம் ஆகும். இப்பொழுது எல்லை எல்லையில்லாதவற்றிற்கு அப்பால் மிகவுமே தூர தூரமாகச் செல்கிறோம் என்று கூறப்படுகிறது. மனிதர்களுக்கோ நாடகத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. எல்லாரையும் விட பெரியவர் யார்? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். அதனால் தான் உனது கதி, உனது வழி. உணக்குத் தான் தெரியும் என்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் எல்லாமே புரிந்துள்ளீர்கள். ஆனால் உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். எனது புத்தி எதுவரை செல்கிறது என்று தந்தை வந்து புரிய வைக் கிறார். எல்லை மற்றும் எல்லையில்லாதவற்றிற்கு அப்பால். .. அங்கு ஒன்றுமே இல்லை. குழந்தை களாகிய நீங்கள் இருப்பதற்கான இடமாவது அந்த பிரம்மாண்டம், பிரம்ம மகதத்துவம், எப்படி ஆகாய தத்துவத்தில் இங்கு அமர்ந்துள்ளீர்கள், எதுவுமே தென்படுவதில்லை. வெட்ட வெளிச் சமாகவே உள்ளது. வானொலியில் ஆகாஷ் வாணி என்று கூறுகிறார்கள். இப்பொழுது ஆகாயமோ மிகவும் பெரியது ஆகும். அதன் முடிவைக் காண முடியாது. அதனுடைய வாணி - பேச்சை மனிதர்கள் என்ன புரிந்து கொள்வார்கள். இந்த ஆகாய தத்துவத்தில் இந்த வாயால் வெட்ட வெளியிலிருந்து குரல் வெளிப்படுகிறது. இதற்கு ஆகாஷ் வாணி என்று கூறப்படுகிறது. பேச்சு வாயிலிருந்து - வெளியிலிருந்து வெளிப்படுகிறது. பேச்சு மூக்கு, காதிலிருந்து ஒன்றும் வெளிப் படாது. எனவே தந்தை கூட இந்த சரீரத்தில் வந்து இந்த வாய் மூலமாக குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார். தந்தை பற்றி குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். எப்படி நாம் ஆத்மாக்கள் ஆவோம். அதே போல பாபா கூட உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா ஆவார். அனைவருக்கும் வரிசைக்கிரமமாக பாகம் கிடைத்து விட்டுள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார். பிறகு கீழே வந்தீர்கள் என்றால் வரிசைக்கிரமமாக நாடகத்தில் எல்லாரும் வருகிறார்கள். புது உலகத்தில் முதன் முதலில் இருப்பது இலட்சுமி நாராயணர். பிறகு அவர் களுடன் கூட யார் புது உலகத்தில் இருக்கிறார்களோ - மாலையைப் பாருங்கள். மேலே மலர் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் பிறகு இருப்பது மேரு - ஜோடி. பிறகு பாருங்கள் மாலை எப்படி அதிகரிக்கிறது.

இவை எல்லாமே படிப்பு ஆகும் அல்லவா? முழு படிப்பு புத்தியில் இருக்கிறது. விதை மற்றும் விருட்சம். விதை மேலே உள்ளது. படைப்புகர்த்தா தந்தை வந்து படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய இரகசியத்தை உங்களுக்குப் புரிய வைத்துள்ளார். இந்த சிருஷ்டி என்பது கல்ப விருட்சம் ஆகும். இதனுடைய ஆயுள் கூட மிக சரியாக உள்ளது. இதில் ஒரு வினாடியினுடைய வித்தியாசம் கூட ஏற்பட முடியாது. உங்களுக்கு எவ்வளவு ஞானம் கிடைத்துள்ளது. யார் தூய்மையாக ஆகிறார்களோ அவர்களே இதில் உறுதியாக இருக்க முடியும். இல்லையென்றால் ஞானம் தாரணை ஆக முடியாது. தூய்மையான பாத்திரம், தங்க யுகத்தின் புத்தியாக இருந்தது என்றால் ஞானம் எப்படி பாபாவிடம் உள்ளதோ அவ்வாறே சுலபமாக தாரணை இருக்கும். வரிசைக்கிரமமாக மாஸ்டர் நாலேஜ்ஃபுல் ஆகி விடுவார்கள். இந்த இரகசியத்தை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. தேவதைகளின் வாயிலிருந்தும் கேட்க மாட்டார்கள். தூய்மையற்ற (பதீதமான) மனிதர்களின் வாயிலிருந்தும் கேட்க மாட்டார்கள். தந்தை தான் கூறுகிறார். அது கூட இப்பொழுது சங்கமத்தில் தான் நீங்கள் கேட்கிறீர்கள். தந்தை ஒரே ஒரு முறை தான் தந்தை, ஆசிரியர், சத்குருவாக ஆகிறார். பாகத்தை ஏற்று நடிக்கிறார். பிறகு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு அதே பாகத்தை ஏற்று நடிப்பார். பிரளயமோ ஏற்படுவது இல்லை. எனவே முதலில் இருப்பவர் தந்தை, உயர்ந்ததிலும் உயர்ந்த சிவன். பிறகு மேரு உயர்ந்ததிலும் உயர்ந்த மகாராஜா மகாராணி. பிறகு கடைசியில் போய் ஆதிதேவன், ஆதி தேவி ஆவார்கள். முழு ஞானம் உங்களது புத்தியில் உள்ளது. ஆனால் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப. இந்த குழந்தைகள் தாரணை செய்வது மிகவும் சுலபம் ஆகும். எந்தவொரு கஷ்டமும் இல்லை. ஆனால் நினைவு யாத்திரை முக்கியமானது ஆகும். தங்க பாத்திரத்தில் இரத்தினங்கள் தங்க முடியும். உயர்ந்ததிலும் உயர்ந்தது இரத்தினங் கள் ஆகும். இந்த பாபா இரத்தினங்களின் வியாபாரி கூட ஆவார் அல்லவா? நல்ல இரத்தினங் கள் வரும் பொழுது வெள்ளி டப்பாவில் வெல்வெட் போட்டு இது போல அமைத்து வைத்து கொண்டிருந்தார். பிறகு இது மிகவும் முதல்தரமான பொருள் என்ற வகையில் அது போல திறந்து காண்பிப்பார். நல்ல பொருள், நல்ல பாத்திரத்தில் தான் அழகாக இருக்கும். உங்களுடைய இந்த காதுகள் பாத்திரங்கள் ஆகும். இவற்றின் மூலம் நீங்கள் கேட்கிறீர்கள். தாரணை செய்கிறீர்கள். எனவே இது தங்கமாக (தூய்மையாக) இருக்க வேண்டும். அதாவது புத்தியோகம் பாபா விடம் முழுமையாக இருக்க வேண்டும். புத்தியோகம் சரியாக இல்லை யென்றால், எந்த விˆயமும் நிலைக்காது. தப்பும் தவறுமான சங்கல்பங்கள் கூட எழக்கூடாது. புயல்கள் நின்று விட வேண்டும். முயற்சி (புருஷார்த்தம்) செய்து செய்து இந்த நிலை ஏற்படும். புத்தியை அனைத்து பக்கங்களிலிருந்தும் நீக்கி என்னுடன் ஈடுபடுத்தி ஈடுபடுத்தி பாத்திரம் தங்கமாக ஆகி விடும். மற்றவர்களுக்கும் தானம் கொடுத்துக் கொண்டே இருங்கள். பாரதம் மகாதானி ஆகும். பாரதத்தில் பணம் ஆகியவற்றை நிறைய தானம் செய்கிறார்கள். இது பிறகு அவினாஷி ஞான இரத்தினங் களின் தானம் ஆகும். அதை தந்தை குழந்தை களுக்குக் கொடுக்கிறார். தேக சகிதம் தேகத்தின் சம்பந்தியினர் அனைவரையும் விடுத்து, புத்தியை ஒருவரிடம் செலுத்த வேண்டும். நாமோ தந்தையினுடையவர் ஆவோம். அவ்வளவே! பாபா இலட்சியம் குறிக்கோளைக் கூறி விடுகிறார். புருஷார்த்தம் (முயற்சி) செய்வது குழந்தை களின் வேலையாகும். அப்பொழுது தான் உயர்ந்த பதவியை அடைவீர்கள். எந்தவொரு தப்பும் தவறுமான எண்ணங்கள் எழக் கூடாது. தந்தை ஞானக் கடல் ஆவார். எல்லை, எல்லையில்லாதது இவற்றிற்கு அப்பாற்பட்டவை பற்றிய அனைத்து இரகசியங்களையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நான் எல்லையற்றவைக்கு அப்பால் சென்று விடுகிறேன். நீங்களும் எல்லை, எல்லையில்லாத வைகளுக்கு அப்பால் சென்று விடுங்கள். எண்ணங்கள் ஆகியவை எதுவும் இல்லை. பிறகு நீங்களும் அப்பால் சென்று விடுவீர்கள். இல்லற விவகாரங்களில் இருக்கையிலும் தாமரை மலர் போல ஆக வேண்டும். கைகள் காரியம் செய்ய, இதயத்தை சிவபாபாவிற்குக் கொடுத்து விட வேண்டும். போகப் போக அநேக குழந்தைகள் விட்டுவிட்டும் போய் விடுகிறார்கள். தோல்வி அடைந்து விடுகிறார்கள். உங்களுக்கு எல்லாமே தெரிந்து போய் விடும். நல்ல நல்ல மகாரதிகளைக் கூட மாயை விழுங்கிச் சென்று விட்டது. இன்று அவர்கள் இல்லை. தந்தையை விட்டு விட்டு மாயையின் அடைக்கலம் எடுக்கிறார்கள். படிப்பவர் கள் உயர்ந்து சென்று விடுகிறார்கள். ஆனால் படிப்பிக்கும் ஆசிரியை மாயாவிடம் சென்று விடுகிறார். எப்படி இராஜ துரோகிகள் இருப்பார்கள், மற்றவர்களிடம் போய் அடைக்கலம் எடுக் கிறார்கள். யார் பலசாலி என்று பார்க்கிறார்களோ அவர்கள் பக்கம் சென்று விடுகிறார்கள். மிகவுமே பலம் பொருந்தியவரோ ஒரே ஒரு தந்தை ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவரே சர்வசக்திவான் ஆவார். நமக்கு உயர்ந்த படிப்பை கற்பித்து ஒரேயடியாக உலகத்தின் அதிபதியாக ஆக்கி விடுகிறார். முயற்சி செய்து பெற வேண்டும் என்ற வகையில் எந்தவொரு அடையப் பெறாத பொருள் கூட இருக்காது. உங்களிடம் இருக்காத எந்தவொரு பொருளும் இருக்க முடியாது. அது கூட வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப. எல்லையில்லாத தந்தையைத் தவிர இந்த விஷயங்கள் யாருக்குமே தெரியாது. நீங்கள் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள். பிறகு நீங்களே பூசாரி ஆகி உள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் பூஜைக்குரியவராக ஆவதற்கான முயற்சி செய்து கொண்டி ருக்கிறீர்கள். எந்த அளவிற்கு தந்தையின் நினைவில் இருப்பீர்களோ மாயையின் புயல்கள் முடிந்து கொண்டேபோகும். ஹாதம் தாயி என்ற நாடகம் காண்பிக்கிறார்கள். (வாயில்) இரும்பு துண்டு போட்டவுடன் மாயை ஓடி போய் விடும். இரும்பு துண்டு எடுத்தாரோ மாயை வந்து விடும். குழந்தைகளே! உங்களை ஆத்மா சகோதர சகோதரர் என்று உணருங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். சரீரமே இல்லையென்றால் பின் பார்வை எங்கே போகும். அந்த அளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். கல்ப கல்பமாக உங்களுடையது தான் புருஷார்த்தம் (முயற்சி) நடக்கிறது. புருஷார்த்தத்தினால் நீங்கள் உங்களது பாக்கியத்தை அமைக்கிறீர்கள்.

தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்கு முக்கியமான விˆயம் கூறுகிறார். இந்த விஷயத்தை நீங்கள் தான் அறிந்து கொள்ள முடியும். அவர்கள் காட்ஃபாதர் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவோம் என்று கூறுகிறார்கள் என்றாலும் கூடப் புரிந்து கொள்வதில்லை. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் இராமர் என்று பாடவும் செய்கிறார்கள். அனைவருக்கும் சுகம் அளிப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். இராமருக்கு பாபா என்று கூற மாட்டார்கள். பாபா ஒன்று சரீரமுடைய வருக்கும், மற்றொன்று அசரீரியாக இருப்பவருக்கும் கூறுகிறார்கள். முதன் முதலில் இருப்பது அசரீரியாக. பிறகு சரீரம் உடையவராக ஆகிறார்கள். முதலில் நாம் பாபாவுடன் கூட இருக்கிறோம். பிறகு பாகத்தை ஏற்று நடிப்பதற்காக லௌகீக தேகதாரி தந்தையிடம் வருகிறோம். இவை எல்லாமே ஆன்மீக விஷயங்கள் ஆகும். அந்த லௌகீக உலகியல் படிப்பை மறந்து விட வேண்டும். சக்கரம் முழுவதும் புத்தியில் உள்ளது. இப்பொழுது இருப்பது சங்கம யுகம் ஆகும். நாம் இப்பொழுது புது உலகிற்குச் செல்ல வேண்டும். பழைய உலகம் முடியப் போகிறது. இப்பொழுது புது உலகத்திற்குச் செல்வதற்காக தெய்வீக குணங் களையும் அவசியம் தாரணை செய்ய வேண்டி இருக்கும். பாவனமாக ஆக வேண்டி இருக்கும். தந்தையைக்கூட அவசியம் நினைவு செய்ய வேண்டி இருக்கும். மேலும் பாவங்கள் நீங்கி விடும் வகையில் முழுமையாக நினைவு செய்ய வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால், பாவனமாக ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். இதற்கு யோக அக்னி என்று கூறப்படுகிறது. பாபாவின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். மற்றபடி முழு உலகமோ இராவணனின் வழி படி நடந்து கொண்டிருக்கிறது. அது விகாரி வழியாகும். இது நிர்விகாரி வழியாகும். 5 விகாரங்கள் உள்ளன அல்லவா? முதன் முதலில் இருப்பது தேக அகங்காரம், பிறகு காமம், கோபம்..... மனிதர்கள் அகங்காரத்தை பின்னால் வைக்கிறார்கள். உண்மையில் அகங்காரத்தைத் தான் முதலில் வைக்க வேண்டும். பின்னால் மற்ற விகாரங்கள் வருகின்றன. தந்தை குழந்தை களாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார். கல்ப கல்பமாக அநேக முறை புரிய வைத்துள்ளார். ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப் பிறகும் புரிய வைக்கிறார். பாபா நம்மை ஆஸ்திகராக ஆக்குகிறார் என்பதை புத்தி மூலம் புரிந்துள்ளீர்கள். அதாவது படைப்பவர் மற்றும் படிப்பின் ஞானத்தைக் கூறுகிறார். எனவே அவருக்கு கிரியேட்டர் - படைப்பவர் என்று கூறப்படுகிறது. பார்க்கப் போனால் படைப்போ அனாதி ஆகும். பிறகும் புரிய வைப்பவர் ஒருவர் ஆவார். அவருக்குள் முழு ஞானம் உள்ளது. இருப்பது அனாதி அமைக்கப்பட்ட நாடகமாக. யாரும் அமைப்பது ஒன்றும் இல்லை. அந்த எல்லைக்குட்பட்ட நாடகத்தைப் படம் பிடிப்பது சுலப மாக இருக்கும். இதுவோ மிகவும் பெரிய எல்லையில்லாத நாடகம் ஆகும். இது அனாதி நாடகம் படம் பிடிக்கப்பட்டதாகும். அமைந்த அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். இந்த நாடகத்தில் சிறிதளவும் வித்தியாசம் ஏற்பட முடியாது. எல்லையில்லாத நாடகத்தின் சக்கரம் நடந்து கொண்டே இருக் கிறது. நாம் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக மீண்டும் சதோபிரதான நிலை யிலிருந்து தமோபிரதானமாக ஆகிறோம். தூய்மை தான் முக்கிய விஷயமாகும். தூய்மையான உலகத்தில் எவ்வளவு சுகம் உள்ளது. பதீத தூய்மையற்ற உலகத்தில் எவ்வளவு துக்கம் உள்ளது. அரைகல்பம் சுகதாமம் அரைகல்பம் துக்கதாமம் ஆகும். இந்த இரகசியம் கூட உங்களது புத்தியில் தான் உள்ளது. வேறு யாருக்குமே தெரியாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தப்பும் தவறுமான சங்கல்பங்களிலிருந்து விடுபடுவதற்காக புத்தியோகத்தை எல்லை, எல்லையில்லாதவை இவற்றிற்கு அப்பாற்பட்ட வீட்டின் மீது ஈடுபடுத்த வேண்டும். தேக திருஷ்டியை நீக்கி விடுவதற்காக ஆத்மா சகோதர சகோதரன் ஆவேன் என்ற அப்பியாசத்தை பக்குவப் படுத்த வேண்டும்.

2. அழியாத ஞான இரத்தினங்களை தானம் செய்ய வேண்டும். புத்தியை தங்கமாக ஆக்க வேண்டும் என்றால் மற்ற அனைத்து பக்கங்களிலிருந்தும் அகற்றி, ஒரு தந்தையிடம் ஈடுபடுத்த வேண்டும்.

வரதானம்:

தன்னை பாபாவிடம் ஒப்படைத்து விட்டு புத்தியின் மூலம் சரண்டர் (அர்ப்பணம்) ஆகக்கூடிய டபுல் லைட் ஆகுக.

தனது பொறுப்புகளை பாபாவிடம் ஒப்படைத்து விட்டு, தன்னையும் பாபாவிடம் ஒப்படைத்து விடுங்கள் அதாவது தனது அனைத்து சுமைகளையும் பாபாவிடம் கொடுத்து விட்டால் டபுல் லைட் ஆகிவிடலாம். புத்தியின் மூலம் சரண்டர் ஆகிவிட்டீர்கள் என்றால் எந்தவொரு விˆயமும் புத்தி யில் வராது, அனைத்தும் பாபாவினுடையதாக இருக்கிறது, அனைத்தும் பாபாவிடம் கொடுத்து விட்டீர்கள் என்றால் வேறு எதுவும் இருக்காது, எதுவும் இல்லையென்றால் புத்தி எங்கு செல்லும், ஒரு பாபாவிடம், ஒரே ஒரு நினைவு என்ற வழி, இந்த வழிகளின் மூலம் எளிதாகவே குறிக்கோளை அடைந்து விடலாம்.

சுலோகன்:

உறுதியான சிம்மாசனத்தில் வீற்றிருங்கள், சாட்சி பார்வையாளர் ஆகி நடிப்பை நடிக்கக்கூடியவர் தான் சிரேஷ்ட பார்ட்தாரி (நடிகன்) ஆவார்

 Download PDF

 

Post a Comment

0 Comments