05-02-2023 காலை
முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 09.12.1993
Listen to the Murli audio file
ஒருமுகத் தன்மையின் சக்தி, உறுதித்தன்மை (திடதா) மூலம் சகஜ வெற்றியின் பிராப்தி
இன்று பிராமண உலகத்தைப் படைப்பவர் தம்முடைய நாலாபுறத்தின் பிராமணப் பரிவாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது சிறிய,
விலகிய மற்றும் மிக அன்பான அலௌகிக பிராமண உலகம். முழு டிராமாவிலும் மிக உயர்ந்த உலகம்.
ஏனென்றால் பிராமண உலகத்தின் ஒவ்வொரு நடைமுறையும் தனிப்பட்டது மற்றும் விசேஷமானது.
இந்த பிராமண உலகில் பிராமண ஆத்மாக்களும் கூட உலகத்திலிருந்து வேறுபட்ட விசேஷமான ஆத்மாக்கள். அதனால் தான் இது விசேஷ ஆத்மாக்களின் உலகமாக உள்ளது.
ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் சிரேஷ்ட உள்ளுணர்வு, சிரேஷ்ட திருஷ்டி மற்றும் சிரேஷ்ட கர்மம் உலகத்தின் அனைத்து ஆத்மாக் களையும் உயர்ந்தவர்களாக ஆக்குவதற்கு நிமித்தமாக உள்ளது.
ஒவ்வோர் ஆத்மா மீதும் இந்தப் பொறுப்பு உள்ளது என்பதால் ஒவ்வொருவரும் தனது இந்தப் பொறுப்பை அனுபவம் செய்கிறீர்களா?
எவ்வளவு பெரிய பொறுப்பு! முழு உலகத்தின் மாற்றம்!
ஆத்மாக்களை மட்டும் நீங்கள் மாற்றுவதில்லை. ஆனால் இயற்கையை யும் கூட மாற்றுகிறீர்கள். இந்த ஸ்மிருதி சதா இருக்க வேண்டும் என்பதில் நம்பர்வார் இருக்கிறீர்கள். பிராமண ஆத்மாக்கள் அனைவருக்குள்ளும் சங்கல்பம் சதா உள்ளது - விசேஷ ஆத்மாக்களாகிய நாம் நம்பர் ஒன் ஆக வேண்டும்.
ஆனால் கர்மத்தில் வித்தியாசம் வந்து விடுகிறது. இதற்கான காரணம்? கர்மம் செய்யும் போது சதா தனது ஸ்மிருதியை அனுபவி ஸ்திதியில் கொண்டு வருவதில்லை. கேட்பது,
அறிந்து கொள்வது இந்த இரண்டும் நினைவில் இருக்கிறது.
ஆனால் தன்னை அந்த ஸ்திதியில் உணர்ந்து நடந்து கொள்வதில் பெரும்பாலோர் சில நேரம் அனுபவிகளாகவும், சில நேரம் வெறுமனே ஏற்றுக் கொள்பவராகவும் அறிந்திருப்பவராகவும் மட்டுமே ஆகி விடுகின்றனர்.
இந்த அனுபவத்தை அதிகரிப்பதற்காக இரண்டு விஷயங்களின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்.ஒன்று, தன்னுடைய மகத்துவத்தை, இன்னொன்று,
சமயத்தின் மகத்துவத்தை.
தன்னைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறீர்கள். யாரிடமாவது கேளுங்கள், நீங்கள் எத்தகைய ஆத்மா என்று. அல்லது தன்னையே கேளுங்கள்,
நான் யார்?
அப்போது எத்தனை விஷயங்கள் நினைவுக்கு வரும்? ஒரு நிமிடத்திற்குள் தன்னுடைய எத்தனை சுவமான்கள் நினைவு வருகின்றன?
ஏனென்றால் சமயத்தில் அந்த ஸ்திதியின் இருக்கையில் நீங்கள் செட்டாவதில்லை. இருக்கை மீது செட்டாகி இருப்பீர்களானால் ஏதாவது பலவீனமான சம்ஸ்காரமாக இருந்தாலும் சரி,
யாராவது ஆத்மாக்களாக இருந்தாலும் சரி, இயற்கையாக இருந்தாலும் சரி,
எந்த விதமான ராயல் மாயாவாக இருந்தாலும் சரி,
அப்செட் ஆக்க முடியாது. எப்படி சரீரத்தின் ரூபத்திலும் கூட அநேக ஆத்மாக் களுக்கு ஒரே இருக்கையில் அல்லது இடத்தில் ஒருமுகப்பட்டு அமர்வதற்கான அப்பியாசம் இல்லை என்றால் அவர் என்ன செய்வார்?
அசைந்து கொண்டே இருப்பார் இல்லையா?
அது போல் மனம் மற்றும் புத்திக்கு எந்த ஓர் அனுபவத்தின் இருக்கையிலும் செட்டாவதற்கு வருவதில்லை என்றால் அவ்வப்போது செட்டாவார்,
அவ்வப்போது அப்செட் ஆவார். சரீரத்தை அமர்த்துவதற்கு ஸ்தூலமான இருப்பிடம் உள்ளது.
மனம்-புத்தியை அமர்த்துவதற்கு சிரேஷ்ட ஸ்திதிகளின் இருப்பிடம் உள்ளது. ஆக,
பாப்தாதா குழந்தைகளின் இந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவ்வப்போது நல்ல ஸ்திதியின் அனுபவத்தில் நிலைத்திருக்கின்றனர். மற்றும் அவ்வப்போது தனது ஸ்திதியிலிருந்து குழப்பத்தில் வந்து விடுகின்றனர்.
எப்படி சின்னக் குழந்தைகள் சஞ்சலமடைகின்றனர் (அங்குமிங்கும் அலைந்து துள்ளிக் கொணடிருப்பது) என்றால் ஓரிடத்தில் அதிக நேரம் நிலைத்திருக்க முடியாது. ஆக,
அநேகக் குழந்தைகள் இந்தக் குழந்தைப் பருவ விளையாட்டுகளை அதிகம் செய்கின்றனர்.
அவ்வப்போது பார்த்தால் அதிக ஒருமுகத் தன்மை (ஏகாக்ரதா)
மற்றும் அவ்வப்போது ஒருமுகத் தன்மைக்கு பதிலாக பல்வேறு ஸ்திதிகளில் அலைக்கழிந்து கொண்டே இருப்பார்கள்.
ஆக, இச்சமயம் விசேஷ கவனம் வேண்டும் - மனம்-புத்தி சதா ஒருமுகப்பட்டு இருக்க வேண்டும்.
ஏகாக்ரதாவின் சக்தி சகஜமாக நிர்விக்னம் ஆக்கி விடும்.
கடின முயற்சி செய்வதற்கான அவசியம் இல்லை. ஏகாக்ரதாவின் சக்தி தானாகவே ஒரு பாபாவைத் தவிர யாரும் இல்லை என்ற அனுபவத்தை சதா செய்விக்கும். ஏகாக்ரதாவின் சக்தி சகஜமாக ஏக்ரஸ் ஸ்திதியை உருவாக்கி விடும்.
ஏகாக்ரதாவின் சக்தி சதா அனைவருக்காகவும் நன்மையின் உள்ளுணர்வை சகஜமாக உருவாக்கும்.
ஏகாக்ரதாவின் சக்தி அனைவர் மீதும் சகோதர- சகோதரன் திருஷ்டியைத் தானாகவே உருவாக்கி விடும்.
ஏகாக்ரதாவின் சக்தி ஒவ்வோர் ஆத்மாவின் சம்பந்தத்திலும் அன்பு,
மதிப்பு, சுயமரியாதையின் கர்மத்தை சகஜமாக அனுபவம் செய்விக்கிறது. ஆக, இப்போது என்ன செய்ய வேண்டும்? என்ன கவனம் கொடுக்க வேண்டும்? ஏகாக்ரதா.
(அந்த ஏகாக்ராதாவில்) நிலைத்து விடுகிறீர்கள். அனுபவமும் செய்கிறீர்கள். ஆனால் ஏகாக்ர அனுபவி ஆவதில்லை.
சில நேரம் சிரேஷ்ட அனுபவத்தில்,
சில நேரம் மத்யம், சில நேரம் சாதாரணம்,
மூன்றிலும் சுற்றி வந்து கொண்டே இருக்கிறீர்கள். அவ்வளவு சக்திசாலி ஆகுங்கள்
- மனம்-புத்தி சதா உங்கள் கட்டளைப்படி நடக்க வேண்டும். கனவிலும் கூட ஒரு விநாடி கூட குழப்பத்தில் வரக்கூடாது.
மனம், மாலிக்கை
(ஆத்மா) வேறு வசமாக ஆக்கக் கூடாது.
வேறு வசமாகி விட்ட ஆத்மாவின் அடையாளம் - அந்த ஆத்மாவுக்கு எவ்வளவு சமயம் சுகம்,
நிம்மதி, ஆனந்தத்தின் அனுபவம் விரும்பினாலும் கிடைக்காது. பிராமண ஆத்மா ஒரு போதும் யார் வசமாகவும் ஆக முடியாது. தனது பலவீனமான சுபாவ,
சம்ஸ் காரத்தின் வசமாகவும் ஆக முடியாது. உண்மையில் சுபாவம் என்பதன் அர்த்தம் சுயத்தின் பாவம் அல்லது உணர்வு. சுயத்தின் உணர்வோ நன்றாகவே இருக்கும். கெட்டுப் போவ தில்லை.
சுயம் எனச் சொல்வதால் என்ன நினைவு வருகிறது?
ஆத்மிக சொரூபம் நினைவு வருகிறது இல்லையா? ஆக,
ஸ்வ-பாவம் என்றால் சுயத்தின் மீது மற்றும் அனைவர் மீதும் ஆத்மிக உணர்வு இருக்க வேண்டும்.
எப்போ தெல்லாம் பலவீன வசமாகி யோசிக்கிறீர்களோ - எனது சுபாவம் அல்லது எனது சம்ஸ்காரமே அப்படித் தான்,
என்ன செய்வேன்,
அப்படித் தான் இருக்கிறது இதை எந்த ஆத்மா பேசுகிறது? இந்த வார்த்தை அல்லது சங்கல்பம் வேறு வசமாகி விட்ட ஆத்மாவினுடையதாகும். ஆக,
எப்போ தெல்லாம் இந்த சங்கல்பம் வருகிறதோ - சுபாவமே அப்படித் தான் என்றால் சிரேஷ்ட அர்த்தத்தில் நிலைத்து விடுங்கள். சம்ஸ்காரம் முன்னால் வருகிறது
- எனது சம்ஸ்காரம் என்றால் யோசியுங்கள்
- விசேஷ ஆத்மாவாகிய என்னுடைய சம்ஸ்காரங்களா இவை? அவற்றை என்னுடைய சம்ஸ்காரங்கள் எனச் சொல்கிறீர்கள். என்னுடைய என்று சொல்கிறீர்கள் என்றால் பலவீனமான சம்ஸ்காரங்களையும் கூட எனது என்ற காரணத்தால் விடுவதில்லை. இது நியமம் - எங்கே எனது என்பது உள்ளதோ, அங்கே தனது (நம்முடையது)
என்பது உள்ளது.
எங்கே தனது என்பது உள்ளதோ,
அங்கே அதிகாரம் உள்ளது. ஆக,
பலவீனமான சம்ஸ்காரங்களைத் தன்னுடைய தாக்கிக் கொள்பவர்கள் தங்களது அதிகாரத்தை விட மாட்டார்கள். எனவே வேறு வசமாகி பாபாவின் முன்னால் கோரிக்கை வைக்கிறீர்கள் - விடுவியுங்கள், விடுவியுங்கள். சம்ஸ்காரம் எனச் சொல்லும் போது நினைவு செய்யுங்கள்
- அநாதி சம்ஸ்காரம்,
ஆதி சம்ஸ்காரம் தான் என்னுடைய சம்ஸ்காரம். இவை மாயாவின் சம்ஸ்காரங்கள். என்னுடையவை அல்ல.
ஆகவே ஏகாக்ரதாவின் சக்தி மூலம் வேறு வசமான ஸ்திதியை மாற்றி எஜமான் தன்மையின் ஸ்திதியின் இருக்கை மீது செட் ஆகி விடுங்கள்.
யோகத்திலும் அமர்கின்றனர்.
அனைவருமே ஆர்வத்தோடு தான் அமர்கின்றனர்.
ஆனால் எவ்வளவு நேரம் எந்த ஸ்திதியில் அமர்ந்திருக்க விரும்புகிறார்களோ, அவ்வளவு நேரம் ஏகாக்ர ஸ்திதி அமைந்திருப்பதற்கான அவசியம் உள்ளது.
ஆகவே என்ன செய்ய வேண்டும்?
எந்த விஷயத்திற்கு அடிக்கோடு இடுவீர்கள்?
(ஏகாக்ரதா) ஏகாக்ரதாவில் தான் திடதா
(உறுதித்தன்மை) உள்ளது.
எங்கே திடதா உள்ளதோ, அங்கே வெற்றி கழுத்துக்கு மாலையாக உள்ளது.
நல்லது.
நாலாபுறமுள்ள அலௌகிக பிராமண உலகத்தின் விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா சிரேஷ்ட ஸ்திதி என்ற அனுபவத்தின் இருக்கை மீது செட்டாகி இருக்கக் கூடிய ஆத்மாக் களுக்கு,
சதா சுயத்தின் மகத்துவத்தை அனுபவம் செய்யக் கூடிய,
சதா ஏகாக்ர தாவின் சக்தி மூலம் மனம்-புத்தியை ஒருமுகப்படுத்தக் கூடிய, சதா ஏகாக்ரதாவின் சக்தியினாலேயே திடதா மூலம் சகஜ வெற்றி பெறக்கூடிய சர்வ சிரேஷ்ட, சர்வ விசேஷ, சர்வ சிநேகி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அனபு நினைவு மற்றும் நமஸ்தே.
அவ்யக்த பாப்தாதாவின் தனிப்பட்ட சந்திப்பு
பறக்கும் கலையில் செல்வதற்காக டபுள் லைட் ஆகுங்கள், எந்த ஒரு கவர்ச்சியும் கவர்ந்திழுக்கக் கூடாது
அனைவரும் தங்களை நிகழ்காலத்தின் படி தீவிர வேகத்தில் பறப்பதாக அனுபவம் செய்கிறீர்களா? சமயத்தின் வேகம் தீவிரமாக உள்ளதா, அல்லது ஆத்மாக்களின் புருஷார்த் தத்தினுடைய வேகம் தீவிரமாக உள்ளதா?
சமயம் உங்கள் பின்னாலேயே வருகிறதா அல்லது நீங்கள் சமயத்திற்கேற்ற வாறு நடந்து கொண்டிருக்கிறீர்களா? சமயத்திற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கவில்லை இல்லையா? அதாவது கடைசியில் எல்லாம் சரியாகி விடு சம்பூர்ணமாகி விடுவார்கள்,
பாப்-சமான் ஆகி விடுவார்களா?
அந்த மாதிரி இல்லை இல்லையா?
ஏனென்றால் டிராமாவின் கணக்குப்படி நிகழ்காலம் மிகவும் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதி வேகத்தில் போகிறது. அது போல் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்களும் புருஷார்த்தத்தில் அதி தீவிர வேகத்தில் சென்று கொண்டிருக் கிறீர்களா? அல்லது சில நேரம் மந்தமாகவும் சில நேரம் வேகமாகவும் செல்கிறீர்களா? கீழே வந்து விட்டுப் பிறகு மேலே செல்கிறீர்கள் என்று அந்த மாதிரி இருக்கக் கூடாது.
மேலே கீழே ஆகக் கூடியவர்களின் வேகம் ஒரு போதும் ஒரே சமநிலையில் இருக்க முடியாது. ஆக,
சதா அனைத்து விஷயங்களிலும் சிரேஷ்டமான அல்லது தீவிர வேகத்தில் பறக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அது போல் பாடலும் உள்ளது -- ஏறும் கலையால் அனைவருக்கும் நன்மை என்பதாக.
ஆனால் இப்போது என்ன சொல்வீர்கள்?
பறக்கும் கலையால் அனைவருக்கும் நன்மை.
இப்போது ஏறும் கலையின் சமயமும் முடிந்து விட்டது.
இப்போது பறக்கும் கலையின் சமயம்.
ஆக, பறக்கும் கலையின் சமயத்தில் யாராவது ஏறும் கலையின் மூலம் சென்றடைய விரும்பினால் சென்று சேர முடியுமா? முடியாது.
ஆகவே சதா பறக்கும் கலை இருக்க வேண்டும்.
பறக்கும் கலையின் அடையாளம் சதா டபுள் லைட்.
டபுள் லைட் இல்லையென்றால் பறக்கும் கலை இருக்க முடியாது. சிறிதளவு சுமையும் கூட கீழே கொண்டு வந்து விடும்.
எப்படி விமானத்தில் செல்கிறீர்கள். பறக்கும் போது மெஷினரியில் அல்லது பெட்ரோலில் கொஞ்சம் குப்பை வந்து விடுகிறது என்றால் நிலைமை என்னவாகும்? பறக்கும் கலையில் இருந்து இறங்கும் கலைக்கு வந்து விடும்.
ஆக, இங்கேயும் கூட எந்த விதமான சுமையும்,
தனது சம்ஸ்காரங் களினுடையதோ, வாயுமண்டலத் தினுடையதோ, எந்த ஓர் ஆத்மாவின் சம்பந்தம்-தொடர் பினுடையதோ, எந்த ஒரு சுமையாவது இருக்குமானால் பறக்கும் கலையில் இருந்து குழப்பத்தில் வந்து விடுவீர்கள். நானோ சரியாகத் தான் இருக்கிறேன், ஆனால் இந்தக் காரணம் உள்ளது இல்லையா,
அதனால் இந்த சம்ஸ்காரத் தினுடைய,
மனிதருடைய, வாயு மண்டலத்தினுடைய பந்தனம் இருக்கிறது எனச் சொல்வீர்கள். ஆனால் காரணம் எப்படிப் பட்டதாக இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி,
தீவிர புருஷார்த்தி அனைத்து விஷயங்களையும் அப்படிக் கடந்து செல்வார்கள் - எதுவுமே இல்லாதது போல.
கடின உழைப்பு இல்லை, மனமகிழ்ச்சியை அனுபவம் செய்வார்கள்.
ஆக, அந்த மாதிரி ஸ்திதி தான் பறக்கும் கலை எனப்படும்.
எங்கேயும் பற்றுதல் இருக்கக் கூடாது.
கொஞ்சம் கூட எந்த ஒரு கவர்ச்சியும் கவர்ந்திழுக்கக் கூடாது. ராக்கெட்டும் கூட எப்போது பூமியின் கவர்ச்சியிலிருந்து விடுபடுகிறதோ, அப்போது தான் பறக்க முடியும். இல்லையென்றால் அதனால் மேலே பறக்க முடியாது.
விரும்பாமலே கூட கீழே இறங்கி வந்து விடும்.
ஆக, எந்த ஒரு கவர்ச்சியும் மேலே கொண்டு செல்ல முடியாது.
சம்பூர்ணம் ஆக விடாது. ஆகவே சோதித்துப் பாருங்கள்,
சங்கல்பத் தாலும் கூட எந்த ஒரு கவர்ச்சியும் கவர்ந்து இழுக்கக் கூடாது. பாபாவைத் தவிர வேறு எந்த ஒரு கவர்ச்சியும் இருக்கக் கூடாது. பாண்டவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள்? அந்த மாதிரி தீவிர புருஷார்த்தி ஆகுங்கள்.
ஆக வேண்டும் தான் இல்லையா?
எத்தனை தடவை அது போல் ஆகியிருக்கிறீர்கள்? அநேகம் தடவை ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் தாம் ஆகியிருக்கிறீர்களா, அல்லது வேறு யாராவது ஆகியிருக்கிறார்களா? நீங்கள் தாம் ஆகியிருக்கிறீர்கள். ஆக, நம்பர் வாராகவோ ஆகக் கூடாது இல்லையா?
நம்பர் ஒன்னில் வர வேண்டும்.
மாதாக்கள் என்ன செய்வீர்கள்? நம்பர் ஒன்னா அல்லது நம்பர்வாரும் கூட இருக்குமா? 108 நம்பரும் இருக்குமா?
108 நம்பர் ஆவீர்களா அல்லது முதல் நம்பர் ஆவீர்களா?
பாபாவுடையவர் ஆகியிருக்கிறீர்கள், அதிகாரி ஆகியிருக்கிறீர்கள் என்றால் முழு ஆஸ்தியும் பெற வேண்டுமா அல்லது கொஞ்சம் குறைவாகவா?
பிறகோ நம்பர் ஒன் ஆவீர்கள் இல்லையா? வள்ளல் முழுவதையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் பெறுபவர் குறைவாகப் பெறுகிறார் என்றால் என்ன சொல்வார்கள்?
எனவே நம்பர் ஒன் ஆக வேண்டும். நம்பர் ஒன் ஒருவர் மட்டுமே இருக்கலாம்,
ஆனால் நம்பர் ஒன் டிவிஷனோ அநேகர் இல்லையா?
அதனால் இரண்டாவ தாக வரக் கூடாது. பெறுவதானால் முழுவதையும் பெற வேண்டும். அரைகுறையாகப் பெறுபவர்களோ பின்னால்-பின்னால் அநேகர் வருவார்கள். ஆனால் நீங்கள் முழுவதையும் பெற வேண்டும்.
அனைவரும் முழுமையாகப் பெறுபவர்களா, அல்லது கொஞ்சத்திலேயே திருப்தி அடைந்து விடுபவர்களா?
திறந்த கஜானா எனும் போது,
அளவற்றது இருக்கும் போது குறைவாக ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும்?
எல்லையற்றது இல்லையா?
அல்லது எல்லைக்குட்பட்டதா, அதாவது எட்டாயிரம் எனக்குக் கிடைக்க வேண்டும், பத்தாயிரம் இவருக்குக் கிடைக்க வேண்டும் என்றால் பாக்கியத்தில் இவ்வளவு தான் எனச் சொல்வார் கள்.
ஆனால் பாபாவின் திறந்த பொக்கிஷம்,
அளவற்றது, எவ்வளவு எடுத்துக் கொள்ள விரும்புகிறீர் களோ,
எடுத்துக் கொள்ளலாம்.
பிறகும் கூட அளவற்றதாக இருக்கும்.
அளவற்ற கஜானாவுக்கு மாலிக் நீங்கள்.
பாலக் ஸோ மாலிக் நீங்கள்
(குழந்தையாக இருந்து எஜமான ராகவும் ஆகிறீர்கள்). ஆக,
அனைவரும் சதா குஷியாக இருப்பவர்கள் தாம் இல்லையா?
அல்லது கொஞ்சம்-கொஞ்சம் எப்போதாவது துக்கத்தின் அலை வருகிறதா? துக்கத்தின் அலை கனவிலும் கூட வர முடியாது. சங்கல்பத்தையோ விடுங்கள், ஆனால் கனவிலும் கூட வர முடியாது.
இது தான் நம்பர் ஒன் என்று சொல்லப் படுவது. ஆக,
என்ன அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவீர்கள்? அனைவருமே நம்பர் ஒன் - ஆக வந்து காட்டுவீர்கள் இல்லையா?
தில்லியையோ தில்
- இதயம் எனச் சொல்கிறார்கள். ஆக,
எப்படி இதயம் இருக்குமோ, அவ்வாறே சரீரமும் இயங்கும்.
ஆதாரமாகவோ இதயம் தான் உள்ளது இல்லையா? இதயம் என்பது திலாராமின் இதயம். ஆகவே இதயத்தின் ஆசனம் யதார்த்தமானதாக இருக்க வேண்டும் இல்லையா?
மேலே-கீழே இருக்கக் கூடாது இல்லையா? ஆக,
இப்போது தன்னுடைய சிரேஷ்ட சங்கல்பங்களால் தன்னையும் உலகத்தையும் மாற்றி விடுங்கள்.
சங்கல்பம் செய்தீர்கள்,
கர்மமாகி விட்டது என்று இருக்க வேண்டும். யோசித்ததோ அதிகம், ஆனால் நடைபெறுவது மிகக் குறைவு என்றால் அவர்கள் தீவிர புருஷார்த்திகள் அல்லர்.
தீவிர புருஷார்த்தி என்றால் சங்கல்பம் மற்றும் கர்மம் சமமாக இருக்க வேண்டும், அப்போது பாப்-சமான் என்று சொல்வார்கள்.
அத்தகையவர்கள் குஷியாக இருக்கிறார்கள், சதா குஷியாக இருப்பார்கள்.
இது பக்கா நிச்சயம் தான் இல்லையா? குஷியாக இருப்பவர்கள் தாம் பாக்கியசாலிகள். இது பக்காவா அல்லது கொஞ்சம்-கொஞ்சம் கச்சா ஆகி விடுகிறதா? கச்சாவான பொருள் நன்றாக இருக்குமா? பக்காவாக இருப்பவர்கள் தாம் பிரியமானவர்களாக இருப்பார்கள்.
ஆகவே முழுமையான பக்காவாக இருக்க வேண்டும்
நாள்தோறும் அமிர்தவேளையில் பாடத்தைப் பக்கா ஆக்குங்கள் -- எது நடந்தாலும் குஷியாக இருக்க வேண்டும், மற்றவர்களைக் குஷிப் படுத்த வேண்டும். நல்லது, மற்ற எந்த ஒரு விளையாட்டையும் காட்டக் கூடாது. இதே விளையாட்டைக் காட்ட வேண்டும். மற்ற-மற்ற விளையாட்டை விளையாடக் கூடாது. நல்லது.
வரதானம்:
பாக்கியம் மற்றும்
பாக்கியவிதாதா பாபாவின்
ஸ்மிருதியில் இருந்து
பாக்கியத்தைப் பகிர்ந்தளிக்கக்
கூடிய பரந்த
மனம் உள்ள
மகாதானி ஆகுக.
பாக்கியவிதாதா, பாபா இரண்டுமே நினைவிருக்க வேண்டும். அப்போது மற்றவர் களையும் பாக்கியவான் ஆக்குவதற்கான ஊக்கம்-உற்சாகம் இருக்கும். எப்படி பாக்கியவிதாதா பாபா பிரம்மா மூலம் பாக்கியத்தைப் பகிர்ந்தளிக்கிறாரோ, அது போல் நீங்களும் வள்ளலின் குழந்தைகள், பாக்கியத்தைப் பகிர்ந்தளிப்பவர்கள். அவர்கள் துணிகள், தானியம் இவற்றைப் பகிர்ந்தளிப்பார்கள். ஏதேனும் பரிசளிப்பார்கள்… ஆனால் அதனால் யாரும் திருப்தியடைய மாட்டார்கள்.
நீங்கள் பாக்கியத்தைப்
பகிர்ந்தளிப்பீர்களானால், எங்கே பாக்கியம் உள்ளதோ, அங்கே அனைத்துப் பிரபாப்திகளும் இருக்கும். அந்த மாதிரி பாக்கியத்தைப்
பகிர்ந்தளிப்பதில் பரந்த மனம் உள்ள, சிரேஷ்ட மகாதானி ஆகுங்கள். சதா கொடுத்துக் கொண்டே இருங்கள்.
சுலோகன்:
யார் ஒருவரின் நினைவிலேயே இருக்கிறார்களோ (ஏக்நாமி), மற்றும் சிக்கனமாக (எக்கானமி) இருக்கிறார்களோ, அவர்கள் தாம் பிரபுவுக்குப் பிரியமானவர்கள்.
0 Comments