03-02-2023
காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா
மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே ! நரனிலிருந்து நாராயணர் ஆவதற்காக முழுமையான பிராமணர் ஆகுங்கள். யாரிடம் எந்தவொரு விகாரம் என்ற எதிரி இல்லையோ, அவர்களே உண்மையான பிராமணர் ஆவார்கள்.
கேள்வி:
எந்த குழந்தைகளுக்கு
தந்தையின் மரியாதை கிடைக்கிறது? அறிவாளிகள் என்பவர்கள் யார்?
பதில்:
யார் யக்ஞத்தின் ஒவ்வொரு செயலையும் பொறுப்புடன்
செய்கிறார்களோ அவர்களுக்கு
தந்தையின் மரியாதை கிடைக்கிறது. அவர்கள் ஒரு பொழுதும் கவனக்குறைவாக இருக்க மாட்டார்கள். பாவனமாக ஆக்கும் பொறுப்பை உணர்ந்து சேவையில் ஈடுபட்டு இருப்பார்கள். நடத்தை மிகவும் ராயலானதாக (கம்பீரமாக) இருக்கும். ஒரு பொழுதும் தந்தைக்கு அவப்பெயர் விளைவிப்பதில்லை.
ஆல்ரவுண்டர் ஆக இருப்பார்கள். யார் முழுமையாக தேர்ச்சி பெறுவதற் கான முயற்சி செய்கிறார்களோ அவர்கள் அறிவாளி ஆவார்கள். ஒரு பொழுதும் துக்கம் கொடுப் பவர்களாக ஆவதில்லை. எந்தவொரு தவறான செயலும் செய்ய மாட்டார்கள்.
பாடல்: இன்று இல்லையென்றால் நாளை இந்த மேகங்கள்லே வார்த்தைக பொழியும் ..
ஓம் சாந்தி.
இது குழந்தைகளுக்கு யார் டைரக்ஷன்
(உத்தரவு) கொடுக்கிறார்?
எல்லையில்லாத தந்தை.
அவரை குழந்தைகள் அந்த அளவிற்கு பிதா விரதமாக இருந்து நினைவு செய்வதில்லை. குழந்தைகளே,
இப்பொழுது வீடு திரும்பி செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார்.
குழந்தை களே என்று யாருக்கு கூறுகிறார்? யார் பிரம்மா முகவம்சாவளி பிராமணர்களோ அவர்களை தந்தை குழந்தைகளே!
என்று கூறுவார்.
ஏனெனில், அவருடைய குழந்தைகளாக ஆகி உள்ளார்கள். புதிய சிருஷ்டியைப் படைக்க வேண்டி இருக்கும் பொழுது பழைய சிருஷ்டியின் ஆத்மாக்கள் வீடு செல்ல வேண்டி உள்ளது என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மற்றும் தந்தையின் வீட்டை அறிந்துள்ளீர்கள். ஒரு சிலரோ தந்தையை நல்ல முறையில் நினைவு செய்கிறார்கள். ஸ்ரீமத்படி நடக்கிறார்கள். மேலும் ஒரு சிலரோ அவசியம் தேக அபிமானத்தின் காரணமாக நினைவு செய்யாமலும் இருக்கிறார்கள். பாவனமாக இருப்பதில்லை.
பிராமணர்கள் இருப்பதே ஈசுவரிய சந்ததியினராக.
பிரம்மா முகவம்சாவளி யினராக. படைப்பவர் என்று தந்தை பாடப்படுகிறார் அல்லவா?
பிரம்மா கமலத்திருவாய் மூலமாக சந்ததியினரை படைக்கிறார். உண்மையில் இறைவனின் சந்ததியினரான நாம் பிரம்மாவின் முக வம்சாவளி பிராமணர்களாக ஆகி உள்ளோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் பாவனமாக இருக்கிறார்களோ அவர்களையே பிராமணர்கள் என்று கூற முடியும். எல்லாமே முழுமையாக தூய்மையைப் பொருத்துள்ளது. இதற்கு தூய்மையற்ற பதீத உலகம் என்று கூறப் படுகிறது.
பதீதமாக இருக்கும் மனிதர்கள் அனைவரும் பாவனம் (தூய்மை)
என்பதன் பொருள் அறியாமல் உள்ளார்கள்.
கலியுகம் என்பது பதீத உலகம்.
சத்யுகம் என்பது பாவன உலகம்
- இதை யாரும் அறியாமல் உள்ளார்கள்.
ஒரு சிலரோ சத்யுக திரேதாவில் கூட பதீத
(தூய்மையற்ற) ஜனங்கள் இருக்கிறார்கள் என்று கூறி விடுகிறார்கள். சீதை தூக்கி செல்லப்பட்டார்.... இது பாவன உலகையே நிந்தை செய்வது ஆகும். எப்படி
(திருஷ்டி) பார்வையோ,
அவ்வாறே (சிருஷ்டி)
படைப்பு தென்படுகிறது.
பாவன உலகத்தில் கூட பதீதர்கள் இருக்கிறார்கள் என்றால்,
தந்தை பதீத உலகத்தைப் படைத்தாரா என்ன? தந்தையோ பாவன உலகத்தைத் தான் ஸ்தாபனை செய்கிறார். பதீத பாவனரே! வாருங்கள்,
வந்து இந்த சிருஷ்டியை அதிலும் குறிப்பாக பாரதத்தை பாவனமாக ஆக்குங்கள் என்று பாடியும் உள்ளார்கள். இப்பொழுது யார் பாவனமாகி இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இந்த பிரம்மா குமார்,
குமாரி என்ற பெயர்கள் இருக்கிறது.
பதீதர்களுக்கு பிராமணர்,
பிராமணி அல்லது பி.கே.
என்று கூற முடியாது. அவர்கள் இருப்பதே குகவம்சாவளியாக. பிராமணர்களாகிய நீங்கள் பிரம்மா முகவம்சாவளி ஆவீர்கள். பிரம்மா குகவம்சாவளி என்று கூறப்படுவதில்லை. அவர்கள் இருப்பதே பதீதமாக.
இப்பொழுது நீங்கள் ஈசுவரிய சந்ததியினராக ஆகி இருப்பதே பாவன உலகிற்கு அதிபதியாக ஆவதற்காக.
பிராமணர்கள், பிராமணிகள் அல்லது பிரம்மாகுமார் குமாரி என்று அழைத்துக் கொண்டு ஒரு வேளை பதீதமாக ஆகிறார்கள் அல்லது விகாரத்தில் செல்கிறார்கள் என்றால் அவர்கள் பி.கே. அல்ல.
பிராமணர்கள் ஒரு பொழுதும் விகாரத்தில் செல்வதில்லை. விகாரத்தில் செல்பவர்களை சூத்திரர்கள் என்று கூறப்படுகிறது. இறைவனின் குழந்தைகளாக ஆவதே இறைவனிடமிருந்து நாம் இராஜ்ய பாக்கியத்தை பெறுவோம் என்பதற்காக. இராஜ்யத்தின் ஆஸ்தி பெற வேண்டுமென்றால் முயற்சி செய்ய வேண்டும்.
நாம் நரனிலிருந்து நாராயணர் ஆக வேண்டும் என்ற இலட்சியம் கொள்ள வேண்டும்.
முதல் நம்பர் காம விகாரம் ஆகும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இரண்டாம் நம்பர் கோபம் ஆகும். கோபம் போன்ற பூதங்கள் இருந்து விடுகிறது என்றால் அவர்கள் முழுமை யாக ஆஸ்திக்குத் தகுதியுடையவர்கள் ஆவதில்லை. இவர் காமம் அல்லது கோபம் என்ற பூதத்திற்கு வசப்பட்டு அடிமையாகி விட்டார் என்று கூறப்படுகிறது. தந்தையை நினைவு செய்யாத காரணத்தினால் இராவணனுக்கு வசப்பட்டு விடுகிறார்கள். அப்பேர்ப்பட்ட கோபம் உடையவர் அல்லது காம விகாரம் உடையவர் நரனிலிருந்து நாராயண பதவியை அடைய முடியாது. இங்கு முழுமையான பிராமணர்களாக ஆக வேண்டும்.
முதல் நம்பரின் பூதமாக தேக அபிமானம் வருகிறது என்று தந்தை புரிய வைக்கிறார்.
(தேஹீ அபிமானி)
ஆத்ம உணர்வுடையவராக ஆகி, தந்தையை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால், தந்தையும் உதவி செய்வார்.
யார் எந்த அளவிற்கு நினைவு செய்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி கிடைக்கிறது.
யாரிடம் இந்த விகாரம் என்ற எதிரி இல்லையோ அவர்களே உண்மையான பிராமணர் ஆவார்கள்.
முக்கியமாக தேக அபிமானத்தின் காரணமாகத் தான் வேறு வேறு எதிரிகள் வருகிறார்கள். இந்த பாரதம் சிவாலயமாக இருந்தது. அப்பொழுது துக்கத்தின் எந்த விஷயமும் இருக்க வில்லை. இது மனிதர்களுக்குத் தெரியாது.
அவர்களோ மாயை கூட இருக்கவே இருக்கிறது. இறைவன் கூட இருக்கவே இருக்கிறார் என்று கூறி விடுகிறார்கள். அட, இறைவன் தனது நேரத்தில் வருகிறார். மாயை தனது நேரத்தில் வருகிறது. அரைகல்பம் ஈசுவரிய இராஜ்யம் நடைபெறும். அரைகல்பம் மாயையின் இராஜ்யம் இருக்கும். இந்த விளக்கவுரை சாஸ்திரங்களில் இல்லை. இது இருப்பதே பக்தி மார்க்கமாக. ஞானக் கடல் ஒரே ஒரு தந்தை ஆவார். அவருக்கு பதீதபாவனர் என்று கூறப்படுகிறது. யார் தந்தையை நினைவு செய்வதில்லையோ அவர்கள் மூலமாக அவசியம் பதீதமான (தூய்மையற்ற)
காரியங்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும். அவர்களுக்கு பிராமணர் பிராமணி என்று கூற முடியாது. மிகவும் சூட்சுமமான விஷயங்கள் ஆகும். சிவபாபாவை
(பாட்டனார்) நினைவு செய்யவில்லை என்றால்,
ஆஸ்தி எங்கிருந்து கிடைக்கும். பிறகு அவர்களுக்கு இந்த பழைய உலகத்தின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் நினைவிற்கு வருவார்கள். நல்ல முறையில் தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால், தந்தையும் உதவி அளிப்பார்.
நீங்கள் எங்காவது முரளி நடத்துவதில் குழம்பி விட்டீர்கள் என்றால் கூட சிவபாபா பிரவேசம் செய்து வந்து முரளி நடத்தி விடுவார். சிவபாபா வந்து உதவி செய்கிறார் என்பது குழந்தைகளுக்குத் தெரிய வருவதில்லை. நாங்கள் இன்றைக்கு நன்றாக முரளி நடத்தினோம் என்று நினைக் கிறார்கள். அட,
இன்றைக்கு நன்றாக நடத்தினீர்கள். நேற்றைக்கு ஏன் நடத்த வில்லை. சிவபாபா பேசுகிறாரா, இல்லை பிரம்மா பேசுகிறாரா என்பது கூட உங்களுக்குத் தெரிய வருகிறதா என்ன?
குழந்தைகளே நீங்கள் எனது ஈசுவரிய குழந்தைகள் ஆவீர்கள்.
என்னை நினைவு செய்யுங்கள் என்று சிவபாபா கூறுகிறார்.
இதுபோல வேறு யாரும் கூற முடியாது. நான் தான் இவருக்குள் பிரவேசம் செய்து கூற முடியும்.
நான் ஞானக்கடல் ஆவேன் அல்லவா?
நீங்கள் ஞானம் உடைய ஆத்மாவாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக யார் தந்தையுடன் யோகம் செய்கிறார்களோ பின் தந்தை கூட வந்து உதவி செய்கிறார். தேக அபிமானியாக இருப்பவர்கள் நினைவு செய்வார்களா என்ன? தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும்.
நான் நன்றாக முரளி நடத்தினேன் என்று அகங்காரத்தில் வரக் கூடாது.
இல்லை சிவபாபா வந்து முரளி நடத்தினார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும்.
நிறைய குழந்தைகள் யார் முழுமையாக நினைவு செய்வதில்லையோ பின் கர்ம கணக்கும் முடிந்து போவதில்லை. வியாதிகள் வந்து விடுகின்றன.
விகர்மங்கள் விநாசம் ஆவதில்லை.
குழந்தைகள் தந்தையுடன் யோகம் செய்ய வேண்டும். நாம் இராஜயோகிகள் ஆவோம்.
தந்தை யிடமிருந்து இராஜ்யம் பெற வேண்டும். நாம் நரனிலிருந்து நாராயணர் ஆகிடுவோம். நான் சூரிய வம்சத்தில் வரும் அளவிற்கு அவ்வளவு படிக்கிறேனா என்பதை மனதில் உணர வேண்டும்.
அப்படி இன்றி முதலில் தாசர் தாசியாகி பிறகு இராஜ்யத்தை அடைவோம் என்பதல்ல. தந்தையை நினைவு செய்வதால் தந்தையின் உதவி கிடைக்கும். இல்லை யென்றால், கொஞ்ச நஞ்சம் பாவம்,
நஷ்டம் ஆகியவை ஆகிறது. அவர்கள் மிகவுமே துக்கமுடையவர்களாக ஆகிறார்கள்.இலட்சுமி நாராயணரோ சுகமுடையவர்கள் ஆவார்கள் அல்லவா?
அறிவுள்ள குழந்தைகள் முழுமையாக தேர்ச்சி அடைவதற்கான முயற்சி செய்வார்கள். அப்படி இன்றி எது கிடைத்ததோ அதுவே சரி என்பதல்ல.
ஒவ்வொரு விஷயத்திலும் ஆல்ரவுண்டு முயற்சி செய்ய வேண்டும்.
இந்தவேலை இவருடையது நாம் ஏன் செய்ய வேண்டும் என்பதும் அல்ல.
பாபா ஆல்ரவுண்டு வேலை செய்கிறார் அல்லவா? குழந்தைகளின் நடத்தை சரியாக இல்லையென்றால், பின் அவப்பெயர் விளைவிக் கிறார்கள். என்னுடையவராகி பிறகு தவறான காரியம் செய்தார்கள் என்றால், பதவி தாழ்ந்ததாக ஆகி விடும் என்று தந்தை கூறுகிறார்.
இது பிரம்மா பாபா (டைரக்ஷன்)
உத்தரவு கொடுக்கிறார் என்று நினைக்காதீர்கள். சிவபாபா நினைவிலிருக்க வேண்டும்.
உலகத்தைத் தூய்மைப்படுத்துவதற்கான சுமை தலை மீது உள்ளது என்பதை குழந்தைகள் புரிந்திருக்க வேண்டும். நாம் பொறுப்பாளி ஆவோம்.
பாரதத்தை பாவனமாக ஆக்கக் கூடிய மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.
யக்ஞத்தின் ஒவ்வொரு காரியமும் பொறுப்புடன் செய்ய வேண்டும்.
எந்தவொரு கவனக்குறையும் இருக்கக் கூடாது.
அப்பொழுது பாபா கூட மதிப்பு கொடுப்பார். இல்லையென்றால் தர்மராஜர் எப்பேர்ப்பட்ட தண்டனை அளிக்கிறார் என்றால், சிறையில் கூட அப்பேர்ப்பட்ட தண்டனை வாங்கி இருக்க மாட்டார்கள்.
எனவே விநாசம் ஆவதற்கு முன்னதாக எல்லா விகர்மங்களையும் யோகத்தினால் சாம்பலாக்குங்கள் என்று தந்தை கூறுகிறார். இல்லையென்றால் ஜன்ம ஜன்மாந்திரத்தின் விகர்மங்களின் தண்டனை தர்ம ராஜபுரியில் நிறைய வாங்க வேண்டி வரும்.
எனவே கவனக்குறைவாக இருக்காதீர்கள். இது கடைசி பிறவியாகும்.
பிறகோ சொர்க்கத்திற்குத் தான் செல்வீர்கள்.
தண்டனை வாங்கி பிரஜை பதவியை அடைவது. இதற்கு
(புருஷôர்த்தம்)
முயற்சி என்று கூறப்பட மாட்டாது.
அச்சமயத்தில் காப்பற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதற வேண்டி வரும். திரும்பத் திரும்ப புரிய வைத்திருந்தேன் என்று இதையும் தந்தை சாட்சாத்காரம் செய்விப்பார்.
பிராமணர் ஆவது ஒன்றும் சித்தி வீடு கிடையாது.
இறைவனின் குழந்தை ஆகிறீர்கள் என்றால்,
பின் எந்தவொரு விகாரமும் இருக்கக்கூடாது. இதில் காமம் மகா எதிரி ஆகும். யார் காமத்திற்கு வசப்பட்டு விடுகிறார் களோ அவர்களை பிராமணர் என்று கூற முடியாது. மாயை மிகவுமே தோல்வி அடையச் செய்யும்.
ஆனால் கர்ம இந்திரியங் களால் எந்த காரியமும் செய்யக் கூடாது.
நெருங்கிப் பழகும் தன்மையின் லேசான போதை - இது கூட மாயையின் போதையாகும். இதனால் கூட போதை ஏறி விடும் என்று பாபா புரிய வைத்துள்ளார்.
நீங்கள் பலரை நினைவு செய்பவர்களாக ஆகி விட்டீர்கள்.
ஈசுவரிய குழந்தை களிடம் இந்த காமம் கோபம் ஆகிய சாத்தான்கள் இருப்பார்களா என்ன?
அவை சாத்தானுக்குரிய அசுர குணங்கள் ஆகும். நிறைய பேர் இறைவனின் குழந்தை ஆன பிறகும் கூட மாயை யினுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். தேக அபிமானத்தில் வந்து விடுகிறார்கள். தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.
அப்பொழுது அவர் பொறுப்பாளியாக இருப்பார்.
பிரம்மாவின் வழி கூட பாடப்பட்டுள்ளது. இவரது வழிப்படி நடப்பதாலும் கூட தந்தை பொறுப்பாளி ஆகி விடுவார்.
எனவே ஏன் தங்களது பொறுப்பை இறக்கி விடக் கூடாது. பாப்தாதா
(சிவபாபா, பிரம்மா பாபா) இருவரது வழியும் பிரசித்தமானதாகும். மாதாவின் வழிப்படி கூட நடக்க வேண்டும். ஏனெனில்,
மாதா குரு ஆகிறார். அந்த மாதா பிதா தனித்தனியானவர்கள் ஆவார்கள்.
இச்சமயத்தில் மாதாவை குருவாக ஆக்கக் கூடிய வழக்கம் நடக்கிறது.
நீங்கள் சிவாலயத்திற்காக முயற்சி (புருஷôர்த்தம்) செய்து கொண்டிருக்கிறீர்கள். சத்யுக மானது சிவாலயம் என்று கூறப்படுகிறது. பரமாத்மாவின் மிகச் சரியான பெயர் சிவன் என்பதாகும்.
சிவஜெயந்தி தான் பாடப்படுகிறது. சிவனுக்கு கல்யாணகாரி - நன்மை செய்பவர் என்று கூறப்படு கிறது.
அவர் பிந்துவாக இருக்கிறார். பரமபிதா பரமாத்மாவின் ரூபமே நட்சத்திரம் ஆகும்.
தங்கம் அல்லது வெள்ளியில் சிறிய நட்சத்திரம் அமைத்து திலகம் கூட இடுகிறார்கள். உண்மையில் அது மிகவுமே சரி ஆகும்.
மேலும் நட்சத்திரம் இருப்பதும் புருவ மத்தியில் ஆகும்.
ஆனால் மனிதர் களுக்கு ஞானம் இல்லை. ஒரு சிலர் பின் திரிசூலம் இடுகிறார்கள்.
திரிநேத்ரி, திரிகாலதரிசியின் அடையாளம் அதாவது தெய்வீகப் பார்வை,
தெய்வீக புத்தியின் அடையாளம் கொடுக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த விஷயங்களின் ஞானம் உள்ளது. நீங்கள் விரும்பினால் நட்சத்திரம் இட்டுக் கொள்ளலாம்.
நமது அடையாளம் வெண்ணிற நட்சத்திரம் ஆகும். ஆத்மாவின் ரூபம் கூட இது போல நட்சத்திரம் போன்றதாகும்.
தந்தை எல்லா ரகசியங் களையும் புரிய வைக்கிறார்.
எச்சரிக்கையும் செய்கிறார்.
யார் பாவமான காரியம் ஒரு பொழுதும் செய்ய மாட்டோம் என்று உறுதி கொடுத்திருக்கிறார்களோ அவர்களே பி.கே.
ஆவார்கள். இதை நினைவில் கொள்ள வேண்டும். யாருடைய இதயத்தையும் துக்கப்படுத்தக் கூடாது. ஒரு வேளை அவ்வாறு துக்கப்படுத்துகிறார்கள் என்றால்,
அவர் சிவபாபாவின் குழந்தை கிடையாது.
சிவபாபா வருவதே சுகம் அளிப்பதற்காகத்தான். அங்கு இராஜா இராணி எப்படியோ அவ்வாறே பிரஜைகள்
- அனைவரும் ஒருவருக்கொருவர் சுகம் கொடுப்பார்கள். இங்கு எல்லாரும் கருமையாக ஆகி உள்ளார்கள். காமவாளை செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இது இருப்பதே ஒருவருக் கொருவர் துக்கம் கொடுப்பதற்கான உலகமாக.
சத்யுகம் ஒருவருக்கொருவர் சுகம் அளிக்கும் உலகம் ஆகும்.
நாம் ஈசுவரிய சந்ததியாக ஆகி உள்ளோம் என்பதைப் புரிய வைக்க வேண்டும். நாம் எந்த பாவமும் செய்வதில்லை. இல்லையென்றால் புண்ணிய ஆத்மாக்களின் உலகத்தில் அந்த அளவிற்கு பதவி அடைய முடியாமல் போய் விடும்.
இவர் நமது குலத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது ஒவ்வொருவரது நாடி மூலமாக தெரியக் கூடும்.
பகவான் வாக்கியம்
- நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று பாடப் பட்டுள்ளது என்பதை பகவான் கூறுகிறார் என்று நாம் கூறுகிறோம். பகவான் என்று ஒரே ஒரு நிராகார மானவருக்குத் தான் கூறப்படுகிறது. ஆக எப்பொழுது வந்து இராஜ யோகத்தைக் கற்பிப்பார்? அவசியம் புது உலக ஸ்தாபனை ஆகும் பொழுது. புதிய உலகத்திற்காக அவசியம் பழைய உலகத்தில் வர வேண்டி இருக்கும். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று பகவான் கூறுகிறார்.
எங்கு செல்வதற்காக?
நரகத் திற்காகவா என்ன? பாவன உலகத்திற்காக நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று பகவான் கூறுகிறார்.
(பகவானுவாச்) கூறுங்கள் எப்பொழுது வந்திருந்தார். அவர் யாராக இருந்தார். மீண்டும் எப்பொழுது வருவார்?
அவசியம் சத்யுகத்திற்காகத் தான் கற்பிப்பார்.
மிகவும் சுலபமாகும்.
ஆனால் ஒருவருடைய அதிர்ஷ்டத் தில் இல்லையென்றால் புத்தியில் பதிய முடியாது.
சூடான தோசைக்கல் போல இருப்பார்கள்.
பிறகு இவர் நமது சூரிய வம்சத்தின், சந்திர வம்சத்தின் இராஜ்யத்தினுடையவர் இல்லை போலும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மற்றபடி பிரஜை களோ நிறையவே ஆக வேண்டி உள்ளது. நல்லது.
இனிமையிலும் இனிமையான அருமையான 5 ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கு வந்துள்ளீர்கள். அப்பேர்ப்பட்ட குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
எவரொருவரது இதயத்தையும் ஒரு பொழுதும் துக்கப்படுத்தக் கூடாது.
ஒரு பொழுதும் எந்தவொரு பாவச் செயலையும் செய்ய மாட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டும்.
2.
கர்ம இந்திரியங்களால் எந்தவொரு தவறான செயலையும் செய்யக் கூடாது. தந்தை மற்றும் தாதாவின் வழிப்படி நடந்து தங்களது சுமையை இறக்கி விட வேண்டும்.
வரதானம்:
அமிர்தவேளையிலிருந்து
இரவு வரை
முழுவதுமாக மரியாதைகள்
(ஸ்ரீமத்) படி
நடக்கக்கூடிய மரியாதா
புருஷோர்த்தமர் ஆகுக.
சங்கமயுகத்தின் மரியாதைகள் தான் புருஷோத்தமராக மாற்றுகிறது.
ஆகையால் மரியாதா புருஷோத்தமர் என்று சொல்லப்படுகிறது.
தமோபிரதானமான வாயுமண்டலத்தின்
வைப் ரேஷனிலிருந்து
பாதுகாப்பாக இருப்பதற்கான
சாதனம் மரியாதைகள் (நியமங்கள்) ஆகும். ஸ்ரீமத் என்ற கோட்டிற்குள் இருக்கக்கூடியவர்கள் முயற்சியிலிருந்து விடுப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு அடியிலும் பாப்தாதாவின் மூலம் மரியாதைகள் கிடைத்திருக்கின்றன, அதன்படி அடி எடுத்து வைப்பதினால்
தானாகவே மரியாதா புருஷோத்தமர் ஆகி விடுகிறார்கள்.
எனவே அமிர்தவேளை யிலிருந்து இரவு வரை மரியாதைகள் நிறைந்த வாழ்க்கையாக
இருக்கும் பொழுது புருஷோத்தமன் அதாவது சாதாரண ஆத்மாவிலிருந்து உத்தமமான ஆத்மாவாக மாறுவதாகும்.
சுலோகன்:
யார் எந்த விஷயத்திலும் தன்னை மோல்ட் (வளைந்துக் கொடுத்து) செய்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களுக்கு பாத்திரம் (தகுதியுடையவர்)
ஆகிறார்கள்.
0 Comments