07-02-2023
காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்நேரத்தில் நீங்கள் அசரீரியானவரிடமிருந்து அறிவுறுத்தல்;களைப் பெறுகின்றீர்கள். கீதை சரீரதாரியினது
அன்றி, அசரீரியானவரின்
அறிவுறுத்தல்;களை அடிப்படையாகக் கொண்ட சமயநூல் என்பதை நிரூபியுங்கள்.
கேள்வி:
முதற்தரமான குழந்தைகளால்
மாத்திரமே மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்தக்கூடிய ஆழமான விடயம் என்ன?
பதில்:
இந்தப் பிரம்மாவே ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுபவர் என்ற விடயமாகும். பிரம்மாவே பிரஜாபிதா (மக்களின் தந்தை) என அழைக்கப்படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணரை இவ்வாறு அழைக்க முடியாது. அசரீரியான கடவுள் பிரம்மாவின் வாய் மூலம் பிராமணர்களை உருவாக்கினார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சிறு குழந்தை. அசரீரியான பரமாத்மாவே கீதையின் கடவுளாவார். ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மா முயற்சி செய்து, அந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டார். முதற்தரமான குழந்தைகளால் மாத்திரமே இந்த ஆழமான விடயத்தைச் சாதுரியமாக விளங்கப்படுத்த முடியும். முழுப் பலத்தையும் பயன்படுத்தி, இதனை நிரூபியுங்கள், ஏனெனில், அப்பொழுதே சேவையில் வெற்றி கிட்டும்.
பாடல்: காற் சலங்கையை அணிந்து, என் மனக் கதவுக்கு வந்திருப்பவர் யார்...
ஓம் சாந்தி.
இந்தக் கண்களால் அவரை இனங்காண முடியாது என்பதைக் குழந்;தைகளாகிய நீங்கள் செவிமடுத்தீர்கள். யாரை? கடவுளை.
இந்தக் கண்களால் ஸ்ரீ கிருஷ்ணரை இனங்காண முடியும்,
ஆனால் அவற்றால் கடவுளை இனங்காண முடியாது. ஆத்மாக்களால் மாத்திரமே பரமாத்மாவை அறிந்துகொள்ள முடியும்.
எங்கள் பரமாத்மாவான பரமதந்தை அசரீரியானவர் என்;பதை ஆத்மா ஏற்றுக் கொள்கிறார். அவர் அசரீரியானவர் என்பதாலும்,
அவரை எவராலும் இந்தக் கண்களால் பார்க்க முடியாது என்பதாலும், அந்த நினைவு நிலைத்;திருப்பதில்லை. அசரீரியான தந்தை, ஆத்மாக்களாகிய, அசரீரியான குழந்தைகளுக்கு இதனைக் கூறுகின்றார்.
நீங்கள் அசரீரியானவரிடமிருந்து அறிவுறுத்தல்;களைப் பெறுகின்றீர்கள்;. சமயநூலாகிய கீதை அசரீரியானவரிடமிருந்தான அறிவுறுத்தல்;களே அன்றி,
அது சரீரதாரியிடமிருந்தான அறிவுறுத்தல்;கள் அல்ல.
கீதை ஒரு சமயநூலாகும். இஸ்லாமியர்களும் தங்கள் சமயநூலைக் கொண்டிருக்கின்றார்கள். ஏபிரகாம் ஒன்றைப் பேசினார்,
கிறிஸ்து ஒன்றைப் பேசினார், புத்தர் ஒன்றைப் பேசினார்.
அவர்கள் அனைவருக்கும் உருவங்கள் உள்ளன.
சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினமான கீதையைப் பொறுத்தவரையில், மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் உருவத்தை வைத்திருக்கின்றார்கள். எவ்வாறாயினும், தந்தை விளங்கப்படுத்துகிறார்: அது தவறானது. நானே கீதையைப் பேசினேன்.
நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து,
சுவர்க்கத்தை ஸ்தாபித்தேன்.
நான் அசரீரியான பரமாத்மாவான பரமதந்தை ஆவேன். நானே மனித உலக விருட்சத்தின் விதையான,
ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரினதும் தந்தையாவேன்.
நான் விருட்சத்தின் பிரபு என்று அழைக்கப்படுகின்றேன். ஸ்ரீ கிருஷ்ணரை விருட்சத்தின் பிரபு என்று அழைக்க முடியாது.
நான் மனித உலக விருட்சத்தின் விதையும், படைப்பவருமான பரமாத்மாவாகிய பரமதந்தையாவேன். ஸ்ரீ கிருஷ்ணரைப் படைப்பவர் என்று அழைக்க முடியாது;
அவர் தெய்வீகக்;
குணங்கள் நிறைந்த,
ஒரு மனிதரே ஆவார். கடவுள் ஒரேயொருவரே. அனைவரினதும் பரமாத்மா என்று கிருஷ்ணரை அழைக்க முடியாது. தந்தை கூறுகிறார்: நான் சக்கரங்களின் சங்கமத்தில்
5000 வருடங்களின் பின்னர் வருகின்றேன். நான் முழு உலகினரதும் தந்தையாவேன். நான் தந்தையாகிய கடவுள் என்றழைக்கப்படுகின்றேன். கிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிடுவதால், அவர்களால் பரமாத்மாவான பரமதந்தையை அறிய முடியாது. இதுவே அவர்கள் செய்துள்ள பெருந் தவறாகும்;.
நான் கீதையின் மூலம் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தேன்.
நான் கடவுளான சிவன் அல்லது உருத்திரர் என அழைக்கப்படுகின்றேன். எந்தவொரு சூட்சும தேவரையோ அல்லது மனிதரையோ கடவுள் என்று அழைக்க முடியாது.
இலக்ஷ்மி அல்லது நாராயணன் போன்றவரையும் கூட கடவுள் என்று அழைக்க முடியாது. கடவுள் ஒருவரே என்று கூறப்படுகிறது. கடவுளின் வாசகங்கள் இருக்கின்றன,
எனவே, நிச்சயமாகக் கடவுள் வந்து இராஜயோகத்தைக் கற்பித்திருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் முன்னைய கல்பத்திலும் குழந்தைகளாகிய உங்களுக்கு இதனைக் கூறினேன்.
கிருஷ்ணரால் 'குழந்;தாய், குழந்தாய்"
என்று கூற முடியாது. பரமாத்மாவான பரமதந்தை மாத்திரமே அனைவரையும் 'குழந்தாய்"
என்று கூறுகின்றார்.
நான் முன்னைய கல்பத்திலும் குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுமாறும்,
அசரீரியான என்னை,
கடவுளான உங்களுடைய தந்தை என்று கருதுமாறும் கூறினேன்.
பிரம்மாவின் மூலமாகவே கடவுள் பிராமணர்களை உருவாக்குவதால், பிரஜாபிதா பிரம்மாவே சரீரதாரித் தந்தையாவார். ஸ்ரீ கிருஷ்ணர் பிரஜாபிதா
(மக்களின் தந்தை)
அல்ல. கடவுள் கூறுகிறார்: நான் பிரம்மாவின் வாய் வழியாகப் பிராமணர்களை உருவாக்குகின்றேன். கிருஷ்ணரால் இவ்வாறு கூறமுடியாது.
பிரம்மா வயோதிபர்,
கிருஷ்ணரோ சிறு குழந்தையாவார். பிரம்மாவே பின்னர் கிருஷ்ணர் ஆகுகின்றார். இவை அத்தகைய ஆழமான விடயங்கள். இவ்விடயங்கள் சாதுரியமாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். முதற்தரமான குழந்தைகளால் மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியும். தந்தை கூறுகிறார்: அசரீரியான பரமாத்மாவே கீதையின் கடவுள் என்பதை மிக நல்ல புத்திரனோ அல்லது புத்திரியோ நிரூபிக்க வேண்டும். கீதையை உருவாக்கியவரே குழந்தைகளான உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, சுவர்க்கத்தை ஸ்தாபித்தார். நிச்சயமாக அதிமேலான தந்தையே இராஜயோகத்தைக் கற்பிப்பார்.
ஸ்ரீ கிருஷ்ணர் வெகுமதியைப் பெற்றார்.
பரமாத்மாவான பரமதந்தையே வெகுமதியைக் கொடுப்பவர்.
கிருஷ்ணர் அவரது குழந்தையாவார். கிருஷ்ணரின் ஆத்மா முயற்சி செய்து, வெகுமதியைப் பெற்றுக் கொண்டார்.
உங்களை முயற்சி செய்யத் தூண்டியவரின் பெயரை அகற்றி விட்டு, முயற்சி செய்வதால் வெகுமதியைப் பெற்றவரின் பெயரைப் புகுத்தியதன் மூலம்,
அவர்கள் கீதையைப் பொய்யாக்கி விட்டார்கள்.
சேவையை அதிகரிப்பதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் முழுப் பலத்தையும் பிரயோகிப்பது அவசியமாகும்.
கீதையைப் பேசியவர் யார்? கீதையின் ஊடாக, எந்தத் தர்மத்தை யார் ஸ்தாபித்தார்? இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதன் மூலம்,
உங்களால் மிக நன்றாக வெற்றியடைய முடியும். நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தை மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள், ஸ்ரீ கிருஷ்ணரின் மூலம் அல்ல.
நீங்கள் இதற்காக முயற்சி செய்ய வேண்டும். சமயநூல்கள் அனைத்தும் கீதையின் குழந்தைகளாகும். குழந்தைகளிடமிருந்து ஒருவரால் ஆஸ்தியைப் பெற முடியாது.
நிச்சயமாக ஒரு தந்தை மாத்திரமே ஆஸ்தியைக் கொடுப்பார்;
தாய்வழி அல்லது தந்தைவழி மாமன்களிடமிருந்தோ அல்லது குருமார் போன்றோரிடமிருந்தோ ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. எல்லையற்ற தந்தையிடமிருந்தே எல்லையற்ற ஆஸ்தி பெறப்படுகிறது. கீதை பொய்யாக்கப்பட்டிருப்பதை மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில்,
இவ்விளக்கத்தை மிகத்தெளிவாக எழுதுங்கள். கீதை இகழப்பட்டதாலே பாரதம் ஏழையாகி விட்டது;
அது சிப்பிப் பெறுமதியுடையதாகி விட்டது.
அத்தகைய விளக்கங்களை எழுதுங்கள். பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குபவர் யார்? சுவர்க்கம் எங்கே இருக்கின்றது?
கலியுகத்தின் பின்னர்,
சத்திய யுகம் இருக்கும். எனவே,
அது நிச்சயமாகச் சங்கம யுகத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். கடவுள் சிவன் பேசுகிறார்:
நான் உலகைத் தூய்மையாக்குவதற்கு, ஒவ்வொரு சக்கரத்திலும், சங்கம யுகத்தில் வருகின்றேன்.
இதனை நிரூபித்தாலே,
அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிக்கக்கூடியவர் கடவுள் சிவன் மட்டுமே,
ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியும். கீதையின் கடவுள் யார் என்பதைப் புரிந்துகொள்பவர்கள் வந்து, மலர்களைச் சமர்ப்பிப்பார்கள். அனைவருமே மலர்களைச் சமர்ப்பிக்க மாட்டார்கள். இதனைப் புரிந்துகொள்பவர்கள் தாங்களே மலர்களாகி, தங்களையே அர்ப்பணிப்பார்கள். ஒருவர் பாபாவிற்கு ஒரு மலரைச் சமர்ப்பிக்கும்பொழுது, பாபா கூறுகிறார்: இம் மலர்களைப் போன்ற குழந்தைகளே எனக்கு வேண்டும். முட்கள் தம்மை என்னிடம் அர்ப்பணித்தால், நான் அவர்களை மலர்கள் ஆக்குவேன். நான் பாபுல்நாத் (முட்களை மலர்களாக்குகின்ற பிரபு)
எனவும் அழைக்கப்படுகின்றேன். நான் பாபுல்
(முட்கள் நிறைந்த)
மரத்திலுள்ள முட்களை மலர்களாக மாற்றுகின்ற பிரபு என்று அழைக்கப்படுகின்றேன். ஸ்ரீ கிருஷ்ணரும் ஒரு மலரேயாவார். அது அல்லாவின் பூந்தோட்டமும், இது அசுரர்களின் முட்காடும் ஆகும்.
அதனைத் தந்தை தேவர்களின் பூந்தோட்டம் ஆக்குகின்றார். நீங்கள் மாத்திரமே புதிய உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தேவ வம்சம் இலக்ஷ்மி நாராயணனின் வம்சம் எனப்படுகின்றது. அது பிராமணக் குலத்தின் வம்சம் என்று அழைக்கப்படுவதில்லை. இது பிராமணக் குலமாகும்.
பரமாத்மாவான பரமதந்தை மக்களை உருவாக்கினார், இதனாலேயே இவர் பிரஜாபிதா என்று அழைக்கப்படுகிறார். சிவபாபாவையோ அல்லது ஸ்ரீ கிருஷ்ணரையோ பிரஜாபிதா என்றழைக்க முடியாது.
கிருஷ்ணர் 16,108 இராணிகளை வைத்திருந்ததாக அவர்கள் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மாவே பல புத்திரர்களையும், புத்திரிகளையும் உருவாக்கினார். ஒரேயொரு பரமாத்மாவான பரமதந்தையே ஞானக் கடல்.
தர்மராஜே செய்துள்ள பாவச் செயல்களுக்கான தண்டனையைக் கொடுப்பவர்.
உயர்நீதிவான் ஜனாதிபதியிடம் சத்தியப் பிரமாணம் செய்யுமாறு கேட்கிறார்.
ஓர் அரசனிடம்,
சத்தியப் பிரமாணம் செய்யுமாறு ஒருபொழுதுமே கேட்கப்படுவதில்லை, ஏனெனில்,
கடவுளே அவரை ஓர் அரசனாக்கினார். அது தற்காலிகமானது. இங்கே தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கொடுக்கிறார்.
அங்கே சத்தியப் பிரமாணம் செய்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. இது மனித உலக விருட்சமேயன்றி, ஒரு காட்டு மரமல்ல.
பரமாத்மாவான பரமதந்தையே விருட்சத்தின் பிரபு என்று அழைக்கப்படுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணரால் விருட்சத்தின் இரகசியங்களை உங்களுக்குக் கூறமுடியாது.
விருட்சத்தின் பிரபுவினாலேயே இதனை விளங்கப்படுத்த முடியும். கிருஷ்ணரன்றி,
தந்தையே ஒரு சாதாரண மனிதனை நாராயணன் ஆக்குவார்.
நான்கு பிரதான சமயநூல்கள் இருக்கின்றன,
ஏனைய அனைத்தும் கட்டுக் கதைகளாகும்.
முதலில் ஸ்தாபிக்கப்பட்ட சமயம் எது,
அதை ஸ்தாபித்தவர் யார்? சுவர்க்கத்தில் தேவ தர்மம் இருந்தது, எனவே,
தந்தையே நிச்சயமாக அதனை ஸ்தாபித்திருக்க வேண்டும். தந்தை உங்களைப் பழைய உலகிலிருந்து விடுவிக்கின்றார். பெருமளவு துன்பம் இருப்பதால், மக்கள் விரக்திக் கூக்குரலிடுகின்றார்கள். நீங்கள் தந்தையிடமிருந்து உங்களது சுவர்க்க ஆஸ்தியைப் பெற வேண்டுமாயின்,
அதை இப்பொழுதே செய்யுங்கள். ஒரு சாதாரண மனிதனால் இந்த ஆஸ்தியைக் கொடுக்க முடியாது.
தந்தையே குழந்தைகளாகிய உங்களை அனைத்துப் பேறுகளையும் கொண்டிருக்குமாறு செய்கின்றார். எல்லையற்ற தந்தையே உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் இவ்வாறாகக் கூறி ஆசையைத் தூண்ட வேண்டும். ஒருவரை விலங்கொன்றை வேட்டையாடுமாறு வேட்டைக்காரர்கள் செய்யும்பொழுது, அவர்கள் அந்த இரையை அவர் முன்னால் கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்து,
அதனை வேட்டையாடுமாறு செய்கின்றார்கள். இங்கே,
தாய்மாரே வேட்டையாட வேண்டும். தந்தை கூறுகின்றார்: தாய்மாரின் முன்னால் இரையைக் கொண்டு வாருங்கள்.
பல தாய்மார்கள் இருக்கின்றார்கள். ஒரு பெயர் மாத்திரமே போற்றப்படுகின்றது. நீங்கள் சக்தி சேனையினர்.
இது சக்தி வம்சம் என்று அழைக்கப்படுவதில்லை. சக்தி சேனையின் தலைவி காளியும், சரஸ்வதியுமாகிய ஜெகதாம்பாள் ஆவார்.
எவ்வாறாயினும், அவர்கள் சண்டிகா (சுடலை காக்கும் தேவி)
போன்ற பல தவறான பெயர்களையும் கொடுத்துள்ளனர். கடவுளே அதிமேன்மையானவர் என்பதையும்,
அதன்பின்னரே பிரம்மாவும்,
விஷ்ணுவும், சங்கரரும் உள்ளனர் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள்;;
தெளிவுபடுத்த வேண்டும்.
சரஸ்வதி, பிரஜாபிதா பிரம்மாவின் புத்திரியாவார். அவர் ஞான தேவி என்று அழைக்கப்படுகின்றார். எனவே,
அவரது குழந்தைகளும் நிச்சயமாக ஞான தேவிகள் என்றே அழைக்கப்பட வேண்டும்.
இறுதியில் நீங்களே வெற்றியடைவீர்கள். சிலர் கீதைக்கன்றி, வேதங்களுக்கே பெருமளவு மரியாதை கொடுக்கின்றார்கள். இருந்தபொழுதிலும், கீதையே அதிகளவில் கற்பிக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் சங்கம யுகத்தில் வருகின்றேன். ஸ்ரீ கிருஷ்ணரின் படம் சத்திய யுகத்திற்குரியது. பின்னர் அவரது ரூபம், 84 பிறவிகளின் ஊடாகத் தொடர்ந்தும் மாற்றமடைகின்றது. பரமாத்மாவான பரமதந்தை வந்து,
ஆத்மாக்கள் பற்றிய ஞானத்தைக் கொடுக்கும்பொழுதே, அவரால் ஞானோதயம் பெற்ற ஆத்மாவாக ஆகமுடியும். பரமாத்மாவான பரமதந்தையே ஞானக் கடல். நீங்கள் அவர் மூலமே ஞானோதயம் பெற்ற ஆத்மாக்கள் ஆகுகின்றீர்கள். ஏனைய அனைவரும் பக்த ஆத்மாக்களாவார்கள். தந்தை கூறுகிறார்:
நான் ஞானோதயம் பெற்ற ஆத்மாக்களையே விரும்புகின்றேன். அனைத்துப் புகழும் கீதைக்கே உரியது. ஞானோதயம் பெற்றவர்கள் திரான்ஸில் செல்பவர்களை விடவும் அதிகம் மேன்மையானவர்கள். தியான் (னூலயn)
திரான்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இங்கே நீங்கள் தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். திரான்ஸில் செல்வதில் எந்த நன்மையுமே இல்லை.
தந்தை கூறுகிறார்:
நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தேன்.
நான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த வெகுமதியைக் கொடுத்தேன்.
அவர் நிச்சயமாகத் தனது முன்னைய பிறவியில் முயற்சி செய்திருக்க வேண்டும்.
சூரிய வம்ச இராச்சியத்தினர் அனைவரும் என்னிடமிருந்தே வெகுமதியைப் பெற்றார்கள். மக்கள் வாசித்தவுடனேயே, அம்பானது அவர்களைச் சென்று தாக்கும் விதத்தில்,
தில்வாலா ஆலயத்தின் வேறுபாட்டைப் பற்றி அத்தகைய வழியில் எழுதுங்கள். அத்துடன்,
எல்லையற்ற தந்தை எவ்வாறு ஞானக் கடலாக இருக்கின்றார் என்பதையும் அவர்களைப் படிவத்தில் (கழசஅ)
நிரப்பச் செய்யுங்கள்.
அவர் மிகவும் இனிமையானவர், அவரே எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அந்தச் சற்குரு இல்லாததால்.
காரிருள் சூழ்ந்துள்ளது. இவ்வாறாகத் தந்தையைப் புகழ்வதன் மூலம்,
உங்களது புத்தியில் அன்பு அதிகரிக்கின்றது. தந்தை உங்கள் முன்னால் நேரடியாக வந்து, உங்களுக்குப் பிறப்பைக் கொடுக்கின்றார், அப்பொழுது மாத்திரமே அவர் மீது அன்பு ஏற்படுகின்றது. அவர் உங்களுக்குப் பிறப்பைக் கொடுத்திருப்பதால், நீங்கள் அவர் மீது அன்பு செலுத்துகின்றீர்கள். நீங்கள்
‘தந்தை’ என்று கூறியவுடனேயே, சுவர்க்கத்தை நினைவுசெய்கின்றீர்கள். பாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் நம்பினாலும்,
நம்பாது விட்டாலும்,
நாங்கள் அவரிடமிருந்தே எங்களது ஆஸ்தியைப் பெறுகின்றோம். எல்லையற்ற தந்தையே அனைவரதும் தந்தை, எனவே,
நாங்கள் நிச்சயமாக எங்களது சுவர்க்க ஆஸ்தியை அவரிடமிருந்தே பெறுவோம். தந்தையே புதிய உலகைப் படைப்பவர், எனவே,
அவர் நிச்சயமாகப் புதிய உலகம் எனும் ஆஸ்தியைக் கொடுப்பார். அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- தந்தையால் நேசிக்கப்படுவதற்கு, உங்களது புத்தியில் இந்த ஞானத்தைக் கிரகித்து, ஞானோதயம் பெற்ற ஆத்மா ஆகுங்கள். தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருங்கள். திரான்ஸில் செல்வதற்கான ஆசை எதனையும் கொண்டிருக்காதீர்கள்.
- தாய்மார்களை முன்னிலையில் வைத்து, அவர்கள் மீதான மரியாதையை அதிகரியுங்கள். கீதையின் கடவுள் யார் என்பதை அதிகாரத்துடன் நிரூபியுங்கள். முழுப் பலத்தையும் பிரயோகிப்பதன் மூலம், சேவை செய்வதை அதிகரியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு
கதாநாயக நடிகராக
இருந்து, உங்கள்
மேன்மையான வாழ்வின்
விழிப்புணர்வு மூலம்
எல்லையற்ற மேடையில்
உங்கள் விசேட
பாகத்தை நடிப்பீர்களாக.
தந்தை பிரம்மா குழந்தைகளாகிய உங்களுக்குப் பிறப்பைக் கொடுத்தவுடன், “நீங்கள் தூய்மையாக இருப்பீர்களாக, நீங்கள் யோகியாக இருப்பீர்களாக” எனும் ஆசீர்வாதங்களையும் கொடுத்தார். நீங்கள் பிறப்பெடுத்தவுடனேயே, உங்களுடைய சிரேஷ்ட தாய் எனும் வடிவில், அவர் உங்களைத் தூய்மைக்கான அன்பு மூலம்; பராமரித்தார். உங்களைத் தெய்வீகக் குணங்கள் அனைத்தினதும் சொரூபங்களாகவும்,
ஞான சொரூபங்களாகவும்,
சந்தோஷம் மற்றும் அமைதியின் சொரூபங்களாகவும் ஆக்குவதற்கு,
அவர் உங்களைச் சந்தோஷம் எனும் ஊஞ்சலில் சதா ஊஞ்சலாட வைத்து, தினமும் தாலாட்டு பாடினார். அத்தகைய பெற்றோரின் மேன்மையான குழந்தைகளான நீங்களே பிரம்மாகுமார்களும், குமாரிகளும் ஆவீர்கள். உங்கள் விழிப்புணர்வில் இந்த வாழ்வின் முக்கியத்துவத்தை வைத்திருந்து,
எல்லையற்ற மேடையில் உங்கள் கதாநாயக பாகங்களாகிய,
விசேட பாகங்களை நடியுங்கள்.
சுலோகம்:
“பிந்து” (புள்ளி) என்கின்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள், ஒரு புள்ளியாக இருந்து, புள்ளியான, தந்தையை நினைவுசெய்வதே ஒரு யோகியாக இருப்பதாகும்.
---ஓம் சாந்தி---
மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க வாசகங்கள் -15ஃ01ஃ1957
1)
உங்கள் உண்மையான இலக்கு எது?
முதலில், உங்கள் உண்மையான இலக்கு என்ன என்பதை அறிந்து கொள்வது அத்தியாவசியம் ஆகும்.
உங்களுடைய புத்தி இதனை மிகவும் நன்றாகக் கிரகித்துக் கொள்ள வேண்டும்,
அப்பொழுது மாத்திரமே உங்களால் உங்கள் இலக்கை முழுமையாக நிறைவேற்ற முடியும்.
உங்கள் ஆதி இலக்கு: ஓர் ஆத்மாவாகிய நான்,
அந்தப் பரமாத்மாவின் குழந்தை. ஆதியில்,
நான் கர்மாதீதமாக இருந்தேன், ஆனால் சுயத்தை மறந்ததனால்,
நான் கர்ம பந்தனத்தினுள் வந்தேன்.
இப்பொழுது, இதனை மீண்டும் நினைவுசெய்வதனாலும், கடவுளுடனான யோகத்தில் நிலைத்திருப்பதாலும் நான் செய்துள்ள பாவங்களை அழித்துக் கொள்கின்றேன்.
எனவே, எனது இலக்கானது: ஆத்மாவாகிய நான், கடவுளின் குழந்தை. எவ்வாறாயினும், நீங்கள் உங்களை ஒரு தேவராகக் கருதி, உங்களை அந்த இலக்கில் ஸ்தாபித்தால், அப்பொழுது உங்களால் கடவுளின் சக்தியைப் பெறவும் இயலாதிருக்கும், உங்கள் பாவங்களும் அழிக்கப்பட மாட்டாது. எங்களிடம் இந்த ஞானம் முழுவதும் உள்ளது:
கடவுளின் குழந்தையாகிய,
இந்த ஆத்மாவாகிய நான், கர்மாதீதமாகி,
எதிர்காலத்தில் ஜீவன்முக்தி பெற்ற தேவர் எனும் அந்தஸ்தைப் பெறுவேன். இந்த இலக்கைக் கடைப்பிடிப்பதால், நீங்கள் அந்தச் சக்தியைப் பெறுவீர்கள்.
மக்கள் சந்தோஷத்தையும், அமைதியையும், தூய்மையையும் விரும்புவதால், முழுமையான யோகத்தைக் கொண்டிருக்கும்;பொழுது, அவர்கள் அவற்றையும் பெறுவார்கள்.
எவ்வாறாயினும், தேவ அந்தஸ்தே உங்கள் எதிர்கால வெகுமதி ஆகும். உங்கள் முயற்சிகள் உங்கள் வெகுமதியிலிருந்து வேறுபட்டவை.
எனவே, இந்த இலக்கும் வேறானது.
தூய்மையான ஆத்மாவாகிய நான், இறுதியில் கடவுள் ஆகுவேன் எனும் இலக்கை நான் வைத்திருக்கக்கூடாது, இல்லை. நான் பரமாத்மாவுடன் யோகத்தைக் கொண்டிருந்து, ஒரு தூய்மையான ஆத்மாவாக வேண்டும். ஓர் ஆத்மா கடவுளாகப் போகின்றார் என்பதில்லை.
2)
இந்த இறை ஞானத்திற்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த இறை ஞானத்திற்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிலர் இந்த ஞானத்தை அமிர்தம் எனவும், சிலர் அதனைத் தைலம் எனவும் அழைக்கின்றார்கள். குருநானக் கூறினார்:
குரு ஞானத் தைலத்தைக் கொடுத்தபொழுது… சிலர் அதனை ஞான மழை எனவும் கூறியுள்ளார்கள், ஏனெனில் முழு உலகமும் இந்த ஞானத்தின் மூலம் மீண்டும் பசுமை
(புதியது) ஆகுகின்றது.
தமோகுணி மனிதர்கள் சதோகுணி ஆகுவதுடன்,
ஞானத் தைலத்தின் மூலம் இருளும் அகற்றப்படுகின்றது. இந்த ஞானம் அமிர்தம் எனவும் அழைக்கப்படுகின்றது, ஏனெனில் ஐந்து விகாரங்கள் எனும் தீயில் எரிந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் இதன் மூலம் குளிர்மையாக்கப்படுகின்றார்கள். பாருங்கள்,
கீதையில், கடவுள் தெளிவாகக் கூறுகின்றார்:
காமம் நிறைந்தவர்களும், கோபப்படுபவர்களும்… அதிலும்,
காமமே முதலாவது பிரதான விகாரமாகும்,
அதுவே ஐந்து விகாரங்களினதும் பிரதான விதை ஆகும்.
ஒரு விதை இருக்கும்பொழுது, அதிலிருந்து கோபம், பேராசை,
பற்று, ஆணவம் போன்றவற்றின் மரமொன்று வளர்ச்சி அடைவதனால்,
மக்களின் புத்தி சீரழிந்து விடுகின்றது.
இப்பொழுது, அதே புத்தி ஞானத்தைக் கிரகிக்கின்றது, புத்தியானது ஞானத்தை முழுமையாகக் கிரகித்து விட்டபொழுது மட்டுமே, விகாரங்களின் விதையானது அழிக்கப்படுகின்றது. விகாரங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம் என்று சந்நியாசிகள் எண்ணுகின்றார்கள், ஆனால் சந்நியாசிகளிடம் இந்த ஞானமில்லை. ஆகவே,
அவர்களால் எவ்வாறு இந்தக் கற்பித்தல்களைக் கொடுக்க முடியும்?
மரியாதைக் கோட்பாடுகள் எனும் கோட்டுக்குள் இருக்குமாறு அவர்கள் வெறுமனே பிறரிடம் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், உண்மையான மரியாதைக் கோட்பாடுகள் எவை?
இன்றைய நாட்களில்,
மரியாதைக் கோட்பாடுகள் மீறப்படுகின்றன. சத்திய யுகத்தினதும், திரேதா யுகத்தினதும் தேவர்கள் இல்லறத்தில் இருந்தவாறே விகாரமற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் நிலைத்திருந்த, அந்த மரியாதைக் கோட்பாடுகள் எங்கே?
அந்த உண்மையான மரியாதைக் கோட்பாடுகள் இப்பொழுது எங்கே?
இந்நாட்களில், அவர்கள் விகாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ள தவறான மரியாதைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றார்கள். அவர்கள் வெறுமனே ஒருவருக்கொருவர் மரியாதைக் கோட்பாடுகளினுள் நிலைத்திருப்பதற்குக் கற்பிக்கின்றார்கள், ஆனால் அவர்கள் மனிதர்களின் முதலாவது மரியாதைக் கோட்பாடு என்ன என்பதை அறியார்கள். மனிதர்களின் முதலாவது மரியாதைக் கோட்பாடு விகாரமற்றவர்கள் ஆகுவதாகும். இந்தக் குறிப்பிட்ட மரியாதைக் கோட்பாட்டை ஒருவர் கடைப்பிடித்தாரா என்று எவரையேனும் வினவினால்,
அவர் கூறுவார்:
இன்றைய நாட்களில்,
இந்தக் கலியுகத்து உலகில் எவருக்கும் விகாரமற்றவர் ஆகுவதற்கான தைரியம் இல்லை.
வெறுமனே மரியாதைக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து, விகாரமற்றவராகுமாறு ஒருவரிடம் கூறுவது அவனையோ அல்லது அவளையோ விகாரமற்றவராக்க மாட்டாது.
அவர்கள் விகாரமற்றவர்கள் ஆகுவதற்கு, முதலில் ஐந்து விகாரங்களினதும் விதையானது ஞான வாளின் மூலம் அழிக்கப்பட வேண்டும்,
அப்பொழுது மாத்திரமே விகாரங்கள் எரிக்கப்படும். அச்சா.
0 Comments