06-02-2023 காலைமுரளி
ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே,
பிராமணர்களாகிய நீங்கள்
இப்பொழுது மிகவும்
செங்குத்தான ஒரு
யாத்திரையில் உள்ளீர்கள்.
இதனாலேயே நீங்கள்
இரட்டை எஞ்சினைப்
பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு
இரு எல்லையற்ற
தந்தையர்களும், இரு
தாய்மார்களும் உள்ளார்கள்.
கேள்வி:
சங்கம யுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குக்
கொடுக்கப்பட முடியாத பட்டம் என்ன?
பதில்:
‘புனிதமானவர்’ என்ற பட்டத்தைப் பிரம்மாகுமார்களும், குமாரிகளுமாகிய
நீங்கள் உங்களுக்கே கொடுக்கவோ அல்லது எழுதவோ முடியாது, ஏனெனில் ஆத்மாக்களாகிய
நீங்கள் தூய்மையாகினாலும்,
தமோபிரதான் சடப்பொருளிலிருந்தே இன்னமும் உங்கள் சரீரங்கள் உருவாக்கப்படுகின்றன. உங்களால் இப்பொழுது இந்த மகத்துவத்தைப்
பெற முடியாது. நீங்கள் இன்னமும் முயற்சியாளர்களே.
பாடல்: இது
சுவாலையையும், புயல்களையும்
பற்றியதொரு கதையாகும்.
ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுக்கு இரு தந்தையர்கள் உள்ளனர் என்பதால்,
இரு தாய்மார்களும் இருக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஒருவர் ஜெகதாம்பாவும், மற்றைய தாய் பிரம்மாவும் ஆவர். அது நீங்கள் இரட்டை எஞ்சின்களைப் பெற்றுள்ளதைப் போன்றுள்ளது என இருவரும் இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்கள். ஒரு புகையிரதம் மலையில் மேலே செல்லும்பொழுது, அது இரட்டை எஞ்சின்களைக் கொண்டுள்ளது.
பிராமணர்களாகிய நீங்களும் இப்பொழுது ஒரு செங்குத்தான யாத்திரையில் இருக்கிறீர்கள். இப்பொழுது காரிருளே உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இறுதி நேரம் வரும்பொழுது,
பெருமளவு விரக்தி இருக்கும். உலகம் மாற்றமடையும்பொழுது, இதுவே நடைபெறுகிறது. ஓர் இராச்சியம் கைமாறும்பொழுது கூட, பெருமளவு யுத்தமும் வன்முறையும் உள்ளன. இப்பொழுது ஒரு புதிய இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
காரிருளிலிருந்து அது இப்பொழுது பேரொளி ஆகுகின்றது. முழுச் சக்கரத்தினதும் வரலாறையும்,
புவியியலையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள்,
ஆகவே நீங்கள் அதனை ஏனையோருக்கும் விளங்கப்படுத்த வேண்டும்.
பாடசாலையில் பல தாய்மார்களும், குமாரிகளும் கற்பிக்கிறார்கள், அவர்கள்;
இந்த எல்லையற்ற வரலாறையும், புவியியலையும் அனைவருக்கும் கற்பித்தால்,
அரசாங்கம் குழப்பமடையாது. நீங்கள் அவர்களுடைய சிரேஷ்டர்களுக்கு விளங்கப்படுத்தினால்;, அவர்கள் மேலும் சந்தோஷம் அடைவார்கள்.
எல்லையற்ற வரலாறையும்,
புவியியலையும் புரிந்துகொள்ளாத வரை, குழந்தைகளால் நன்மையைப் பெற முடியாது எனவும்,
உலகில் வெற்றியும் ஏற்படாது என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு சமிக்ஞை கொடுக்கப்படுகிறது. ஆசிரியராக இருக்கின்ற ஒருவர் தனது கல்லூரியில் இவ்வுலக வரலாற்றையும், புவியியலையும் விளங்கப்படுத்தினால், குழந்தைகளால் திரிகாலதரிசிகளாக முடியும்.
பின்னர், திரிகாலதரிசி ஆகுவதனால், அவர்களால் பூகோளத்தை ஆட்சி செய்பவர்களாகவும் ஆகமுடியும்.
தந்தை உங்களைத் திரிகாலதரிசிகளாகவும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாகவும் ஆக்கியிருப்பதைப் போன்று,
நீங்களும் மற்றவர்களை உங்களைப் போல் ஆக்க வேண்டும்.
இப்பழைய உலகம் இப்பொழுது மாற்றமடையவுள்ளது என்பதைப் பிறருக்கு விளங்கப்படுத்துங்கள். இந்தத் தமோபிரதான் உலகம் மாற்றமடைந்து, சதோபிரதான் உலகமாக போகின்றது.
உங்களைச் சதோபிரதான் ஆக்குகின்ற பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே உங்களுக்கு இலகு இராஜயோகத்தைக் கற்பித்து,
சுயதரிசனச் சக்கரத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார்.
சக்கரத்தின் ஞானத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. இச்சக்கரம் உங்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்தால், சத்திய யுகத்தில் யார் ஆட்சிசெய்தனர் எனவும்,
எவ்வாறு துவாபர யுகம் முதல் பல சமயங்களின் வளர்ச்சி இடம்பெற்றன எனவும் மக்களால் வந்து அறிந்துகொள்ள முடியும். அது அவர்களுக்குத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டால், அவர்களுடைய புத்தி நிச்சயமாகத் திறக்கும். இச்சக்கரத்தை உங்கள் முன்னிலையில் வைத்து, உங்களால் அவர்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்த முடியும்.
நீங்கள் இத்தகைய தலைப்புக்களையும் கொடுக்க முடியும்: வாருங்கள்,
நாங்கள் உங்களுக்குத் திரிகாலதரிசி ஆகுவதற்கான வழியைக் காட்டுவோம்.
நீங்கள் அதன்மூலம் அரசர்களுக்கெல்லாம் அரசர்களாக முடியும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இச்சக்கரத்தை அறிவீர்கள்,
இதனாலேயே நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், இச்சக்கரத்தைத் தங்களுடைய புத்தியில் தொடர்ந்தும் சுழற்றுபவர்களே இவ்வாறு ஆகுவார்கள். தந்தையே ஞானக் கடல்.
அவர் இங்கே அமர்ந்திருந்து, உலகின் ஆரம்பம், மத்தி,
இறுதி பற்றிய ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறார்.
மனிதர்கள் எதனையும் அறியார்கள். கடவுள் சர்வவியாபகர் எனக் கூறுவதால், அவர்களால் இந்த ஞானம் எதனையும் கிரகிக்கவோ அல்லது அவர்களில் எவராலும் கடவுளை அறிந்துகொள்ள முயற்சி செய்யவோ முடியாது.
அப்பொழுது பக்தி கூட இருக்கவும் முடியாது. மக்கள் தாங்கள் கூறும் எதையும் புரிந்துகொள்வதில்லை. பலவீனமானவர்களால் ஏன் கடவுள்; சர்வவியாபகராக இல்லை என்பதை விளங்கப்படுத்த முடியாதுள்ளது. ஒரு நபர் ஏதோ ஒன்றைக் கூற, அனைவரும் அதனை நம்பினார்கள்.
உதாரணமாக, யாரோ ஒருவர் ஆதிதேவரை
“மகாவீர்” எனக் கூறினார், எனவே அப்பெயரும் தொடர்ந்தது.
எவரேனும் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட ஏதோவொரு பெயர் புரிந்துகொள்ளப்படாமலேயே தொடர்;ந்து வந்துள்ளது.
நீங்கள் மனிதர்களாக இருந்தாலும், படைப்பவரையோ அல்லது நாடகம் எனும் படைப்பையோ அறிவதில்லை எனத் தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். நீங்கள் தேவர்களை வழிபடுகின்றீர்கள், ஆனால் அவர்களுடைய சுயசரிதைகளை அறியாதவர்களாக இருப்பதால், அது குருட்டு நம்பிக்கை என அழைக்கப்படுகிறது. கடந்த காலத்தில் ஏராளமான தேவர்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்திருக்கிறார்கள், எனவே அவர்கள் நிச்சயமாக விவேகமானவர்களாக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகினார்கள்.
பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்;களாகிய நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்து, விவேகமானவர்கள் ஆகுகிறீர்கள், ஆனால் இராவணன் முழு உலகையும் சிறையிலிட்டு விட்டான். இது அனைவரும் துன்பக் குடிலில் இருக்கின்ற,
இராவணனின் சிறை ஆகும். எவ்வாறு அமைதியை ஏற்படுத்துவது என அவர்கள் தொடர்;ந்தும் மகாநாடுகளை நடாத்துகிறார்கள். ஆதலால் நிச்சயமாக அமைதியின்மையும், துன்பமும் இருக்கின்றன, அதாவது,
அவர்கள் அனைவரும் துன்பக் குடிலில் இருக்கிறார்கள். துன்பக் குடிலில் இருந்து,
எவராலும் நேரடியாகத் துன்பமற்ற குடிலுக்குச் செல்ல முடியாது.
இந்நேரத்தில் எவருமே அமைதியும், சந்தோஷமும் உள்ள குடிலில் இல்லை. சத்திய யுகம் துன்பமற்ற குடில் என அழைக்கப்படுகிறது. இது சங்கம யுகம் ஆகும். எவரும் உங்களை முற்றிலும் தூய்மையானவர்கள் என அழைக்க முடியாது.
எந்தப் பிரம்மாகுமார்கள், குமாரிகளாலும் ‘புனிதர்’
என்னும் பட்டத்தைக் கூறி, தங்களை அழைக்கவோ அல்லது எழுதவோ முடியாது.
சத்திய யுகத்திலேயே
‘புனிதர்’ என்பது உள்ளது. அவர்கள் எவ்வாறு கலியுகத்தில் இருக்க முடியும்?
‘புனிதர்’ என்னும் பட்டத்தைப் பெறுவதற்கு,
ஓர் ஆத்மா தூய்மையாகினாலும், அவரது சரீரமும் தூய்மையாக இருக்க வேண்டும்.
இதனாலேயே இம்மகத்துவத்தை நீங்கள் ஏற்கக்கூடாது.
நீங்கள் இன்னமும் முயற்சியாளர்களே. தந்தை கூறுகிறார்: சந்நியாசிகளுமே “ஸ்ரீஸ்ரீ” என அல்லது “புனிதர்”
என அழைக்கப்பட முடியாது. ஆத்மாக்கள் தூய்மையாகினாலும் அவர்களின் சரீரங்கள் தூய்மையற்றவையாக உள்ளன. எனவே,
அவர்கள் சம்பூரணமற்றவர்கள். இத்தூய்மையற்ற உலகில் எவருமே ‘புனிதராக’
இருக்க முடியாது.
ஆத்மாக்களும், பரமாத்மாவும் எப்பொழுதும் தூய்மையாக இருக்கிறார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், சரீரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். ஆம்,
இலக்ஷ்மியும் நாராயணனும் அவ்வாறு அழைக்கப்படலாம். ஏனெனில் அங்குள்ள சரீரங்களும் சதோபிரதான் சடப்பொருளினால் ஆக்கப்பட்டுள்ளன. இங்கே சடப்பொருள்;
தமோபிரதானாக உள்ளது.
இந்நேரத்தில் ‘முற்றிலும் தூய்மையானவர்கள்’ என்று எவரையும் அழைக்க முடியாது. இல்லாவிட்டால், சிறிய குழந்தைகளும் தூய்மையாக இருப்பார்கள்.
தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தனர்.
நீங்கள் எவ்வளவுக்கு விவேகமானவர்கள் ஆகுகின்றீர்கள் எனத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். நீங்கள் சக்கரத்தைப் பற்றிய முழு ஞானத்தையும் உடையவர்கள். இவ்விருட்சத்தின் உணர்வுள்ள விதையாகிய பரமாத்மாவாகிய பரமதந்தை முழு விருட்சத்தினதும் ஞானத்தைக் கொண்டுள்ளார்.
அவர் மாத்திரமே இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்.
இவ்வுலகச் சக்கர ஞானத்தின் மூலம் உங்களால் எவரையும் தூண்ட முடியும்.
நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: நீங்கள் பரந்தாமத்திலிருந்து வந்து,
அந்த ஆடையை அணிந்து, உங்கள் பாகத்தை இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது இறுதியில்,
அனைவரும் வீடு திரும்பிச் சென்று,
பின்னர் மீண்டும் வந்து அவர்களுடைய பாகங்களை நடிக்க வேண்டும். இந்நேரத்தில் ஒவ்வொருவரும் என்ன முயற்சி செய்கிறார்களோ, அவன் அல்லது அவள் அதற்கேற்பவே ஓர் அரச அல்லது செல்வந்தக் குடும்பத்தில் பிறப்பார்கள்.
அனைவரும் வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைப் பெறுவதுடன், தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். நீங்கள் வெற்றியுள்ள இடத்திலேயே பிறப்பெடுப்பீர்கள் எனக் காட்டப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் இந்நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, தொடர்ந்தும் ஞானோதயம் பெற்றவர்கள் ஆகுவீர்கள்.
இப்பொழுது தங்களுடைய சரீரங்களை நீங்கிச் செல்பவர்கள் நல்ல வீடுகளில் பிறப்பெடுப்பது நிச்சயம். அதிக முயற்சி செய்கின்ற குழந்தைகள் மேலும் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் போதையடைந்தவர்களாக இருக்கிறார்கள். உங்களைத் தவிர அனைவரும் இருளில் உள்ளனர். கங்கையில் நீராடுவதால், எவருடைய பாவங்களையும் கழுவ முடியாது. யோக அக்கினியால் மாத்திரமே பாவங்கள் எரிக்கப்படுகின்றன. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களை இராவணனின் இச்சிறையிலிருந்து விடுவிக்கிறார், இதனாலேயே
“ஓ தூய்மையாக்குபவரே!” என நினைவுகூரப்படுகின்றது. எவ்வாறாயினும், எவருமே தன்னை ஒரு பாவாத்மா எனக் கருதுவதில்லை.
தந்தை கூறுகிறார்:
சென்ற கல்பத்திலும் அவர்கள் அனைவரும் குமாரிகளின் மூலமே ஈடேற்றப்பட்டனர். இது கீதையிலும் எழுதப்பட்டுள்ளது, ஆனால் எவருமே இதனைப் புரிந்துகொள்வதில்லை. இத்தூய்மையற்ற உலகிலுள்ள எவருமே தூய்மையானவர்கள் இல்லை என உங்களால் விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், இதனை விளங்கப்படுத்துவதற்கு, பெருமளவு தைரியம் தேவைப்படுகின்றது. இப்பொழுது உலகம் மாற்றமடைகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நீங்கள் இப்பொழுது கடவுளுடைய குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். இப்பிராமணக் குலமே அனைத்திலும் அதியுயர்ந்தது. நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைப் பற்றிய ஞானம் உடையவர்கள். பின்னர்,
நீங்கள் விஷ்ணுவின் குலத்துக்குள் செல்லும்பொழுது, உங்களிடம் இந்த ஞானம் இருக்க மாட்டாது. இந்நேரத்தில் இந்த ஞானம் உங்களிடம் இருக்கின்றது,
இதனாலேயே நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகிறீர்கள். உங்களைத் தவிர எவருமே இந்த ஆழமான விடயங்களை அறியார்.
தாங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதைக் கூற வேண்டும் என்பதற்காகவே அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது நீங்களோ நடைமுறை ரீதியில் அவ்வாறு ஆகியுள்ளீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் அனைவருக்கும் அன்பும், நினைவும்,
காலை வணக்கமும்.
குழந்தைகளை நினைவுசெய்வது தந்தையின் கடமையும்,
தந்தையை நினைவுசெய்வது குழந்தைகளின் கடமையுமாகும்.
எவ்வாறாயினும், குழந்தைகள் அவரை அந்தளவுக்கு நினைவுசெய்வதில்லை. அவர்கள் அவரை நினைவுசெய்திருந்தால், அது அவர்களுடைய மகா பாக்கியமாக இருக்கும்.
அச்சா. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை நமஸ்தே கூறுகிறார்.
1.)
இரவு வகுப்பு – 08/04/1968
இதுவே தொடர்கின்ற இறை பணியகமாகும்.
எங்கள் தேவ தர்மத்துக்குரியவர்கள் இங்கே திரும்பவும் வருவார்கள்.
கிறிஸ்துவர்களை உருவாக்குவதற்காக, அம்மக்கள் ஒரு மிஷனைக் கொண்டிருக்கின்றார்கள். கிறிஸ்தவர்கள் ஆகுபவர்கள் கிறிஸ்தவ வம்சத்தில் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் சிறந்த சம்பளத்தைப் பெறுகிறார்கள், இதனாலேயே பல கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பாரத மக்களுக்கு அந்தளவு வேதனத்தைக்; கொடுக்க முடியாது. இங்கே,
பெருமளவு ஊழல் உள்ளது. அவர்கள் இலஞ்சத்தை ஏற்காது விட்டால், அவர்கள் விரும்பத்தகாதவர்கள் ஆக்கப்படுகிறார்கள். குழந்தைகள் தந்தையை வினவுகிறார்கள்: நாங்கள் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்? அவர் கூறுவார்: இராஜதந்திரமாகச் செயற்படுங்கள், பின்னர் அதனை ஒரு மங்களகரமான பணிக்காகப் பயன்படுத்துங்கள்.
இங்கே, அனைவரும் தந்தையைக் கூவியழைக்கிறார்கள்: வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள், அவர்களை விடுவித்து, அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாகத் தந்தை உங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வார், இல்லையா?
வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காக, நீங்;கள் அதிகளவு பக்தி செய்தீர்கள்.
எவ்வாறாயினும், தந்தை வரும்பொழுது மாத்திரமே,
அவரால் உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்ல முடியும்.
ஒரேயொரு கடவுளே உள்ளார். கடவுள் அனைவரிலும் வந்து பேசுகிறார் என்பதல்ல.
அவர் சங்கம யுகத்தில் மாத்திரமே வருகிறார். இப்பொழுது,
நீங்கள் அத்தகைய விடயங்களில் நம்பிக்கை கொள்வதில்லை. முன்னர்,
நீங்கள் அதனை நம்புவதுண்டு. இப்பொழுது,
நீங்கள் பக்தி எதனையும் செய்வதில்லை.
நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் பக்தி செய்ததுண்டு. எங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆக்குவதற்கு,
தந்தை இப்பொழுது வந்து விட்டார்.
உங்களால் சீக்கியர்களுக்கும் விளங்கப்படுத்த முடியும்.
மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை என்பது நினைவுகூரப்படுகிறது. தேவர்களின் புகழ் இருக்கிறது. தேவர்கள் சத்திய யுகத்தில் வாழ்கின்றார்கள், இது இப்பொழுது கலியுகம் ஆகும். நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்காக,
சங்கம யுகத்தில் மாத்திரமே தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கிறார். தேவர்களே அனைவரிலும் அதியுயர்வானவர்கள். இதனாலேயே அவர்கள் அதிகளவு பூஜிக்கப்படுகிறார்கள். பூஜிக்கப்படுபவர்கள் ஏதோவொரு காலத்தில் வாழ்ந்தார்கள், ஆனால் அவர்கள் இப்பொழுது இல்லை. அந்த இராச்சியம் இப்பொழுது சென்று விட்டது என மக்கள் நம்புகிறார்கள். நீங்கள் மறைமுகமானவர்கள். நாங்கள் உலக அதிபதிகளாகப் போகின்றோம் என்பதை எவரும் அறியார்.
நீங்கள் அந்த அதிபதிகள் ஆகுவதற்குக் கற்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள், எனவே இந்தக் கல்வியில் நீங்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும். தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள். பாபா எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார்,
ஆகவே நாங்கள் ஏன் அவரை நினைவுசெய்யக்கூடாது? தெய்வீகக் குணங்களும் தேவைப்படுகின்றன.
2.)
இரண்டாவது இரவு வகுப்பு – 09/04/1968
உலகில் எவ்வாறு அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதற்காக இந்நாட்களில், மக்கள் பொதுவாக மாநாடுகளை நடாத்துகிறார்கள். நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும்: பாருங்கள்,
சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மமும்,
ஒரேயொரு இராச்சியமும் ஒரேயொரு பிரிவினையற்ற தர்மமும் மாத்திரமே இருந்தன. முரண்பாடுகள் ஏற்படுவதற்கு, அங்கே வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. அது இராம (கடவுள்)
இராச்சியமாக இருந்தது,
அதனாலேயே அந்நேரத்தில் உலகில் அமைதி நிலவியது. நீங்கள் உலகில் அமைதியை விரும்புகிறீர்கள், ஆனால் அது சத்திய யுகத்திலேயே இருந்தது.
பின்னர், அங்கே எண்ணற்ற சமயங்கள் இருந்தபொழுது, அமைதியின்மை இருந்தது. எவ்வாறாயினும், அவர்கள் இதனைப் புரிந்துகொள்ளும் வரை,
நீங்கள் தொடர்ந்தும் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.
நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, இது செய்தித்தாள்களிலும் அச்சிடப்படும், அப்பொழுது அந்தச் சந்நியாசிகள் போன்றோரின் செவிகள் திறக்கும்.
உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் போதை உள்ளது.
அருங்காட்சியகத்தின் பகட்டைப் பார்க்கும்பொழுது, பலர் வருவார்கள். அவர்கள் உள்ளே வந்து,
வியப்படைவார்கள். அவர்கள் புதிய விளக்கங்களைச் செவிமடுத்து, புதிய படங்களைப் பார்ப்பார்கள்.
யோகமானது முக்திக்கும்,
ஜீவன்முக்திக்கும் உரியது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
அதனை எம்மனிதராலும் கற்பிக்க முடியாது.
பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர, வேறு எவராலும் முக்திக்கும்,
ஜீவன்முக்திக்குமான யோகத்தை உங்களுக்குக் கற்பிக்க முடியாது எனவும் நீங்கள் எழுத வேண்டும். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். மக்களால் வாசிக்கக்கூடிய வகையில்,
நீங்கள் இதனைத் தெளிவாக எழுத வேண்டும். சந்நியாசிகள் எதனைக் கற்பிப்பார்கள்? மக்கள் தொடர்ந்தும் யோகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் உண்மையில், அவர்களில் எவராலும் அதனைக் கற்பிக்க முடியாது.
ஒரேயொருவரின் புகழே உள்ளது. உலகில் அமைதியை ஸ்தாபிப்பதும், முக்தியையும், ஜீவன்முக்தியையும் கொடுப்பதும் தந்தையின் பணி மாத்திரமே.
இவ்விதமாக நீங்கள் ஞானக் கடலைக் கடைந்து, பின்னர் இக்கருத்துக்களை விளங்கப்படுத்த வேண்டும். மக்கள் அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் அத்தகைய விதத்தில் நீங்கள் எழுத வேண்டும்.
இவ்வுலகம் மாற்றமடைய உள்ளது. இதுவே மரண பூமியாகும்.
புதிய உலகம் அமரத்துவ பூமி என அழைக்கப்படுகிறது. எவ்வாறு அமரத்துவ பூமியின் மக்கள் அமரத்துவமானவர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஓர் அற்புதமே! அங்கே,
அவர்களுக்கு நீண்டகால ஆயுட்காலங்கள்; உள்ளன,
அவர்கள் ஆடைகளை மாற்றுவதைப் போன்று,
சரியான நேரத்தில் தாங்களாகவே தங்கள் சரீரங்களை மாற்றுகிறார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்பட வேண்டும்.
அச்சா.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையிடமிருந்து அன்பும், நினைவும்,
இரவு வணக்கமும்,
நமஸ்தேயும் உரித்தாகட்டும்.
தாரணைக்கான சாராம்சம்:
- திரிகாலதரிசியாகவும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாகவும் ஆகுவதற்கு, உலகச் சக்கரத்தின் ஞானத்தைப் பயன்படுத்துவதுடன், ஏனையோரையும் அவ்வாறு ஆக்குவதற்குச் சேவை செய்யுங்கள்.
- சங்கம யுகத்தில், துன்பக் குடிலிலிருந்து அப்பால் செல்வதுடன், சந்தோஷமும், அமைதியும் உடைய குடிலுக்குச் செல்வதற்காக, நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஞானத்தைக்
களிப்பூட்டும் வகையில்
கடைந்து, முன்னேறிச்
செல்வதால், சதா
முகமலர்ச்சியானவராகவும், சந்தோஷப்
பாக்கியத்தைக் கொண்டவராகவும்
இருப்பீர்களாக.
ஆத்மாவையும், பரமாத்மாவையும்
பற்றிய இந்த ஞானம் வறண்டதல்ல. இது மிகவும் களிப்பூட்டுகின்ற ஞானமாகும். ஒவ்வொரு நாளும் உங்களுடைய புதிய தலைப்புக்களை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நான் ஓர் ஆத்மா, ஆனால் நான் எவ்வகையான ஆத்மா? சிலசமயங்களில், நான் ஒரு கலைஞரின் ஆத்மா, சிலசமயங்களில்
நான் ஒரு வியாபாரி ஆத்மா, இவ்விதமாக, களிப்பூட்டுகின்றவராக இருக்கும்பொழுது,
தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள். தந்தை களிப்பூட்டுபவர்:
எவ்வாறு அவர் சலவைத் தொழிலாளி ஆகுகின்றார்
எனவும், சிலசமயங்களில்
உலகைப் படைப்பவராகவும்,
சிலசமயங்களில் கீழ்ப்படிவான
சேவகராகவும் ஆகுகின்றார்
எனவும் பாருங்கள். தந்தையைப் போன்றே, குழந்தைகளும்
இருக்கின்றார்கள். இவ்விதமாகக்
களிப்பூட்டும் வகையில் இந்த ஞானத்தைக் கடைந்து, முகமலர்ச்சியுடன் இருங்கள், அப்பொழுது நீங்கள் சந்தோஷப் பாக்கியத்தை
உடையவர் என்று கூறப்படுவீர்கள்.
சுலோகம்:
எவருடைய ஒவ்வொரு நாளத்திலும், அதாவது, எவருடைய ஒவ்வோர் எண்ணமும் சேவை செய்வதற்கான ஊக்கமும், உற்சாகமும் எனும் இரத்தத்தினால் நிரப்பப்பட்டுள்ளதோ, அவரே உண்மையான சேவையாளர் ஆவார்.
---ஓம் சாந்தி---
0 Comments