Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 05.02.23

 

05-02-2023  ஓம் சாந்தி  அவ்யக்த பாப்தாதா  மதுவனம்  09/12/1993


Listen to the Murli audio file



ஒருமுகப்படுத்தும் சக்தியுடனும் திடசங்கற்பத்துடனும் இலகுவாக வெற்றி பெறுங்கள்.

இன்று, பிராமண உலகைப் படைப்பவர் எங்கும் உள்ள தனது பிராமணக் குடும்பத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். இந்த அலௌகீக பிராமண உலகம் சிறியது. அழகானது மற்றும் தனித்துவமானது. முழு நாடகத்திலும் இதுவே அதி மேன்மையான உலகம் ஆகும். ஏனென்றால், பிராமண உலகின் இலக்கும் வழிமுறைகளும் தனித்துவமானதும் விசேடமானதும் ஆகும். பிராமண ஆத்மாக்கள் பிராமண உலகிலும் அத்துடன் இந்த உலகிலும் விசேடமானவர்கள். இதனாலேயே, இது விசேடமான ஆத்மாக்களின் உலகமாகும். ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் மேன்மையான மனோபாவம், மேன்மையான திருஷ்டியும் மேன்மையான செயல்களும் உலகிலுள்ள ஒவ்வோர் ஆத்மாவையும் மேன்மையான ஆத்மாவாக மாற்றுவதற்குக் கருவிகள் ஆகுகின்றன. ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த விசேடமான பொறுப்பு உள்ளது. எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் இதை உங்களின் பொறுப்பாக அனுபவம் செய்கிறீர்களா? இது பெரியதொரு பொறுப்பாகும்: முழு உலகையும் மாற்றுதல். ஆத்மாக்களின் மாற்றம் மட்டுமன்றி, நீங்கள் சடப்பொருளை மாற்றுகிறீர்கள். இந்த விழிப்புணர்வை சதா கொண்டிருப்பதில் நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். பிராமண ஆத்மாக்கள் எல்லோருக்கும் முதலாம் இலக்க விசேடமான ஆத்மாக்கள் ஆகுகின்ற எண்ணம் சதா அவர்களுக்குள்ளே இருக்கிறது. ஆயினும், அவர்களின் எண்ணங்களுக்கும் அவர்களின் செயல்களுக்கும் இடையே ஒரு வேறுபாடு காணப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்றால், செயல்படும் நேரத்தில் நீங்கள் உங்களின் உணர்வை அனுபவசாலி என்ற ஸ்திதியில் ஸ்திரப்படுத்துவதில்லை. நீங்கள் எதைக் கேட்டீர்களோ, எதை அறிந்துள்ளீர்களோ அதை நினைவு செய்வீர்கள். ஆனால், அந்த ஸ்திதியில் உங்களை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப செயல்படுவதில், உங்களில் பெரும்பாலானோர் சிலவேளைகளில் இதில் அனுபவசாலிகள் ஆகுகிறீர்கள். சிலவேளைகளில் அதைக் கேட்டு, ஏற்றுக்கொள்வதாக மட்டுமே ஆகுகிறீர்கள். இந்த அனுபவத்தை அதிகரிப்பதற்கு, இரண்டு விடயங்களின் விசேடமான முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சுயத்தின் முக்கியத்துவம். மற்றையது, நேரத்தின் முக்கியத்துவம். உங்களைப் பற்றி நீங்கள் அதிகளவில் அறிந்துள்ளீர்கள். நீங்கள் என்ன வகையான ஆத்மா என யாராவது உங்களைக் கேட்டால் அல்லது நீங்களே உங்களை நீங்கள் யார் எனக் கேட்டால், உங்களின் விழிப்புணர்வில் எத்தனை விடயங்கள் தோன்றும்? ஒரு நிமிடத்தில் உங்களின் சுய மரியாதை ஸ்திதியைப் பற்றிய எத்தனை கருத்துக்களை நீங்கள் நினைப்பீர்கள்? ஒரு நிமிடத்தில் இவற்றில் எத்தனை கருத்துக்களை உங்களால் நினைக்க முடியும்? நீங்கள் பல கருத்துக்களை நினைக்கிறீர்கள்தானே? சுய முக்கியத்துவத்தின் பட்டியலும் நீண்டதொரு பட்டியலாகும். எனவே, இதை அறிந்து கொள்வதில் நீங்கள் எல்லோரும் மிகவும் புத்திசாலிகள். நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள். அப்படித்;தானே? அவ்வாறாயின், இதை அனுபவம் செய்வதில் ஏனிந்த வேறுபாடு? ஏனென்றால், உங்களால் சரியான நேரத்தில் அந்த ஸ்திதி என்ற ஆசனத்தில் ஸ்திரமாக இருக்க முடிவதில்லை. உங்களின் ஆசனத்தில் உங்களால் சரியாக அமர்ந்திருக்கும்போது, எந்தவொரு பலவீனமான சம்ஸ்காரங்களோ எந்தவோர் ஆத்மாவோ எந்தவொரு சடப்பொருளோ அல்லது எந்த வகையான இராஜரீகமான மாயையோ உங்களைக் குழப்ப முடியாது. பௌதீகமாகவும் தமது சரீரங்களைப் பொறுத்தவரை, பலருக்கும் ஓர் ஆசனத்தில் அல்லது ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் பழக்கம் கிடையாது. எனவே, அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். அதேபோல், மனதாலும் புத்தியாலும் ஓர் அனுபவம் என்ற ஆசனத்தில் தம்மை இருத்திக் கொள்ளத் தெரியாவிட்டால், ஒரு கணம் அவை ஸ்திரமாக இருக்கும். அடுத்த கணமே அவை குழப்பத்திற்கு உள்ளாகும். சரீரத்தின் ஆசனம் பௌதீகமானதோர் இடமாகும். மனதினதும் புத்தியினதும் ஆசனம் மேன்மையான ஸ்திதியாகும். எனவே, பாப்தாதா தொடர்ந்தும் குழந்தைகளின் இந்த விளையாட்டை அவதானிக்கிறார். ஒரு நிமிடம், நீங்கள் உங்களை நல்லதொரு ஸ்திதி என்ற அனுபவத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்கிறீர்கள். அடுத்த நிமிடம், உங்களின் ஸ்திதி தளம்பல் அடைகிறது. மிகவும் குறும்புத்தனம் செய்யும் சிறுவர்களால் நீண்ட நேரத்திற்கு ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாது. சில குழந்தைகளும் இந்தக் குழந்தைப் பருவ விளையாட்டுக்களை அதிகளவில் விளையாடுகிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்த்தால், ஒரு நிமிடம் அவர்கள் மிகக் கடுமையாக ஒருமுகப்பட்டிருப்பார்கள். அடுத்த நிமிடம், ஒருமுகப்படுவதற்குப் பதிலாக, பலவிதமான ஸ்திதிகளினூடாக அவர்கள் அலைந்து கொண்டிருப்பார்கள். ஆகவே, இந்த வேளையில், உங்களின் மனமும் புத்தியும் சதா ஒருமுகப்பட்டிருக்கும் வகையில் நீங்கள் விசேடமான கவனம் செலுத்த வேண்டும்.

ஒருமுகப்படுத்தும் சக்தி இலகுவாக உங்களைத் தடைகளில் இருந்து விடுவிக்கும். அதனால் கடினமாக உழைக்க வேண்டியிராது.

ஒருமுகப்படுத்தும் சக்தி நீங்கள் வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் அனுபவத்தை சதா பெறச் செய்கிறது.

ஒருமுகப்படுத்தும் சக்தி இலகுவாக உங்களின் ஸ்திதியை நிலையானது ஆக்குகிறது.

ஒருமுகப்படுத்தும் சக்தி இலகுவாக உங்களிடம் எல்லோருக்கும் நன்மை செய்யும் மனோபாவத்தை சதா ஏற்படச் செய்கிறது.

ஒருமுகப்படுத்தும் சக்தி இயல்பாகவே எல்லோருக்கும் சகோதரத்துவப் பார்வையை உருவாக்குகிறது.

ஒருமுகப்படுத்தும் சக்தி இலகுவாக ஒவ்வோர் ஆத்மாவுடனும் உங்களின் உறவுமுறையைப் பொறுத்தவரையில் உங்களின் செயல்களில் அன்பையும் மதிப்பையும் மரியாதையையும் அனுபவம் அடையச் செய்கிறது.

எனவே, இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்? ஒருமுகப்படுத்துதலில். நீங்கள் ஸ்திரமாகுகின்றீர்கள். உங்களுக்கு அந்த அனுபவம் உள்ளது. ஆனால், உங்களின் அனுபவத்தில் நீங்கள் ஒருமுகப்படுவதில்லை. நீங்கள் சதா மூன்று ஸ்திதிகளில் சுற்றுலா செல்கிறீர்கள் : சிலவேளைகளில் உங்களின் அனுபவம் மேன்மையாக உள்ளது. சிலவேளைகளில் அது மத்திம நிலையில் உள்ளது. சிலவேளைகளில் அது சாதாரணமான நிலையில் உள்ளது. உங்களின் மனமும் புத்தியும் சதா உங்களின் கட்டளைகளின் கீழ் இருக்கும் வகையில் மிகவும் சக்திவாய்ந்தவர் ஆகுங்கள். அப்போது உங்களின் கனவுகளிலேனும், ஒரு விநாடிகூட அவை தளம்பல் அடையாது. உங்களின் மனம், அதிபதியான உங்களை ஆதிக்கத்திற்கு உள்ளாக்கக்கூடாது.

வேறோர் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஓர் ஆத்மாவின் அடையாளம், அந்த ஆத்மாவால் அவர் விரும்பினாலும் அந்தக் காலப்பகுதிக்கு சந்தோஷம், சௌகரியம் அல்லது ஆனந்தத்தை அனுபவம் செய்ய முடியாதிருக்கும். பிராமண ஆத்மாக்களால் மற்றவர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒருபோதும் வரமுடியாது. தமது சொந்த சம்ஸ்காரங்கள் அல்லது பலவீனமான சுபாவத்தின் ஆதிக்கத்தின் கீழும் வரமுடியாது. உண்மையில், ஒருவரின் சுபாவத்தின் (சுபாவ்) அர்த்தம், சுயத்திற்கான (சுவ) உணர்வுகள் (பாவ்) என்பதாகும். சுயத்திற்கான உணர்வுகள் எப்போதும் நல்லதாகவே இருக்கும். தீங்கானதாக இருக்காது. நீங்கள் சுவ (சுயம்) எனச் சொல்லும்போது எதை நினைக்கிறீர்கள்? உங்கள் ஆத்ம வடிவத்தை நினைக்கிறீர்கள், அப்படித்தானே? எனவே, சுபாவ் (சுபாவம்) என்றால் உங்களுக்காகவும் எல்லோருக்காகவும் ஆத்ம உணர்வுகளைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். உங்களின் பலவீனங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட உங்களின் சுபாவத்தை அல்லது சம்ஸ்காரங்களை நீங்கள் நினைக்கும்போதெல்லாம், நான் என்ன செய்வது? எனது சுபாவம் இப்படி உள்ளதே என உங்களின் சம்ஸ்காரங்களையும் சுபாவத்தையும் பற்றி நினைக்கும்போது, இதைச் சொல்வது என்ன வகையான ஆத்மா? இவை புற ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள ஓர் ஆத்மாவின் வார்த்தைகளும் எண்ணங்களும் ஆகும். எனவே, உங்களின் சுபாவம் இப்படிப்பட்டது என நீங்கள் நினைக்கும்போதெல்லாம், உங்களை அந்த வார்த்தையின் மேன்மையான அர்த்தத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். உங்களின் சம்ஸ்காரங்கள் உங்களின் முன்னால் வருமாயின், உங்களையே கேட்டுப் பாருங்கள்: இவை எனது சம்ஸ்காரங்கள் என நான் சொல்லும்வகையில், இவை விசேட ஆத்மாவான எனது சம்ஸ்காரங்களா? அவற்றை உங்களின் சம்ஸ்காரங்கள் என நீங்கள் அழைப்பதனால், எனது என்ற உணர்வு உங்களுக்கு இருப்பதனால், நீங்கள் பலவீனமான சம்ஸ்காரங்களையும் கைவிடுவதில்லை. எனது என்ற உணர்வு இருக்கும் இடத்தில், சொந்தமாக இருக்கும் உணர்வு இருக்கும் என்பது நியதியாகும். எங்கு சொந்தம் என்ற உணர்வு ஏற்படுகிறதோ, அங்கு ஓர் உரிமை இருக்கும். எனவே, நீங்கள் பலவீனமான சம்ஸ்காரங்களை உங்களுக்குரியவை ஆக்கியதால், அவை தமது உரிமையைக் கைவிடுவதில்லை. ஆகவே, வேறோர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவண்ணம் நீங்கள் உங்களை விடுவிக்கும்படி தந்தையிடம் கேட்கிறீர்கள். நீங்கள் சம்ஸ்கார் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, உங்களின் சம்ஸ்காரங்கள் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அவை மாயையின் சம்ஸ்காரங்கள். உங்களுடையவை அல்ல. எனவே, ஒருமுகப்படுத்தும் சக்தியால், வேறோர் ஆதிக்கதின் கீழ் இருக்கும் ஸ்திதியை மாற்றி, அவற்றின் அதிபதியாக இருக்கும் ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் யோகத்தில் அமரும்போது, எல்லோரும் ஆர்வத்துடனேயே இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் விரும்பிய அளவிற்கு ஒரு குறிப்பிட்ட ஸ்திதியில் இருப்பதற்கு ஒருமுகப்படுத்தும் ஸ்திதி உங்களுக்குத் தேவை. எனவே, நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? எந்த விடயத்தை நீங்கள் கீழ்க்கோடிடுவீர்கள்? (ஒருமுகப்படுதல்). ஒருமுகப்படும்போது திடசங்கற்பம் ஏற்படுகிறது. உங்களிடம் திடசங்கற்பம் இருக்கும்போது, வெற்றி என்பது உங்களின் கழுத்து மாலை ஆகும். அச்சா.

எங்கும் உள்ள அலௌகீக பிராமண உலகிலுள்ள விசேடமான ஆத்மாக்களுக்கும், மேன்மையான ஸ்திதியை அனுபவம் செய்யும் ஆசனத்தில் சதா அமர்ந்திருக்கும் ஆத்மாக்களுக்கும் சதா சுயத்தின் முக்கியத்துவத்தை அனுபவம் செய்யும் ஆத்மாக்களுக்கும், தமது மனங்களையும் புத்திகளையும் சதா ஒருமுகப்படுத்தும் சக்தியில் ஸ்திரமாக்குபவர்களுக்கும் சதா ஒருமுகப்படுத்தும் சக்தியைக் கொண்டிருந்து திடசங்கற்பத்துடன் இலகுவாக வெற்றி பெறுபவர்களுக்கும் அதிமேன்மையான, அதிவிசேடமான, அதியன்பிற்குரிய ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதாவுடன் தனிப்பட்ட சந்திப்பு

பறக்கும் ஸ்திதிக்குள் செல்வதற்கு இலேசாகவும் ஒளியாகவும் (டபிள்லைற்) ஆகுங்கள். கவர்ச்சியின் எந்தவொரு ரூபமும் உங்களை ஈர்க்கக்கூடாது.

தற்சமயத்திற்கேற்ப, நீங்கள் எல்லோரும் உங்களைத் துரித கதியில் பறப்பவர்களாக அனுபவம் செய்கிறீர்களா? காலத்தின் வேகம் துரிதமானதா அல்லது ஆத்மாக்களின் முயற்சிகளின் வேகம் துரிதமானதா? நேரம் உங்களுக்குப் பின்னால் உள்ளதா அல்லது நீங்கள் காலத்திற்கேற்ப முன்னேறிச் செல்கிறீர்களா? இறுதியில் எல்லாம் சரியாகிவிடும், முடிவு வரும்போது எல்லாமே சரியாகிவிடும், அப்போது நீங்கள் சம்பூரணமானவர்களாகித் தந்தைக்குச் சமமாக ஆகிவிடுவீர்கள் என நினைத்து நீங்கள் காலத்திற்காகக் காத்திருக்கவில்லைத்தானே? நீங்கள் அப்படி நினைக்கவில்லைத்தானே? நாடகத்தின்படி, நிகழ்காலம் மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அது உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது. நேற்று என்ன இருந்ததோ, இன்று அது மேலும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. உங்களுக்கு இது தெரியும்தானே? காலம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதைப் போல், மேன்மையான ஆத்மாக்களான நீங்களும் தீவிரமாகச் செல்கிறீர்களா? அதாவது, உங்களின் முயற்சிகளில் துரித கதியில் செல்கிறீர்களா? அல்லது, சிலவேளைகளில் பின்தங்கியவராகவும் சிலவேளைகளில் விரைவாகவும் செல்கிறீர்களா? நீங்கள் கீழே வந்து பின்னர் மேலே செல்வதாக இருக்கக்கூடாது. இவ்வாறு மேலேயும் கீழேயும் சென்று வருபவர்களால் துரிதமான, நிலையான வேகத்தைக் கொண்டிருக்க முடியாது. எனவே, நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சதா மேன்மையான, துரித கதியில் பறப்பவர்கள் ஆவீர்கள். நினைவுகூரப்படுகிறது: ஏறுகின்ற ஸ்திதியால் எல்லோருக்கும் நன்மை உள்ளது. எவ்வாறாயினும், இப்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? பறக்கும் ஸ்திதியால் எல்லோருக்கும் நன்மை உள்ளது. ஏறுகின்ற ஸ்திதிக்கான காலம் இப்போது முடிந்துவிட்டது. இப்போது இது பறக்கும் ஸ்திதிக்கான காலமாகும். பறக்கும் ஸ்திதிக்குரிய காலத்தில், யாராவது ஒருவர் ஏறுகின்ற ஸ்திதியுடன் செல்ல விரும்பினால், அவரால் அங்கே சென்று சேர முடியுமா? இல்லை. எனவே, சதா பறக்கும் ஸ்திதி இருக்க வேண்டும். பறக்கும் ஸ்திதியின் அடையாளம், சதா இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதாகும். நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் இல்லாவிட்டால், உங்களால் பறக்கும் ஸ்திதியைக் கொண்டிருக்க முடியாது. சிறிதளவு சுமையும் உங்களைக் கீழே கொண்டுவந்துவிடும். விமானத்தில் பயணம் செய்யும்போது, இயந்திரத்தில் அல்லது பெற்றோலில் சிறிதளவு அழுக்கு இருந்தாலும், அதன் நிலைமை என்னவாக இருக்கும்? பறக்கும் நிலையில் இருந்து அந்த விமானம் வீழ்கின்ற நிலைக்கு வந்துவிடும். எனவே, இங்கும், ஏதாவதொரு வகையான சுமை இருக்குமாக இருந்தால், அது உங்களின் சம்ஸ்காரங்களாகவோ, எந்த வகையான சூழலாகவோ அல்லது எந்தவோர் ஆத்மாவுடனும் உறவுமுறையோ அல்லது தொடர்பாகவோ இருந்தாலும், பறக்கும் ஸ்திதியில் இருந்து உங்களுக்குள் ஏதாவது குழப்பங்கள் ஏற்படும். நான் நன்றாகத்தான் இருக்கிறேன், ஆனால், இந்தக் காரணத்தால், இந்த சம்ஸ்காரத்தின், இந்த நபரின், இந்தச் சூழலின் பந்தனம் உள்ளது என நீங்கள் சொல்வீர்கள். அந்தக் காரணம் என்னவாக இருந்தாலும், தீவிர முயற்சியாளர்கள் சகல சூழ்நிலைகளையும் அவை எதுவுமே இல்லாததுபோல் கடந்து செல்வார்கள். அவர்கள் அதை ஒரு சிரமமாகவே கருத மாட்டார்கள். ஆனால் களிப்பூட்டும் விடயமாகவே கருதுவார்கள். இத்தகைய ஸ்திதியே பறக்கும் ஸ்திதி என்று அழைக்கப்படுகிறது. எனவே, உங்களிடம் பறக்கும் ஸ்திதி உள்ளதா? அல்லது, நீங்கள் சிலவேளைகளில் கீழே வந்து சுற்றுலா செல்ல ஆசைப்படுகிறீர்களா? எதன்மீதும் பற்று இருக்கக்கூடாது. எந்தவொரு கவர்ச்சியும் உங்களைச் சிறிதளவேனும் இழுக்கக்கூடாது. புவியீர்ப்பு விசைக்கு அப்பால் செல்லும்போதே ஓர் ஏவுகணையால் உயரே பறக்க முடியும். இல்லாவிட்டால், அதனால் உயரே பறக்க முடியாது. அது விரும்பாத போதும் கீழே வந்துவிடும். எந்த வகையான கவர்ச்சியும் உங்களை மேலே செல்ல அனுமதிக்காது. அது உங்களை முழுமையானவர்கள் ஆக்க அனுமதிக்காது. எனவே, சோதித்துப் பாருங்கள்: உங்களின் எண்ணங்களிலேனும் எந்தவொரு கவர்ச்சியும் உங்களை ஈர்க்கக்கூடாது. தந்தையைத் தவிர வேறு எந்தக் கவர்ச்சியும் இருக்கக்கூடாது. பாண்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? தீவிர முயற்சியாளர்கள் ஆகுங்கள். நீங்கள் அப்படி ஆகவேண்டும்தானே? எத்தனை தடவைகள் நீங்கள் அப்படி ஆகியுள்ளீர்கள்? நீங்கள் எண்ணற்ற தடவைகள் அப்படி ஆகியுள்ளீர்கள். நீங்கள்தான் அப்படி ஆகினீர்களா அல்லது வேறு யாராவது அப்படி ஆகினார்களா? நீங்களே அப்படி ஆகினீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள் ஆகமாட்டீர்கள்தானே? நீங்கள் முதலாம் இலக்கத்தைக் கோரப்போகின்றீர்கள்தானே? தாய்மார்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் முதலாம் இலக்கத்தைப் பெறுவீர்களா அல்லது வரிசைக்கிரமமாக இருப்பது பரவாயில்லையா? 108 ஆம் இலக்கம் கிடைத்தால் பரவாயில்லையா? நீங்கள் 108 ஆம் இலக்கத்தில் வருவீர்களா அல்லது முதலாம் இலக்கத்தில் வருவீர்களா? இப்போது நீங்கள் தந்தைக்குச் சொந்தமாக இருந்து ஓர் உரிமையைப் பெற்றிருப்பதனால், நீங்கள் முழுமையான ஆஸ்தியைப் பெறப் போகின்றீர்களா அல்லது சிறிது குறைவாகப் பெறப் போகின்றீர்களா? அப்படியாயின், நீங்கள் முதலாம் இலக்கத்தவர் ஆகுவீர்கள்தானே? அருள்பவர் முழுமையாகக் கொடுக்கும்போது, பெறுபவர்கள் சிறிது குறைவாகப் பெற்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? இதனாலேயே, நீங்கள் முதல் இலக்கத்தவர் ஆகவேண்டும். ஒருவர்தான் முதலாம் இலக்கத்தவர் ஆகினாலும், முதல் இலக்கப் பிரிவில் பலர் இருக்கிறார்கள். எனவே, நீங்கள் இரண்டாம் இலக்கத்தவர் ஆகக்கூடாது. நீங்கள் எதையாவது பெற விரும்பினால், அதை முழுமையாகப் பெற்றுக் கொள்ளுங்கள். முழுமையாகப் பெற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் பின்தொடர்ந்து வருவார்கள். எவ்வாறாயினும், நீங்கள் முழுமையாகப் பெற்றுக் கொள்ளப் போகின்றீர்கள். நீங்கள் எல்லோரும் முழுமையாகப் பெற்றுக் கொள்ளப் போகின்றவர்களா? அல்லது, சிறிதளவைப் பெற்று அதனால் சந்தோஷப்படப் போகின்றீர்களா? பொக்கிஷக் களஞ்சியம் திறந்திருப்பதனால், அத்துடன் அது எல்லையற்றதாக இருப்பதனால், நீங்கள் ஏன் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்? அது எல்லையற்றதுதானே? அது எல்லைக்குட்பட்டதாக இருந்து, ஒருவர் 8000 ஐப் பெற்று, இன்னொருவர் 10000 ஐப் பெற்றால், அவர்களின் பாக்கியத்தில் உள்ளது அவ்வளவுதான் என்றே சொல்லப்படும். எவ்வாறாயினும், தந்தையின் பொக்கிஷக் களஞ்சியம் திறந்துள்ளது. அத்துடன் அது எல்லையற்றது. நீங்கள் விரும்பிய அளவை உங்களால் எடுத்துக் கொள்ள முடியும். அப்படியிருந்தாலும் அது முடிவற்றது. நீங்கள் முடிவற்ற பொக்கிஷங்களின் அதிபதிகள் ஆவீர்கள். நீங்கள் அதிபதிகளாக இருக்கும் குழந்தைகள் ஆவீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்தானே? அல்லது, சிலவேளைகளில் துன்ப அலைகள் வந்துவிடுகின்றனவா? துன்ப அலைகளால் உங்களின் கனவுகளிலேனும் வரமுடியாது. உங்களின் எண்ணங்களில் மட்டுமல்ல, அவற்றால் உங்களின் கனவுகளிலேனும் வரமுடியாது. இதுவே முதலாம் இலக்கத்தவராக இருத்தல் எனப்படுகிறது. எனவே, நீங்கள் என்ன அற்புதங்களைச் செய்து காட்டுவீர்கள்? நீங்கள் எல்லோரும் முதலாம் இலக்கத்தை நிச்சயமாகக் கோருவீர்கள்தானே?

டெல்லி இதயம் எனச் சொல்லப்படுகிறது. இதயம் எப்படி இருக்குமோ அப்படியே உடலும் இயங்கும். அதன் அடிப்படை இதயம், அப்படித்தானே? இங்கு இதயம் என்பது இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரின் இதயமாகும். இதயம் என்ற ஆசனம் மிகச்சரியாக இருக்க வேண்டும். அது அசைய முடியாது. நீங்கள் இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரின் இதயமாக இருக்கும், போதை உங்களுக்கு இருக்கிறதுதானே? எனவே, இப்போது உங்களையும் உலகையும் உங்களின் மேன்மையான எண்ணங்களால் மாற்றுங்கள். உங்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியதும், நீங்கள் அதை நடைமுறைப்படுத்துகிறீர்கள். நீங்கள் அதிகம் சிந்திப்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்கள், ஆனால் உண்மையில் மிகச் சிறிதளவே நிகழ்கிறது என நீங்கள் சொல்கிறீர்கள். இத்தகைய ஆத்மாக்கள் தீவிர முயற்சியாளர்கள் கிடையாது. தீவிர முயற்சியாளர் என்றால் உங்களின் எண்ணங்களும் செயல்களும் ஒத்தவையாக உள்ளன என்று அர்த்தம். அப்போது மட்டுமே நீங்கள் தந்தைக்குச் சமமானவர்கள் எனச் சொல்லப்படுவீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். சதா சந்தோஷமாக இருப்பீர்கள். இந்த உறுதியான நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதுதானே? சந்தோஷமாக இருப்பவர்கள் மட்டுமே பாக்கியசாலிகள் ஆவார்கள். இது உறுதியாக உள்ளதா? அல்லது, இதில் நீங்கள் சிறிது பலவீனம் அடைகிறீர்களா? காயாக இருக்கும் எதையாவது நீங்கள் விரும்புவீர்களா? பழுத்தவற்றைத்தான் நீங்கள் விரும்புவீர்கள். எனவே, மிகவும் உறுதியாக இருங்கள்.

ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில், இந்தப் பாடத்தை உறுதியானதாக்கிக் கொள்ளுங்கள்: என்னதான் நடந்தாலும், நீங்கள் சந்தோஷமாக இருந்து, மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவீர்கள். ஓகே, வேறெந்த விளையாட்டுக்களையும் காட்டாதீர்கள். இந்த விளையாட்டை மட்டும் காட்டுங்கள். வேறெந்த விளையாட்டுக்களையும் விளையாடாதீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:

நீங்கள் பெருந்தன்மை உடையவராகவும் மகாதானியாகவும் ஆகி, உங்களின் பாக்கியத்தையும் பாக்கியத்தை அருள்பவரான தந்தையையும் உணர்ந்தவராக இருந்து, உங்களின் பாக்கியத்தை சதா பகிர்ந்து கொள்வீர்களாக.

நீங்கள் பாக்கியத்தை அருள்பவரான தந்தையையும் உங்களின் பாக்கியத்தையும் நினைக்கும்போது, மற்றவர்களைப் பாக்கியசாலிகள் ஆக்குவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பீர்கள். பாக்கியத்தை அருள்பவரான தந்தை, பிரம்மாவினூடாகப் பாக்கியத்தைப் பகிர்ந்து கொள்வதைப் போல், நீங்களும் அருள்பவரின் குழந்தைகளே. எனவே, உங்களின் பாக்கியத்தையும் தொடர்ந்து பகிருங்கள். அந்த மனிதர்களோ ஆடைகளையும் உணவையும் பரிசுகளையும் பகிர்ந்தளிக்கிறார்கள். ஆனால் எவரும் அவற்றால் மனநிறைவை அடைவதில்லை. நீங்கள் உங்களின் பாக்கியத்தைப் பகிர்ந்தளிக்கிறீர்கள். எங்கு பாக்கியம் உள்ளதோ, அங்கு சகல பேறுகளும் இருக்கும். இந்த முறையில் பெருந்தன்மை உடையவர்களாகி, உங்களின் பாக்கியத்தைப் பகிர்ந்தளியுங்கள். அத்துடன் மேன்மையானவர்களாகவும் மகாதானியாகவும் ஆகுங்கள். சதா தொடர்ந்து கொடுங்கள்.

சுலோகம்:

சதா ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்களாகவும், எப்போதும் சிக்கனமாகவும் இருப்பவர்கள், இறைவனால் நேசிக்கப்படுகிறார்கள்.

 

--ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments