04-02-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையுடன் உறவுமுறைகள் அனைத்தையும்
கொண்டிருக்கின்ற சந்தோஷத்தைப்
பெறுவதற்கு, உங்கள் அன்பான புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிடமிருந்தும் அகற்றி, சதா உங்கள் தந்தையான என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். இதுவே உயர்ந்த இலக்கு ஆகும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இந்நேரத்தில் செய்கின்ற எந்த நற் செயல்களின் பிரதிபலனாகச்
செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள்?
பதில்:
ஞான இரத்தினங்களைத்
தானம் செய்வதே, அனைத்திலும் அதிசிறந்த பணியாகும். இந்த அழிவற்ற ஞானப் பொக்கிஷம் மாற்றம் செய்யப்பட்டு,
உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு அழிவற்ற செல்வம் ஆகுகிறது. நீங்கள் இதனூடாகச் செழிப்பானவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் ஞான இரத்தினங்களைக் கிரகித்து, அவற்றை ஏனையோரையும் கிரகிப்பதற்குத்
தூண்டுமளவுக்கேற்ப, செல்வந்தர்கள்
ஆகுவீர்கள். அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்வதே, அதிமேன்மையான சேவை ஆகும்.
ஓம் சாந்தி.
சிவபாபா தனது சாலிகிராம் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்த ஞானம் பரமதந்தையின் குழந்தைகளாகிய ஆத்மாக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஓர் ஆத்மாவால் இன்னுமோர் ஆத்மாவுக்கு ஞானத்தைக் கொடுக்க முடியாது.
பரமாத்மாவாகிய சிவன் மாத்திரமே இங்கமர்ந்திருந்து, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும், அதிர்ஷ்ட நட்சத்திரங்களான குழந்தைகளாகிய உங்களுக்கும் ஞானத்தைக் கொடுக்கிறார்.
இதனாலேயே இது இறை ஞானம் என அழைக்கப்படுகிறது. கடவுள் ஒரேயொருவரே,
ஏனைய அனைவரும் படைப்பவரின் படைப்பாவர்.
இவர்கள் அனைவரும் தனது வடிவங்கள் என ஒரு லௌகீகத் தந்தை கூற மாட்டார்,
இல்லை. தனது குழந்தைகள் அனைவரும் தனது படைப்பு என்றே அவர் கூறுவார். அவர்
(கடவுள்) ஆன்மீகத் தந்தை என்ற பாகத்தைப் பெற்றுள்ளார்.
அந்த ஒரேயொருவர் தனது பாகத்தைப் பெற்றுள்ள ஆன்மீகத் தந்தையாவார். அவரே பிரதான நடிகரும்,
படைப்பவரும், இயக்குனரும் ஆவார். ஓர் ஆத்மாவைப் படைப்பவர் என அழைக்க முடியாது. பரமாத்மாவையிட்டுக் கூறப்படுகிறது: நீங்கள் மாத்திரமே உங்கள் வழிமுறைகளை அறிவீர்கள்.
அந்தக் குருமார்கள் அனைவரும் தங்கள் சொந்த வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளார்கள், இதனாலேயே பரமாத்மா வந்து, ஒரேயொரு வழிகாட்டலைக் கொடுக்கிறார்.
அவரே அதியன்பிற்கினியவர். நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தை அவர் (கடவுள்)
ஒருவருடனேயே இணைத்துக் கொள்ள வேண்;டும். நீங்கள் நேசிப்பவர்களே, உங்களை ஏமாற்றுபவர்களும் ஆவார்கள்.
இதனாலேயே நீங்கள் உங்கள் புத்தியை அவர்கள் அனைவரிடமிருந்தும் அப்பால் அகற்ற வேண்டும். நான் உங்களுக்கு உறவுமுறைகள் அனைத்தினதும் சந்தோஷத்தைக் கொடுப்பேன். என்னை நினைவு செய்யுங்கள்.
இதுவே இலக்கு ஆகும். நான் அனைவருடைய அதிஅன்பான தந்தையும், இனிய ஆசிரியரும், குருவும் ஆவேன். நீங்கள் அவரிடமிருந்து ஜீவன்முக்தியைப் பெறுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இவை அழிவற்ற ஞான இரத்தினங்கள் ஆகும்.
இந்தப் பொக்கிஷங்கள் மாற்றப்பட்டு, உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான அழிவற்ற செல்வம் ஆகுகிறது. நாங்கள்
21 பிறவிகளுக்கு மிகவும் செழிப்பானவர்கள் ஆகுகிறோம்.
நாங்கள் அரசர்க்கெல்லாம் அரசர் ஆகுகிறோம்.
இந்த அழிவற்ற செல்வத்தைத் தானம் செய்யுங்கள். முன்னர்,
நீங்கள் அழியக்கூடிய செல்வத்தைத் தானம் செய்வதுண்டு, அதனால் நீங்கள் உங்கள் அடுத்த பிறவியில் தற்காலிக, கணப்பொழுது சந்தோஷத்தைப் பெற்றீர்கள்.
‘நீங்கள் உங்களுடைய முன்னைய பிறவியில் தானதர்;மம் செய்ததன் பலனையே பெற்றுள்ளீர்கள்;’ என்று கூறப்படுகின்றது. நீங்கள் ஒரேயொரு பிறவிக்கான அப் பலனைப் பெறுகிறீர்கள். அது பல பிறவிகளுக்கான வெகுமதி எனக் கூறப்பட முடியாது.
நாங்கள் இப்பொழுது செய்வது அனைத்துக்கும், பிறவிபிறவியாகப் பலனைப் பெறுவோம். ஆகவே,
இது இப்பொழுது பல பிறவிகளுக்கான பேரம் ஆகும்.
நீங்கள் பரமாத்மாவிடமிருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கோர வேண்டும். அழிவற்ற ஞானப் பொக்கிஷங்களைத் தானம் செய்வதே சிறந்த செயல் ஆகும். நீங்கள் ஞான இரத்தினங்களைக் கிரகித்து, ஏனையோரை அவற்றைக் கிரகிக்குமாறு தூண்டுமளவுக்கேற்ப, நீங்கள் செல்வந்தர்கள் ஆகுவதுடன்,
ஏனையோரையும் செல்வந்தர்கள் ஆக்குவீர்கள். இதுவே அதிமேன்மையான சேவை ஆகும். இதனூடாகவே நீங்கள் சற்கதியைப் பெறுகிறீர்கள். தேவர்களின் வாழ்க்கைமுறையைப் பாருங்கள்:
அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களும், அகிம்சை என்னும் அதியுயர்ந்த தர்மத்தைப் பின்பற்றுபவர்களும் ஆவார்கள். சத்திய,
திரேதா யுகங்களில் மாத்திரமே முழுமையான தூய்மையும், சம்பூரணமான தூய்மையும் உள்ளது.
தேவர்கள் வைகுந்தத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் அதிமேன்மையாக இருப்பவர்களாக நினைவுகூரப்படுகிறார்கள். சத்தியயுகத்துச் சூரிய வம்சத்தினுள் செல்பவர்களே, முழுமையானவர்கள். பின்னர் அவர்களில் சிறிதளவு கலப்படம் கலக்கப்படுகிறது. வைகுந்தம் என்றால் என்ன என்பதையும், தேவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்பதையும் நீ;ங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். வைகுந்தம் அற்புதமான உலகமாகும்.
ஏனைய சமயத்தவர்களால் அங்கே செல்ல இயலாது. அதிமேலான கடவுளே, அனைத்துச் சமயங்களையும் படைப்பவர் ஆவார். பிரம்மா இத்தேவ தர்மத்தை ஸ்தாபிக்கவில்லை. பிரம்மா கூறுகிறார்: நான் தூய்மையற்றவராக இருந்தேன்,
ஆகவே நான் எவ்வாறு இந்த ஞானத்தைப் பெற்றிருக்க முடியும்? தங்கள் சொந்தத் தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு, அத்தூய ஆத்மாக்கள் அனைவரும் மேலிருந்து வந்தார்கள்,
ஆனால் இத்தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு பரமாத்மாவே இங்கே வந்துள்ளார்.
அவர் இவரில் பிரவேசிக்கும்பொழுது, அவருக்கு பிரம்மா எனப் பெயரிடுகிறார். கூறப்படுகிறது: பிரம்ம தேவருக்கு வந்தனங்கள், விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள்.
ஆகவே, இப்பொழுது கேள்வி எழுகிறது:
அத்தேவர்களினூடாக மனித உலகம் உருவாக்கப்பட்டதா? இல்லை. பரமாத்மா கூறுகிறார்: நான் பிரவேசிக்கின்ற, ஒரு சாதாரண சரீரத்தை உடையவருக்கு பிரம்மா என்னும் பெயரைக் கொடுக்கிறேன். அவர் சூட்சும பிரம்மா ஆவார், ஆகவே இரு பிரம்மாக்கள் உள்ளனர். இவர் பிரம்மா எனப் பெயரிடப்பட்டுள்ளார், ஏனெனில் கடவுள் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறார் எனக் கூறப்படுகிறது. நான் பிரம்மாவின் கமல வாயினூடாகப் பிராமணர்களைப் படைக்கிறேன். ஆதிதேவர் என அழைக்கப்படுபவரினூடாக மனித குலம் உருவாக்கப்படுகிறது. ஆகவே, இவரே மனித குலத்தின் முதல் பாபா ஆவார். பின்னர் விரிவாக்கம் இடம்பெறுகிறது. நீங்கள் இப்பொழுது அரசர்க்கெல்லாம் அரசர் ஆக்கப்படுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்கள் சரீரத்திலிருந்தும் உங்கள் சரீர உறவினர்கள் அனைவரிலிருந்தும் உங்களைத் துண்டித்துக் கொள்ளும் பொழுது மாத்திரமே நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். பாபா,
நான் உங்களுக்கு மாத்திரமே உரியவன்.
நீங்கள் இளவரசர்கள் ஆகுகிறீர்கள் என்னும் நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. நீங்கள் நான்கு கரங்களைக் கொண்டவரின் காட்சிகளைக் காண்கிறீர்கள். அது ஒரு தம்பதியின் உருவம் ஆகும்.
அப்படங்களில் பிரம்மாவை
10 முதல் 20 கரங்களுடன் சித்தரித்துள்ளார்கள். காளியும் பல கரங்களுடன் காட்டப்பட்டுள்ளார். அத்தனை கரங்களுடன் எவரும் இருக்க முடியாது.
அந்த ஆபரணங்கள் அனைத்தும் ஆயுதங்கள் ஆகும். நீங்கள் இல்லறப் பாதைக்கு உரியவர்கள். பிரம்மா பல கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். அந்தக் கரங்கள் பிரம்மாவின் குழந்தைகளைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அவர்கள் எண்ணுகிறார்கள். உண்மையில்,
காளி போன்ற எவரும் இல்லை.
கிருஷ்ணர் கருநீலநிறமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதைப் போன்று,
காளியின் உருவமும் கருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜெகதாம்பாவும் ஒரு பிராமணரே.
நாங்கள் எங்களைக் கடவுள் என்றோ அல்லது அவதாரம் என்றோ அழைக்க முடியாது. பாபா கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உண்மையில்,
சிவகுமார்களாகிய நீங்கள் அனைவரும் சாலிகிராம்கள். பின்னர், நீங்கள் உங்களுடைய மனித வடிவத்தில் பிரவேசித்த பின்னர், பிரம்மகுமார்களும் குமாரிகளும் ஆகுகிறீர்கள்.
பிரம்ம குமார்களும் குமாரிகளும் பின்னர் விஷ்ணு குமார்களும் குமாரிகளும் ஆகுகிறார்கள்.
தந்தை உங்களைப் படைக்கிறார், ஆகவே அவர் உங்களைப் பராமரிக்கவும் வேண்டும்.
நீங்களே அத்தகைய அன்பான தந்தையின் வாரிசுகள் ஆவீர்கள்.
நீங்கள் இப்பொழுது அவருடன் ஒரு பேரத்தைச் செய்கிறீர்கள். இவர் இடையிலுள்ள ஒரு முகவர் ஆவார். பாபாவே புனித அரசாங்கம் ஆவார். இந்த அரசாங்கத்தைப் பாண்டவ அரசாங்கம் ஆக்குவதற்கு அவர் வந்துள்ளார்.
இதுவே எங்களுடைய அதியுயர்ந்த சேவை ஆகும். பாபாவின் உதவியுடன், நாங்கள் இந்த அரசாங்கத்தின் மக்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகிறோம்.
ஆகவே நாங்கள் அவர்களுடைய சேவகர்கள்.
நாங்கள் உலக சேவகர்கள். முழு உலகத்துக்கும் சேவை செய்வதற்கு, நாங்கள் பாபாவுடன் வந்துள்ளோம்.
நாங்கள் எதனையும் எடுத்துக் கொள்வதில்லை.
அந்த அழியக்கூடிய செல்வம், மாளிகைகள் போன்ற அனைத்தின் மூலமும் நாங்கள் என்ன செய்வோம்?
எங்களுக்குச் சேவைக்காக மூன்றடி நிலமே வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உண்மையான ஞானத்தைப் பெறுகிறீர்கள். சமயநூல்களில் எழுதப்பட்டுள்ள ஞானத்தை,
ஞானம் என அழைக்க முடியாது.
அது பக்தியாகும்.
ஞானம் என்றால் சற்கதி ஆகும்.
சற்கதி என்றால் முக்தியும் ஜீவன்முக்தியும் ஆகும். நீங்கள் முக்தியைப் பெறும் வரையில், உங்களால் ஜீவன்முக்தியைப் பெற முடியாது. நாங்கள் ஜீவன்முக்தி அடைந்தவர்கள் ஆகுகிறோம், ஆனால் ஏனையோர் முக்தியையே பெறுகிறார்கள். இதனாலேயே கூறப்படுகிறது: நீங்கள் மாத்திரமே உங்கள் வழிமுறைகளை அறிவீர்கள்.
இது கடவுள் சர்வவியாபி அல்ல என்பதை அப்பொழுது நிரூபிக்கிறது. அவர் உங்களுக்குக் கூறுகிறார்:
நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து,
அனைவருக்கும் எனது வழிகாட்டல்களைக் கொடுப்பதனால்,
சற்கதியை அருள்கிறேன்.
சற்கதியுடன், முக்தியும் உள்ளடக்கப்படுகிறது. புதிய உலகில், மிகச்சிலரே வசிக்கிறார்கள். முன்னர் நாங்கள் கூறுவதுண்டு;:
இவ்வுலகில், சூரியனும்,
சந்திரனும், ஒன்பது இலட்சம் நட்சத்திரங்களும் உள்ளார்கள். சூரியன் இந்நேரத்தில் வந்துள்ளார்,
அவர் உலகில் இருக்கிறார். உலகில் சனத்தொகை மிகவும் அதிகளவில் விரிவடையும் போதே, சிவன் இவ்வுலகிற்குள் பிரவேசிக்கிறார். இவ்வுலகில் மம்மாவும்,
பாபாவும், அதிர்ஷ்ட நட்சத்திரங்களும் உள்ளார்கள்.
சத்தியயுகத்தில் நிச்சயமாக மிகச்சிறிய சனத்தொகையே இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வும் கூறுகிறது. பின்னர்,
விரிவாக்கம் இடம்பெறுகிறது. இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் தூய்மையாகும் அளவிற்கேற்பவே, இந்த ஞானத்தை உங்களால் கிரகிக்க முடியும். தூய்மையின்மை இருக்கும்பொழுது, நீங்கள் குறைவாகவே கிரகிப்பீர்கள். தூய்மையே முதன்மையானது.
இப்பொழுதும் உங்களுக்குள் கோபம் என்னும் தீய ஆவி இருப்பதாலேயே நீங்கள் சிலசமயங்களில் மாயையினால் தோற்கடிக்கப்படுகிறீர்கள். இதுவும் ஒரு யுத்தம் ஆகும். உங்கள் முழுக்கரத்தையும் நீங்கள் அதிபதியின் கரத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும். தவறினால்,
மாயையும் மிகவும் சக்திவாய்ந்தவள் ஆகுகிறாள்.
தங்கள் கரத்தை ஒரேயொருவரின் கரங்களுடன் இணைத்துக் கொள்பவர்களின் மீதே ஞானம் பொழியப்படுகிறது. பாபா தனது பாகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராக நடித்து,
அனைத்தையும் அவதானிக்கிறார். நீங்கள் தாயையும்,
தந்தையையும், அதிர்ஷ்ட நட்சத்திரங்களாகிய அவர்களுடைய விசேட குழந்தைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள இயலுகிறது.
நீங்கள் ஒருபொழுதும் முரளியைக் கற்பதை நிறுத்தக்கூடாது என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
இரவு வகுப்பு- 23/12/1958
அனைவரும் பல ஆன்மீக இரத்தினங்களைப் பெறுகின்ற, எத்தனை ஆன்மீகத் தொழிற்சாலைகளை (நிலையங்கள்) சர்வசக்திவான் பாபா கொண்டிருக்கிறார் எனப் பாருங்கள்.
பாபாவே தொழிற்சாலைகள் அனைத்தினதும் அதிபதி ஆவார். அவருடைய முகாமையாளர்கள் அவற்றைப் பராமரித்து, அவை நன்றாக நடைபெறுகின்றனவா என்பதை உறுதி செய்கிறார்கள். நீங்கள் அவற்றைக் கடைகள் அல்லது தங்கும் விடுதிகள் என அழைத்தாலும், அவை பிராமண குடும்பத்தின் ஒரு பாகம் ஆகும். இக்கல்வியினூடாக, நீங்கள் உங்களுடைய வாழ்வை உருவாக்க வேண்டும். இங்கே,
ஆன்மீகம், பௌதீகம் இரண்டும் ஒன்றாக உள்ளன, இரண்டுமே எல்லையற்றவை ஆகும்.
அந்த ஆன்மீக,
பௌதீக ஞானம் இரண்டும் எல்லைக்குட்பட்டவை. சமயநூல்களிலிருந்து குருமார்கள் கொடுக்கின்ற ஆன்மீக ஞானமும் எல்லைக்குட்பட்டதாகும். நாங்கள் ஒரு மனிதரைக் குருவாகக் கருதுவதில்லை.
எங்களுடையவர் இந்தவொரு சரீரத்தில் வருகின்ற,
ஒரேயொரு சற்குரு.
நீங்கள் அவரைச் சதா நினைவு செய்யும்பொழுது மாத்திரமே,
உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் அந்தப் பாட்டனாரிடமிருந்து செல்வத்தைப் பெறுகிறீர்கள், ஆகவே நீங்கள் அவரை நினைவு செய்ய வேண்டும்.
ஒருபொழுதும் பாவச்செயல்கள் ஆகுகின்ற அத்தகைய செயல்களைச் செய்யாதீர்கள். சத்தியயுகத்தில், உங்கள் செயல்கள் அனைத்தும் நடுநிலையானவை, ஆனால் இவ்வுலகிலோ உங்கள் செயல்கள் பாவகரமானவை ஆகுகின்றன, ஏனெனில் அனைவரிலும் ஐந்து விகாரங்கள் என்னும் தீய ஆவிகள் உள்ளன. இங்கே,
நாங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறோம்.
பாபா கூறுகிறார்:
விகாரங்களைத் தானம் செய்யுங்கள். எவ்வாறாயினும், பின்னர் நீங்கள் அவற்றைத் திரும்பவும் எடுத்தால், நீங்கள் உங்களுக்கே பேரிழப்பை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் இரகசியமாக ஒரு பாவத்தைச் செய்ய முடியும் எனவும்,
அதனை எவரும் அறியார் எனவும் எண்ணாதீர்கள். தர்மராஜ் அனைத்தையும் அறிந்துகொள்கிறார். இந்நேரத்திலேயே பாபா அந்தர்யாமி (ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ள இரகசியங்களை அறிந்தவர்)
என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு குழந்தையின் பதிவேட்டிலும் என்ன உள்ளது என்பதை அவர் அறிவார்.
குழந்தைகளாகிய எங்கள் அனைவரின் உள்ளேயும் என்ன உள்ளது என்பதை அவர் அறிவார். ஆகவே,
நீங்கள் எதனையும் மறைக்கக்கூடாது. சிலர் ஒரு கடிதத்தையும் எழுதிக் கூறுகிறார்கள்: பாபா, நான் ஒரு தவறைச் செய்தேன், தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்! தர்மராஜின் சபையில் என்னைத் தண்டிக்காதீர்கள்! அது அவர்கள் சிவபாபாவுக்கு நேரடியாக எழுதுவதைப் போன்றுள்ளது. அவர்கள் கடிதத்தை பாபாவின் பெயரில் முகவரியிட்டு,
இந்த அஞ்சல் பெட்டியில் இடுகிறார்கள்.
உங்கள் தவறை ஒத்துக் கொள்வதனால்,
உங்களுக்கான தண்டனை அரைவாசியாகக் குறைவடைகின்றது. இங்கே, நீங்கள் அதிகளவு தூய்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இங்கேயே நீங்கள் முழுமையாகத் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் ஆகவேண்டும். இங்கே ஒத்திகைகள் நடைபெறுகின்றன, அங்கே நீங்கள் உங்கள் நடைமுறைரீதியில் பாகங்களை நடிப்பீர்கள்.
நீங்கள் பாவம் எதனையாவது செய்கிறீர்களா என நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும். பல எண்ணங்கள் வந்தாலும்,
மாயை உங்களைப் பெருமளவுக்குச் சோதித்தாலும்,
நீங்கள் அச்சமடையக்கூடாது. பெருமளவு இழப்பு இருக்கக்கூடும்; உங்கள் வியாபாரம் நன்றாக நடக்காதிருக்கக்கூடும்; ஒருவேளை நீங்கள் ஒரு காலை முறித்துக் கொள்வீர்கள் அல்லது நோய்வாய்ப்படுவீர்கள். எப்படியிருப்பினும், எது நடப்பினும் பரவாயில்லை, நீங்கள் பாபாவின் கரத்தை விட்டு நீங்கிச் செல்லக்கூடாது. பலவிதமான பரீட்சைகள் வரும்.
அவை அனைத்தும் முதலில் பாபாவுக்கே வருகின்றன, அதனால் பாபாவினால் உங்களை எச்சரிக்கை செய்ய இயலும். நீங்கள் உறுதியானவர்களாக ஆகவேண்டும்.
பாரதத்தைப் போன்று,
அத்தனை விடுமுறை நாட்களை வேறு எங்கும் மக்கள் பெறுவதில்லை. எவ்வாறாயினும், இங்கே, நாங்கள் ஒரு கணப்பொழுது விடுமுறையையேனும் பெறுவதில்லை,
ஏனெனில் பாபா கூறுகிறார்: நீங்கள் ஒவ்வொரு மூச்சிலும் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மூச்சும் விலைமதிப்பிட முடியாதது. ஆகவே உங்களால் எவ்வாறு அதனை வீணாக்க முடியும்? அதனை வீணாக்குபவர்கள் தங்கள் அந்தஸ்தை அழிக்கிறார்கள். இந்தப் பிறவியின் ஒவ்வொரு மூச்சும் அதிபெறுமதி வாய்ந்ததாகும். இரவுபகலாக, பாபாவின் சேவையில் ஈடுபட்டிருங்கள். நீங்கள் சர்வசக்திவான் பாபாவையா அல்லது அவருடைய இரதத்தையா நேசிக்கிறீர்கள்? அல்லது,
அவர்கள் இருவரையும் நீங்கள் நேசிக்கிறீர்களா? நிச்சயமாக, நீங்கள் அவர்கள் இருவரையும் நேசிக்க வேண்டும்.
பாபா இந்த இரதத்தில் இருக்கிறார் என்பது அப்பொழுது உங்கள் புத்தியில் நிலைத்திருக்கும் அவரை
(சிவபாபாவை) நீங்கள் நேசிப்பதாலேயே இவரையும்
(பிரம்மபாபாவை) நீங்கள் நேசிக்கின்றீர்கள். அவர்கள் சிவாலயங்களில் ஒரு கல்லினாலான எருதை வைத்திருக்கிறார்கள், அவர்கள் அதனை வழிபடுகின்றார்கள். இவை மிகவும் ஆழமான விடயங்கள்,
ஆகவே நீங்கள் தினமும் இக்கருத்துக்களைச் செவிமடுக்காது விட்டால்,
அவற்றைத் தவற விடுகிறீர்கள். தினமும் செவிமடுப்பவர்கள் ஏனையோருக்குக் கருத்துக்களைக் கொடுப்பதற்குத் தவற மாட்டார்கள்.
அவர்கள் சிறந்த பண்புகளைக் கொண்டிருப்பார்கள். பாபாவின் நினைவைக் கொண்டிருப்பதில் அதிகளவு இலாபம் உள்ளது.
நீங்கள் பாபாவின் ஞானத்தையும் நினைவு செய்ய வேண்டும்.
ஞானத்தில் இலாபம் உள்ளது, யோகத்திலும் இலாபம் உள்ளது.
பாபாவை நினைவு செய்வதில் அதிகளவு இலாபம் உள்ளது,
ஏனெனில் இதனூடாகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், இரவு வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- ஒவ்வொரு மூச்சிலும் தந்தையை நினைவு செய்யுங்கள்; ஒரு மூச்சையும் வீணாக்காதீர்கள். ஒரு பாவம் ஆகும்வகையில் அத்தகைய செயல் எதனையும் ஒருபொழுதும் செய்யாதீர்கள்.
- அதிபதியின் கரத்தில் உங்கள் கரத்தை வைத்து, முற்றிலும் தூய்மையானவர் ஆகுங்கள். ஒருபொழுதும் கோபத்தின் செல்வாக்குக்கு உட்படவோ அல்லது மாயையினால் தோற்டிக்கப்படவோ வேண்டாம். மிகவும் உறுதியானவர்கள் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சக்தி
வாய்ந்த ஸ்திதியில்
இருந்து ஒரு
விடயம் வீணானதா
அல்லது சக்தி
வாய்ந்ததா என
தீர்மானிக்கக் கூடிய
ஒரு நினைவு
சொரூபமாகுவீர்களாக.
நினைவு சொரூபமாக ஆகுவதே இந்த ஞானத்தின் சாராம்சமாகும். எந்தவொரு வேலையினையும்
செய்யும் முன்பாக இந்த ஆசீர்வாதத்துடன் சக்தி வாய்ந்த ஸ்திதியில் அமர்ந்திருந்து
அந்த வேலை வீணானதா அல்லது சக்தி வாய்ந்ததா என தீர்மானித்த
பின்னர் அதனைச் செயலில் கொண்டு வாருங்கள். அச் செயலினைச் செய்த பின்னர் அச் செயலின் ஆரம்பம் மத்தி இறுதி இவை மூன்றும் சக்தி வாய்ந்ததாக இருந்ததா என பரிசோதித்துப் பாருங்கள். சக்தி வாய்ந்த ஒரு ஸ்திதியின் இருப்பிடம் என்பது ஒரு அன்னத்தின் இருப்பிடமாகும். அதாவது தீர்மானிக்கும் சக்தி அதன் விசேட சக்தியாகும். தீர்மானிக்கும்
சக்தியுடன் உங்கள் ஸ்திதியானது தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும். இதுவே மரியாதைப் புருஷோத்தம் அதாவது அதிமேலான கோட்பாடுகளை பின்பற்றுகின்ற அதிமேலானவர்
எனப்படுகின்றது.
சுலோகம்:
மௌன சக்தியே எவ்விதமான மன வியாதியையும்
துரத்துவதற்கான வழியாகும்.
---ஓம் சாந்தி---
0 Comments