03-02-2023 காலைமுரளி ஓம்சாந்தி
பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சாதாரண மனிதரிலிருந்து, நாராயணன் ஆகுவதற்கு, சம்பூர்ணமான பிராமணன் ஆகுங்கள். உண்மையான பிராமணர் ஒருவருக்கு பகைவர்கள் எவருமோ அல்லது அவருக்குள் எந்த விகாரங்களுமோ இருக்க மாட்டாது.
கேள்வி:
தந்தையின் மரியாதைக்குரிய
குழந்தைகள் யார்? விவேகமானவர்கள் யார்?
பதில்:
யக்ஞத்தின் ஒவ்வொரு பணியையும் பொறுப்புணர்ச்சியுடன் செய்கின்றவர்கள்
தந்தையின் மரியாதைக்குரியவர் ஆகுகின்றார்கள். அவர்கள் என்றுமே தவறுகள் செய்வதில்லை.
தானும் தூய்மையாக இருந்து, மற்றவர்களையும் தூய்மையாக்குவதை
தமது பொறுப்பெனக்
கருதுவதால், அவர்கள் இச் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களது நடத்தை மிகவும் இராஜரீகமானது. அவர்கள் ஒருபோதும் தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்த மாட்டார்கள்.
அவர்கள் சகலதுறையிலும்
வல்லவர்கள். முழுமையாகச்
சித்தியடைய முயற்சிப்பவர்களே
விவேகமானவர்கள். அவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்க மாட்டார்கள். எவ்விதமான தவறான செயல்களையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
பாடல்: இன்றில்லா விட்டால், நாளையேனும் இந்த முகில்கள் கலைந்து விடும்.
ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்களைத் தருபவர் யார்? எல்லையற்ற தந்தையே, அவரையிட்டு தந்தையும் குழந்தையும் என்ற உறவுமுறையில் குழந்தைகள் அவ்வளவு நம்பிக்கை வைத்து நினைவு செய்வதில்லை.
தந்தை கூறுகிறார்:
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும்.
அவர் யாரை தனது குழந்தைகள் என்று அழைக்கிறார்?
தந்தை வாய் வழித்தோன்றல்களான பிராமணர்களையே தன் குழந்தைகள் என்று அழைக்கிறார்.
ஏனெனில், அவர்கள் அவரது குழந்தைகளாகி உள்ளார்கள். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார்: புதிய உலகம் படைக்கப்பட வேண்டியுள்ள போது,
பழைய உலகின் ஆத்மாக்கள் வீடு திரும்ப வேண்டும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது தந்தையையும் அவரது வீட்டையும் தெரியும். சிலர் நிச்சயமாகத் தந்தையை மிக நன்றாக நினைவு செய்கிறார்கள்;, அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் சரீர உணர்வினால்,
தந்தையை நினைவு செய்வதில்லை. அவர்கள் தூய்மையாக இருப்பதில்லை.
பிராமணர்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய கடவுளின் குழந்தைகள்.
படைப்பவராகிய தந்தை நினைவுகூரப்பட்டுள்ளார். குழந்தைகள் பிரம்மாவின் கமல வாயால் படைக்கப்படுகிறார்கள். நீங்கள் உண்மையாகவே, பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்களான கடவுளின் குழந்தைகள் ஆகியிருப்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தூய்மையாக இருப்பவர்களே பிராமணர்கள் எனப்படுகிறார்கள். எல்லாமே தூய்மையிலேயே தங்கியிருக்கிறது. இது தூய்மையற்ற,
பாவ உலகம் எனப்படுகிறது. தூய்மையற்ற மனிதர்களால் தூய்மையாக இருப்பது என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது.
கலியுகம் தூய்மையற்ற உலகமும், சத்திய யுகம் தூய உலகமும் ஆகும்.
இது யாருக்கும் தெரியாது. சத்திய,
திரேதா யுகங்களில் தூய்மையற்றவர்கள் இருப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். அவர்கள் சீதை கடத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள். இது தூய உலகத்தை அவதூறு செய்வதாகும். அவர்களின் பார்வை எவ்வாறோ அவ்வாறே அவர்கள் காணும் உலகமும் இருக்கும். தூய உலகிலும் தூய்மையற்றவர்கள் இருப்பார்களாயின், தந்தை தூய்மையற்ற உலகை படைத்தாரா? தந்தை ஒரு தூய உலகையே ஸ்தாபிக்கின்றார். ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து இந்த உலகத்தை,
விசேடமாகப் பாரதத்தைத் தூய்மையாக்குங்கள்." என்று நினைவுகூரப்படுகிறது. தூய்மையாக இருப்பவர்களுக்கே பிரம்ம குமார், பிரம்ம குமாரிகள் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது. தூய்மையற்றவர்களை பிராமணர்கள் என்றோ பிரம்ம குமார், பிரம்ம குமாரிகள் என்றோ அழைக்க முடியாது.
அந்தப் பிராமணர்கள் விகாரத்தால் உருவாக்கப்பட்டவர்கள். நீங்களோ வாய்வழித் தோன்றியவர்கள். ‘பிரம்மாவின் படைப்பு விகாரத்தினூடாக இடம்பெறுகிறது’ என்று கூறப்படுவதில்லை. அவர்கள் தூய்மையற்றவர்கள். இப்போது நீங்கள் தூய உலகத்திற்கு அதிபதிகளாகுவதற்காக கடவுளின் குழந்தைகளாகி இருக்கிறீர்கள். பிராமணர்கள் என்றோ பிரம்ம குமார்,
குமாரிகள் என்றோ அழைக்கப்பட்ட பின்னரும் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினால் அல்லது விகாரத்திலே ஈடுபட்டால் பின்னர், நீங்கள் ஒரு பிரம்ம குமார் அல்லது பிரம்ம குமாரி அல்ல. பிராமணர்கள் ஒருபோதும் விகாரத்திலே ஈடுபடுவதில்லை. விகாரத்தில் ஈடுபடுகின்றவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உங்கள் இராச்சிய பாக்கியத்தை கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக கடவுளின் குழந்தைகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் உங்கள் இராச்சிய ஆஸ்தியைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.
சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுகின்ற இலக்கைக் கொண்டிருங்கள். காமமே முதல் தரமான விகாரம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும்.
கோபம் இரண்டாவதாகும். கோபம் போன்ற தீய ஆவிகள் இன்னும் இருக்குமானால், முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்ளும் தகுதியுடையவர்கள் ஆக மாட்டீர்கள். அப்பொழுது காமம், கோபம் ஆகிய தீய ஆவிகளின் ஆதிக்கத்திற்கு நீங்கள் உட்பட்டிருக்கிறீர்கள் என்று கூறப்படும். நீங்கள் அவற்றின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்யாமல் இருப்பதால் இராவணனுடைய ஆதிக்கத்திற்கு உட்படுகிறீர்கள். கோபம் உள்ளவர்கள் அல்லது காமம் உடையவர்கள் நாராயணனின் அந்தஸ்தைப் பெற முடியாது.
இங்கே சம்பூரணமான பிராமணர்களே தேவைப்படுகிறார்கள். ‘சரீர உணர்வே முதன்மையான தீய ஆவி’ என்று தந்தை விளங்கப்படுத்துகிறார்;. நீங்கள் ஆத்ம உணர்விலிருந்து, தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்வீர்களானால், தந்தையும் உதவி செய்கின்றார். நீங்கள் அவரை நினைவு செய்யும் அளவிற்கேற்ப,
அவருடைய உதவியைப் பெறுகின்றீர்கள். விகாரம் என்ற பகைவன் இல்லாதவரே ஓர் உண்மையான பிராமணன் ஆவார். சரீர உணர்வு என்ற பிரதானமான விகாரத்தினாலேயே, ஏனைய பகைவர்களும் வருகின்றன. இந்த பாரதம் சிவாலயமாக இருந்தது. அந்த நேரத்தில் துன்பம் என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. இருந்தாலும் மனிதர்களுக்கு இது தெரியாது. ‘மாயையும் எக்காலமும் உள்ளாள்,
கடவுளும் எக்காலத்திலும் உள்ளார்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். ஓ! ஆனால்,
கடவுள் அவருக்குரிய நேரத்தில் வருகிறார்.
மாயை அவளுக்குரிய நேரத்தில் வருகிறாள்.
அரைக் கல்பத்திற்கு கடவுளின் இராச்சியமும்,
அரைக்கல்பத்திற்கு மாயையின் இராச்சியமும் நிலவுகிறது.
சமயநூல்களில் இந்த விளக்கம் இல்லை.
அது பக்தி மார்க்கமாகும். தந்தை ஒருவரே ஞானக்கடலாவார். அவர் தூய்மையாக்குபவர் என்றும் அழைக்கப்படுகிறார். தந்தையை நினைவு செய்யாதவர்கள் நிச்சயமாகத் தூய்மையற்ற செயல்களைத் தொடர்ந்து செய்கிறார்கள். அவர்களைப் பிராமணர்கள் என்று கூற முடியாது. இந்த விடயங்கள் மிகவும் சூட்சுமமானவை. பாட்டனாராகிய சிவபாபாவை நீங்கள் நினைவு செய்யவில்லை என்றால் எப்படி ஆஸ்தியொன்றைப் பெற்றுக் கொள்வீர்கள்? அவ்வாறானவர்கள் தொடர்ந்தும் இப் பழைய உலகின்,
பழைய நண்பர்கள்,
உறவினர்களை நினைவு செய்கின்றார்கள். நீங்கள் தந்தையை மிக நன்றாக நினைவு செய்தால், அவரும் உதவி செய்வார்.
முரளி வாசிக்கும் போது, சில வேளைகளில் நீங்கள் குழப்பமடைந்தால், சிவபாபா வந்து முரளி கூறுவார். சிவபாபா தானே வந்து உதவினார் என்று குழந்தைகள் உணர்வதும் இல்லை. தாம் நன்றாக முரளி வாசித்தோம் என்று நினைக்கிறார்கள். ஓ!
இன்றைக்கு நீங்கள் நன்றாக முரளி வாசித்தீர்கள், ஏன் உங்களால் நேற்று அதனைச் செய்ய முடியவில்லை? சிவபாபாவா பேசுகின்றார் அல்லது பிரம்ம பாபாவா பேசுகின்றார் என்று கூட உங்களால் கூற முடியாது.
சிவபாபா கூறுகிறார்:
குழந்தைகளே, நீங்கள் எனது இறை குழந்தைகள். என்னை நினைவு செய்யுங்கள்!
வேறு யாராலும் இப்படிக் கூற முடியாது. நான் மட்டுமே இவருக்குள்ளே பிரவேசித்து இப்படிக் கூறுகிறேன். நான் ஞானக்கடல் ஆவேன்.
நீங்கள் ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் ஆகுகின்றீர்கள். தன்னுடன் யோகம் செய்கின்றவர்களுக்குத் தந்தை உதவி செய்கிறார்.
சரீர உணர்வுடையவர்கள் அவரை நினைவு செய்ய மாட்டார்கள்.
நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். 'நான் நன்றாக முரளி வாசித்தேன்." என்ற அகங்காரம்; இருக்கக் கூடாது. இல்லை.
சிவபாபாவே வந்து முரளியைக் கூறினார் என்று நீங்கள் உணர வேண்டும்.
மீண்டும், மீண்டும் சிவபாபாவையே நீங்கள் நினைவு செய்ய வேண்டும். பல குழந்தைகள் முழுமையாக பாபாவை நினைவு செய்யாததாலேயே அவர்களது கர்ம வேதனையும் முடிவதில்லை. அவர்கள் நோய்வாய்ப்படுவதோடு பாவங்களும் அழிக்கப்படுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையோடு யோகம் செய்ய வேண்டும். நாம் இராஜயோகிகள். எங்கள் தந்தையிடம் இருந்து எமது ஆஸ்தியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் சாதாரணமான ஒரு மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவோம்.
சூரிய வம்சத்தில் ஒருவராகுவதற்கு போதியளவுக்கு கற்கின்றீர்களா என்று இதயபூர்வமாக புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகிய பின்னர், இராச்சியத்தைப் பெறுவதாக இருக்கக் கூடாது. தந்தையை நினைவு செய்வதன் மூலம் அவரது உதவி உங்களுக்குக் கிடைக்கிறது. இல்லாவிட்டால், ஏதோ ஒரு வகையான பாவம் செய்யப்பட்டு பாதிப்புள்ளது. அவர்கள் அளவற்ற துன்பம் விளைவிக்கிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணரும் சந்தோஷத்தை அருள்பவர்கள்.
விவேகமான குழந்தைகள் முழுமையாகச் சித்தியடைய முயற்சிப்பார்கள். கிடைப்பது போதும் என்று நீங்கள் திருப்தியடையக் கூடாது. நீங்கள் ஒவ்வொரு விடயத்திலும் சகலதுறையிலும் முயற்சி செய்ய வேண்டும்.
'இது அவருடைய வேலை என்பதால் நான் ஏன் செய்ய வேண்டும்"
என்று கூட நினைக்கக் கூடாது.
பாபா சகலதுறையிலும் பணியாற்றுகிறார். குழந்தைகளின் நடத்தை தவறாயின்,
அவர்கள் பாபாவின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்கள். தந்தை கூறுகிறார்: எனக்குரியவர்களாக ஆகிய பின்,
தவறான செயல்களைச் செய்வீர்களானால், உங்கள் அந்தஸ்து அழிந்து விடும். பிரம்மபாபாவே உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார் என்று எண்ணாதீர்கள். சிவபாபாவையே நீங்கள் நினைவு செய்ய வேண்டும்.
உலகத்தைத் தூய்மையாக்கும் சுமை உங்கள் தலையிலுள்ளது என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாமே பொறுப்பாளிகள். பாரதத்தைத் தூய்மையாக்குவது மிகப்பெரியதொரு பொறுப்பாகும்.
யக்ஞத்தின் ஒவ்வொரு வேலையையும் பொறுப்புணர்ச்சியுடன் செய்யுங்கள்.
எந்தத் தவறும் செய்யப்படாத போது,
பாபா உங்களுக்கு மதிப்பளிப்பார். இல்லாவிட்டால், நீங்கள் சிறையிலே கூட ஒருபோதும் அனுபவித்திருக்காத அளவு தண்டனையை தர்மராஜர் தருவார். அதனால் தந்தை கூறுகிறார்:
விநாசம் ஏற்படும் முன்னர், யோகத்தால் உங்கள் பாவங்களையெல்லாம் அழித்துக் கொள்ளுங்கள்.
தவறினால், பல பிறவிப் பாவங்களுக்கு தர்மராஜ் புரியில் தண்டனை இருக்கும்.
அதனால் தவறுகள் செய்யாதீர்கள்! இது உங்கள் இறுதிப் பிறவி. அதன் பின்னர், நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள்.
அடி வாங்கிய பின், பிரஜை என்னும் அந்தஸ்தொன்றைப் பெற்றுக் கொள்வது என்பது முயற்சி எடுப்பது அல்ல.
அந்த நேரத்தில் நீங்கள் விரக்திக் கூக் குரல் இட நேரிடும்.
தந்தை எவ்வாறு மீண்டும், மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்தினார் என்ற காட்சிகளை அவர் தருவார்.
ஒரு பிராமணன் ஆகுவது என்றால் உங்கள் மாமியார் வீட்டுக்குப் போவது போலல்ல! நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகியிருக்கிறீர்கள் என்பதால்,
விகாரத்தில் ஈடுபடக் கூடாது. இதிலே காமமே கொடிய எதிரியாகும். விகாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுகின்றவர்களை பிராமணர்கள் என்று அழைக்க முடியாது.
மாயை உங்களை அதிகளவு வீழ்ச்சி அடையச் செய்வாள்,
ஆனாலும் பௌதீகமான உறுப்புகளால் நீங்கள் தவறான செயல்களைச் செய்யக் கூடாது.
அன்னியோன்னியமாகப் பழகுவதனால் வரும் இலேசானதொரு போதையும் மாயையின் போதையே ஆகும்.
பாபா விளங்கப்படுத்தியிருக்கிறார்: அதன் மூலமும் உங்கள் சுமை அதிகரிக்கும்.
நீங்கள் கலப்படமானவர் ஆகி விட்டீர்கள்.
கடவுளின் குழந்தைகள் தமக்குள்ளே காமம் அல்லது கோபம் என்ற தீய ஆவிகள் உடையவர்களாக இருக்க மாட்டார்கள்.
அவை அசுரத்தனமான சுபாவங்கள். பலரும் கடவுளுக்குரியவர்களாக ஆகி விட்டு, அதன் பின் மாயைக்கு உரியவர்களாக ஆகி விடுகிறார்கள்; அவர்கள் சரீர உணர்வுடையவர்களாக ஆகுகின்றார்கள். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்; அப்போதே அவர் பொறுப்பேற்பார். பிரம்மாவின் வழிகாட்டல்களும் நினைவுகூரப்பட்டுள்ளன. அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றினாலும், தந்தை பொறுப்புடையவர் ஆகுகின்றார். அதனால்,
உங்களிடம் இருந்து நீங்கள் பொறுப்பை அகற்றிக் கொள்ள வேண்டும். பாபா,
தாதா இருவருடைய வழிகாட்டல்களும் மிகவும் பிரசித்தமானவை. தாயின் வழிகாட்டல்களையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
ஏனெனில், தாயே குரு ஆகுகின்றார்.
அந்தத் தந்தையும் தாயும் வேறுபட்டவர்கள். இந்த நேரத்திலேயே ஒரு தாய் குரு ஆக்கப்படுகிறார். நீங்கள் சிவாலயத்திற்காக முயற்சி எடுக்கிறீர்கள். சத்தியயுகம் சிவாலயம் எனப்படுகிறது. கடவுளின் மிகச் சரியான பெயர் சிவன் என்பதாகும். சிவ ஜெயந்தி நினைவுகூரப்படுகிறது. சிவன் நன்மை செய்பவர் எனப்படுகிறார்; அவர் ஒரு புள்ளியாவார். பரமாத்மாவான பரமதந்தையின் வடிவம் ஒரு நட்சத்திரமாகும். மக்கள் தங்க அல்லது வெள்ளி நட்சத்திரம் ஒன்றைத் தயாரித்து, அதனைத் திலகமாக இட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் அது மிகச் சரியானதும், சிறந்ததும் ஆகும். ஏனெனில்,
நெற்றியின் மத்தியில் ஒரு நட்சத்திரம் வசிக்கிறது. இருந்தாலும் அவர்களுக்கு ஞானம் இல்லை. சிலர் திரிசூல அடையாளத்தையும் இட்டுக் கொள்கிறார்கள். அது மூன்றாவது கண், முக்காலத்தையும் அறிந்து கொள்வது என்பனவற்றின் அடையாளமாகும்.
அதாவது, தெய்வீகக் காட்சி, தெய்வீக புத்தி என்பனவற்றின் அடையாளமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இவற்றின் ஞானம் உள்ளது. நீங்கள் விரும்பினால் ஒரு நட்சத்திரத்தை இட்டுக் கொள்ளலாம். நமது அடையாளம் வெண்ணிறமானதொரு நட்சத்திரமாகும். ஆத்மாவின் ரூபமும் நட்சத்திரம் போன்றதேயாகும். தந்தை இரகசியங்கள் எல்லாவற்றையும் விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களை எச்சரிக்கையும் செய்கிறார். தாங்கள் பாவச் செயல்கள் செய்ய மாட்டோம் என்று தந்தைக்கு சத்தியம் செய்திருப்பவர்களே பிரம்ம குமார்,
குமாரிகள் ஆவர்.
எவரது இதயத்திற்கும் நீங்கள் துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதை நீங்கள் நினைவு செய்யுங்கள்.
துன்பம் விளைவித்தால் நீங்கள் சிவபாபாவின் குழந்;தை அல்ல. சிவபாபா உங்களுக்குச் சந்தோஷம் தரவே வருகிறார்.
அங்கே ராஜாவும் ராணியும் எப்படியோ பிரஜைகளும் அப்படியானவர்களாகவே இருப்பார்கள்;. அனைவருமே ஒருவருக்கொருவர் சந்தோஷமே கொடுப்பார்கள். இங்கே எல்லோரும் அவலட்சணமாகி இருக்கிறார்கள். தொடர்ந்தும் காம வாளைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒருவருக்கொருவர் துன்பம் விளைவிக்கும் உலகம்.
சத்திய யுகம் ஒருவருக்கொருவர் சந்தோஷம் கொடுக்கும் உலகம்.
நீங்கள் கடவுளின் குழந்தைகளாகி இருக்கிறீர்கள் என்றும் அதனால்,
எவ்வித பாவமும் செய்வதில்லை என்றும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உங்களால் புண்ணியாத்மாக்களின் உலகத்தில் ஒரு அந்தஸ்தை அடைய முடியாது. ஒவ்வொருவரையும் அவர் உங்கள் குலத்திற்குரியவரா இல்லையா என்று நாடி பிடித்துப் பார்த்தே கூறி விட முடியும். ‘நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று கடவுள் கூறுவதாக நினைவுகூரப்பட்டுள்ளது’ என்று நாம் கூறுகிறோம்.
அசரீரியானவர் ஒருவரே கடவுள் எனப்படுகிறார். எனவே, அவர் எப்போது வந்து இராஜயோகம் கற்பிக்கிறார்? நிச்சயமாக, புதிய உலகம் ஸ்தாபிக்கப்படும் போதே ஆகும்.
புதிய உலகத்திற்காக,
நிச்சயமாக அவர் பழைய உலகத்திலேயே வர வேண்டியிருக்கும். கடவுள் பேசுகிறார்:
நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். எந்த இடத்திற்காக?
நரகத்திற்காகவா? தூய உலகத்திற்காகவே ஆகும்.
கடவுள் பேசுகிறார்:
நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். நான் எப்போது வந்தேன்,
நான் யார்,
மீண்டும் நான் எப்போது வருவேன் என்று அவர்களுக்குக் கூறுங்கள். அவர் நிச்சயமாக சத்தியயுகத்திற்காகவே கற்பிப்பார்.
இது மிக இலகுவானது. ஆனால்,
ஒருவருடைய பாக்கியத்தில் அது இல்லையென்றால் அவரது புத்தியில் நிலைத்திருப்பதில்லை. அது சூடான தோசைக்கல் ஒன்றிலே நீரூற்றுவது போலத்தான் இருக்கும்.
அப்படியானால், அந்த நபர் உங்கள் சூரிய வம்சத்திற்கோ அல்லது சந்திர வம்சத்திற்கோ உரியவர் அல்ல என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருந்தாலும், பல பிரஜைகள் உருவாக்கப்பட உள்ளனர். நல்லது.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து 5000 வருடங்களின் பின்னர் கண்டெடுக்கப்பட்டிருக்கும் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியை கோருகின்ற குழந்தைகளுக்கு உங்கள் தாயாகவும்,
தந்தையாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- ஒருபோதும் எவரது இதயத்தையும் காயப்படுத்தாதீர்கள். ஒருபோதும் பாவச் செயல்களைச் செய்ய மாட்டேன் என்றும் சதா தொடர்ச்சியாக சந்தோஷத்தை அருள்பவர் ஆகுவேன் என்றும் சத்தியம் செய்யுங்கள்.
- உங்கள் பௌதீகப் புலன்களால் எவ்விதமான தவறான செயல்களையும் செய்யாதீர்கள். பாபா, தாதா ஆகியோருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றி உங்கள் சுமையை அகற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
அமிர்தவேளையிலிருந்து
இரவுவரையில் கோட்பாடுகளுக்கு
ஏற்ப அனைத்தையும்
செய்வதன் மூலம்
அதிமேன்மையானவர் ஆகுவீர்களாக.
சங்கமயுகத்திற்கான கோட்பாடுகள்
உங்களை மேன்மையானவர்
ஆக்குகின்றது. ஆகையால், அத்தகைய ஆத்மாக்கள் ‘மரியாதா புருஷோத்தம்’ (அதிமேலான கோட்பாடுகளைப்
பின்பற்றி அதிமேலானவர்
ஆகுபவர்கள்) என அழைக்கப்படுகிறார்கள். தமோகுனி சூழலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இலகுவான வழி, கோட்பாடுகளை பின்பற்றுவதாகும்.
கோட்;பாடுகளின் கோட்டிற்குள் இருப்பவர்கள் சிரமப்படுவதில்
இருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு அடிக்காகவும், நீங்கள் பாப்தாதாவிடமிருந்து கோட்பாடுகளை
பெற்றிருக்கிறீர்கள். அவற்றிற்கு ஏற்ப நீங்கள் ஒவ்வொரு அடியையும் எடுக்கும் போது, நீங்கள் இயல்பாகவே மரியாதை புருஷோத்தம் ஆகுகிறீர்கள். அமிர்தவேளையிலிருந்து, இரவுவரையில் உங்கள் வாழ்க்கை அந்;த கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்கும் போது, நீங்கள் அதிமேன்மையான
மனிதர்கள் எனப்படுகிறீர்கள்.
அதாவது, சாதாரண மனிதர்கள் அனைவரின் மத்தியிலும்
அதிமேன்மையான மனிதர் ஆவீர்கள்.
சுலோகம்:
எந்தச் சூழலிற்கும்
தம்மை இசைவாக்கிக்
கொள்பவர்கள் அனைவரது ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கும்
தகுதியானவர்கள் ஆகுகின்றார்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments