31-01-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே
- நீங்கள் மிகவுமே
அதிர்ஷ்டசாலி குழந்தைகள்!
ஏனெனில், உங்களுக்கு
முன்னால் சுயம்
தந்தை இருக்கிறார்.
அவர் உங்களுக்கு
கூறிக் கொண்டிருக்கிறார்.
கேள்வி:
பக்தி மார்க்கத்தினுடைய
எந்தவொரு சம்ஸ்காரம் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் இருக்க முடியாது, ஏன்?
பதில்:
பக்தி மார்க்கத்தில்
எந்தவொரு தேவி அல்லது தேவதையிடம் சென்றாலும் கூட அவர்களிடம் ஏதாவது வேண்டிக் கொண்டே இருப்பார்கள்.
ஒருவரிடம் செல்வம் வேண்டு வார்கள், மற்றொருவரிடம்
புத்திர செல்வம் வேண்டுவார்கள். இந்த கேட்கக் (யாசித்தல்) கூடிய சம்ஸ்காரம் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் இருக்க முடியாது. ஏனெனில் தந்தை சங்கமத்தில் உங்களை காமதேனுவாக ஆக்கி உள்ளார். நீங்கள் தந்தைக்குச் சமானமாக அனைவரின் மனோ விருப்பங்களை
பூர்த்தி செய்யக் கூடியவர்கள் ஆவீர்கள். நீங்கள் சுயம் தங்களுக்காக எந்தவொரு விருப்பமும் கொண்டிருக்க முடியாது. பலன் அளிப்பவர் ஒரே ஒரு வள்ளலான தந்தை ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவரை நினைவு செய்வதால் அனைத்து பிராப்திகளும்
ஆகி விடுகிறது. எனவே கேட்கக் கூடிய சம்ஸ்காரம் முடிந்து போய் விடுகிறது.
பாடல்: ஓம் நமோ சிவாய …
ஓம் சாந்தி.
பகவான் கூறுகிறார்.
இப்பொழுது நல்ல முறையில் புரிந்து கொண்டு பிறகு புரிய வைப்பதற்காக இருப்பது ஒரே ஒரு கீதையின் சாஸ்திரம் மட்டுமே ஆகும். சாஸ்திரங் களையோ மனிதர்கள் அமைத்துள்ளார்கள். ஆனால் இராஜயோகத்தை மனிதர்கள் கற்பிப்ப தில்லை.
நான் தான்
5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் அருமையான பாரதவாசி குழந்தை களுக்கு இராஜயோகம் கற்பித்திருந்தேன் என்று தந்தை கூறுகிறார்.
அருமையான என்பதன் பொருளோ நீங்கள் தான் முழுமையாக
84 பிறவிகள் எடுத்து மீண்டும் வந்து சந்தித்துள்ளீர்கள் என்று புரிய வைத்துள்ளார்.
5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் நீங்கள் சந்தித்திருந்தீர்கள். மேலும் நீங்கள் வந்து பிரம்மா முகவம்சாவளி அதாவது பிராமணர் பிராமணி ஆகி இருந்தீர்கள். தந்தை நேரிடையாகப் பேசுகிறார்.
அந்த கீதை பாராயணம் செய்பவர்கள் இந்த விஷயங்களைப் பேச மாட்டார்கள்.
தந்தை நேரிடையாக வந்து புரிய வைத்து சென்றிருந்தார். பிறகு பக்தி மார்க்கத்திலிருந்து சாஸ்திரங்கள் அமைக்கிறார்கள். இப்பொழுது நாடகம் முடிவடைகிறது.
மீண்டும் தந்தை வந்துள்ளார். குழந்தைகளுக்குக் கூறுகிறார். எந்த குழந்தைகள்? குறிப்பாக நீங்கள் மற்றும் பொதுவாக முழு உலகம் என்று கூறுகிறார். நீங்கள் இப்பொழுது முன்னால் உள்ளீர்கள். உங்களுக்கு பாபா வந்து தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். இந்த இராஜ யோகத்தை உங்களுக்கு வேறு யாரும் கற்பிக்க முடியாது. தந்தை தான் முதலில் யோகம் கற்பித்திருந்தார். இப்பொழுது கற்பித்துக் கொண்டிருக்கிறார். அதன் மூலம் நீங்கள் மீண்டும் இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆவீர்கள். வேறு யாரும் சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்க முடியாது. நான் உங்களுடைய தந்தை.
மீண்டும் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க வந்துள்ளேன். நல்லது.
இப்பொழுது பாபா உங்களுக்கு விருட்சம் பற்றி புரிய வைக்கிறார். இந்த விளக்கங்கள் கூட மிகவும் அவசியம் ஆகும். இதற்கு கல்ப விருட்சம் என்று கூறப்படுகிறது. இது மனித சிருஷ்டி என்ற மரம், கல்ப விருட்சம் ஆகும் என்று தந்தை கூறுகிறார். அந்த கீதையைக் கூறுபவர்கள் பகவான் இதைக் கூறி இருந்தார் என்று கூறுவார்கள்.
மேலும் நீங்கள் பகவான் கூறிக் கொண்டிருக்கிறார் என்று கூறுவீர்கள். இது மனித சிருஷ்டியின் விருட்சம் ஆகும்.
இதில் எந்தவொரு பழம், மாம்பழம் ஆகியவை இல்லை.
அந்த பழ மரத்தில் விதை கீழே, விருட்சம் மேலே இருக்கும்.
இதனுடைய விதை மேலேயும், மரம் கீழேயும் உள்ளது.
இறைவன் நம்மை படைத்தார் என்றும் கூறுகிறார்கள். அதாவது தந்தை குழந்தைகளை வழங்கியுள்ளார். தந்தை செல்வத்தை அளித்துள்ளார். பாபா! நீங்கள் எங்களுடைய எல்லா துக்கங்களையும் நீக்குங்கள்.
பாபா, பாபா என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு அசாந்தி ஏற்படுகிறது. இலட்சுமி நாராயணருக்கு முன்னால் செல்கிறார்கள். அவர்களிடம் மகாலட்சுமியே எங்களுக்கு செல்வம் கொடுங்கள் என்று வேண்டுகிறார்கள். இவை எல்லாமே யாசிக்கக் கூடிய சம்ஸ்காரம் ஆகும்.
ஜகதம்பாவிடம் ஒரு சிலர் புத்திர செல்வம் வேண்டு வார்கள். பின் ஒரு சிலர் எங்களுடைய நோயை நீக்குங்கள் என்பார்கள்.
இலட்சுமிக்கு முன்னால் இப்பேர்ப்பட்ட விருப்பங்கள் வைக்க மாட்டார்கள்.
அவரிடம் செல்வம் மட்டுமே வேண்டுவார்கள். ஜகதம்பாவே இலட்சுமி.
அவர்களே பின்
84 பிறவிகளின் சக்கரம் சுற்றி மீண்டும் ஜகதம்பா ஆகிறார் என்பதை நீங்களே அறிந்துள்ளீர்கள். விருட்சத்தில் பாருங்கள் ஜகதம்பா அமர்ந்துள்ளார். அவரே மீண்டும் அவசியம் மகாராணி ஆவார்.
குழந்தைகளாகிய நீங்களும் இராஜதானியில் வருவீர்கள்.
நீங்கள் கல்பவிருட்சத்தின் கீழே அமர்ந்துள்ளீர்கள். சங்கமத்தில் அஸ்திவாரம் இட்டுக் கொண்டிருக்கிறீர்கள். காமதேனுவின் குழந்தைகளாகிய நீங்கள் தான் அனைவரின் மனோ விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் ஆவீர்கள்.
நீங்கள் பாரதமாதா சக்தி சேனை ஆவீர்கள். இதில் பாண்டவர்கள் கூட இருக்கிறார் கள்.
நினைவு ஒரு தந்தையை மட்டுமே செய்ய வேண்டும் என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. அளிப்பவர் ஒரு தந்தை ஆவார்.
நீங்கள் யாரை வேண்டுமானாலும் பக்தி செய்யுங்கள், யாரை வேண்டுமானாலும் நினைவு செய்யுங்கள். ஆனால் பலன் அளிப்பவர் ஒரே ஒரு வள்ளல் ஆவார்.
அவரே அனைத்தையும் அளிக்கிறார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் நாராயணரின், கிருஷ்ணரின் பூஜை செய்கிறீர்கள். கிருஷ்ணரை ஊஞ்சலாட்டவும் செய்கிறீர்கள், அன்பு செய் கிறீர்கள்.
அவரிடம் நீங்கள் என்ன வேண்டுவீர்கள்? நாம் அவரது இராஜதானியில் செல்வோம் அல்லது நமக்கு கிருஷ்ணர் போன்ற குழந்தை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகி றீர்கள். பஜோ இராதே கோவிந்த,
சலோ விருந்தாவன் என்று பாடுகிறார்கள். எங்கு இராஜ்ய பாக்கியம் வைகுண்டத்தில் அடைந்திருந் தோமோ அங்கு செல்வோம்.
அச்சமயத் தில் எந்தவொரு அப்ராப்தியும் இருப்பதில்லை. கிருஷ்ணருடைய இராஜ்யத்தை நினைவோ நிறைய செய்கிறார்கள். பாரதத்தில் கிருஷ்ணரின் இராஜ்யம் இருக்கும் பொழுது வேறு எந்த இராஜ்யமும் இருக்கவில்லை. இப்பொழுது தந்தை வந்துள்ளார்.
கிருஷ்ணபுரிக்கு போகலாம் என்று கூறுகிறார்.
போய் கிருஷ்ணரின் மனைவியாக ஆனாலும் சரி அல்லது இராதையின் கணவன் ஆனாலும் சரி,
விஷயம் ஒன்றே தான். அங்கு விஷம் கிடைக்காது.
அது இருப்பதே சம்பூர்ண நிர்விகாரி உலகமாகும். இப்பொழுது நீங்கள் மாணவர்கள் ஆவீர்கள். நரனிலிருந்து நாராயணராக, ஏழையிலிருந்து இளவரசர் ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு யாராவது கோடீசுவரராக இருக்கலாம்.
50 கோடி இருக்கலாம்.
ஆனால் உங்களை ஒப்பிடும் பொழுது அவர்கள் ஏழைகள் ஆவார்கள். ஏனெனில்,
அவர்களுடைய இந்த அனைத்து செல்வமும் மண்ணோடு மண்ணாகப் போகிறது. எதுவுமே கூட வராது.
வெறுங்கையுடன் செல்வார்கள்.
நீங்களோ 21 பிறவிகளுக்கு கை நிரப்பிக் கொண்டு செல்வீர்கள்.
இப்பொழுது நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். பிறகு சத்யுகத்தில் வந்து ஆட்சி புரிவீர்கள். நீங்கள் மறுபிறவிகள் எடுத்து வர்ணங்களில் வந்து கொண்டே இருக்கிறீர்கள். சத்யுகத்தில் இருப்பது
16 கலை, திரேதாவில்
14 கலை. பிறகு பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது. பிறகு இப்ராஹிம், புத்தர் வருகிறார். கிறிஸ்துவிற்கு 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்பொழுது முழு விருட்சமும் பட்டுப் போன நிலையை அடைந்து விட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் கல்ப விருட்சத்தின் கீழே சங்கமத்தில் அமர்ந்துள்ளீர்கள். இதற்கு கல்பத்தினுடைய சங்கமம் அல்லது கலியுகம் மற்றும் சத்யுகத்தின் சங்கமம் என்று கூறப்படுகிறது. சத்யுகத்திற்கு பிறகு திரேதா பிறகு திரேதாவிற்கு பின் துவாபரம் மற்றும் கலியுகத்தின் சங்கமம்.
கலியுகத்திற்கு பிறகு சத்யுகம் அவசியம் வரும். நடுவில் சங்கமம் அவசியம் வேண்டும். கல்பத்தினுடைய சங்கமயுகத்தில் தந்தை வருகிறார். இவர்கள் கல்பம் என்ற வார்த்தையை மாற்றி யுகே யுகே என்று மட்டும் எழுதி விட்டுள்ளார்கள். நான் நிராகாரமான பரமபிதா பரமாத்மா,
ஞானக் கடல் ஆவேன் என்று தந்தை கூறுகிறார்.
பாரதத்தில் தான் சிவ ஜெயந்தி பாடப்படுகிறது. கிருஷ்ணரோ ஞானம் கொடுக்க முடியாது. குதிரை வண்டியில் கிருஷ்ணரின் படத்தை மட்டுமே காண்பித்துள்ளார்கள். ஆனால் கிருஷ்ணர் எப்பொழுது வருவார்? துவாபரத்தில் எப்படி வருவார்?
சொர்க்கத்தில் கிருஷ்ணருடன் கூட சந்திப்போம் என்று நீங்களோ கூறுகிறீர்கள். பக்தியில் கிருஷ்ணரின் சாட்சாத்காரம் நான் உங்களுக்கு செய்விக்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.
கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது மிகவும் அன்புடன் அவரை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறார்கள். பூஜை செய்கிறார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே கிருஷ்ணர் தென்படுவது போல தோன்றுகிறது. சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்)
ஆகும். கிருஷ்ணருடைய படம் இருந்தது என்றால், அதையும் எடுத்துக் கொண்டு அணைத்து கொள்வார்கள்.
பக்தி மார்க்கத்தில் நான் தான் உதவி செய்கிறேன்.
வள்ளல் நான் ஆவேன். இலட்சுமிக்கு பூஜை செய்கிறார்கள். இப்பொழுது அதுவோ கல்லினாலான விக்கிரகம் ஆகும். அது என்ன கொடுக்கும்?
நான் தான் பிறகும் வழங்க வேண்டி உள்ளது.
சாட்சாத்காரம் கூட நான் தான் செய்விக்கிறேன். இது கூட நாடகத்தில் பொருந்தி உள்ளது.
எப்படி பரமபிதா பரமாத்மாவின் கட்டளைப்படி ஒவ்வொரு இலையும் அசைகிறது என்று கூறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு இலையிலும் பரமாத்மா இருக்கிறார் என்று நினைக்கிறார்கள். பரமாத்மா வந்து இலைக்கு கட்டளையிடுவாரா என்ன?
இதுவோ நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் என்ன செயல் செய்து கொண்டிருக்கிறீர் களோ அதை கல்பத்திற்குப் பிறகும் அவ்வாறே நீங்கள் செய்வீர்கள்.
எதெல்லாம் (படம் பிடிக்கப்பட்டதோ) ஷூட்டிங்கில் ஷூட் ஆகியதோ அதுவே நடக்கும்.
அதில் எதுவும் வித்தியாசம் ஏற்பட முடியாது. நாடகத்தை கூட நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லையில்லாத சுகம் கல்பம் கல்பமாக பாரதத்திற்குத் தான் கிடைக்கிறது என்று தந்தை புரிய வைக்கிறார். ஆனால் யார் பிராமணர்களாக ஆகிறார்களோ அவர்களே வர்ணங்களில் வருகிறார்கள்.
84 பிறவிகள் எடுக்கிறார்கள். பிறகு மற்றவர்களின் பிறவிகள் வரிசைக்கிரமமாக குறைந்து கொண்டே போகும். எவ்வளவு சிறிய சிறிய மடங்கள், சம்பிர தாயங்கள் உள்ளன.
அவர்களுக்கும் மகிமை உள்ளது. ஏனெனில்,
தூய்மையாக இருக்கிறார்கள். சொர்க்கத்தின் படைப்பு கர்த்தாவோ தந்தை ஆவார். வேறெந்த மனிதரும் சொர்க்கத்தைப் படைப்பார்களா என்ன?
பிறகு இராஜயோகம்கூட யார் கற்பிப்பது?
இப்பொழுது நீங்கள் கிருஷ்ணபுரிக்குச் செல்வதற்காக இராஜயோகம்கற்றுக் கொண்டிருக் கிறீர்கள். முயற்சி எப்பொழுதுமே உயர்ந்ததாக செய்ய வேண்டும்.
கிருஷ்ணர் போன்ற கணவன் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். கிருஷ்ணர் தான் நாராயணராக ஆகிறார்.
பிறகு கிருஷ்ணர் போல என்று ஏன் கூறுகிறார்கள். நீங்களோ நாராயணர் போல கணவன் கிடைக்க வேண்டும் என்று கூற வேண்டும். நாரதர் கூட நான் இலட்சுமியை மணம் முடிக்க வேண்டும் என்று கூறினார்.
இராதைக்காகக் கூறவில்லை.
நீங்கள் கிருஷ்ணபுரிக்கு செல்ல வேண்டும் என்றால் நிறைய முயற்சி செய்யுங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார்.
அது கிருஷ்ணருடைய தெய்வீக குலம் ஆகும். கம்சனினுடையது அசுர குலம் ஆகும். நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் உள்ளீர்கள். சூத்திர சம்பிரதாயத்தினரோ பிராமணர் பிராமணி என்று கூறிக் கொள்ள முடியாது. யார் பிராமணர் என்று அழைக்கப் படாதவர்களோ அவர்கள் சூத்திர வர்ணத்தினர் ஆவார்கள்.
பாரதத்தினுடையதே விஷயமாகும்.
பாரதம் தான் சொர்க்கம் ஆகிறது.
பிறகு பாரதம் தான் நரகம் ஆகி விடுகிறது.
இலட்சுமி நாராயணர் கூட 84 பிறவிகள் எடுத்து இரஜோ தமோவில் வர வேண்டி உள்ளது.
அவர்களே சக்கரத்தில் வருகிறார்கள் என்றால் புத்தர் ஆகியோர் திரும்பி நிர்வாணதாமத்திற்கு எப்படிப் போக முடியும்? ஒரு சிலரோ கிருஷ்ணர் சர்வ வியாபி
(எங்கும் நிறைந்தவர்)
ஆவார் என்று கூறுவார்கள். எங்கு பார்த்தாலும் கிருஷ்ணரே கிருஷ்ணர் இருக்கிறார்.
இராமருடைய பக்தர்கள் இராமர் சர்வ வியாபி என்பார்கள்.
அவர்கள் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாபாவிடம் இராதா சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருந்தார். இராதையே இராதை .. இராதை எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தார். என்னிடம் உன்னிடம் இராதையே இராதை இருக்கிறார். கணேசனின் பூசாரி உன்னிடம் என்னிடம் கணேசனே கணேசன் இருக்கிறார் என்பார். கிறித்துவர்கள் பின் கிறிஸ்து சன் ஆஃப் காட் கடவுளின் குழந்தை என்கிறார்கள்.
அட! கிறிஸ்து குழந்தை என்றால் நீங்கள் பின் யாருடைய குழந்தைகள் ஆவீர்கள். அநேக வழிகள் கொள்கைகள் உள்ளன. வழி யாருக்குமே கிடைப்ப தில்லை. தலை வணங்கிக் கொண்டும்,
அலைந்து கொண்டும் மட்டுமே இருக்கிறார்கள். முக்தி மற்றும் ஜீவன்முக்தியை பகவான் தான் கொடுப்பார் அல்லவா? அவரிடமிருந்து நாம் என்ன வேண்டலாம்? யாருக்கும் தெரியவே தெரியாது.
தந்தையை அறியாத காரணத்தினால் அநாதைகளாக ஆகி விட்டுள்ளார்கள். பிறகு தலைவன் வந்து தலைவனுக்குச் சொந்தமான வர்களாக ஆக்குகிறார். மனிதர்கள் எவ்வளவு அடி வாங்கு கிறார்கள்.
பக்தியினால் பகவான் கிடைப்பார் என்று நினைக்கிறார்கள். நான் வருவதே என்னுடைய நேரத்தில் என்று தந்தை கூறுகிறார்.
ஒருவர் எவ்வளவு தான் கூப்பிட்டுக் கொண்டு இருந்தாலும் சரி, ஆனால் நான் சங்கமத்தில் வருகிறேன். ஒரே ஒரு பாரதத்தை சொர்க்கமாக ஆக்கி அனைவரையும் சாந்தியில் அனுப்பி விடுகிறேன்.
பிறகு வரிசைக்கிரமமாக அவரவர் நேரத்தில் வருகிறார்கள். யார் தேவி தேவதைகளாக இருந்தார்களோ அந்த ஆத்மாக்கள் அனைவரும் கூட அமர்ந்துள்ளார்கள். மீண்டும் தங்களது இராஜ்ய பாக்கியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதோ தேவி தேவதா தர்மமே இல்லை. அனைவரும் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்ள முற்பட்டுள்ளார்கள். நாடகப் படி மீண்டும் அவ்வாறே நடக்கும். எதெல்லாம் நடந்து முடிந்து விட்டுள்ளதோ அது மீண்டும் (ரிபீட்)
திரும்ப நடைபெறும்.
பிறகு இது போல நாம் சக்கரத்தில் வருவோம்.
இவ்வளவு பிறவிகள் எடுப்போம். கணக்கு எடுங்கள். ஒவ்வொரு தர்மத்தினரும் பின்னால் எவ்வளவு பிறவிகள் எடுப்பார்கள்? விருட்சம் பற்றி புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். யாரோ ஒருவருடைய உந்துதல் மூலமாக இந்த விநாச ஜூவாலையின் ஏற்பாடு ஆகிக் கொண்டிருக் கிறது என்பது மனிதர்களுக்கு தானாகவே (டச்)
தோன்றும். ஐரோப்பிய வாசி யாதவர்கள் குண்டுகள் தயாரிக்கிறார்கள். விரும்பாவிடினும் கூட இந்த சாவுக்கான சாமான்களைத் தயாரிக்கிறார்கள். மெள்ள மெள்ள தாக்கம் ஏற்படும்.
மெள்ள மெள்ள செடி வளருகிறது அல்லவா? ஒரு சிலர் முள்ளிலிருந்து மொட்டு, ஒரு சிலர் மலர் ஆகிறார்கள். ஒரு சில மலர்கள் கூட புயல் ஏற்படும் பொழுது வாடிப் போய் விடுகிறார்கள். ஆச்சரியப்படும் வகையில் கேட்டார்கள்,
கூறினார்கள்.... என்று பாபா கல்ப கல்பமாக கூறி இருந்தார். இப்பொழுது மீண்டும் சுயம் பாபா கூறிக் கொண்டிருக்கிறார், என்னிடம் வருவார்கள், பிரம்மா குமார் குமாரி ஆகிறார்கள், (ஞானம்)
கூறுகிறார்கள். பிறகும் ஆஹா! ஆஹா எனது மாயையே
... நல்ல நல்ல குழந்தைகளையும் சாப்பிட்டு விட்டது. இன்னும் முன்னால் போகப்போக பாருங்கள், எப்படி நல்ல நல்ல குழந்தைகளும் இல்லாமல் ஆகி விடுகிறார்கள் என்று. எது நடந்து முடிந்ததோ அதையே மீண்டும் நிகழ்காலத்தில் தந்தை புரிய வைக்கிறார்.
பிறகு பக்தி மார்க்கத்தில் சாஸ்திரங்கள் அமைப்பார்கள். இந்த நாடகம் இது போல அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை வந்து பிரம்மா மூலமாக அனைத்து வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகிய வற்றின் சாரத்தை புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். யார் தர்ம ஸ்தாபனை செய்கிறார்களோ அவர்களுடைய பெயரில் தான் சாஸ்திரங்கள் அமைக்கிறார்கள். இந்த நாடகம் இது போல அமைக்கப் பட்டுள்ளது. இப்பொழுது தந்தை வந்து பிரம்மா மூலமாக அனைத்து வேதங்கள் சாஸ்திரங் களின் சாரத்தைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். யார் தர்ம ஸ்தாபனை செய்கிறார்களோ அவர்களது பெயரில் தான் சாஸ்திரங்கள் அமைக்கிறார்கள். அதற்கு தர்ம சாஸ்திரம் என்று கூறப்படுகிறது. தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஒரே ஒரு கீதை ஆகும்.
ஒவ்வொரு தர்மத்திற்கும் ஒரு சாஸ்திரம் இருக்க வேண்டும்.
ஸ்ரீமத் பகவத் கீதை சரியானது ஆகும். பகவான் உரைக்கிறார் (பகவானுவாச்)
- பகவான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினை ஸ்தாபனை செய்தார்.
இது எல்லாவற்றையும் விட பழைமையான தர்மம் ஆகும்.
ஒவ்வொரு தர்மத்திற்கும் அதனதன் சாஸ்திரம் இருக்கிறது. மேலும் படித்து கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தேவதை ஆகிறீர்கள். ஆனால் நீங்கள் சாஸ்திரங்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவை எல்லாமே முடிந்து போய் விடும். பிறகு கீதை எங்கிருந்து வந்தது? துவாபரத்தில் அமர்ந்து மனிதர்கள் அமைத்தார்கள். எந்த கீதை இப்பொழுது இருக்கிறதோ, மீண்டும் அதே கீதையை தோண்டி எடுப்பார்கள்.
எப்படி முந்தைய கல்பத்தில் அமைத்தார் களோ, அதே போல மீண்டும் இந்த சாஸ்திரங்களை அமைப்பார்கள். பக்தி மார்க்கத்தின் சாமான்கள் அமைந்து கொண்டு தான் போகும்.
அருமையான குழந்தைகளே!
தந்தையாகிய எனது ஸ்ரீமத் படி நடந்து சிறந்தவர் ஆகுங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுது கலியுகத்தை சத்யுகமாக ஆக்க வேண்டும். அவர்கள் கல்பத்தின் ஆயுளை நீண்டதாகக் கூறி எல்லாரையும் கோரமான இருளில் தள்ளி விட்டுள்ளார் கள்.
மனிதர்களோ குழம்பி உள்ளார்கள். நாடகப்படி குழந்தைகளாகிய நீங்கள் தான் எல்லை யில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். பாபா நிறைய யுக்திகளைக் கூறி உள்ளார்.
பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள்.
சார்ட் வையுங்கள்.
உணவு தயாரிக்கும் நேரத்தில் கூட நினைவு செய்யுங்கள்.
உணவு தயாரிக்கும்பொழுது கணவர் குழந்தைகள் நினைவிற்கு வருகிறார்கள் என்றால், சிவபாபா ஏன் நினைவிற்கு வர முடியாது.
இது உங்களது வேலை ஆகும்.
பாபா புத்தியின் ஏணி கொடுக்கிறார்.
பின் நீங்கள் ஏறினாலும் சரி ஏறா விட்டாலும் சரி. இது உங்களுடைய வேலை ஆகும். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு ஏணியில் ஏறிக் கொண்டே செல்வீர்கள். இல்லையென்றால் அந்த அளவிற்கு சுகம் கிடைக்காது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான அருமையான அதாவது 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்து கிடைத்திருக்கும் குழந்தைகளுக்கு, வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
கிருஷ்ணபுரியில் செல்வதற்காக மிக நல்ல முயற்சி செய்ய வேண்டும். சூத்திர தன்மையின் சம்ஸ்காரங்களை மாற்றி பக்குவமான பிராமணர் ஆக வேண்டும்.
2.
புத்தி பலத்தினால் நினைவின் படியில் ஏற வேண்டும்.
ஏணிப்படி ஏறும் பொழுது தான் அளவற்ற சுகத்தின் அனுபவம் ஆகும்.
வரதானம்:
அட்டென்ஷன் (கவனம்)
மற்றும் செக்கிங்கின்
(சோதனை) விதி
மூலமாக வீணானவற்றின்
கணக்கை முடித்து
விடக் கூடிய
மாஸ்டர் சர்வ
சக்திவான் ஆவீர்களாக.
பிராமண வாழ்க்கையில்
வீண் எண்ணங்கள், வீண் பேச்சு, வீண் செயல்கள் இருந்தால் மிகுந்த நேரத்தை வீணாக இழந்து விடுகிறார்கள். எவ்வளவு சம்பாத்தியம்
செய்ய நினைக்கிறார்களோ,
அவ்வளவு செய்ய முடியாமல் இருக்கிறார்கள். வீணானவற்றின்
கணக்கு சக்திசாலியாக
ஆக விடுவதில்லை.
எனவே நான் மாஸ்டர் சர்வசக்திவான் ஆவேன் என்ற நினைவில் எப்பொழுதும்
இருங்கள். சக்தி இருந்தது என்றால், எது வேண்டுமானாலும் செய்ய முடியும். திரும்ப திரும்ப அட்டென்ஷன் - கவனம் மட்டுமே செலுத்துங்கள்.
எப்படி வகுப்பின் நேரத்தில் அல்லது அமிருத வேளையில் நினைவின் நேரத்தில் அட்டென்ஷன் - கவனம் கொடுக்கிறீர்களோ,
அவ்வாறே இடையிடையே அட்டென்ஷன் மற்றும் செக்கிங் என்ற விதியை கடைப்பிடித்தீர்கள் என்றால் வீணானவற்றின்
கணக்கு முடிந்து போய் விடும்.
சுலோகன்:
இராஜரிஷி ஆக வேண்டுமெனில் பிராமண ஆத்மாக்களின்
ஆசீர்வாதங்களால் தன்னிலையை தடையற்றதாக (நிர்விக்கினமாக) ஆக்கிக் கொள்ளுங்கள்.
0 Comments