30-01-2023
காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே
! நீங்கள் ஈஸ்வரிய
வாரிசுகள். இது
உங்களது விலைமதிப்பற்ற
வாழ்க்கையாகும். உங்களுடைய
ஈஸ்வரிய குலம்
மிகவும் உயர்ந்தது.
பகவானே உங்களை
தத்தெடுத்திருக்கின்றார் இந்த
பெருமிதத்தில் இருங்கள்.
கேள்வி:
சரீரத்தின் உணர்வு நீங்க வேண்டும், அதற்கு எந்த பயிற்சி அவசியம்?
பதில்:
போகும் பொழுதும், வரும் பொழுதும் இந்த உடலில் நான் சிறிது காலத்திற்கு நிமித்தமாக இருக்கிறேன்
என்று பயிற்சி செய்யுங்கள். பாபா சிறிது நேரத்திற்கு எப்படி இந்த உடலில் வந்துள்ளாரா அதைப்போல ஆத்மாக்களாகிய நாமும் பாரதத்தை சொர்க்கமாக மாற்றுவதற்காக இந்த உடலை ஏற்று இருக்கிறோம்.
பாபா மற்றும் ஆஸ்தி நினைவிருந்தால் சரீரத்தின் உணர்வு நீங்கி விடும் இதற்கு தான் ஒரு நொடியில் ஜீவன் முக்தி என்று கூறப்படுகிறது. 2. அமிர்த வேளையில் எழுந்து பாபாவிடம் இனிமையிலும் இனிமையான விஷயங்களைப்
பேசினால் சரீரத்தின் உணர்வு நீங்கிக் கொண்டே போகும்.
பாடல்: ஓம் நமோசிவாய.....
ஓம் சாந்தி.
பகவான் ஒருவரே,
அவர் தந்தையாக இருக்கிறார். ஆத்மாவின் ரூபம் இவ்வளவு பெரிய லிங்கம் போன்று இல்லை என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆத்மா மிகவும் சிறிய நட்சத்திரம் போன்று புருவ மத்தியில் இருக்கின்றது. இவ்வளவு பெரிய கோவில் களில் வைக்கப்பட்டிருக்கின்ற ஜோதிர்லிங்கமாக இல்லை. ஆத்மா எப்படி இருக்கிறதோ அவ்வாறே தந்தையும் இருக்கிறார். ஆத்மாவின் ரூபம் மனிதனைப் போன்று அல்ல.
ஆத்மா மனித உடலை ஆதாரமாக எடுக்கக்கூடியது. ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது. அனைத்து ஆத்மாவிற்குள்ளும் சம்ஸ்காரம் இருக்கின்றது. ஆத்மா நட்சத்திரம் போன்றது.
ஆத்மா தான் நல்ல மற்றும் கெட்ட சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப பிறவி எடுக்கின்றது. எனவே இந்த விஷயங்களை நன்கு புரிய வைக்க வேண்டும்.
கோவில்களில் லிங்கம் வைக்கப்பட்டிருக் கின்றது.
ஆகவே புரிய வைப்பதற்காக நாமும் லிங்கத்தை காண்பிக் கின்றோம். இவருடைய பெயர் சிவன்.
பெயரில்லாமல் எந்த பொருளும் இல்லை.
ஏதாவது உருவம் இருக்கின்றது. பாபா பரந்தாமத்தில் இருக்கக்கூடியவர். ஆத்மா எப்படி சரீரத்தில் வருகிறதோ அதே போன்று நானும் நரகத்தை சொர்க்கமாக மாற்றுவதற்காக வர வேண்டி யிருக்கிறது என பரமாத்மா பாபா கூறுகின்றார். பாபாவின் மகிமைகள் அனைத்திலிருந்தும் தனிப்பட்டதாகும். இப்போது ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கே நடிப்பதற்காக வந்துள்ளீர்கள் என குழந்தைகள் அறிகிறீர்கள்.
இது எல்லையற்ற அனாதி, அழிவற்ற டிராமா ஆகும்.
இது ஒரு போதும் அழிவைப் பெறுவது இல்லை.
இது சுற்றிக் கொண்டேயிருக்கின்றது. படைக்கக் கூடியவர் பாபா ஒருவரே, படைப்பும் ஒன்றேயாகும். இது எல்லையற்ற சிருஷ்டிச்சக்கரம் ஆகும். நான்கு யுகங்கள் இருக்கின்றது.
அடுத்தது கல்பத்தின் சங்கமயுகம் ஆகும்.
இதில் தான் பாபா வந்து அழுக்கான (தூய்மை இல்லாத) உலகத்தை தூய்மையாக மாற்றுகின்றார். இந்த சக்கரம் சுழன்று கொண்டேயிருக் கின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு வந்திருக்கின்றது. நாம் அனைத்து ஆத்மாக் களும் பரந்தாமத்தில் இருக்கக்கூடியவர்கள். இந்த கர்ம சேத்திரத்தில் நடிப்பதற்காக வந்திருக் கின்றோம். இந்த எல்லையற்ற நாடகம் திரும்ப நடக்க வேண்டும். தந்தை எல்லையற்ற அதிபதியாவார்.
அந்த தந்தைக்கு அளவு கடந்த மகிமைகள் இருக்கின்றது.
இது போன்ற மகிமைகள் வேறு யாருக்கும் இல்லை.
அவர் இந்த மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக் கின்றார்.
அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார். நான் வேற்று, உலகமாகிய இராவணனின் உலகத்தில் வருகின்றேன் என பாபா கூறுகின்றார்.
ஒரு புறம் அசுர குணங்களை உடையவர்களின் சம்பிரதாயம்.
இன்னொருபுறம் தெய்வீக குணங்களை உடையவர்களின் சம்பிரதாயம். இதற்கு கம்சபுரி என்றும் கூறுகின்றார்கள். கம்சன் என்று அசுரனுக்கு கூறப்படு கிறது.
கிருஷ்ணருக்கு தேவதை என்று கூறப்படுகிறது. இப்பொழுது பாபா தேவதையாக மாற்ற வந்திருக்கின்றார். மேலும் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்வதற்காகவும் வந்திருக் கின்றார்.
வேறு யாருக்கும் இந்த சக்தி இல்லை. பாபா தான் உட்கார்ந்து குழந்தைகளுக்கு (போதித்து)
அறிவுறுத்தி தெய்வீக குணங்களை கடைபிடிக்க வைக்கின்றார். ஒரு பாபாவிற்குத் தான் கடமை இருக்கின்றது.
எப்போது அனைவரும் தமோபிர தானம் ஆகிறார்களோ அப்போது என்னை மறந்து விடுகிறார்கள். மறப்பது மட்டும் அல்ல,
என்னை கல்லிலும் முள்ளிலும் இருப்பதாகக் கூறி விட்டனர்.
இவ்வளவு நிந்தனை செய்யும் போது தான் நான் வருகிறேன் என பாபா கூறுகின்றார்.
என்னை நிந்தனை செய்வது போல வேறு யாருக்கும் செய்வ தில்லை.
அப்போது தான் நான் வந்து உங்களை விடுவிக்கின்றேன். அனைவரையும் கொசுக் கூட்டம் போன்று அழைத்துச் செல்கின்றேன்.
வேறு யாரும் இவ்வாறு மன்மனாபவ,
பரம்பிதா பரமாத்மாவாகிய என்னை நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழிந்துவிடும் என்று சொல்ல முடியாது.
கிருஷ்ணர் இவ்வாறு கூற முடியாது.
பரமாத்மாவின் மகிமைகளை குழைந்தைகள் தான் அறிவார்கள். அவர் ஞானக்கடலாக, சுகக்கடலாக இருக்கின்றார். பிறகு இரண்டாவது நம்பரில் பிரம்மா, விஷ்ணு,
சங்கர் இருக்கின்றார்கள். பிரம்மா மூலமாக யார் ஸ்தாபனை செய்வார். ஸ்ரீ கிருஷ்ணரா? பரம்பிதா பரமாத்மா சிவன் முதன் முதலில் எனக்கு பிராமணர்கள் வேண்டும் என புரிய வைக்கின்றார்.
பிரம்மா மூலமாக பிராமண வாய் வழி வம்சத்தை படைக்கின்றேன். அவர்களோ வயிற்றுவழி வம்சத்தினர்.
இப்போது நீங்கள் சங்கமத்தில் பிரம்மாவின் வாரிசுகள். தந்தை வந்து சூத்திரனிலிருந்து பிராமணனாக மாற்று கின்றார். இப்போது நீங்கள் ஈஸ்வரிய குலத்தினர். ஈஸ்வரன் நிராகாரமானவர், பிரம்மா சாகாரத்தில் இருப்பவர்.
பாபா முதன் முதலில் பிராமணராகவும் பிறகு தேவதையாகவும் மாற்றுகிறார். தேவதைகளுக்குப் பிறகு சத்திரியர்........
இந்த சக்கரம் சுழன்று கொண்டே யிருக்கின்றது. பிறகு இதிலிருந்து வேறு தர்மம் தோன்றுகின்றது. முக்கியமானது பாரதம் ஆகும். இந்த பாரதம் அழிவற்ற கண்டம் ஆகும்.
அங்கே பாபா வந்து சொர்க்கமாக மாற்று கின்றார்.
அவர் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், உங்களுடைய சத்குருவாகவும் இருக்கின்றார். அவரை சர்வ வியாபி என்று எப்படி கூற முடியும். அவரோ உங்களுடைய தந்தையாவார்.
இந்த உலகத்தில் பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் திரிகால தர்ஷியாக முடியாது.
பரம்பிதா பரமாத்மாவுடன் நாம் பரந்தாமத்தில் இருக்கக்கூடியவர்கள் என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு வரிசைக் கிரமத்தில் கர்ம சேத்திரத்தில் வருகிறீர்கள்.
பிறகு நாம் தான் போகின்றோம்.
84 பிறவிகள் முழுமையாக எடுக்கின்றோம்.
நீங்கள் எத்தனை பிறவிகள் எடுத்தீர்கள் மற்றும் எப்படி வர்ணங்களில் வந்தீர்கள் என பாபா புரிய வைக்கின்றார்.
இந்த சக்கரம் சுழன்றுகொண்டு வந்துள்ளது.
இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய சம்பிரதாயத்தினர்.எப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய வாரிசாக மாறினீர்களோ அப்பொழு திலிருந்து இது உங்களுடைய விலைமதிப்பற்ற வாழ்க்கையாகும். பிரம்மா மூலமாக பாபா வந்து தத்தெடுக்கின்றார். பாபா வந்து சொர்க்கத்தைப் படைக்கக்கூடியவர் என்றால் அவரே வந்து சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகின்றார். இப்போது முழு உலகத்திலும் அமைதியை உருவாக்குவது பாபாவின் வேலையாகும் (நாடகத்தில்)
என்னுடைய நடிப்பிருக் கிறது. நான் உங்களுக்கு மீண்டும் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன், இதனால் நீங்கள் சதா ஆரோக்கிய மாக மாறுகின்றீர்கள் என பாபா கூறுகின்றார். எப்படி தேவதையாக இருந்தீர்கள்.
மீண்டும் இப்போது திரும்ப நடக்கப் போகின்றது. இந்த நாற்று நடப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
பாபா தோட்டக்காரன்,
இவர் மூலமாக நாற்று நடப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
என்னுடைய காணாமல் போன, கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளே,
நீண்ட காலமாக பிரிந்திருந்த குழந்தைகளே நான் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பினேன் என்பது நினைவிருக் கின்றதா என பாபா எதிரில் அமர்ந்து புரிய வைக்கின்றார். பிறகு நீங்கள் மீண்டும்
84 பிறவிகளின் சக்கரத்தில் சுழன்று இப்பொழுது வந்து சந்தித்துள்ளீர்கள். இப்போது தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினையுங்கள்.
உங்களை நிச்சயமாக திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிச்சயமாக அழைத்துச் செல்ல வேண்டும். முதலில் ஆதிசனாதன தெய்வீக இராஜ்யம் நடந்தது.
பிறகு அசுர இராஜ்யம் நடந்தது.
தெய்வீக இராஜ்யத்திற்குப் பிறகு தூய்மை போய்விட்டது. பிறகு ஒற்றை கிரீடம் ஆகிவிட்டது. இப்போது பிரஜைகள் மீது பிரஜைகள் இராஜ்யம் நடக்கின்றது. மீண்டும் தெய்வீக இராஜ்யம் உருவாகும். அசுர இராஜ்யத்தின் அழிவிற்காக இந்த ருத்திர யாகத்திலிருந்து வினாச ஜுவாலைகள் வெளிப்படுகின்றது. நீங்கள் தூய்மையில்லாத சிருஷ்டியில் இராஜ்யம் செய்ய மாட்டீர்கள்.
இது சங்கமயுகம் ஆகும். சத்யுகத்தில் இவ்வாறு கூறமாட்டார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து கொண்டு இருக் கின்றீர்கள்.
செய்விக்கக் கூடியவர் யார்? ஸ்ரீ மத் கொடுக்கக்கூடிய சக்திசாலியான உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரே ஒரு தந்தை தான். அவரே பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார். நான் பாரதத்திற்கு மிகவும் கீழ்படிந்த வேலைக்காரன் என பாபா கூறுகின்றார்.
பாரதத்தை சொர்க்கமாக மாற்று கின்றேன்.
அங்கே ராஜா ராணியைப் போன்றே பிரஜைகள் அனைவரும் சுகமாக இருக்கின்றார் கள். இயற்கையான அழகு இருக்கின்றது.
லட்சுமி நாராயணன் பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கின்றார்கள். சொர்க்கத்தின் தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர் ஆவார்.
முழு உலகத்திலும் கீதையைப் பற்றி சொல்லும் பொழுது கிருஷ்ண பகவான் வாக்கு என்று கூறுகிறார்கள். கிருஷ்ணர் மன்மனாபவ, என்னை மட்டும் நினைத்தால் விகர்மங்கள் அழியும் என்று கூறமுடியாது.
வேறு எந்த வழியும் இல்லை.
கங்கை பதீத பாவனி கிடையாது.
அது என்னை மட்டும் நினையுங்கள் என்று கூறாது.
இதை ஒரு தந்தை தான் அமர்ந்து புரிய வைக்கின்றார். பாபா ஆத்மாக்களிடம் பேசுகின்றார்.
பாபாதான் அனைவருக்கும் சத்கதி அளிக்கக்கூடிய வள்ளல் ஆவார்.
அவருடைய கோவிலும் இருக்கின்றது. துவாபர யுகத் திலிருந்து அனைத்து நினைவுச் சின்னங்களையும் கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். சோம்நாத் கோவிலும் கூட இருக்கின்றது.
ஆனால் அவர் என்ன செய்து விட்டு சென்றார் என யாரும் அறியவில்லை. அவர்கள் சிவனையும் சங்கரையும் ஒன்றாக்கி விட்டனர்.
இப்போது சிவன் பரந்தாமநிவாசி எங்கே மற்றும் சங்கரர் சூட்சும வதனவாசி எங்கே? எதையும் புரிந்து கொள்ளவில்லை.
எத்தனை வேத சாஸ்திரங்களை படித்திருந்தாலும் ஜபம் தவம் செய்தாலும் என்னை சந்திக்க முடியாது என பாபாவே கூறு கின்றார்.
பலே நான் பாவனையின் பலனை அனைவருக்கும் கொடுக்கின்றேன் ஆனால் அவர்களோ பிரம்மத்தையே பரமாத்மா என நினைக்கின்றார்கள். பிரம்மத்தின் சாட்சாத்காரம் கிடைக்கலாம், ஆனால் அதனால் எதுவும் அடைய முடியாது.
சிலருக்கு அனுமான்,
சிலருக்கு கணேசரின் சாட்சாத்காரத்தைக் கூட செய்விக்கிறேன். அதுவோ நான் அல்ப காலத்திற்காக மனோ விருப்பத்தை நிறைவேற்று கின்றேன். அல்ப காலத்திற்கு குஷி கிடைக்கின்றது. ஆனால் இருப்பினும் அனைவரும் தமோபிரதானமாகத்தான் ஆகவேண்டும்.
முழு நாளும் கங்கையில் சென்று அமர்ந்தாலும் அனைவரும் தமோபிரதானமாகத்தான் ஆகவேண்டும்.
குழந்தைகளே! தூய்மையாக மாறினால் தூய்மையான உலகத்திற்கு 21 பிறவிகளுக்கு அதிபதி யாகலாம் என பாபா கூறுகின்றார். வேறு எந்த சத்சங்கத்திலும் இவ்வளவு பிராப்தி கிடைக்காது. தந்தையே வந்து இராஜயோகத்தை கற்பிக்கின்றார் என்றால் எந்தளவு ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.
படிப்பின் மீது கவனம் கொடுக்க வேண்டும். பாபா உயர்ந்ததிலும் உயர்ந்த வழி கொடுக்கின்றார். ஸ்ரீமத்தினால் பாரதத்தை சொர்க்கமாக மாற்ற வேண்டும். நீங்கள் டிராமாவின் ரகசியத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
முயற்சியும் செய்ய வேண்டும். முயற்சி செய்து அந்தளவு தகுதி உடையவராக மாறவேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு நான் பாபாவுடன் சொர்க்கத்தை உருவாக்குவதற்காக வந்திருக்கின்றோம். நாம் அங்கே வசிக்கக் கூடியவர்கள் என்ற பெருமை இருக்க வேண்டும்.
நாம் இந்த உடலில் சிறிது நேரத்திற்கு நிமித்தமாக இருக்கின்றோம். பாபாவும் சிறிது நேரத்திற்கு நிமித்தமாக வந்திருக்கின்றார். இந்த சரீரத்தின் உணர்வு நீங்க வேண்டும். தன்னுடைய தந்தை மற்றும் ஆஸ்தியை நினையுங்கள்.
இதற்குத் தான் ஒரு நொடியில் ஜீவன் முக்தி என்று கூறப்படுகிறது. நான் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன் என பாபா கூறுகின்றார். இப்போது நீங்கள் தன்னை ஆத்மா என உணர்ந்து அதிகாலையில் எழுந்து அப்பாவை நினையுங்கள் அவருடன் பேசுங்கள். நம்முடைய
84 பிறவிகள் முடிந்து விட்டது என நீங்கள் அறிகிறீர்கள்.
இப்போது நீங்கள் ஈஸ்வரிய வாரிசு ஆகியிருக்கிறீர்கள். பிறகு தெய்வீக வாரிசு,
சத்ரிய வாரி சாவீர்கள். பாபா நம்மை உலகத்திற்கே அதிபதியாக மாற்றுவதற்காக வருகிறார். உட்கார்ந்து பாபாவின் மகிமையை செய்யுங்கள். பாபா தாங்கள் அதிசயம் செய்திருக்கிறீர்கள். கல்ப கல்பமாக வந்து எங்களை படிக்க வைக்கின்றீர்கள். பாபா தங்களுடைய ஞானம் மிகவும் அதிசயமானது.
சொர்க்கம் எவ்வளவு அதிசயமாக இருக்கின்றது.
அது உலகியல் அதிசயங்கள் ஆகும்.
இதுவோ ஆன்மீக தந்தை உருவாக்கிய அதிசயமாகும். பாபா கிருஷ்ணபுரியை உருவாக்குவதற்காக வந்திருக்கின்றார். இந்த லட்சுமி நாராயணன் இந்த பிராப்தியை எங்கிருந்து அடைந்தனர்?
தந்தை மூலமாக,
ஜெகதம்பா மற்றும் ஜகத்பிதாவுடன் குழந்தைகளும் இருப்பார்கள். அவர்கள் பிராமணர்கள். ஜகதம்பாவே பிராமணியாக இருந்தார்.
அவர் காமதேனு ஆவார். அனைவரின் மனோவிருப்பங்களையும் நிறைவேற்றி விடுகின்றார். இந்த ஜகதம்பா தான் சொர்க்கத்தின் மகாராணியாகிறார். எவ்வளவு அதிசயமான ரகசியங்கள் இருக்கின்றது.
இந்த தந்தை நமது நிலையை நன்கு வைத்துக் கொள்ள விதவிதமான யுக்திகளை தெரிவிக்கின்றார். இரவில் எழுந்திருங்கள். பாபாவை நினைத்தால் கடைசி நினைவிற்கேற்ப நல்ல நிலையை அடையலாம். முழுமையாக நினைவு செய்தால் நினைவு நிலையாக இருக்கும். மதிப்புடன் தேர்ச்சி அடைய வேண்டும். 8 பேருக்குத் தான் ஸ்காலர்ஷிப் கிடைக்கின்றது. அனைவரும் லட்சுமி நாராயணனை மணக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அப்படி என்றால் தேர்ச்சி அடைந்து காட்ட வேண்டும்.
எனக்குள் எந்த ஒரு குரங்குத் தன்மையும் இல்லையா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதை நீக்கிக் கொண்டே செல்லுங்கள்.
முழு நாளில் யாருக்கும் துக்கம் கொடுக்கவில்லையா என பாருங்கள். பாபா அனைவருக்கும் சுகம் கொடுக்கக்கூடியவர் ஆவார்.
குழந்தைகளும் அவ்வாறே மாற வேண்டும்.
வார்த்தைகள் மற்றும் செயலால் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. உண்மையிலும் உண்மையான வழி காட்ட வேண்டும்.
அது எல்லைக்குட்பட்ட தந்தையின் ஆஸ்தியாகும்.
இது எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் ஆஸ்தியாகும்.
அதுவும் யாருக்கு கிடைக்குமோ அவர்களே தெரிவிப்பார்கள். யார் நம்முடைய தர்மத்தை சார்ந்தவர்களோ அவர்களுக்கு உடனே மனதில் உணரப்படும்.
மீண்டும் தெய்வீக தர்மத்தை உருவாக்குவதற்காக நான் பிரம்மாவின் உடலில் வருகின்றேன் என பாபா கூறுகின்றார். இப்போது நாம் பிராமணர்களாக இருக்கின்றோம். மீண்டும் தேவதை யாக மாறுவோம் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்கின்றது.
முதலில் சூட்சும வதனத்திற்கு சென்று பிறகு சாந்தி தாமத்திற்குச் செல்வீர்கள்.
அங்கிருந்து பிறகு புதிய உலகத்தில் கர்ப மாளிகையில் வருவீர்கள். இங்கே கர்ப ஜெயிலில் வருகிறார்கள். இதற்கு பொய்யான மாயை,
பொய்யான உடல்......
என்கிறார்கள். எவ்வளவு தர்மத்தை நிந்தனை செய்திருக்கிறார்கள். சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் சிவன் எப்போது வந்தார், யாருக்குள் பிரவேசமானார். இது யாருக்கும் தெரியவில்லை என பாபா கூறுகின்றார். நிச்சயமாக யாருடைய உடலிலாவது வந்து நரகத்தை செர்க்கமாக மாற்றியிருப்பார் அல்லவா. பாபா குழந்தைகளுக்கு மிகவும் நன்றாகப் புரிய வைக்கின்றார். மேலும் உங்களுடைய சார்ட்டையும் உருவாக்குங்கள் என ஆலோசனையும் கொடுக்கின்றார். முழு நாளில் எவ்வளவு நேரம் பாபாவை நினைத்தீர்கள். அதிகாலையில் எழுந்து பாபாவை, ஆஸ்தியை நினையுங்கள். நாம் எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கின்றோம். குப்த வேசத்தில் பாரதத்தை சொர்க்கமாக மாற்றுவதற்காக. இப்போது நாம் திரும்பி போக வேண்டும். செல்வதற்கு முன்பு தங்களுடைய இராஜ்யத்தை நிச்சயமாக உருவாக்க வேண்டும்.
இப்பொழுது சங்கமத்தில் இருக்கிறீர்கள். மற்றபடி முழு உலகமும் கலியுகத்தில் இருக்கின்றது.
நீங்கள் சங்கமயுக பிராமணன் ஆவிர்.
பாபா குழந்தைகளுக்காக முக்தி மற்றும் ஜீவன் முக்தி என்ற பரிசை எடுத்து வருகின்றார்.
சத்யுகத்தில் பாரதம் ஜீவன் முக்தி நிலையில் இருந்தது.
மற்ற அனைத்து ஆத்மாக்களும் முக்தி தாமத்தில் இருந்தனர்.
பாபா உள்ளங்கையில் சொர்க்கத்தை எடுத்து வருகின்றார் என்றால் நிச்சயமாக அதை அடைவதற்கு அவரே தகுதியும் அடைய வைப்பார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
எப்பொழுதும் நாம் பாபாவுடன் சொர்க்கத்தை உருவாக்குவதற்கு நிமித்தமாக இருக்கிறோம் என்ற போதையில் இருக்க வேண்டும். பாபா நம்மை உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகின்றார்.
2.
பாபாவிற்கு சமமாக சுகத்தை கொடுக்கக்கூடியவராக மாற வேண்டும்.
ஒருபோதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. அனைவருக்கும் உண்மையான வழியை தெரிவிக்க வேண்டு தன்னுடைய முன்னேற்றத்திற்காக தன்னுடைய சார்ட் வைக்க வேண்டும்.
வரதானம்:
நிமித்தம் மற்றும்
பணிவுத்தன்மையின் விசேஷத்தன்மைகள்
மூலம் சேவையில்
விரைவாக மற்றும்
முதல் நம்பரில்
வரக்கூடிய வெற்றி
மூர்த்தி ஆகுக.
சேவையில் முன்னேறிக்கொண்டே
நிமித்தம் மற்றும் பணிவுத்தன்மையின் விசேஷத் தன்மைகள் நினைவில் இருக்கிறது என்றால் வெற்றி சொரூபம் ஆகிவிடலாம். சேவையில் முந்தி அடித்துக் கொண்டு (ஓடி ஓடி) செல்வதில் புத்திசாலியாக இருக்கிறீர்களோ,
அதுபோல இந்த இரண்டு விசேஷத்தன்மைகளிலும் கூட புத்திசாலி ஆகுங்கள், இதனால் சேவையில் விரைவாகவும் முதன்மையாகவும்
சென்றுவிடுவீர்கள். பிராமண வாழ்க்கையின் மரியாதைகள் என்ற கோட்டிற் குள் இருந்துக் கொண்டு தன்னை ஆன்மீக சேவாதாரியாக புரிந்து கொண்டு சேவை செய்தீர்கள் என்றால் வெற்றி மூர்த்தி ஆகிவிடலாம். முயற்சி (கடின உழைப்பு) செய்ய வேண்டியிருக்காது.
சுலோகன்:
யார் புத்தியின் மூலம் சதா ஞான இரத்தினங்களை தாரணை செய்கிறார்களோ,
அவர்கள் தான் உண்மையான அன்னபறவை.
0 Comments