Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 29.01.23

 

29-01-2023  காலை முரளி  ஓம் சாந்தி  "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 02.12.1993


Listen to the Murli audio file



நம்பர் ஓன் ஆவதற்காக குணங்கள் நிறைந்த மூர்த்தி ஆகி குணங்களை தானம் செய்யக்கூடிய மகாதானி ஆகுங்கள்.

இன்று எல்லைக்கு அப்பாற்பட்ட தாய் - தந்தை நாலா பக்கங்களிலுமுள்ள விசேஷ குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்ன விசேஷத்தன்மையை பார்த்தனர்? எந்த குழந்தைகள் தீராத ஞானம் நிறைந்தவராகவும், அசைக்க முடியாத சுயராஜ்ய அதிகாரி யாகவும், துண்டிக்கப்படாத தடையற்றவராகவும், நிரந்தர யோகியாகவும், நிரந்தர மகாதானி யாகவும் இருக்கிறார்களோ, அப்படிப்பட்ட விசேஷ ஆத்மாக்கள் கோடியில் சிலர் தான் உருவாகியிருக் கிறீர்கள். ஞானம் நிறைந்தவராகவும், யோகி, மகாதானியாகவும், அனைவரும் ஆகியிருக் கிறார்கள். ஆனால் நிரந்தரமானவராக சிலர் தான் ஆகியுள்ளார்கள். யார் நிரந்தரமான, அசைக்க முடியாத, துண்டிக்கப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றி மாலையில் வெற்றி மணியாக இருக்கிறார்கள். பாப்தாதா சங்கமயுகத்தில் அனைத்து குழந்தை களுக்கும் - அசையாதவர் (உறுதியான) நிலையானவர் (துண்டிக்கபடாத) ஆகுக என்ற வரதானத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் வரதானத்தை வாழ்க்கையில் சதா தாரணை செய்வதில் நம்பர்வார் ஆகிவிடுகிறீர்கள். நம்பர் ஓன் ஆவதற்காக அனைத்தையும் விட எளிதான விதி அகண்ட (தொடர்ச்சியாக) மகாதானி ஆகுங்கள். அகண்ட மகாதானி என்றால் நிரந்தரமாக சகஜமான சேவாதாரி ஆவது, ஏனெனில் எளிதாக இருப்பது தான் நிரந்தரம் ஆக முடியும். எனவே நிரந்தர சேவாதாரி என்றால் நிரந்தர மகாதானி ஆவதாகும். வள்ளலின் குழந்தைகளாக இருக்கிறீர்கள், அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். முழுமைத் தன்மையின் அடையாளம் அகண்ட மகாதானியாவது. ஒரு நொடி பொழுது கூட தானம் அளிக்காமல் இருக்க முடியாது. துவாபர் யுகத்திலிருந்து தானம் அளிக்கும் பக்த ஆத்மாக்கள் அநேகர் இருக்கின்றனர், ஆனால் மிகப்பெரிய தானம் செய்பவராக இருந்தாலும் கூட, நிறைந்த பொக்கிஷங்களை தானம் அளிக்கக் கூடியவர் யாரும் கிடையாது. அழியக்கூடிய பொக்கிஷங்கள் மற்றும் பொருட்களைதான் தானம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த சங்கம யுகத்தில் துண்டிக்கப்படாத மற்றும் நிரந்தர மான மகாதானி ஆகிறீர்கள். அகண்ட மகாதானி யாக ஆகியுள்ளேனா என்று தன்னை தானே கேளுங்கள்? அல்லது நேரத்திற்கு ஏற்றாற் போல் தானம் செய்கிறீர்களா? அல்லது வாய்ப்பு கிடைக்கும் பொழுது மட்டும் தானம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறீர்களா?

அகண்ட மகாதானியாக இருப்பவர்கள் மூன்று விதத்தில் எப்பொழுதும் தானம் செய்வதில் பிஸியாக இருக்கிறார்கள். முதலாவதாக மனதினால் சக்திகளை தானம் செய்வது, இரண்டாவதாக வார்த்தைகள் மூலம் ஞானத்தின் தானம் செய்யக்கூடியவர்கள், மூன்றாவது செயல்களினால் குணங்களை தானம் செய்வதாகும். இந்த மூன்று விதத்திலும் தானம் செய்யக் கூடியவர்கள் எளிதாகவே மகாதானி ஆக முடியும். வார்த்தைகளினால் தானம் செய்யக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர் என்ற ரிசல்ட்டை (முடிவு) பார்க்கிறார். மனதினால் தானம் செய்வது என்பது அவரவர்களின் சக்திகளுக்கு தகுந்தவாறு செய்கிறார்கள், மேலும் செயலின் மூலம் குணங்களை தானம் செய்வது மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள். மேலும் தற்சமயத்தில் ஞானம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி, பிராமண ஆத்மாக்களாக இருந்தாலும் சரி, இருவருக்குமே தேவைப்படுவது குணங்களின் தானம் செய்வதாகும். நிகழ்காலத்தில் விசேஷமாக தன்னிடத்தில் அல்லது பிராமண குடும்பத்தில் இந்த விதி முறையை அதிகரியுங்கள்.

இந்த தெய்வீக குணம் அனைத்தையும் விட உயர்ந்த சிரேஷ்ட பிரபுவின் பிரசாதம் ஆகும். இந்த பிரபுவின் பிரசாதத்தை நன்றாக பகிர்ந்தளியுங்கள். எப்பொழுதாவது யாரை யாவது சந்திக்கிறீர்கள் என்றால் ஒருவர் மற்றவருக்கு அன்பினுடைய அடையாளமாக ஸ்தூல மான டோலி (இனிப்பு) வழங்குகிறீர்கள் அல்லவா, அதுபோல ஒருவர் மற்றவருக்கு இந்த குணங்கள் என்ற டோலியை பகிருங்கள். இந்த விதியின் மூலம் சங்கமயுகத்தின் இலட்சிய மான - ஃபரிஸ்தா நிலையிலிருந்து தேவதை ஆவது, இவை எளிதானதாக அனைவரிடத் திலும் வெளிப்படையாக தென்படும். நான் வள்ளலின் குழந்தை தொடர்ச்சியான (நிரந்தரமான) மகாதானி ஆத்மாவாக இருக்கிறேன் என்ற இந்த பயிற்சியை நிரந்தரமாக நினைவில் வையுங்கள் எப்படிப்பட்ட ஆத்மாவாக - அஞ்ஞானியாக இருந்தாலும் சரி, பிராமணர்களாக இருந்தாலும் சரி ஆனால் கொடுக்க வேண்டும். பிராமண ஆத்மாக்களுக்கு ஞானம் ஏற்கனவே இருக்கிறது, ஆனால் இரண்டு விதமான வள்ளல் ஆக முடியும்.

1. எந்த ஆத்மாவிற்கு எந்தவிதமான சக்தி தேவைபடுகிறதோ, அதை அந்த ஆத்மா விற்கு மனதின் மூலம் அதாவது உள்ளுணர்வு மூலம், வைப்ரேஷன் மூலம், சக்திகளை தானம் அதாவது ஒத்துழைப்பு கொடுங்கள்.

2. கர்மத்தின் மூலம் சதா தன்னுடைய வாழ்க்கையில் குணங்களின் மூர்த்தி ஆகி, வெளிப்படையான எடுத்துக்காட்டாக இருந்து மற்றவர்களுக்கு எளிதாக குணங்களை தாரணை செய்வதற்கான உதவி அளியுங்கள். இதைத் தான் குணங்களை தானம் செய்வது என்று கூறப்படுகிறது. தானம் என்றால் ஒத்துழைப்பு கொடுப்பதாகும். இன்றைய காலத்தில் பிராமண ஆத்மாக்களும் கூட கேட்பதற்கு பதிலாக வெளிப்படையாக பார்க்க விரும்பு கிறார்கள். யாருக்காவது சக்திகளை தாரணை செய்வதற்காக அல்லது குணங்களை தாரணை செய்வதற்கான அறிவுரை வழங்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்றால் அப்படிப்பட்ட தாரணை மூர்த்தியாக இருப்பவர்கள் யார் என்று சிலர் நினைக்கிறார்கள் அல்லது கேட்கிறார் கள்? எனவே பார்க்கத் தான் விரும்புகிறார்கள், ஆனால் யாரும் கேட்க விரும்புவதில்லை. யார் ஆகியிருக்கிறார்கள், அனைவரையும் பார்த்தாகி விட்டது என்று ஒருவர் மற்றவர்களிடம் பேசுகிறீர்கள் அல்லவா. ஏதாவது விஷயம் நடக்கிறது என்றால் யாரும் ஆகவில்லை, அப்படி தான் நடக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் இது கவனகுறைவான வார்த்தை களாக இருக்கிறது, யதார்த்தமானதாக (சரியானதாக) இருப்பதில்லை. யதார்த்தம் என்றால் என்ன? பிரம்மா பாபாவை பின்பற்றுங்கள். பிரம்மா பாபா, சதா தன்னை நிமித்தமான உதாரணமாக மாற்றிக்கொண்டார். சதா இந்த இலட்சியம் எப்பொழுதும் இலட்சணத்தில் இருக்கிறதா - யார் முதலில் செய்கிறார்களோ அவர்கள் தான் முதன்மையானவர்கள். அதாவது யார் தன்னை நிமித்தமானவராக வெளிப்படையாக மாற்றிக்கொள்கிறார்களோ, அவர்கள் தான் அர்ஜூன் அதாவது முதல் நம்பரில் வருவதாகும். ஒருவேளை தந்தையை பின்பற்ற வேண்டுமென்றால் மற்றவர்களை பார்ப்பதினால் நம்பர் ஒன்னில் வர முடியாது. நம்பர்வார் ஆகி விடுவார்கள்.

நம்பர் ஒன் ஆத்மாவின் அடையாளம் ஒவ்வொரு சிரேஷ்ட காரியத்தில் நான் நிமித்த மானவராக இருந்து மற்றவர்களுக்கு எளிமையாக (சௌகர்யம்) ஆக்குவதற்காக உதாரணம் ஆக வேண்டும். மற்றவர்களை பார்ப்பது, பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, இணையானவர்களாக இருந்தாலும் சரி ஆனால் மற்றவர்களை பார்ப்பது - இவர்கள் ஆனார்கள் என்றால் நான் மாறுகிறேன், எனவே யார் நம்பர் ஒன் ஆகியிருக்கிறார் களோ, அவர்கள் நம்பர் ஆகிவிடுகிறார்கள் அல்லவா. எனவே தானே இயல்பாகவே நம்பர்வாரில் வந்து விடுவார்கள். எனவே அகண்ட மகாதானி ஆத்மா எப்பொழுதும் தன்னை ஒவ்வொரு நொடியும் மூன்று விதங்களிலும் மகாதானி நிலையின் மூலம் ஏதாவ தொரு தானம் செய்வதில் பிஸியாக இருந்துக் கொள்கிறார்கள். நேரத்திற்கு தகுந்தவாறு சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டு இருப்பார்கள். அவர்களுக்கு வீணானவற்றை பார்ப்பது, கேட்பது அல்லது செய்வதற்கான நேரம் இருக்காது. எனவே மகாதானி ஆகிவிட்டீர்களா? நான் தொடர்ச்சியாக (அகண்ட) ஆகிவிட்டேனா என்று அண்டர்லைன் செய்யுங்கள். ஒரு வேளை இடை இடையில் வள்ளல் தன்மையில் துண்டிப்பு ஏற்படுகிறது என்றால் துண்டிப்பை (பிரிவு) சம்பூரண நிலை என்று சொல்ல முடியாது. தற்சமயத்தில் தங்களுக்குள் விசேஷ கர்மத்தின் மூலம் குணங்களின் வள்ளல் ஆவதற்கான அவசியம் இருக்கிறது. நான் எப்பொழுதும் குணங்களின் மூர்த்தி ஆகி அனைவரையும் குணங்கள் நிறைந்த மூர்த்தி ஆக்குவதற்கான விசேஷ செயல் செய்தே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை ஒவ்வொரு வரும் உருவாக்க வேண்டும். எனவே தன்னுடைய மற்றும் அனைவருடைய பலவீனங் களையும் சமாப்தி செய்வதற்கான விதியில் (சேவையில்) ஒவ்வொருவரும் தன்னை நிமித்த மானவராக முதன்மையானவராக புரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். ஞானம் அதிகமாகவே இருக்கிறது, இப்பொழுது குணங்களை வெளிப்படுத்துங்கள், சர்வ (அனைத்து) குணங்கள் நிறைந்தவராக ஆகி மற்றவர்களையும் ஆக்குவதில் எடுத்துகாட்டாக ஆகுங்கள். நல்லது.

அனைத்து தொடர்ச்சியாக யோகா செய்யும் ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் குண மூர்த்தியாக இருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு நொடியும் மகாதானி யாக மற்றும் மகா சகயோகியான (மிகப்பெரிய உதவியாளர்) விசேஷ ஆத்மாக்களுக்கும், எப்பொழுதும் தன்னை உயர்ந்த தன்மையில் எடுத்துகாட்டாகவும், எளிதாகவும் ஊக்கமளிக் கூடிய, எப்பொழுதும் தன்னை முதன்மையான நிமித்தமானவராக புரிந்து கொண்டு நேரடியாக நிரூபணம் தரக்கூடிய பாபாவிற்கு சமமான ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாதி ஜானகிஜி அவர்களோடு சந்திப்பு (ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளின் சுற்றுப்பயண செய்திகளை கூறி அனைவருடைய நினைவுப்படுத்தினார்). அனைவருடைய நினைவுகளும் வந்து சேர்ந்தன. நாலா பக்கத்திலுமுள்ள குழந்தைகள் சதா பாபாவிற்கு அருகாமையில் இருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் நினைவு செய்கிறீர்கள் என்றால், நெருக்கம் மற்றும் துணையை அனுபவம் செய்கிறீர்கள், இது தான் நிரூபணம் ஆகும். பாபா என்று இதயபூர்வமாக சொல்கிறீர்கள் என்றால் உடனடியாக மனதை கவர்ந்த (திலாராம்) பாபா வந்து சேர்ந்து விடுகிறார். ஆகையால் தான் ஐயா வருகிறேன், வருகிறேன் ஐயா என கூறப்படுகிறது. எங்கு இருந்தாலும் யாராக இருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவரிடமும் வருகிறார். ஆகையால் நினைத்ததும் வந்து விடுகிறார். இந்த அன்பினுடைய விதி உலகத் தினருக்கு தெரியாது. இது பிராமண ஆத்மாக்களுக்கு மட்டும் தான் தெரியும். அனுபவசாலிகள் இந்த அனுபவத்தை தெரிந்திருக்கிறார்கள். விசேஷ ஆத்மாக்களாகிய நீங்கள் தான் இணைந்த சொரூபத்தில் இருக்கிறீர்கள். தனித்திருக்கவே முடியாது. உலகத்தினர் கூறுகிறார்கள் எங்கு பார்த்தாலும் நீங்கள் மட்டுமே தெரிகிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் எங்கு சென்றாலும் பாபாவின் துணை இருக்கிறது, அதாவது நீங்கள் மட்டும் தான் என்னுடன் இருக்கிறீர்கள். எப்படி செய்பவர் உடன் இருக்கிறாரோ, அதுபோல செய்ய வைக்க கூடியவரும் கூடவே இருக்கிறார். ஆகையால் தான் செய்பவர் செய்விப்பவர் என்று சொல்லப்படுகிறது. எனவே உங்கள் அனைவருடைய மனநிலை என்னவாக இருக்கிறது? இணைந்த ரூபம் (கம்பைண்ட்) அல்லவா. செய்விப்பவர் செய்ப வருடன் கூடவே தான் இருக்கிறார், செய்ய வைக்கக்கூடியவர் தனித்து இருப்பதில்லை. இதைத்தான் கம்பைண்ட் (இணைந்த ரூபம்) மனநிலை என்று சொல்லப்படுகிறது. அனை வரும் அவரவர்களது நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். பல ஆத்மாக்களுக்கு முன்பாக உதாரணமாக இருக்கிறீர்கள், எளிமைப்படுத்துவதற்காக. அவ்வாறு தோன்று கிறதல்லவா. கடினமானதை எளிதாக மாற்றுவது - இது தான் தந்தையை பின்பற்றுவதாகும். அப்படித்தான் அல்லவா. நல்ல நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. எங்கு இருந்தாலும், விசேஷமான நடிகனுக்கு விசேஷமான நடிப்பை நடிக்காமல் இருக்க முடியாது. இது தான் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நல்லது. சுற்றி வருவது (உலா வருவது) மிக நன்றாக இருக்கிறது. உலா வந்து விட்டு இனிமையான வீட்டிற்கு வந்து விடுவது, சேவையில் உலா வந்த அநேக ஆத்மாக்களுக்காக சிறப்பான ஊக்கம் உற்சாகம் நிறைந்த சுற்றுலா ஆகும். அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள் அல்லவா. நல்லதிலும் நன்றாகவே இருக்கிறது. நாடகத்தில் எதிர்காலம் நம்மை ஈர்க்கிறது. நீங்கள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள் ஆனால் நாடகத்தில் இல்லையென்றால் என்ன செய்வது. சிந்திக்க வேண்டி யிருக்கிறது. ஏனெனில் சேவையின் உணர்வு இருந்தால் சேவையின் எதிர்காலம் தனது காரியத்தை செய்ய வைக்கிறது. வருவது செல்வது இது தான் விதியாக இருக்கிறது. நல்லது குழு நன்றாக இருக்கிறது.

அவ்யக்த பாப்தாதாவின் தனிப்பட்ட சந்திப்பு

1. பரமாத்மாவின் அன்பின் அனுபவம் செய்வதற்காக துக்கத்தின் அலையிலிருந்து விடுபட்டவராக ஆகுங்கள்.

பாப்தாதா சங்கமயுகத்தில் அநேக பொக்கிஷங்களை கொடுத்திருக்கிறார், அனைத்து பொக்கிஷங் களிலிருந்து உயர்ந்ததிலும் உயர்ந்த பொக்கிஷம் எப்பொழுதும் குஷி என்ற பொக்கிஷமாகும். எனவே இந்த குஷி என்ற பொக்கிஷம் எப்பொழுதும் கூடவே இருக்கிறதா? எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் குஷியை விட்டு விடக்கூடாது. பிரச்சனைகள் நிறைந்த சூழ்நிலைகள் வந்தாலும் கூட நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது சிறிதளவு துக்கம் வந்துவிடு கிறதா? ஏனெனில் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா. ஏனெனில் ஒருபக்கம் துக்கதாமம் இருக்கிறது, மற்றொரு பக்கம் சுகதாமம். துக்கத்தின் அலைகள் பல விஷயங்களில் முன்னால் வருகிறது, ஆனால் தன்னை காப்பாற்றிக் கொள்வது தன்னிடம் தான் உள்ளது. அதனால் துக்கத்தின் விஷயங்கள் காதுகளில் வந்தாலும் கூட, அதனுடைய (துக்கத்தின்) தாக்கம் மனதில் ஏற்படாது. எப்படி கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது தன்னுடைய கையில் உள்ளது. எனவே துக்கமான விஷயங்கள் காதுகளில் வரும், ஆனால் மனதில் தாக்கம் (பாதிப்பு) ஏற்படாது. ஆகையால் விடுபட்டவராகவும் பிரபுவிற்கு (பாபா) அன்பானவராகவும் இருங்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே துக்கத்தின் அலையிலிருந்து விடுபடும் பொழுது பிரபுவிற்கு அன்பானவர் ஆகிவிடுவீர்கள். எந்தளவு விடுபட்டவராக இருக் கிறீர்களோ, அந்தளவு அன்பானவராக இருப்பது. நான் எந்தளவு அன்பானவராக இருக் கிறேன் என்பதை தன்னை தானே பாருங்கள்? எந்தளவு விடுபட்டவராக இருக்கிறீர்களோ, அந்தளவு தானாகவே பரமாத்மா வின் அன்பை அனுபவம் செய்வீர்கள். எனவே எந்தளவு விடுபட்டவனாக இருக்கிறேன், எந்தளவு அன்பானவனாக இருக்கிறேன் என்பதை ஒவ்வொரு நாளும் சோதனை செய்யுங்கள். ஏனெனில் இந்த அன்பானது பரமாத்மாவின் அன்பாகும், இது வேறு யாரிடமும், வேறு எந்த யுகத்திலும் அடைய முடியாது. எந்தளவு அடைய வேண்டுமோ, அந்தளவு இப்பொழுதே அடைய வேண்டும். இப்பொழுது இல்லை யென்றால் எப்பொழுதுமே அடைய முடியாது. மிக சிறிய காலகட்டத்தில் இந்த பரமாத்மா வின் அன்பு பிராப்தி (கிடைக்கிறது) ஆகிறது. எனவே குறுகிய நேரத்தில் மிகுந்த அனுபவம் செய்ய வேண்டும். எனவே சோதனை செய்துக் கொண்டு இருக்கிறீர்களா? உலகத்தினர் குஷிக்காக எவ்வளவு நேரத்தை, செல்வத்தை செலவு செய்கிறார்கள், ஆனால் உங்களுக்கு எளிதாக அழிவற்ற குஷியின் பொக்கிஷம் கிடைத்து விட்டது. ஏதாவது செலவு செய்தீர்களா என்ன? குஷிக்கு முன்னால் என்ன செலவு செய்வீர்கள், என்ன தான் கொடுப்பீர்கள்? எனவே எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்து விட்டேன் என்ற குஷியின் பாடலை பாடிக்கொண்டே இருங்கள். அடைந்து விட்டீர்கள் அல்லவா? ஏதாவது பொருள் கிடைத்து விட்டால் குஷியில் நாட்டியம் ஆடுகிறீர்கள். மற்றவர்களுக்கும் குஷியை பகிர்ந்தளித்துக் கொண்டே இருங்கள். எந்தளவு பகிர்ந்தளிக்கிறீர்களோ, அந்தளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஏனெனில் பகிர்ந்தளிப்பது என்றால் அதிகரிப்பதாகும். யாரெல்லாம் தொடர்பில் வருகிறார்களோ, இவர்களுக்கு ஏதோ உயர்ந்த பிராப்தி கிடைத்திருக்கிறது, இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற அனுபவம் செய்ய வேண்டும். ஏனெனில் உலகத்தில் அனைவரிடமும் எப்பொழுதும் துக்கம் தான் இருக்கிறது, ஆனால் நீங்கள் ஒவ்வொரு நொடியும் குஷியாக இருக்கிறீர்கள். எனவே துக்கமானவர் களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது, இது தான் அனைத்தையும் விட பெரியதிலும் பெரிய புண்ணியமாக இருக்கிறது. அதனால் அனைவரும் தடைகளற்றவராகி பறந்துக் கொண்டே இருக்கிறீர்களா? அல்லது சிறிய சிறிய தடைகள் நிறுத்தி விடுகிறதா? தடைகளுடைய வேலை வருவது, உங்களுடைய வேலை வெற்றியை அடைவதாகும். தடைகள் அதனுடைய வேலையை நல்ல முறையில் செய்துக் கொண்டிருக் கிறது, எனவே மாஸ்டர் சர்வ சக்திவானாகிய நீங்கள் தனது வெற்றி பயணத்தில் எப்பொழுதும் வெற்றியடைந்தவராக இருங்கள். நாம் தடைகளை வென்ற ஆத்மாக்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். தடைகளை வென்றவர்களுக்கு என்ன நினைவு சின்னமாக காட்டப்பட்டிருக்கிறதோ, அதை நடைமுறையில் அனுபவம் செய்கிறீர்கள் அல்லவா. நல்லது.

2. உறுதியான மனநிலையை உருவாக்குவதற்காக மாஸ்டர் சர்வசக்திவான் என்ற பட்டபெயரை நினைவில் வையுங்கள்.

தன்னை எப்பொழுதும் அனைத்து பொக்கிஷங்களில் நிறைந்தவர் அதாவது சம்பன்ன ஆத்மாவாக அனுபவம் செய்கிறீர்களா? ஏனெனில் யார் நிரம்பியவராக இருக்கிறார்களோ, அவர்கள் செழிப்பாக இருக்கிறார்கள். அவர்கள் உறுதியாக இருப்பார்கள், குழப்பத்தில் வர மாட்டார்கள். எந்தளவு வெறுங்கையோடு (காலியாக) இருக்கிறோமோ, அந்தளவு குழப்பம் (தடுமாற்றம்) ஏற்படுகிறது. எந்தவிதமான குழப்பம், எண்ணங்களினால் இருந்தாலும் சரி, வார்த்தைகளின் மூலம் இருந்தாலும் சரி, சம்மந்தம் மற்றும் தொடர்பு மூலமாக இருந்தாலும் சரி, ஒருவேளை எந்த விதத்தில் குழப்பம் இருக்கிறது என்றால் பொக்கிஷங்களில் நிரம்பிய வராக இல்லை என்பது நிரூபணம் ஆகிறது. எண்ணத்திலும் சரி, கனவிலும் சரி உறுதியாக இருக்க வேன்டும். ஏனெனில் எந்தளவு மாஸ்டர் சர்வசக்திவான் என்ற சொரூபத்தின் நினைவை வெளிப்படுத்துகிறீர்களோ, அந்தளவு இவ்வாறான குழப்பங்கள் மறைந்து விடும். எனவே மாஸ்டர் சர்வசக்திவான் என்ற நினைவு வெளிப்படையாகவே தென்பட வேண்டும். எப்படி உடலின் செயல் வெளிப்படையாக தெரிகிறது, மறைந்து இருப்பதில்லை, அதுபோல இந்த பிராமண வாழ்க்கையின் தொழிலும் கூட வெளிப் படையாக தெரிய வேண்டும். எனவே சோதனை செய்யுங்கள் - வெளிப்படுகிறதா அல்லது மறைந்து விடுகிறதா? வெளிபடுகிறது என்றால், அதனுடைய அடையாளம் - ஒவ்வொரு செயலிலும் அவர்களுக்கு குஷி இருக்கும், மற்றவர்களுக்கும் கூட இவர்கள் சக்திசாலி ஆத்மா என்பது அனுபவமாகும். அதனால் குழப்பத் திலிருந்து விடுபட்டு உறுதியாக இருங்கள் என்று சொல்லப்படுகிறது. அச்சல் கர் (நிலையான வீடு) என்பது உங்களுடைய நினைவு சின்னமாகும். நாம் மாஸ்டர் சர்வசக்திவான் என்பது நமது தொழில் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இன்று அனைத்து ஆத்மாக்களும் மிகவும் பலவீனமாக இருப்பதால் பலவீனமாக ஆத்மாக்களுக்கு சக்தி தேவைப்படுகிறது. யார் சக்திகளை கொடுப்பார்கள்? மாஸ்டர் சர்வ சக்திவானாக யார் இருக்கிறார்களோ. அவர்களால் தான் கொடுக்க முடியும். யாரையாவது சந்திக்கிறீர்கள் என்றால் தன்னை பற்றி என்ன சொல்கிறார்கள்? பலவீனமான விஷயங்களை தான் சொல்கிறார்கள் அல்லவா? என்ன செய்ய விரும்புகிறார்களோ, அதை செய்ய முடியவில்லையென்றால் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது சான்று ஆகிறது. மேலும் நீங்கள் என்ன எண்ணங்களை உருவாக்குகிறீர்களோ, அதை செயலில் கொண்டு வர முடிகிறது. எண்ணம் மற்றும் செயல் இரண்டும் சமநிலையில் இருப்பது தான் மாஸ்டர் சர்வசக்திவானின் அடையாளமாகும். எண்ணம் மிக உயர்வாக இருக்கிறது, ஆனால் செயலில் அந்த உயர்ந்த எண்ணங்களை கொண்டு வரமுடிய வில்லை என்றால் இவர்களை மாஸ்டர் சர்வசக்திவான் என்று சொல்ல முடியாது. என்ன வெல்லாம் சிரேஷ்ட எண்ணங்களை உருவாக்குகிறீர்களோ, அதை செயலில் கொண்டு வரமுடிகிறதா அல்லது முடியவில்லையா என்பதை சோதனை செய்யுங்கள். எந்த நேரத்தில் என்ன சக்தி தேவைப்படுகிறதோ, அந்த நேரத்தில் அந்த சக்தி செயலில் வர வேண்டும் - இது தான் மாஸ்டர் சர்வசக்திவானின் அடையாளமாகும். (சக்திகளுக்கு) அழைப்பு கொடுக் கிறீர்கள், தாமதமாக வருகிறது எனபது போன்று இருக்கிறதா? ஏதாவது விஷயம் நடந்த முடிந்த பிறகு நினைவில் வருகிறது, அப்படி அல்ல, இப்படி செய்திருக்க வேண்டும், எனவே இதை நேரத்திற்கு வேலைக்கு உதவாது என்று சொல்லப்படுகிறது. ஸ்துலமான கர்மேந்திரியங்களை கட்டளைப் படி நடத்த முடிகிறது அல்லவா, கைகைகளை எப்பொழுது வேண்டுமோ, எங்கு வேண்டுமோ, அங்கு பயன் படுத்த முடிகிறது, அதுபோல இந்த சூட்சமமான சக்திகளும் தனது கட்டுபாட்டில் வையுங்கள் - எந்த நேரத்தில் எந்த சக்தி தேவைப்படுகிறதோ, அதை செயலில் கொண்டு வர முடியும். எனவே அந்தளவு கண்ட்ரோல் ஃபவர் (கட்டுப்படுத்தும் சக்தி) இருக்கிறதா? விரும்ப வில்லை ஆனால் நடந்து விட்டது என்று யோசிக்காதீர்கள். எனவே தனது கட்டுப்படுத்தும் சக்தியை சோதனை செய்துக் கொண்டே சக்திசாலி ஆகிக் கொண்டே செல்லுங்கள். அனை வரும் பறக்கும் கலையை சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள், சிலர் நடக்கும் கலையிலும், சிலர் பறக்கும் கலையில் இருக்கக் கூடியவர்களா? சில நேரம் பறக்கும் கலையிலும், சில நேரம் ஏறும் கலையிலும், சில நேரம் நடக்கும் கலையிலும் இருக்கிறீர்களா? மாறிக் கொண்டே இருக்கிறதா அல்லது ஒரே இரசனையில் முன்னேறிக் கொண்டேயிருக்கிறீர்களா? ஏதாவது தடைகள் வருகிறது என்றால் எவ்வளவு நேரத்தில் வெற்றி அடைகிறீர்கள்? நேரம் தேவைப் படுகிறதா? ஏனெனில் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள் அல்லவா. எனவே தடை களின் ஞானம் (அறிவு) இருக்கிறது. ஞானத்தின் சக்தியினால் தடைகள் யுத்தம் செய்யாது, ஆனால் தோல்வியை அடைந்து விடும். இதைத் தான் மாஸ்டர் சர்வசக்திவான் என்று சொல்லப் படுகிறது. எனவே அமிர்தவேளையிலிருந்து இந்த தொழிலை வெளிப்படுத்துங்கள் அதன் பிறகு முழு நாளும் சோதனை செய்யுங்கள்.

வரதானம்:

பொறுத்துக் கொள்ளும் சக்தி என்ற கவசத்தை அணிந்துக் கொண்டு, சம்பூரண நிலையை மணமுடிக்கக் கூடிய தடைகளின் மீது வென்றவர் ஆகுக.

தன்னுடைய சம்பூரண நிலையை மணமுடிப்பது என்றால் அடைவதற்காக கவனக் குறைவு என்ற நங்கூரத்தை எடுத்துவிட்டு சகிப்புத் தன்மையில் உறுதியாக இருங்கள். சகித்துக் கொள்ளும் தன்மை தான் அனைத்து தடைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற் கான கவசமாகும். யார் இந்த கவசத்தை அணிந்துக் கொள்ளவில்லையோ, அவர்கள் நலிந்து போய்விடுகிறார்கள். பிறகு பாபாவினுடைய விஷயங்களை பாபாவிற்கே சொல்கிறார் கள், சில நேரங்களில் மிகவும் ஊக்கம் உற்சாகத்துடம் இருக்கிறோம், சில நேரம் மன முடைந்து போய்விடுகிறது. இப்பொழுது இறக்குவது ஏறுவது என்ற படிகளை விட்டு எப்பொழுதும் ஊக்கம் உற்சாகத்தில் இருந்தீர்கள் என்றால் சம்பூரண நிலைக்கு அருகாமையில் சென்று விடலாம்.

சுலோகன்:

நினைவு மற்றும் சேவையின் சக்தி மூலம் பல ஆத்மாக்கள் மீது இரக்கம் காட்டுவது தான் கருணை மனமுடையவர் ஆவதாகும்.,

 Download PDF

Post a Comment

0 Comments