Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 28.01.23

 

28-01-2023  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! ஒரு மன்மனாபவ என்ற மகாமந்திரத்தின் மூலம் புத்திசாலி ஆகின்றீர்கள். இந்த மந்திரமே அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவிக்கவல்லது ஆகும்.

கேள்வி:

முழு ஞானத்தின் சாரம் என்ன? மன்மனாபவ ஸ்திதியில் இருக்கக்கூடியவர்களின் அடையாளம் என்ன?

பதில்:

இப்பொழுது நாம் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்பதே முழு ஞானத்தின் சாரமாகும். இது சீ, சீ உலகமாகும். இதை விட்டுவிட்டு நாம் நம்முடைய வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஒரு வேளை, இந்த நினைவு இருந்தது என்றால் கூட அது மன்மனாபவ என்றாகிவிட்டது. மன்மனாபவ ஸ்திதியில் இருக்கக்கூடிய குழந்தைகள் சதா ஞானத்தை ஆழ்ந்து சிந்தனை (விசார் சாகர் மந்தன்) செய்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் பாபாவிடம் இனிமையிலும் இனிமையான உரையாடல் செய்வார்கள்.

கேள்வி:

எந்தப் பழக்கத்திற்கு வசமான ஆத்மாவினால் தந்தையின் நினைவில் இருக்க முடியாது?

பதில்:

ஒருவேளை, தவறான சித்திரத்தைப் பார்ப்பதற்கான, தவறான சமாச்சாரத்தைப் படிப்பதற் கான பழக்கம் இருந்தது என்றால் தந்தையின் நினைவு இருக்கமுடியாது. சினிமா நரகத்தின் வாசல் ஆகும். அது மனநிலையை கெடுத்துவிடுகிறது.

ஓம் சாந்தி. ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரியவைக்கின்றார். யாருக்கு அறிவு குறைவாக உள்ளதோ, அவர்களுக்கே புரியவைக்கப்படுகிறது. இப்பொழுது நீங்கள் மிகவும் புத்திசாலிகள் ஆகிவிட்டீர்கள், ஆகையினால், இவர் நம்முடைய எல்லையற்ற தந்தை யும் ஆவார்., எல்லையற்ற ஆசானும் ஆவார் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். சிருஷ்டி யினுடைய முதல், இடை மற்றும் கடை நிலையைப் பற்றிய இரகசியத்தையும் புரிய வைக் கின்றார். மாணவர்களின் புத்தியில் ஞானம் இருக்க வேண்டும் அல்லவா. மேலும் பிறகு தந்தை தன்னுடன் அவசியம் அழைத்துச் செல்வார். ஏனெனில், இது பழைய சீ, சீ உலகம் என்பதை தந்தை அறிந்திருக்கின்றார். இந்தப் பழைய உலகத்திலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக நான் வந்திருக் கின்றேன். ஓஹோ! இவர் நம்முடைய எல்லையற்ற தந்தையும் ஆவார், பிறகு, மிகவும் உயர்ந்த படிப்பினையையும் கொடுக்கின்றார் என்ற எண்ணம் இங்கே அமர்ந்திருக்கும்பொழுது குழந்தைகளுடைய மனதில் அவசியம் எழும் என்பதை பாபா புரியவைக்கின்றார். முழு படைப்பினுடைய முதல், இடை மற்றும் கடை நிலையைப் பற்றிய இரகசியத்தையும் புரியவைத்திருக்கின்றார். இவை அனைத்தையும் நினைவு செய்வது கூட மன்மனாபவ ஆகும். இதைக் கூட உங்களுடைய சார்ட்டில் எழுத முடியும். இது மிகவும் சுலபமானதாகும். நீங்கள் வேறு எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால், எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும், சுற்றினாலும் இந்த நினைவு இருக்க வேண்டும். அற்புதமான பொருள் நினைவு செய்யப்படுகின்றது. பாபாவை நினைவு செய்வதன் மூலம், படிப்பு படிப்பதன் மூலம் நாம் மீண்டும் விஷ்வத்தின் எஜமானர் ஆகின்றோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இந்த சிந்தனை புத்தியில் வந்துகொண்டே இருக்க வேண்டும். பஸ், இரயில் போன்ற எதில் அமர்ந்திருந்தாலும் சரி, ஆனால், புத்தியில் நினைவு இருக்க வேண்டும். முதன் முதலில் குழந்தைகளுக்குத் தந்தை வேண்டும். இவர் ஆத்மாக்களாகிய நம்முடைய ஆன்மிக எல்லையற்ற தந்தை ஆவார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சகஜ நினைவை ஏற்படுத்து வதற்காக பாபா வழி சொல்கின்றார். என் ஒருவரை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய அரைக்கல்பத்தின் விகர்மங்கள் (பாவ கர்மங்கள்) அனைத்தும் யோகம் (நினைவு) என்ற நெருப்பில் எரிந்து சாம்பலாகிவிடும். ஜென்ம ஜென்மங் களாக அதிகமான யக்ஞம், ஜபம், தவம் போன்றவை செய்திருக்கிறீர்கள். இவை அனைத்தும் ஏன் செய்கிறோம், இதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்? என்பது பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாது. கோவில் களுக்குச் செல்கின்றனர், அதிக பக்தி செய்கின்றனர், இவை அனைத்தும் பரம்பரையாக இருந்து வருகிறது என நினைக்கின்றனர். சாஸ்திரங்களைப் பற்றிக் கூறும்பொழுது கூட இது பரம்பரை யாக இருந்துவருகிறது என்று கூறுவார்கள். ஆனால், சொர்க்கத்திலோ சாஸ்திரங்கள் கிடையாது என்பது மனிதர்களுக்குத் தெரியவே தெரியாது. சிருஷ்டியினுடைய ஆரம்பத் திலிருந்தே இவை அனைத்தும் இருந்து வந்திருக்கிறது என்று அவர்கள் நினைக்கின்றனர். யார் எல்லையற்ற தந்தை என்பதை எவருக்கும் அவர்கள் கூறமுடியாது. இங்கே எல்லைக்குட் பட்ட தந்தை அல்லது எல்லைக்குட்பட்ட ஆசிரியர் கிடையாது. எல்லைக்குட்பட்ட ஆசிரியர் மூலம் நீங்கள் அனைத்தையும் படித்திருக்கிறீர்கள். அதைப் படித்து தான் வேலை செய்கின்றனர், வருமானம் செய்கின்றனர். நம்முடைய இந்த எல்லையற்ற தந்தைக்குத் தந்தை எவரும் இல்லை, மேலும், இவர் எல்லையற்ற ஆசிரியரும் ஆவார், இவருக்கு எந்த ஆசிரியரும் கிடையாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்த தேவதைகளுக்கு யார் கற்பித்தார்? என்பது அவசியம் நினைவு வர வேண்டும் அல்லவா. இது கூட மன்மனாபவ ஆகும். இந்தப் படிப்பை வேறு எங்கும் இவர் படித்திருக்கவில்லை. சுயம் தந்தையே ஞானக் கடல் ஆவார். இவருக்கு எவராவது கற்பித்திருப் பார்களா என்ன? அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார் மற்றும் சைத்தன்யமானவர், ஞானக்கடல் ஆவார். சைத்தன்யமாக இருக்கும் காரணத்தினால் மனித சிருஷ்டி என்ற மரத்தின் ஆதியிலிருந்து இறுதி வரை உள்ள அனைத்து இரகசியத்தைக் கூறுகின்றார். இறுதியில் வந்து ஆதியின் ஞானத்தைச் சொல் கின்றார். ஹே குழந்தைகளே! யாருடைய உடலில் நான் வீற்றிருக்கின்றேனோ அவர் மூலம் நான் ஆதியிலிருந்து இந்த சமயம் வரையிலான அனைத் தையும் கூறுகின்றேன் என்று கூறுகின்றார். இறுதியைப் பற்றி பின்னால் புரியவைப்போம். இப்பொழுது இறுதிக்காலம் ஆகும் என்பதைப் போகப்போக நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஏனெனில், அந்த சமயத்தில் நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்திருப்பீர்கள். மேலும், இந்த பழைய சீ, சீ உலகத்தின் விநாசம் ஆகப்போவதற்கான அடையாளங்களையும் பார்ப்பீர்கள் இது ஒன்றும் புதிய விசயம் அல்ல. அனேக முறை பார்த்திருக்கிறீர்கள் மற்றும் பார்த்துக் கொண்டே .இருப்பீர்கள். கல்பத்திற்கு முன்பும் இராஜ்யத்தை அடைந்திருந்தீர்கள், பிறகு, இழந்து விட்டீர்கள், இப்பொழுது மீண்டும் அடைந்துகொண்டிருக்கிறீர்கள். பாபா நமக்குக் கற்பிக்கின்றார். நாம் தான் விஷ்வத்தின் எஜமானர்களாக இருந்தோம், பிறகு 84 பிறவிகள் எடுத்தோம், பிறகு, பாபா விஷ்வத்தின் எஜமானர் ஆக்குவதற்காக அதே ஞானத்தைக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். பாபா ஆசிரியராகவும் இருக்கின்றார் என்பதை நீங்கள் மனதில் புரிந்திருக்கிறீர்கள். நல்லது, ஒருவேளை, தந்தையின் நினைவு வரவில்லை என்றால் ஆசிரியரை நினைவு செய்யுங்கள். ஆசிரியரை எப்பொழுதாவது மறப்பார்களா என்ன! ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். ஆம், மாயை கவனக் குறைவை ஏற்படுத்துகிறது, அது உங்களுக்குத் தெரிவதில்லை. மாயை கண்களில் முற்றிலும் தூசியைப் (மண்ணை) போட்டுவிடுகிறது. நமக்கு பகவான் கற்பிக்கின்றார் என்பதை முற்றிலும் மறந்துவிடுகின்றனர். தந்தை ஒவ்வொரு விசயத்தைப் பற்றிய ஞானம் அளிக்கின்றார். இது எல்லையற்ற ஞானம் ஆகும். அது எல்லைக்குட்பட்டது ஆகும். இந்த எல்லையற்ற ஞானத்தை பாபா குழந்தை களாகிய உங்களுக்கு கல்ப கல்பமாகக் கொடுக்கின்றார். நல்லது. அதிகமாகப் படிக்கமுடிய வில்லை என்றாலும் பரவாயில்லை பாபா என்ற ரூபத்தில் நினைவு செய்யுங்கள். அவருக்குத் தந்தை எவரும் கிடையாது, அவர் அனைவருடைய தந்தை ஆவார். ஆனால், அனைவரும் அவருடைய குழந்தைகள் ஆவர். சிவபாபா யாருடைய குழந்தை? என்பதை எவராலும் கூறமுடியாது. அவர் எல்லையற்ற தந்தை ஆவார். நாம் எல்லையற்ற தந்தையினுடையவர் களாக ஆகியிருக்கிறோம் என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். நம்முடைய இந்தக் கல்வி கூட அற்புதமானதாகும். மேலும், பிராமணர்களாகிய நாம் கற்கின்றோம். தேவதை, சத்திரியர், வைசியர், சூத்திரர் இந்தப் படிப்பை படிக்க முடியாது. தந்தையினுடைய இந்த ஞானமே முற்றிலும் தனிப்பட்டது ஆகும். உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ள முடியாது. நாம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகின்றோம் என்ற குஷி குழந்தைகளாகிய உங்களுக்கு அளவு கடந்து இருக்க வேண்டும். இப்பொழுது உயர்ந்த பதவியை அடைவதற்காக நன்றாக முயற்சி செய்ய வேண்டும். சொர்க்கத்திற்கோ அனைவரும் செல்லமாட்டார்கள். ஒருவேளை, ஞானம் மற்றும் யோகத்தின் (நினைவின்) தாரணை இல்லை என்றால் உயர் பதவி கிடைக்காது.

16 கலைகள் சம்பூரணமானவர் ஆவதற்கு நினைவில் இருப்பதற்கான அதிக உழைப்பு செய்ய வேண்டும் என்று பாபா கூறுகின்றார். யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருக் கின்றேனா? என்று பார்க்க வேண்டும். நாம் சுகத்தைக் கொடுக்கும் வள்ளலின் குழந்தைகள் ஆவோம். அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூலம் எவருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது. இந்த நேரத்தில் நீங்கள் என்ன படிக்கிறீர்களோ, அதன் மூலம் நீங்கள் மலர் போன்றவர்கள் ஆகின்றீர்கள். இந்த வருமானம் தான் உங்களுடன் வரக்கூடியதாகும். இதில் எந்தவொரு புத்தகம் போன்றவற்றைப் படிப்பதற்கான அவசியமே கிடையாது. அந்தப் படிப்பில் எத்தனை புத்தகம் முதலியவைகளைப் படிக்கவேண்டியதாக உள்ளது. இந்த பாபாவின் ஞானம் அனைத்தையும்விட தனிப்பட்டது மற்றும் மிகவும் சுலபமானதாகும். ஆனால், அனைத்தும் குப்தமானவை (இரகசியமானது) ஆகும். இது என்ன படிப்பு படிக்கின்றோம்? என்பதை உங்களைத் தவிர எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அற்புதமான கல்வியாகும். ஒரு பொழுதும் ஆப்சன்ட் (ஆஜராகாமல்) ஆகக்கூடாது என்று தந்தை கூறுகின்றார். படிப்பை ஒரு பொழுதும் விடக்கூடாது. பாபாவிடம் அனைவருடைய பதிவேடு வருகின்றது. இவர்கள் 10 மாதங்கள் ஆப்சன்ட் ஆகியிருக்கிறார்கள், இவர்கள் 6 மாதங்களாக இருக்கிறார்கள் என்பதைப் பதிவேட்டின் மூலம் பாபா புரிந்துகொண்டுவிடுகின்றார். சிலரோ போகப்போக படிப்பையே விட்டுவிடுகின்றனர். இது மிகவும் அற்புதமான பொருளாகும். இத்தகைய அற்புதமான பொருள் வேறு எதுவுமே இருக்காது. கல்ப கல்பமாக குழந்தைகளாகிய உங்களை தந்தை வந்து சந்திக் கின்றார். இந்த சாகார பாபாவோ மறுபிறவி எடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவர் 84 பிறவிகளின் சக்கரத்தில் வருகின்றார், தத்தத்வம் (நீங்களும் அவ்வாறே வருகிறீர்கள்), இது விளையாட்டு ஆகும் அல்லவா. விளையாட்டு ஒருபொழுதும் மறக்கப் படுவதில்லை. விளையாட்டு எப்பொழுதும் நினைவில் இருக்கும்.

ஒன்று இந்த உலகம் நரகமாகும் மற்றும் இதிலும் குறிப்பாக இந்த பயாஸ்கோப் (சினிமா) நரகம் ஆகும் என்பதை பாபா புரியவைக்கின்றார். அங்கே செல்வதனால் மனநிலை மிகவும் கெட்டு விடுகிறது. செய்தித் தாளில் கூட ஏதாவது நல்ல நல்ல சித்திரங்களைப் பார்க்கிறார்கள் என்றால் அதிலும் புத்தி செல்கிறது, இவர்கள் அழகாக இருக்கிறார்கள், இவர்களுக்குப் பரிசு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அதை ஏன் பார்க்க வேண்டும்? இந்த முழு உலகமுமே அழிந்து போகப்போகிறது என்பதை புத்தியில் புரிந்திருக்கிறீர்கள். நீங்கள் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். இத்தகைய பொருட்களைப் பார்க்காதீர்கள், சிந்தனை செய்யா தீர்கள். இதுவோ பழைய உலகத்தின் சீ, சீ (அழுக்கான) சரீரம் ஆகும். இதை என்ன பார்ப்பது! ஒரு தந்தையை மட்டுமே பார்க்க வேண்டும். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே இலட்சியம் மிக உயர்ந்ததாகும் என்று பாபா கூறுகின்றார். மாயை ஒன்றும் குறைந்தது அல்ல. மாயையைப் பாருங்கள், எவ்வளவு பகட்டாக உள்ளது! அந்தப் பக்கம் விஞ்ஞானம் (சயின்ஸ்) உள்ளது மற்றும் இங்கே உங்களுடைய அமைதி (சைலன்ஸ்) உள்ளது. முக்தியை அடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இங்கே உங்களுடைய இலட்சியமே ஜீவன் முக்தியை அடைவதாகும். ஜீவன்முக்தியை அடைவதற்கான வழியை எவராலும் கூற முடியாது. சந்நியாசிகள் போன்ற எவரும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. இல்லறத்தில் இருந்து கொண்டு தூய்மை ஆகவேண்டும் என்று அவர்கள் எவருக்கும் புரியவைக்க முடியாது. இதை ஒரே ஒரு தந்தை மட்டுமே புரியவைக்கின்றார். பக்தி மார்க்கத்தில் நேரம் விரயமாகித் தான் வந்திருக்கிறது. எத்தனை தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன! தவறு செய்து செய்து ஒன்றும் அறியாதவர்கள் ஆகிவிட்டீர்கள். இந்த கடைசிப் பிறவி 100 சதவிகிதம் தவறுகள் நிறைந்தது ஆகும். கொஞ்சம் கூட புத்தி வேலை செய்வது இல்லை. இப்பொழுது பாபா உங்களுக்குப் புரிய வைக்கின்றார், ஆகையினால் நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டு விட்டீர்கள், எனவே, பிறருக்கும் கூடப் புரியவைக்கிறீர்கள். உங்களுக்குத் தான் குஷி கூட அளவற்றதாக உள்ளது. இந்தத் தந்தைக்கு தந்தை எவரும் கிடையாது, ஆசிரியர் எவரும் கிடையாது என்பது அதிசயமானது அல்லவா. பிறகு, இவர் எங்கிருந்து கற்றுக் கொண்டார்! மனிதர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இவருக்கு அவசியம் யாராவது குரு இருப்பார் என்று அதிகமானோர் நினைக்கின்றனர். ஒருவேளை, இவர் கூட குருவிடமிருந்து கற்றிருக் கின்றார் என்றால் பிறகு அந்த குருவிற்கு வேறு சில சிஷ்யர்களும் இருந்தாக வேண்டும். இவர் ஒருவர் மட்டும் சிஷ்யராக இருக்கமாட்டார். குருவிற்கு அனேக சிஷ்யர்கள் இருப்பார்கள். ஆகாகானிற்குப் பாருங்கள் எத்தனை சிஷ்யர்கள் உள்ளனர்! அவர்களுக்கு குரு மீது எவ்வளவு மரியாதை உள்ளது பாருங்கள்! அவருக்கு வைரங்களை எடைக்கு எடை கொடுக்கின்றார்கள். நீங்கள் எதை எடைக்கு எடை கொடுப்பீர்கள்? இவர் அனைவரையும் விட சுப்ரீம் (மேலானவர்) ஆவார். இவருடைய எடை எவ்வளவு இருக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள்? எடை போட்டீர்கள் என்றால் எவ்வளவு இருக்கும்? ஏதாவது ஒரு பொருளைக் கொடுக்க முடியுமா? சிவபாபாவோ புள்ளி அல்லவா. தற்காலத்தில் அதிகமாக எடைக்கு எடை கொடுக்கிறார்கள். சிலர் தங்கத்தில், சிலர் வெள்ளியில், பிளாட்டினத்தில் கூட கொடுக்கிறார்கள். அது தங்கத்தை விட விலை உயர்ந்ததாகும். அந்த உலகாய குரு உங்களுக்கு சத்கதியைக் கொடுப்பதில்லை என்பதை இப்பொழுது தந்தை புரியவைக்கின்றார். சத்கதிக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். அவரை எதனுடன் எடை போடுவது? மனிதர்கள் பகவான் பகவான் என்று மட்டும் கூறிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவர் தந்தையும் ஆசிரியரும் ஆவார் என்பதை அறியவில்லை. எவ்வளவு சாதாரணமாக அமர்ந்து இருக்கின்றார்! குழந்தைகளின் முகத்தைப் பார்ப்பதற்காக கொஞ்சம் உயரத்தில் அமர்ந்திருக்கின்றார். உதவி யாளர்களாகிய குழந்தைகள் இல்லாமல் நான் எவ்வாறு ஸ்தாபனை செய்ய முடியும்? யார் அதிகமாக உதவி செய்கிறார்களோ, அவசியம் பாபா அவர்களிடத்தில் அன்பு செலுத்துவார். லௌகீகத்தில் ஒரு மகன் 2000 சம்பாதிப்பார், மற்றொரு மகன் 1000 சம்பாதிப்பார். எனில், தந்தைக்கு யார் மீது அன்பு இருக்கும்? ஆனால், தற்காலத்திலோ குழந்தைகள் தந்தை கூறுவதை எங்கே கேட்கிறார்கள்! இந்த இந்தக் குழந்தைகள் மிக நல்ல உதவியாளர்கள் என்பதை எல்லையற்ற தந்தையும் பார்க்கின்றார். குழந்தைகளைப் பார்த்து பார்த்து பாபா மகிழ்ச்சி அடைகின்றார். ஆத்மா குஷி அடைகின்றது. கல்ப கல்பமாக நான் வருகின்றேன் மற்றும் குழந்தைகளைப் பார்த்து மிகுந்த குஷி அடைகின்றேன். கல்ப கல்பமாக இவர்கள் என்னுடைய உதவியாளர்கள் ஆகின்றார்கள் என்பதை நான் அறிவேன். பாபாவினுடைய இந்த அன்பானது கல்ப கல்பத்திற்கானது ஆகிவிடுகின்றது. பாபா நம்முடைய தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக் கின்றார், குருவாகவும் இருக்கின்றார் என்பதை எங்கே அமர்ந்திருந்தாலும் நீங்கள் புத்தியில் நினைவு செய்யுங்கள். அவரே அனைத்தும் ஆவார். ஆகவே, அவரையே அனைவரும் நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் எவரும் நினைவு செய்ய மாட்டார்கள். ஏனெனில், 21 பிறவி களுக்காக தந்தை படகைக் கரை சேர்த்து விடுகின்றார். இவ்வாறு சிந்தனை செய்து குழந்தை கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் அத்தகைய தந்தையினுடைய சேவை செய்ய வேண்டும் என்ற குஷி இருக்க வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இவர் எல்லையற்ற தந்தை ஆவார். தந்தை தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். தந்தை தான் நம் அனைவரை யும் தன்னுடன் கூடவே அழைத்துச் செல்கின்றார். இத்தகைய ஞானத்தைப் புரியவைப்பதன் மூலம் சர்வவியாபி என்று கூற முடியாது. வினாச காலம் விபரீத (அன்பற்ற) புத்தி வினஷ்யந்தி (அழிவு) என்று தந்தை கூறியிருக்கின்றார். அவர்கள் அனைவரும் அழிந்துவிடுவார்கள், நீங்கள் வெற்றி அடைவீர்கள். நீங்கள் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துகொண்டு இருக்கிறீர்கள். ஆத்மாக்களின் தந்தை அமர்ந்து ஆத்மாக்களுக்குப் புரியவைக்கின்றார். இத்தகைய அதிசயமான விசயங்களை அனைவருக்கும் சொல்ல வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகுகாலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கியமான சாரம்

1. சுகத்தைக் கொடுக்கும் வள்ளலின் குழந்தைகள் நாம், எனவே, நாம் அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். எண்ணம், சொல், செயலால் எவருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது.

2. கல்வி மற்றும் கற்பிக்கக்கூடியவர் ஆகிய இரண்டுமே அற்புதமானதாகும். அத்தகைய அற்புதமான படிப்பை ஒருபொழுதும் கூட தவறவிடக்கூடாது. இந்த படிப்பை படிக்க வராமல் இருக்கக்கூடாது (ஆப்சன்ட் ஆகக்கூடாது).

வரதானம்:

சதா ஒவ்வொரு நாளும் சுயம் தானும் உற்சாகத்தில் இருந்து மற்றும் அனைவருக்கும் உற்சாகத்தை வழங்கக்கூடிய ஆன்மிக சேவாதாரி ஆகுக.
குழந்தைகளே! ஒவ்வொரு நாளும் சுயம் தானும் உற்சாகத்தில் இருங்கள், மேலும், அனைவருக்கும் உற்சாகத்தை வழங்கக்கூடிய உற்சவத்தைக் கொண்டாடுங்கள் என்றுபாப்தாதா அனைத்து ஆன்மிக சேவாதாரி குழந்தைகளுக்கு அன்பான இந்தப் பரிசை வழங்குகின்றார்கள். இதனால் சமஸ்காரம் ஒத்துப்போவதற்கும், சமஸ்காரத்தை அழிப்பதற்கும் என்ன உழைப்பு செய்யவேண்டி இருக்கிறதோ, அது முடிந்துவிடும். இந்த உற்சவத்தை எப்பொழுதும் கொண்டாடினீர்கள் என்றால் அனைத்து பிரச்சனைகளும் அழிந்து போய்விடும். பிறகு, நேரத்தையும் செலவிட வேண்டியதில்லை, சக்திகளையும் கூட பயன்படுத்தத் தேவை யில்லை. குஷியில் நடனமாடக்கூடிய, பறந்து செல்லக்கூடிய ஃபரிஷ்தா ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:

நாடகத்தின் இரகசியத்தைப் புரிந்து எதுவும் புதிதல்ல என்ற பாடத்தைப் பக்கா (உறுதி) செய்யக்கூடியவர்கள் தான் கவலையற்ற மகாராஜா ஆவார்கள்.

 Download PDF

Post a Comment

0 Comments