02-02-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே
! ஒரு ஈஸ்வரனின்
வழிதான் உயர்ந்த
வழி, அந்த
வழிப்படி நடந்தால்
தான் நீங்கள்
உண்மையான தங்கமாக
மாறுவீர்கள். மற்ற
அனைத்து வழிகளும்
பொய்யாக மாற்றக்கூடியது.
கேள்வி:
எந்த பாகம் ஒரு ஞானக்கடல் பாபாவிடம் நிறைந்திருக்கிறது. அது வேறு எந்த மனித ஆத்மாவிலும் இல்லை?
பதில்:
ஆத்மாவாகிய எனக்குள் பக்தர்களை பாதுகாக்கக்கூடிய மற்றும் அனைவருக்கும் சுகத்தை அளிக்கக்கூடிய
பாகம் இருக்கின்றது
என பாபா கூறுகின்றார். ஞானக்கடல் தந்தையாகிய நான் அனைத்து குழந்தைகளுக்கும்
அழிவற்ற ஞானத்தின் மழை பொழிகிறேன். இந்த ஞான ரத்தினங் களை யாரும் மதிப்பிட முடியாது. நான் விடுவிக்கக்கூடியவன், ஆன்மீக வழிகாட்டியாகி ஆத்மாக் களாகிய உங்களைத் திரும்ப சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். இது அனைத்தும் என்னுடைய நடிப்பாகும். நான் யாருக்கும் துக்கம் அளிக்க வில்லை. ஆகவே அனைவரும் என்னை கண்களில் வைத்துக் கொள்கிறார்கள்.
இராவணன் எதிரி துக்கம் அளிக்கிறான். ஆகையால் அவனுடைய கொடும்பாவியை செய்து எரிக்கிறார்கள்.
பாடல்: யார் தந்தையுடன் இருக்கிறார்களோ.....
ஓம் சாந்தி.
பாபா ஓம்சாந்தி என்பதன் பொருளை குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கிறார். ஓம் என்றால் நான் ஆத்மா, அவ்வளவு தான். பொருள் எவ்வளவு சிறியது,
நான் கடவுள் என்பதல்ல. பண்டிதர்களிடம் ஓம் என்பதன் பொருள் என்ன,
என கேட்டால் அவர்கள் மிகவும் நீளமாகச் சொல்வார்கள்.
மேலும் யதார்த்தத்தைக் கூற மாட்டார்கள்.
யதார்த்தம் மற்றும் பொய், சத்தியம் மற்றும் அசத்தியம்.
சத்தியமானவர் ஒரே ஒரு தந்தை தான். மற்றபடி இச்சமயமோ அசத்தியத்தின் இராஜ்யம் தான் இருக்கிறது. இராம இராஜ்யத்தை தான் சத்தியத்தின் இராஜ்யம் என்பார்கள். இராவண இராஜ்யத்தை அசத்தியத்தின் இராஜ்யம் என்பார்கள்.
அவர்கள் பொய்யானதைத் தான் கூறுகிறார்கள். பாபா சத்தியமானவர்,
அவர் அனைத்து சத்தியத்தையும் கூறி உண்மையான தங்கமாக மாற்றுகின்றார். பிறகு மாயை அசத்தியமாக மாற்றுகின்றது. மாயை நுழைந்திருக்கின்ற காரணத்தினால் மானிடர்கள் எதைக் கூறினாலும் பொய்யை தான் கூறுவார்கள்.
இதற்கு அசுர வழி என்று கூறப்படுகிறது. பாபாவுடையது தான் ஈஸ்வரிய வழியாகும். அசுர வழிப்படி நடப்பவர்கள் பொய்யைத் தான் கூறுவார்கள். உலகத்தில் அசுர வழிகள் பல உள்ளன.
குருக்களும் பலர் இருக்கின்றார்கள். அவர்களுடையதை ஸ்ரீமத் என கூறமாட்டார்கள். ஒரு ஈஸ்வரனுடைய வழியைத் தான் ஸ்ரீமத் என்பார்கள். இப்போது நாம் ஸ்ரீமத் படி நடந்து உயர்ந்தவர்களாக மாறு கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனைவரையும் விட உயர்ந்தவர் பரம்பிதா பரமாத்மா ஆவர்.
அவர் இருப்பது உயர்ந்ததிலும் உயர்ந்த இடம் ஆகும்.
அனைத்து பக்தர்களும் அவரை நினைக்கிறார்கள். பக்தர்கள் ஸ்ரீமத்தை நினைக்கிறார்கள் என்றால் நிச்சயமாக சிலர் அசுர வழியிலும் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் ஸ்ரீமத்படி சிரேஷ்ட மானவர்களாக மாறு கிறீர்கள்.
பிறகு அங்கே பகவான் என கூறி, நினைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
தேவி தேவதைகள் நினைவு செய்வதற்கு அவர்களுக்கு எந்த துக்கமும் இல்லை.
பக்தர்களுக்கோ அளவற்ற துக்கம் இருக்கின்றது.
இப்போது நிறைய துக்கத்தின் மலை விழப்போகிறது. மகாபாரத யுத்தம் மனிதர்களைப் பொருத்தவரை துக்கத்தின் மலை யாகும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு சுகத்தின் மலையாகும்.
துக்கத்திற்குப் பிறகு நிச்சயம் சுகம் வர வேண்டும்.
இந்த அழிவிற்குப் பின் உங்களுடைய இராஜ்யம் வரவேண்டும்.
பல தர்மங்கள் அழிகிறது. மேலும் எந்த தர்மம் இப்போது மறைந்திருக்கிறதோ அது உருவாகிறது.
அதாவது இந்த மகாபாரத போரின் மூலமாக சொர்க்கத் தின் வாசல் திறக்கின்றது. இந்த வாசல் மூலமாக யார் செல்வார்கள்.
யார் இராஜயோகத்தை கற்றுக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களே. சொல்லிக் கொடுக்கக்கூடியவர் தந்தையாவார்.
யார் தலைவனுடன் இருக்கிறார் களோ அவர்களுக்கு ஞான மழை பொழிகிறது.
தலைவன் என்று தந்தைக்குக் கூறப்படு கிறது. அந்த மழையோ தண்ணீரின் கடலில் இருந்து வருகிறது. இது அழிவற்ற ஞான ரத்தினங்களின் மழையாகும்.
யார் ஞானக்கடலான தலைவனோடு இருக்கிறார் களோ அவர்களுக்கு அழிவற்ற ஞான ரத்தினங்களின் மழை பொழிகிறது. இந்த அழிவற்ற ஞான ரத்தினங்கள் உங்களுடைய புத்தி என்ற பையில் தாரணை ஆகிறது. கல்வி புத்தியில் தான் தாரணை ஆகிறது அல்லவா? ஆத்மா மனம் புத்தியுடன் இருக்கிறது என்றால்,
ஆத்மா கிரகிக்கின்றது. எப்படி ஆத்மாவிற்கு இந்த உடல் இருக்கின்றதோ அதே போன்று ஆத்மா விற்கு மனம் புத்தி இருக்கின்றது.
புத்தியின் மூலம் கிரகிக்கின்றது. யோகத்தில் இருக்கும் பொழுது தான் கிரகிக்கின்றது (தாரணை செய்கிறது).
இந்த பாபா தான் வந்து மிகவும் எளிதான விஷயங்களைப் புரிய வைக்கின்றார். மனிதர்கள் மிகவும் கடினமாக விஷயங் களைக் கூறிவிட்டனர். சாஸ்திரங்களில் கூட பல வழிகள் உள்ளன.
கீதையை நிறைய பிரச்சாரம் செய்கிறார்கள். அத்தியாயத்தின் பொருள் நிறைய கூறுகிறார்கள். எத்தனை விதமான கீதைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். இவருடைய வேதம், இவருடைய சாஸ்திரம் என்று வேறு எந்த சாஸ்திரத்தையும் எழுதவில்லை.
காந்தியின் கீதை,
தாகூரின் கீதை,
ஞானேஸ் வரரின் கீதை, அஷ்டாவக்கிரரின் கீதை...... என கீதைக்கு பல பெயர்கள் வைத்திருக்கின்றனர். இவ்வாறு வேத சாஸ்திரங்களுக்குக் கூறவில்லை.
ஆனால் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. இந்த ஞானமே மறைந்து போகிறது. இப்பொழுது தெய்வீக இராஜ்யம் எங்கிருந்து கிடைக்கும்?
யார் சத்யுகத்தை உருவாக்குகிறாரோ நிச்சயமாக அவரிட மிருந்து தான் கிடைக்கும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுக்க இப்பொழுது தந்தை வந்திருக்கிறார். அதுவும் 21 பிறவிகளுக்கு.
குமாரி 21 குலத்தை முன்னேற்றுவார் என பாடப்பட்டிருக்கின்றது. இப்போது அந்த குமாரி யார் நீங்கள் அனைவரும் குமார் குமாரிகள். ஸ்ரீமத் அல்லது பாபாவின் வழிப்படி நீங்கள் யாரை வேண்டு மானாலும் 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை அடைய வைக்கலாம்.
பள்ளிக் கூடத்தில் படிப்பவர்களுக்கு நாம் மாணவர்கள் என தெரியும். மற்ற சத்சங்கங்களில் தன்னை மாணவர் என நினைக்க மாட்டார்கள்.
மாணவர்களுக்கு குறிக்கோள் புத்தியில் இருக்கின்றது.
நீங்கள் ஈஸ்வரிய மாணவர்கள். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன் மனிதனி லிருந்து தேவதையாக மாற்றுகின்றேன் - பகவான் வாக்கு. தேவதைகளின் இராஜ்யம் இருந்தது.
இராஜா இராணி எப்படி தேவதையாக இருந்தனரோ அப்படியே பிரஜைகளும்...... நரனிலிருந்து நாராயணனாக மாறு கின்றார்கள்.
இந்த குறிக்கோள் முதலில் வேண்டும்.
ராம் ராஜாவாக,
சீதை ராணியாக மாற்றுவார் என்பது அல்ல. இதுவோ இராஜயோகம் ஆகும்.
இராஜாக்களுக்கு இராஜாவாக மாற்றுவார். நான் கல்ப கல்பமாக இழந்த இராஜ்யத்தைக் கொடுப்பதற்காக வருகிறேன்.
உங்களுடைய இராஜ்யத்தை எந்த மனிதரும் பறிக்கவில்லை. மாயா தான் பறித்திருக்கிறது. இப்போது மாயையைத் தான் வெற்றி அடைய வேண்டும்.
அங்கே இராஜாக்களுக்கு இடையில் போர் நடக்கிறது. ஒருவர் மற்றவரை வெற்றி அடைவதற்காக போரிடுகிறார்கள். இப்போது மக்களே மக்களை ஆட்சி செய்கிறார்கள். எல்லைக்குட் பட்ட ராஜாக்களின் போர்கள் பலவிதமாக நடைபெறுகிறது. அதன் மூலம் எல்லைக் குட்பட்ட இராஜ்யம் கிடைக்கின்றது. மேலும் இந்த யோக பலத்தால் உலகத்தில் இராஜ்யத்தை உருவாக்குகிறீர்கள். இதற்கு அகிம்சை நிறைந்த போர் என்று கூறப்படுகிறது. சண்டையோ அல்லது இறப்பதோ அடிப்பதோ இல்லை. இது யோக பலம் ஆகும். எவ்வளவு எளிதாக இருக்கிறது.
பாபாவுடன் தொடர்பு வைப்பதால் நாம் விகர்மங்களை வென்றவர்களாக ஆகின்றோம். பிறகு எந்த மாயையுடனும் போரிட முடியாது.
ஹாத்மதாயி (வாயில் குச்சியை வைத்துக் கெள்வது) விளையாட்டை காண்பிக்கிறார்கள். அவர்கள் வாயில் குச்சியை போட்டு விடுகிறார்கள் என்றால் மாயை மறைந்து போகிறது.
குச்சியை எடுத்து விட்டால் மாயை வந்து விடுகிறது.
அலாவுதீனின் நாடகமும் இருக்கின்றது விளக்கைத் தேய்ப்பதால் சொர்க்கம் வருகின்றது. அது பகிஸ்து அல்லது சொர்க்கமாகும். பாபா பிரம்மாவின் மூலமாக சொர்க்கத்தை உருவாக்குகிறார். பரம்பிதா பரமாத்மா நரகத்தை உருவாக்க மாட்டார். அப்படி செய்கிறார் என்றால்,
அவருடைய கொடும்பாவியை எரிப்பார் கள்.
இராவணனின் கொடும்பாவியைத் தான் உருவாக்குகிறார்கள். ஏனென்றால், இராவணன் தான் அனைவருக்கும் எதிரியாக இருக்கிறார்.
பாபா சொர்க்கத்தை உருவாக்குவதால் தான் அவரை கண்ணில் வைத்துக் கொள்கிறார்கள். துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என என்னை பக்தர்கள் நினைக்கிறார்கள். ஆகவே வந்து விடுவிக்கிறேன் என பாபா கூறுகின்றார்.
பாபா விடுவிக்கக் கூடியவராகவும் இருக்கிறார்,
ஆன்மீக வழிகாட்டியாகவும் இருக்கின்றார். உங்களை தன்னுடைய சாந்தி தாமத்திற்கு அழைத்துச் சொல்கிறார். யார் தலைவனுடன் இருக்கிறார்களோ, அவர்கள் மீது ஞான ரத்தினங்களின் மழை பொழிகிறது.
அந்த ஞான ரத்தினங்களை மதிப்பிட முடியாது. பாபா ஞானக்கடலாக இருக்கின்றார் என்றால், நிச்சய மாக ஆத்மாவில் அந்த பாகம் நிறைந்திருக்கிறது. என்னுடைய ஆத்மாவை நீங்கள் பரமாத்மா என்கிறீர்கள்.
எனக்குள்ளும் பார்ட்
(பாகம்) பதிவாகியிருக்கிறது என பரம்பிதா பரமாத்மாவே கூறுகிறார்.
பக்தர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் சுகமளிக்க வேண்டும். மாயை தான் துக்கத்தை அளிக்கிறது. பக்தர்களுக்கு அல்ப காலத்தின் சுகத்தை அளிப்பதற்கான பார்ட்டும் எனக்குள் இருக்கிறது. நான் தான் காட்சிகளைக் காண்பிக்கிறேன். மேலும் தெய்வீக புத்தியை அளிக்கிறேன். இதற்கு மூன்றாவது கண் எனக் கூறப்படுகிறது. இதன் மூலமாக உங்களுடைய புத்தியின் கோத்ரேஜ் பூட்டு திறக்கின்றது. யார் தந்தையுடன் இருக்கிறார்களோ அவர்கள் மீது ஞான மழை பொழிய வைப்பது என்னுடைய பாகமாகும்.
இப்பொழுது இவ்வளவு குழந்தைகள் எப்படி என்னுடன் இருக்க முடியும்? நீங்கள் பாபாவை நினைக்கிறீர்கள் என்றால், பாபாவுடன் இருக்கிறீர்கள் என்பது போலாகும். சிலர் லண்டனில், சிலர் வேறு எங்கேயோ இருக்கிறார்கள். பிறகு உடன் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கும் முரளி போகிறது.
யார் நன்கு புத்திசாலிகளாக இருக்கிறார்களோ அவர்கள் ஒரு வாரம் கூட வந்த புரிந்து கொண்டால் அவர்களை சுயதரிசன சக்ரதாரியாக மாற்றி விடுகிறேன்.
84 பிறவிகளின் சுயதரிசன சக்கரத்தின் ரகசியத்தை இப்போது குழந்தை களாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த சுயதரிசன சக்கரத்தை சுழற்றுவதால் மாயா இராவணனின் தலையை துண்டிக்கிறீர்கள். அதாவது அவனை வெற்றி அடைகிறீர்கள். மற்றபடி தலையை வெட்டக்கூடிய விஷயம் எதுவும் இல்லை. அவர்களோ பிறகு இம்சை யின் ஆயுதங்களைக் கொடுத்து விட்டனர்.
உண்மையில் சங்கு என்பது இந்த வாய் ஆகும்.
சக்கரத்தை சுழற்றுவது இந்த புத்தியின் வேலையாகும். எனவே இந்த அலங்காரத்தை பக்தி மார்க்கத்தில் நிறைய கொடுத்து விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் என்னென்ன சாஸ்திரங்கள் இருந்து வந்ததோ அது நாடகத்தின் படி அப்படியே வரும்.
இந்த உண்மையான கீதை கூட யாருடைய கையிலாவது கிடைக்கலாம். அப்படி கிடைத்தால் கொஞ்சம் இதிலிருந்தும் எடுத்து போடுவார்கள். மற்ற அனைத்தும் அப்படியே துவங்கும். அவைகளில் சில வார்த்தைகள் இங்கிருந்து வந்திருக்கின்றது. பகவான் வாக்கு என்பது சரியாகும்.
இராஜயோகம் என்பதும் சரியே. இப்போது திரும்ப போக வேண்டும் என பாபா கூறுகிறார்.
இந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறக்க வேண்டும்.
இதற்கு பதிலாக உங்களுக்கு தூய்மையான உடல் கிடைக்கும்.
ஆத்மாவும் தூய்மையானது.
உங்களிடம் அளவற்ற செல்வமும் இருக்கும்.
உங்களுக்கு நிறைய பேராசை இருக்கின்றது.
ஆனால் இது தூய்மையானது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பாரதம் முழுமையாகத் தூய்மையாகிறது. பாரதவாசிகள் இராம இராஜ்யம், ஒரு அரசாங்கம், ஒரு இராஜ்யம், ஒரு வழி, அத்வைத வழி வேண்டும் என விரும்புகிறார்கள். அத்வைதம் என்பதன் பொருளே தேவதையாகும்.
இது அசுர வழியாகும். ஸ்ரீமத் தவிர மற்ற அனைத்தும் அசுர வழியாகும். இதனால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரனின் குழந்தைகளாக இல்லாத காரணத்தால் ஏழைகளாகியிருக்கிறார்கள். சத்யுகத்தில் தேவதைகள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அங்கே விலங்குகள் கூட ஒரு போதும் சண்டையிட்டுக் கொள்வதில்லை.
இங்கேயோ அனைவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சத்யுகத்தில் அனைவருக்கும் எல்லையற்ற சுகம் இருக்கிறது.
நாம் பாபாவிடமிருந்து ஈஸ்வரனுடைய பிறப்புரிமையின் அதிகாரத்தை அடைந்து கொண்டு இருக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள்.
ஈஸ்வரன் எதிரில் இருக்கிறார் அல்லவா?
நான் கல்ப கல்பமாக சொர்க்கமாக மாற்றுவதற்காக வருகிறேன் என கூறுகிறார்.
குழந்தைகளாகிய உங்களுக்காக அதிசயமான பரிசை எடுத்து வருகிறேன்.
என்னுடைய காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்ல குழந்தைகளே
! 5000 வருடங்களுக்குப் பிறகு வந்து நீங்கள் என்னை சந்திக்கிறீர்கள் என பாபா கூறுகின்றார். இவ்வாறு வேறு யாரும் கூற முடியாது.
நல்லது, தன்னை பிரம்மா விஷ்ணு சங்கர் என கூறலாம். ஆனால் இது போன்ற விஷயங்களை யாராலும் கூற முடியாது.
இதில் யாரும் காப்பி செய்ய முடியாது. என்னுடைய காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்ல குழந்தைகளே 5000 வருடங்களுக்குப் பிறகு வந்து நீங்கள் என்னை சந்தித்துள்ளீர்கள் என பாபா கூறுகின்றார்: நீங்கள் மட்டுமே.
நிறைய குழந்தைகள் சந்தித்துக் கொண்டேயிருப்பார்கள் இராஜ்யம் உருவாவதில் நிறைய கடின உழைப்பு இருக்கின்றது.
இராஜா ராணி ஒருவரே பிறகு அவருடைய குழந்தைகள் வளர்ச்சி அடைந்து கொண்டேயிருப்பார்கள். பாரதத்தில் இளவரசன் இளவரசி எவ்வளவு பேர் இருப்பார்கள். ஒரு லட்சம் இரண்டு லட்சம் என வைத்துக் கொள்ளுங்கள்,
40-50 கோடி பிரஜைகள் இருப்பார்கள். குறிக்கோள் மிகவும் பெரியதாகும்.
இது பாபாவின் கல்லூரியாகும். எனவே எவ்வளவு நன்றாக புரிய வைக்க வேண்டும். ராஜாக்களுக்கு ராஜா ஆகுங்கள்,
பிரஜைகள் ஆகாதீர்கள் என்று பாபா கூறுவார். யார் போன கல்பத்தில் மாறினார்களோ அவர்களே மாறுவர். நாம் சாட்சியாக இருந்து யார் எப்படி சொத்து அடைகிறார்கள் என பார்ப்போம்.
ஒரு சிலர் நன்கு பிடித்துக் கொள்கிறார்கள். மிகவும் அன்பான தந்தையாவார்.
காந்தத்தின் மீது ஊசிகள் ஒட்டிக் கொண்டு வருகிறது.
சிலருக்குள் நிறைய துரு பிடித்திருக்கிறது. சிலருக்குள் குறைவாக இருக்கிறது. அருகில் இருப்பவர்கள் ஒரேயடியாக வந்து சந்திப்பார்கள். சுத்தமான ஊசி உடனடியாக ஒட்டிக் கொண்டு வரும்.
பாபா துருவை நீக்கி குழந்தைகளாகிய நீங்கள் அங்கே உடன் இருக்கும் அளவிற்கு பிரகாசிக்க வைக்கிறார். நீங்கள் ருத்திர மாலையில் சுழல வேண்டும்.
புகழ் பாடப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த மாலை யாருடையது உருவாக்கப்பட்டிருக்கிறது என தெரிய வில்லை.
என்னுடைய மாலை எதுவோ அது சொர்க்கத்திற்கு அதிபதியாக இருக்கும் என பாபா கூறுகின்றார்.
பக்த மாலையைக் கூட நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.
அது இராவணனின் மாலையாகும். முதலில் இராவணனின் மாலையில் யார் வருகிறார்கள்.
பூஜைக் குரியவரிலிருந்து யார் பூஜாரியாகிறார்கள்? தாங்களே பூஜைக்குரியவர்கள், பிறகு தாங்களே பூஜாரியாகிறீôர்கள்.
இது எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய ஆழமான விஷயம் ஆகும்.
நீங்கள் வள்ளல் ஆவீர்கள். தேகம் உட்பட அனைத்தையும் பாபாவிற்கு அர்ப்பணிக்கிறீர்கள். சந்நியாசிகள் வள்ளல் ஆக முடியாது.
அவர்கள் வீடு வாசலை விட்டு காட்டிற்குச் செல்கிறார்கள். நீங்கள் அனைத்தையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணிக்கிறீர்கள். அனைத்தும் இறைவனுக்காக.
பிறகு என்னுடைய அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்காக என பாபா கூறுகின்றார்.
மனிதர்கள் இறந்து விடும் பொழுது அனைத்து பொருட் களையும் வெட்டியானுக்கு கொடுக்கிறார்கள். நானும் வெட்டியான் தான் என பாபா கூறுகின்றார். உங்களிடம் இருக்கும் பழைய பொருட்கள் (உதவாதது)
அனைத்தையும் தானம் செய்கிறீர்கள். பாபாவிற்கு அர்ப்பணம் செய்கிறீர்கள். பிறகு அது உங்களுக்கே பயன்படுகிறது.
கட்டிடம் போன்றவைகளை பாபா தனக்காக கட்டவில்லை. சிவபாபாவே வள்ளல் ஆவார்.
அனைத்து சொர்க்கத்தின் இராஜ்ய பதவிகளையும் உங்களுக்குக் கொடுத்து விடுகின்றார். ஆகையால் இவரை வியாபாரி என்றும் கூறுகின்றார்கள். எவ்வளவு இனிமையிலும் இனிமையான விஷயங்கள் இருக்கின்றது. தேர்வு நிறைவடைய போகிறது.
பாபா கடைசியில் தேர்வு எப்பொழுது நிறைவடையும்? நீங்கள் இறக்கின்ற நிலை வரும் பொழுது,
ஞானம் நிறைவடையும் பொழுது, இந்த அழிவும் ஆரம்பமாகும் என பாபா கூறுகின்றார். பிறகு வாயில் தங்க ஸ்பூன் தான்.
பிறவி எடுப்பீர்கள் ஸ்பூன் கிடைக்கும்.
இங்கே 30-40 வருடங்கள் படிக்கிறீர்கள். இங்கேயே அதனுடைய பலன் கிடைத்து விடுகிறது. உங்களுடையது எதிர்காலத் திற்காக ஆகும். எதிர்கால பிறவி உங்களுக்கு கிடைத் தால் நீங்கள் இளவரசர் ஆகிறீர்கள். எனவே வினாசம் ஆகும் பொழுது தேர்வு முடிவடையும். ஒரு புறம் படிப்பு நிறைவடையும். மேலும் வினாசம் ஆரம்பமாகும்.
மற்றபடி ஒத்திகை நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். பிறகு இந்த படிப்பின் பலன் உங்களுக்கு புது உலகில் கிடைக்கிறது.
அங்கே ஆத்மா,
உடல், இராஜ்ஜியம் அனைத்தும் புதியதாக இருக்கிறது. இது மிகவும் ஆழமான தாரணைக்குரிய விஷயம் ஆகும். படிப்பை ஒருபோதும் விடக்கூடாது.
பாபா வந்து புரிய வைக்கின்றார்,
அதிசயமான விஷயங்கள் அல்லவா? தாமதமாக வருபவர்கள் கூட உடனே ஞானம் யோகத்தில் ஈடுபட்டால் அவர்களும் உயர்ந்த பதவியைப் பெறலாம்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
உடல் மற்றும் ஆத்மா இரண்டையும் தூய்மையாக்குவதற்காக இந்த பழயை உடல் உட்பட அனைத்தையும் மறக்க வேண்டும்.
தேகம் உட்பட பாபாவிற்கு அனைத்தையும் முழுமையாக அர்பணித்து மகாதானி ஆகவேண்டும்.
2.
பாபாவின் ஸ்ரீமத்படி நடந்து எல்லையற்ற சுகத்தை அடைய வேண்டும். இந்த சுத்தமான பேராசை வைக்க வேண்டும்.
இதன் மூலம் முழு உலகமும் சுகம் அடையும்,
மற்றபடி அசுத்த பேராசையை தியாகம் செய்ய வேண்டும்.
வரதானம்:
அமிர்தவேளையின் மகத்துவத்தை
அறிந்து மகான்
ஆகக் கூடிய
விசேஷ சேவாதாரி
ஆகுக.
சேவாதாரி என்றால் கண்கள் திறந்ததும் மற்றும் சதா தந்தையின் கூடவே தந்தைக்குச் சமமான ஸ்திதியின் அனுபவம் செய்வதாகும். யார் விசேஷ வரதான நேரத்தை அறிந்திருக்கிறார்களோ மற்றும் வரதானங்களை அனுபவம் செய்கிறார்களோ
அவர்களே விசேஷ சேவாதாரி ஆவர். ஒருவேளை இந்த அனுபவம் இல்லையெனில்
சாதாரண சேவாதாரி ஆக இருக்கிறீர்கள், விசேஷ மானவர்கள் அல்ல. யாருக்கு அமிர்தவேளையின், சங்கல்பத்தின், நேரத்தின் மற்றும் சேவையின் மகத்துவம் இருக்கிறதோ, இவ்வாறு அனைத்தின் மகத்துவம் அறிந்தவர்கள் மகான் ஆகிறார்கள் மற்றும் மற்றவர்களையும்
மகத்துவத்தைக் கூறி மகான் ஆக்குவார்கள்.
சுலோகன்:
வாழ்க்கையின் மகான் நிலை சத்தியத்தின் சக்தியில் இருக்கிறது, இதன் மூலம் அனைத்து ஆத்மாக்களும் தானாகவே தலை வணங்குவர்.
0 Comments