01-02-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
உங்களுடைய பார்வை
எந்த ஒரு
தேகதாரியின் பக்கமும்
செல்லக்கூடாது. ஏனெனில்,
உங்களுக்குக் கற்பிக்கக்கூடியவர்
சுயம் நிராகாரமான
ஞானக்கடல் தந்தை
ஆவார்.
கேள்வி:
உயர்ந்த பதவி அடைவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு முயற்சியை அதிகமாகச் செய்ய முடியும்?
பதில்:
இல்லறத்தில் இருந்துகொண்டே
ஞானம் என்ற வாளை மட்டும் பயன்படுத்துங்கள்.
சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள் மற்றும் சங்கு ஒலி எழுப்பிக்கொண்டே இருங்கள். நடந்தாலும் சுற்றினாலும் எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள்
மற்றும் அந்த சுகத்தில் இருங்கள், அப்பொழுது உயர்ந்த பதவி கிடைத்துவிடும்.
இதுவே உழைப்பு ஆகும்.
கேள்வி:
யோகத்தின் மூலம் உங்களுக்கு இரண்டு இலாபம் என்ன கிடைக்கின்றன?
பதில்:
ஒன்று அந்த சமயத்தில் எந்த பாவ கர்மமும் ஏற்படாது, இரண்டாவது கடந்த காலத்தில் செய்யப்பட்ட
பாவ கர்மங்கள் விநாசம் ஆகிவிடுகின்றன.
பாடல்: தாயே நீங்கள் அனைவரின் பாக்கிய விதாதா ஆவீர்கள்....
ஓம் சாந்தி.
சத்சங்கம் அல்லது கல்லூரி போன்றவை என்ன உள்ளனவோ,
அங்கே கற்பிக்கக் கூடியவர் யார் என்பது தெரிந்திருக்கும். பார்வை தேகத்தின் மீது வருகிறது.
இன்ன பேராசிரியர்
(புரொஃபஸர்) கற்பிக்கின்றார் என்று கல்லுரியில் சொல்வார்கள். இன்ன வித்வான் சொல்கின்றார் என்று சத்சங்கத்தில் கூறுவார்கள். மனிதன் மீது தான் பார்வை செல்கின்றது.
இங்கே உங்களுடைய பார்வை எந்த தேகதாரியின் மீதும் செல்வதில்லை. நிராகாரமான பரமபிதா பரமாத்மா இந்த உடல் மூலம் சொல்கின்றார் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது.
தாய், தந்தை மற்றும் பாப்தாதாவின் பக்கம் புத்தி செல்கிறது. குழந்தைகள் கூறுகின்றார்கள் என்றால் ஞானக்கடல் தந்தை மூலம் சொல்லப்பட்டதைக் கூறுகிறார்கள் என்று சொல்வார்கள். வித்தியாசம் உள்ளது அல்லவா!
சத்சங்கங்களில் என்ன கேட்டாலும், இன்னார் இந்த வேதத்தைச் சொல்கின்றார் என்று புரிந்திருப்பார்கள். மனிதர்களுடைய பதவி, ஜாதி மீது பார்வை செல்கிறது. இவர் இந்து, இவர் இஸ்லாமியர் என்று பார்வை அங்கே செல்கிறது. இங்கே உங்களுடைய பார்வை சிவபாபாவின் பக்கம் செல்கிறது. சிவபாபா கற்பிக்கின்றார். இப்பொழுது எதிர்கால புது உலகத்தின் ஆஸ்தி கொடுப் பதற்காக தந்தை வந்திருக்கின்றார். ஹே குழந்தைகளே!
சொர்க்கம் செல்வதற்காக உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பித்துக்கொண்டு இருக்கின்றேன். இப்பொழுது இந்தப் பாடல் கூட கேட்டீர்கள்.
பாடலோ பழைய பாடலாகும். அவ்வாறு ஜெகதம்பா இருந்தார்கள்.
அவர்கள் சௌபாக்கியத்தை உருவாக்கினார்கள், அவர்களுடைய கோவில்களும் உள்ளன.
ஆனால், அவர் யார்? எவ்வாறு வந்தார்? என்ன பாக்கியத்தை உருவாக்கினார்? என்பது எதையுமே அறியவில்லை. எனவே,
இந்தப் படிப்பு மற்றும் அந்தப் படிப்பில் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. ஞானக்கடல் பரமபிதா பரமாத்மா பிரம்மாவின் வாய் மூலம் கற்பிக் கின்றார் என்பதை இங்கே நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். தந்தை வந்திருக்கின்றார். பக்தர்களிடம் பகவான் வந்து தான் ஆக வேண்டும். இல்லையெனில் பக்தர்கள் பகவானை ஏன் நினைவு செய்கின்றனர்? அனைவரையும் பகவான் என்று கூறுவது தவறு ஆகும். அந்த சர்வவியாபி என்ற ஞானம் அளிப்பவர்கள் தன்னுடைய விசயத்தை நிரூபிப்பதற்காக தன்னுடைய இருபது நகங்களின் வலிமையைக் காட்டுகின்றனர். உங்களுடைய ஞானம் தனிப்பட்டதாகும். எல்லையற்ற தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு மட்டும் ஆஸ்தி கிடைக்கிறது. சந்நியாசிகளுடையது வைராக்கிய மார்க்கம்,
துறவற மார்க்கம் ஆகும். அவர்களிடமிருந்து ஒருபொழுதும் ஆஸ்தியின் உரிமை கிடைக்க முடியாது. அவர்கள் ஆஸ்தியை விரும்புவதே இல்லை. நீங்களோ சதா சுகத்தின் ஆஸ்தியை விரும்புகிறீர்கள். நரகத்தின் செல்வம்,
சொத்தில் துக்கம் உள்ளது. செல்வந்தர்களாக உள்ளனர், ஆனால்,
நடத்தை அவ்வளவு தீயதாக உள்ளது,
ஆகவே, பணத்தை செலவழித்துக்கொண்டே இருக் கின்றனர். பிறகு,
அவர்களுடைய குழந்தைகள் பசியினால் இறந்து போவார்கள். எனவே,
தன்னையும் துக்கம் நிறைந்தவராக, குழந்தைகளையும் கூட துக்கம் நிறைந்தவர்களாக ஆக்கிவிடுகின்றனர். இவர் எல்லையற்ற தந்தை ஆவார்.
இவர் அமர்ந்து குழந்தை களுக்குப் புரியவைக்கின்றார். அவர்களோ வெவ்வேறான அநேக தந்தைகள் ஆவார்கள்,
அவர்கள் மூலம் அல்ப காலத்திற்கான ஆஸ்தி கிடைக்கிறது.
இராஜாக்கள் உள்ளனர்,
அவர்களும் கூட எல்லைக்குட் பட்டவர்கள் ஆகிவிட்டனர். எல்லைக்குட்பட்ட அல்ப காலத்தின் சுகம் ஆகும்.
இந்த எல்லையற்ற தந்தை அழிவற்ற சுகத்தைக் கொடுப்பதற்காக வருகின்றார். பாரதவாசிகள்,
யார் இரட்டை கிரீடதாரி களாக இருந்தார்களோ, சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தார்களோ,
அவர்கள் இப்பொழுது நரகத்தின் எஜமானர்கள் ஆகிவிட்டனர் என்பதைப் புரியவைக்கின்றார். நரகத்தில் துக்கம் உள்ளது.
மற்றபடி, கருட புராணத்தில் காண்பிக்கப் பட்ட சித்திரங்களைப் போன்று கொடூரமான நரகம், விஷ நதி போன்ற எந்த நதிகளும் கிடையாது. இது தண்டனைகள் அடையப் பெறுவதாகும். எனவே,
அந்த பயங்கரமான விசயங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. முற்காலத்தில் ஒருவர் எந்த உறுப்பின் மூலம் தவறான காரியம் செய்தாரோ அவருடைய அந்த உறுப்பு துண்டிக்கப் பட்டது.
மிகவும் கடுமையான தண்டனை கிடைத்தது.
இப்பொழுது இவ்வளவு கடுமையான தண்டனை கிடைப்ப தில்லை.
தூக்கிலிடும் தண்டனை ஒன்றும் கடுமையானது கிடையாது. இது மிகவும் சுலபமான தாகும். மனிதர்கள் தற்கொலை கூட மிகவும் குஷியோடு செய்கின்றனர். சிவனிடம்,
தேவதை களிடம் சட்டென்று பலியாகிவிடுகின்றனர். ஆத்மா துக்கம் நிறையும் பொழுது ஒரு சரீரத்தை விட்டுச்சென்று இன்னொரு சரீரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தற்கொலை செய்யக்கூடியவர்கள் அவ்வாறு புரிந்து கொள்வதில்லை.
அவர்கள் இங்கேயே ஒரு சரீரத்தை விடுத்து மீண்டும் இங்கேயே கீழான பிறப்பு எடுக்கின்றனர். ஞானமோ கிடையாது,
துக்கத்தின் காரணத்தினால் சரீரத்தை மட்டும் முடித்துவிடுகின்றனர். ஆனாலும்,
துக்கம் நிறைந்த பிறப்பையே அடை கின்றனர். நாமோ புதிய உலகத்திற்குத் தகுதி யானவர்கள் ஆகிக்கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தற்கொலை செய்பவர்களிலும் கூட பலவகை உள்ளனர்.
சில சில பெண்கள் கணவனுக்குப் பின்னால் தன்னுடைய சரீரத்தை அழித்து விடுகிறார்கள். (உடன்கட்டை ஏறுதல்) இந்த விசயம் தனிப்பட்ட தாகும். நாம் பதியின் உலகத்திற்கு சென்றுவிடுவோம் என்று நினைக்கின்றனர். ஏனெனில்,
அவ்வாறு கேள்வி யுற்றிருக்கின்றனர், அநேகர் செய்திருக்கின்றனர். சாஸ்திரங்களில் கூட பதியின் உலகத்திற்குப் பெண் செல்கின்றார் என்பது உள்ளது. ஆனால்,
அந்தப் பதியோ காம விகாரம் கொண்டவர் ஆவார்.
ஆனால், அவர் மீண்டும் இந்த மரண உலகத்தில் தான் வரவேண்டியதாக இருக்கும். இங்கேயோ ஞானச்சிதையில் அமர்வதனால் சொர்க்கத்திற்குச் சென்றுவிடுகிறீர்கள்.
இந்த ஜெகதம்பா,
ஜெகத்பிதா, யார் ஸ்தாபனைக்காக நிமித்தம் ஆகியிருக்கின்றார் களோ,
அவர்களே பிறகு சொர்க்கத்தில் பாலனை செய்பவர்களாகவும் ஆகுவார்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். விஷ்ணு குலம் என்று எதற்குக் கூறப்படுகின்றது என்பதை மனிதர்கள் அறியவில்லை. விஷ்ணுவோ சூட்சும வதனவாசி ஆவார். பிறகு,
அவருடைய குலம் எப்படி இருக்க முடியும்? விஷ்ணுவினுடைய இரண்டு ரூபங்களான இலட்சுமி, நாராயணர் ஆகி பாலனை செய்கின்றார்கள், அரசாட்சி செய் கின்றார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இது ஞானச்சிதை ஆகும்.
நீங்கள் ஒரு பதிகளுக்கெல்லாம் பதியுடன் யோகத்தை ஈடுபடுத்துகிறீர்கள். அவர் சிவபாபா ஆவார். அவரே பதிகளுக்கெல்லாம் பதி,
தந்தைகளுக்கெல்லாம் தந்தை ஆவார். அனைத்தும் அவர் ஒருவரே ஆவார். அவரிடம் சர்வ சம்பந்தங்களும் வந்துவிடுகின்றன. இந்த சமயத்தில் உங்களுடைய சித்தப்பா, பெரியப்பா போன்ற யாரெல்லாம் இருக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் உங்களுக்கு துக்கத்திற்கான வழியையே சொல்வார்கள் என்று தந்தை கூறுகின்றார்.
தலைகீழான வழி,
அசுர வழியைத் தான் கொடுப்பார்கள். எல்லையற்ற தந்தை வந்து குழந்தைகளுக்கு நேர் வழியைக் காண்பிக்கின்றார். கல்லூரியில் படித்து வக்கீல் ஆகுங்கள் என்று லௌகீகத் தந்தை கூறுகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,
அது ஒன்றும் தலைகீழான (தவறான)
வழி கிடையாது.
சரீர நிர்வாகத்திற்காக அது சரியானதே ஆகும். அந்த முயற்சியும் செய்யத் தான் வேண்டும்.
அதன் கூடவே பிறகு எதிர்கால
21 பிறவிகளுடைய சரீர நிர்வாகத்திற்கான முயற்சியும் செய்ய வேண்டும்.
கல்வி பயில்வதே சரீர நிர்வாகத்திற்காகத் தான். துறவற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் சரீர நிர்வாகத்திற்காகவே சாஸ்திரங்களின் கல்வி கூட உள்ளது.
அவர்கள் தன்னுடைய சரீர நிர்வாகத்திற்காகவே படிக் கின்றனர்.
சந்நியாசிகள் கூட சரீர நிர்வாகத்திற்காக சிலர் 50 ரூபாய்,
சிலர் 100 ரூபாய்,
சிலர் 1000 ரூபாய் கூட சம்பாதிக்கின்றனர். ஒரே ஒரு காஷ்மீரின் இராஜா இறந்தார்,
அப்பொழுது ஆரிய சமாஜத்தினருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது!
எனவே, இவை அனைத்தையும் வயிற்றுக்காகவே செய்கின்றனர். செல்வம் இல்லாமல் சுகம் இருப்பதில்லை. பணம் இருக்கிறது என்றால் மோட்டார் வண்டிகளில் சுற்றித்திரிகின்றனர். முற்காலத்தின் சந்நியாசிகள் பணத்திற்காக சந்நியாசம் செய்ய வில்லை. அவர்கள் காட்டிற்குள் சென்று விட்டனர். இந்த உலகத்தால் துன்பப்பட்டு தன்னை விடுவித்துக்கொள்கின்றனர். ஆனால்,
விடுபட முடியாது.
மற்றபடி, தூய்மையாக இருக்கின்றனர். தூய்மையின் சக்தி மூலம் பாரதத்தைக் காப்பாற்றுகின்றனர். இது கூட பாரதத்திற்கு சுகம் கொடுக் கின்றனர் என்பதாகும். இவர்கள் தூய்மையாக ஆகவில்லை என்றால் பாரதம் தாங்கமுடியாத அளவு விகாரம் நிறைந்ததாக ஆகியிருக்கும். தூய்மையைக் கற்பிக்கக்கூடியவர் ஒன்று இந்த துறவற மார்க் கத்தினர்,
இரண்டாவது தந்தை ஆவார். அதுவோ துறவற மார்க்கத்தின் தூய்மை ஆகும்.
இது இல்லற மார்க்கத்தின் தூய்மை ஆகும். பாரதத்தில் தூய்மையான இல்லற மார்க்கம் இருந்தது.
தேவி, தேவதைகளாகிய நாம் தூய்மையாக இருந்தோம். இப்பொழுது தூய்மை யற்றவர்கள் ஆகிவிட்டோம். அரைகல்பம் முழுவதும் 5 விகாரங்கள் மூலம் தூய்மை யற்றவர்கள் ஆகின்றோம்.
மாயை கொஞ்சம் கொஞ்சமாக தூய்மையை இழக்கச் செய்து முழுவதுமாக தூய்மை யற்றவராக, பதீதமாக ஆக்கிவிட்டது. நாம் தூய்மையானவரிலிருந்து எவ்வாறு தூய்மையற்றவர் ஆகின்றோம் என்பதை உலகத்தில் எந்த ஒரு மனிதனும் அறியவில்லை.
இது பதீத உலகமாகும் என்று புரிந்தும் இருக்கின்றனர். ஒரு கட்டிடத்தின் ஆயுள் 100 வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள், 50 வருடம் புதியது, 50 வருடம் பழையது என்று கூறுவார்கள். போகப் போக பழையதாகிவிடுகிறது. இந்த சிருஷ்டியின் நிலையும் அவ்வாறே உள்ளது. புது உலகத்தில் முழுமையான சுகம் உள்ளது,
பிறகு, அரை கல்பத்திற்குப் பிறகு பழையதாகிவிடுகிறது. சத்யுகத்தில் அளவிட முடியாத சுகம் உள்ளது என்ற மகிமையும் பாடப்படுகிறது. பிறகு,
பழைய உலகமாகும்பொழுது துக்கம் ஆரம்ப மாகிறது. இராவணன் துக்கம் அளிக்கின்றார். இராவணன் பதீதம் ஆக்கினான். அவனுடைய உருவ பொம்மையை எரிக்கின்றனர். இவர் பெரிய எதிரி ஆவார். இராவணன் எரிக்கப்படக் கூடாது,
அநேகருக்கு துக்கம் ஏற்படுகிறது என்று ஒருவர் அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இராவணனை வித்வான் என்றும் சொல்கின்றனர்.
மந்திரி போன்ற எவரும் புரிந்து கொள்வதில்லை. இராவணனுடைய இராஜ்யம் துவாபரயுகத்திலிருந்து ஆரம்பம் ஆகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பாரதத்தில் தான் இராவணனை எரிக்கின்றனர். துவாபரயுகத்திலிருந்து இந்த பக்தி, அஞ்ஞான மார்க்கம் ஆரம்பமாகிறது என்பதை தந்தை புரியவைக்கின்றார். ஞானத்தின் மூலம் பகல்,
பக்தியின் மூலம் இரவு வருகிறது.
இப்பொழுது பாருங்கள்,
ஜெகதம்பாவினுடைய பாடல் பாடுகின்றனர். ஆனால்,
அவர் எவ்வாறு சௌபாக்கியத்தை அளிப்பவராக இருக்கின்றார் என்பதைப் புரிந்திருக்கவில்லை. எவ்வளவு பெரிய திருவிழா நடக்கிறது! ஆனால்,
ஜெகதம்பா யார் என்பதை அறியவில்லை.
வங்காளத்தில் காளியைக் கூட அதிகமாக வணங்குகின்றனர். ஆனால்,
காளி மற்றும் ஜெகதம்பா ஆகிய இருவருக் கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை அறியவில்லை. ஜெகதம்பாவை வெண்மையாகக் காண்பிக்கின்றனர், காளியைக் கறுப்பாக்கிவிட்டனர். ஜெகதம்பா தான் இலட்சுமி ஆகின்றார் எனில் வெண்மை ஆகின்றார். பிறகு,
84 பிறவிகள் எடுத்து எடுத்து கருப்பாகிவிடுகின்றார். எனவே,
மனிதர்கள் எவ்வளவு குழப்பம் அடைந் திருக்கின்றனர்! உண்மையில் காளியோ அல்லது அம்மனோ, இருவரும் ஒருவர் தான்.
எதையும் அறியவில்லை
- இதையே மூடநம்பிக்கை என்று கூறப்படுகின்றது. யார் கடந்த காலத்தில் ஜெகதம்பாவாக இருந்தாரோ, அவர் பாரதத்தின் பாக்கியத்தை உருவாக்கியிருந்தார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். நீங்களும் கூட பாரதத்தின் சௌபாக்கியத்தை உருவாக்கிக்கொண்டு இருக் கின்றீர்கள்.
முக்கியமாக தாய்மார் களின் பெயரே உள்ளது. தாய்மார்கள் சந்நியாசிகளையும் கூட விடுவிக்க வேண்டும்.
இது கூட நாடகத்தின் பதிவு ஆகும். இவர்கள் மீதும் ஞான அம்பை விடுங்கள் என்று பரமபிதா பரமாத்மா டைரக்ஷன்
(வழிகாட்டுதல்) கொடுத்திருக்கின்றார். குழந்தைகளாகிய (சகோதரிகள்) நீங்களும் கூட சந்நியாசிகளோடு சந்திப்பு செய்யும்பொழுது எங்களுக்கு ஞானக் கடல் பரமபிதா பரமாத்மா கற்பிக்கின்றார், நீங்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசி ஆவீர்கள்,
நாங்கள் எல்லையற்ற சந்நியாசி ஆவோம் என்று புரியவைக்கிறீர்கள். எப்பொழுது உங்களுடைய ஹடயோகம் முடிவடைய வேண்டுமோ அப்பொழுதே எங்களுக்கு தந்தை இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றார். எனவே,
இப்பொழுது ஒன்றும் அதிக காலம் இல்லை, மிகவும் குறைவான சமயமே உள்ளது. குழந்தைகளே!
இல்லறத்தில் இருந்துகொண்டே தாமரை மலருக்குச் சமமாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பிராமணர்கள் தான் தாமரை மலருக்குச் சமமாக இருக்க வேண்டும்.
குமாரிகளோ தூய்மையாக,
தாமரை மலருக்குச் சமமாக இருக்கின்றனர். ஒவ்வொருவரும் சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள்.
சங்கு ஒலி எழுப்புங்கள். ஞான வாளை பயன்படுத்தினீர்கள் என்றால் படகு கரை சேர்ந்துவிடும். உழைப்பு தேவைப்படுகிறது, உழைப்பில்லாமல் உயர்ந்த பதவி அடைய முடியாது. நடந்தாலும் சுற்றினாலும் அதே சுகத்தில் இருங்கள்.
தந்தையை நினைவு செய்யுங்கள். யார் அதிகம் சுகம் கொடுக்கின்றாரோ அவருடைய நினைவு இருக்கிறது அல்லவா! இப்பொழுது நீங்கள் நினைவு செய்யவேண்டியது எல்லையற்ற தந்தையை மட்டும் தான். அவருடைய அறிமுகத்தையே கொடுக்க வேண்டும். சொல்லுங்கள்,
இந்தப் பிறவியில் நீங்கள் சட்டக்கல்வியைக் படித்து வக்கீல் ஆகப்போகிறீர்கள், நல்லது,
படித்துக் கொண்டிருக்கும் பொழுது அல்லது தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் உங்களுடைய ஆயுள் முடிவடைந்துவிட்டது என்றால், சரீரம் விட்டுவிட்டால் படிப்பு இங்கேயே முடிந்துவிடும் என்பதைப் புரியவைக்க வேண்டும். ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெற்று இலண்டன் சென்றார், அங்கே இறந்துவிட்டார் என்றால் படிப்பு முடிந்துவிடும். அதுவோ அழியக்கூடிய கல்வி ஆகும்.
இது அழிவற்ற கல்வி ஆகும்.
இது ஒருபொழுதும் விநாசம் ஆகுவதில்லை.
புதிய உலகத்தில் வந்து நாம் அரசாட்சி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது அல்ப காலத்திற்கான சுகம் ஆகும்.
அதுவும் அதிர்ஷ்டத்தில் இருக்கிறது என்றால் கிடைக்கும். எவ்வளவு சமயம் இருக்கும் என்பது தெரியாது.
இங்கேயோ உறுதியானதாகும். தேர்வு முடிவடைந்தவுடன் நீங்கள் சென்று
21 பிறவிகளுக்கான இராஜ்ய பாக்கியத்தைப் பெறுவீர்கள்.
எல்லைக்குட்பட்ட தந்தை,
ஆசிரியர், குருவிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தியே கிடைக்கிறது. குருவிடமிருந்து சாந்தி கிடைத்தது என்று நினைக் கின்றனர். அட!
இங்கே சாந்தி கிடைக்கவே முடியாது.
உறுப்புகள் வேலை செய்து செய்து களைப் படையும் பொழுது ஆத்மா சரீரத்தில் இருந்து விடுபட்டுவிடுகிறது. சாந்தி உங்களுடைய சுயதர்மம் ஆகும் என்று தந்தை கூறுகின்றார்.
இவை உறுப்புகளாகும், வேலை செய்ய விரும்பவில்லை என்றால் அமைதியாக அமர்ந்துவிடுங்கள். நாம் அசரீரியாக இருக்கின்றோம், தந்தையிடம் யோகத்தை ஈடுபடுத்தினால் விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும். ஒருவேளை,
யாராவது ஒரு சந்நியாசியிடமிருந்து உங்களுக்கு சாந்தி கிடைக்கிறது,
என்றாலும் அதன் மூலம் உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆக முடியாது.
இங்கே தந்தையை நினைவு செய்வதன் மூலம் விகர்மங்களை
(பாவ கர்மங்களை)
வென்றவர்கள் ஆகிவிடுவீர்கள். நல்லது. அவர்கள் சாந்தியாக அமர்ந்திருக்கிறார்கள், விகர்மங்களும் விநாசம் ஆகிவிடும்.
இரட்டை இலாபம் கிடைக்கும். பழைய விகர்மங்கள் கூட விநாசம் ஆகின்றன.
இந்த யோக சக்தி அல்லாமல் யாருடைய பழைய விகர்மங்களும் எந்த நிலைமையிலும் விநாசம் ஆக முடியாது.
பாரதத்தின் பழமையான யோகம் என்று மகிமை செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தான் ஜென்ம ஜென்மங்களின் விகர்மங்கள் விநாசம் ஆகின்றன, இதைத் தவிர வேறு உபாயமே கிடையாது.
இப்பொழுது இந்த ஜனப்பெருக்கம் நின்று போகவேண்டும். அதிக ஜனப்பெருக்கம் கூடாது என்று அரசாங்கமும் விரும்புகிறது. நாமோ ஜனப்பெருக்கத்தை அவ்வளவு குறைக்கிறோம், அங்கே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்,
மற்ற அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள். விநாசம் ஆகப்போகிறது என்று மனிதர்கள் புரிந்தும் இருக்கின்றனர். ஆனால், யுத்தம் நின்றதைப் பார்த்து பிறகு விநாசம் நடக்குமா அல்லது நடக்காதா என்பது தெரியவில்லை என்று நினைக்கின்றனர். மந்தமாகி விடுகின்றனர். குழந்தைகளே!
சமயம் மீதம் குறைவாகவே உள்ளது.
ஆகையினால், கவனக்குறைவாக இருக்காதீர்கள் என்று தந்தை புரியவைக்கின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்காக முக்கியமான சாரம்:
1. சரீரத்திலிருந்து விடுபட்டு அசரீரியாகி உண்மையான சாந்தியின் அனுபவம் செய்ய வேண்டும். தந்தையின் நினைவின் மூலம் தன்னை விகர்மங்களை வென்றவர் ஆக்க வேண்டும்.
2.
அழிவற்ற பிராப்தியை உருவாக்குவதற்காக அழிவற்ற படிப்பின் மீது முழுமையான கவனம் கொடுக்க வேண்டும்.
அனைத்து தவறான வழிகளையும் விட்டுவிட்டு ஒரு தந்தை யினுடைய நேர்வழிப்படி நடக்க வேண்டும்.
வரதானம்:
உயர்ந்த ஸ்டேஜ்
மீது அமர்ந்து
இயற்கையின் குழப்பத்தினுடைய
பிரபாவத்திலிருந்து விடுபட்ட,
இயற்கையை வென்றவர்
ஆகுக.
மாயாவை வென்றவராக (மாயாஜீத்) ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போது இயற்கையை வென்றவராகவும் ஆகுங்கள். ஏனென்றால் இப்போது இயற்கையின் குழப்பம் அதிகமாக நடை பெறப் போகிறது. சில நேரம் கடல் நீர் தனது பிரபாவத்தைக் காட்டும். அப்போது சில நேரம் பூமி தனது பிரபாவத்தைக்
காட்டும். இயற்கையை வென்றவராக இருப்பீர்களானால் இயற்கையின் எந்த ஒரு குழப்பமும் உங்களை அசைக்க முடியாது. சதா சாட்சியாக இருந்து அனைத்து விளையாட்டு களையும் பார்ப்பீர்கள். எப்படி ஃபரிஸ்தாக் களை உயர்ந்த மலை மீது காண்பிக் கின்றார்கள்.
அது போல் ஃபரிஸ்தாக்கள் நீங்கள் சதா உயர்ந்த ஸ்டேஜ் மீது இருப்பீர்களானால் எவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்களோ, அந்த அளவு குழப்பத்திலிருந்து தானாகவே விடுபட்டவர் ஆவீர்கள்.
சுலோகன்:
தனது சிரேஷ்ட வைப்ரேஷன் மூலம் சர்வ ஆத்மாக்களுக்கும் சகயோகத்தின் அனுபவம் செய்விப்பதும் கூட தபஸ்யா ஆகும்.
0 Comments