31-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே மகா அதிர்ஷ்டசாலிக்
குழந்தைகள், ஏனெனில் தந்தையே உங்களுடன் நேரடியாகப் பேசுகிறார்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கக்கூடாத, பக்தி மார்க்கத்தின் சம்ஸ்காரங்கள் எவை, ஏன்?
பதில்:
பக்தி மார்க்கத்தில்,
மக்கள் தேவர்களின் விக்கிரகங்களிடம் சென்று, ஏதாவதொன்றை வேண்டுகிறார்கள். ஒன்றிடம் அவர்கள் செல்வத்தை வேண்டுவார்கள், இன்னொன்றிடம்
ஒரு புத்திரனைத்
தரும்படி வேண்டுவார்கள்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இனிமேலும் எதனையேனும் வேண்டுகின்ற
சம்ஸ்காரங்கள் இருக்கக்கூடாது,
ஏனெனில் இது இப்பொழுது சங்கம யுகம், தந்தை உங்களைக் காமதேனு (விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவர்)
ஆக்கியுள்ளார். தந்தையைப் போல், நீங்கள் அனைவருடைய விருப்பங்களையும் பூர்த்தி செய்கிறீர்கள்.
நீங்கள் எந்த விருப்பங்களையும் கொண்டிருக்கக்கூடாது. அருள்பவராகிய,
ஒரேயொரு தந்தையே உங்களுக்குப் பலனைக் கொடுக்கிறார்
என்பதையும், நீங்கள் அவரை நினைவுசெய்வதால், பேறுகள் அனைத்தையும் பெறுகிறீர்கள் என்பதையும் அறிவீர்கள். இதனாலேயே எதனையாவது வேண்டுகின்ற சம்ஸ்காரங்கள் முடிவடைய வேண்டும்.
பாடல்: ஓம் நமசிவாய.
ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார்.
கீதையே புரிந்துகொண்டு, ஏனையோருக்கு விளங்கப்படுத்தப்பட வேண்டிய ஒரேயொரு சமயநூல் ஆகும்.
மனிதர்கள் சமயநூல்களை உருவாக்கியிருந்தாலும், அவர்களால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தை கூறுகிறார்: ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர்,
நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளாகிய உங்களுக்கு, பாரதவாசிகளாகிய உங்களுக்கு, நான் இராஜயோகத்தைக் கற்பித்தேன்.
‘நீண்டகாலம் தொலைந்து,
இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள’ என்பதன் அர்த்தம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 84 பிறவிகளை எடுத்த பின்னர்,
நீங்கள் பாபாவைச் சந்தித்துள்ளீர்கள். நீங்கள் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரும் பாபாவைச் சந்தித்து, பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்களாகவும் ஆகினீர்கள்.
தந்தை உங்களுடன் நேரடியாகப் பேசுகிறார்.
கீதையின் வாசகங்களை உரைப்பவர்கள் அத்தகைய விடயங்களைக் கூற மாட்டார்கள். முன்னர்,
தந்தை நேரடியாக விளங்கப்படுத்தியிருந்தார், பின்னர்,
பக்தி மார்க்கத்தில் அச்சமயநூல் உருவாக்கப்பட்டது. இப்பொழுது நாடகம் முடிவுக்கு வருகின்றது.
தந்தை மீண்டும் ஒருமுறை குறிப்பாகக் குழந்தைகளுடன் பேசுவதற்கு வந்துள்ளார், ஆனால் எந்தக் குழந்தைகளுடன் பேசுகிறார்? அவர் குறிப்பாக உங்களுடனும்,
பொதுவாக முழு உலகுடனும் பேசுகிறார்.
நீங்கள் இப்பொழுது நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். பாபா தன்னை உங்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
வேறு எவராலும் உங்களுக்கு இந்த இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. முன்னரும்,
தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார்,
அவர் இப்பொழுது உங்களுக்கு மீண்டும் கற்பிக்கிறார். இதனூடாகவே நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவீர்கள்.
வேறு எவராலும் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக்க முடியாது.
உங்கள் தந்தையாகிய நான், உங்களுக்கு மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு வந்துள்ளேன். அச்சா.
இப்பொழுது பாபா உங்களுக்கு விருட்சத்தைப் பற்றி விளங்கப்படுத்துவார். இவ்விளக்கம் மிகவும் முக்கியமானது. இது கல்ப விருட்சம் எனவும் அறியப்படுகிறது. தந்தை கூறுகிறார்:
இதுவே கல்ப விருட்சமாகிய, மனித உலக விருட்சம் ஆகும். கீதையை உரைப்பவர்கள் கடவுள் அதனைப் பேசியதாகக் கூறுகிறார்கள், ஆனால் கடவுள் இதனை இப்பொழுது பேசுகிறார் என நீங்கள் கூறுகிறீர்கள். இது மனித உலக விருட்சமாகும். இந்த விருட்சத்தில் மாம்பழங்கள் போன்ற பழங்கள் வளர மாட்டாது.
பழத்தைக் கொடுக்கின்ற மரத்தின் விதை அதன் கீழே இருக்கிறது, அதற்கு மேலே மரம் வளர்கிறது. ஆனால் இங்கே விதையானவர் மேலே இருக்கின்றார், விருட்சம் கீழே இருக்கிறது. அவர்கள் கூறுகிறார்கள்: கடவுள் எங்களைப் படைத்தார்,
கடவுள் எங்களுக்குக் குழந்தைகளைக் கொடுத்தார்;
தந்தை எங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தார்.
“பாபா, எங்கள் வேதனை அனைத்தையும் அகற்றுங்கள்!” அவர்கள் தொடர்ந்தும் கூவியழைக்கிறார்கள்: பாபா! பாபா!
அதிகளவு அமைதியின்மை உள்ளது! அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் சிலைகளுக்கு முன்னால் சென்று, கூறுகிறார்கள்: மகா இலக்ஷ்மியே!
எங்களுக்குச் செல்வத்தைக் கொடுங்கள்! அச்சம்ஸ்காரங்கள் அனைத்தும் வேண்டுகின்ற சம்ஸ்காரங்கள் ஆகும்.
சிலர் ஜெகதாம்பாவிடம் சென்று, ஒரு புத்திரனைத் தரும்படி வேண்டுவார்கள், ஏனையோர் அவரிடம் சென்று,
தங்கள் சுகவீனங்கள் அகற்றப்படுவதற்காக வேண்டுகிறார்கள். அவர்கள் இலக்ஷ்மியின் முன்னால் அத்தகைய விருப்பங்களை வைப்பதில்லை;
அவர்கள் அவரிடம் பணத்தையே வேண்டுகிறார்கள். ஜெகதாம்பாவே இலக்ஷ்மியாக ஆகுபவர், 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிச் சென்ற பின்னர்,
அவர் மீண்டும் ஜெகதாம்பா ஆகுகிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். விருட்சத்தின் படத்தைப் பாருங்கள்.
ஜெகதாம்பா அதன் கீழே, அடியில் அமர்ந்திருக்கிறார். அவர் நிச்சயமாகச் சக்கரவர்த்தினி ஆகுவார், குழந்தைகளாகிய நீங்களும் இராச்சியத்தினுள் செல்வீர்கள். கல்ப விருட்சத்தின் கீழ் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் சங்கமத்தில் அத்திவாரத்தை இடுகிறீர்கள். நீங்களே அனைவரின் விருப்பங்களையும் பூர்த்திசெய்பவராகிய, காமதேனுவின்
(மம்மா) குழந்தைகள்.
பாரதத் தாய்மார்களாகிய நீங்களே சக்தி சேனையினர். இதில் பாண்டவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அனைத்தையும் கொடுப்பவராகிய ஒரேயொரு தந்தையை மாத்திரமே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும் என்பது குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு பக்தி செய்தாலும், யாரை நினைவுசெய்தாலும் ஒரேயொரு அருள்பவரே அதன் பலனைக் கொடுக்கிறார்.
அவரே அனைத்தையும் கொடுப்பவர். பக்தி மார்க்கத்தில், நீங்கள் நாராயணனையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் பூஜித்தீர்கள். நீங்கள் கிருஷ்ணரை ஒரு தொட்டிலில் இட்டு ஆட்டினீர்கள்,
அவர் மீது அன்பு செலுத்தினீர்கள். நீங்கள் அவரிடம் எதனை வேண்ட முடியும்? அவருடைய இராச்சியத்தினுள் செல்வது அல்லது ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற ஒரு குழந்தையைக் கொண்டிருப்பதே உங்கள் விருப்பம் ஆகும்.
அவர்கள் புகழ் பாடிக் கூறுகிறார்கள்: இராதையையும், கிருஷ்ணரையும், கோவிந்தரையும் நினைவுசெய்யுங்கள், நாங்களும் பிருந்தாவனத்துக்குச் (வைகுந்தம்)
செல்வோம். அங்கேயே உங்கள் இராச்சிய பாக்கியம் இருந்தது.
அந்நேரத்தில் எதுவுமே குறைவாகவும் இருக்கவில்லை.
மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் இராச்சியத்தைப் பெருமளவு நினைவுசெய்கிறார்கள். பாரதம் ஸ்ரீ கிருஷ்ணரின் இராச்சியமாக இருந்தபொழுது, வேறெந்த இராச்சியமும் இருக்கவில்லை.
தந்தை இப்பொழுது வந்து விட்டார்,
அவர் கூறுகிறார்:
கிருஷ்ணரின் பூமிக்கு வந்து, கிருஷ்ணரின் மனைவி ஆகுங்கள் அல்லது இராதையின் கணவர் ஆகுங்கள்;;
அது ஒரே விடயமே. அங்கே உங்களுக்கு நஞ்சு கொடுக்கப்பட மாட்டாது.
அது முற்றிலும் விகாரமற்ற உலகமாகும்.
நீங்கள் இப்பொழுது மாணவர்கள். நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாகவும், பிச்சைக்காரர்களிலிருந்து இளவரசர்களாகவும் மாறுவதற்குக் கற்கிறீர்கள்.
இங்கே ஒருவர் கோடீஸ்வரராக இருக்கலாம்,
அவரிடம் ஐம்பது மில்லியன்கள் இருக்கலாம்,
ஆனால், உங்களுடன் ஒப்பிட்டால், அவர் ஏழையே, ஏனெனில் அவருடைய செல்வம் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றது.
அவை எவையுமே அவருடன் செல்ல மாட்டாது; அவர் வெறுங்கையுடன் திரும்பிச் செல்வார். நீங்கள் உங்கள் கரங்களை
21 பிறவிகளுக்குப் போதுமானளவுக்கு நிரப்பியவாறே திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கிறீர்கள், பின்னர் நீங்கள் சத்திய யுகத்துக்குச் சென்று,
உங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள். நீங்கள் மறுபிறவி எடுத்து,
தொடர்ந்தும் வேறுபட்ட குலங்களினூடாகச் செல்கிறீர்கள். சத்திய யுகத்தில்
16 சுவர்க்கக் கலைகள் இருக்கின்றன, திரேதா யுகத்தில் 14 சுவர்க்கக் கலைகள் இருக்கின்றன.
பின்னர், பக்தி மார்க்கம் ஆரம்பமாகும்பொழுது, ஏபிரகாமும், புத்தரும் வருகிறார்கள். கிறிஸ்துவுக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், தேவர்களின் இராச்சியம் இருந்தது.
இப்பொழுது முழு விருட்சமும் முற்றிலும் உக்கிய நிலையை அடைந்துள்ளது. நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் கல்ப விருட்சத்தின் கீழ் அமர்ந்திருக்கிறீர்கள். இது சக்கரங்களின் சங்கமம்,
அதாவது, கலியுகத்தினதும் சத்திய யுகத்தினதும் சங்கமம் என அறியப்படுகிறது. சத்திய யுகத்தின் பின்னர் திரேதா யுகம் வருகின்றது, பின்னர் துவாபர யுகமும்,
பின்னர் கலியுகமும்,
அதன்பின்னர் சங்கம யுகமும் வருகின்றன.
கலியுகத்தின் பின்னர் நிச்சயமாகச் சத்திய யுகம் வர வேண்டும். அவற்றின் மத்தியில் சங்கம யுகமும் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. தந்தை ஒவ்வொரு சக்கரத்தினதும் சங்கமத்தில் வருகிறார்.
அவர்கள் ‘சக்கரம்’
என்ற வார்த்தையை மாற்றி, அவர் ஒவ்வொரு யுகத்தினது சங்கமத்திலும் வருவதாக எழுதியுள்ளார்கள். தந்தை கூறுகிறார்: நானே ஞானக் கடலாகிய,
அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை ஆவேன்.
பாரதத்தில் மாத்திரமே சிவனின் பிறப்பு புகழப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரால் ஞானத்தைக் கொடுக்க முடியாது.
நீங்கள் சுவர்க்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணரைச் சந்திப்பீர்கள் எனக் கூறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நானே உங்களுக்குப் பக்தி மார்க்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் காட்சியை அருள்பவர். கிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில்,
அவர்கள் பெருமளவு அன்புடன் அவரைத் தொட்டிலில் ஆட்டி,
பூஜிக்கிறார்கள். அது அவர்கள் உண்மையான ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்ப்பது போலவே உள்ளது; அவர்கள் ஒரு காட்சியைப் பெறுகிறார்கள். ஒரு கிருஷ்ணரின் சிலை அருகாமையில் இருந்தால்,
அவர்கள் சென்று,
அந்தச் சிலையை அணைக்கிறார்கள். நான் பக்தி மார்க்கத்திலும் அவர்களுக்கு உதவுகின்றேன்.
நானே அருள்பவர்.
மக்கள் இலக்ஷ்மியைப் பூஜிக்கிறார்கள், ஆனால் அது ஒரு கற்சிலையே. அது எதனைக் கொடுக்கும்?
நானே கொடுக்க வேண்டியவர். நானே காட்சிகளையும் கொடுப்பவர்.
இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் இலையும் பரமாத்மாவாகிய பரமதந்தையின் கட்டளைகளுக்கு ஏற்பவே அசைகிறது என அவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் பரமாத்மா ஒவ்வோர் இலையிலும் இருக்கிறார் என அவர்கள் எண்ணுகிறார்கள். பரமாத்மா அமர்ந்திருந்து, இலைகளுக்குக் கட்டளைகளைக் கொடுப்பாரா?
அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது என்ன செயல்களைச் செய்தாலும்,
அடுத்த கல்பத்திலும் அதே செயல்களைச் செய்வீர்கள். திரைப்படத்தில் படமாக்கப்படுபவை அனைத்தும் மீண்டும் மீண்டும் நடைபெறும். அதில் எந்த வேறுபாடும் இருக்க முடியாது.
நீங்கள் நாடகத்தை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாரதமே ஒவ்வொரு கல்பத்திலும் சந்தோஷத்தைப் பெறுகிறது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், பிராமணர்கள் ஆகுபவர்களே,
பல்வேறு குலங்களினூடாகச் செல்பவர்கள். அவர்கள்
84 பிறவிகளை எடுக்கிறார்கள், பின்னர் ஏனையோரின் பிறவிகள் வரிசைக்கிரமமாக உள்ளன் அவை குறைந்த எண்ணிக்கையானவை. பல சிறிய பாதைகளும், பிரிவுகளும் உள்ளன. அவர்களின் தூய்மை காரணமாக,
அம்மக்கள் இப்பொழுது புகழப்படுகிறார்கள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர்.
எம்மனிதராலும் சுவர்க்கத்தைப் படைக்கவோ அல்லது இராஜயோகம் கற்பிக்கவோ முடியாது. கிருஷ்ணரின் பூமிக்குச் செல்வதற்காக நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கிறீர்கள்.
நீங்கள் எப்பொழுதும் மேன்மையான முயற்சியைச் செய்ய வேண்டும்.
உங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற ஒரு குழந்தை வேண்டும் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற கணவர் வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ நாராயணன் ஆகுபவர் என்பதால்,
நீங்கள் ஏன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் பேசுகிறீர்கள்? உங்களுக்கு நாராயணனைப் போன்ற கணவர் வேண்டும் என்றே நீங்கள் கூற வேண்டும்! இலக்ஷ்மியைத் திருமணம் செய்ய விரும்புவதாக நாரதர் கூறினார்;; அவர் இராதையைப் பற்றிக் கூறவில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல விரும்பினால்,
தீவிர முயற்சி செய்யுங்கள். அதுவே ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகக் குலம்;
கம்சனின் குலமானது அசுர குலம் ஆகும். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். சூத்திர சமுதாயத்தினரால் தங்களைப் பிராமணர்கள் என்றழைக்க முடியாது.
பிராமணர்கள் என அழைக்கப்படாதவர்கள் சூத்திர குலத்துக்கு உரியவர்கள்.
இது பாரதத்துக்குப் பொருந்துகின்றது. பாரதம் சுவர்க்கம் ஆகுகிறது,
பின்னர் பாரதமே நரகம் ஆகுகிறது.
84 பிறவிகளை எடுக்கும்பொழுது, இலக்ஷ்மியும் நாராயணனும் ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். அவர்களே சக்கரத்தினுள் வரும்பொழுது,
புத்தர் போன்றவர்கள் நிர்வாணா தாமத்துக்குத் திரும்பிச் செல்வது எவ்வாறு சாத்தியமாக முடியும்? சிலர் கூறுகிறார்கள்: கிருஷ்ணர் சர்வவியாபி; நான் எங்கே பார்த்தாலும் கிருஷ்ணரையே பார்க்கிறேன்.
இராமர் சர்வவியாபி என இராம பக்தர்கள் கூறுவார்கள்.
அவர்கள் கிருஷ்ணரில் நம்பிக்கை வைப்பதில்லை.
இராதை-பந்திக்கு
(இராதையில் நம்பிக்கை உள்ள பிரிவினர்)
உரியவராக இருந்தவர் பாபாவிடம் வந்தபொழுது,
கூறினார்: இராதா,
இராதா, இராதை எங்கும் பிரசன்னமாகி இருக்கிறார். இராதை உங்களிலும்; இருக்கிறார்,
இராதை என்னிலும் இருக்கிறார். ‘கணேஷ் உங்களில் இருக்கிறார்,
கணேஷ் என்னிலும் இருக்கிறார்;’ என்று கணேஷைப் பூஜிப்பவர்கள் கூறுவார்கள். கிறிஸ்து கடவுளின் புத்திரர்;
என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து புத்திரராக இருப்பின்,
நீங்கள் யாருடைய புத்திரர்கள்? பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன.
எவரும் பாதையை அறியார்; அவர்கள் தலை வணங்குவதுடன்,
தொடர்ந்தும் அலைந்து திரிகிறார்கள். நிச்சயமாக,
கடவுளே முக்தியையும்,
ஜீவன்முக்தியையும் அருள்பவர்.
நாங்கள் அவரிடம் எதனை வினவ முடியும்? எவரும் இதனை அறியார்.
தந்தையை அறியாததால்,
அவர்கள் அனாதைகளாகி விட்டார்கள். பிரபுவும் அதிபதியுமானவர் வந்து,
அவர்களைத் தனக்குரியவர்கள் ஆக்குகிறார். மக்கள் பெருமளவு தடுமாறித் திரிகிறார்கள். பக்தி செய்வதன் மூலம் தாங்கள், கடவுளைக் காண்பார்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். தந்தை கூறுகிறார்:
நான் எனக்குரிய நேரத்திலேயே வருகிறேன்.
ஒருவர் எவ்வளவுதான் கூவியழைத்தாலும், நான் சங்கம யுகத்தில் மாத்திரமே வருகிறேன்.
பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்கும், அனைவரையும் அமைதியினுள் அழைத்துச் செல்வதற்கும் நான் ஒருமுறை மாத்திரமே வருகிறேன். பின்னர் அவர்கள் தங்களுக்குரிய நேரத்தில் வரிசைக்கிரமமாக வருகிறார்கள். தேவர்களாக இருந்தவர்களே இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கின்ற ஆத்மாக்கள். அவர்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோருகிறார்கள். தற்சமயம், தேவ தர்மம் இருப்பதில்லை;
அவர்கள் அனைவரும் தங்களை இந்துக்கள் என அழைக்கிறார்கள். நாடகத்துக்கேற்ப, அதே விடயமே மீண்டும் நடைபெறும். நடைபெற்றவை அனைத்தும் மீண்டும் நிகழும். நாங்கள் அவ்விதமாக மீண்டும் சக்கரத்தினுள் வந்து,
அத்தனை பிறவிகளை எடுப்போம். ஒவ்வொரு சமயத்தினரும் எத்தனை பிறவிகளை எடுக்கிறார்கள் என்பதை உங்;களால் கணக்கிட முடியும். விருட்சத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. ஒருவரின் தூண்டுதலினால், விநாசத்தின் சுவாலைகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை இயல்பாகவே மக்கள் தொடுகையைப் பெற்று,
உணர்வார்கள். யாதவர்கள்
(ஐரோப்பிய விஞ்ஞானிகள்)
குண்டுகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: யாரோ எங்களைத் தூண்டுகிறார்கள். இதன் விளைவாக, நாங்கள் எங்களுடைய சொந்தக் குலத்தை அழிப்போம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தங்கள் விருப்பத்துக்கு மாறாக,
அவர்கள் மரணத்துக்குரிய வழிகளை உருவாக்குகிறார்கள். மெதுவாக, ஒரு தாக்கம் ஏற்படும்.
விருட்சம் மெதுவாக வளர்கிறது. சிலர் முட்களிலிருந்து மொட்டுக்கள் ஆகுகிறார்கள், சிலர் மலர்கள் ஆகுகிறார்கள்.
புயல்கள் வரும்பொழுது,
சில மலர்கள் வாடி விடுகின்றன.
பாபா கூறுகிறார்:
ஒவ்வொரு கல்பத்திலும்,
அவர்கள் செவிமடுத்து,
வியப்படைந்து, ஏனையோருக்கும் ஞானத்தைக் கொடுக்கிறார்கள். இப்பொழுது பாபாவே கூறுகிறார்: அவர்கள் பாபாவிடம் வருகிறார்கள்,
அவர்கள் பிரம்மாகுமார்கள் அல்லது குமாரிகளாகி,
ஏனையோருக்கும் இதனைப் பற்றிக் கூறுகிறார்கள், ஆனால் பின்னர்,
ஓ மாயையே!
அவள் சிறந்த குழந்தைகளையும் விழுங்கி விடுகிறாள். நேரம் கடந்து செல்கையில்,
எவ்வாறு மிகச்சிறந்த குழந்தைகளும் விலகிச் செல்கிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
கடந்த காலத்தில் இருந்த அனைத்தும் மீண்டும் நிகழ்காலம் ஆகும் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். பின்னர்,
பக்தி மார்க்கத்தில், சமயநூல்கள் உருவாக்கப்படும். இவ்விதமாக நாடகம் உருவாக்கப்படுகிறது. இப்பொழுது தந்தை வந்து,
பிரம்மாவினூடாக வேதங்கள்,
சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறார். அவர்கள் அந்தச் சமயத்தை ஸ்தாபிப்பவரின் பெயரில் ஒரு சமயநூலை உருவாக்குகிறார்கள். அவை சமயநூல்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரேயொரு கீதையே தேவ தர்மத்தின் சமயநூல் ஆகும். ஒவ்வொரு சமயமும் ஒரு சமயநூலைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே,
ஸ்ரீமத் பகவத்கீதையைக் கொண்டிருப்பது மிகச்சரியானது. இவையே கடவுளின் வாசகங்கள். கடவுள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தார்.
இதுவே புராதன தர்மம் ஆகும்.
ஒவ்வொரு சமயத்துக்கும் அவர்கள் கற்கின்ற,
அதன் சொந்தச் சமயநூல் உள்ளது.
நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகிறீர்கள்,
ஆனால் நீங்கள் அதற்காகச் சமயநூல்களைக் கற்கத் தேவையில்லை.
அங்கே சமயநூல்கள் இல்லை; அவை அனைத்தும் மறைந்து விடுகின்றன. ஆகவே,
கீதை எங்கிருந்து வந்தது? மக்கள் அதனைத் துவாபர யுகத்தில் உருவாக்கினார்கள். இப்பொழுது உள்ள கீதை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் உருவாக்கப்படும். ஒரு கல்பத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்டதைப் போன்று,
சமயநூல்கள் மீண்டும் உருவாக்கப்படும். பக்தி மார்க்கத்துக்குரியவை தொடர்ந்தும் உருவாக்கப்ப:டும்.
தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீண்ட காலத்துக்கு முன்னர் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளே,
இப்பொழுது உங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, மேன்மையானவர்கள் ஆகுங்கள். இப்பொழுது,
கலியுகம் சத்திய யுகமாக மாறவுள்ள சங்கம யுகத்தில்,
நீங்கள் இராஜயோகம் கற்கிறீர்கள். அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை மிகவும் நீண்டதாக்கியதால், அனைவரையும் காரிருளினுள் இட்டுச் சென்று விட்டார்கள்.
மனிதர்கள் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளார்கள். நாடகத்திற்கேற்ப, குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும். பாபா இதற்காக உங்களுக்குப் பல வழிமுறைகளைக் கொடுத்துள்ளார். பாபாவை நினைவுசெய்து, ஓர் அட்டவணையை வைத்திருங்கள். உணவைத் தயாரிக்கும்பொழுது, நினைவில் நிலைத்திருங்கள். உணவைத் தயாரிக்கும்பொழுது, உங்களால் உங்கள் கணவனையும், உங்கள் குழந்தைகளையும் நினைவுசெய்ய இயலுமாயின், ஏன் உங்களால் சிவபாபாவை நினைவுசெய்ய இயலாதுள்ளது?
இது உங்கள் கடமை. பாபா உங்கள் புத்திக்கு ஒரு பணியைக் கொடுக்கிறார்: ஏணியில் மேலேறி, கீழிறங்குங்கள்! நீங்கள் மேலே ஏறுகிறீர்களா, இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது. நீங்கள் நினைவைக் கொண்டிருக்கும் அளவுக்கேற்பவே, ஏணியில் மேலே ஏறுவீர்கள்.
இல்லாவிட்டால், நீங்கள் அந்தளவு சந்தோஷத்தைப் பெற மாட்டீர்கள்.
அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, அதாவது, ஐயாயிரம் வருடங்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவிடமிருந்து உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். இனிமையிலும் இனிமையான ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- கிருஷ்ணரின் பூமிக்குச் செல்வதற்கு, மிகச்சிறந்த முயற்சியைச் செய்யுங்கள். சூத்திரருக்குரிய உங்கள் சம்ஸ்காரங்களை மாற்றி, ஓர் உறுதியான பிராமணர் ஆகுங்கள்.
- உங்கள் புத்தியின் சக்தி மூலம் நினைவு என்னும் ஏணியில் ஏறுங்கள். இந்த ஏணியில் ஏறுவதனால், நீங்கள் முடிவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கவனம்
செலுத்துவதாலும், உங்களைச்
சோதிப்பதாலும் உங்கள்
வீணான கணக்கை
முடித்து விடுவதன்
மூலம், ஒரு
மாஸ்டர் சர்வசக்திவான்
ஆகுவீர்களாக.
பிராமண வாழ்வில் வீணான எண்ணங்களும், வீணான வார்த்தைகளும், வீணான செயல்களும் பெருமளவில் உங்கள் நேரத்தை வீணாகுமாறு செய்கின்றன. அப்பொழுது உங்களுக்கு வேண்டியளவை உங்களால் சம்பாதிக்க இயலாதிருக்கும். உங்கள் வீணான கணக்கு உங்களைச் சக்திவாய்ந்தவராகுவதை அனுமதிப்பதில்லை.
ஆகவே, சதா இதனை அறிந்திருங்கள்: நான் ஒரு மாஸ்டர் சர்வசக்திவான்.
உங்களுக்குச் சக்தி இருக்கும்பொழுது, நீங்கள் விரும்பியதை
உங்களால் செய்ய முடியும். நீங்கள் மீண்டும் மீண்டும் கவனம் செலுத்த வேண்டியது மாத்திரமே. வகுப்பு நேரத்திலும், அமிர்த வேளை தியான நேரத்திலும் நீங்கள் கவனம் செலுத்துவதைப் போல், அடிக்கடி, கவனம் செலுத்தி, உங்களைச் சோதிக்கின்ற வழிமுறையைப்
பயன்படுத்துங்கள், அப்பொழுது வீணான கணக்கு எதுவும் முடிவடைந்து விடும்.
சுலோகம்:
ஓர் இராஜரிஷி ஆகுவதற்கு, பிராமண ஆத்மாக்களிடமிருந்தான ஆசீர்வாதங்கள் மூலம் உங்கள் ஸ்திதியைத் தடைகளிலிருந்து
விடுபட்டதாக ஆக்குங்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments